Page 82 of 401 FirstFirst ... 3272808182838492132182 ... LastLast
Results 811 to 820 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #811
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post
    1958-ம் வருசத்தின் பிரம்மண்டமான வெற்றிப் படம் 13 தியட்டரில் 100 நாள் ஓடிய நாடோடி மன்னன் படம்தான். சேலத்திலே சித்தேஸ்வரா தியேட்டரில் ஷிப்டிங்கில் வெள்ளிவிழா கொண்டடினாலயும் ஷிப்டிங் என்று வந்து விட்டதால் நாம் அதை வெள்ளிவிழா கணக்கில் சேர்ப்பது கிடையாது. என்றாலும் 1958ல் மட்டுமே இல்லாமல் இப்பவும் நாடோடி மன்னன் வெற்றிப் படமாக இருக்கிறது.

    போன மாசம் டிஜிட்டல்லிலே வெளியாகி சென்னையிலே ஆல்பர்ட் திடேயட்டரில் 35 நாள் வெற்றிகரமாக ஓடியது. அதற்கான விளம்பரம் நம்ப திரியிலும் வெளியாகியது. இங்ேக தரப்படுகின்றது.

    நாடோடி மன்னன் டிஜிட்டல்லில் வெளியானபோது மாலை மலர் பேப்பரில் நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி ரூபாய் வசூல் செய்தது என்று போட்டார்கள்.

    உடேேனே மாற்றுத் திரியில் ‘அங்கே நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே போய்விட்டார்கள் என்று பதிவு போட்டர்கள்.

    நான் அதுக்கு, அது தப்பான செய்தி நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் இல்லை என்று நம்ப திரியில் நே்ர்மையாக பதில் போட்டேன்.

    மாற்றுத் திரி பற்றி பொதுவா நாம்ப கண்டுக்கிறது இல்லை. இருந்தாலும் நீதி நேர்மை என்று தம்பட்டம் அடித்தவர்கள் எங்கே என்று நம்பளைக் கேட்டார்களே அதனால் நாம்பளும் கேட்கிறேன்.

    சாரங்கதாரா படம் 100 நாள் ஓடியதா?

    அன்னையின் ஆணை 100 நாள் ஓடியதா?

    காத்தவராயன் படம் 100 நாள் ஓடியதா?

    இந்த ஓடாத படங்கள எல்லாம் 100 நாள் ஓடினதாக பச்சையாக அவர்கள் புளுகி பத்திரிக்கையில் வந்திருக்கின்றது. அந்த பேப்பர் செய்தியையும் மாற்றுத் திரியில் போட்டிருக்கிறார்கள்.

    நம்பளை கேட்டார்களே. இப்ப நாம்ப கேட்கின்றோம்.

    நீதி நேர்மை ஞாயம் எல்லாத்தையும் மொத்த குத்தகைக்கி எடுத்தவர்கள் போல பேசும் ஞாயவான்கள் எங்கே போனார்கள்.

    சாரங்கதார, காத்தவராயன், அன்னையின் ஆணை போன்ற படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடியதாக மாற்று முகாம் நண்பர்கள் தகவல் சொல்லி அந்த செய்தி இந்து பத்திரிகையில் வந்துள்ளது.
    பத்திரிகைகள் எப்படி இதை சரிபார்க்காமல் வெளியிடுகின்றன என்று தெரியவில்லை. இப்போது பத்திரிகையில் இருப்பவர்கள் சின்ன வயதினர் என்பதும் அவர்களுக்கு பழைய விஷயம் தெரியாது என்பதும் காரணமாக இருக்கலாம்.

    இந்த தவறான தகவல் பத்திரிகையில் வந்ததால் தெரிகிறது. இல்லாவிட்டால் வெளியே தெரியாது. மாற்று முகாம் நண்பர்கள் மாதா மாதம் அவர்கள் நடத்தி வரும் திரைப்பட காட்சி வெளியீடுகளின்போது ரசிகர்களை சந்தோசப்படுத்தவும் தங்கள் பெருமைகளை சொல்லவும் இப்படித்தான் ஓடாத படங்களை எல்லாம் 100 நாள் ஓடியதாக சொல்வார்கள் என்று தெரிகிறது.

    அந்த பத்திரிக்கை செய்தியை மாற்று திரியில் பதிவு செய்துள்ளனர். நம் திரியில் படிக்கின்றவர்களுக்கு நாம் எதைப் பற்றி சொல்கிறோம். என்று தெரியாது. அதனால் அந்த செய்தியின் இணைப்பு கொடுத்துள்ளேன். அந்த இணைப்பு செய்திக்கு கீழே கருத்து பதிவு பகுதியில் நமது எஸ். வினோத் அய்யா பதில் சொல்லி இருக்கிறார். இளம் தலைமுறைகளுக்கு உண்மையை சொல்ல வேண்டும். எஸ்.வினோத் அய்யாவுக்கு நன்றி.

    அந்த கருத்து பகுதியில் தமிழன்பன் என்பவர் நாடோடி மன்னன் பற்றி சொல்லி இருக்கிறார். அதற்காகவும் இதைப் பதிவு போடுகிறேன்.

    http://tamil.thehindu.com/cinema/cin...le23761368.ece

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #812
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    இப்பத்தான் விஷயம் புரிகின்றது. நன்றி அய்யா.

    இந்த விஞ்ஞான வளர்ச்சி காலத்திலும் எல்லா விவரங்களும் கிடைக்கும் நிலைமையிலும் எப்படி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

    பத்திரிகை முகநூல்களில் பொய்யான பிரசாரம் செய்கிறார்கள். கூண்டுக்கிளி படத்தில் புரட்சித் தலைவருக்கு சின்ன வேடம் என்றும் கதாநாயகன் வேறு ஒரு நடிகர் என்றும் முகநூலில் பொய் பிரசாரம் செய்கிறார்கள். அதற்கு ஆதாரமாக இலங்கையில் கூண்டுக்கிளி விளம்பரத்தை வெளியிட்டு அதில் புரட்சித் தலைவர் பெயர் பின்னால் இருப்பதாக போடுகிறார்கள். வேறு நடிகர்கள் நடித்த சில பழைய படங்களில் போஸ்டரில் கதாநாயகி படம்தான் இருக்கும்.

    அதோடு கூண்டுக்கிளி வந்த காலத்தில் மற்ற நடிகர்களை விட மக்கள் திலகம் அதிகம் சம்பளம் வாங்கினார் என்றும் படத்தில் நடித்த மற்றொரு நடிகருக்கு குறைந்த சம்பளம் என்பதால் அந்த சம்பளத்தையே புரட்சித் தலைவர் தானும் பெருந்தன்மையோடு பெற்றுக் கொண்டார் என்றும் நம் திரியில் ஏற்கெனவே பத்திரிகையில் வந்த செய்தி போட்டிருக்கிறோம், ஆனால் எப்படி எல்லாம் முகநூலில் பொய் பிரசாரம் செய்கிறார்கள் பாருங்கள்.

    1954ல் மட்டுமல்ல, புரட்சித் தலைவர் தமிழ் திரையுலகில் இருக்கும் வரை அவர்தான் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்.

    உண்மை எப்போதும் வெற்றி பெறும். நிலைத்து நிற்கும். பொய் காலப்போக்கில் அழிந்துவிடும்.

    காலம் கடந்தும் புரட்சித் தலைவர்தான் முக்கியத்துவத்தோடு நிலைத்து நின்று முன்னிலை இடம் பெறுகிறார். இணைப்பை பாருங்கள்.

    https://en.wikipedia.org/wiki/Koondukkili

  4. #813
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப் மற்றும் மகாலிங்கம் மூப்பனார் ஆகியோருக்கு வணக்கம்.

    மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது ஒரு பக்கம் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.புகழ், பெருமை ,சிறப்புகள் ஆகியன சிகரம் போல மேன்மேலும் உயர்ந்து கொண்டே விண்ணை முட்டும் வகையில் தினசரிகளில் , ஊடகங்களில், மீடியாக்களில் செய்திகள் வெளியாகும் வண்ணம் உள்ளன .ஒரு சிலர் பொறாமை பட்டு, பொறுக்க முடியாமல் சிறுபிள்ளை தனமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழை சிறுமை படுத்த முடியாமல் புதுப்புது வழிகளை கண்டுபிடிக்க முயன்று தோல்வியே காண்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் . ஆகவே, அவர்களின் செய்திகள் பொய்யானவை யாக இருப்பினும் தொடர்ந்து பொய்களை உரக்க கூறினால் உண்மையாகிவிடும் என்கிற அசட்டு நம்பிக்கையில் செயல்படுகின்றனர் .எனவே நாம் தகுந்த பதிலளிக்க தயங்க கூடாது என்கிற வகையில் தாங்கள் பதிவிடும் செய்திகளை நான் ஆமோதிக்கிறேன் . கடந்த சில வாரம் முன்பு வெளியான அவர்களின் அபிமான நடிகரின் திரைப்பட பேனரில் பொய் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பாவ மன்னிப்பு அளிக்க வருகிறார் என்று செய்தி போட்டிருந்ததாக நண்பர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் .அந்த மன்னிப்பு அந்த ரசிகர்களுக்கு தான் போலும் .

    ஏனென்றால், அன்னையின் ஆணை, சாரங்கதாரா, காத்தவராயன், பொம்மை கல்யாணம் ஆகிய படங்கள் 100 நாள் ஓடிய படங்களல்ல .உத்தம புத்திரன் ஒரு அரங்கிலும் , பதிபக்தி 4 அரங்கிலும், சபாஷ் மீனா ஒரு அரங்கிலும் ஆக மொத்தம்
    3 படங்கள் 8 அரங்குகளில் ஓடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அதே 1958ல் வெளியான நாடோடி மன்னன் ஒரு படம் மட்டுமே 13 அரங்கிலும் , ஒரு அரங்கில் மறுவெளியீட்டிலும் மொத்தம் 14 அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளது.ஆதாரமும் உள்ளது .

    நடுநிலை நாளேடு எனப்படும் தமிழ் இந்து தினசரி ,தீர விசாரிக்காமல் இந்த பொய் செய்திகளை பதிவிடுவது என்பது மிகவும் வருந்த தக்கது . அதற்கு நமது நண்பர்கள் இ மெயில் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்கள் .என்று தெரிகிறது .

    தங்களின் கேள்விகள் நியாயமானதே. ஆனால் வார்த்தைகள் ,செய்திகள் பதிவிடும் சமயம் கடுஞ்சொல்லை பயன்படுத்தாமல், நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினால் பதிவுகள் நீக்கத்தை தவிர்க்கலாம் என்பது எனது அன்பான
    வேண்டுகோள் .தொடர்ந்து ஆக்க பூர்வமாக செயல்பட்டு தக்க பதிலடி அளித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

    ஆர். லோகநாதன் .

  5. #814
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சினி சாரல் -மே 2018

  6. #815
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து -2/5/18

  7. #816
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின செய்தி -4/5/18

  8. #817
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய தலைமுறை வார இதழ் -10/5/18

  9. #818
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    அன்பு நண்பர்கள் திரு.மஸ்தான் சாஹிப் மற்றும் மகாலிங்கம் மூப்பனார் ஆகியோருக்கு வணக்கம்.

    மாற்று முகாமில் பதிவிடும் செய்திகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது ஒரு பக்கம் . மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.புகழ், பெருமை ,சிறப்புகள் ஆகியன சிகரம் போல மேன்மேலும் உயர்ந்து கொண்டே விண்ணை முட்டும் வகையில் தினசரிகளில் , ஊடகங்களில், மீடியாக்களில் செய்திகள் வெளியாகும் வண்ணம் உள்ளன .ஒரு சிலர் பொறாமை பட்டு, பொறுக்க முடியாமல் சிறுபிள்ளை தனமாக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். புகழை சிறுமை படுத்த முடியாமல் புதுப்புது வழிகளை கண்டுபிடிக்க முயன்று தோல்வியே காண்கின்றனர் என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம் . ஆகவே, அவர்களின் செய்திகள் பொய்யானவை யாக இருப்பினும் தொடர்ந்து பொய்களை உரக்க கூறினால் உண்மையாகிவிடும் என்கிற அசட்டு நம்பிக்கையில் செயல்படுகின்றனர் .எனவே நாம் தகுந்த பதிலளிக்க தயங்க கூடாது என்கிற வகையில் தாங்கள் பதிவிடும் செய்திகளை நான் ஆமோதிக்கிறேன் . கடந்த சில வாரம் முன்பு வெளியான அவர்களின் அபிமான நடிகரின் திரைப்பட பேனரில் பொய் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு பாவ மன்னிப்பு அளிக்க வருகிறார் என்று செய்தி போட்டிருந்ததாக நண்பர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் .அந்த மன்னிப்பு அந்த ரசிகர்களுக்கு தான் போலும் .

    ஏனென்றால், அன்னையின் ஆணை, சாரங்கதாரா, காத்தவராயன், பொம்மை கல்யாணம் ஆகிய படங்கள் 100 நாள் ஓடிய படங்களல்ல .உத்தம புத்திரன் ஒரு அரங்கிலும் , பதிபக்தி 4 அரங்கிலும், சபாஷ் மீனா ஒரு அரங்கிலும் ஆக மொத்தம்
    3 படங்கள் 8 அரங்குகளில் ஓடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அதே 1958ல் வெளியான நாடோடி மன்னன் ஒரு படம் மட்டுமே 13 அரங்கிலும் , ஒரு அரங்கில் மறுவெளியீட்டிலும் மொத்தம் 14 அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளது.ஆதாரமும் உள்ளது .

    நடுநிலை நாளேடு எனப்படும் தமிழ் இந்து தினசரி ,தீர விசாரிக்காமல் இந்த பொய் செய்திகளை பதிவிடுவது என்பது மிகவும் வருந்த தக்கது . அதற்கு நமது நண்பர்கள் இ மெயில் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார்கள் .என்று தெரிகிறது .

    தங்களின் கேள்விகள் நியாயமானதே. ஆனால் வார்த்தைகள் ,செய்திகள் பதிவிடும் சமயம் கடுஞ்சொல்லை பயன்படுத்தாமல், நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினால் பதிவுகள் நீக்கத்தை தவிர்க்கலாம் என்பது எனது அன்பான
    வேண்டுகோள் .தொடர்ந்து ஆக்க பூர்வமாக செயல்பட்டு தக்க பதிலடி அளித்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.

    ஆர். லோகநாதன் .

    நண்பர் லோகநாதன் அவர்களே தங்கள் பதிலுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    உத்தமபுத்திரன் படம் சென்னையில் மட்டும் இல்லாமல் மதுரையில் ஸ் ரீ தேவி தியட்டரிலும் ஆக 2 தியேட்டரில் 100 நாள் ஓடி இருக்கிறது.

    1958-ல் வெளிவந்த சம்பூரண ராமாயாணம் படமும் 100 நாள் ஓடி இருக்கிறது. அதில் கடவுள் ராமனாக வரும் என்டி ராமாராவ்தான் கதாநாயகன். அவர்கள் நடிகர் பரதன் வேஷத்திலே வருவார். சிறிய வேடம். அதனால் அந்த வெற்றிக்கு அவர்கள் நடிகர்தான் காரணம் என்று சொல்லி பங்கு கோர முடியாது.

    அசோக் குமார் என்ற படத்தில் தியாகராஜா பாகவதர்தான் கதாநாயர். அந்த படத்தில் புரட்சித்தலைவருக்கு சின்ன வேடம்தான். அசோக் குமார் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடின வெற்றிப் படம். ஆனால், அசோக்குமார் படத்தின் வெற்றிக்கு புரட்சித் தலைவர்தான் காரணம் என்று நாம் அந்த பெருமைக்கு பங்கு கேட்க மாட்டோம்.

    இருந்தாலும் போகட்டும். சம்பூரண ராமயாணம் 100 நாள் ஓடின படம்தான் .

    நாம் எப்பவும் உண்மையை ஏத்துக்கிறவர்கள்.

    இதயும் கூட 100 நாள் ஓடாத சாராங்காதாரா, அன்னையின் ஆணை, காத்தாவாராயன் என்று இப்படியான படங்களை எல்லாம் 100 நாள் ஓடினதாக பொய் செய்தி போடுகிறீர்களே என்று கேட்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால், நாடோடி மன்னன் படம் 11 கோடி வசூல் செய்தது என்று பத்திரிக்கையில் செய்தி வந்து அதை நம்ப திரியில் பதிவு போட்டதும், மாற்றுத் திரியில் இருந்து நம்பள கேள்வி கேட்டார்கள்.

    அங்கே நீதி, நேர்மை என்று தம்பட்டம் அடிச்சவர்கள் எங்கே போனார்கள் என்று கேள்வி கேட்டார்கள்.

    நான் அந்த செய்தி தப்பான செய்தி என்றும் நாடோடி மன்னன் படம் முதல் வெளியீட்டில் 11 கோடி வசூல் செய்யலை என்றும் நம்ப திரியில் நேர்மை தவறாமல் பதில் போட்டேன்.

    இப்போது நம்பளை கேள்வி கேட்டவர்களே பொய் செய்தி வெளியான பத்திிரிக்கை செய்தியை அவர்கள் திரியில் பதிவு போடுகிறார்கள்.

    அதனால்தான் நம்பளை கேள்வி கேட்ட ஞாயவான்கள் எங்கே போனார்கள் என்று கேட்டேன்.

    ரஜினி கமல் அஜீத் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் பழைய கதைகள், படங்கள் பத்தி விவரங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் நடிகரே புரட்சித் தலைவரை அண்ணன் என்றுதான் கூப்பிடுவார். அவர்களுக்கு அண்ணன்கள் நாம்பள். நமக்கு எல்லா விவரமும் தெரியும்.

    அவர்கள் என்ன வேண்டுமானாலும் பொய் சொல்லலாம். நம்ப திரியில் நம்பள அறியாமல் ஏதாவது தப்பு வந்தால் வரிஞ்சு கட்டி வருவார்கள். கேள்வி கேட்பார்கள். நீதி மாணிக்கியங்கள்.

    உங்கள் பதிலுக்கு நன்றி ரத்தத்தின் ரத்தமே.

    பொய் இல்லாத உண்மையான சாதனைகள் படைத்த மனித தெய்வம் புரட்சித் தலலவர் வாழ்க.

  10. #819
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #820
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் உலக மாநாடு பற்றி தகவல் தெரிவித்ததற்கு ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

    என்ன என்ன நிகழ்ச்சிகள் பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் இருந்தாலும் நண்பர்கள் தெரிவிக்கவும்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •