Page 129 of 401 FirstFirst ... 2979119127128129130131139179229 ... LastLast
Results 1,281 to 1,290 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1281
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத மக்கள் திலகத்தின் படங்கள் சென்னை அண்ணா சாலையில் இருந்த திரை அரங்குகளில் திருவிழா காட்சிகள் நடந்த அந்த இனிய நாட்கள் என்றுமே மறக்க முடியாது . படம் வெளிவரும் முன்னரே ''திரை அரங்குகளில் காட்டப்படும் வருகிறது ஸ்லைடு , போஸ்டர்கள் ஷோ கேஸில் வைக்கப்படும் ஸ்டில்கள் மற்றும் அரங்கை தோரணங்களாலும் ஸ்டார் களாலும் அலங்கரித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களையும் எம்ஜிஆர் ரசிக மன்றங்களையும் என்றுமே மறக்க இயலாது .

    அன்றைய கால கட்டத்தில் 1958 - 1977 படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்த மூத்த எம்ஜிஆர் ரசிகர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சில படங்கள் மற்றும் திரை அரங்குகள் பற்றிய பதிவு

    .
    பாரகன்

    நாடோடிமன்னன் - 1958
    மன்னாதி மன்னன் . ஆனந்த ஜோதி , அரசகட்டளை தேடிவந்த மாப்பிள்ளை ,

    பிளாசா
    தாய் சொல்லைத்தட்டாதே -1961
    திருடாதே தெய்வத்தாய் மாட்டுக்காரவேலன் நேற்று இன்று நாளை தாயை காத்த தனயன் ரகசிய போலீஸ் 115 படகோட்டி

    குளோப்

    குடியிருந்த கோயில் - 1968
    காவல்காரன் குமரிக்கோட்டம் இதயவீணை .

    வெலிங்டன்

    கலங்கரை விளக்கம் -1965
    அரசிளங்குமரி சங்கே முழங்கு நவரத்தினம்

    காசினோ

    எங்க வீட்டுப்பிள்ளை - 1966
    அன்பே வா கொடுத்து வைத்தவள் மலைக்கள்ளன்
    சித்ரா

    வேட்டைக்காரன் - 1964
    மதுரைவீரன் தாய்க்கு பின் தாரம் பெரிய இடத்துப்பெண் நம்நாடு நல்ல நேரம்

    கெயிட்டி

    முகராசி - 1966
    சந்திரோதயம்


    ஸ்டார்

    பெற்றால்தான் பிள்ளையா - 1966
    விவசாயி கண்ணன் என் காதலன்
    தேவிபாரடைஸ் ம் - 1971

    ரிக் ஷாகாரன்
    உலகம் சுற்றும் வாலிபன்
    நினைத்ததை முடிப்பவன் பல்லாண்டு வாழ்க இன்றுபோல் என்றும் வாழ்க மீனவ நண்பன் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
    தேவிகலா

    நீதிக்கு தலை வணங்கு - 1976

    ஓடியன்

    உரிமைக்குரல் -1974
    நாளை நமதே
    சத்யம்

    இதயக்கனி - 1975

    சாந்தம்
    உழைக்கும் கரங்கள் - 1976

    மிட்லண்ட்
    ஆயிரத்தில் ஒருவன் - 1965
    அடிமைப்பெண் நான் ஆணையிட்டால் ஒளிவிளக்கு என் அண்ணன் ராமன் தேடிய சீதை

    சபையர்

    கன்னித்தாய் - 1965

    பைலட்

    ஊருக்கு உழைப்பவன் - 1976

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1282
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரத்தில் ஒருவன் (1965) - ஏன் பார்க்க வேண்டும்?

    சென்னையில் + தமிழத்தில் restored, digitized அயிரத்தில் ஒருவன் வெளிவந்து சுமார் 150 நாட்களை கடந்து (ஒரு ஷோவுடன்) இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. சத்யம் திரையரங்கில் முதல் தடவை பார்த்த போது பாதி அரங்கு நிறம்பியிருந்தது. போன வாரம் மறுபடியும் போன போது (கொஞ்சம் சிறிய அரங்கு, ஆனாலும்) ஹவுஸ் ஃபுல். சத்தியமா எதிர்பார்க்கவேயில்லை..


    .49 ஆண்டுகளுக்கு முன் 1965-ல் வெளிவந்த படம்., இன்னும் ஹவுஸ்ஃபுல் என்றால் நிச்சயம் ஹிஸ்டரி தான். படம் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கின்றது. 35mm-ஐ 70mm-ஆ மாற்றும் போது வெகு சில இடங்களில் பல்லிளித்தாலும் அதெல்லாம் குறையே அல்ல. மேலும், படத்தின் பின்னனி இசை முழுவதும் திரும்ப ரீ-ரெக்கார்டிங் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டலில் கேட்பது இன்னும் இனிமை.

    படம் எப்படினு எல்லாம் சொல்ல வேண்டியதில்லை. பழைய படமாச்சே, அதுவும் எம்.ஜி.ஆர். காலத்திய படம். போர் அடிக்கும் என்று இளசுகள் நினைத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காக சொல்லவேண்டுமென்றால் இது ஒரு ஆங்கில படத்தின் தழுவல்.

    வாத்தியாருக்கே உண்டான ஹீரோயிஸம் இருந்தாலும், அவர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்த பிறகு வந்த படங்களில் உள்ள ஹீரோயிஸத்தை விட, இப்பொழுது விரல் சுத்துற பசங்க பன்ற ஹீரோயிஸத்த விட ரொம்ப குறைவு. சில இடங்களில் பஞ்ச் தான்.

    "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?" என்று நம்பியார் கண்ணை உருட்டி ஆக்ரோஷத்துடன் கேட்க, வாத்தியார் கூலாக சொல்வது, "ஹூம். சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்". செம பஞ்ச்.

    அந்த கால எம்ஜிஆர் படங்கள் திரையில் வந்தால் எத்தனை குதூகலம் இருக்கும், ரசிகர்களின் ரியாக்*ஷன் எப்படி இருக்கும் என்ற நமக்கு தெரியாது. தெரிந்து கொள்ள, ஒன்று அந்த காலத்தில் இருந்திருக்க வேண்டும், அல்லது அப்பொழுதைய பழைய வீடியோக்கள் ஏதாச்சும் இருந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை. ஆனால், இப்போது கிடைத்திருப்பது ஒரு விதத்தில் பாக்கியம். அந்த கால ரசிகர்கள் இப்பொழுது படத்தை பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

    சுமார் 10 வருடங்களுக்கு முன் என் ஊரில் அலிபாபாவும் 40 திருடர்களும் திரையிட்டிருந்தார்கள். சும்மா ஒரு சேஞ்சுக்கு அந்த படம் போனேன். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். செம கூட்டம். படம் ஆரம்பித்தவுடன் ஒருத்தர் கை நிறைய கற்பூரம் கொண்டு வந்து ஸ்க்ரீன் முன் வைத்து கொழுத்தி விட தியேட்டர்காரங்க அலரிட்டாங்க.

    சத்யம் போன்ற தியேட்டருக்கெ வராதவர்களே குடும்பத்தோடு வந்து பார்க்கின்றனர். நான் பார்க்கும் போது, முதல் வரிசையில் (10 ரூ டிக்கெட்) ஒரு பாட்டி ஒவ்வொரு சீனுக்கும் சிரித்து சிரித்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரோட சிரிப்பு பின்னிருக்கையில் இருந்து படம் பார்த்த எனக்கே கேட்டது.

    இன்னொருத்தர் வெளியூர் போல. இருக்குற மொத்த டிக்கெட்டையும் வாங்கிவிட்டிருந்தார். சுமார் 20-25 பேர். ஆங்காங்கே சிதறி உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் 50+

    இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அந்த கால ரசிகர்களின் ரசனை உண்மையில் நம் காலத்தை விட மேம்பட்டது. இந்த கால இளசுகளால் புரிந்து கொள்ள சிரமமா இருக்கும் வசனங்களையெல்லாம், வசனம் வரும் முன்னே கைதட்டி ஆரவாரம் செய்துகொண்டிருந்தனர்.

    வாத்தியார் படங்களில் வந்த கத்தி சண்டைகள் பெரும்பாலும் நிஜமானவை. இந்த படம் வந்த காலகட்டங்களில் டூப் .வந்தாலும், எங்கும் டூப் இருப்பது போல் தெரியவில்லை, அதற்கான தேவையும் இல்லை.

    இதையெல்லாம் விட எனக்குகைன்னொரு தடவை படம் பார்க்க வைத்தது, படத்தில் பாடல்கள். 7 பாடல்கள். அத்தனையும் முத்துக்கள். படம் டைட்டிலில் ஒரு பக்கம் வாலியும் இன்னொரு பக்கம் கண்ணதாசன் படம். கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது.

    டிஜிட்டல் வெர்ஷனில் தியேட்டரில் பாடல்களை கேட்கும் போது சுத்தமாக உறுத்தவில்லை. இன்னும் சொல்லப் போனால் பழைய பாடல்களுக்கே உரிய இசை கொஞ்சம்+வார்த்தைகள் தெளிவு.

    ஜெ-வின் இன்ட்ரோ பாடல் 'பருவம் எனது பாடல்' முதல் கடைசி பாடலான 'அதோ அந்த பறாவை போல' வரை சூப்பர் சூப்பர் சூப்பர்ஜி.

    இரண்டு பாடல்களை குறிப்பிட வேண்டும்.

    1. 'உன்னை நான் சந்தித்தேன்' என்று சட்டென்று சுசீலா குரலில் இன்ட்ரோ இசை இல்லாமல் பாடல் வரி ஆரம்பிப்பது நச்.

    2. 7 பாடல்களில் எனக்கு கடைசியா சுமாரா பிடித்த பாடல் 'நானமோ' பெரும்பாலும் கேட்க மாட்டேன். ஆனால், இங்கே கேட்கும் போது, முதல் 5 செகன்ட் ஒரு வாத்தியம் வந்து நிறக; 'சடாரென்று' டெம்பொவை ஏத்தும் அடுத்த பத்து செகன்ட், அதுவும் 'தியேட்டரில்' கேட்கும் போது, ரியலி வொன்டர்புல். கேட்டு பாருங்க.

    இந்த படம் நிச்சயம் அந்த கால ஜாம்பவான்களின் மெகா கூட்டணி. எம்ஜிஆர்+ஜெ+நம்பியார்+நாகேஷ்+கண்ணதாசன்+வாலி+டிஎமெஸ ்+சுசீலா+விசு ராமு+பந்துலு. வேறென்ன வேண்டும்?

    நிச்சயம் மறக்க முடியாத அனுபவம். ட்ரை பன்னி பாருங்க. உங்க 120 ரூ கண்டிப்பா வொர்த். வேறென்ன சொல்ல...?

    COURTESY NET

  4. #1283
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    அதிமுக எம்.ஜி.ஆர்.
    1972 ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். அன்றிலிருந்து ஜெயலலிதா மறையும் வரை தமிழகத்தின் பெரிய கட்சி என்கிற நிலையில் இருந்து அதிமுகவை யாரும் அசைக்க முடியவில்லை. தற்போது இருக்கிற அதிமுக இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது என்கிற விமர்சனம் எதிர்தரப்பிலிருந்து காட்டமாக வந்துகொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் அதிமுகவின் தொடக்கம் முதல் தற்போது உள்ள சூழல் வரை அரசியல் சமூக பகுப்பாய்வு அவசியமாகிறது.

    periyar MGR1972 ம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தபோது, மு.க.முத்துவை திட்டமிட்டு வளர்த்தது, கட்சியில் கணக்கு கேட்டது போன்ற காரணங்களால்தான் எம்ஜிஆர் கட்சியை விட்டு விலகினார் என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. இது ஒருபுறமிருந்தாலும்,எம்ஜிஆர் கட்சி தோற்றுவிக்க காங்கிரசுதான் காரணம் என்கிற நுட்பமான பார்வையும் அரசியல் பார்வையாளர்களிடம் இருந்தது. திமுகவினர் பலர் எம்ஜிஆர் மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டு இதுதான்.இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்கிற திறனாய்விற்கு செல்லுவதற்கு முன் எம்ஜிஆரின் இயல்பை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

    எம்ஜிஆர் திமுகவில் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்டபோதே காமராசரை தன் வழிகாட்டி என அறிவித்தார். அந்த சர்ச்சை கழகத்தில் சில நாட்கள் நீடித்து அதன் பிறகு அடங்கிவிட்டது. திமுகவில் அண்ணா கலைஞர் போன்றோர்களுக்கு இருந்த பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்கிற முத்திரை எம்ஜிஆருக்கு இல்லை. இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ஆருக்குக்கு கூட அந்த முத்திரை இருந்த்து. ஆனால் எம்ஜிஆருக்கு அந்த முத்திரை இல்லை. கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுநபர் என்கிற அடையாளம் தனக்கு வேண்டும் என்பதில் எம்ஜிஆர் தெளிவாக இருந்தார். திமுகவின் பிரச்சாரத்திற்கு எம்ஜிஆரின் திரைப்படங்கள் உதவியாக இருந்தன. தான் நடிக்கும் படங்களில் உதயசூரியன் என்கிற பெயர் வருமாறு பார்த்துக் கொள்வார் .அன்பே வா படத்தில் உதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே என்கிற வரி வரும். அன்றைய காங்கிரசு அரசு உதயசூரியன் என்கிற வரியை தணிக்கை செய்து புதிய சூரியன் என்று வெளியிட்டது. நம் நாடு படத்தில் காரிருள் மறையுதுங்க சூரியன் உதிக்குதுங்க என்று ஜெயலலிதா பாடுவார்.

    இது போன்ற எண்ணற்ற படங்களை சொல்ல்லாம். 72 வரை அவருடைய அனைத்து படங்களிலும் அண்ணாவும் உதயசூரியனும் குறியீடுகளாக தவறாமல் இடம்பெறும். 72 க்கு பிறகு,அண்ணா மட்டுமே தவறாமல் இடம்பெற்றார்.

    எம்ஜிஆரால் திமுக வளர்ந்த்தா? திமுகவால் எம்ஜிஆர் வளர்ந்தாரா? என்றால், இரண்டுமே சரிபாதியாக நிகழ்ந்த்து. முகம் காட்டு ராமச்சந்திரா முப்பது இலட்சம் வாக்குகள் திமுகவிற்கு என்று அண்ணா சொன்ன வாசகம் திமுகவில் எம்ஜிஆருக்கு இருந்த வசீகரத்தை காட்டியது. திமுகவில் சிறு பிணக்கு ஏற்பட்ட சமயம் என் கடமை படம் வெளியானது. படம் படுதோல்வியடைந்த்து. இந்த தோல்வி எம்ஜிஆரின் வெற்றிக்குப் பின்னால் திமுகவின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்தியது.

    எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை இருந்த்தா? இல்லையா? என்று தெரியவில்லை. எந்த திரைப்படங்களிலும் கடவுளை வணங்கியதாக காட்சி இல்லை. கதாநாயகியை கடவுளை வணங்க சொல்லிவிட்டு அமைதியாக நிற்பார். ஒருமுறை இதுகுறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தன் தாயைத்தான் கடவுளாக வணங்குவதாக தெரிவித்தார். ஆனாலும்,ஆன்மீகவாதிகள் அனைவரும் விரும்பத்தக்க தலைவராகத்தான் எம்ஜிஆர் இருந்தார். திமுகவின் மீது ஆன்மீகவாதிகளுக்கு இருந்த அதிருப்தி எம்ஜிஆரிடம் இல்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கிருபானந்தவாரியார் சம்பவத்தை சொல்ல்லாம்.

    கடவுள் இல்லை என்று சொல்பனுக்கே அமெரிக்காவிற்கே சென்று மருத்துவம் பார்த்தாலும் மரணம்தான் என்று கிருபானந்தவாரியார் கூறினார். (அண்ணாவிற்கு அமெரிக்காவில் சிகிச்சையளித்தும் பலனிக்கவில்லை என்பதை மறைமுகமாக கிருபானந்தவாரியார் சுட்டிகாட்டுகிறார்). இது திமுகவிலிருந்த எம்ஜிஆர் ரசிகர் உட்பட பலரை ஆத்திரம் கொள்ளச் செய்தது. பல இடங்களில் கிருபானந்தவாரியார் உரை நிகழ்த்திய இடங்களிலெல்லாம் பதற்றம் ஏற்பட்டது. உடனே,எம்ஜிஆர் தலையிட்டு, கிருபானந்தவாரியாரை சமதானபடுத்தினார். அதன்பிறகு,கிருபானந்தவாரியார் தலைமையில் எம்ஜிஆருக்கு பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது. பொன்மனச்செம்மல் என்கிற பட்டமும் எம்ஜிஆருக்கு கிருபானந்தவாரியாரால் வழங்கப்பட்டது.

    அதிமுக எம்ஜிஆர்

    72 ல் எம்ஜிஆர் அதிமுக தொடங்கியபோது அவருக்கு கைகொடுத்த காரணிகள் இரண்டு

    திமுகவிலிருந்த எம்ஜிஆர் ரசிகர்கள்

    திமுகவிற்கு அப்பாற்பட்டு எம்ஜிஆரை நேசித்த அமைப்புகள் ,சமூகங்கள்,மாற்று கருத்தாளர்கள்

    72 ம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி எம்ஜிஆர் பின்னால் திரண்டவர்கள் யார் என்பதை காண்பிக்கும் தேர்தல். 77 லில் எம்ஜிஆரை கோட்டைக்கு அனுப்பியது அருப்புக்கோட்டை. அதன்பிறகு அவர் தொடர்ச்சியாக 80 ல் மதுரை மேற்கு, 84 ல்ஆண்டிப்பட்டி என தென்மாவட்டங்களையே தனக்கான களமாக கருதினார். திமுகவிலிருந்து பிரிந்து வந்த எம்.ஜி.ஆர் திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட சென்னையையோ, வடதமிழகத்தையோ, காவிரி கடைமடைபகுதிகளிலுள்ள ஏதேனும் தொகுதியையோ தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால்,எம்ஜிஆர் தேர்ந்தெடுத்த்தோ திமுகவிற்கு பெரிய வெற்றிவாய்ப்புகளை தந்திராத தென்மாவட்டங்களைத்தான். திமுகவில் இருந்தபோது 67 மற்றும் 71 ஆகிய இரண்டு தேர்தலைகளை சந்தித்தார். அப்போது பரங்கிமலைத் தொகுதியில்தான் நின்றார். அதாவது திமுகவிற்கு சாதகமான தொகுதி. ஆனால்,தனியாக கட்சி ஆரம்பிக்கும்போது தென்மாவட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்.

    எம்ஜிஆர் பின் அணிதிரண்ட சமூகங்கள்

    எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது, திமுகவின் சாதி ஒழிப்பு சுயமரியாதை திருமணசட்டம் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபாடில்லாத சமூகங்கள் எம்ஜிஆரின் பின்னால் அணி திரண்டன. குறிப்பாக பிரான்மலை கள்ளர்,கொண்டைய கொட்ட மறவர் ,கொங்கு வேளாள கவுண்டர் போன்றோர்களின் வாக்குகள் எம்ஜிஆருக்கு சாதகமாகின.

    பார்ப்பன எதிர்ப்பில் தீவிரம் காட்டும் சமூகங்களான தஞ்சாவூர் கள்ளர்,வட தமிழகத்திலுள்ள வன்னியர், முதலியார் போன்ற சமூகங்கள் திமுக ஆதரவில் நிலைத்து நின்றன. காங்கிரசு வாக்கு வங்கியாக இருந்த ஆதிதிராவிடர்களும் கணிசமாக எம்ஜிஆருக்கு ஆதரவளித்தனர். மதுரை வீரன் படத்தில் இருந்தே எம்ஜிஆர் மீது காதல் வயப்பட்டிருந்த அருந்த்தியர்கள் அப்படியே எம்ஜிஆர் பக்கம் சாய்ந்தனர்.

    தமிழகத்தில்,எம்ஜிஆருக்கு தனிப்பட்ட முறையில் எந்த சாதியும் சொந்தமும் கிடையாது பந்தமும் கிடையாது. அதுவே, எம்ஜிஆருக்கு சாதகமான அம்சமாகிவிட்டது. எம்ஜிஆர் திண்டுக்கல் இடைத்தேர்தலில் காமராசரிடம் ஆதரவு கேட்டார். காமராசர், அதிமுக திமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என கூறி ஆதரவு தர மறுத்துவிட்டார்.அந்த கோபத்தை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்தில் காண்பித்தார். முதுகளத்தூர் கலவரத்தின்போது ,காமராசர் தேவர் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொண்டார் என்று காமராசருக்கு எதிராக குற்றம்சாட்டினார். பெரும்பாலும் சாதியைப் பற்றி பேசாத எம்ஜிஆர், திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது காமராசரை எதிர்ப்பதற்காக சாதியை சொல்லி பேசினார்.

    எம்ஜிஆரும் நடுவண் அரசின் செயல்பாடும்

    எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்திரா காந்தி ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்தார்.

    தமிழகத்தில் நெருக்கடி காலத்தில் இந்திரா காங்கிரசை ஆதரித்த ஒரே மாநில கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டும்தான். நெருக்கடி நிலையை ஆதரித்த இந்திய பொதுவுடைமைக் கட்சி கூட பின்னாளில் இந்திரா ஆதரவு நிலை எடுத்தமைக்காக, வருத்தம் தெரிவித்த்து. இமயம் தொலைக்காட்சிக்கு எனக்களித்த நேர்காணலில், தா.பாண்டியன் இது குறித்து விரிவாக பதிவு செய்திருப்பார். ஆனால், நெருக்கடி நிலையின்போது, இந்திரா காந்திக்கு ஆதரவு கொடுத்ததற்கு இதுவரை அதிமுக வருத்தம் தெரிவிக்கவில்லை. அந்த அளவிற்கு இந்திரா காந்திக்கு ஆதரவாக எம் ஜி ஆர் நடந்து கொண்டார்.

    ஆனால், எம்ஜிஆர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது,மொரார்ஜி தேசாய் மத்தியில் பிரதமரானார். உடனே, சுதாரித்துக் கொண்டு மொரார்ஜியை முழுமையாக ஆதரிக்க ஆரம்பித்தார். மொரார்ஜி ஆட்சிக்குப்பிறகு சரண்சிங் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்திரா காந்தியின் பொம்மை அரசு என்று கூட சரண்சிங் விமர்சிக்கப்பட்டார். அந்த ஆட்சியில் மத்திய அமைச்சரைவயில் அதிமுகவின் இரண்டு அமைச்சர்கள் இடம் பெற்றனர். திராவிட ஆட்சியில் மத்தியில் பங்கு வகித்த முதல் அமைச்சர்கள் என்கிற பெருமையை அதிமுக வழங்கியது..அதிலும் சத்தியவாணிமுத்து என்கிற ஒடுக்கப்பட்டோர் அரசியல் உணர்வுடைய ஆதிதிராவிட பெண் முதன் முறையாக மத்திய அமைச்சரவைக்குச் சென்றார்.

    இவ்வாறாக,இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய்,சரண்சிங் என யார் ஆட்சிக்கு வந்தாலும் எம்ஜிஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கவே விரும்பினார். இந்திரா காந்தி மறைவிற்குப் பிறகு ராஜீவ் காந்தியுடன் எம்ஜிஆர் நல்லுறவுடன் இருந்தார். 84 தேர்தலில் இந்திரா காந்தி சாவுக்கு ஒரு ஓட்டு,எம்ஜிஆர் நோவுக்கு ஒரு ஓட்டு என்கிற வாசகம் மிகவும் பிரசித்திப்பெற்றது .அந்த தேர்தலில்தான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டே எம்ஜிஆர் வெற்றிப் பெற்றார்.

    67ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுத்துக்கொண்டே வெற்றிப் பெறுவேன் என்று அண்ணாவிடம் சவால் விட்டவர் காமராசர். ஆனால்,உண்மையில் படுத்துக் கொண்டே வெற்றிப் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் எம்ஜிஆர்தான்.

    COURTESY NET

  5. #1284
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    எம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை

    வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்கிரமாதித்யன் ஒரு விதத்தில் குறியீட்டுத் தன்மை கொண்டவன். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கதைகளில் இடம்பெற்றுள்ள காவிய நாயகன் இவன். குப்த வம்சத்தில் வந்த விக்ரமாதித்தன் என்னும் புகழ்பெற்ற மன்னனைப் பற்றி வரலாற்றில் படிக்கிறோம். அந்த மன்னனின் வாழ்வும் அவனது புகழின் கதிர்களும் சேர்ந்து எழுதிய கதையாகத்தான் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளின் கதையை நாம் நவீனத்துவப் பொருளில் புரிந்துகொள்ள முடியும்.

    இந்த மன்னன் எப்படி இத்தகைய காவியத் தன்மையைப் பெற்றான் என்ற வியப்பு ஏற்படலாம். ஆனால் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதனைச் சுற்றியும் இதுபோன்ற கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது விக்கிரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது. அந்த அதிசய மனிதரின் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன்.

    எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள். கிராமத்தில் பிரச்சாரத்துக்குச் செல்லும்போது இந்த கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த? என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள். ஆனா அந்த நம்பியார் கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

    எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை. எம்.ஜி.ஆர். தினமும் தங்கபஸ்பம் சாப்பிடுவார். எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி எக்ஸ் ரே தன்மை கொண்டது. எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.ஆர். ராதா தன்னைச் சுட்ட பிறகு தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்லப்படுவதற்கு முன் ராதா அண்னனுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர். வண்டியில் ஏறினார் என்பார்கள். எம்.ஜி.ஆர். சொன்னார் என்பதற்காகவே குடிக்கும் பழக்கத்தை விட்டவர்கள் இருக்கிறார்கள்.

    இதில் எது நிஜம், எது பொய்? யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் எம்.ஜி.ஆர்.

    காவிய நாயகனுக்கான, ரட்சகருக்கான, அவதார புருஷனுக்கான மக்களின் ஆழ்மனத் தேவைதான் எம்.ஜி.ஆரைக் காவிய நாயகனாக்குகிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேவைக்கான பொருத்தமான பிம்பமாக எம்.ஜி.ஆர். உருவெடுத்தது எப்படி என்பதுதான் ஆழமான ஆய்வுக்கு உரியது. சினிமா என்பது அடிப்படையில் காட்சி ஊடகம். நாடகத்தில் சாத்தியப்படும் காட்சி எல்லைக்கு உட்பட்டது. சினிமாவில் காட்சிகளைப் படைப்பாளியின் விருப்பத்திற்கு ஏற்பப் பெரிதாகவோ சிறியதாகவோ ஆக்கிக்கொள்ளலாம். கோணங்களை மாற்றலாம். ஒன்றை அண்மையிலோ அல்லது தொலைவிலோ வைத்துக் காட்டலாம். ஒலியை அமைக்கும் விதத்தை மாற்றலாம்.

    திரையில் உருப்பெறும் காட்சிப் படிமங்களும் அதற்கான ஒளி, ஒலி அமைப்புகளின் சேகரமும் இணைந்து பலவாறான தாக்கங்களை எழுப்புகின்றன. பார்ப்பவரைப் பொறுத்து இந்தத் தாக்கங்கள் மாறினாலும் இவற்றில் பொதுமைப்படுத்தக்கூடிய தன்மைகளும் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நாயகனைக் கீழிருந்து மேலே காட்டும் கோணத்தில் காட்டும்போது அவரது வலிமை குறித்த எண்ணம் பார்வையாளர் மனதில் வலுப்பெறுகிறது.

    தனியாக நிற்கும் ஒருவர் சட்டகத்தின் ஓரமாகக் காட்டப்பட்டால் முகம் தெரியாத நிலையிலும் அவர் சற்றே சோகத்தில் அல்லது தனிமை உணர்வில் இருப்பதாக உணர முடியும். கோமாளியாக ஒருவரைக் காட்ட வேண்டும் என்றால் அவர் முகத்தை அண்மைக் காட்சியில் சற்றே வக்கரித்த முறையில் காட்டினால் போதும். காதல், பாசம், பாலுணர்வு போன்ற அம்சங்களை உணர்த்தவும் காட்சிப் படிமங்களின் தன்மைக்குப் பெரும் பங்கு உள்ளது.

    இப்படிப் பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். கண் போன போக்கிலே என்னும் பாடலில் இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்.ஜி.ஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.

    இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம். ஏழைப் பங்காளன், வெல்ல முடியாதவன், தர்மத்தின் காவலன், பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல், அன்னையைப் போற்றும் உத்தமன், நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன், சமூகப் போராளி, சீர்திருத்தவாதி, நல்லவர்களைக் காத்து அல்லவர்களை ஒடுக்குபவன், பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன். இப்படி எத்தனை எத்தனை பிம்பங்கள்.

    இந்தப் பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன. என்னை நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை, நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு, கரிகாலன் குறிவைக்க மாட்டான், வைத்தால் தவற மாட்டான் என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்.ஜி.ஆரின் திரைப் படிமம் ரட்சக வார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. இவரையா குறை சொல்ற? என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம். அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

    எதிரிகளைப் பந்தாடும் எம்.ஜி.ஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார். சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

    நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். நான் ஆணையிட்டால் என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

    காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக நாடோடி மன்னன் படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் நான் ஆணையிட்டால் பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.

    சிவாஜியுடன் நடிப்பில் போட்டிபோடும் விருப்பம் எம்.ஜி.ஆர். என்னும் நடிகனுக்கு இருந்திருக்கக்கூடும் என்பதை 50, 60களில் வெளியான சில படங்கள் உணர்த்துகின்றன. ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார். பெற்றால்தான் பிள்ளையா போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிபாடுகளாக மாறத் தொடங்கின.

    இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார். சிவாஜியின் பாடல்களில் நாம் கண்ணதாசனையோ வாலியையோ உணருவோம். எம்.ஜி.ஆரின் படல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராக மாறியிருக்கும். குயில்கள் பாடும் கலைக்கூடம், கொண்டது எனது அரசாங்கம் என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

    திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

    திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. இதுவே திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆகப் பெரிய சாதனை.

    - அரவிந்தன்,

  6. #1285
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி்.யாரைப் பிடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்வார்கள். ஆனால் அவரை பிடிப்பதற்கான அந்த பிடிப்பின் ஆழம் மட்டும் அனைவருக்கும் ஒரே அளவிற்கு இருப்பதால்தான் அவர் மறைந்து 30 வருடங்களுக்குப் பிறகும் அவரின் புகழும் சரி அவரை விரும்புகிறவர்களின் எண்ணிக்கையும் சரி கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்தபடியேதான் இருக்கிறது.

    இன்றும் மக்கள் திலகம் என்ற அந்த மஹா மனிதன் m g r , என்ற அந்த மக்களின் மனம் கவர்ந்த புரதச் நடிகர் வயது கடந்து இன்றும் கொண்டாடப்படுவதில் ஆச்சரியம் இல்லை, ஏன் என்றால், ஒரு வள்ளல் தனம், அள்ளி கொடுப்பது, யாரை கண்டாலும் முதலில் நலம் விசாரிப்புடன் சாப்பிட்டிர்களா என்ற பழகிய தன்மை, இப்படி நல்ல மனிதன் மிக சிறந்து [ ஒரு ஹீரோ எப்படி திரையில் இருக்க வேண்டும் [ என்பதை ஆணி அடித்தர்போல உணர்த்தியது, இன்றைய பொறிக்கி,குடிகார,ரவுடி ,கத பாத்திரம் ஏற்று நடிக்கும் பெரும்பாலான அயோக்ய பொறிக்கி ஹீரோக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம், இன்னொரு எந்த ஸ்டார் நடிகரும் இப்படி வர மக்களே அனுமதிக்க மாட்டார்கள், எம்ஜியார் என்ற இந்த சிறந்த ஹீரோவை இன்றைய ஹீரோக்கள் தாண்ட முடியாது.

    M g r முகராசி, அவரின் கைகூப்பி வணக்கம் சொல்லும் வசீகரம் ,மக்களை கவர்ந்ததே காரணம், இன்றளவும் அவரைபோல் நான் யாரையும் காணவில்லை .

    இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பின்னரும் இந்த உத்தம மனிதர் பற்றி மக்கள் பேசுவார்கள் இடையில் வந்த தமிழ் வியாபாரிகள் மறைந்து விடுவார்கள் சரித்திரத்தில்
    உலகில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்கள்...........அனால் இன்னும் ஒரு நூற்றாண்டு காலதிர்கவது மாறாமல் இருக்க போவது எம் ஜி ஆர் அவர்களின் தாக்கம்..............இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்........இவர் போலே யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.....

    உண்மை ! உண்மை !! பேருண்மை !!! மனிதம் நிறைந்த மனிததெய்வம் மக்கள் திலகம் .
    Courtesy - comments portion

  7. #1286
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர் மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    எதிர் காலம் வரும் என் கடமை வரும்
    இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
    புது நீதியிலே
    புது பார்வையிலே
    நல்லோர் முகத்திலே விழிப்பேன்
    வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்

    #நக்கீரன் (2017 June 04-06) மாவலி பதில்கள்:
    #பொன்னரசு, மெல்போர்ன், ஆஸ்திரேலியா.

    கிராமங்கள்தோறும் உயர்சாதிக்காரர்கள் வசம் இருந்த மணியம், கர்ணம் போன்ற பரம்பரை அரசுப்பதவிகளை ரத்து செய்து, ஆதி திராவிடர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் அந்தப் பதவிகளைப் பெறும்படி செய்தவர் எம்.ஜி.ஆர் என்று முன்னாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன், நக்கீரன் கட்டுரையில் தெரிவித்திருக்கிறாரே?

    #எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை, பொருளாதார அளவுகோலின்படிதான் மக்களின் ஏற்றத்தாழ்வை மதிப்பிடுவார். திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையிலும்கூட பொருளாதார அளவுகோலை கொண்டு வர முயன்று, நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் பின்வாங்கினார். எனினும், கிராமத்தின் அன்றாட நிர்வாகத்துடன் தொடர்புடைய மணியம், கர்ணம், கணக்கப்பிள்ளை உள்ளிட்ட பதவிகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த செல்வாக்கான சாதிக்காரர்களே பரம்பரை முறையில் இருப்பதையும், அதனால் அவர்களின் சாதிக்கே சாதகமாக செயல்படுவதையும் உணர்ந்து, அந்தப் பதவிகளில் சமூகநீதியை நிலைநாட்டியர் எம்.ஜி.ஆர். ஒரே உத்திரவில் பரம்பரை பதவிகளை காலி செய்து, கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் இடம்பெற வழிவகுத்தார்.

    இது குறித்து ஈரோட்டில் 17 நவம்பர் 1980ல் புரட்சித்தலைவர் பேசியது:
    "தமிழகத்தில் கிராம முன்சீப், கர்ணம் போன்ற கிராம அதிகாரிகள் பதவி ஒழிக்கப்பட்டுள்ளது.
    பல நுாற்றாண்டுகளாக இருந்து வந்த அரசர் பதவியை வல்லபாய்படேல் ஒழித்தார்.
    ஆனாலும் கிராம அதிகாரிகளின் பாரம்பரியம் ஒழியவில்லை.
    கிராம அதிகாரிகள் மீது பல புகார்கள் வந்தன என்ற போதிலும் அவர்கள் மீது அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மாறுதலும் செய்ய இயலவில்லை. கிராம அதிகாரிகளுக்குப் பதிலாக வேலை இல்லாத பட்டதாரிகளும், படித்த இளைஞர்களும் அந்தப் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள்.
    இதனால் வேலையில்லாமல் திண்டாடும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" இவ்வாறு முதல்வர் புரட்சித்தலைவர் கூறினார்... நன்றி, நண்பர்கள் குழு...

  8. #1287
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காலங்கள் கடந்து
    மங்கா புகழோடு வாழும்
    சரித்திர நாயகன்

    புரட்சித் தலைவர் எம்ஜிஆர்
    ஜானகி அம்மாள்

    திருமணநாள் இன்று
    14=6=1962

    குழுவின் சார்பாக
    இனிய
    திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

    நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே...💐

  9. #1288
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர் மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்து விடு
    நல்ல அன்புக்கும் பண்பு க்கும்
    வளைந்து கொடு

    "டைரக்ஷனுக்கு படிக்கணுமா? அதை பற்றி உனக்கு என்ன தெரியும்?" என கேட்ட #எம்ஜியார் அந்த இளைஞர் தான் பின்னாளில் புகழ் பெற்ற இயக்குனர்.
    கோவையைச் சேர்ந்த மாணவன் அவன். அவனின் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் புகழ் பெற்றவர்.
    அவன் கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் சினிமாவில் சேர ஆசைப்பட்டான். அதற்காக திரைப்படக்கல்லூரியில் கேமராமேன் பிரிவுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தபோது, அதற்கு வயது அதிகமாகிவிட்டது என்ற காரணத்தால் டைரக்ஷன் கோர்ஸுக்கு விண்ணப்பித்தான்.
    அவன் தந்தை அவனை சென்னை கம்யூனிஸ்ட் அலுவலகமான-பாலன் இல்லத்துக்கு அனுப்பி வைத்தார். சென்னையில் அவன் இன்னார் தோழரின் மகன் என்றதும் தோழர் கல்யாண சுந்தரமே அவனுக்காக முயற்சிகள் மேற்கொண்டார்.
    "என்ன வேலைக்கு தம்பி?" என அவனைக் கேட்டார்.
    அவன் 'இயக்குநர் படிப்புக்கு' என்றான்.
    அவர் "நமக்கு அங்கு யாரையும் தெரியாதே" என கூறிவிட்டு, "சரி ஒரு தோழர் மூலம் பார்ப்போம்" எனகூறினார்.பின்னர்
    ஒரு தோழரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
    அந்த கார் தலைமைச் செயலகம் சென்றது.
    அங்கு ஒரு அறைக்கு அந்த தோழரும் வாலிபனும் சென்றனர்.
    அந்த அறை முகப்பில் 'முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன்' என்ற போர்டு காணப்பட்டது.
    இருவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர். எம்.ஜி.ஆர் அந்த தோழரைக் கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார்.
    தோழர் சொன்னதைக் கேட்டுவிட்டு அந்த வாலிபனிடம் "டைரக்ஷனுக்கு படிக்கணுமா? டைரக்ஷன் பத்தி உனக்கு என்ன தெரியும்?" என கேட்டார்.
    "அது பத்தி தெரியாது. இனிமேதான் கத்துக்கணும்" என்றான்.
    அவன் முதுகில் தட்டி. "உனக்கு ஏற்பாடு செய்கிறேன்.நன்றாக படி" என கூறி அனுப்பி வைத்தார்.
    வெளியே வந்ததும் அந்த தோழரிடம், "எம்.ஜி.ஆரே கட்டி பிடிக்கிற அளவுக்கு நீங்க பெரிய ஆளா? உங்கள் பெயர் என்ன?" என கேட்டான் அந்த வாலிபன்.
    அதற்கு அந்த தோழர் "நான்தான்
    வழக்கறிஞர் என்.டி.வானமாமலை.
    MGR-ருக்கு எதிரா, M.R.ராதாவுக்காக வாதாடிய வக்கீல்" என்றார்.
    இதைக்கேட்டதும் அந்த வாலிபன் மிகுந்த ஆச்சரியத்துடன் "அப்போ எம்.ஜி.ஆர் உங்களைக் கட்டிப்பிடித்து ரொம்ப மரியாதையாக பேசினாரே" என்றான்.
    "அதுதான் #MGR -ரின் பெருந்தன்மை"
    என்றார் தோழர்.
    அந்த வாலிபன்தான் பின்னாளில் ரஜினியை 'எஜமான்' படத்திலும்,
    கமலை 'சிங்காரவேலன்' படத்திலும்,
    விஜயகாந்தை ' சின்ன கவுண்டர் படத்திலும் இயக்கிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.
    நன்றி : Vaidyanathan Krishnamurthi அவர்களின் பதிவிலிருந்து... Thanks Friends...

  10. #1289
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!

    தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே - நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன்!


    'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் போங்க! அதாவது எம்ஜிஆர் மக்கள் மனதிலே இடம் பெற்ற நடிகர், அதற்காக அவர் ஆரம்ப காலத்திலேருந்து வகுத்த இலக்கணங்கள் ரீல் லைஃப்க்கு மட்டுமில்லை, ரியல் லைஃப்க்கும் சேர்த்து தான்.


    படிப்படியா முன்னேறி, தன்னிகரில்லா நடிகர்னு ஒரு முப்பது ஆண்டுகள் தலைசிறந்த நடிகனா ஆட்சி புரிந்து, கடைசி பத்து வருஷம் தமிழக முதல்வரா இருந்து போய் சேர்ந்தாரு! ஆனா அவரு விட்டு போனது எத்தனையோ! கண்ணதாசன் அவருக்குன்னு எழுதனமாதிரி, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சிருக்கும்னு' இன்னைக்கும் அவரு பேரின் ம்ந்திரசக்தி எப்படிங்கிறதை சமீபத்தில திருப்பி ரீலீஸ் பண்ணின 'நாடோடி மன்னன்' படம் பதினாலு வாரங்கள் தொடர்ந்து ஓடினதே சாட்சி! அவ்ர் யானை மாதிரி, இருந்தாலும் ஆயிரம் பொண், இறந்தாலும் ஆயிரம் பொண், ஆயிரத்தில் ஒருவன்!

    சரி உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!

    அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு, அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் மொட்டத்தலை ஷெட்டின்னு ஒரு நடிகர்! இதோ இப்ப இந்த இரண்டு கிளிப்பு, ஒன்னு மனோகரோட, இன்னொன்னு ஜஸ்டினோட! அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!

    அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு, அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!

    அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க! இப்ப இந்த மாதிரி பொருட்காட்சி, தீம் பார்க்குல புடிச்சா அவ்வளவு சுவராசியம் இல்லை,ஏன்னா அந்த காலத்திலே ஜனங்க ஊரை விட்டு வெளியே போகலை, இது மாதிரி படக்காட்சிகளை 'பே'ன்னு விழிபிதுங்க பார்த்தாங்க, ஆனா இப்ப சும்மா நாலு கோடு எழுதப்போறேன்னு உலகத்தை சுத்தி வர்றவங்களுக்கு இதெல்லாம் ஒரு ஆச்சிரியமே இல்லை! முக்காவாசி பேரு பார்த்திருப்பாங்க! மேற்கொண்டு மக்கள் கையிலே காசு பொறள ஆரம்பிச்சிருச்சி, அவங்களே போய் பக்கத்திலே சிங்கப்பூரு, மலேசியா, ஹாங்காங்குன்னு பார்த்துட்டு இந்த அதிசியங்களை பார்த்துட்டு வந்துடறாங்க! அதனாலே தான் இப்ப வெளிநாட்டுல போயி படம் புடிச்ச நம்மூருல் இருக்கிற நெருக்கடியான ரோட்டை காமிக்கிற மாதிரி, 'நியூயார்க் நகரிலே'ன்னு தெருத்தெருவை காமிக்கிறாங்க!

    அப்பறம் இன்னொன்னு நம்ம மக்கள் திலகத்துக்கு எப்பவுமே புதுசா புதுசா, இளசா ஹீரோயின்கள் வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு! கடைசியிலே அந்தம்மாவை தங்கச்சியாக்கிட்டு போயிடுவாரு!





    பச்சைக்கிளி முத்துச்சரம்-

    என்ன புதுசா கெளதம் எடுக்கிற படத்தலைப்பை வச்சு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு பார்க்கிறீங்களா! அதான் இது ரொம்ப நாளா எழுதுனும்னு நினைச்ச பதிவு, பல பாகங்கள்ல வரும்! அதாவது நான் சின்ன வயசிலே ரசிச்சு, ரசிகனா இருந்த எங்கள் தலைவர் எம்ஜியார் பத்தி இது வரை சொல்லவே இல்லியே, என்னோட அரிதாரத் தொடர்ல அப்படியே கொஞ்சம் தொட்டு வச்சேன், நான் அவரோட ரசிகர்னு, ஆனா அதிகமா எழுதலை அதான்!

    இந்த தலைப்பிலே வரும் பாடல், அப்ப ரொம்ப பாப்புலர், 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே நம்ம தலைவர் தாய்லாந்து நடிகையோட ஆடிப்பாடி வரும் கனவுப்பாடல்! இந்த படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்! இந்தப்படம் 70களின் தொடக்கத்திலே வந்த ஒன்னு, எனக்கு தெரிஞ்சு இந்த படம் அப்பே எவ்வளவோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு, என்ன பார்க்கிறீங்க, அப்ப எனக்கு தெரிஞ்சு இந்த படம் திருச்சி பேலஸ் தியோட்டர்ல வெளி வந்து, அந்த தியேட்டர்ல வேலை செஞ்ச, எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு, இந்த படம் ஓடின அத்தனை நாடகளிலேயும் ப்ளாக்ல டிக்கட்டு வித்தே தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த கதை உண்டு! அப்படி பல சாதனைகளை முறியடிச்ச படம்.


    இந்த படம் வந்தப்ப தான் எம்ஜியார் அரசியல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்! இந்த படம் வந்தா நம்ம கட்சி அம்பேல்ன்னு பயத்து நடுங்கின கலைஞரு இந்த படத்தோட நெகடிவ்களை லேபிலேயே கிழிச்சு போட்டு படம் வெளிவரவிடாம தடுக்க பார்க்கிறாருன்னு அப்போ ஒரு வதந்தியே சுத்தி வந்தது. அதைக்கூட நம்ம மணி இருவர் படத்திலே அப்படி இப்படின்னு காமிச்சு கடைசியிலே, ஒரு நடிகனோட புது படம் வெளியாவதை பாத்து பயப்படும் நிலமையிலே நம்ம கட்சியில்லேன்னு சொல்ற மாதிரி ஒரு டைலாக் வச்சு, கலைஞரை நல்லவரா காட்டி இருப்பாரு, ஏன்னா இருவர் படம் வந்தப்ப திமுக ஆட்சியிலே இருந்த நேரம்! ஆனா இது வதந்தியா, இல்லை உண்மையான்னு எனக்கு தெரியாது, ஆனா 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வர்றதுக்கு முன்னே நல்லொதொரு பப்ளிசிட்டி, இதுகூட எம்ஜியாரின் மார்க்கெட்டிங் சாதுர்யம் தான்!

    இந்த மாதிரி அந்த காலத்திலே, சின்ன வயசிலே என்னை அறியாமலே அவர் பால் ஈர்க்கப்பட்டு ரசிகனா இருந்தேன், ஆனா இப்ப அவருடய படங்களை திருப்பி பார்க்கும்போது, அதுக்கு நிஜமாவே நல்ல காரணங்கள் இருந்ததா எனக்குப்படுது! அது எப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு,
    அப்ப எல்லாம் தியோட்டர்கள் படம் பாக்க போன, ஒரு ஆம்பியன்ஸ்(ambience) இருக்கும் பாருங்க, அது என்னமோ இப்ப வீடியோவிலே வீட்டுக்கூடத்திலே பார்க்கிறப்ப கிடைக்காத ஒன்னு, ஏன் மல்டிபிளக்ஸ்ன்னு, பாப்கார்ன்னு, கோக்ன்னு எடுத்துட்டு போய் சீட்டிலே மாட்டிக்கிட்டு என்னமோ சொகுசா படம் பார்த்தாலும் அந்த காலத்துல தியோட்டர்ல படம் பார்த்த சொகுசே தனி தான்! அதாவது ஆறரை மணி ஷோவுக்கு நாலுக்கே போய் க்யூவிலே நின்னு(இந்த க்யூங்கிறது, கதவை திறந்தப்பறம் தான், அதுக்கு முன்னே நீங்க பலசாலியா இருந்து, டிக்கெட்டு சந்துக்குள்ள போகனும், கொஞ்சம் நோஞ்சான்னாலும், நீங்க எம்ஜியார் படம் பார்க்க அட்லீஸ்ட் ஒரு 50 நாளு வெயிட் பண்ணனும், எம்ஜியார் ஸ்டண்ட் மாதிரி தலை மேலே எல்லாம் நடக்க பழகி இருக்கனும்) ,

    அடிதடின்னு கதவை திறந்து டிக்கெட் வாங்க, ஒரு ஆளு போற மாதிரி இருக்கும் சந்துலே போயி, அப்பறம் டிக்கெட் கவுண்டருக்கு வந்து மஞ்சளோ, பச்சையோ, ரோஸ் கலரா ஒரு டிக்கெட்டை கிழிச்சி வாங்கி, தியோட்டர்குள்ள போயி பின்னாடி சீட்டு புடிக்க ஓடி, தூணுகீணு மறைக்காத இடத்திலே உட்கார்ந்து ஆரம்ப நியூஸ் ரீலு, இல்லை இல்லை, அந்த விளம்பர சிலேடுங்கள்லருந்து பார்த்தாதான் திருப்தி, அதுவும் சரியா பேலஸ் தியேட்டர்ல, படம் போடறதுக்கு முன்னே 'திரைப்படம் ஓடும் பொழுது லாகிரிவஸ்துகள் எதுவும் உபயோகிக்க கூடாது'ன்னு ஒரு சிலைடு போட்டப்பறம் தான் படமே, நாங்க அங்க, இங்கே வெளியே நின்னுகிட்டு இருந்தாலும், அந்த சிலைடை பார்த்தோன்ன, டேய் படம் போடப்போறாண்டான்னு அடிச்சு புடிச்சு போய் உட்கார்ந்து பார்த்த காலம் இருக்கே அது பொற்காலம்! ச்சே..இப்பயும் சத்தம் போடமா, அலுங்காம குலுங்காம இந்த மல்டிபிளக்ஸ்ல போயி படம் பார்க்கறதிலே எந்த சுவாரசியமும் இல்லை போங்க! அதே மாதிரி சினிமா கொட்டகையில் விற்கும் கள்ளமிட்டாய், தேங்கா பர்ஃபி, முறுக்கு எல்லாம் நம்ம உட்கார்ந்த இடத்துக்கு கொண்டாந்து வித்து, அதை வாங்கி சாப்பிடும் இன்பமே தனி தான்! இதெல்லாம் இல்லாத ஒர் ஆம்பியன்ஸ்ல பார்த்த எம்ஜியார் படம் படமேயில்லை!

    அப்பறம் படம் ஆரம்பிக்கிறப்ப போடற லோகோ இருக்கே, அதுக்கு பிகிலு தூள் பறக்கும் பாருங்க, எம்ஜியாரே நேரில வந்த மாதிரி! இந்த லோகோவை வச்சு அந்த காலத்திலே கரெக்டா இது இன்னார் கம்பெனின்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவோம்! அதாவது எவிஎம், ஜெமினி, சுஜாதா புரெடெக்ஷன்ஸ், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்!அது மாதிரி எம்ஜியார் பிக்ஸசர்ஸ் லோகோ காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை இந்த வீடியோ கிளிப்புல நீங்க பார்க்கலாம், முதல்ல அந்த உதயசூரியன் பேக்ட்ராப்ல வர்றது அப்படியே மாறி இருக்கும்!அதாவது எம்ஜியார் சொந்தமா எடுத்த படங்கள் மொத்தமே மூணு தான், 'நாடோடி மன்னன்', 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'. ஆனா இந்த மூணுமே வந்தது வெவ்வேற காலகட்டங்கள்ல, அதான் இந்த லோகோவிலே ஒரு ஆணும் பெண்ணும் கொடியை பிடிச்சிக்கிட்டு இருப்பாங்க, முந்தய இரண்டு படங்களையும் திமுக கொடி பறக்கும், மூணாவதா வந்த 'உலகம் சுற்றும் வாலிபன்'ல அதிமுக கொடியிலே அண்ணா படத்தோட பறக்கும்! அதாவது அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தியதை லோகாவிலேயே கண்டுணரலாம்!

    அப்பறம் வழக்கமா சீர்காழி கோவிந்தராஜன் பாட்டோட, 'வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்'ன்னு டைட்டில் கார்டு ஆரம்பிக்கும் பாருங்க! பாட்டை கேட்கிறப்பவே நமக்கு ஒரு வேகம் பிறக்கும்! அது எம்ஜியாருக்கு மட்டுமே பிரத்தியோகமான ஒன்னு! இந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே அந்த காலத்திலேயே விஞ்ஞானம், மின்னல் சக்தி, ஜப்பான்ல இருக்கிற 'க்யோட்டோ' என்ற இடம் அப்படின்னு போகும்! (இந்த க்யோட்டாங்கிற இடத்தை பத்தின விஷயம் என்னான்னு உங்களுக்கு ஒரு க்விஸ், கரெக்டா பின்னோட்டத்திலே எழுதுங்க பார்க்கலாம்!) அதுவும் நாட்டின் தலைவர்களின் போட்டேவோட, விஞ்ஞானத்தை கையிலே எடுத்து அது அழிவுப் பாதைக்கு உபயோகப் படுத்தக் கூடாது, ஆக்கப் பணிகளுக்கு தான் உபயோகப் படுத்தனும்னு உபதேசத்தோட படம் ஆரம்பமாகும்! அப்பறம் எம்ஜியார் ஒரு விஞ்ஞானி(அவரு மட்டுமில்லை, அசோகன் , அப்பறம் மத்த விஞ்ஞானிங்க எல்லாம் ஒர் ஸ்ட்ரேஞ்சா தாடி வச்சிருப்பாங்க, நம்ம துபாய் ஷேக்குங்க மாதிரி, பார்க்க தமாஷா இருக்கும், விஞ்ஞானிக்கு எவ்வளவு சிம்பளா கெட்டப்பு பாருங்க, இப்ப கெட்டப்ப மாத்திக்கவே ரொம்ப கஷ்டபடறாங்க சில நடிகர்கள்!)

    மின்னலின் சக்தியை ஒரு தோட்டக்குள்ள அடக்கி வச்சி, அந்த சக்தியை எப்படி கட்டுபடுத்திட்டேன்னு சுட்டு காமிச்சு காடுகளை எரிச்சு காமிடி பண்ணி இருப்பாரு! முதல்ல காமடியா தான் தெரிஞ்சுது, அப்பறம் சீரியசா இணையத்திலே தேடினா, ஆமா அப்படி ஒரு முயற்சி செஞ்சிருக்காங்கன்னும், அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லைன்னும் தெரியவருது! ஆனா அந்த இடி, மின்னல்லருந்து வரும் மின்சாரத்தின் அளவை கையாள நமக்கு எவ்வளவு பெரிய மின்தடை(Insulation) வேணும் தெரியுமா? சொன்னா ஆச்சிரியப்படுவீங்க , இப்ப இருக்கும் பீங்கான் போன்ற பொருட்களின் தடிமன் ஏழு கிமீ இருந்தா தான் அதை கையாள முடியும், 'Insulation'ஐ விடுங்க, அதை கையாள தேவையான மின்கடத்துவான்(Conductor), அதை விட அதிகம். ஆனா படத்திலே எம்ஜியார் சொல்லுவாரு ஒரு சின்ன சதவீதத்தை தான் சேமிச்சேன், அதுக்கே என்ன பலம் பாருங்கன்னு, லதாவை வுட்டு சுட்டு காமிப்பாரு! இதோ வீடியோ கிளிப்பு பாருங்க! ஆனா இந்த மின்னல்லிருந்து சேமிக்கும் சக்தி பத்தி படிக்கனும்னா இதோ சுட்டி!

    அப்புறம் அண்ணன் எம்ஜியார் விஞ்ஞானி, தம்பி துப்பறியும் போலீஸ் அதிகாரி, இதுல எம்ஜியாருக்கு மூணு ஜோடி, மஞ்சுளா, லதா, சந்திரகலா! இளமையா எல்லா பாடல்களுக்கும் துள்ளலோட நம்ம எம்எஸ்வி ம்யூசிக் போட்டிருப்பார்!

    முதல்ல அண்ணன் எம்ஜியாருக்கு மஞ்சுளா ஃபியான்ஸி, அவங்களை கூட்டிக்கிட்டு முதல்ல நம்ம தலைவர் போற இடம் ஹாங்காங்!அதாவது இந்த பாட்ல வர்ற கிளிப்பு பாருங்க, விக்டோரியா பீக்லருந்து ட்ராம்ல வர்ற மாதிரி! இதை நான் 92ல முதமுதல்ல போயி ஏறி பார்த்தப்ப நிஜமாலுமே இந்த படம் ஞாபகம் தான் வந்துச்சு, இங்கேருந்து சுத்துபட்டு கிராமம் எல்லாம் தெரியுதுன்னு சொல்றமாதிரி எல்லா தீவுகளும் தெரியும்! அது மாதிரி 'கோவலூன்' சொல்ற தீபகற்ப பூமி நல்லா தெரியும்! அப்படி ட்ராம்ல ஏறி மஞ்சுளா ஆன்ட்டியோட ஹனிமூன் ட்ரிப்பு போற மாதிரி போயி, அப்பறம் இந்த பக்கம் ஹிமாச்சல் வந்து 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்'ன்னு கொண்டாட்டம் போட்டா நமக்கு அப்படி கொண்டாட்டம் போடனும்னு தோணுமா தோணாதா?


    இந்த படம் தான் பின்னாடி எல்லாரும் வெளிநாடு போய் படம் புடிக்க பாலபாடம் சொல்லி கொடுத்தது!நம்ம எம்ஜியாரு ஸ்டைல்ல தான் அப்புறம் போன ரஜினியும் செஞ்சாரு! அதுமட்டுமில்லை எல்லா பாடல் காட்சிகளும், படமாக்கப்பட்ட விதமும் மனசை அப்படியே அள்ளூம்! மூணு கதாநாயகி, எல்லாமே காதல் பாடல்கள்னு போய்ட்டா கொள்கைப்பாடல்களுக்கு என்ன பண்றது, அதுக்குத்தான் 'சிரித்து வாழவேண்டும்' பாட்டு! இன்னும் இதை பத்தி நிறைய சொல்ல வேண்டியிருக்கு! எழுதுனா பதிவு நீளமாயிடும்,

    COURTESY NET

  11. #1290
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Ulagam Sutrum Vaaliban (1973)

    This film, starring MGR, is one of the biggest box-office hits in the history of Tamil cinema and ran for 25 weeks, not only in India, but also in places like Sri Lanka, U.S, Canada and the United Kingdom. Assisted by Pa. Neelakantan, the film was directed by M. G. Ramachandran himself for his family firm MGR Pictures Private Limited.

    This commercial entertainer had several songs and dance numbers featuring both classical Indian and western styles. It also had many fight sequences that were shot abroad in the Far East, with the highlight being the climax which was set in Japan.

    Written by R.M. Veerappan, Vidwan Ve. Lakshmanan and S.K.T. Sami, the film had dialogues by K. Sornam.

    The story is about Indian scientist Murugan (MGR), who has recently discovered how to store a part of the energy unleashed by lightnings, and reports this in theHong Kong scientists conference. He subsequently announces that he would not reveal his discovery, as the world is on the brink of World War III and his research may be used for destructive purposes.

    Scientist Bairavan (S.A. Asokan) accuses Murugan of false claims. Murugan then conducts a demonstration, and at the end of it, destroys the vital research notes, which upsets all the scientists. Bairavan tries to negotiate with him to sell the research to a foreign country, but Murugan refuses.

    Murugan then departs with his girlfriend, Vimala (Manjula) on a world tour. He discloses to Vimala that he only pretended to destroy the research notes, and that he has kept them in a safe place. He has plans of using them further, so that his research is used for productive purposes. Bairavan, who has been following them, overhears this, and plans to steal the research notes.

    While in Singapore, Bairavan shoots Murugan but he does not die. Murugan, however, suffers from a mental disorder as a result and is subsequently taken into Bairavans custody.

    Soon, Vimala too is abducted by Bairavan, who expects the former to cure Murugan, so he can steal the research documents.

    Raju (MGR), a CBCID officer and Murugans younger brother, arrives in Singapore in search of his brother. Here, he meets a classic dancer (Chandrakala), who soon falls in love with him.

    The secret research documents are hidden in a locket; all the villains go after it, but nobody succeeds. Two guys (Asokan and Gopalakrishnan) even try to kill MGR with their own brand of weapons, but are finally killed by the same arms.

    The films melodious music, composed by maestro M.S. Viswanathan (aided by Joseph Krishnas orchestration), was a major highlight. There are as many as 15 songs, with many of them not finding a place in the movie. The lyrics were written by Kannadasan, Vaali, Pulavar Vedha and Pulamaipithan. The songs were rendered by S. P. Balasubrahmanyam, K. J. Yesudas, Sirgazhi Govindarajan, P. Susheela, S. Janaki, L. R. Eswari and some unnamed Japanese singers.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •