Page 282 of 401 FirstFirst ... 182232272280281282283284292332382 ... LastLast
Results 2,811 to 2,820 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2811
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகை லதா. ஆசை டிவி அலுவலகத்தை திறந்து வைக்கிறார் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2812
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2813
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2814
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகை லதா.விற்கு வரவேற்பு .

  6. #2815
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின்
    பக்தர்களே
    ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே

    தங்கத்தில் நிறமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கையென்று
    வந்திருக்கும் மலரோ

    மீனவ நண்பன் பட பாடல்
    உருவான விதம்
    உங்கள் பார்வைக்கு

    சில பாடல்கள் உருவான விதம் பாடல்களைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கும்.அது மீனவ நண்பன் படப்பிடிப்புத் தளம்.ஷாட்டின் இடைவேளையில் ஓய்வில் இருக்கிறார் மக்கள் திலகம்.பாடலாசிரியர் முத்துலிங்கம் அவரைக் காண வருகிறார்.

    வணக்கம் தலைவரே.அவர் அப்படித் தான் அழைப்பார்.வாப்பா பேமெண்ட் எல்லாம் வந்துச்சா?.என்ன பேமெண்ட் தலைவரே.?.இந்தப் படத்திற்கு பாட்டெல்லாம் நான் எழுதலையே.?.

    பாட்டில்லையா?. உனக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே? .யாரு தயாரிப்பு நிர்வாகி? .கூப்பிடு அவரை.நிர்வாகி வருகிறார்.ஐயா நான் சொல்லீட்டேங்க.படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிடுச்சிங்க.பாட்டுக்கு சிச்சுவேஷன் இல்லைன்னுட்டாங்கையா.

    யார் சொன்னது?. ஸ்ரீதரைக் கூப்பிடுங்க. சானா இருக்காரா பாருங்க.ரெண்டு பேருமே இருக்காங்க.கூப்பிட்டேண்ணு சொல்லுங்க.

    இருவரும் வருகிறார்கள்.ஏங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு குடுக்கச் சொன்னேனே ஏன் குடுக்கல.?.

    அது வந்துங்க படம் ஏறக்குறைய முடிஞ்சு போங்சுங்க.ரெக்கார்டிங் மட்டும் பாக்கி.ஏம்பா ஸ்ரீதர் பாட்டுக்கு ஏதாவது சிச்சுவேஷன் இருக்கா என்ன?.ஸ்ரீதர் இல்லை என்கிறார்.

    ஏன் இருக்காது?.முத்துலிங்கத்துக்கு ஒரு ட்ரீம் சாங் கொடுங்க? .அதுக்கும் இடமில்லைங்களே.சிச்சுவேஷன் எங்கேயும் இல்லைங்களே.

    ஏங்க எனக்கே சொல்லித் தர்ரீங்களா?.அதுவே ட்ரீம் சாங்.அதுக்கு எதுக்கு சிங்சுவேஷன்.அன்பே வாவில ராஜாவின் பார்வை பாட்டுக்கு எங்கே சிச்சுவேஷன் இருந்தது.ரெண்டு பேரும் பார்த்தாலே ட்ரீம் சாங் தானே.

    சானா என்ற சடையப்ப செட்டியார் நெளிந்தார்.இவர் நம்மை சடையப்ப வள்ளலாக்க முடிவு செய்துவிட்டார்.இன்னொரு செலவு வைக்கப்போறார் என்ற முடிவோடு ஸ்ரீதரைப் பார்க்க ஸ்ரீதரோ போட்டுறலாங்க என்கிறார்.சரிங்க முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுத்துரலாங்க என இருவரும் அங்கிருந்து நகர போப்பா போய் பாட்டெழுதி பேமெண்ட் வாங்கிக்க என முத்துலிங்கத்தை அனுப்பி வைக்கிறார்.

    மக்கள் திலகத்தின் தனிப் பண்பே அது தான்.தம்மை நம்பியிருக்கும் கலைஞர்களை அவர் கைவிட்டதே இல்லை.சிறு பங்காவது அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் வீட்டில் அடுப்பெரிக்க வைப்பார்.முத்துலிங்கத்திற்கு இனிமேல் தான் தலைவலியே.

    இயக்குநர் சொல்லி எம்.எஸ்.வி. பாட்டுக்கு அழைக்கிறார்.வாத்தியாரைய்யா பல்லவி குடுங்க என்கிறார்.முத்துலிங்கத்தை அப்படித் தான் அழைப்பார்.முத்துலிங்கம் பல்லவி போடுகிறார்.

    அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்
    அங்கங்களோ மண்மதனின் படைக்கலம்.

    ஸ்ரீதருக்கு இந்தப் பல்லவி பிடிக்கவில்லை.அடைக்கலம் நல்லாயிருக்கு இந்த படைக்கலத்தை கொஞ்சம் மாத்திக்குடுங்களே என்கிறார்.படைக்கலம்ணா போர்க்கலம் தானே.இதெப்படி இங்கு வரும்.

    சார் படைக்களம் அப்படீண்ணா தான் போர்க்கலம்.இது படைக்கலம்.பண்டங்கள் அப்படீண்ணு அர்த்தம்.அங்கங்களை மண்மதனின் பண்டங்களாக....

    என்ன சார்.ஈசியா போட்டுக்குடுங்க சார் என்கிறார் ஸ்ரீதர்.மெல்லிசை மன்னரோ படைக்கலம் கூட பரவாயில்லைங்க.இந்த அடைக்கலத்தை மாத்தியே ஆகணும்.முத்துலிங்கத்திற்கு தலையே சுற்றியது.இவர் படைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.அவர் அடைக்கலத்தை தூக்கச் சொல்கிறார்.மன்னர் அதற்கு சொன்ன காரணம் தான் முத்துலிங்கத்திற்கு சிரிப்பை வரவழைத்தது.

    வாத்தியாரைய்யா நீங்க பாட்டுக்கு அடைக்கலத்தை போடுவீங்க.உண்மையிலேயே ஒரு அடைக்கலம் வந்து நிற்பார்.இப்படித்தான் ஒரு பாட்டுக்கு தஞ்சை ராமையதாஸ் மாட்டினார்.எதுக்குங்க என்றார் அப்பாவியாக முத்துலிங்கம்.ஒரு பழைய பாட்டுங்க.அவர் ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே அப்படீண்ணு எழுதி படமும் ரிலீஸாச்சு.உண்மையிலேயே ஆனந்தக் கோனார் என்பவர் வந்து நின்று கத்தினார்.அவரு சாணாரண ஆளில்லை.தஞ்சாவூர் கோனார்கள் சங்கத் தலைவரு. ராமையதாஸூக்கும் அவருக்கும் ஆகாதுபோல.கேஸூப்போட்டு உள்ள துள்ளுவேண்ணு கத்துறாரு.அப்புறம் ஒரு வழியா சமாதானம் பண்ணி அனுப்பிவெச்சோம்.அந்த மாதிரி யாராவது அடைக்கலம் வந்து நிக்கக் கூடாது பாருங்க.

    முத்துலிங்கம் நொந்தேபோனார்.இப்படியெல்லாமா சிந்திப்பார்கள்.ரெண்டு கலமும் வேண்டாம் புதுசாவே போட்டுத் தாரேன் என்று எழுதிய பாடல் தான்

    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கையென்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ

    மக்கள் திலகம் பரபரப்பான அரசியல் களத்தில் ஈடுபட்டு மாநில முதல்வராகப் போகும் 77ல் வெளியான மீனவ நண்பன் ஒரு வெற்றிப்படம்.மீனவர்களின் துயர் துடைக்கும் குமரனாக பணக்கார லதாவின் காதலனாக நாயகி காணும் கனவில் வந்து போகும் பாடலிது.கடைசி நேரத்தில் இணைத்த பாடலில் ஜேஸூதாஸ் வாணி ஜெயராம் குரலில் மெல்லிசை மன்னர் போட்ட அருமையான பாடலிது.இலக்கியத்தரமான வரிகளைப் போட்டு பாடலை அழகாக்கியிருப்பார் முத்துலிங்கம்.

    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவலோக மன்னவனும் நீயோ?.

    முழுக்க முழுக்க மக்கள் திலகத்தின் புகழ் பாடும் பாடல்.நாயகியின் கனவு நாயகனை மயக்கும் வரிகள்.

    வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா
    புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா
    வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ
    புள்ளி மான் தேடும் களைமானும் நானல்லவோ
    அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கி அமிழ்தாகவோ

    அட்டகாசமான மெட்டில் அசத்தும் இரு குரல்கள்.சரண முடிவில் அருமையான வாணியம்மாவின் ஆலாபனை.

    முல்லை மலர்ச் செண்டுகள் கொண்டு கொடியாடுது
    செண்டு சதிராடினால் அந்த இடை தாங்குமா? .
    இந்த இடை தாங்கவே அந்தக் கைகள் இருக்கின்றது
    கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது.

    எளிமையான அதே நேரம் இலக்கியத்தரமான பாடலைத் தருகிறார் முத்துலிங்கம்.

    மலர்ந்து கனிந்து சிரித்துக் குலுங்கி கனியாகவோ.?.

    அடுத்த சரணமும் இதே இலக்கியமாக ஜொலித்த பாடல்.சடையப்ப செட்டியார் தான் பாவம்.டீரீம் சாங் ஏகப்பட்ட பேர்களின் வீட்டிற்கு அடுப்பெரிய உதவியது அவருக்கு எங்கே தெரியப்போகிறது.இந்த மகத்தான சேவைக்குப் பின்னால் மக்கள் திலகமென்னும் மனிதாபிமானி இருப்பது நமக்கல்லவா தெரியும்.

    நன்றி ... மக்கள் திலகம் அவர்களின் பன் முக திறமைகளில் (Multi Faced Personalities... Skills) ஒரு மனிதாபிமான உதாரண நிகழ்வுகளில் ஒரு sample...

  7. #2816
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருவாளர்கள் : குபேந்திரன், லோகநாதன், சரவணன், ஓமப்பொடி பிரசாத், ஹுசேன், ராஜேந்திரன்

  8. #2817
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் பக்தர் திரு லோகநாதன் அவர்கள் 22001 மகத்தான சூப்பர் பதிவுகளை கடந்தமைக்கு நம் அனைவரின் பாராட்டுகள் உரித்தாகுக... மேலும் பல்லாயிரம் பதிவுகள் காண அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

  9. #2818
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் லோகநாதன் அவர்கள்

    22000 பதிவு ராத்திரி பகல் பார்க்காமல் எந்த லாப நோக்கம் இல்லாமல் பதிவி போட்டு புரட்சித் தலைவர் புகழுக்கு சேவை படைத்து வரும் நண்பருக்கு வாழ்த்துக்கள். நீண்ட வருசம் ஆரோக்கியமாக வாழ அல்லா உனக்கு அருள் புரியட்டும் நண்பா.


  10. #2819
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி கணேசனை வைத்து நெஞ்சங்கள் என்ற படம் எடுத்த விஜயகுமார் வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்தார். ஒரே வாரத்தில் கை காசு காலி. படம் பாதியில் நின்றது. படம் தொடர்ந்து எடுக்க புரட்சித் தலைவர்தான் ஏற்பாடு செஞ்சு பணம் கிடைக்க விஜய குமாருக்கு உதவினார். அவர் வீடடையும் அடமானத்தில் இருந்து மீட்டார்.

    ஒரு காலத்தில் தனக்கு போட்டி என்று சொல்லப்பட்ட சிவாஜி கணேசன் படத்துக்கு அந்த படம் வளர எதற்கு உதவி செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவர் நினைக்கவில்லை. அதனால்தான் அவர் பொன்மனச் செம்மல் என்று கொண்டாடப்படுகிறார்.





    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.


    படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-
    1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

    நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே''

    என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

    "நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

    அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

    அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

    "சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

    "அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

    உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

    மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக
    இருந்தது.

    நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

    சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

    மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

    அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

    சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

    சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

    பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

    மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

    படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

    அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

    என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

    அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

    எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

    நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்ïலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

    நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

    "ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

    அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

    வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

    எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

    இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

    சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

    நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

    "சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று

    சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

    நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

    சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

    பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது.

    எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.


    இவ்வாறு விஜயகுமார் கூறினார் .

    https://www.maalaimalar.com/Cinema/C...ijayakumar.vpf

  11. #2820
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like



Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •