Page 122 of 401 FirstFirst ... 2272112120121122123124132172222 ... LastLast
Results 1,211 to 1,220 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #1211
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1212
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    நன்றி V C G Thiruppathy
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1213
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    நன்றி V C G Thiruppathy
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1214
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #1215
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1216
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வாட்ஸ் அப் பதிவு
    நன்றி. வாசுதேவன் ஸ்ரீ
    மனிதரில் மாணிக்கம் எங்கள் அய்யன்.
    ---------===========================--------------
    டிசம்பர் 7ம் நாள் 1972 ம் வருடம் அய்யனின் நீதி திரைப்படம் வெற்றிகரமாக வெளிவந்து வெற்றிபெற்றது. திரு. பாலாஜி அவர்கள் சுஜாதா பேனரில் தயாரித்தார்கள். பணம் கஷ்ட்டம் காரணமாக திரு. சந்திரபாபு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
    நீதி திரைப்படம் அதிகமாக கர்நாடகா மாநிலம் மாண்டியா என்ற இயற்கை சூழலில் எடுக்கப்பட்டது. ஒருநாள் படப்பிடிப்பு முடித்து விட்டு, மற்றவர்களை சீக்கிரம் வந்து சேருங்கள் என்று சொல்லி விட்டு முதலில் அய்யனும் , பாலாஜி அவர்களும் பெங்களூருக்கு திரும்பி கொண்டிருந்தார்கள்.
    அய்யனும் , திரு பாலாஜி அவர்களும் வரும் வழியில் தாங்கள் வந்த காரின் டயர் பஞ்சராகி விட்டது. பாலாஜி அவர்கள் சுற்றும் முற்றும்,பார்க்கின்றார்கள் கண் எட்டும் தூரத்த ல் எவரும் தென்படவில்லை. படப்பிடிப்பு முடித்தவர்களும் வந்து சேரவில்லை. திரு. பாலாஜி அவர்களுக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது. காரினுள் உலகம் போற்றும் மாபெரும் நடிகன் இருக்க இப்படி நடந்து விட்டதே என்ற கரினோடு கோபம். என்ன செய்வது என்று திகைக்கின்றார் .
    ரோஜா மலர் போல் பாதுகாக்க வேண்டிய அய்யன் ( அன்றய காலங்களில் நடிகர்களை மக்கள் உயர்ந்த இடத்திலும், மலர்போலும் எண்ணிய காலங்கள் ).பாலாஜி அவர்களின் நிலை கண்டு காரிலிருந்து வெளியில் இறங்கி, தலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு டயரை கழற்ற முற்பட்டபோது பாலாஜி அவர்கள் தடுத்து விட்டார்கள். நீங்கள் இதை செய்யலாமா? ஏதோ நடந்து விட்டது . மன்னிக்கவும் . இப்போது படப்பிடிப்பு முடிந்து அவர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வரும் வரை தாங்கள் காரில் அமரும்படி பாலாஜி அவர்கள் அய்யனிடம் வேண்டுகின்றார்கள்.
    அப்போது அய்யன் கூறிய பதில், இன்றும், அன்றும், என்றுமே எந்த நடிகனும் சொல்லாத வார்த்தை . பாலு நீ என் முதலாளி. நான் நடிக்கும் படத்திற்கு சம்பளம் தரும் முதலாளி நீதான். நான் நீ தரும் பணத்திற்கு வேலை செய்யும் தொழிலாளி. நீதான் காரில் இருக்க வேண்டும் என்று அய்யன் கூறினார்கள். கூறியதோடு மட்டுமல்ல, உடனே ஐயன் செயலிலும் இறங்க பாலாஜி அவர்களும் சேர்ந்து டயரை மாற்றினார்கள்.
    இருவரின் கைகளிலே கறைகள். இருவரும் கை கழுகும்போது படப்பிடிப்பு குழுவினர் சாலையில் நிற்கும் காரை பார்த்து பதறி போனார்கள் . படப்பிடிப்பினர் பதறி அடித்து என்ன என்று கேட்க விஷயம் தெரிந்தவர்கள் அய்யனை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள். பாலாஜி அவர்களின் கண்களிலோ சாரைய் சாரையாக கண்ணீர்.
    அய்யன் அனைவரையும் விரைவில் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு பாலாஜி அவர்களை சாந்தப்படுத்தினார்கள் மாபெரும் நடிகனான ஐயன் அவர்கள, . படப்பிடிப்பின் சிறிய இடைவேளையில் கேரவன் வேண்டும், 5 ஸ்டார் விடுதி வேண்டும் இல்லையேல் படப்பிடிப்பை ரத்து செய்யுங்கள் என்று கூவும் சாதாரண நடிகர்போலும் எக்காளமுடன் பேசும் திரை உலகில் அய்யன் ஒரு மாணிக்கமாக வாழ்ந்தார்கள்.
    பிறரின் தேவைகளையும் புரிந்து கொண்டு,பணம் முதலீடு செய்பவனே முதலாளி. தான் அவர்களிடம் பணம் வாங்கும் தொழிலையே என்று உடல் கூசாமல், மனம் கூசாமல் , தனக்கு பணம் தரும் முதலாளியின் மனம் தெரிந்து வாழ்ந்து காட்டிய மாணிக்கம் அய்யன் அவர்கள். எனவேதான் திரை உலகத்தில் உள்ள எவருமே அய்யனை புகழ்ந்தார்கள், தனது உறவு என்று கொண்டாடினார்கள் என்பதே உண்மை.
    இன்று கதாநாயகன் வரும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். இல்லையேல் படப்பிடிப்பு நடைபெறாது என்பதை இப்பொது கண்கூடாக பார்க்கலாம். யாராவது ஒரு சிறிய நடிகராக இருந்தாலும், எழுந்து மரியாதை கொடுக்க வில்லையெனில் அவன் அந்த படத்தில் இருந்து கழற்றி விடப்படுவார் என்பதே உண்மை.
    1970 முதல் 1980 கால கட்டத்தில் அய்யன் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக திரை உலகில் கோலோச்சிய நேரம். அத்தகைய மகாநடிகன் நல்ல மனமுள்ள மனிதனாகவும் வாழ்ந்து காட்டினார் என்பதை எண்ணும்போது கண்ணிலே அனந்த கண்ணீர். மனத்திலோ இப்படியும் ஒரு பிறவியா ? என்பதே நம்மை சிலிர்க்க செய்கிறது. அய்யனே, உன்னை நினைக்கும் எங்கள் நெஞ்சமும் உன்னைப்போல் உயர்ந்து நிற்கின்றது. வாழ்க உன் புகழ். இது போன்ற சம்பவங்கள் அய்யனின் வாழ்வில் ஏராளமே .

    நன்றி Senthilvel Sivaraj -Sivaji group
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1217
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    Rare photo of NT. THANKS TO NTFANS

    நன்றி Vasudevan .S
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1218
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    #தங்கப்பதுமை - 10:01:1959
    # இன்று அறுபதாண்டுகள் நிறைவு!
    #சிறப்புத்தகவல்கள்
    1959 ஆம் ஆண்டின் மத்திய அரசின் சிறந்த மாநில மொழிப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம் தங்கப்பதுமை
    சென்னை சினிமா ரசிகர் சங்கம் பத்மினியை சிறந்த நடிகையாக அவ்வாண்டு தேர்வு செய்தது....
    படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில் கண்ணிழந்தவராக வரும் நடிகர்திலகத்துக்கு, நிஜமாக அவரின் இரு கண்களையும் மூடி, அதிலிருந்து குருதி வெளிவருவதுபோல் ஒப்பனை செய்திருந்தார்கள். அப்படி நடிகர்திலகம் பார்வையற்றவராக நடித்த காட்சிகள் படமாக்கப்பட்ட நாளிலெல்லாம் அரங்கில் அவருக்கு ஓர் உதவியாளரை உடன் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இப்படத்தின் பாடல் வசன புத்தகம் அந்நாளில் விற்பனையில் பெரும் சாதனை படைத்ததாம். ( கதை-வசனம் : அரு.ராமநாதன் / பாடல்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,மருதகாசி, உடுமலை நாராயணகவி, கண்ணதாசன் )
    ' மனுஷன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே...அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே...' என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் பட்டிதொட்டிகளெல்லாம் பெரும் ஹிட்டாகி, மனித வாழ்வியல் நெறிகளுக்கு வழிகாட்டும் பாடலாகத் திகழ்ந்தது.
    'ஸ்ரீகனிகா பரமேஸ்வரி மகாத்மியம்' என்னும் பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.
    முதல் வெளியீட்டில் ஷிஃப்டிங்க் முறையில் 200 நாட்ளுக்கும்மேல் ஓடிய இப்படம், 1970களில், சிவாஜி படங்களின் ராசியான அரங்குகளாக கருதப்பட்ட சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி அரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டபோது நான்கு வாங்கள்வரை ஓடி வசூலில் பரட்சிசெய்தது.
    'முகத்தில் முகம் பார்க்கலாம்'
    'இன்று நமதுள்ளமே... பொங்கும் புதுவெள்ளமே'
    -போன்றவை இப்படத்தில் பெரும் புகழ்ப்பெற்ற பாடல்களாகும்.
    நடிகர்திலத்துடன், பத்மினி, NSK, TR.ராஜகுமாரி, MN.நம்பியார், MN.ராம், EV. சரோஜா, TP. முத்துலட்சுமி போன்றோர் நடித்திருந்த இப்படத்தின் இயக்கம் A.S.A.சாமி, தயாரிப்பு ஜூபிடர் M.சோமசுந்தரம்.
    தொகுப்பு :
    வான்நிலா விஜயகுமாரன்




    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #1219
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    பேனர்அல்ல?
    கட்அவுட்.

    நன்றி Sivaji Palanikumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1220
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந்தேதி யன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
    தீவிர பக்தரான திரு.கே.எஸ். மணி அவர்களின் புதல்வி ஸ்ரீமதியின் திருமணம்
    சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது .

    திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.சதானந்தன் (இலங்கையை சார்ந்தவர் -தற்போது கனடாவில் வசித்து வருகிறார் ) தனது நண்பர்களுடன்
    கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் . திரு.சதானந்தன் , திரு.கே.எஸ். மணி அவர்களின் நீண்டகால நண்பர் . மாற்று முகாமில் பதிவிட்டு வரும் திரு.சிவாஎன்கிற சிவானந்தனின் சகோதரர் ஆவார் .மற்றும் உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.எம்.எஸ். மணியன், திரு.ஆர். லோகநாதன் (ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி ), திரு.வி.ராஜா, நெல்லை திரு.தம்பாச்சாரி, திரு.ஜி.வெங்கடேச பெருமாள் ஆகியோர் திருமண நாளில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர் .

    முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எண்ணற்ற எம். ஜி.ஆர். பக்தர்கள்
    கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

    பின்னர் திரு.சதானந்தன் அவர்களுடன் இலங்கையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்பட வரலாற்று சாதனைகள், வரலாறு காணாத மக்கள் கூட்டம் மக்கள் திலகத்திற்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சிகள் போன்றவை பற்றி கேட்டு
    தெரிந்து கொண்டேன் . .அவருடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்து உரையாடியதில் பல முக்கிய தகவல்களை தெரிவித்தார் . முக்கியமாக மாற்று முகாமில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றியும், அவரது திரைப்பட வசூல் சாதனைகள் பற்றிய பொய் செய்திகளையும் , அவதூறான பதிவுகளை பற்றியும் பல நண்பர்கள் தன்னிடம் புகார் அளித்ததாக தெரிவித்தார் . தனது சகோதரர் சிவானந்தனுடன் இதுபற்றி அவ்வப்போது வாக்கு வாதங்கள் நடைபெற்றதாகவும் (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் வலம் வந்தபோது ) ஒரு கட்டத்தில் அது பிரயோஜனம் இல்லை என்று முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார் . இலங்கையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட துறையில் இருந்தவரையில் அவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்றும் உறுதியாகவும்,ஆணித்தரமாகவும் பதிலளித்தார் . மேலும், மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளில் உண்மை இல்லை என்றும், அந்த செய்திகளை புறக்கணிக்குமாறும் கேட்டுக் கொண்டார் .திரு.சதானந்தன் தனது வாட்ஸ் அப் எண்ணை எனக்கு அளித்துள்ளார். அதில் மக்கள் தலைவர் .எம்.ஜி.ஆரின் அரசியல் மற்றும் திரைப்பட மறுவெளியீடு, டிஜிட்டல் வெளியீடு மற்றும் இதர செய்திகளை உடனுக்குடன் அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார் .

    திரு.சதானந்தன் அவர்களின் வெளிநாட்டு பயணம் வெற்றியடையவும் , மீண்டும் இந்தியாவுக்கு வரும்போது சந்திப்போம் என்றும் வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றேன் .

    செய்தி, மற்றும் புகைப்படங்கள் தாமதமாக பதிவிடுவதற்கு வருந்துகிறேன் .
    திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

    ஆர். லோகநாதன் . வணக்கம் திரு லோகநாதன் அவர்களே!

    தாங்கள் எனது சகோதரரை சந்தித்ததில் மகிழ்ச்சி
    திரு மணி அவர்கள் எனக்கும் எனக்கும் நண்பர்
    திருமண அழைப்பிதழ் எனக்கும் அனுப்பியிருந்தார்
    திரு மணி அவர்களின் மகள் திருமணத்தில் நானும்
    கலந்துகொள்வதாகத்தான் திட்டம் இருந்தது ஆனால்
    மிகமுக்கிய அலுவல்காரணமாக இலங்கை செல்ல வேண்டி
    இருந்ததால் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியவில்லை.

    தாங்கள் திரு மணி அவர்களின் நண்பர் என்பதும்
    அந்தத் திருமணத்துக்கு தாங்கள் வருவீர்கள் என்பதும் தெரியும்
    அதன் காரணமாக தங்களை சந்தித்து உரையாடவும் தீர்மானித்திருந்தேன்
    ஆனால் காலம் இடம் தரவில்லை .


    நீங்கள் குறிப்பிட்ட ஏனைய விடயங்கள்பற்றி பின்னர்...
    வணக்கம் திரு லோகநாதன் அவர்களே!
    நீங்கள் என்னைப்பற்றி குறிப்பிட்டு எழுதியதனால்தான் இதனை எழுத நேரிட்டது
    என்பதனை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றேன்
    தனிப்பட்ட விடயங்களில் சில நடக்காதவற்றை எழுதியிருக்கிறீர்கள் அவை எவையென
    எழுதி உங்களை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை ஆனால்
    சினிமா விடயம் திரியில் பதியப்படுபவை சம்மந்தமான விடயம் இங்கே பகிரப்படும்

    நீங்கள் குறிப்பிட்ட ஏனைய விடங்கள் பற்றி பின்னர் ... என குறிப்பிட்டிருந்தேன் ஆனால்
    நேரம் போதாமையும் சில விளம்பரங்கள தேடி எடுப்பதில் ஏற்பட்ட தாமதமும் நாட்களை கடத்திவிட்டது

    எங்கள் பக்கம் இடப்படும் பதிவுகள் பொய் என்றால் உண்மை எதுவென சரியான விபரத்தை நீங்கள் வெளிடலாம்.
    இங்கே பழைய பதிவுகள் வெளியிடப்பட்டபின்னர்தான் உங்கள் தவறுகள்பொய்கள் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ன
    அதனை பொறுக்கமுடியாமலும் அதற்கு உங்களிடத்தில் பதில் இல்லாததாலும் பொத்தம் பொதுவாக
    இங்கே வெளிடப்படுபவை பொய் என்றும் இவற்றை நம்பத்தேவையில்லை என்றும் கூறி தப்பித்துக்கொள்கின்றீர்கள்
    அது உங்கள் பாணி அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    பொய்இல்லை என்று நிரூபிப்பது என் பாணி

    இலங்கையில் நடிகர் திலகத்தின் படங்கள் வெற்றிக்கொடிநாட்டியதற்கான
    பத்திரிகை விளம்பர ஆதாரங்கள் இட்டுக்கட்டியவை அல்ல

    தற்பொழுது பத்திரிகை விளம்பரங்கள் மட்டும் .

    (கைவசம் இருந்தவற்றில் சில)

    தொடரும்......
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •