Page 248 of 401 FirstFirst ... 148198238246247248249250258298348 ... LastLast
Results 2,471 to 2,480 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2471
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. பொதுவாகவே இரக்க சுபாவம் கொண்டவர். அதிலும் மாற்றுத் திறனாளிகள் என்றால் அவரது கருணை மனம் கங்கையாக பொங்கும். அதனால்தான், தான் வாழ்ந்த ராமாவரம் தோட்ட வீட்டில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அவரது விருப்பப்படியே பள்ளி செயல்பட்டு வருகிறது.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.

    விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.

    உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.

    நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.

    மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.

    சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.

    ‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.

    ‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.

    ‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

    இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’

    எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.

    ‘நேற்று இன்று நாளை’ படத்தில் ‘பாடும் போது நான் தென்றல் காற்று...’ என்ற சூப்பர் ஹிட் பாடல், படத்தில் இரண்டு முறை இடம் பெறும். படத்தின் ஆரம்பத்தில் வரும் பாடல் காட்சியில் மஞ்சள் வண்ண உடையில் கூலிங் கிளாஸ், தொப்பி அணிந்து எம்.ஜி.ஆர். மிகவும் இளமையாகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் இருப்பார்.

    காட்சி படமாக்கப்பட்ட இடம் மைசூரில் உள்ள மலைப் பகுதி. ஒரு காட்சியில் மலை யின் உச்சியில் எம்.ஜி.ஆர். நிற்பார். கேமரா கோணம் கீழே இருந்து எடுக்கப் பட்டிருக்கும். அவருக்கு பின்னே வெண்மேகத்தை சுமந்தபடி விரிந்து பரந்த நீலவானம். ரம்மியமான காட்சி அது.

    ஒரு இடத்தில் இடுப்பில் ஒரு கையை வைத்து மறுகையால் உலகம் எல்லையற் றது என்பது போல தலைக்குமேல் சுழற்றி அபிநயம் செய்வார். குறிப்பிட்ட வரிகளை பாடிவிட்டு இரண்டு கைகளையும் பக்க வாட்டில் உயர்த்தி ‘T ’ வடிவில் விநாடி நேரம் நின்று, இடதுபுறம் அரை வட்டமாக எம்.ஜி.ஆர். திரும்பும் ஸ்டைலே தனி. அது அவருக்குத்தான் வரும். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர். பாடும் வரிகள்....

    ‘‘எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அதுபோல் நிலவும்....’’

    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு பின் எம்.ஜி.ஆர். நடித்த ‘நேற்று இன்று நாளை’ படமும் அப்போதைய அரசியல் சூழலில் எதிர்ப்புகளை சந்தித்தது. படம் வரும் முன்பே ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...’ என்ற பாடல் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத் தியது. இந்தப் பாடல் காட்சி யில் ‘திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி’ என்று ஓட்டு நிலவரத்துடன் பேனர் காட்டப்படும்போது தியேட்டர் அதகளப்படும். தடைகளை தாண்டி படம் வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடி அமோக வெற்றி பெற்றது..... இன்றும் திரு அசோகன் குடும்பத்தினருக்கு இணையில்லா ஆதாயத்தை அள்ளி வழங்கி கொண்டிருக்கிறார்...

    படங்கள் உதவி : ஞானம். டீ
    Thanks dear friends...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2472
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    தலைவரின் சூப்பர் ஹிட் படம்
    அன்பே வா
    நினைவலைகள்

    AVM எத்தனை படங்களை எடுத்தாலும் எம்ஜிஆரின் அன்பே வா போன்ற படத்தைப்போல இனிவரும் காலங்களிலும் எடுக்கமுடியாது. இதை AVM Saravanan அவர்களே சொல்லியுள்ளார்.
    14 January 1966 பொங்கல் வெளியீடாக வந்து 23 வாரங்கள் ஓடிய வெற்றிப்படம்.

    M. S. Viswanathan இசையமைப்பில் வாலி எழுதிய அத்தனை பாடல்களும் Supppper!

    வான்பறவை தன் சிறகை எனக்குத் தந்தால்
    பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
    வானத்திலே பறந்து சென்றே
    போனவளை அழைத்துவந்தே
    காதலை வாழவைப்பேன்
    அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன் .....
    புரட்சித் தலைவர் பக்தர்கள் குழு...

  4. #2473
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எப்பொழுதும் திரையுலக சக்ரவர்த்தி ஆக திகழும் மங்கா புகழ் ஒளிவிளக்கு மக்கள் திலகம் அளிக்கும் "அன்பே வா" டிஜிட்டல் வடிவில் தயாராகிறது...

  5. #2474
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1947 ல் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.அவர்கள் தமிழ்ப்பட உலகில் கதாநாயகனாக வலம் வந்த முதல் திரைப்படம் ராஜகுமாரி என்பது அனைவரும் அறிந்தது. தலைவருக்கு கதாநாயகன் அந்தஷ்தை தந்து மிகப்பெரிய வெற்றியை தென்னகம் முழுவதும் பெற்றது. ஆனால் தலைவரின் கொள்கையை பறைசாற்றிய முதல் திரைப்படம் எது என்றால் 1950 ம் ஆண்டு முதலில் வெளியான மருத நாட்டு இளவரசி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தலைவர் அறிமுகமாகும் பாடல் காட்சியே மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வெற்றி பாடலாகும். மக்கள் எல்லோரும் சமமாக வாழவேண்டும் என்ற சமுதாய தத்துவத்தை உணர்த்திய பாடலாகும். மருத நாட்டு இளவரசி திரைப்படம் தான் தலைவரின் முதல் லட்சியபடமாகும். அதன் பின்பு தான் தலைவரின் கொள்கைகளை கொண்ட திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு அர்ப்பணித்தார். மருத நாட்டு இளவரசி முதல் மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் வரை மக்களின் ரசனைக்கேற்றவாறு திரைப்படங்களை தந்து தமிழ் திரையுலகை மேன்மைப்படுத்தினார். 1950.ல் இட்ட தட.ம் 1977 வரை 28 ஆண்டுகளில் சுமார் 112 காவியங்களை வெள்ளித்திரை மூலம் அற்பணித்தார் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள். திரைவானில் தந்த சரித்திர பொன் ஏடுகள் தான் இன்று(68 ஆண்டுகள் கடந்தும்)வரை உலகத்திரையில் தலைவரின் காவியங்கள் மட்டுமே சாகாவரம் பெற்ற காவியங்களாக எங்கு திரையிட்டாலும் தனிமுத்திரையை பதித்து வருகிறது. மக்கள் திலகத்தின் லட்சிய காவியங்களை எந்நாளும் போற்றுவோம்! புகழ்பாடி மகிழ்வோம். எங்கு திரையிட்டாலும் பார்த்து மகிழ்வோம்! வாழ்க! தமிழின் பெருமையை தன் காவியங்கள் மூலம் புகழ்பாடிய பொன்மனச்செம்மலின் காவியங்களுக்கு விழா எடுத்து போற்றுவோமாக ! என்றும் வள்ளலின் வழியில் உரிமைக்குரல் பி.எஸ். ராஜு..... Thanks friends...

  6. #2475
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவானில் நிலைத்து நிற்கும் கலைப்பேரொளி. காலத்தால் அழியாத படைப்புகளை அற்பணித்த அழியா சக்ரவர்த்தி, கடமையுணர்வுடன் காவியங்களில் கருத்துக்குவியல்களை தந்த. கலையுலகம் போற்றும் நடிகப்பேரரசு. இந்திய படவுலகில் எந்த நடிகரின் 100 வது திரைப்படமும் செய்யாத தொடர் புரட்சியின் பயணத்தை வெளியான நாள் முதல் இன்று வரை நிலை நிறுத்திக்கொண்டு வரும் ஒப்பற்ற வெள்ளித்திரையின் படைப்பு. திரையிட்ட இடங்களில் எல்லாம் புகழ் கொடியை , ஓடும் நாட்களை, அதிரடி வசூலை அள்ளி தரும் நம் நாடு போற்றும் வாத்தியார் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் மூடிசூடா மாமன்னன் இயற்கையின் பிரதிநிதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழங்கும் நூற்றாண்டு கண்ட. விழா நாயகனின் நூறாவது (100 வது) .கலைக்களஞ்சியம் உலக தமிழர்கள் போற்றி புகழ் பாடும் ஒளிவிளக்கு ஆம் அந்த ஒளிவிளக்கு திரைக்காவியத்தின் பொன்விழா வருகின்ற செப்டம்பர் மாதம் 20ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆகையால் தலைவரின் 100வது காவியம் ஒளிவிளக்கு பொன்விழாவை செப்டம்பர் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் கருத்துகளை நாளை நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கவும்.நன்றி. உரிமைக்குரல் ராஜு..... Thanks...

  7. #2476
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவா! ஊழல் பேர்வழிகளை உலகிற்கு அம்பலப்படுத்தி தமிழகத்தில் புதிய ஆட்சியை தந்தாய்! திரைப்படத்துறையில் தான் என்ற கர்வம் கொண்டு நடித்த நடிகர்களுக்கு முன்னால் திரையில் வலம் வந்து நல் பாடங்களை போதித்தாய்!. ஆட்சி பீடம் ஏறி பசியை போக்கி படிப்பறிவை தந்து பிள்ளைகளின் வாழ்வில் கருணையின் வடிவாய் திகழ்ந்தாய்!. தான் என்ற மமதையில் தானே ஆட்சியின் அதிகாரம் என்று நினைக்காது எல்லோரையும் ஒரே நிலையுடன் ஆதரித்து உதவி செய்தாய்! அகிலமே புகழ் பாடி வாழ்த்துக்கள் முழங்கினாலும் எதற்கும் மயங்காது நிமிர்ந்து நின்றாய்!தலைவா!. நின் புகழ் வாழ்க! நின் கொற்றம் வாழ்க!.நீ நீடுழி வாழ்க!.என்றும் புதியபூமியில் நின் நிரந்தர புகழ் வாழியவே!.... Thanks Friends...

  8. #2477
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    நம் தலைவர் வாழ்வில் நடந்த
    மனிதாபிமான
    திருப்புமுனையின்
    உச்சகட்டம்

    1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

    மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர் , கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

    காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.

    அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது.

    ( நீதிக்குப் பின் பாசம் , படப்பிடிப்பின் போது )
    புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...

  9. #2478
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2479
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    துக்ளக் வார இதழ்

  11. #2480
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •