Page 259 of 401 FirstFirst ... 159209249257258259260261269309359 ... LastLast
Results 2,581 to 2,590 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2581
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலையுலகில் தனிப்பெரும் கதாநாயகன் தன்னுடைய இயல்பான இயற்கையின் பிரதிபலிப்பு மூலம் வெள்ளித்திரையில் 1936 முதல் 1977 வரை நடிகப்பேரரசு எம்.ஜி.ஆர்.அவர்கள் பவனி வந்த காவியங்கள் (தமிழில் மட்டும் வெளியான) 134. ஆகும். இதில் மக்கள் திலகம் கதாநாயகனாக தனிபெரும் நாயகனாக பவனி வந்த படைப்புகள் 115 மட்டுமே! வேறு எந்த முதல் நடிகரையும் துணை கொண்டு நடிக்காது தான் கதாநாயகனாக பவனி வந்த 115 திரைப்படங்களில் சுமார் 70 திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடி மகத்தான வெற்றியை பதித்துள்ளது. இது 80.05 சதவீகித வெற்றியாகும். அது மட்டும்மல்ல மற்ற திரைப்படங்கள் முதல் வெளியீட்டில் 50.முதல் 80 சதவீகித வெற்றியையும், தொடர்ந்து எந்த நடிகரின் வெற்றிப்படங்களும் தராத மகத்தான வசூலை, நாட்களை இடைவிடாது திரையிடப்பட்டு என்றும் வெற்றியை பதிப்பது உலகத்திரையில் புரட்சித்தலைவரின் காவியங்கள் மட்டுமே! நடிகர் சிவாஜி கணேசன் திரைப்படங்கள் பல முன்னனி நடிகரை இணைத்துக்கொண்டு குத்தகை திரையரங்கில் 100 நாள் ஓட்டப்பட்டவைகளாகும்.
    1952 முதல் 1977 வரை தலைவர் தமிழ்திரையில் பவனி
    வந்த ஆண்டு வரை நடிகர் சி. கணேசன் நடித்த படங்கள் 193. இதில் கதாநாயகன் மற்ற நடிகர் கதாநாயகன் 2ம் பட்ச கதாநாயகன் பக்தி படங்கள் நடிகையர் திலகம் நடிகை ,ஜெமினி, எஸ் எஸ் ஆர் ,;முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என. ஒரு பெரிய லிஸ்ட் உள்ளது. அதுமட்டுமல்ல முதல் வெளியீட்டில் ஓடிய படங்கள் அதன் பின் எத்தனை வெளியீடுகளை சந்தித்துள்ளது. தலைவரின் ஓரே திரைக்காவியம் நாடோடி மன்னன் மற்ற நடிகரின் 100 படங்களுக்கு சமமாகும். அன்றும் இன்றும் என்றும் இந்தியப்படயுலகை வெள்ளித்திரை மூலம் தன் சாகாவரம் பெற்ற காவியங்களை நிலை நிறுத்தி வெற்றி காண்பவர் கலைத்தாயின் ஒரே ஓப்பற்ற மகன் மக்கள்திலகம் அவர்கள் ஒருவரே! காலம் கடந்தாலும் எல்லோர் மனதிலும் நிறைவை தரும் காவியங்கள் பொன்மனச்செம்மலின் ஒழுக்கமிகு காவிங்களே! மேலும் நடிகர் சி. கணேசன் படங்கள் ஓடியதாக கதை அளக்கும் ரசிகர்கள் பதிவிடும் போலிகளுக்கு உண்மையை மேலும் சொல்ல தவறமாட்டோம்!.தலைவரின் வெற்றியை சொல்லி பொய்யர்களின் மூகமுடியை கிழித்தெறிவோம். பொய்யாட்டம் பித்தலாட்டம் முள்ளமாறித்தனம் யாவையும் எங்கள்சிவாஜி என்ற பத்திரிக்கை மூலம் ஆசிரியாராக இருந்த நடத்திய ஆசாமியின் அவலங்களை வெட்ட வெளிச்சம் போட்டு முறியடிப்போம்! நமது தலைவரின் திரையுலக வெற்றிகளை உரிமைக்குரல் மூலம் ஒலிக்கச்செய்வோம். என்றும் வள்ளலின் வழியில் ........ உரிமைக்குரல் பி.எஸ். ராஜு..... Thanks Friends Group (s)...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2582
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி திருவெறும்பூர் சாந்தி dts வெற்றி நடை போடுகிறது... கலையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "அடிமைப்பெண்" காவியம்...

  4. #2583
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    2014 செப்டம்பர் 20 ஜூனியர் விகடன் கேள்வி பதில்
    நடிகர் மோகனை கதாநாயகனாக வைத்து கிருஷ்ணன் வந்தான் என்ற
    படத்தை தயாரித்து படம் பணம் இல்லாமல் பாதியில் நின்றது. தேங்காய் சீனிவாசனுக்கு புரட்சித் தலைவர் தான் பணம் கொடுத்தார். படம் வெளியாகி நஷ்டம் பெற்றது. அப்பவும் பின்னர் தேங்காய் சீனிவாசனுக்கு பணம் கொடுத்தார். தேங்காய் சீனிவாசன் இறந்தபிறகும் அவர் குடும்பத்த்துக்கு பணம் கொடுத்தார்.

    கிருஷ்ணன் வந்தான் படத்திலே மோகன் கதாநாயகன். அதை ஜூனியர் விகடனில் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் சிவாஜி கணேசன் மார்க்கெட் போனபிறகு துணை நடிகராக நடித்துள்ளார்.

    நன்றி - பாலசுப்பிரமணியன் முகா நூல்

  5. #2584
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2585
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2586
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

    எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4

    இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

    எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

    அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

    இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டோந்தது. விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

    குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

    ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

    1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.
    புரட்சித் தலைவர் பக்தர்கள்...

  8. #2587
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய ம*திய வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

    ஆர்.ஆர். பிக்ச*ர்ஸ் அதிப*ரும், "ப*ணம் ப*டைத்தவ*ன் " ப*ட இய*க்குன*ருமான டி.ஆர்.ராம*ண்ணா மக்கள் திலகத்துட*ன் உள்ள காட்சி! இப்ப*ட*த்தில் 'ப*வ*ழக்கொடியிலே முத்துக்க*ள் பூத்தால் ..என்ற* பாட*லில் ஷாஜ*கான் வேட*த்தில் தோன்றுவார். அந்த*க்காலத்திலேயே தாஜ்மஹால் செட்டை மினியேச்ச*ர் மூலமும் நிறுவி இப்பாட*லில் ப*ய*ன்ப*டுத்தியிருப்பார்.

    மேலும் ப*ணக்கார குடும்ப*ம் என்ற* த*லைவ*ர் ப*ட*த்தில் ச*ரோஜாதேவி த*ன் தோழிக*ளுட*ன் பாடிக்கொண்டே ஆடும் வாடியம்மா வாடி என்ற* பாட*ல், டென்னிஸ் ஆடிக்கொண்டே எம்ஜிஆர், ச*ரோஜாதேவி பாடும் "ப*ற*க்கும் ப*ந்து ப*ற*க்கும்" என்ற* பாட*ல், ம*ழை நேர*த்தில் மாட்டுவ*ண்டியின் கீழே அம*ர்ந்துகொண்டு "இதுவரை நீங்க*ள் பார்த்த* பார்வை" என்ற* பாட*ல் என புதுமைக*ளை செய்யும் சக*லகலா வ*ல்ல*வ*ர் டி.ஆர்.ராமண்ணா. இவ*ர் த*லைவ*ரை வைத்து புதுமைப்பித்த*ன், குலேப*காவ*லி, ப*ணக்காரக் குடும்ப*ம், பாச*ம், கொடுத்து வைத்த*வ*ள், ப*ணம் ப*டைத்த*வ*ன், பெரிய இட*த்துப் பெண், ப*ற*க்கும் பாவை ஆகிய வெற்றிப்ப*ட*ங்க*ளையும் இய*க்கியுள்ளார்.

    சிவாஜி ந*டித்த* காத்த*வ*ராயன் ப*ட*ம் முத*லில் எம்ஜிஆரே ந*டிப்ப*தாக இருந்த*து. க*தைப்ப*டி அதில் ம*ந்திர*க்காட்சிக*ள் எல்லாம் இடம் பெறும். எம்ஜிஆர் ந*டிக்கும் முத*ல் காட்சியே ம*ந்திரவேலை செய்யும் பாலையாவை த*ன*து ம*ந்திர*த்திற*மையால் எம்ஜிஆர் முறிய*டிப்ப*து போன்ற காட்சி. எம்ஜிஆர், ராமண்ணாவிட*ம் அறிவால் மந்திர*வாதியை வெல்வ*து போல் காட்சி வைக்க*லாம் என்றார். அது க*தைப்போக்கையே மாற்றிவிடும். மேலும் மற்றொரு காட்சியில் கிளி உருவ*த்தில் மாறி க*தாநாய*கி அறைக்கு சென்று மீண்டும் ம*னித உருவில் மாறும் காட்சியும் உண்டு என இய*க்குன*ர் கூற எம்ஜிஆர், நான் இந்த* ஆட்ட*த்திற்கு வ*ர*வில்லை என்று சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். பின்னர் அதே ப*ட*ம் சிவாஜி, சாவித்திரியைக் கொண்டு ராமண்ணா த*யாரித்தார்... Thanks Friends...

  9. #2588
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

    எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 3

    எம்.ஜி.ஆர் எல்லாவற்றிலும் குறுக்கீடு செய்கிறார். அதிக செலவு வைக்கிறார் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் எழுந்த குறைபாட்டுக்கு பதில் சொல்வதற்காகவே நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்திற்காகவே வாகினி ஸ்டுடியோவில் உணவுக்கூடம் (மெஸ்) ஒன்றை திறந்தார் எம்.ஜி.ஆர். அதற்கான செலவில் ஒரு படமே எடுத்திருக்கலாம் என்கிறார்கள் இன்றைக்கும். படம் வெற்றி பெற்றால் எம்.ஜி.ஆர். மன்னன், இல்லையென்றால் அவர் நாடோடி என்று திரையுலகில் பரவலாகவே பேசினார்கள். அந்த அளவுக்கு எம்.ஜி,ஆர் கடன் வாங்கி படத்தை தயாரித்து கொண்டிருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    தமிழ்ப்படங்களுக்கு ஒரு திறமைமிக்க சிறந்த டைரக்டர் நாடோடி மன்னன் மூலம் கிடைத்திருக்கிறார் என்று பெரும்பாலான பத்திரிகைகள் எழுதியிருந்தன. திருடாதே எம்.ஜி.ஆர். சரித்திர படங்களில் வெறும் கத்திச் சண்டை போடத்தான் லாயக்கு. சமூக படங்களுக்கு அவர் பொறுந்த மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டதற்கு திருடாதே ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த படத்தின் வெற்றி எம்.ஜி.ஆருக்கே ஒரு நம்பிக்கையாக அமைந்தது. தன்னாலும் சமூகப் படங்களில் நடிக்க முடியுமென்று. தாய் சொல்லைத் தட்டாதே எம்.ஜி.ஆர் சமூகப் படங்களில் வெற்றிகரமாக இயங்க முடியுமென்பதற்கு உறுதியான அஸ்திவாரம் அமைத்துத் தந்த படம் இது.

    தாயார் மீது தனக்குள்ள பற்றுதலை அவர் வெளிப்படுத்த துவங்கிய படமும் இதுதான். பாசம் தன் அழகு முகத்தை எம்.ஜி.ஆர் கருப்பாக்கிக் கொண்டு வித்தியாசமாக நடித்த படம் பாசம். என்றாலும் படத்தின் முடிவில் அவர் இறந்து போவதாக நடித்ததால் படத்தின் வெற்றிக்கு பாதிப்பானது. இருந்தாலும் எம்.ஜி.ஆரை ஒரு நல்ல நடிகராக அடையாளம் காட்டும் படங்களில் இதுவும் ஒன்று. தெய்வத்தாய் ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ§க்கு முதல் படம் இது. மொழிமாற்றுப் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளவற்றில் எம்.ஜி.ஆர் நடிக்க அரம்பித்ததற்கு தெய்வத்தாய் படம் பெற்ற வெற்றியும் ஒரு காரணம்.

    தெய்வத்தாய் வங்காள மொழிப் படமொன்றின் தழுவலாகும். படகோட்டி படத்தின் குளுகுளு வண்ணமும், எம்.ஜி.ஆரின் அழகும் இனிய பாடல் காட்சிகளும் படத்தின் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் ரசிகர்களை பெருவாரியாக ஈர்த்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி பட இயக்குநர்களையும் கவர ஆரம்பித்தது இந்த படத்திலிருந்துதான். கருப்பு-சிவப்பு ஆடைகளை அணிந்து தான் சார்ந்த கட்சிக்கும் எம்.ஜி.ஆர். விளம்பரம் தேடித் தந்தார். எங்க வீட்டுப்பிள்ளை தமிழ் திரைப்படங்களில் அதிக திரையரங்குகளில் வெற்றி விழா கண்ட முதல் படம் இது. எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் கொண்டு சென்ற படம் எங்க வீட்டுப்பிள்ளை.

    ஹவுஸ் ஃபுல், தியேட்டர் ஃபுல், அரங்கம் நிறைந்துவிட்டது என்று தினத்தந்தியில் இதே வாசகங்களையே முழு பக்கத்திலும் வித்தியாசமான விளம்பரமாக வெளியிட்டிருந்தார்கள். ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தை இந்த படத்திற்கு பின் பிரபலமாகிவிட்டது. எம்.ஜி.ஆர் கட்சி வேறுபாடின்றி ரசிகர்களால் நேசிக்கப்படுவதற்கும், அவருக்கு புதிய ரசிகர்கள் உருவாவதற்கும் எங்க வீட்டுப் பிள்ளையும், அதில் அவரது மாறுபட்ட இரட்டை வேட நடிப்பும் துணை போட்டோந்தது. இந்தப் படத்திற்குப் பின் வெளிவந்த அவரது வெற்றிப் படங்களெல்லாம் வசூலில் பிரமிக்கும்படியாக இருந்தன. அவரது தோல்வி படங்கள்கூட வசூலில் தோல்வியுற்றதில்லை.

    சிவாஜியைக் கொண்டு அதிக படங்களைத் தயாரித்த பி.ஆர்.பந்துலு, எம்.ஜி.ஆரைக் கொண்டு ஆயிரத்தில் ஒருவன் தயாரித்த முதல் படம் என்பதாலும், எம்.ஜி.ஆருடன் (புதுமுகம்) ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படமென்பதாலும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வெற்றி கண்டது. இதன் அடுத்தடுத்த வெளியீடுகளிலும் புதுப்படம் அளவுக்கு ரசிகர் கூட்டம் திரண்டது. அன்பே வா ஏ.வி.எம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரே படம் என்பதோடு, இது ஏவி.எம்.முக்கு முதல் தமிழ் வண்ணப்படமும் கூட.... Thanks Friends...

  10. #2589
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    ஒரு வரலாற்றின் வரலாறு – புரட்சித்தலைவர்

    எம்.ஜி.ஆரைப் பற்றிய தொடர் – 4

    இந்தப் படத்தில் நடித்தது பற்றி முதல்வர் ஜெயலலிதா, 25 வருடங்களக்கு முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார். முகராசி படம் போல இதுவரை அவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு தமிழ்படம், அதுவும் எம்.ஜி.ஆர் நடித்த படம் வேறெதுவும் தயாரானதாக எனக்குத் தெரியவில்லை. முகராசிக்காக இரவும் பகலும் விடாமல் படப்பிடிப்பு. சிறிது இடைவெளி மீண்டும் இரவு தொடரும். விடியற்காலை நாலு மணிவரை கூட நடித்திருக்கிறோம். இரவு வீடு திரும்பினால் ஒரு மணிநேரம்தான் ஓய்வு இருக்கும். உடனே காலையில் மேக்கப் போட்டுக் கொண்டு சீக்கிரமே ஸ்டுடியோவுக்கு செல்வேன்.

    எனக்கு முன்பே எம்.ஜி.ஆரும் வந்திருப்பார். எனக்காவது படப்பிடிப்பு ஒன்றுதான். ஆனால் எம்.ஜி.ஆர் தீவிரமான அரசியல் தொடர்புடன் படப்பிடிப்பிலும் இரவு, பகல் பாராமல் சோர்வோ, தளர்ச்சியோ காட்டாமல் நடித்ததை ஓர் இமாலய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்து அடுத்த நாள் டிப்பிங், ரீ-ரிக்கார்டிங் ஆக பன்னிரெண்டே நாட்கள்தான். ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர படம் (இதில் ஜெமினி கணேசன் எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடித்தார்) வெற்றிப் படம். பெற்றால்தான் பிள்ளையா தி கிட் என்ற சார்லி சாப்ளின் நடித்த ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமான இதில் எம்.ஜி.ஆரின் நடை உடை பாவனை எல்லாமே வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்தன. எம்.ஜி.ஆரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய இந்தப் படத்தில் அவர் ஒரேயரு சண்டைக் காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.

    அதையும் மீறி படத்தின் கதையம்சம் வலுவாக இருந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குரிய வழக்கமான அம்சங்கள் இதில் இல்லாவிட்டாலும் படம் வெற்றி பெற்றது. இந்த படத்திற்காகத்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நிகழ்ந்தது. காவல்காரன் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன் ஒரு பகுதி வளர்ந்திருந்த இந்த படம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் குணமாகி மீண்டும் நடிக்க ஆரம்பித்தபோது பழைய குரல் வளமில்லை. ஆனாலும் அவர் சத்யா ஸ்டுடியோவின் ஒரு தளத்தில் மைக் சாதனங்களைக் கொண்டு வந்து தினமும் உரக்கப் பேசி பயிற்சி எடுத்துக் கொண்டதால் ஓரளவு பேச முடிந்தது.

    இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் அண்ணா கலந்து கொண்டு போட்டோசுகள் வழங்கிப் பாராட்டி பேசினார். ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜேம்ஸ்பாண்டு வேடத்தில் நடித்ததோடு, அவரது நகைச்சுவை நடிப்பும், சுறுசுறுப்பான சண்டைக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கு துணை போட்டது.... விதவிதமான உடையலங்காரத்தில் எம்.ஜி.ஆர் அழகுபட வந்தார்.

    குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆரின் இரட்டை வேட நடிப்பு சிறப்புக்கு இந்த படமும் ஒரு உதாரணம். இரட்டை வேடமென்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்ற கருத்தை குடியிருந்த கோயில் வலுவாக்கியது. ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற பாடலில் எம்.ஜி.ஆர் பஞ்சாபியைப் போல் பாங்ரா நடனம் ஆடியிருப்பார், அதுவும் எல்.விஜயலஷ்மியுடன். இதற்குபின் வேறு சில முன்னணி நடிகர்களும் இதேபோல் ஆடிப் பார்த்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்கு முடியவில்லை.

    ஒளி விளக்கு எஸ்.எஸ்.வாசனின் முதல் படம் சதிலீலாவதி எம்.ஜி.ஆருக்கும் முதல் படம். எம்.ஜி.ஆரின் 100-வது படமான ஒளி விளக்கு படத்தினை தயாரித்தவரும் எஸ்.எஸ்.வாசனே. வாசனின் ஜெமினி நிறுவனத்திற்கு இது முதல் தமிழ் வண்ணப்படமாகும். பூல் அவுர் பத்தர் என்ற இந்திப் படத்தினை தழுவி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற, ஆண்டவனே, உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன் என்ற பாடல் படத்தில் கதையின்படி உயிருக்காகப் போராடும் எம்.ஜி.ஆர். குணமடைய வேண்டி சௌகார் ஜானகி பாடுவது போல் அமைந்திருந்தது.

    1984-ல் எம்.ஜி.ஆர். சுகவீனமற்று அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது, அவர் குணமடைய வேண்டி நடத்தப்பட்ட பிரார்த்தனைகளில் ஒளி விளக்கு படத்தில் இடம் பெற்ற இதே பாடல் தமிழகத்தின் எல்லா திரையரங்குகளிலும் காட்டப்பட்டது. எம்.ஜி.ஆர் படமே திரையிடப்படாத சிவாஜிக்கு சொந்தமான சாந்தி தியேட்டரிலும் இந்த பாடல் காட்டப்பட்டது. அடிமைப்பெண் ஜெயலலிதாவை முதன்முதலாக எம்.ஜி.ஆர் இதில் சொந்த குரலில் பாட வைத்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதற்குமுன் வேறு படங்களில் பாடியிருந்தாலும், அவர் புகழ் பெற்றது இந்த படத்திலிருந்ததுதான். இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர் சென்று திரும்பியபோதுதான் புஷ் குல்லாவோடு வந்தார். அதிலிருந்ததுதான் குல்லா அணியும் வழக்கம் ஏற்பட்டது. நாடோடி மன்னன் போல் அடிமைப் பெண்ணையும் எம்.ஜி.ஆர் சிங்கத்தோடு மோதும் எடிட் செய்யப்படாத மொத்தக் காட்சிகளையும் பார்த்த காலஞ்சென்ற இந்திப்பட இயக்குநர், நடிகர் ராஜ்கபூர் பிரமித்துப் போய், தொழில்நுட்பத்தில் உங்கள் அறிவுக்கு முன் நானெல்லாம் சாதாரணம் என்று பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.
    புரட்சித் தலைவர் பக்தர்கள்...

  11. #2590
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம் ஜி ராமச்சந்திரனாகிய நான்
    ------------------------------------------------------------
    மதுரை பேருந்து நிலையத்தின் அருகே
    #OLA ஆட்டோவிற்கு பதிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.

    சிறிது நேரத்திற்கெல்லாம் இந்த ஓட்டுநர் வந்து நின்றார். ஏறுவதற்கு முன்பாக..

    ’ஐயா. சற்று இருங்கள். #குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், பாக்கு போடும் பழக்கம் ஏதேனும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்படி இருந்தால் என் ஆட்டோவில் ஏற்ற மாட்டேன். மன்னிக்க வேண்டும். நானே கேன்ஸல் செய்துவிடுகிறேன்” என்றுகூறி ஏற இறங்க பார்த்தார். அதே நேரத்தில் கனிவுடன்.

    ‘இந்த மனிதருக்கு என்ன கிறுக்குப் பிடித்திருக்கிறதா’ என்று பார்த்துக்கொண்டே, எனக்கு அந்த பழக்கம் ஏதுமில்லைங்க ஐயா என்றபடியே ஏறி அமர்ந்தேன்.

    அமைதியாகவே ஓட்டிச் சென்றார். எனக்கு இருப்புக்கொள்ளவில்லை. ’ஏன் அப்படி கேட்டீர்கள். ஒரு வேளை நான் குடிகாரராக, புகைப் பிடிப்பவராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்றேன்.

    வேண்டாம் என போயிருப்பேன் ஐயா என்றார்.

    அப்படி செய்வது உங்கள் #தொழிலுக்கு பாதிப்பில்லையா? #வருவாய் இழப்புதானே என்றேன்.

    ஆமாம். இழப்புதான்.ஆனாலும் பரவாயில்லை. எனக்கொரு மனத்திருப்தி இருக்குமல்லவா. அதான் சார் வாழ்க்கை என்றார். நச்சென்றிருந்தது!

    வித்தியாசமான மனிதர். விடக்கூடாது என்று பேச்சுகொடுத்ததில்…

    பெயர் #எம்.ஜி.இராமச்சந்திரன். அப்பா தி.மு.க.வில் முக்கிய உழைப்பாளி. எம்.ஜி.ஆர் ரசிகர். ஒரு கூட்டத்திற்காக எம்.ஜி.ஆர். மதுரை வந்திருந்தபோதுதான் நான் பிறந்திருக்கின்றேன். என் அப்பா தூக்கிக்கொண்டு போய், ’நீங்கதான் #தலைவா பேர் வச்சாக வேண்டும் என கொடுத்திருக்கின்றார். அப்பாவை அவருக்கு நன்றாகவே தெரியும்.

    என்ன பெயர் வைக்கலாம் என்று அப்பாவிடமே கேட்டிருக்கிறார்.
    உங்க பேரையே வைங்க தலைவா. அதான் எம்புள்ளைக்கு வேண்டும் என்று கூறியிருக்கின்றார்
    .
    ஐய்யய்யோ..வேண்டாம்பா. என்னைய மாதிரி இவன் கஷ்டப்படக்கூடாது. நான் பட்ட கஷ்டமெல்லாம் உங்களுக்கு என்னன்னு தெரியாது. எம் பேரை வைச்சா, என்னை மாதிரியே கஷ்டப்படனும். வேண்டாம். வேறு பெயரை வைக்கின்றேன் என கூறியிருக்கின்றார்.

    என் அப்பா பிடிவாதமா மறுத்துவிட்டார்.

    பிறகு, #முதலும் கடைசியுமா என் பெயரை உன் பையனுக்கு வைக்கின்றேன். இனி யாருக்குமே என் பெயரை வைக்க மாட்டேன் என்று கூறியபடியே என்னை இரு கரங்களிலும் ஏந்தி, ‘எம்.ஜி. ராமச்சந்திரா’ என்று கூப்பிட்டிருக்கிறார்.

    அதன் பிறகு தலைவரோட வாழ்நாளில் எத்தனையோ ஆயிரம் குழைந்தைகளுக்கு #பெயர் வைத்திருக்கிறார். ஆனால் #MGR என்ற அவர் பெயரையே யாருக்கும் அவர் வைத்ததில்லை. அதைச் சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டதாலோ என்னவோ நான் எனக்குன்னு ஒரு நியதிய வச்சுகிட்டேன்.
    அறிந்து யாருக்கும் கெடுதல் செய்ததில்லை.

    #அரசு பேருந்து ஓட்டுனராக இருந்து ஓய்வும் பெற்றுவிட்டேன். பிள்ளைகளை கட்டிக்கொடுத்துவிட்டேன். தனியார் டிராவல்ஸில் ஓட்டுனராக இருந்தேன். என் கட்டுப்பாட்டாலேயே பல சங்கடங்கள் நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றேன். ஆனாலும் என்னை தவிர்க்க விரும்பாத வாடிக்கையாளர்கள் பலரும் இருக்கிறார்கள்.

    #இப்போது சொந்தமாக ஆட்டோ வாங்கி OLA-வில் ஓட்டிக்கொண்டிருக்கின்றேன். ஆனாலும் எனக்கான ரெகுலர் கஷ்டமர்கள் அழைத்தால் அவர்களுக்கு தவறாமல் சென்று வருவேன். ஒரு பிரச்சனையும் இல்லை. வாழ்க்கை நல்லபடியாதான் போய்கிட்டு இருக்கு.

    என்ன ஒரு கவலை என்றால் #குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. புகைப்பவர்களும் அப்படித்தான். நிறைய பாக்கு பொட்டலம் போடுவதும் அதிகரித்திருக்கிறது. நானும் முன்ன புகைபிடிச்சுட்டு இருந்தேன்தான். அதனால் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனால் மனம் நோக சொல்ல மாட்டேன். அப்படியானவர்கள் சவாரிக்கு வந்தால் வேண்டாம் என பொறுமையாகவே மறுத்து விடுவேன்.

    இப்படி மறுப்பதை அவர்கள் எப்பாவது நினைத்து பார்த்தால்கூட போதும். அந்த பழக்கத்தை விட்டுவிட வாய்ப்பிருக்கும். அது போதும் எனக்கு” என்று பேசிக்கொண்டே வந்தார்.

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படியும் ஒரு வித்தியாச மனிதர்..!!

    #காலம் எப்படி மாறி கிடக்கின்றது பார்த்தீர்களா. அந்த #தலைவன் வழி வந்தவர்கள் ஆட்சிதான் இப்போது ‘குடி விற்பனையை’ பெருக்க வேண்டும் என திட்டம் போட்டு மக்களை குடிகாரர்களாக்கிக் கொண்டிருக்கின்றது-பா. ஏகலைவன்... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •