Page 247 of 401 FirstFirst ... 147197237245246247248249257297347 ... LastLast
Results 2,461 to 2,470 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2461
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருமதி மேகலா சித்ரவேல் , குத்து விளக்கேற்றும் காட்சி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2462
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருஎம்.ஏ. முத்து , குத்து விளக்கேற்றும் காட்சி

  4. #2463
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    திருமதி மேகலா சித்ரவேல், நடிகை லதா, திரு.சைதை துரைசாமி, திரு.எச்.வி.ஹண்டே , திரு.சமரசம்

  5. #2464
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.சிரஞ்சீவி அனீஸ் குத்துவிளக்கேற்றும் காட்சி .

  6. #2465
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அரங்கத்தில் பார்வையாளர்கள் கூட்டம் .

  7. #2466
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2467
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2468
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2469
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2470
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    தலைவரின் சாதனை திரைப்படம்
    நாடோடி மன்னன்
    குறித்த
    அரிய தகவல்கள் தொகுப்பு
    உங்களுக்காக

    நாடோடி மன்னன் – ஓர் அலசல்!

    நாடோடி மன்னன் அக்காலத்திய பெரும் வெற்றிப் படம் என்பது அனைவரும் அறிந்ததே!

    ஆனால், அந்த வெற்றியின் பின்னே எம்.ஜி.ஆர். ஆற்றிய பெரிய சாதனையும், அதற்காக அவர் சந்தித்த சோதனைகளும் அவருக்குக் கிடைத்த உதவிகளும் பற்றி Wikipedia வில் இருந்து எடுத்த தகவல்களை இங்கு தருகிறேன்!

    இப்படம் குறித்துத் திருமதி Lalitha Chidambaram அவர்கள் சமீபத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்கள். அதன் விரிவான தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம்!

    1958 ல் வெளிவந்த இந்தப் படம் இங்கும் இலங்கையிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இதன் சாதனையை சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் வந்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தால் தான் முறியடிக்க முடிந்தது.

    இதன் கதை Anthony Hope ன் நாவலான The Prisoner of Zenda, Justin Huntly McCarthy ன் மேடை நாடகமான If I Were King , Viva Zapata என்ற ஆங்கிலத் திரைப்படம் ஆகிய மூன்றையும் தழுவி, இந்தியத் திரைப்பட இலக்கணப்படியும், எம்.ஜி.ஆர். க்கு ஏற்ற வகையிலும் மாற்றங்கள் செய்து, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதைத் துறையின் ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வி.இலட்சுமணன், எஸ்.கே.டி. சாமி ஆகியோரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப் பட்டது.

    இந்தப் படத்தின் ஆக்கம் குறித்து விளம்பரப் படுத்தும்போது ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதே சமயத்தில், நடிகை பானுமதியும் தனது ‘பரணி பிக்சர்ஸ்’ சார்பில் The Prisoner of Zenda வைத் தழுவிப் படம் ஆக்கப் போவதாக அறிவித்தார். பிறகு, அவரும் எம்.ஜி.ஆரும் பேசி முடிவுக்கு வந்ததால், சிக்கல் தீர்ந்தது. பானுமதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.
    படத்தின் ஆக்கம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. தொடக்கத்தில், கே. ராம்நாத் இயக்குனராக நியமிக்கப் பட்டார். ஆனால், தொடக்கத்திலேயே அவர் இறந்து விட்டதால் ( 4.10.1956 ) எம்.ஜி.ஆர். இயக்கும் பொறுப்பைத் துணிந்து தானே ஏற்றுக் கொண்டார். படத்தின் முன்பகுதி கறுப்பு வெள்ளையாக எடுக்கப் பட்ட போதிலும், பின் பகுதியை வண்ணமாக்கினார். தனது தகுதிக்கு மீறிச் செலவு செய்தார்.

    திட்டமிடல் சரியில்லாததால், ஆக்கி முடிக்கப் பட்ட படம் 5 மணி நேரம் ஓடிற்றாம்! நீளத்தைக் குறைக்கத் தொகுப்பாளர்கள் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. முதலில் ஆறுமுகம் என்பவரும் அவர் முடியாமல் விலகிய பிறகு, பெருமாள் என்பவரும் முடிந்தவரை தொகுத்துள்ளார்கள். பிறகு ஜம்பு வந்து தான் மூன்றரை மணி நேரமாக
    நீளத்தைக் குறைத்துத் தொகுப்பினை முடித்துள்ளார்.

    இசைக்கு முதலில் என்.எஸ். பாலகிருஷ்ணன் நியமிக்கப் பட்டு மூன்று பாடல்களை உருவாக்கியுள்ளார். ( செந்தமிழே வணக்கம், சம்மதமா?, பாடுபட்டா தன்னாலே ) பிறகு எஸ்.எம்.சுப்பையா நாயுடு தொடர்ந்துள்ளார்.

    தனது ஆக்கங்களுக்காக மட்டுமே பயன் படுத்தி வந்த தனது ‘விஜயா ஸ்டுடியோஸ்’ ( அப்போது ஆசியாவிலேயே மிகப் பெரியது ) ன் பிரம்மாண்டமான படப் பிடிப்பு அரங்குகளை பி. நாகிரெட்டி எம்.ஜி.ஆருக்குத் தந்து உதவியுள்ளார். அதே போல் எஸ்.எஸ். வாசனும் படப் பிடிப்புக் கருவிகளை வழங்கி அதுவரை யாருக்கும் செய்யாத உதவியைச் செய்துள்ளார்.

    மூத்த இயக்குனர் கே. சுப்ரமணியம் படப் பிடிப்பு வேலைகளை மேற்பார்வையிட அழைக்கப் பட்டார். ஆனால், எம்.ஜி.ஆரின் படமியக்கும் திறமையைப் பார்த்துப் பிரமித்துப்போய் அப்படியொரு மேற்பார்வை தேவையில்லை என்று சொல்லிவிட்டு வேறு வகைகளில் உதவியுள்ளார்.

    படத்தின் பாடல்களைப் பட்டுக் கோட்டையார் ( தூங்காதே.., சும்ம கெடந்த..., மானைத் தேடி..., கண்ணோடு கண்ணு...., ), என்.எம். முத்துக் கூத்தன் ( செந்தமிழே..., சம்மதமா....., ), எம்.கே. ஆத்மனாதன் ( பாடு பட்டா...., தடுக்காதே ), இலட்சுமணதாஸ் ( உழைப்பதிலா...), சுரதா (கண்ணில் வந்து....) ஆகியோர் யாத்துள்ளனர். இவர்கள் தவிர விஜயநரசிம்மா, நராயணபாபு, பி. பாஸ்கரன் ஆகியோர் பிறமொழி வரிகளை எழுதி யிருக்கிறார்கள்.

    இப்படத்தில் கண்ணதாசனின் பங்கும் இருக்கிறது; ஆனால் உரையாடல் வடிவில்.....
    புரட்சித் தலைவர் பக்தர்கள்..... Thanks Friends...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •