Page 251 of 401 FirstFirst ... 151201241249250251252253261301351 ... LastLast
Results 2,501 to 2,510 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2501
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை பிட் நோட்டீஸ் போட்டு அவர்கள் (பிள்ளைகள்) திருப்தி பட்டு கொண்டாலும் நாம் வழக்கமாக சொல்லும் உண்மை நடைமுறை நடப்பு என்பது ஒன்றே தான்... நம்மையும் சேர்த்து பலர் பரீட்சை எழுதினார்கள்... ஆனால் ஒழுங்காக தேர்ச்சி பெற்றது நாம் மட்டும் தானே, மக்கள் திலகம்... அவர் தம் பெரும் படை தானே... இனிய சகோதரர் பாய் அவர்களே...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2502
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை
    முதல்
    கோவை
    நாஸ்
    திரைஅரங்கில்
    அடிமைப்பெண்
    Digital வடிவில்

  4. #2503
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற புரூக்ளின் மருத்துவமனையைப் பார்த்த நிகழ்ச்சியை எழுதும் போது, எம்.ஜி.ஆரின் அன்பில் திளைத்த அனுபவங்கள் என் நினைவில் அலை மோதுகின்றன.
    அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றின் மேல் ஒரு நீளமான பாலம் இருக்கிறது. ரயில்கள் செல்வதற்கான இருப்புப் பாதை. சாலைப் போக்குவரத்திற்காக இரண்டு பாதைகள் என்று மூன்று
    அடுக்குகளைக் கொண்டது அந்தப் பாலம். ஆனாலும் இதைத் தாங்கி நிற்க பில்லர்கள் கிடையாது. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று என் புரோகிராம் ஆபிசர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்படியா? பார்க்கலாமே. அந்தப் பாலத்தின் பெயர் என்ன என்றேன் நான்.
    புரூக்ளின் பாலம் என்று அவர் பதில் சொன்னார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் ஒரு கணம் என் இருதய ஆழத்தில் சில ரத்தக்குழாய்கள் அதிர்வுற்றன. அப்படியானால் புரூக்ளின் மருத்துவமனை இங்கே தானே இருக்கிறது என்று கேட்டேன் தவிப்போடு.
    ஆம் என்றார் அந்த அதிகாரி. என்னை அளவுக்கு மீறி நேசித்த, என்னால் அளவுக்கு மீறி நேசிக்கப்பட்ட அந்த மகாமனிதனைக் காப்பாற்றி, மறுபடியும் நமது தரிசனத்திற்கு அனுப்பி வைத்தது அந்த இடம் தானே.
    அதைப் பார்க்க வேண்டும் அதற்கு நன்றி வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த அதிகாரியும் அதற்கு உடனே ஏற்பாடு செய்தார்.
    கார் மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. நான் கண்களில் ஈரங்கசிய என் ஞாபக வாசல்களை மெல்லத் திறந்தேன்.
    அல்லி நகரத்தின் அந்ப் பாமரத்தனமான வாழ்க்கை நாட்களில், வெள்ளித் திரை நிழலாய் மட்டுமே அந்த மனிதனைச் சந்தித்திருக்கிறேன். எனது கிராமத்திலிருந்து வீட்டிற்குத் தெரியாமல் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பர்க்ளோடு டபுள் பெடல் போட்டபடி, நாற்பத்தியெட்டு மைல்களை தாண்டிப் போய் மதுரை மாநகரில் நாடோடி மன்ன்ன் படம் பாக்க வியர்வை கசகசப்போடு அமர்ந்த நாட்களும் உலக உருண்டை இரண்டாகப் பிளக்க கொடிபிடித்தபடி இரு உருவங்கள் திரும்பும் எம்.ஜிஆர் பிக்சர்ஸ் பட நிறுவன எம்பளம் பார்த்து கைதட்டிய நிமிடமும் அந்த மனிதன் திரையில் தோன்றிய முதல் காட்சியில் ஒலித்த விசில்களில் வியந்த வினாடியும் இப்போதும் என்னுள் காயாத சிமெண்ட் தரையில் பதித்த குழந்தையின் காலடிச் சுவடுகளாய் இருக்கின்றன.
    அந்த மனிதன் தான் என் தனி மனித வாழ்க்கையிலும் நுழைந்து, என் கலைத் திறமைகளுக்குத் தட்டிக் கொடுத்து, என் சோகங்களுக்குக் கண்ணீர் துடைத்து, என் இடறல்களுக்குத் தோள் கொடுத்து, என்னால் என்றுமே மறக்க முடியாத என் இரண்டாவது தாயாகிப் போனார் …
    அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு அந்த மனிதர் என்னைக் கட்டித் தழுவி பாராட்டிய போதும், வேதம் புதிது படத்திற்கு டெல்லி அதிகாரிகள் அனுமதி மறுத்த போது ஆறுதுல் கூறி உடனே அனுமதி வாங்கித் தந்த போதும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளின் மீது இறக்கி வைக்க முடியவில்லை.
    அரசியலுக்கெல்லாம் வந்துவிடாதே. நீ உரு உண்மையான கலைஞன். உனது கலைக்கு நீ உண்மையாக இரு. அது போதும் … என்று தான் அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார்.
    ஒரு முறை உடல் நிலை சரியில்லாத சூழலில் ஓய்வெடுப்பதற்காக அவர் ஊட்டிக்கு வந்திருந்தார். ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பிற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.
    அவர் தமிழ்நாடு ஹவுசில் தங்கியிருக்கிறார் என்றுகேள்விப்பட்டதும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன இங்கே? என்று கேட்டார்.
    ஷுட்டிங்கிற்காக வந்தேன். நீங்க வந்திருக்கீங்க என்று சொன்னாங்க அதான் என்றேன் நான். ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …
    நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான்.
    யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
    மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
    கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
    ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
    அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
    மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம்.
    எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்.
    மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
    ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
    கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார்.
    இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன்.
    அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார். அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
    வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
    மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
    புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
    புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
    ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா.
    புரட்சித் தலைவர் பக்தர்கள் ... Thanks... Friends...

  5. #2504
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் வழங்கும் " தர்மம் தலை காக்கும்" இன்று முதல் சென்னை ரெட் ஹில்ஸ்- அம்பிகா, & மூலக்கடை - ஐயப்பா மற்றும், "நாடோடி மன்னன்" ஈரோடு- சங்கீதா இனிதே துவக்கம்...

  6. #2505
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை - நாஸ் dts குறுகிய இடைவெளியில் மீண்டும் "அடிமைப்பெண்"...

  7. #2506
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post
    நன்றி எம்ஜியார் பக்தர்கள் இணையதளம்



    "சோம்பேறி பிச்சைக்காரனுக்கு பாயசம் கிடைத்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் கடந்த 2012ம் ஆண்டு முதல் செய்து வரும் தற்குறிகளே" !

    ஏதோ உங்கள் "கர்ணன்" படம் எல்லா காலத்திற்கும் பொருந்தும் ஆனால், எங்கள் மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன்" இன்றைய கால கட்டத்துக்கு பொருந்தாது என்று உளறும் கோமாளிகளே !

    இதே "கர்ணன்" எத்தனை முறை வெளியிட்டார்கள் ? அதில் வெற்றி பெற்ற
    சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா ? உங்கள் அபிமான நடிகர் இறந்த சமயத்தில்
    கூட இதே "கர்ணன்" படம் உங்கள் தியேட்டரில் போட்டும் அது சரியாக ஓட
    வில்லை என்பதை நீங்கள் மறந்தாலும் நாங்கள் அதை மறக்க மாட்டோம்.

    பொதுவாக தமிழகத்தில் தெலுங்கர்கள் அதிகம். அதன் அடிப்பைடயில், கர்ணன் படம் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட போது, திரையில் தெலுங்கு முன்னணி நடிகர், அங்கே இன்று வரை எவராலும் தொட முடியாத உச்சத்தில் இருக்கும் அமரர் என். டி.ராமராவ் அவர்களின் அறிமுக காட்சியில் மிகுந்த கை தட்டல் கிடைத்தது. (உதாரணம் : சத்யம் வளாகத்தில் உள்ள அரங்கு). என். டி. ஆர். அவர்களுக்கு இங்கு நல்ல செல்வாக்கு உண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு - அவருடைய மகன் ஹரிகிருஷ்ணா, பாலகிருஷ்ணன் மற்றும் அவரது பேரன் ஜூனியர் என். டி. ஆர். படங்கள் வரும்போது அதன் அறிகுறியை காணலாம்.

    "கர்ணன்" படத்தை பார்க்க மக்களை வரவழைக்க சபாக்களை அணுகி மக்கள்
    தலையில் டிக்கெட்களை திணித்தது, தியேட்டரை நிரப்புவதற்கு பள்ளிக்கூடம் பள்ளிக்கூட மாய் பிச்சை எடுத்தது, ஊடக ங்களுக்கு செலவு செய்தது; படம் முதல் வெளியீட்டிற்கு பிறகு,பல ஊர்களில் பெட்டிக்குள் தூங்கி கிடந்த இந்த படத்தை("கர்ணன்") தூசு தட்டி படத்தை எடுத்து வெளியிட்ட திவ்யா சொக்கலிங்கத்தின் வியாபார யுக்தி தான் இந்த கர்ணன் படத்தின் விடை .


    எங்களது கலைவேந்தனின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தை பார்க்க
    வருபவர்களோ ஏழை எளிய பாட்டாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். .மேலும் இந்த படம் எந்த நகரத்திலும் இரண்டு வருட இடைவெளி கூட கிடையாது. அதுவும், தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப ஒளி பரப்பினார்கள். மேலும், இந்த தேர்தல் நேரத்தில், போஸ்டர் ஒட்டவும், பேனர் வைக்கவும் தடைகள் பல.

    இத்தனைக்கும் மத்தியில் படம் வெற்றி நடை போட்டுதான் வருகிறது. அது
    மட்டுமல்ல, உங்கள் படத்தை இந்த தலைமுறை பார்ப்பதாகவும், எங்கள் படத்தை மக்கள் பார்க்க வருவதில்லை என்று கூறும் அறிவுக்கொழுந்துகளே ! உங்கள் படத்தை இந்த இளைய தலைமுறையினர் எப்படி ஒதுக்கினார்கள் என்று சொல்லட்டுமா?

    அண்ணன் தங்கை பாசத்தை இன்றையை படங்களிலும் ஏன் தொலைக்காட்சி தொடர்களில் கூட எதார்த்தமாக காட்டி வரும் வேளையில், உங்கள் படத்தில் உள்ள ஓவர் ஆக்டிங் மற்றும் அளவுக்கதிகமான மிகையான செண்டிமெண்ட் காட்சிகளும், மக்களிடம் எடுபடாமல் "பாசமலர்" மோசமலர் ஆனது.

    வெறுமனே குடித்து விட்டு குத்தாட்டம் போடும் ஜமீன் எவ்வளவு பெ ரிய
    மாளிகையில் வண்ணத்தில் காண்பித்தாலும் மக்கள் எண்ணத்தில் ஒட்டாமல்
    இடிந்து போனது. இன்றைய கால கட்டத்துக்கு இந்த படத்தால் எந்த கருத்தும்
    இல்லையென்று மாளிகையின் அருகில் கூட எவரும் வர வில்லை.

    பக்திபடத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு பதிலாக மிக மோசமான வக்கிரத்
    தன்மையோடு, (மீனவர் வேடத்தில், சாவித்திரியுடன் உங்கள் அபிமான நடிகர்
    வரும் காட்சி) காண்பித்ததும், கடவுளுக்கே உரித்தான கனிவைக் காட்டாமல்
    உங்கள் நடிகருக்கே உரிய தேவையில்லாத அலட்டலும் . உறுமலும் இன்றைய மக்களுக்கு தேவை இல்லை என்று இந்த புராண படத்தையும் உதறி விட்டு ஓடி விட்டனர்.

    சுமார் 11 வருட இடைவெளியில் இரட்டை வேடத்தில் வந்த "என்னைப் போல் ஒருவன்" படத்தை உன்னைப் போல் ஒருவன் எங்களுக்கு தேவையில்லை என்று மக்கள் நிராகரித்து விட்டார்கள்.

    யாரும் இல்லாத வேளையில் (ரஜினி, கமல் ஆரம்ப கால கட்டங்களில்) வெள்ளி விழாவை எட்டிப் பிடித்த "திரிசூலம்" இப்போது, ஓரு சென்டரில் கூட
    சரியாக போக வில்லை. உங்கள் நடிகனின் குஞ்சல உடுப்புக்கள் இந்த தலைமுறை பார்த்தால், தலை சுற்றி மயக்கம் போட்டு விடுவார்கள். அதனால் தான், இந்த படத்துக்கு இந்த கால கட்டத்தில் "அதோ கதி ".

    ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கீழ்பாக்கத்தில் சந்தி சிரித்த
    "சந்திப்பை" மக்கள் சந்திக்க மறுத்து தியேட்டர் பக்கமே வர மறுத்து
    விட்டனர்.

    இது உங்களது சமீபத்திய சாதனை துளிகள் . இதற்கு முன்பு உங்கள் வரலாற்றை எடுத்தால் அதுவும் நாறும்!.

    முந்தய பதிவின் தொடர்ச்சி

    நன்றி எம்ஜியார் பக்தர்கள் இணையத்தளம்



    25 வருட இடைவெளியில் வெளியான அன்னையின் ஆணை, கெயிட்டி தியேட்டரில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது மக்களின் ஆணை.

    30 வருட இடைவெளியில் மிகுந்த பொருட்செலவில் வண்ணத்தில் எடுத்த, உங்களது அரங்கிலே போடப்பட்ட "தர்மம் எங்கே "படத்தின் நிலைமை என்ன ?.

    தியேட்டருக்குள் ரசிகர்கள் எங்கே என கேள்வி எழுப்பினர் . இப்படிக்கும்
    இந்த படத்தை உங்களது ரசிகர்களே பலர் பார்த்திருக்க மாட்டார்கள். உங்கள்
    படம் உங்களாலேயே நிராகரிக்கப்பட்டதை மறந்து விட்டீர்களே !

    மகாபாரத கதையை உங்கள் நடிகர் மூலம் மக்கள் பார்த்து இந்த தலைமுறையினர் ...........என்று உலரும் அறிவு ஜீவிகளே.

    மேலும் ஏதோ எரால் பிளைன் நடித்த "CAPTAIN BLOOD " சண்டை காட்சிகள்
    தத்ரூபமாக இருப்பதாகவும் , எங்கள் மன்னவனின் "ஆயிரத்தில் ஒருவன் "
    காவியத்தில் இடம் பெற்ற வாள் சண்டை காட்சிகளை இன்றைய தலைமுறையினர் ரசிக்கவில்லை என்று கிறுக்குத்தனமாக கிறுக்கியிருக்கும் கிருக்கர்களே,எரால் பிளைன் நல்ல நடிகர்தான். அவருடைய வாள் சண்டை புகழ் பெற்றதும் உண்மைதான் . ஆனால் அவரைவிட 100 மடங்கு சிறந்த முறையில் வாள் வீச்சில் வெலுத்து வாங்கியவர் எங்களது கலை வேந்தன்தான் என்பதற்கு ,"ஆயிரத்தில் ஒருவன் "மட்டுமல்ல. மருத நாட்டு இளவரசி, மர்மயோகி, சர்வாதிகாரி, மதுரைவீரன் , நாடோடி மன்னன், நீரும் நெருப்பும் போன்ற எண்ணற்ற படங்கள்.

    தரத்தைப் பற்றி பேசும் தராதரம் கெட்டவர்களே, அன்பைத்தேடி, அன்பே ஆருயிரே, லாரி டிரைவர் ராஜாகண்ணு (இரண்டு இட்லி ஒரு வடை-உங்கள் நடிகர், நடிகை ஸ்ரீப்ரியாவை பார்த்து பேசும் அற்புத வசனம்) பார்ப்பவர்கள் எங்களிடம் தரத்தைப் பற்றி .பேசுவதா ?

    மற்ற மொழி படங்களில் இருந்து சில காட்சிகளை தழுவி நம் படத்தில் வைப்பது அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் திரையுலகில்
    நடைமுறையில் உள்ள விஷயம்தான் . ஆனால் அதை எவ்வாறு சிறப்பாக நாம் எடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில்
    captain blood படத்தில் உள்ள காட்சியை கொஞ்சமும் தரம் குறையாமல்,
    "ஆயிரத்தில் ஒருவன் " படத்தில் எடுத்தார்கள். அதை மக்கள் இன்றும்
    பூரிப்போடுதான் பார்க்கிறார்கள். ஆனால் "மேரா நாம் ஜோக்கர் " படத்தில்
    வரும் காட்சியை , ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வைத்து அதை மிகைபடுத்தி
    காட்டி, சோகத்திற்கு பதில் எரிச்சலை ஏற்படுத்தியதை மறந்து விட்டீர்களா ?

    புள்ளிவிவரம் சொல்லும் புத்திசாலி ராஜாக்களே, கடந்த 25 வருடமாகவும் ,
    அதற்கு முன்பும் ,தமிழகம் முழுவதும் , யாருடைய படம் அதிக
    தியேட்டரில் , அதிக காட்சிகள் ஓடியது என்பதை நன்கு விவரம் அறிந்த திரை
    அரங்கு உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் . எந்த ஒரு வருடமாவது , உங்கள் நடிகரின் படம் ஒரு காட்சி அதிகம் என்று அவர்கள் கூறினால், அப்போது வந்து பேசுங்கள். ஏதோ, ஜென்ம ஜென்மத்திற்கும், ஒரே படத்தைப் பற்றி பேசும் உங்களுக்கு, பொது கழிப்பறையில் வக்கிர தன்மையோடு வரைந்து கிறுக்கி எழுதும் மன நோயாளி வேலையை போல்தான், அன்று முதல் (சாந்தி அரங்கில் ) இன்று வரை (இணைய தளத்தில் ) செய்து வருகிறீர்கள்.

    உங்களிடம் போட்டியிடுவது, உங்களை தாக்குவது ,"செத்த நாயை கல்லால்
    அடிப்பதற்கு சமம் " ஆனால் இவ்வளவு சொல்லியும் திரும்ப திரும்ப விஷமத்தனத்தை செய்பவர்களை எப்படி அடக்குவது ?

  8. #2507
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    தொடரும்

  9. #2508
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2509
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    உயர்ந்த உள்ளம்
    நல்லொழுக்கம்
    வள்ளல் மனம்
    நிகரற்ற மனிதாபிமானம்
    ஏழைகளை நேசித்த இதயம்
    இதுவே
    எங்கள் தலைவர்
    தலைமை பண்பின் இலக்கணம்

    இவரும் அவரும்

    பிப்ரவரி 17 1980 , மக்கள் திலகத்தின் ஆட்சி கலைக்கப் பட்ட நாள் . கருணாநிதியுடன் கூட்டணி அமைத்திருந்தார் இந்திரா காந்தி . மே 1980 இல் தேர்தல் , காங்கிரசும் தி மு க வும் கூட்டணி அமைத்தன , ஆனால் அ தி மு க மீண்டும் வெற்றி பெற்றது 9 ஜூன் 1980 மக்கள் திலகம் மீண்டும் முதல்வராக பொறுபேற்றுக் கொண்டார் ... ஜூன் 23 1980 சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார் . தகவல் மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .

    உடனே கிளம்பிமார் மக்கள் திலகம் ஆறுதல் சொல்வதற்கு ... வேண்டாம் என்று கட்சியினர் சிலர் தடுத்தனர் , அவர் நமது ஆட்சியைக் கலைத்தவர் , இப்பொழுது நடந்த தேர்தலிலும் கூட நம்மை தோற்கடிக்க தி மு க வுடன் கூட்டணி வைத்தவர்கள் . இவ்வளவு அவமானங்களை சுமத்தியவங்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமா என்று கேட்டனர் .

    அரசியல் வேறு மனிதப் பண்பு வேறு . அவங்க தேசத் தாய் அவங்க கலங்கினா நாம சிரிக்க முடியுமா ? என்று போனார் . இந்திரா காந்தி அம்மையாரைக் கண்டதும் , கண் கலங்கினார் , ஆறுதல் கூறினார் , இறுதிச் சடங்கு முடியும் வரை இருந்து விட்டுத் தான் திரும்பினார் .

    கருணாநிதி கூட்டணியில் இருந்தும் கண்டுக் கொள்ளவே இல்லை .

    அதே மக்கள் திலகம் , அக்டோபர் 5 1984 இல் நோய்வாய்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் , இரண்டே நாட்களில் பக்கவாதமும் தாக்கியது . நரம்பியல் , சிறுநீரகம் , இருதயம் என்று மூன்று உறுப்புகளும் பாதிக்கப் பட்டிருந்தது .

    அக்டோபர் 13 1984 , சென்னை வந்தார் பிரதமர் இந்திரா காந்தி . நேராக மக்கள் திலகம் இருந்த மருத்துவமனைக்குச் சென்றார் . சிறு கண்ணாடி வழியே மட்டுமே பார்க்க முடிந்தது மக்கள் திலகத்தை . " இவரா எம் ஜி ஆர் ?" என்று அதிர்ச்சியானார் . அருகில் இருந்த ஜானகி அம்மையாருக்கு ஆறுதல் கூறினார் .

    " அமேரிக்கா போகலாம் , அந்நிய செலாவணிக்கு , எந்த பயமும் வேண்டாம் , ரிசர்வ் பாங்கின் சட்டம் உங்கள் கணவருக்காகத் தளர்த்தப் படும் , எவ்வளவு செலவானாலும் அந்த உன்னத உயிர் பிழைக்கட்டும் , அவரது தர்மமே அவரைக் காக்கும் , உங்கள் பிராத்தனை , என் பிரார்த்தனை , வெளியே நிற்கும் லட்சோப லட்சம் மக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாவது பலிக்காமலா போகப் போகிறது ? என்று ஜானகி அம்மையாரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் கூறினார் .

    மக்கள் திலகத்திற்காக ஏர் இந்திய பொறியியல் நிபுணர்கள் சிறப்பு விமானத்தில் ஒரு மருத்துவமனையே இருக்கும் படி அமைத்தார்கள் . முதன் முதலில் இந்தியாவில் மக்கள் திலகத்திற்காக பறக்கும் மருத்துவமனையே தயாரானது . 23 மணி நேர பயணத்தில் அமெரிக்காவுக்கு செம்மல் பத்திரமாக அழைத்துச் செல்லப் பட்டார் .

    31 அக்டோபர் 1984 இந்திரா காந்தி அம்மையார் கொல்லப் பட்டார் , இதை மக்கள் திலகத்திடம் சொல்வது உகந்ததாக இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர் , அவருக்கு செய்தி சொல்லப் படாமலேயே அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார் .

    இவ்வளவும் நடந்தது , இந்திரா காந்தி அம்மையாரின் இறுதி ஆசையாக கருதி மக்கள் திலகம் அமெரிக்காவுக்குச் செல்வதை , இந்த கொலை சம்பவத்தால் தாமதப் படுத்த வேண்டாம் என்று ராஜீவ் கூறிவிட . மக்கள் திலகம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப் பட்டார் .

    இந்திராவின் மரணத்திற்கு பின்னர்
    மரியாதை செலுத்தக் கூட கருணாநிதி செல்லவில்லை , அவரது அஸ்திக் கலசம் சென்னைக்கு கொண்டு வரப் பட்ட பொழுதும் அனைத்து தலைவர்களும் கட்சி மாச்சரியமின்ரி சென்று மரியாதை செலுத்திய பொழுதும் , செல்லாத ஒரே நபர் கருணாநிதி .

    அரசியல் நாகரீகம் குறித்தும் பண்பு குறித்தும் சமீபத்தில் அவரது இல்லத் திருமண விழாவில் மருத்துவர் ஐயா அவர்கள் கருணாநிதியை மேற்கோள் காண்பித்து பெருமையாகச் சொன்ன பொழுது , இந்தச் சம்பவங்கள் எல்லாம் மனதில் வந்து போகிறது
    புரட்சித் தலைவர் பக்தர்கள்...

  11. #2510
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு மஸ்தான் சாஹிப் அவர்களே, அனைவரையும் வசிகரித்து கொண்டிருக்கும் மக்கள் திலகம் அவர்களோடு யாரையும் ஒப்பிட்டு எழுத கூடிய அளவுக்கு தகுதி பெற்றவர்(கள்) எவ்விடமும் இல்லை, முயன்றாலும் இயலாது, என்பதனை பணிவன்புடன் பகிர்கிறோம்... நன்றி...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •