Page 253 of 401 FirstFirst ... 153203243251252253254255263303353 ... LastLast
Results 2,521 to 2,530 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2521
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    நன்றி - நண்பர் திரு சாமுவேல் அவர்கள்
    Last edited by ravichandrran; 2nd September 2018 at 11:08 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2522
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் மனங்களில் எப்போதும் குடியிருக்கும் கோயில் மக்கள் திலகம் நூற்றாண்டு விழா "நாணயங்கள் வெளியிடும் வைபவம் நாள் ... விபரங்கள் அறிய மிக்க ஆவல்...

  4. #2523
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *மக்கள்திலகம்,* விழுப்புரம் வழியாக காரில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு பெட்ரோல் பங்க் அருகில் காரை நிறுத்தச் சொன்னார். தன் உதவியாளரை அழைத்து, "இடதுபுறமாக, 20 கடை தாண்டி ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருப்பார். அவரிடம் வடை வாங்கிக்கொண்டு நில். உனக்கு நேராக காரை நிறுத்துகிறோம். காரில் ஏறும்போது அந்தப் பாட்டியின் கையில் பணம் கொடுக்காமல் அந்த வடை வைத்திருக்கும் ட்ரேயில் போட்டுவிட்டு வந்துவிடு" என்று கூறினார்.

    அந்த உதவியாளரும் அப்படியே செய்தார். காரும் புறப்பட்டுவிட்டது.. தனக்கு திடீரென இருநூறு ரூபாய் கிடைத்ததும் வடை சுடும் பாட்டி திகைத்தார்.
    அதைக்கண்ட நம் வள்ளல் புன்முறுமல் பூத்தார்.

    உதவியாளர், எம்ஜிஆரிடம், "ஏன் அந்தப்பாட்டிக்கு 200 ரூபாய் கொடுத்தீர்கள்?" என வியப்புடன் கேட்க,

    அதற்கு எம்ஜிஆர், "அந்த 200 ரூபாய் வடைக்கு இல்லை.. *அந்த பாட்டியோட தன்னம்பிக்கைக்கு, தளராத முயற்சிக்கு.. இந்த வயதில் சுயமாக உழைச்சுப் பிழைக்கின்ற, அந்த வயதான தாயை கௌரவிக்க ஆசைப்பட்டேன்"* என்றார்...

    இப்படியே ஒவ்வொரு முறை விழுப்புரத்தைத் தாண்டும் பொழுதும் வடை வாங்குவதும், 200 ரூபாய் போடுவதும் ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது...

    இந்த மாயாஜால வித்தையால் குழம்பிய பாட்டி, 'யார் மூலம் பணம் வருகிறது?' என்பதை கண்டறிய எண்ணினார்...

    ஒருநாள், இதே போல உதவியாளர் பாட்டியிடம் வடை வாங்க போனபோது, பாட்டி அந்த இருப்பிடத்தில் இல்லாததைப் பார்த்து திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்.

    அங்கே, எம்ஜிஆரை காரில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட அந்த மூதாட்டி கண்ணீர் மல்க பேசினார்...
    *என் #மவராசா..! நீ தான் இத்தனை வருசமா நான் சுட்ட வடையை விரும்பி சாப்பிடறியா..? தங்கபஸ்பம் சாப்பிடுற ராசாவா.. இந்த ரோட்டோரம் விக்கிற வடையை வாங்கித் தின்னே..! தினம் ஆயிரம் குடும்பங்களுக்கு படியளக்கிற மகராசா, நான் சுட்ட வடையை நீ தின்னதுக்கு, நான் கோடிப்புண்ணியம் பண்ணியிருக்கணும். ஆனா நீ லாட்டரி சீட்டுல பணம் விழுற மாதிரி ஒவ்வொரு முறையும் இருநூறு ரூபாய் கொடுத்து என்னைப் பாவியாக்கிட்ட..* என்றார் கண்ணீர் மல்க.

    அதற்கு எம்ஜிஆர், *நான் உங்களுக்கு கொடுத்ததை, உங்க மகன் கொடுத்ததா நினைச்சுக்குங்க. சீக்கிரமா நான் அரசாங்கத்திடம் சொல்லி இதே பணத்தை மாசாமாசம் உங்களுக்கு பென்சனா தரச் சொல்றேன்* " என்று விடைபெற்றார்...

    தனது வாக்குறுதிக்கேற்ப, தான் முதலமைச்சரான பிறகு *முதியோர் பென்சன் திட்டத்தை* அமலாக்கி அதன் மூலம் மாத உதவித்தொகை, நாள்தோறும் மதிய உணவு, ஆண்டிற்கு இருமுறை இலவச உடை, ஆகியவற்றை நடைமுறைப்படுத்தி வரலாறு படைத்தார்

    அந்தப் பாட்டியும் தனது இறுதிக்காலம் வரை இத்திட்டத்தினால் பயன் பெற்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது...

    இப்படி மக்களின் குறைகளைப் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி பொற்கால ஆட்சி தந்தவர் தான் *பொன்மனச்செம்மல்..*... Thanks Friends...

  5. #2524
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர்.

    இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா?

    மறுமணம் செய்துகொண்டால், முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே"

    -என்று கட்சிப் பிரமுகர் ஒருவர் தமிழக முதல்வர் #எம்ஜியார் அவர்களிடம் வேண்டுகோள் வைக்க..

    அதற்கு முஊல்வர் எம்.ஜி.ஆர்..

    "அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர்.

    அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான்.

    வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது”

    -என்று பதில் கூற கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார்..... Thanks Friends...

  6. #2525
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி" முதல் திரையுலக வசூல் சக்ரவர்த்தி, நவரச வேந்தன் மக்கள் திலகம் தயாரித்து, நடித்து, இயக்கிய மாபெரும் பிரம்மாண்ட படைப்பு... வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு இதுவரை எங்கும் இப்படி பட்ட உருவாக்கம் வந்ததில்லை... என கூறப்படும் "உலகம் சுற்றும் வாலிபன்" டிஜிட்டல் ட்ரைலர் வெளியாகிறது என்று இனிய, இனிப்பான தகவல் நம் நண்பர்கள் வழியாக ...👍 👌

  7. #2526
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமணி -27/8/18

  8. #2527
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Mgr ரசிகர் மன்றத்தை
    திறந்து வைத்த பாரத பிரதமர்
    ************************
    எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்
    தானாகவே ஆரம்பிக்கப்பட்டது எம்.ஜி.ஆர் திரைப்படம் வெளியாகும் நாள்களில்
    கட் அவுட் வைப்பது,
    கூட்டமாகத் திரளும் ரசிகர்களை ஒழுங்குப்படுத்துவது,
    இனிப்பு வழங்குவது
    பேனர் வைப்பதுஎன ஒருகுழு அமைத்து பல்வேறு பணிகளை செய்து வந்தார்கள்

    ஒவ்வொரு ஊரிலுள்ளவர்களும் ஒவ்வொரு படத்தின் பெயரில் எம்ஜிஆர் மன்றத்தை ஆரம்பித்து செயல் படுத்தி வந்தார்கள் எம்ஜிஆர் படம் வெளிவரும் சமயம் வேறு நடிகர்கள் படம் வெளியானால்
    அடிதடி சண்டைக்கு பஞ்சம் இருக்காது
    ஒரு சமயம் எம்.ஜி.ஆருக்கும்
    அவரின் ரசிகர்களுக்கும் இடையே மனஸ்தாபம் உண்டாயிற்று. `தன்மீதான அதிகமான அன்பால் ரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப்பட்டு வேறு நடிகர்கள் போஸ்டர் கிழிப்பது சண்டை செய்வது போன்ற வேலைகளை செய்தார்கள்
    இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., அவர்களைக் கூப்பிட்டுக் கண்டித்தார். அப்போது அவர்கள் தங்களின்
    உள்ளூர் பிரச்னைகளை எடுத்துக்கூறியும்
    எங்கள் [எம்ஜிஆர் போஸ்டர்] போஸ்டர்களை கிழித்ததால் தான் செய்தோம் நாங்கள் செய்ததுதான் நியாயமானது என்று உணர்த்த முயன்றார்கள்
    எம்.ஜி.ஆருக்கு சட்டென
    கோபம் வந்துவிட்டது.
    அவர்களைப் பார்த்து
    நான் சொல்வதை கேட்கவிட்டால் மன்றத்தைக் கலைத்துவிடுங்கள் என்றார் கோபமாக
    கூட்டத்தில் இருந்த
    கோபக்கார ரசிகர்கள் அதைச் சொல்ல நீங்கள் யார்?
    நீங்கள் சொல்லியா நாங்கள் மன்றம் ஆரம்பித்தோம்
    படம் நடிப்பதுதான் உங்கள் வேலை. ரசிகர் மன்றம் நடத்துவது
    எங்கள் விருப்பம்.
    எங்கள் பிரச்னைகளை
    நாங்களே தீர்த்துக்கொள்கிறோம்' என்று செல்ல
    எம்.ஜி.ஆர் அசந்துபோய்விட்டார்
    நம்மீது இப்படி ஒரு வெறித்தனமான அன்பு வைத்திருக்கிறார்களே
    இவர்களது பாசத்தையும் பற்றையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோமே’ என நினைத்து
    இவர்கள்தான் தமது சொத்து, சுகம், வாழ்வு! என்பதை உணர்ந்துகொண்டு அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார்

    அந்தமான் தீவில் வாழும் ரசிகர்கள் எஜிஆருக்குரசிகர் மன்றம்
    தொடங்க வேண்டும் என திட்டமிட்டார்கள்அந்த சமயத்தில்
    அங்கு சுற்றுப் பயணத்தில் இருந்தார் பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி உடனே எம்.ஜி.ஆர் ரசிகர்கள், பிரதமரைக் கொண்டே மன்றத்தைத் திறக்க முடிவுசெய்து,
    அதில் வெற்றியும் பெற்றார்கள்
    இந்திய வரலாற்றிலேயே,
    ஏன் உலக வரலாற்றிலேயே
    ஒரு பிரதமர் ஒரு நடிகரின்
    ரசிகர் மன்றத்தைத் திறந்துவைத்த பெருமை புரட்சித் தலைவர்
    mgr ஒருவருக்கு
    மட்டும்தான் உள்ளது

  9. #2528
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி 4/9/18

  10. #2529
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர்
    4/9/18

  11. #2530
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலைமுரசு 4/9/18

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •