Page 178 of 401 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1771
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்று வெள்ளி விழா கொண்டாடின. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் 'ராஜகுமாரி' (1947). அதன் பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். என்றாலும் அவருடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி வசூல் மன்னன் என்ற பெயரை வாங்கித்தந்த படம் 'மலைக்கள்ளன்'.

    கோவை பட்சிராஜா ஸ்டூடியோவில், ஸ்ரீராமுலு நாயுடு டைரக்ஷனில் உருவான இப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பானுமதி. 22-7-1954-ல் வெளிவந்த இந்தப்படம், மகத்தான வெற்றி பெற்று, வசூலைக் குவித்தது. எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடிப்பதற்கு, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.

    எனவே 'மதுரை வீரன்', 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்', 'தாய்க்குப்பின் தாரம்' முதலான படங்களில் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடித்தார்கள். எம்.ஜி.ஆர். சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்த 'நாடோடி மன்னன்' படத்திலும், பானுமதிதான் கதாநாயகி. கலைஞர் கருணாநிதி வசனம் எழுத, மேகலா பிக்சர்ஸ் தயாரித்த 'காஞ்சித் தலைவன்' படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் இணைந்து நடித்தனர்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1772
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திருப்புமுனை திரைப்படங்கள்

    எம். ஜி. ராமச்சந்திரன் நடித்து இரண்டே படங்கள்தான் 1954ம் ஆண்டு வெளியானது. ஒன்று சிவாஜிகணேசனுடன் சேர்ந்து நடித்த ""கூண்டுக்களி'', அடுத்தது பட்சிராஜா ஸ்டுடியோ தயாரித்த ""மலைக்கள்ளன்''.

    இதில் "மலைக்கள்ளன்' மாபெரும் வெற்றிப்படமானது. அத்துடன் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதும் கிடைக்கப் பெற்றது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த படமும் இதுதான்.

    1952ல் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடித்த "என் தங்கை', அந்தமான் காதலி வெளிவந்தன. எம்.ஜி.ஆர். சினிமா வாழ்க்கை ஒரு நிரந்தரமான அடிதளம் அமைந்த வேளையில்தான் 1954 "மலைக்கள்ளன்' படம் வெளிவந்தது.
    கதைச்சுருக்கம்
    "ராபின் ஹுட்'டைப் போல ஏழைகளின் தோழனான மலைக்கள்ளன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்தான். அவன் கள்வன் அல்ல போலீஸ்காரர்களும், அவனுக்கு வேண்டாதவர்களும், அந்த நல்லவனுக்குக் கொடுத்த பட்டம் தான் அது. அவனோ ஏழைகளுக்கு உதவினான், பொதுநலத் தொண்டு புரிந்தான். அவன் மலைக்கள்ளனாக மாறுவதற்கு அவன் குடும்பத்திற்குள் நடந்த நிகழ்ச்சிகளே காரணம். பச்சோந்திகளுக்குப் பாடம் புகட்டினான். வஞ்சகர்களை வீழ்த்தி வெற்றி கண்டான்.

    விமர்சன சுருக்கம்

    மலைக்கள்ளன் படத்தில் எம்ஜிஆர் முஸ்லிம் பெரியவராக வயதான தாத்தாவாக, பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி பொருத்தமாகப் பேசி திறமையை வெளிபடுத்திப் பாராட்டு பெற்றார். அத்துடன் சண்டைக் காட்சிகளில் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களின் பாராட்டையும், கைதட்டல்களையும் வாரிக் குவித்தார்.

    படத்தில் இடம்பெற்ற பாடல்கள், மக்களுக்கு ஒரு புதிய எழுச்சியை கொடுத்தது. ""எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, தமிழன் என்றொரு இனம் உண்டு, இன்பம் தாராய் போன்ற இனிமையான பாடல்கள் செவிக்கினிமையாக அமைந்திருந்தன. ஏற்கனவே நாவலாக வெளிவந்து பிரபலமான மலைக்கள்ளன் கதையை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரைக்கதை அமைத்து இருந்தார் டைரக்டர் ஸ்ரீராமுலு நாயுடு. கருணாநிதி வசனங்களில் முத்திரை பதித்திருந்தார்.

    கண்டிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக, தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார் எம்.ஜி. சக்ரபாணி. அவருடன் வரும் ஏட்டு டி.எஸ். துரைராஜ் நகைச்சுவை விருந்து படைத்தார். கதாநாயகியாக நடித்த, பி. பானுமதி தனது இனிமையான பாடல்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை மகிழ்வித்தார். இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை திசை திருப்பி, திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமர மக்களின் மனதில் எளிதாக எம்.ஜி.ஆர். இடம்பிடித்து மக்கள் திலகமாக இடம்பிடிக்க காரணமாக அமைந்தது மலைக்கள்ளன் படம்தான்.

    ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற படம் - "மலைக்கள்ளன்'. ரசிகர்கள் மத்தியில், சிவாஜி ரசிகர்கள், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்று கட்சி அடிப்படையில் உருவாகி இரு துருவங்களாக்கப்பட்டது இந்த படம் வெளியான பிறகுதான். அப்போது எம்.ஜி.ஆர். தூய்மையான கதர் ஆடை, கழுத்தில் துளசிமாலையுடன் காட்சியளிப்பார். சிவாஜி தி.மு.க. நடிகர் என்று முத்திரை குத்தப்பட்டிருந்தார்.

    நடிக, நடிகையர்: எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.ஜி. சக்ரபாணி, டி.எஸ். துரைராஜ், பாலசுரமணியம், சகாதேவன், துரைசாமி, பி. பானுமதி, பி.எஸ். ஞானம், சுரபி பாலசரஸ்வதி, சந்தியா மற்றும் பலர்.
    கதை: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
    வசனம்: மு. கருணாநிதி
    இசை: சுப்பையா நாயுடு
    தயாரிப்பு: பட்சிராஜா
    டைரக்ஷன் : எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு.

  4. #1773
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Malaikallan 1954

    RANDOR GUY

    M. G. Ramachandran, P. Bhanumathi, M. G. Chakrapani, T. S. Durairaj, Sriram, D. Balasubramaniam, P. S. Gnanam, E. R. Sahadevan and Sai-Subbulakshmi (dance)

    runaway hit Malaikallan
    The crowning glory of the Coimbatore movie mogul S. M. Sriramulu Naidu's career was Malaikallan (1954). The film established M. G. Ramachandran as a box office hero. Besides Tamil, Naidu forged ahead to produce and direct Malaikallan in Telugu ( Aggi Ramudu), Malayalam ( Taskara Veeran), Kannada ( Bettadha Kalla), Hindi ( Azad) and Sinhala ( Soorasena).

    The Hindi version Azad (the first film of Dilip Kumar as a swashbuckling hero, cast opposite Meena Kumari) proved a raving hit! (Years later, Naidu told this writer that he had dreams of making it in English but wiser counsel prevailed to his benefit!)

    Malaikallan was written by the famous Tamil scholar and poet Namakkal Ramalingam Pillai, inspired by “Mark of Zorro” and “Robin Hood.” The screenplay and dialogue were by Mu. Karunanidhi. S. M. Subbaiah Naidu scored the music, while the lyrics were penned by Namakkal Ramalingam Pillai and Thanjai Ramaiah Das. Bhanumathi played the female lead well supported by D. Balasubramaniam, M. G. Chakrapani, T. S. Durairaj and P. S. Gnanam. The film won a Central Government award. The music also contributed to its success, with one of the songs, a satire on social conditions, ‘Ethanai kaalam thaan ematruvaar indha naatiley', becoming a hit. This song rendered off-screen by T. M. Soundararajan and filmed on MGR riding a horse set the trend for many future MGR movies which had similar thematic songs sung by TMS.

    All the versions of Malaikallan were box office hits and the best of them was Azad, the Hindi version. This film broke all box office records and proved to be a moneyspinner. Naidu was a no-nonsense person who never tolerated indiscipline and believed in calling a spade a spade. While launching Azad (1955), he approached Dilip to play the lead. The tragedy king of Hindi Cinema was amused that a Tamil film producer based in Coimbatore, whom he had never heard of before, should have come all the way to Bombay to engage him to play a swashbuckling role in his first Hindi film production! Naidu, who would never take ‘no' for an answer, persuaded Dilip to work in the Hindi version. He also brought on board Meena Kumari which proved to be one of the memorable movies of Hindi Cinema. During that period, there were no star-hotels in Coimbatore, and Naidu took Dilip around many bungalows in the city and the rooms in Pakshiraja Studios. Dilip chose to stay in the studio and so did Meena Kumari — something incredible today.

    The pleasing music score by C. Ramchandra was also a major attraction with lyrics by Rajendra Krishan. Songs such as ‘Radha na bole re', ‘Apalam chapalam' and ‘Kitna haseen hai mausam' were hits. Naidu used some of these tunes in some versions of the film.

    Not many are aware that the multi-talented Tamil filmmaker A. P. Nagarajan was cast as a police inspector wearing a turban and all. However, after shooting some scenes with him, Naidu for some reason chose to replace him with M. G. Chakrapani.

    Even after half a century and more, Malaikallan, one of the most memorable movies of Tamil Cinema, sustains interest and is often revived on television.

    Remembered for: the popular storyline, tuneful music, excellent onscreen narration, and good performances by MGR and Bhanumathi.

    randor guy- the hindu

  5. #1774
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    முதல் முறையாக எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

    எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகாதேவன், சந்தியா, சுரபி பாலசரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரர் கதாபாத்திரம் ஏற்ற டி.எஸ்.துரைராஜ், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

    பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

    பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

    இவ்வகையில், மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது.

  6. #1775
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1776
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1777
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சினிமாவிலும் அரசியலிலும் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் அவரை சுற்றி இருந்த ஜால்ராக்களும் சிவாஜி ரசிக மன்றங்களும் தான் என்பது நாடறிந்த விஷயம் . சிவாஜிக்கு தவறான தகவல்களை சொல்லி ஏமாத்தினார்கள் .சிவாஜியும் இந்த பிள்ளைகளை நம்பியே காலத்தை தள்ளினார் . சிவாஜிக்கு விசுவாசம் இல்லாமல் சிவாஜி மன்றங்கள் செய்த பித்தலாட்டங்கள் ஏராளம் . பட்டியல் நீளும் . சிவாஜி ஆதரவு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் மதி ஒளி மற்றும் இலங்கை யில் சில பத்திரிகைகள் சிவாஜி புகழ் பாடுவதாக கூறிக்கொண்டு எம்ஜிஆரை தரமின்றி அநாகரீகமாக நோட்டீஸ் அடித்து தங்களை அறிமுகப்படுத்தி சிவாஜிக்கு சிறுமை சேர்த்தார்கள் பொய்யான தகவல்களையும் வசூல் பட்டியலையும் அச்சிட்டு தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டார்கள் .

    விளைவு ?

    சிவாஜி பல தோல்வி படங்களை சந்திக்க ஆராம்பித்தார் .
    சிவாஜி மன்றத்து பிள்ளைகள் ஆதரவு தராமல் சிவாஜிக்கு மோசம் செய்தார்கள்
    உழைப்பு என்பதையே மறந்தவர்கள்
    மன உளைச்சலும் எரிச்சலும் நிரம்பியவர்கள்

    எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் மீது உயிரையே வைத்து அவருடைய தொடர் வெற்றிகளுக்கு உண்மையாக உழைத்த வெற்றி வீரர்கள் .
    1957 முதல் இன்று வரை 60 ஆண்டுகளாக களப்பணியில் வெற்றி மேல் வெற்றி கண்டவர்கள் . இன்னும் பெறப்போகிறவர்கள் .
    சிவா ஆனந்தம் பெயருக்குத்தான் . .சிந்திக்க தெரியாதவனுக்கு ஆனந்தம் என்றுமே கிடைக்காது .

  9. #1778
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    இப்பவாவது ரோசம் வந்ததே..

  10. #1779
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1780
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •