Page 138 of 401 FirstFirst ... 3888128136137138139140148188238 ... LastLast
Results 1,371 to 1,380 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1371
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பாசம் (1962) என்ற திரைப்படத்தில் ஏறத்தாழ இதே போன்ற தாளம் மற்றும் பாடல் அமைப்பு இப்போது நவீனமாக ஒலிக்கிறது. இதன் துவக்கத்தில் வரும் கிதாரின் அதிர்வுகள் மற்றும் வயலின், இன்டர்லூடில் வரும் அக்கார்டியன் ஓசை, டிஎம்எஸ் பாடும் முறை இந்த மாட்டு வண்டி முன்பிருந்த ஒன்றல்ல என்பதைக் காட்டுகின்றன- “உலகம் பிறந்தது எனக்காக”



    அரசியல் பாடல்கள் மட்டுமல்ல, எம்ஜியாரின் காதல் பாடல்களும் உற்சாகமாக இருந்தன. இதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி கர்நாடக சங்கீத ராகங்களின் கட்டுக்களைத் தளர்த்டில், மேலும் நவீன வகையில் இசையமைக்க வேண்டியிருந்தது. இது, “பணத்தோட்டம்” படத்தில் வரும் “பேசுவது கிளியா,” என்ற பாடல்..



    இந்த பாடலின் முன்னிசை எவ்வளவு நவீனமாக ஒலிக்கிறது பாருங்கள். பல்லவியின் துவக்கத்தில் பாங்கோக்கள் சேர்ந்து கொள்கின்றன. “சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா” என்று எவ்வளவு அழகாக பல்லவி நிறைவடைகிறது பாருங்கள்.

    “பணத்தோட்டம்” பாடல் நவீன பாடலாக இருந்தாலும் அது தமிழ் மெலடியாகதான் இருக்கிறது, சரணத்தில் தபலாதான் பாடலைக் கொண்டு செல்கிறது. இதன்பின் “பெரிய இடத்துப் பெண்” படத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று முழுக்க முழுக்க மேலை நாட்டுப் பாணியில் ஒரு பாடல் செய்தார்கள். இதில் தபலா கிடையாது. முழுக்க முழுக்க சா சா நடனத்தைத் தழுவிய மேற்கத்திய இசைப்பாணி. இங்கு நாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி நம் எல்லைகளுக்கு அப்பால் சென்று உலக இசையை நமக்கு அளிக்க முயற்சி செய்வதைப் பார்க்கிறோம் (1990ஆம் ஆண்டுதான் உலக இசை தமிழ் திரைப்பாடல்களில் ஒலித்தது என்று நினைப்பவர்கள் தம் கருத்தைப் பரிசீலித்துக் கொள்ளலாம்)-



    இதே படத்தில் “பாரப்பா பழனியப்பா” என்ற கிராமிய மெட்டில் ஒரு பாடலை ‘ஏழைப்பங்காளன்’ எம்ஜிஆருக்கு இசையமைத்திருந்தது இவர்களுடைய திறமைக்குச் சாட்சி. முன்சொன்ன பாடல் இளமையான, கம்பீரமான எம்ஜிஆர் பாடுவது.



    பலவகைப் பாடல்களுக்கு இசையமைக்கக்கூடியவர்கள் என்று சொல்வதை நம்பாதவர்கள் இதைக் கேட்கலாம்- “கட்டோடு குழலாட”

    (1963ல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த “ஆனந்தஜோதி” படப்பாடல்கள் சிவாஜி/ ஜெமினி படப்பாடல்கள் போலிருக்கும்- “நினைக்கத் தெரிந்த மனமே“, “பனி இல்லாத மார்கழியா” முதலிய பாடல்கள்).

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1372
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எங்க வீட்டுப் பிள்ளை“யின் ஆண்டு- இதில் வரும், “நான் ஆணையிட்டால்” என்ற எம்ஜிஆர் பாடல்,மிகப் பிரபலமானது என்பது மட்டுமல்ல, மிகவும் பகடி செய்யப்பட்டதும்கூட. அதன் சக்தி வாய்ந்த, தொடர்ந்து ஒலிக்கும் தாளம், டிஎம்எஸ்சின் குரல், எம்ஜிஆரின் வசீகரத் தோற்றம், பாடல் வரிகள்- அனைத்தும் ஒன்று சேர்ந்து எம்ஜிஆரின் பிம்பத்தை நம் மனங்களில் உயர்த்தி நிறுத்துகின்றன. இடையிசையில் ஸ்பானிஷ் புல்-ஃபைட்டுகளை நினைவுபடுத்தும் கிடார் இசைப்பது இந்தப் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்தி வருகிறது.



    (இந்தப் படத்தின் கதைக்கரு முதலில் தெலுங்கு மொழியில் “ராமுடு பீமுடு” என்ற படத்தில் வந்தது, அதன்பின் பல முறை இந்திய மொழிகளில் மீளப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, மிக வெற்றிகரமாகவே என்றும் சொல்லலாம்- ராம் ஔர் ஷ்யாம், சீதா ஔர் கீதா, சால்பாஜ், கிஷன் கண்ணையா என்று எத்தனை எத்தனை ஹிட் படங்கள்! ஏறத்தாழ இந்தியத் திரைப்படங்களின் டெம்ப்ளேட்டாகவே ஆகிவிட்ட, “மாறுபட்ட மனநிலை கொண்ட இரட்டையர்கள்” என்ற கதைக்கருவின் மூலப்பொருள் பிரெஞ்சு மொழியில் அலெக்சாண்டர் டூமாஸின் கற்பனையில் உதித்தது என்கிறது விக்கி).

    இந்த ஆண்டின் மற்றொரு மறக்க முடியாத பாடல், “அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்“, படம் “ஆயிரத்தில் ஒருவன்”



    வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல்களிலிருந்து மாறுபட்ட பாடல் இது- கோரஸ் பாடுபவர்களின் பங்களிப்பு அதிகம். ஜாஸ் இசையை நினைவுபடுத்தும் டிரம்ஸ் வேறுபட்ட ஒரு கதியில் இசைக்கிறது, பியானோகூட பாடலுக்கு ரிதம் அளிப்பதாகவே இருக்கிறது. இடையிசையில் வழக்கமான விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரை இருக்கிறது, சரணத்திலும் அதைச் சொல்லலாம்- ஆனால் இசைக்கருவிகள் தொகுக்கப்பட்ட முறையில் நம்மால் ஒரு மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. அவர்களின் படைப்புலகில் பெருமைக்குரிய பாடல்.

  4. #1373
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று
    காலஞ்சென்ற
    கவிஞர் கண்ணதாசன்
    மெல்லிசை மன்னர்
    எம் எஸ் விஸ்வநாதன்
    இருவரும்
    பிறந்த தினம்.
    நமது மக்கள் திலகத்தின்
    திரைக்காவியங்களில்
    இவர்களின்
    பங்களிப்பு
    மிகவும்
    போற்றத்தக்கது.

  5. #1374
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

    எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

    சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

    எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

    இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

    ‘தேக்குமரம் உடலைத் தந்தது,
    சின்னயானை நடையைத் தந்தது,
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
    பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

    புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

    இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
    மாலைகள் விழவேண்டும்! ஒரு
    மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழவேண்டும்!

    கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

    ‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
    வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

    என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

    ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
    இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
    உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
    அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

    என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

    அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

    ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
    இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

    இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

    ‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
    இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

    என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

    இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

    மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

    வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

    வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

    அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

    எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

    தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார். அதனால்தான் அவர் நடமாடிவந்த இந்தத் தனித்துவமான அற்புத அடையாளங்களோடு அவர் மெரீனா கடற்கரையில் ஆழ்ந்த நித்திரைக்கு அனுப்பப்பட்டார். அவரது பூவுடல்தான் அங்கே உறங்குகிறது. ஆனால் அவரது ஆன்மா என்றென்றும் தமிழ்மக்களின் இதயங்களிலேயே நிலைத்து நின்று வாழ்ந்துகொண்டிருக்கும்.

    மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் வாழ்க.

    courtesy -
    –நர்கிஸ் ஜியா.
    vallamai

  6. #1375
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் - கண்ணதாசன் - மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் கீழ் கண்ட படங்களில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் காட்சிகளும் சூப்பர் ஹிட் .

    மன்னாதிமன்னன் 1960
    பாசம்
    பெரிய இடத்து பெண்
    பணத்தோட்டம்
    ஆனந்தஜோதி
    என்கடமை
    பணக்கார குடும்பம்
    ஆயிரத்தில் ஒருவன்
    நாடோடி
    பறக்கும்பாவை
    ரகசியப்போலீஸ் 115
    புதியபூமி
    தேடிவந்த மாப்பிளை
    சங்கே முழங்கு
    ராமன்தேடிய சீதை
    உலகம் சுற்றும் வாலிபன்
    உரிமைக்குரல்
    நினைத்ததை முடிப்பவன்

  7. #1376
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    இனிய நண்பர் திரு.வினோத் , பெங்களூரு அவர்கள் 15000 பதிவுகள் என்கிற சிகரத்தை கடந்து , தொடர்ந்து பல அற்புத, அபாரமான, அறுசுவை மிக்க, ஆரவாரமிக்க செய்திகள் அளிப்பதற்கு நல்வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் .


    ஆர். லோகநாதன் .

  8. #1377
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நான் கடந்த இருவார காலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன். கோல்டுகோஸ்ட் ,மெல்போர்ன், சிட்னி ஆகிய நகரங்களுக்கு சுற்றுலா நிமித்தம் சென்ற காரணத்தினால் திரியில் பதிவுகள் செய்ய இயலவில்லை.
    மீண்டும் திரியில் இணைந்து பதிவுகள் தொடருவதில் மகிழ்ச்சி.
    ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இனிதாகவும், பயனுள்ளதாகவும், சுவையாகவும்,
    ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .அதுபற்றி ஒய்வு நேரத்தில் நண்பர்களுக்கு செய்திகளை பதிவிடுகிறேன். ஒரே வரியில் சொல்வதாக இருந்தால் அவர்களுடைய முன்னேற்றம், நாகரிகம், ஒழுக்கம், கட்டுப்பாடு என
    பல வகைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அந்த அளவிற்கு நமது நாடோ, மக்களோ
    முன்னேறுவதற்கு பல காலம் ஆகலாம். அதற்குள் அவர்கள் மிகவும் அட்வான்ஸாக
    சென்று விடுவார்கள். அதுபற்றி பின்னர் பதிவிடுகிறேன், நன்றி.


    ஆர். லோகநாதன்.

  9. #1378
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இரங்கல் செய்தி .
    ------------------------


    திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் என்கிற பகுதியை சார்ந்த திரு.மணி (ஆத்தூர் மணி ) , திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் வந்தபோது விபத்துக்குள்ளாகி
    மரணமடைந்தார் . அவருக்கு வயது சுமார் 62. அவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மையான விசுவாசி, தூத்துக்குடி, நெல்லை, குற்றாலம் நகரங்களில் ஓட்டல் பிருந்தாவன் என்கிற உணவு விடுதியை நடத்தி வந்தார். பணியாளர்கள்
    வேலைக்கு குறைந்த அளவில் வருகின்றபோதும், விடுமுறையில் செல்கின்ற போதும் , வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட இலையை தயங்காமல் எடுத்து (மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களை பாடிக்கொண்டே ) சுத்தம் செய்வார் .மற்ற முதலாளிகள் போல் கௌரவம் பார்க்கமாட்டார்.

    நெல்லை, நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய நிகழ்ச்சிகளுக்கும், எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா
    நிகழ்ச்சிகளுக்கும் பொருளுதவி செய்து வந்தவர் .

    மேற்படி, திரு.ஆத்தூர் மணி அவர்களின் மறைவு நெல்லைதூத்துக்குடி, குமரி , மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும், பக்தர்களுக்கும் பேரிழப்பாகும்,

    அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும்.
    அவரை இழந்து தவிக்கும், அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பிலும், என் சார்பிலும்
    அனுதாபங்களையும் , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தகவல்கள் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா.


    ஆர். லோகநாதன்.

  10. #1379
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி =24/6/18

  11. #1380
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    தினமலர் -24/6/18

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •