Page 137 of 401 FirstFirst ... 3787127135136137138139147187237 ... LastLast
Results 1,361 to 1,370 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1361
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் உலக எம் ஜி.ஆர் பேரவை மாபெரும் மாநாடு சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலை கழகம் வளாகத்தில் ஜூலை 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுவதால் நமது ரசிகர்களும் அபிமானிகளும் தங்கள் குடும்பத்துடன் அனைவரும் அலைகடலென திரண்டு வருக! வருகll.. என மதுரை மகரன் எம்.ஜி.ஆர் பக்தர்கள் குழு சார்பாக அழைக்கிறோம்... Thanks whatsapp friends...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1362
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் அபிமானிகள் அறிய வேண்டிய அருமையான, இனிய தகவல்... கடந்த மாதங்களில் சென்னை - ஆல்பர்ட் வளாகத்தில் என்றும் வசூல் சக்ரவர்த்தி ஆக திகழும் புரட்சி நடிகர் இரு வேடங்களில் முதன் முறையாக நடித்து, தயாரித்த, இயக்கிய காலத்தை வென்ற காவியம் "நாடோடி மன்னன்" இன்றைய சினிமா துறை நிலவுகின்ற சூழ்நிலையிலும் அட்டகாசமான ரூபாய் ஏழு லட்சங்களை (700000.00) வசூலித்து புதிய சாதனை உச்சத்தை படைத்திருக்கிறது...

  4. #1363
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மற்றுமொரு இனிய செய்தி... விரைவில் வசூல் திலக காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" வெளியிடும் விழா வைபவம் சத்தியம் திரையரங்கில் நடைபெற இருக்கிறது, வாழ்க... வளர்க மக்கள் திலகம் நீடிக்கும் புகழ்...

  5. #1364
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - 1978


    1974ல் இயக்குனர் பந்துலுவின் தயாரிப்பு இயக்கத்தில் துவக்கப்பட்ட படம் . 1973ல் நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புதுவை , கோவை நாடாளுமன்ற இடைத் தேர்தல்களிலும் புதுவை சட்டமன்ற தேர்தல்களிலும் எம்ஜிஆர் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று அரசியல் வானிலும் ஜொலித்து கொண்டிருந்தார் . அதிமுக இயக்கம் மக்கள் மத்தியில்
    பரபரப்பாக பேசப்பட்டது . திரை உலகிலும் எம்ஜிஆரின் புகழ் உச்சத்தில் இருந்தது . தமிழகத்தில் திமுக ஆட்சியில் எம்ஜிஆருக்கு எல்லா விதத்திலும் தொல்லைகளை திமுக தலைவர் கருணாநிதி தந்து கொண்டிருந்தார் . பறக்கும் படை என்ற பெயரில் சாதி இன பேதங்களை வளர்த்தார் .

    தமிழகத்தை மீட்டு நல்லாட்சி அமைந்திட பந்துலு அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து மதுரையை [ தமிழகத்தை ] மீட்ட சுந்தரபாண்டியன் { அழகுதலைவர் எம்ஜிஆர் } என்ற அகிலனின் காவியத்தை உருவாக்கினார் . உடல் நலன் பாதிக்கப்பட்ட திரு பந்துலு அவர்கள் இயற்கை எய்திய நிலையில் படப்பிடிப்பு நின்று போனது . அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து எம்ஜிஆர் அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் இப்படத்தின் வளர்ச்சி 1976க்கு பின்னர் மீண்டும் வளர துவங்கியது . 1977 மார்ச் மற்றும் ஜூன் மாதத்தில் நடந்த பாராளுமன்ற சட்ட மன்ற தேர்தல்களில் எம்ஜிஆர் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்னர் இடைவெளி இன்றி தொடர்ந்து நடித்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை இயக்கி நடித்து முடித்து கொடுத்தார் .

    ஏற்கனவே தயரிப்பில் இருந்த ஸ்ரீதரின் மீனவ நண்பனையும் நடித்து முடித்தார் .அந்த படம் எம்ஜிஆர் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் 14.8.1977 அன்று வெளிவந்தது மாபெரும் வெற்றியை அடைந்தது , மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 14.1.1978 அன்று திரைக்கு வந்தது
    1936ல் வெளிவந்த ,சதிலீலாவதி - எம்ஜிஆரின் திரை உலக அறிமுகப்படம் . இறுதி படமாக மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் அமைந்து விட்டது
    மொத்தத்தில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் தமிழகத்தை மீட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
    .
    1977ல் தமிழகத்தை எம்ஜிஆர் மீட்டார் .
    1978ல் மதுரை மாநகராட்சியை எம்ஜிஆர் மீட்டார்
    மதுரை ஒரிஜினல் பாய்ஸ் - எம்ஜிஆர் தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கினர் . மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துடன் தன்னுடைய கலைப்பயணத்திற்கு விடை கொடுத்தார் .கடைசியாக மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் .மதுரை எம்ஜிஆருக்கு நிரந்தர அரசியல் மற்றும் கலைத்துறை கோட்டை என்பதை நிரூபித்து காட்டினார் . மறைவிற்கு பின்னரும் 30 ஆண்டுகள் கடந்தும் இன்றும் மதுரை எம்ஜிஆர் கோட்டையாக திகழ்கிறது
    .

    இனி திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை பற்றி ...........

    அகிலனின் கதையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மிகச்சிறப்பாக சுந்தரபாண்டியனாக நடித்து . இருந்தார் .மக்கள் திலகத்துடன்
    நம்பியார் , வீரப்பா , சகஸ்ரநாமம் .வி.எஸ். ராகவன் , கண்ணன் தேங்காய் ஸ்ரீனிவாசன் , ஐசரி வேலன் மற்றும் நடிகைகள் லதா , பத்மப்ரியா நடித்திருந்தார்கள் . மைசூர் அரண்மனை . ஜெய்பூர் அரணமனை , பாலைவனக்காட்சிகள் கண்ணுக்கு விருந்து .
    எம்ஜிஆர் - நம்பியார்
    எம்ஜிஆர் - வீரப்பா
    எம்ஜிஆர் - ஜஸ்டின்
    மூன்று சண்டை காட்சிகள் அருமை . குறிப்பாக அரண்மனையில் வீரப்பாவுடன் மோதும் காட்சியில் எம்ஜிஆரின் ஆக்ரோஷமான நடிப்பு பிரமாதம் .
    அதே போல் ஜஸ்டினுடன் பாதாள அறையில் மோதும் காட்சியும் அனல் பறந்தது . பாலைவனத்தில் நம்பியாருடன் மோதும் சண்டை கட்சியில் எம்ஜிஆரின் சுறுசுறுப்பான நடிப்பு நன்கு தெரிகிறது .

    எம்ஜிஆர் அரசியல் வசனங்கள் அனைத்தும் அருமை .
    தாயகத்தின் சுதந்திரமே
    வீர மகன் போராட வெற்றி ..
    தென்றலில் ஆடும் கூந்தலில்
    அமுத தமிழில் .....
    4 பாடல்கள் சூப்பர் ஹிட் . நகைச்சுவை காட்சிகள் மிகவும் குறைவு .மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் சூப்பர் .
    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் .

  6. #1365
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்நாட்டின் நிலப்பரப்பை விட எம்.ஜி.ஆரின் மனப் பரப்பு பெரியது



    தமிழ்நாட்டின் நிலப் பரப்பைவிட எம்.ஜி.ஆரின் மனப் பரப்பு பெரியது என்று வேலூரில் கவிஞர் முத்துலிங்கம் பேசினார். எம்.ஜி.ஆர் என்பது

    மூன்றெழுத்து. இதில் எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துத்தான் அன்றைக்கும் இன்றைக்கும் கழகத்தின் ஆயுத எழுத்தாக விளங்குகின்றது.

    என்று வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழகம் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் முத்து லிங்கம் பேசினர்.

    இவ்விழாவிற்கு வி.ஐ.டி வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். இரண்டு நாள் நடந்த இவ்விழாவில் இரண்டாம் நாளில் எம்.ஜி.ஆருடன் திரைப்படங்களில் பங்கேற்ற பல கலைஞர்களை அழைத்துப் பேச வைத்து சிறப்புச் செய்தார் விசுவநாதன்.

    இவ்விழாவில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகை லதா, நடிகை வாணிஸ்ரீ நடிகை சச்சு, ராமபிரபா, பேபி இந்திரா கலைப்புலிதாணு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் முத்தாய்ப்பாக அவையோரின் கை தட்டல்களுக்கிடையே திரைப்பாடல் ஆசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் எழுச்சியுரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

    குறிஞ்சி பூமலர்களில் சிறந்தது தாமரை. நதிகளில் சிறந்தது கங்கை. மலைகளில் சிறந்தது இமயம்: மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூவைப் போல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக் கூடிய தலைவர்களில் அல்லது மனிதர்களின் ஒருவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நெருஞ்சிமனம் படைத்த தலைவர்கள் நிறைந்திருக்கும் இந்நாட்டில் குறிஞ்சி மனம் பரப்பிய கொடைக்கானலாகத் திகழ்ந்தார். நேருக்கும் காந்திக்கும் நிகரான செல்வாக்கைப் பாருக்குள் பெற்றிருந்த பண்பான தலைவர் இவர். எடுக்கும் பழக்கமுள்ள எத்தனையோ கைகளிடை கொடுக்கும் பழக்கமுள்ள கொடைக் கைகள் இவர் கைகள். கொடைக் குணமும் படைக்குணமும் கூடப் பிறந்த இரட்டைக் குணங்களாகக் கொண்டிருந்தவர் அவர்.


    “மூன்றெழுத்து அதிசய மனிதர் எம்.ஜி.ஆர்” என்று வி.ஐ.டி வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்துத்தான் இன்னமும் மக்கள் நெஞ்சில் அழியாமல் வாழ்கின்ற உயிரெழுத்தாகவும் உயிர்மெய் எழுத்தாகவும் உலாவருகிறது. அந்த மூன்றெழுத்துதான் அன்றைக்கும் இன்றைக்கும் கழகத்தின் ஆயுத எழுத்தாகத் திகழ்கிறது. அந்த எழுத்துத் தான் எதிரிகளின் ஆயுதங்களைத் தாங்குகின்ற கேடயமாகவும் திகழ்கிறது. ஈகை பூமி குளிரவேண்டும் என்பதற்காக மேகம் பொழி வதைப் போலே காடுகரைகள் செழிக்க வேண்டும் என்பதற்காக நதிகள் பாய்ந்தோடிச் செல்வதைப் போலே உலக இருட்டை நீக்குவதற்காகச் சூரிய வெளிச்சம் தோன்று வதைப் போல் ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைக்க வேண்டுமென்பதற்காக கழகத்தைப் புரட்சித்தலைவர் தோற்றுவித்தார். அதன் மூலம் அடையாளம் இல்லாமல் இருந்தவர்களுக்கெல்லாம் ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.

    பேர் தெரியாமல் இருந்தவர்களை யெல்லாமல் சமுதாயத்தில் பெரிய மனிதர்கள் ஆக்கினார். அதுபோல் அம்மா அவர்களும் ஊருக்கு மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தவர்களை யெல்லாம் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்களாக்கி உலகறியச் செய்தார். இவர்கள் இருவரும் கீழ்மட்டத்தில் இருந்தவர்களை யெல்லாம் கை கொடுத்து மேல் மட்டத்திற்கு உயர்த்தியவர்கள்.

    ஒருவன் நடந்து வரக் கூடிய நடையை வைத்தே அவனது குணத்தை அறிந்து கொள்ளும் கூர்த்தமதி உடையவர் எம்.ஜி.ஆர். அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவிகேட்டு வந்தால் இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும். வந்தவர் வெறுங்கையோடு திரும்ப மாட்டார்.
    எல்லாருக்கும் உள்ளங்கையில் இருப்பது ரேகையென்றால் எம்.ஜி.ஆருக்கு இருந்தது ஈகை. அதனால் தான் அவர் சூடினார் அனைத்திலும் வாகை.

    மனப்பரப்பு பெரியது “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” படத்திற்குப் பாடல் எழுதும் போது என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. டாக்டரிடம் காட்டுவதற்குப் பணமில்லை கையில் இரண்டு ரூபாய் தான் இருந்தது. அதைப் பேருந்துக்கு வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆரைப் பார்க்க சத்தியா ஸ்டுடியோவிற்குச் சென்றேன். அப்போது படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறிவிட்டார். கார் புறப்படத் தொடங்கியது. நான் வேகமாக வந்ததைப் பார்த்துவிட்டு காரை நிறுத்தச் சொல்லி கார் அருகே என்னை அழைத்து என்ன விஷயமென்று கேட்டார். நான் இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டு, நேற்றுத்தான் “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” கம்பெனியில் பாட்டெழுதுவதற்கான காட்சியைச் சொன்னார்கள். நாளைக்குத்தான் கம்போசிங் இருக்கிறது. பாட்டெழுதிய பிறகு வாங்க வேண்டிய பணத்தை நிலைமை இப்படி இருப்பதால் முன் கூட்டியே வாங்கிக் கொள்ளலாமா என்று கேட்டேன்.

    “ அப்படிக் கேட்கக் கூடாது. இதற்கு முன்பு அந்தக் கம்பெனியில் நீ எழுதியிருந்தால் கேட்கலாம். நான் சொன்னதால் தான் உன்னைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அதனால் முன் கூட்டியே நீ கேட்டால் அது உனக்கும் அசிங்கம் எனக்கும் அசிங்கம் கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு காரில் இருந்த அவர் உதவியாளர் மாணிக்கத் திடம் டிக்கியில் இருக்கிற பெட்டியை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லி விட்டு காரைவிட்டு இறங்கி என்னை மேக்கப் ரூமுக்குள் கூட்டிக் சென்றார். மனிதநேயம் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து நம்ம டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத்தைப்பார். இல்லையென்றால் நீ எந்த டாக்டரிடம் காண்பிக்கிறாயோ அவரிடம் காட்டி என்ன நிலையென்பதை என்னிடம் சொல் என்றார். அப்போது ஒரு பவுன் நானூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்றகாலம். இரண்டாயிரம் ரூபாய்க்கு நான்கு பவுன் வாங்கலாம். இப்போது நான்கு பவுன் வாங்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் ரூபாயாகும். அன்றைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு இன்றைய மதிப்பு ஒரு லட்சம்.

    மேக்கப்பை கலைத்துவிட்டு காரில் ஏறி உட்கார்ந்து விட்டால் காரை விட்டிறங்கி மேக்கப் அறைக்குள் மறுபடி வரமாட்டார். இது அவர் இயல்பு. நான் சொன்னவுடன் காரைவிட்டு இறங்கி மேக்கப் அறைக்குள் வந்தார். என்னுடைய நிலைமையில் யார் வந்து சொல்லியிருந்தாலும் அப்படித்தான் உதவி செய்திருப்பார். ஏனென்றால் அதுதான் இரக்கக் குணம். அதுதான் மனிதநேயம். இந்த மனித நேயம் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது?
    இந்நாட்டின் நிலப்பரப்பை விட எம்.ஜி.ஆரின் மனப்பரப்பு பெரியது. இவரைப் போல் ஒரு தலைவர் இதுவரைக்கும் பிறந்ததில்லை. இனிப் பிறப்பார் என்று சொல்வதற்கும் உறுதியில்லை. மக்கள் மனங்களில் மாறாமல் மணம் வீசிக் கொண்டிருக்கிற வாடாத வசந்த முல்லை எம்.ஜி.ஆர். இவ்வாறு கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

  7. #1366
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

    இந்த காலக்கட்டத்தில், மீண்டும் அகிலனுடன் எம்.ஜி.ஆர். தொடர்பு கொண்டார்.

    ‘‘நீங்கள் எழுதிய ‘கயல்விழி’ நாவலை நான் படமாக தயாரிக்க விரும்புகிறேன். கதாநாயகனாக நானே நடிக்கிறேன். படத்திற்கு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று பெயர் வைக்கலாம் என்று இருக்கிறேன். படத்துக்கு நீங்களே வசனம் எழுதுங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

    கதை உரிமையை மகிழ்ச்சியுடன் தருவதாக எம்.ஜி.ஆரிடம் அகிலன் தெரிவித்தார். ஆனால் வசனம் எழுத அவர் சம்மதிக்கவில்லை. ‘திரைக்கதை – வசனம் எழுத ப.நீலகண்டன் போன்ற ஒருவரை அமர்த்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார்.

    படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்க லதா, பத்மப்பிரியா, பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோர் ஒப்பந்தம் ஆனார்கள். ப.நீலகண்டன் திரைக்கதை – வசனம் எழுதினார்.

    ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படப்பிடிப்பு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், சத்யா ஸ்டூடியோவில் தொடங்கியது. முதல்நாள், பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

    எதிர்பாராத திருப்பங்கள்

    வெளிப்புற படப்பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்ய, கர்நாடக மாநிலத்திற்கு பி.ஆர்.பந்தலு சென்றார். அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென காலமானார்.

    பந்தலுவின் எதிர்பாராத மரணத்தால், எம்.ஜி.ஆர். அதிர்ச்சியும் கவலையும் அடைந்தார். என்றாலும் படத்தை எடுத்து முடிப்பது என்று உறுதிபூண்டார்.

    சிவஸ்ரீ பிக்சர்ஸ் அதிபர் மணி அய்யர், பட அதிபர் சேவுகன் செட்டியார் இருவரையும் அழைத்துப் பேசினார். அவர்கள் இருவரும் சேர்ந்து, ‘சோளீஸ்வரா கம்பைன்ஸ்’ என்ற பட நிறுவனத்தை தொடங்குவது என்றும் அந்த நிறுவனத்தின் சார்பில் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை எடுத்து முடிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. படத்தின் டைரக்ஷன் பொறுப்பை எம்.ஜி.ஆர். ஏற்றார். படம் வேகமாக வளர்ந்தது.

    படத்தில் பிரமாண்டமான போர்க்களக்காட்சி இடம் பெற்றது. அக்காட்சி ஜெய்ப்பூரில் 26 நாட்கள் படமாக்கப்பட்டது. அத்துடன் டெல்லி, மைசூர் முதலான இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.

    பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் ஒரு திருப்பம்.

    1977–ம் ஆண்டில் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில், எம்.ஜி.ஆரின் அண்ணா தி.மு.க வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    படத்தில், எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. அக்காட்சிகளைப் படமாக்கி கொடுத்துவிட்டு அதன் பின் முதலமைச்சராக பதவி ஏற்பது என்று எம்.ஜி.ஆர். தீர்மானித்தார்.

    இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. எல்லா காட்சிகளையும் எடுத்து முடித்த பின், முதல்வராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்.

    எம்.ஜி.ஆர். பதவி ஏற்றபின், 1978–ம் ஆண்டு ஜனவரி 14–ந் தேதி பொங்கல் தினத்தன்று ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வெளிவந்து, மகத்தான வெற்றி பெற்றது. அத்துடன் எம்.ஜி.ஆர். நடித்த கடைசி படம் என்ற சிறப்பையும் பெற்றது

  8. #1367
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் 24.6..2018

    சினிமாவில் பொதுவாக பெண்களின் அழகைத்தான் கவிஞர்கள் வர்ணிப்பார்கள். ஆண்களின் அழகையும் வர்ணிக்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆருக்குத்தான் பொருந்தும்.

    ‘குடும்பத் தலைவன்’ படத்தில் ‘கட்டான கட்டழகு கண்ணா, உன்னைக் காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’

    என்று எம்.ஜி.ஆரை வர்ணித்திருப்பார் கண்ணதாசன்.

    எம்.ஜி.ஆரின் அழகை, ஆளுமையை ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில், நாயகி பாடுவது போல கண்ணதாசன் விவரித்திருப்பார். அந்த வரிகள்…

    ‘தேக்கு மரம் உடலைத் தந்தது

    சின்ன யானை நடையைத் தந்தது

    பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது

    பொன்னல்லவோ நிறத்தை தந்தது’

    இந்த வரிகளைப் படித்தாலே நினைவுக்கு வருபவர் எம்.ஜி.ஆராகத்தான் இருக்க முடியும்.

    எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த கண்ண தாசன் பாடல் ‘மன்னாதி மன்னன்’ படத்தில் அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...’பாடல். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது அவர் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இந்த பாடல் தவறாமல் இடம் பெறும்.

  9. #1368
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, இன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’

    இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,

    “அச்சம் என்பது மடமையடா!
    அஞ்சாமை திராவிடர் உடமையடா!
    ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
    தாயகம் காப்பது கடமையடா!”

    என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!

    உண்மைதானே!

    அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.

    அவர்தானே,

    ‘அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.

  10. #1369
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னர் எம் எஸ் வி பிறந்த நாள் 24.6.2018

    மெல்லிசை மன்னர் மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்திற்கும் அருமையான பாடல்களை தந்துள்ளார் எம்ஜிஆர் படங்களில் டைட்டில் காட்சி இசைஅமைப்பும் பின்னனணி இசையும் மிகவும் அருமையான இருந்தது

    குலேபகாவலி
    மன்னாதி மன்னன்
    பணத்தோட்டம்
    ஆனந்தஜோதி
    படகோட்டி
    எங்கவீட்டுப்பிள்ளை
    ஆயிரத்தில் ஒருவன்
    கலங்கரை விளக்கம்
    அன்பே வா
    நான் ஆணையிட்டால்
    காவல்காரன்
    ரகசியப்போலீஸ் 115
    குடியிருந்தக்கோயில்
    ஒளிவிளக்கு
    நம்நாடு
    ரிக் ஷாக்காரன்
    ராமன் தேடிய சீதை
    உலகம் சுற்றும் வாலிபன்
    சிரித்து வாழவேண்டும்
    இதயக்கனி
    மீனவநண்பன்

  11. #1370
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    விஸ்வநாதன் ராமமூர்த்தி தேர்ந்த மெலடியில் இசையமைக்கக்கூடியவர்கள் என்பதைக் காட்ட பீம்சிங், ஸ்ரீதர் மற்றும் பலர் களம் அமைத்துக் கொடுத்தார்கள் என்றாலும் எம்ஜிஆர் திரைப்படங்களே அவர்களுக்கு விதவிதமான பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அளித்தன. எம்ஜிஆர் படங்களிலும் சிறந்த மெல்லிசைப் பாடல்கள் இருந்தன என்றாலும், அவற்றில் துள்ளிப் பாயும் உற்சாகம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. மிகப்பெரிய ஆளுமையாக எம்ஜிஆர் திரைப்படங்களில் தோன்றியது ஒரு காரணம் என்றாலும் அவர் அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள திரைப்படங்களைப் பயன்படுத்தியதும் ஒரு காரணம். முன்னதாகவே எம்ஜிஆர் இவர்களுடன் பணியாற்றியிருந்தார் என்றாலும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கே வி மகாதேவனுக்கு சம வாய்ப்புகள் அளித்தார் (பின்னரே அவர் எம்எஸ்வி பக்கம் சாய்ந்தார்).

    1960ஆம் ஆண்டிலேயே எம்ஜிஆருக்கு மறக்க முடியாத ஒரு பாடல் அமைத்திருந்தனர்- “மன்னாதி மன்னன்” திரைப்படத்தில் வரும், “அச்சம் என்பது மடமையடா,” என்ற பாடல். இன்றும் இது கழக மேடைகளில் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இதன் ட்யூன் நன்றாக இருக்கிறது என்றாலும் ஐம்பதுகளுக்கு உரிய பாடல்தான் இது- விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைகளில் மிகக் குறைவாகவே இதில் இருக்கிறது. அக்காலத்துக்கே உரிய பாடல்-

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •