Page 92 of 401 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #911
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அணிந்துரை

    எம்.ஜி.ஆரைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் மிகப் பிடித்தமான விஷயம். எம்.ஜி.ஆர் என்ற ஒரு மனிதர் நிறைய பலமும், குறைவான பலஹீனங்களும் கொண்ட ஒருவர்தான். ஆனால் பலஹீனங்களை பலமாக மாற்றத் தெரிந்த வித்தைக்காரர். வாழ்வின் தாழ்விலும் உயர்விலும் அவர் விடாது கடைபிடித்த மனிதநேயம்தான் அவரை வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

    தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கை அவருடையது. 1936-ம் ஆண்டு 'சதி லீலாவதி' திரைப்படத்தில் சாதாரண ஒரு காவலராக சிறுவேடத்தில் அறிமுகமான அவர், கதாநாயகனாக நடிப்பதென்ற தன் லட்சியைத்தை எட்ட 11 வருடங்கள் ஆனது. 'வாய்ப்பு எப்போது வரும் என்பதைக் கணிக்கமுடியாது. ஆனால் அது எப்போது வந்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் தகுதியுடன் தயார் நிலையில் நம்மை வைத்திருக்கவேண்டும்' என்பது அவரது வாழ்வின் வெற்றியின் ரகசியம். அதற்கு அந்த 11 வருடங்களே சாட்சி. அதன் பின்னர், திரையுலகின் உச்சகட்ட புகழை எட்ட அவருக்கு மேலும் 10 வருடங்கள் ஆனது. கடும் உழைப்பினால் அதை அவர் சாதித்தார்.
    ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான வாழ்க்கை ஒரு சினிமாப்படமாக ஆகிறபோது அதைச் சில மணிநேரங்களில் முடிக்கிற கட்டாயம் படைப்பாளிக்கு உண்டு. அப்படி ரத்தினச் சுருக்கமாக அந்த வாழ்க்கையை ரசிகர்களுக்குச் சொல்ல சம்பந்தப்பட்டவரின் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனைகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை அடுக்கிச் சொல்ல வேண்டியுள்ளது. சுமார் அரைநுாற்றாண்டுக்காலம் தமிழகத்தின் பேசுபொருளாக வாழ்ந்து மறைந்த அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்வும் அவரது திரைப்படங்களைப்போன்றே வெகு சுவாரஸ்யமான திருப்புமுனைச் சம்பவங்களை உள்ளடக்கியதுதான். கண்டியில் வசதியான குடும்பத்தில் பிறந்து பால்குடி மறக்காத வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் ஒரு சகோதரன் சகோதரியுடன் சொந்த மண்ணான பாலக்காடு திரும்புகிறான் குழந்தை ராம்சந்தர். அங்கு உறவினர்களிடம் அவமானப்படும் அவரது தாய் சத்தியபாமா, உறவினர் என யாரும் இல்லாத கண்காணாத இடத்திற்கு குடிபெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எண்ணத்தோடு தமிழகத்தில் கும்பகோணத்தில் தஞ்சமடைகிறார். எம்.ஜி.ஆர் வாழ்வில் முதல் திருப்புமுனை இதுதான். சிந்தித்துப்பார்த்தால் சினிமாவைப்போன்ற ஒரு திருப்பம் இங்கு இருக்கிறது.
    உறவுகளற்ற, அதே நேரத்தில் உதவக் கூடிய ஒருவரை சத்தியபாமா தேடியபோது அவருக்கு உதவிபுரிய முன்வருகிறார் கேரளக்காரரும் கோபால மேனோனின் நீண்டநாள் நண்பருமான வேலுநாயர். குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டு அவர்தான் பாலக்காட்டில் இருந்து சத்தியபாமாவையும் அவரது இரு குழந்தைகளையும் கும்பகோணத்துக்கு விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் அழைத்து வந்தார்.
    கோபாலமேனோன் என்ற கேரளக்காரரின் குடும்பத்தை வறுமை சூழாமல் போயிருந்தால்...?'என கற்பனை செய்து பார்த்தால் கடந்த அரைநுாற்றாண்டு சினிமா மற்றும் அரசியலில் கற்பனை செய்யமுடியாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருக்கும். அதுதான் நிஜம். காரணம் தமிழகத்தின் கடந்த அரைநுாற்றாண்டு கால அரசியல், சினிமா, இரண்டிலும் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக ஆதிக்கம் செலுத்தினார்!
    வறுமை தந்த முதல் திருப்புமுனைதான் எம்.ஜி.ஆரின் தமிழக விஜயத்தை முடிவுசெய்தது. இப்படி நுால் நெடுகிலும் எம்.ஜி.ஆர் வாழ்வின் திருப்புமுனைகளைப் பட்டியலிட்டு இதுவரை நாம் படித்திராத எம்.ஜி.ஆர் வாழ்வின் பல அரிய நிகழ்வுகளை நம்கண் முன் அடுக்கி ஆச்சர்யம் ஊட்டுகிறார் நுாலாசிரியர் திரு. கே. உமாதிபதி என்ற பாலசுப்பிரமணி.
    மிக அரிதாக எம்.ஜி.ஆர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சமபவம் இன்னொரு நபரின் வாழ்வின் திருப்புமுனைக்கு காரணமாகியிருக்கிறது. 50-களின் முற்பகுதியில் அண்ணா, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி முடித்துவிட்டு அதில் சிவாஜி வேடத்தில் நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசும் திறமையும் கொண்ட ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்துக்காக அன்றைக்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான எம்.ஜி.ஆரை பரித்துரைத்ததோடு, ஒருநாள் கையோடு எம்.ஜி.ஆரை அழைத்து வந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அன்றைக்கு அந்த வீட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு நடிகர் ஒருவர் அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்கமுடியாதா என ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

    அதேசமயம் அண்ணா கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்வதற்காக வாங்கிச்சென்ற எம்.ஜி.ஆருக்கு சில காரணங்களால் அந்த நாடகத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் அண்ணாவின் கதைவசனத்தைப் படித்த அவருக்கு அவர் மீது அளவிலா காதல் பிறந்தது.
    எம்.ஜி.ஆருக்குப் பதில் சிவாஜியாக நடிக்கும் வாய்ப்பு,அன்று ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்த நாடக நடிகருக்குப் போனது. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்துக்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்த பெரியார். வி.சி கணேசன் என்கிற அந்த நடிகரின் நடிப்பைக் கண்டு வியந்துபோனார். “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனைக் காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சி முகர்ந்தார். கணேசன் அன்றுமுதல், 'சிவாஜி' கணேசன் ஆனார். அது ஒரு வரலாற்று சம்பவம் கூட. இப்படி இன்னொருவர் வாழ்வில் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய திருப்புமுனையையும் நுாலாசிரியர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
    எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளாகியும் இன்னும் அவர் பெயரில் வரிந்துகட்டி புத்தகங்கள் வருகின்றன. பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் பல மாத இதழ்கள் வெளிவருகின்றன. 60 களில் வெளியான அவரது ஒரு திரைப்படத்தின் இன்றைய வெளியீட்டுக்கும் அன்று போலவே ஆர்ப்பரிப்பான கூட்டம் வருகிறது. அன்று வந்தவர்களும் இளைஞர்கள் இன்று வந்துகொண்டிருப்பவர்களும் இளைஞர்கள். இதுதான் வியப்புக்குரிய விஷயம். அவருக்குப்பின் தமிழ்சினிமா பல சூப்பர் ஸ்டார்களை பார்த்துவிட்டது. ஆனால் இந்த அதிசயத்தை எம்.ஜி.ஆர் ஒருவரால்தான் நிகழ்த்த முடிகிறது.
    எம்.ஜி.ஆர் நடித்து முடித்த ஒரு படத்துக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்னென்னேவோ பெயர் சொன்னபோது, “பல லட்சம் செலவில் படம் எடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தயாரிக்கும் போஸ்டர்களை மக்கள் பார்வையில் படும்படி சந்துபொந்துகளில் ஒட்டப்போகிறோம். அப்படி ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட போஸ்டரில் அவனது வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய ஒரு மெசேஜை சொன்னால் என்ன?அதுதான் நம்மை வாழவைக்கும் ரசிகனுக்கு நாம் காட்டுகிற நன்றியாக இருக்கும். அதனால் நல்லதொரு கருத்தை அவன் மனதில் விதைப்பதாக போஸ்டர்கள் இருக்கட்டும்” என்றாராம். திருடாதே என அந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற திரைக்கலைஞனின் பொறுப்புணர்ச்சி.
    உண்ண உணவின்றி வயிற்றில் ஈரத்துணியை வைத்து படுத்துறங்கிய நேரங்களிலும் பிள்ளைகள் பிச்சை எடுத்துவிடக்கூடாது என வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் சத்தியபாமா. அம்மாவின் நேர்மையை மட்டுமல்ல; வறுமையின் விளிம்புக்குத் தள்ளிய அந்த வாழ்க்கையையும் எம்.ஜி.ஆர் மறக்கவில்லை. சத்துணவு பிறந்தது இப்படித்தான். சத்துணவுத்திட்டம் தமிழகத்தின் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவை அதிகப்படுத்தியதாக ஐ.நா பதிவு செய்துள்ளது. தன் சொத்து முழுவதையும் விற்று அவர் எடுத்த நாடோடி மன்னனில், “நீங்கள் மாளிகையிலிருந்து மக்களைப் பார்ப்பவர்கள். நான் மக்களிடமிருந்து மாளிகையை பார்ப்பவன்” என்று வசனம் பேசுவார். அவர் தந்த சத்துணவும் செருப்பும் அந்த வசனத்தை சாகாவரம்பெற்றதாக்கின. இப்படி வறுமையினால் தான் அடைந்த துயரை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருந்ததால்தான் அந்தப்பெருந்தகையை தமிழ்க்கூறும் நல்லுலகம் இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
    சத்துணவுத்திட்டம் பிறந்த கதை தெரியும். எம்.ஜி.ஆர் மாணவர்களுக்கு செருப்பு தந்ததன் பின்னணி பலரும் அறியாதது. ஒருமுறை சேலத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த எம்.ஜி.ஆர், நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடியில் கட்சிக்காரர் ஒருவரது வீட்டில் தங்கினார். அதே வீட்டின் மாடியில் அவருடன் வந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தங்கினர். இரவு எம்.ஜி.ஆர் நெடுநேரமாகியும் உறங்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஜானகி அம்மாள் கணவரின் குழப்பத்தைக் கவலையோடு பார்த்தபடி இருந்தார். கொஞ்சநேரத்தில் எம்.ஜி.ஆர் ஜானகியிடம் மாடியிலிருந்த கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கண்ணன் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எம்.எல்.ஏ-வான அவர் ஒரு இளைஞர்.
    நள்ளிரவில் தலைவர் ஏன் அழைக்கிறார் எனக் குழப்பத்துடன் வந்த கண்ணனிடம் எம்.ஜி.ஆர், “சேலத்திலிருந்து எடப்பாடி வரும் வழியில் என்னவெல்லாம் நீ பார்த்தாய் எனக் கேட்டார். நள்ளிரவு நேரத்தில் தலைவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத கண்ணன், என்னன்னவோ சொன்னார். எம்.ஜி.ஆர், “அதில்லை, அதில்லை” என மறுத்தபடியே வந்தார்.
    இறுதியாக அவரே, “வழியில் ஒரு கிராமத்தில் பள்ளி முடிந்த உடன் வெளியே வந்த மாணவர்களைப் பார்த்தாயா”என்று கேட்டார். தலைவரை குளிர்விப்பதற்காக கண்ணன், “ஆம் பார்த்தேன். முன்பெல்லாம் பள்ளிகளில் அத்தனை கூட்டம் இருக்காது. சத்துணவுக்குப்பின் பள்ளிகளுக்கு மாணவர் வருகை அதிகரித்துள்ளது” என்றார். உடனே எம்.ஜி.ஆர், கோபத்துடன் “ நான் அதைக் கேட்கவில்லை. அந்த மாணவர்களின் கால்களில் செருப்பு இருந்ததா” என்றார். கண்ணன் தன் நினைவைக்கிளறிப்பார்த்தார். தலைவர் எங்கு வருகிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே ஒருசிலரைத்தவிர யார் காலிலும் செருப்பு இல்லை” என்றார். “ஏன் இல்லை“என எதிர்கேள்வி கேட்டார் எம்.ஜி.ஆர். “பெற்றோரின் வறுமைக் காரணமாக இருக்கலாம்” என்றார் கண்ணன். “நீ படித்த காலத்திலே செருப்பு போட்டிருந்தாயா? என்றார். அதற்கு கண்ணன், ”நான் இன்னும் சிலரும் போட்டிருந்தோம். ஆனால் பெரும்பாலானோர் போடவில்லை” என்றார். “ஏன் போடவில்லை என எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, “பெரும் பண்ணைக்காரர்கள், உயர் சாதிக்காரர்கள் இருக்கும் தெரு வழியே செருப்பு போட்டுச்சென்றால் பிரச்னை உருவாகும் என்பதால் பெற்றோர்கள் வாங்கித்தரமாட்டார்கள் என்றார். எம்.ஜி.ஆர் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார். “அதேதான் இப்போதும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செருப்பு வாங்கித்தராததற்கு வறுமை மட்டுமே காரணம் அல்ல; இந்தத் தீண்டாமையும் முக்கிய காரணம். பிள்ளைகள் ஆபத்தின்றி சென்று வருவதற்காக அவர்கள் வெயிலில் செருப்பின்றி நடப்பதையும் பொறுத்துக் கொள்கிறார்கள் பெற்றோர்கள்” என்று நிறுத்திய எம்.ஜி.ஆர், “அதனால் இந்தச் செருப்பை அரசாங்கமே கொடுத்தால் என்ன? பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள் என்றால்தானே அவர்கள் மீது வெறுப்பும் கோபமும் உயர்சாதி என்று சொல்லப் படுகிறவர்களுக்கு வருகிறது. அரசே கொடுக்கும்போது பெற்றோர்களுக்கும் சங்கடம் இருக்காது. யாருக்கும் அதை எதிர்க்கத் துணிச்சல் வராது, இல்லையா? என்று சொல்லி நிறுத்தியபோது, கண்ணன் கண்களில் முட்டிநின்றது கண்ணீர்.
    கூத்தாடி, அட்டைக்கத்திவீரன், மலையாளத்தான் என காலம் முழுவதும் தன் அரசியல் எதிரிகளால் எள்ளி நகையாடப்பட்டவருக்குள் எத்தனை கூர்மையான ஓர் அரசியல் பார்வை. சட்டங்களால் கூடத் தடுக்கமுடியாத ஒரு சமூகக்குற்றத்துக்கு எத்தனை யதார்த்தமான தீர்வு. துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில் எம்.ஜி.ஆர் மறைந்தார். அடுத்து வந்த ஜானகி ஆட்சியில் செருப்பு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. முதன்முதலாக இந்தத் திட்டத்தின்கீழ் செருப்பு வழங்கியது, அப்போது தாட்கோ சேர்மனாக இருந்த அதே கண்ணன்தான்.
    எம்.ஜி.ஆர் என்ற பெயரை இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு தமிழகம் கொண்டாட இந்த ஒரு காரணம் போதும். எம்.ஜி.ஆரின் புகழுக்கு அலங்காரம் சூட்டும் திருப்புமுனை நாயகன் எம்.ஜி.ஆர் என்ற இப்புத்தகத்தை எழுதியுள்ள விகடன் குழுமத்தின் தலைமை உதவி ஆசிரியர் திரு. கே.பாலசுப்பிரமணி அவர்களுக்கும், நுாலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் எம்.ஜி.ஆரை நேசிக்கும் கோடிக்கணக்கான அன்பர்கள் சார்பாக என் நன்றிகள்.

    அன்பன்
    எஸ்.கிருபாகரன் , நன்றி திரு கிருபாகரன்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #912
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    ஆகா.. அருமை. அருமை.

    படிக்கின்றபோதே சிலிர்கின்றது. கண்ணீர் வருகிறது. புரட்சித் தலைவர் சமூக சிந்தனையாளராக இருந்ததால்தான் ஏழைகள் வாழ்க்கை அன்று ஓரளவு உயர்ந்தது. ஏழைப்பள்ளி பசங்களுக்கு சோறும் சத்துணவும் போட்டு இலவச செருப்பும் கொடுக்கும் திட்டத்தின் பின்னால் புரட்சித் தலைவருக்கு எவ்வளவு சமூக தீர்க்க பார்வை இருந்திருக்கின்றது.

    மனிதக் கடவுள் புரட்சித் தலைவர் வாழ்க

  4. #913
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர் மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    தங்கத்தில் முகம் எடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    தலைவர் என்று
    வந்திருக்கும் வடிவோ
    நீ மாலை நேர
    பொன் மஞ்சள் நிலவோ

    #புரட்சித்தலைவர்எம்ஜிஆர் நடித்த #மீனவநண்பன் படத்தில்

    ‘நேருக்கு நேராய் வரட்டும்; நெஞ்சில்துணிவிருந்தால்...’

    பாடல் காட்சியின் படப் பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடந்துகொண்டிருந்தது. அந்தப் பாடலில்

    ‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடவோம் என்று தமிழ்க்கவிபாரதி பாடிய பாட்டை நடைமுறை ஆக்கிடுவோம்.

    என்ற வரிகள் இடம் பெறும்.

    அந்தக் காட்சியில் பாரதியார் புகைப்படம் இடம் பெற வேண்டும். ஆனால், பெங்களூரு முழுக்க சுற்றியும் பாரதியார் படம் கிடைக்கவில்லை.படத்தின் இயக்குநரோ கண்டிப்பாக பாரதியார் படம்வேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழகம் சென்று பாரதியார் படம்வாங்கி வரலாம், அதுவரை வேறுகாட்சிகள் எடுக்கலாம் என்று படக்குழுவினர் நினைத்த போது அங்கமுத்துவை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

    ‘‘என்னப்பா, கையிலே வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலையறே.உனக்கு பாரதியார் படம் வரையத் தெரியாதா? ’’ என்றார். அப்போது தான் எல்லாருக்கும் உறைத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் பாரதியார்ஓவியம் ரெடி. எல்லாருக்கும் திருப்தி. #மீனவநண்பன் படத்தில் குறிப்பிட்ட காட்சியில்அங்கமுத்து வரைந்த அந்தபாரதியார் படம்தான் இடம்பெற்றிருக்கும்.

    ஓவியத்தைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர். சொன்னார். ‘#தமிழன் #எங்கேஇருக்கிறானோ #அங்கே #நிச்சயம் #பாரதியார் #இருப்பார்.

    இந்தசின்ன விஷயத்துக்காக தமிழகம் போக இருந்தீர்களே ???

    #மதியூகத்தின்மறுபெயர்
    #மக்கள்திலகம்எம்ஜிஆர்
    #என்றுசொல்லத்தான் #வேண்டுமோ !!! Thanks to mr. Chermakani

  5. #914
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலை உலக நிரந்தர சக்ரவர்த்தி (Reel, & Real)----- (நிழலிலும்,&நிஜத்திலும்) மக்கள் திலகம் தயாரித்த பிரம்மாண்ட வெற்றி படைப்பு "அடிமைப்பெண்" கடந்த வாரம் சென்னை- மகாலட்சுமி dts பெரிய தொகையான ரூபாய் 65000.00 அளவிலான Fixed Hire முறையிலும் படம் போட்டவருக்கு கணிசமான லாபத்தை அளித்துள்ளார் வசூல் திலகம் என இனிய தகவல்... முக்கிய குறிப்பு ; இடைவெளி இன்றி திரையீடு, மற்றும் 2ம் வாரத்தில் போட்டியாக மற்றுமொரு திரையரங்கம் ஸ்ரீநிவாசா dts யிலும் இதே காவியம் திரையீடு💐👌👍

  6. #915
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    அணிந்துரை

    எம்.ஜி.ஆரைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் மிகப் பிடித்தமான விஷயம். எம்.ஜி.ஆர் என்ற ஒரு மனிதர் நிறைய பலமும், குறைவான பலஹீனங்களும் கொண்ட ஒருவர்தான். ஆனால் பலஹீனங்களை பலமாக மாற்றத் தெரிந்த வித்தைக்காரர். வாழ்வின் தாழ்விலும் உயர்விலும் அவர் விடாது கடைபிடித்த மனிதநேயம்தான் அவரை வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டுசென்றது.

    தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கை அவருடையது. 1936-ம் ஆண்டு 'சதி லீலாவதி' திரைப்படத்தில் சாதாரண ஒரு காவலராக சிறுவேடத்தில் அறிமுகமான அவர், கதாநாயகனாக நடிப்பதென்ற தன் லட்சியைத்தை எட்ட 11 வருடங்கள் ஆனது. 'வாய்ப்பு எப்போது வரும் என்பதைக் கணிக்கமுடியாது. ஆனால் அது எப்போது வந்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் தகுதியுடன் தயார் நிலையில் நம்மை வைத்திருக்கவேண்டும்' என்பது அவரது வாழ்வின் வெற்றியின் ரகசியம். அதற்கு அந்த 11 வருடங்களே சாட்சி. அதன் பின்னர், திரையுலகின் உச்சகட்ட புகழை எட்ட அவருக்கு மேலும் 10 வருடங்கள் ஆனது. கடும் உழைப்பினால் அதை அவர் சாதித்தார்.
    ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான வாழ்க்கை ஒரு சினிமாப்படமாக ஆகிறபோது அதைச் சில மணிநேரங்களில் முடிக்கிற கட்டாயம் படைப்பாளிக்கு உண்டு. அப்படி ரத்தினச் சுருக்கமாக அந்த வாழ்க்கையை ரசிகர்களுக்குச் சொல்ல சம்பந்தப்பட்டவரின் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனைகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை அடுக்கிச் சொல்ல வேண்டியுள்ளது. சுமார் அரைநுாற்றாண்டுக்காலம் தமிழகத்தின் பேசுபொருளாக வாழ்ந்து மறைந்த அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்வும் அவரது திரைப்படங்களைப்போன்றே வெகு சுவாரஸ்யமான திருப்புமுனைச் சம்பவங்களை உள்ளடக்கியதுதான். கண்டியில் வசதியான குடும்பத்தில் பிறந்து பால்குடி மறக்காத வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் ஒரு சகோதரன் சகோதரியுடன் சொந்த மண்ணான பாலக்காடு திரும்புகிறான் குழந்தை ராம்சந்தர். அங்கு உறவினர்களிடம் அவமானப்படும் அவரது தாய் சத்தியபாமா, உறவினர் என யாரும் இல்லாத கண்காணாத இடத்திற்கு குடிபெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எண்ணத்தோடு தமிழகத்தில் கும்பகோணத்தில் தஞ்சமடைகிறார். எம்.ஜி.ஆர் வாழ்வில் முதல் திருப்புமுனை இதுதான். சிந்தித்துப்பார்த்தால் சினிமாவைப்போன்ற ஒரு திருப்பம் இங்கு இருக்கிறது.
    உறவுகளற்ற, அதே நேரத்தில் உதவக் கூடிய ஒருவரை சத்தியபாமா தேடியபோது அவருக்கு உதவிபுரிய முன்வருகிறார் கேரளக்காரரும் கோபால மேனோனின் நீண்டநாள் நண்பருமான வேலுநாயர். குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டு அவர்தான் பாலக்காட்டில் இருந்து சத்தியபாமாவையும் அவரது இரு குழந்தைகளையும் கும்பகோணத்துக்கு விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் அழைத்து வந்தார்.
    கோபாலமேனோன் என்ற கேரளக்காரரின் குடும்பத்தை வறுமை சூழாமல் போயிருந்தால்...?'என கற்பனை செய்து பார்த்தால் கடந்த அரைநுாற்றாண்டு சினிமா மற்றும் அரசியலில் கற்பனை செய்யமுடியாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருக்கும். அதுதான் நிஜம். காரணம் தமிழகத்தின் கடந்த அரைநுாற்றாண்டு கால அரசியல், சினிமா, இரண்டிலும் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக ஆதிக்கம் செலுத்தினார்!
    வறுமை தந்த முதல் திருப்புமுனைதான் எம்.ஜி.ஆரின் தமிழக விஜயத்தை முடிவுசெய்தது. இப்படி நுால் நெடுகிலும் எம்.ஜி.ஆர் வாழ்வின் திருப்புமுனைகளைப் பட்டியலிட்டு இதுவரை நாம் படித்திராத எம்.ஜி.ஆர் வாழ்வின் பல அரிய நிகழ்வுகளை நம்கண் முன் அடுக்கி ஆச்சர்யம் ஊட்டுகிறார் நுாலாசிரியர் திரு. கே. உமாதிபதி என்ற பாலசுப்பிரமணி.
    மிக அரிதாக எம்.ஜி.ஆர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சமபவம் இன்னொரு நபரின் வாழ்வின் திருப்புமுனைக்கு காரணமாகியிருக்கிறது. 50-களின் முற்பகுதியில் அண்ணா, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி முடித்துவிட்டு அதில் சிவாஜி வேடத்தில் நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசும் திறமையும் கொண்ட ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்துக்காக அன்றைக்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான எம்.ஜி.ஆரை பரித்துரைத்ததோடு, ஒருநாள் கையோடு எம்.ஜி.ஆரை அழைத்து வந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அன்றைக்கு அந்த வீட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு நடிகர் ஒருவர் அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்கமுடியாதா என ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

    அதேசமயம் அண்ணா கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்வதற்காக வாங்கிச்சென்ற எம்.ஜி.ஆருக்கு சில காரணங்களால் அந்த நாடகத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் அண்ணாவின் கதைவசனத்தைப் படித்த அவருக்கு அவர் மீது அளவிலா காதல் பிறந்தது.
    எம்.ஜி.ஆருக்குப் பதில் சிவாஜியாக நடிக்கும் வாய்ப்பு,அன்று ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்த நாடக நடிகருக்குப் போனது. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்துக்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்த பெரியார். வி.சி கணேசன் என்கிற அந்த நடிகரின் நடிப்பைக் கண்டு வியந்துபோனார். “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனைக் காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சி முகர்ந்தார். கணேசன் அன்றுமுதல், 'சிவாஜி' கணேசன் ஆனார். அது ஒரு வரலாற்று சம்பவம் கூட. இப்படி இன்னொருவர் வாழ்வில் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய திருப்புமுனையையும் நுாலாசிரியர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
    எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளாகியும் இன்னும் அவர் பெயரில் வரிந்துகட்டி புத்தகங்கள் வருகின்றன. பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் பல மாத இதழ்கள் வெளிவருகின்றன. 60 களில் வெளியான அவரது ஒரு திரைப்படத்தின் இன்றைய வெளியீட்டுக்கும் அன்று போலவே ஆர்ப்பரிப்பான கூட்டம் வருகிறது. அன்று வந்தவர்களும் இளைஞர்கள் இன்று வந்துகொண்டிருப்பவர்களும் இளைஞர்கள். இதுதான் வியப்புக்குரிய விஷயம். அவருக்குப்பின் தமிழ்சினிமா பல சூப்பர் ஸ்டார்களை பார்த்துவிட்டது. ஆனால் இந்த அதிசயத்தை எம்.ஜி.ஆர் ஒருவரால்தான் நிகழ்த்த முடிகிறது.
    எம்.ஜி.ஆர் நடித்து முடித்த ஒரு படத்துக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்னென்னேவோ பெயர் சொன்னபோது, “பல லட்சம் செலவில் படம் எடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தயாரிக்கும் போஸ்டர்களை மக்கள் பார்வையில் படும்படி சந்துபொந்துகளில் ஒட்டப்போகிறோம். அப்படி ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட போஸ்டரில் அவனது வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய ஒரு மெசேஜை சொன்னால் என்ன?அதுதான் நம்மை வாழவைக்கும் ரசிகனுக்கு நாம் காட்டுகிற நன்றியாக இருக்கும். அதனால் நல்லதொரு கருத்தை அவன் மனதில் விதைப்பதாக போஸ்டர்கள் இருக்கட்டும்” என்றாராம். திருடாதே என அந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற திரைக்கலைஞனின் பொறுப்புணர்ச்சி.
    உண்ண உணவின்றி வயிற்றில் ஈரத்துணியை வைத்து படுத்துறங்கிய நேரங்களிலும் பிள்ளைகள் பிச்சை எடுத்துவிடக்கூடாது என வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் சத்தியபாமா. அம்மாவின் நேர்மையை மட்டுமல்ல; வறுமையின் விளிம்புக்குத் தள்ளிய அந்த வாழ்க்கையையும் எம்.ஜி.ஆர் மறக்கவில்லை. சத்துணவு பிறந்தது இப்படித்தான். சத்துணவுத்திட்டம் தமிழகத்தின் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவை அதிகப்படுத்தியதாக ஐ.நா பதிவு செய்துள்ளது. தன் சொத்து முழுவதையும் விற்று அவர் எடுத்த நாடோடி மன்னனில், “நீங்கள் மாளிகையிலிருந்து மக்களைப் பார்ப்பவர்கள். நான் மக்களிடமிருந்து மாளிகையை பார்ப்பவன்” என்று வசனம் பேசுவார். அவர் தந்த சத்துணவும் செருப்பும் அந்த வசனத்தை சாகாவரம்பெற்றதாக்கின. இப்படி வறுமையினால் தான் அடைந்த துயரை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருந்ததால்தான் அந்தப்பெருந்தகையை தமிழ்க்கூறும் நல்லுலகம் இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
    சத்துணவுத்திட்டம் பிறந்த கதை தெரியும். எம்.ஜி.ஆர் மாணவர்களுக்கு செருப்பு தந்ததன் பின்னணி பலரும் அறியாதது. ஒருமுறை சேலத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த எம்.ஜி.ஆர், நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடியில் கட்சிக்காரர் ஒருவரது வீட்டில் தங்கினார். அதே வீட்டின் மாடியில் அவருடன் வந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தங்கினர். இரவு எம்.ஜி.ஆர் நெடுநேரமாகியும் உறங்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஜானகி அம்மாள் கணவரின் குழப்பத்தைக் கவலையோடு பார்த்தபடி இருந்தார். கொஞ்சநேரத்தில் எம்.ஜி.ஆர் ஜானகியிடம் மாடியிலிருந்த கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கண்ணன் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எம்.எல்.ஏ-வான அவர் ஒரு இளைஞர்.
    நள்ளிரவில் தலைவர் ஏன் அழைக்கிறார் எனக் குழப்பத்துடன் வந்த கண்ணனிடம் எம்.ஜி.ஆர், “சேலத்திலிருந்து எடப்பாடி வரும் வழியில் என்னவெல்லாம் நீ பார்த்தாய் எனக் கேட்டார். நள்ளிரவு நேரத்தில் தலைவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத கண்ணன், என்னன்னவோ சொன்னார். எம்.ஜி.ஆர், “அதில்லை, அதில்லை” என மறுத்தபடியே வந்தார்.
    இறுதியாக அவரே, “வழியில் ஒரு கிராமத்தில் பள்ளி முடிந்த உடன் வெளியே வந்த மாணவர்களைப் பார்த்தாயா”என்று கேட்டார். தலைவரை குளிர்விப்பதற்காக கண்ணன், “ஆம் பார்த்தேன். முன்பெல்லாம் பள்ளிகளில் அத்தனை கூட்டம் இருக்காது. சத்துணவுக்குப்பின் பள்ளிகளுக்கு மாணவர் வருகை அதிகரித்துள்ளது” என்றார். உடனே எம்.ஜி.ஆர், கோபத்துடன் “ நான் அதைக் கேட்கவில்லை. அந்த மாணவர்களின் கால்களில் செருப்பு இருந்ததா” என்றார். கண்ணன் தன் நினைவைக்கிளறிப்பார்த்தார். தலைவர் எங்கு வருகிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே ஒருசிலரைத்தவிர யார் காலிலும் செருப்பு இல்லை” என்றார். “ஏன் இல்லை“என எதிர்கேள்வி கேட்டார் எம்.ஜி.ஆர். “பெற்றோரின் வறுமைக் காரணமாக இருக்கலாம்” என்றார் கண்ணன். “நீ படித்த காலத்திலே செருப்பு போட்டிருந்தாயா? என்றார். அதற்கு கண்ணன், ”நான் இன்னும் சிலரும் போட்டிருந்தோம். ஆனால் பெரும்பாலானோர் போடவில்லை” என்றார். “ஏன் போடவில்லை என எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, “பெரும் பண்ணைக்காரர்கள், உயர் சாதிக்காரர்கள் இருக்கும் தெரு வழியே செருப்பு போட்டுச்சென்றால் பிரச்னை உருவாகும் என்பதால் பெற்றோர்கள் வாங்கித்தரமாட்டார்கள் என்றார். எம்.ஜி.ஆர் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார். “அதேதான் இப்போதும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செருப்பு வாங்கித்தராததற்கு வறுமை மட்டுமே காரணம் அல்ல; இந்தத் தீண்டாமையும் முக்கிய காரணம். பிள்ளைகள் ஆபத்தின்றி சென்று வருவதற்காக அவர்கள் வெயிலில் செருப்பின்றி நடப்பதையும் பொறுத்துக் கொள்கிறார்கள் பெற்றோர்கள்” என்று நிறுத்திய எம்.ஜி.ஆர், “அதனால் இந்தச் செருப்பை அரசாங்கமே கொடுத்தால் என்ன? பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள் என்றால்தானே அவர்கள் மீது வெறுப்பும் கோபமும் உயர்சாதி என்று சொல்லப் படுகிறவர்களுக்கு வருகிறது. அரசே கொடுக்கும்போது பெற்றோர்களுக்கும் சங்கடம் இருக்காது. யாருக்கும் அதை எதிர்க்கத் துணிச்சல் வராது, இல்லையா? என்று சொல்லி நிறுத்தியபோது, கண்ணன் கண்களில் முட்டிநின்றது கண்ணீர்.
    கூத்தாடி, அட்டைக்கத்திவீரன், மலையாளத்தான் என காலம் முழுவதும் தன் அரசியல் எதிரிகளால் எள்ளி நகையாடப்பட்டவருக்குள் எத்தனை கூர்மையான ஓர் அரசியல் பார்வை. சட்டங்களால் கூடத் தடுக்கமுடியாத ஒரு சமூகக்குற்றத்துக்கு எத்தனை யதார்த்தமான தீர்வு. துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில் எம்.ஜி.ஆர் மறைந்தார். அடுத்து வந்த ஜானகி ஆட்சியில் செருப்பு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. முதன்முதலாக இந்தத் திட்டத்தின்கீழ் செருப்பு வழங்கியது, அப்போது தாட்கோ சேர்மனாக இருந்த அதே கண்ணன்தான்.
    எம்.ஜி.ஆர் என்ற பெயரை இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு தமிழகம் கொண்டாட இந்த ஒரு காரணம் போதும். எம்.ஜி.ஆரின் புகழுக்கு அலங்காரம் சூட்டும் திருப்புமுனை நாயகன் எம்.ஜி.ஆர் என்ற இப்புத்தகத்தை எழுதியுள்ள விகடன் குழுமத்தின் தலைமை உதவி ஆசிரியர் திரு. கே.பாலசுப்பிரமணி அவர்களுக்கும், நுாலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் எம்.ஜி.ஆரை நேசிக்கும் கோடிக்கணக்கான அன்பர்கள் சார்பாக என் நன்றிகள்.

    அன்பன்
    எஸ்.கிருபாகரன் , நன்றி திரு கிருபாகரன்...
    அருமை

    நன்றி திரு சுகாராம்

  7. #916
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளி முதல் (11/5/18) கோவை ராயலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் திரையிடப்பட்டுள்ளது .

    கோவை சாந்தி, அர்ச்சனா , துடியலூர் முருகன் அரங்குகளில் திரையிடப்பட்ட பின்
    குறைந்த இடைவெளியில் ராயலில் திரையிடப்பட்டு இணைந்த 4 வது வாரமாக
    வெற்றிநடை போடுகிறது . நாளை (13/5/18) மாலை பக்தர்களின் சிறப்பு காட்சியாக அனுசரிக்கப்படுகிறது .

    தகவல் உதவி : கோவை பக்தர் திரு.வி.கே. எம்.

  8. #917
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #918
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர் மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும் தயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான்
    மயங்காதே

    பாட்டைக் கோட்டை ஆக்கினார் எம்.ஜி.ஆர்., கோட்டையிலிருந்து தன் பாட்டை ஒலிக்கச் செய்தார்!

    படப்பெயரிலிலிருந்து தொடங்கி ஒவ்வொரு திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னை வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

    தாய்தான் தன்னுடைய தெய்வம் என்று காட்ட ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்றார். ‘தாய்க்குப் பின் தாரம்’ என்றார். ‘தாயின் மடியில்’, ‘தெய்வத்தாய்’, ‘குடியிருந்த கோயில்’ என்றார்.

    தான் பாமர மக்களின் நண்பன் என்று தலைப்பிலேயே வெளிப்படுத்த ஆரம்பித்துவிடுவார். ‘படகோட்டி’, ‘தொழிலாளி’, ‘விவசாயி’, ‘ரிக்ஷாக்காரன்’, ‘மாட்டுக்கார வேலன்’, ‘மீனவ நண்பன்’ என்று பாமரனைத் தன் பக்கம் கொண்டு வந்தார்.

    ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’ என்றும் ஆனார். தன்னுடைய அரசியல் தலைவரான அண்ணாவினுடனான தனது தொடர்பைக் காட்ட, அவருடைய நூல்களான ‘பணத்தோட்டம்’, ‘சந்திரோதயம்’ முதலியவற்றைத் தன் படத்தலைப்புகள் ஆக்கினார்.

    தன்னுடைய பலம் புரியாமல் எதிர்த்தவர்களை முறியடிக்கும் காலம் வந்த போது, அண்ணா தன்னை அன்புடன் அழைத்த ‘இதயக்கனி’ என்பதையும் தலைப்பில் இட்டார். தன்னை இளிச்சவாயன் என்று நினைத்து ஒடுக்க நினைத்தவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கும் வகையில், ‘நாளை நமதே’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ போன்ற டைட்டில்களை வரிசைப்படுத்தினார்.

    தலைப்பில் மட்டும் வசியம் காட்டி, படத்தில் கோட்டை விட்டால், தலைப்பால் எந்த நன்மையும் வராது. தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு புடவையை நழுவவிட்ட கதையாகிவிடும்! தாயை எம்.ஜி.ஆர்., டைட்டிலில் மட்டும் வைக்கவில்லை, தன் நெஞ்சினில் வைத்திருப்பதாகப் படத்திற்குப் படம் காட்டினார். தன் குவிந்த கைகளின் வணக்கத்தில் காட்டினார். தான் சாமானியனின் நண்பன் என்ற கருத்தை தன் படக்கதை ஒவ்வொன்றிலும் வைத்தார். படங்கள் உன்னதமானவையாக அமைந்தனவோ இல்லையோ, ரசிகர்களிடம் எம்.ஜி.ஆரின் நம்பகத்தன்மை அதிகரித்தது.

    நடிகர்களுக்கு சங்கம் தேவை என்று நடிகர் சங்க தலைவராக ஐம்பதுகளின் இரண்டாம் பாதியில் அவர் இருந்தது சிலருக்குத் தெரியும். ஆனால், நடிகர்களின் கருத்து வெளியுலகத்திற்குத் தெரியவேண்டும் என்று ‘நடிகன் குரல்’ என்ற சஞ்சிகையைத் தொடங்கி அதன் பதிப்பாசிரியராகவும் இருந்தது அவ்வளவு தெரிந்த விஷயம் அல்ல. முழு நேர அரசியலுக்கு வரும் முன்பே இதுபோன்ற பொது விஷயங்களில் ஈடுபட்டார். கருத்துக்களை செய்திகளாக மக்களுக்குத் தெரியப்படுத்துவதில் நாட்டம் இருந்தது.

    தான் தயாரித்து, இயக்கி, இரண்டு வேடங்களில் நடித்த ‘நாடோடி மன்னன்’ படத்தை, வெறும் ராஜா ராணிக் கதையாக எடுக்காமல், ஆட்சி, அதிகாரம், மக்கள் நலம் என்று பல கருத்துக்களைப் புகுத்தியதில் எம்.ஜி.ஆரின் அரசியல் பார்வை தெரிந்தது. அது நிஜவாழ்க்கையிலும் பிரதிபலிப்பதுபோல் நடந்துகொண்டார்.

    இத்தனை செய்தவர் திரைப்பாடலை விட்டுவைப்பாரா? நாடகங்களில் பாடல்களை ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு, நாடகக்கதை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, பாடலை ரசிக்கவேண்டும் என்றளவுக்கு தமிழ் மக்களுக்கு இருந்த பாட்டு ரசனையை நேரடியாகப் பார்த்தவர் ஆயிற்றே!

    எம்.ஜி.ஆர்., நாயகனாக நடித்த முதல் படமான 'ராஜகுமாரி'யில் எம்.எம்.மாரியப்பா அவருக்குப் பின்னணிப்பாடல் பாடினார். படம் வெற்றி பெற்றதால், அடுத்ததாக ‘மருதநாட்டு இளவரசி’யிலும் அவர்தான் பாடவேண்டும் என்று எம்.ஜி.ஆர்., எழுதிய கடிதத்தை நாம் கண்டதுண்டு.

    அதன் பிறகு, 'மலைக்கள்ள'னில் டி.எம்.சவுந்திரராஜன் பாடிய ‘எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் தந்த தெம்பு அதிகம். எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் சேர்ந்த ஆரம்ப காலம் அது. காங்கிரஸ் ஆட்சிக்கு நாடெங்கும் ஆதரவு இருந்தாலும், தமிழ்நாட்டில் தி.மு.கவிற்கான ஆதரவு பெருகத் தொடங்கியிருந்தது. சுதந்திரம் வந்ததும் நாட்டில் பாலும் தேனும் பெருகும் என்ற அடிப்படையில்லாத எதிர்பார்ப்பு பொய்த்திருந்தது. தட்டுப்பாடுகள் நிலவிய காலம். ஆகவே, காங்கிரஸ் ஆட்சியை ஏமாற்று ஆட்சி, மக்களை ஏய்க்கும் ஆட்சி என்று உரக்க ஒலித்த, ‘எத்தனைக் காலம்தான்’ நல்ல வரவேற்பைப் பெற்றுகொண்டிருந்தது. தி.மு.கழக மேடைப் பிரசாரகர்களின் ‘கனல் தெறிக்கும்’ வசன கண்டனங்களைப்போல் இல்லாமல், 'எத்தனைக் காலம்' பாடலில், சாடல் மட்டும் இல்லை, ஒரு நல்ல வருங்காலத்திற்கான கற்பனையும் இருந்தது!

    தேசிய போராட்டத்தின் போது, வெள்ளையனை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுடன் தேச நிர்மாணத்திற்கான செயல்பாடுகளும் இருந்தன. ஆரம்பத்தில் காங்கிரஸில் இருந்த எம்.ஜி.ஆர்., அதையெல்லாம் அறிந்தவர்தான். அதுமட்டும் இல்லாமல், ‘எத்தனைக்காலம்தான் ஏமாற்றுவார்’ பல்லவியை எழுதிய பின்பு பாடலாசிரியர் ராமையாதாஸ் கோபத்தில் சென்றுவிட்டதாகவும், பழுத்த காந்தியவாதியான கோவை அய்யாமுத்து அதை முடித்ததாகவும் சொல்வார்கள். ‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம், கல்வி இல்லாத பேர்களே இல்லாமல் செய்வோம்’ முதலிய சரண வரிகளில் புனர்நிர்மாணத்தின் சாயல் நன்றாகவே ஒலிக்கின்றது. எம்.ஜி.ஆரின் முதல் வெற்றிகரமான கொள்கைப் பாடலிலேயே ஒரு ‘பாசிடிவ்’ தொனி ஒலிக்கத்தொடங்கி விட்டது!

    ஐம்பதுகளில், தான் சார்ந்த கட்சியின் முதல் பத்தாண்டுகளில் எம்.ஜி.ஆரும் புராண மறுப்பு, இந்துமத எதிர்ப்பு போன்ற கொள்கைகளைக் கருத்துடன் கடைப்பிடிப்பவ ராகத்தான் இருந்தார். ‘ராணி லலிதாங்கி’ என்ற படத்தில் நடிக்க ஏற்று கொண்ட பின், கதையில் அவர் அதிக மாறுதல்கள் செய்யவிரும்பியதால், கடைசியில் சிவாஜி நடித்தார்! அதற்கு முன், எம்.ஜி.ஆர்., நடிக்கிறார் என்று அறிவிக்கும் ‘ராணி லலிதாங்கி’யின் விளம்பரம் கூட வந்தது. படத்தில், ‘ஆண்டவனே இல்லையே’ என்று சவுந்திரராஜன் பாடும் ஒரு பாடல் கூட உண்டு. முதல் வரியைக் கேட்டதும் எம்.ஜி.ஆர்., ஆகா என்று ஆமோதித்தபின், ‘தில்லைத் தாண்டவனே உனையல்லால், ஆண்டவனே இல்லையே’ என்று பாடல் தொடரும் போது அவருடைய முகம் சுருங்கியதாகக் கூறப்படுவதுண்டு. அது சாத்தியமான ஒரு கதையாகக்கூட இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., கடவுள் எதிர்ப்பாளர் அல்ல. தி.மு.க.வின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கை, திருமூலரிடமிருந்த எடுக்கப்பட்ட கருத்தாக இருந்தாலும், குறிப்பாக இந்து மதக்கடவுளருக்கு எதிர்ப்பான கொள்கையாகத்தான் அது கொள்ளப்பட்டது. பிள்ளையார் சிலைகளை ஈ.வே.ரா. உடைத்தபோது, ‘நான் சிலைகளை உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்’ என்று அண்ணாதுரை கூறினாராம். ஆகவே ‘ஒருவனே தேவன்’ என்பதில் பிள்ளையார் அடக்கமில்லை! இதுபோன்ற ஒரு நிலையில், காங்கிரஸிலிருந்தபோது நண்பர்களைக்கூட ‘ஆண்டவனே’ என்று அழைத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., தன்னுடைய திரைப்பாடல்களில் தெய்வத்தைப் பலவிதமாக அழைத்துக் கொண்டிருந்தார்!

    கடவுள்தான் இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்திருக்கிறான் என்ற எண்ணம் அவருடைய பாடல்களில் விரவிக்கிடந்தது. கடவுள்தான் மனிதனுக்குப் புத்தியைக் கொடுத்தாராம். ஏன்தான் கொடுத்தாரோ என்று வருத்தப்படுகிறார் ('போயும் போயும் மனிதனுக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே'). இயற்கையின் வளங்களைக் கடவுள்தான் கொடுத்தாராம். ஆனால் அவர் ஒருத்தனுக்காகவோ ஒரு சிலருக்காகவோ கொடுக்கவில்லையாம். எல்லாருக்கும் கொடுத்தாராம் ('கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'). கடவுள் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் அவர் இல்லை என்று கூறிவிடமுடியாது என்பதற்கு ஒரு பாடலில் பல விளக்கங்கள் அளிக்கிறார் எம்.ஜி.ஆர்., (கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?). ‘முன்னாலே இருப்பது அவன் வீடு’ என்று முன் குறிப்பிட்ட பிள்ளையார் முதற்கொண்டு பல தெய்வங்கள் இருக்கக்கூடிய கோயிலைக் காட்டுகிறார் ('என்னதான் நடக்கும் நடக்கட்டுமே')! ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ என்று அடித்துக்கூறிவிட்டு, அவன் இருக்கும் இடங்களைக் குறித்து, அற்புதமான ஆன்மிக விளக்கத்தை அளிக்கிறார் ('வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய், விளக்கிடமுடியாத தத்துவப் பொருளாய், ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்'). சில ஆண்டுகளில், ஏற்கனவே குறிப்பிட்ட பிள்ளையாரின் அருமைத்தம்பியான முருகப்பெருமான் வடிவத்தில், வள்ளி– தெய்வானையுடன் தானே காட்சி தருகிறார்

    எம்.ஜி.ஆர்.,! ('தனிப்பிறவி').

    கடவுளைக் குறிப்பிடும் போது, தலைவன் என்று குறிக்கும் வழக்கம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது ('ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே'). தலைவரான அண்ணாவும் ஏறக்குறைய ஒரு தெய்வத்தின் ஸ்தானத்தைத்தான் அவருடைய பாடல்களில் பெறுகிறார் (‘ஒன்றே குலமென்று பாடுவோம்’ பாடலில், ‘இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்’). இப்படி எத்தனையோ பாடல்களிலும் நூற்றுக்கணக்கான காட்சிகளிலும் அண்ணாவின் மிக நெருக்கமான அன்புத்தம்பி எம்.ஜி.ஆர்., தான் என்று ஊர்ஜிதம் ஆனது (‘நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து’). ‘நாட்டைக்காக்கும் கை’ என்ற பாடல் காட்சியில்தான் ('இன்றுபோல் என்றும் வாழ்க'), அண்ணாவின் உருவம் பொறித்த தனது கட்சியின் கொடியை எம்.ஜி.ஆர்., முதலில் வெளிப்படுத்தினார்! பாடலின் வாயிலாகக் கொடி முதலில் காண்பிக்கப்படுகிறது என்றால் பாடலும் கொடிபோல் முக்கியத்துவம் உள்ளதுதான் என்று பொருள். பாட்டிலே சொன்னால், வேட்டுப் போட்டுச் சொல்வதற்கு ஒப்பாகும்!

    'நாடோடி மன்னன்' திரைப்பாடலில்தான், ‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை விளைந்திடும் திட்டம்’ ('சும்மா கிடந்த நிலத்தை கொத்தி') என்று தெரிவித்து, பின்னாளில் எம்.ஜி.ஆர்., ஆட்சிக்கு வரக்கூடும் என்று எண்ணம், தெரிந்தோ தெரியாமலோ வெளிவந்தது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்’ என்ற பல்லவி வந்தபோது, அந்த எண்ணம் புத்துயிர் பெற்றது!

    எழுபதுகளில், கட்சித் தலைமைக்கு எதிராக ஊழல் குற்றம் சாட்டி கணக்குக் கேட்ட பின், கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர்., வெளியேற்றப்பட்டார். தனிக் காட்சி அமைத்து பின், எம்.ஜி.ஆரின் கொள்கைப்பாடல்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆட்சியாளர்களை எதிர்க்கும் முகமாகவே இருந்தன. உங்கள் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று ஒரு காட்சியில் அவரிடம் சொல்லப்படும்போது, ‘நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்’ என்று பாடலில் சவால் விடுகிறார் ('மீனவ நண்பன்'). மக்கள் ஆதரவு அலையைக் கண்கூடாக கண்டபின், ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்று கம்பீரமாக வெளியிடும் தன்னம்பிக்கை வருகிறது ('மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'). ‘நானே போடப்போறேன் சட்டம்’ என்பதிலிருந்து, நான்தான் நாட்டின் முதல்வர் என்பது வரை, திரைப்பாடல்களில் வெளிவந்த சங்கதிகள் ஏராளம்.

    உழைப்பாளர் ஒற்றுமை (‘ஒன்று எங்கள் ஜாதியே’, ‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே’, ‘உழைக்கும் கைகளே’..... இத்யாதி), ‘திராவிடப் பெருமை’ (‘அச்சம் என்பது மடமையடா’, ‘ஒன்றல்ல இரண்டல்ல தம்பி’), தாயின் உன்னதம் (‘தாயில்லாமல் நானில்லை’, ‘தாயின் மடியில் தலை வைத்திருந்தால்’), பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை (‘இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளை’, ‘பாரப்பா பழநியப்பா’), பகுத்தறிவு பிரசாரம் (‘சின்னப்பயலே சின்னப்பயலே’, ‘அறிவுக்கு வேலை கொடு’, ‘கண்ணை நம்பாதே’, ‘ஏனென்ற கேள்வி’), அரசு திட்டங்களுக்கான பிரசாரம் (‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க’), குடிக்கு எதிரான பாடல்கள் (‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா’), பிள்ளைகளுக்கும் தம்பிகளுக்கும் நல்லுபதேசம் (‘திருடாதே, பாப்பா திருடாதே’, ‘தூங்காதே தம்பி, தூங்காதே’, ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’, ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’), பொதுவான எழுச்சிப் பாடல்கள் (‘அதோ அந்தப் பறவை போல’, ‘எங்கே போய்விடும் காலம், ‘தாய்மேல் ஆணை தமிழ் மேல் ஆணை’, ‘உன்னை அறிந்தால்’) என்று வகைவகையான தலைப்புகளின் கீழ்

    எம்.ஜி.ஆரின் வெற்றிப்பாடல் வரிசை அமைகிறது. பாடலின் தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்.,தான் உதாரணப் புருஷர் என்ற அளவில், அவை யாவும் எம்.ஜி.ஆரின் ஆளுமையை பளிச்சென்று முன்வைப்பதாக இருக்கும். அதனால்தான் எம்.ஜி.ஆர்., பாடல்களின் வெற்றி, அவருடைய வெற்றியாகவே மாறிவிட்டது. எம்.ஜி.ஆரை நோக்கிப் பெண்கள் பாடுவதாக அமைந்த பாடல்கள் அவரை ஒரு காவிய நாயகராக, வெற்றி வேந்தராக முன்னிறுத்தின (‘வாங்கய்யா வாத்தியாரய்யா’, ‘காலத்தை வென்றவன் நீ’, ‘நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற’). பாடல்களின் வாயிலாக தன்னுடைய கருத்துக்களை விதைத்து மிகப்பெரிய வெற்றியை எம்.ஜி.ஆர்., அடைந்தார். தன்னுடைய திரை ஆளுமையையும், தன்னைப்பற்றிய பிம்பத்தையும் வெற்றிகரமாக நிறுவ, திரைப்பாடல்கள் அவருக்கு மிகவும் கைகொடுத்தன. அவற்றின் பாடகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் பலராக இருக்கலாம். எல்லோரையும் வைத்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்ட மதிநுட்பம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அவருடைய வெற்றியின் இன்னொரு அடித்தளம் அதுதான்***👌👌👍☺ பாச தோழரின் கருத்து குவியல் களஞ்சியம்...

  10. #919
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #920
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை ஸ்ரீநிவாஸாவில் 11/5/18 முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " -டிஜிட்டல் ,தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .

    ஞாயிறு (13/5/18) மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •