Page 132 of 401 FirstFirst ... 3282122130131132133134142182232 ... LastLast
Results 1,311 to 1,320 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1311
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை!


    மாநில அரசில் கிரகங்கள் கால்வைத்த பின் ஹிந்துக்களை ஒடுக்க ஹிந்து சமயத்தை ஹிந்துப் பண்பாட்டை இழிவுபடுத்துவதே ஆட்சி பீடத்தார் தொழிலாகி விட்டது. வாய்த்த தலைமை அப்படி. கஞ்சாத் தோட்டத்தில் ரோஜாமலராக வந்தார் எம்.ஜி.ஆர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் ஹிந்து சமுதாயம் அந்த நல்ல ஹிந்துவை நினைத்துப் பார்க்கிறது.

    தமிழக முதல்வராக பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற சிறப்பு எம்.ஜி.ஆர்ருக்கு மட்டுமே உண்டு. 1977 முதல் 1987ஆம் ஆண்டு அவர் மறையும் வரை வேறு யாரும் முதல்வர் பதவியை நெருங்க முடியவில்லை.

    எம்.ஜி.ஆர். வெறும் கூத்தாடிதான் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். அவருக்கு படிப்பறிவு கிடையாது, நிர்வாக அனுபவம் துளியும் இல்லை. சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார் என்றெல்லாம் கணைகள் வீசப்பட்டன.

    எம்.ஜி.ஆர். மெத்தப்படித்த மேதாவி அல்லர் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால்தான் மக்கள் திலகம் என்ற பெயர் இன்றுவரை அவருக்குப் மட்டுமே பொருத்தமாக உள்ளது. பொருளாதாரம் மிகவும் நுட்பமானது. நிதி சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க நிபுணர்களே தடுமாறுவது உண்டு. ஏனெனில் பொருளாதார ரீதியான விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை யாராலும் துல்லியமாக முன்கூட்டியே அவதானிக்க முடியாது.mgr

    பொருளாதார பிரச்சினையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இதை நன்கு உணர்ந்திருந்தார். அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை அவர் கட்டுக்குள் வைத்திருந்தார்.

    சிறுவயதில் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அவர் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார். தன்னைப்போல யாரும் எதிர்காலத்தில் பட்டினி கிடக்கக் கூடாது, பசிப்பிணியால் வாடக்கூடாது என்ற உணர்வு அவர் நெஞ்சில் வலுவாக இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. காமராஜர் ஆட்சி காலத்திலேயே மதிய உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற போதிலும் அதை செம்மைப்படுத்தி மெருகேற்றியது எம்.ஜி.ஆர். தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

    குழந்தைகள் வயிறார உணவு உண்டால்தான் படிப்பில் அவர்களால் கவனத்தை செலுத்த முடியும் என்பதை கல்வியியல் வல்லுனர்கள் உறுதிபட உரைக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் சேர்ந்த மாணவர்கள் வெவ்வேறு காரணங்களால் இடையிலேயே நின்றுவிடுவது உண்டு. இப்போது இந்த இடைநிற்றல் பெருமளவு குறைந்துள்ளதற்கு சத்துணவும் ஒரு முக்கிய காரணம். இப்போது இத்திட்டம் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

    எம்.ஜி.ஆர். திரையில் நடித்தவரே தவிர, பொதுவெளியில் தன்னால் யாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்த காலக்கட்டத்தில் கூட தன்னை நாத்திகன் என்று அவர் ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை.

    பிரபல படத் தயாரிப்பாளரும் நடிகருமான சாண்டோ சின்னப்ப தேவர், மருதமலை முருகன் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். பக்தர்களின் வசதிக்காக மருதமலையில் விளக்கு வசதியை சின்னப்ப தேவர் ஏற்பாடு செய்தார். இதை தனது நண்பரான எம்.ஜி.ஆர்.தான் திறந்து வைக்க வேண்டும் என்பதில் சின்னப்பா தேவர் இருந்தார்.

    கோயில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமோ அக்கறையோ காட்டக்கூடாது என்று திமுக பிரமுகர்கள் சிலர் எம்ஜிஆருக்கு முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரையிடம் எம்.ஜி.ஆர். இது குறித்து பேசியி பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலம் வாக்கை ஏற்ற தி.மு.க. மறுக்க முடியவில்லை.

    எம்ஜிஆரைப் பொறுத்த வரை தான் இறைநம்பிக்கை உடையவர் என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயங்கியது இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை எம்ஜிஆர் வெளிப்படுத்தியுள்ளார்.

    கிருபானந்தவாரியார் ஆற்றிய சொற்பொழிவு காரணமாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது கல்வீசும் அளவுக்கு நிலைமை மோசமானது. இது பல்லாயிரக்கணக்கானோருக்கு மன வேதனையை அளித்தது. எம்ஜிஆரும் மன உளைச்சலால் தவித்தார். எம்ஜிஆர் நேரடியாகத் தலையிட்டு மோதலை தணித்தார். இதன்வாயிலாக, பொன்மனச் செம்மல் என்ற மகுடத்துக்கு பொருந்தமானவர் என்பதை அவர் நிரூபித்தார்.

    எம்ஜிஆரின் இஷ்ட தெய்வம் கொல்லூரில் வீற்றிருக்கும் மூகாம்பிகை அம்மன். வாய் பேச முடியாத அசுரனை அம்மன் வதம் செய்த இடம்தான் கொல்லூராகும். இதனால்தான் அம்மனுக்கு மூகாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவர் கொல்லூரில் அமர்ந்து தியானம் செய்தார். ஆதிசங்கரர் தியான பீடம் இப்போதும் பக்தர்களை ஈர்த்துவருகிறது.

    திரைப்படம் ஒன்று அமோக மதுரையில் எம்ஜிஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. இது சுமார் அரை கிலோ எடை கொண்டது. இந்த தங்க வாளை மூகாம்பிகையம்மன் கோயிலுக்கு எம்ஜிஆர் காணிக்கையாக அளித்தார்.

    இப்போதும் இந்த தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கோயிலை அலங்கரிக்கிறது. திமுகவில் சிவாஜி கணேசன் இருந்தபோது அவர் திருப்பதிக்குச் சென்றதை பிரச்சினை ஆக்கினார்கள். இதைப்போல மூகாம்பிகை கோயிலுக்கு எம்ஜிஆர் சென்றதையும் சிலர் பிரச்சினை ஆக்க முற்பட்டார்கள். ஆனால் மூகம்பிகையை நான் என் தாயாகக் கருதுகிறேன். என் தாயையும் மூகம்பிகையையும் என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை என்று எம்ஜிஆர் ஆணித்தரமாக கூறியதையடுத்து, பிரச்சினையை எழுப்பியவர்கள் செல்லாக்காசுகளாகிவிட்டார்கள்.

    எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகும் மத பாரபட்சத்தை அண்டவிட்டதில்லை. பெரும்பான்மையினர் என்பதற்காக ஹிந்துக்களை ஒதுக்கி தள்ளவேண்டும் என்றோ, சிறுபான்மையினர் என்பதற்காக முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும் என்றோ எம்ஜிஆர் ஒருபோதும் நினைத்தது இல்லை.

    வேலூர் கோட்டையில் உள்ள ஆலயத்தில் மூலவர் இல்லாமல் இருந்தது மிகப் பெரிய குறையாக விளங்கியது. எப்படியாவது ஆலயத்தில் மூலவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்பதில் ஹிந்து அமைப்புகள் முனைப்பு காட்டின. இரவோடு இரவாக ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மூலவரை ஹிந்து அமைப்பைச் சேர்ந்த காரியகர்த்தர்கள் ஸ்தாபித்தனர். இதை ஹிந்து மத துவேஷிகள் ஊதிப் பெரிதாக்க முயன்றனர். ரத்தக்களரியைத் தூண்டிவிட்டனர். ஆனால் இப்பிரச்சினையில் ஹிந்துக்களின் செயல்பாடு நியாயமானதுதான் என்பதை நன்கு உணர்ந்த எம்.ஜி.ஆர்., பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவருக்கு குந்தகம் எதுவும் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என காவல்துறையைப் பணித்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ வெறியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. மாவட்டத்தின் பெயரையே கன்னிமேரி என்று மாற்றவேண்டும் என்று எல்லாம் அவர்கள் குரல் எழுப்பினார்கள். மண்டைக்காட்டில் கடலில் நீராடிய ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். இதையடுத்து கலவரம் வெடித்தது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் எம்ஜிஆர் முன்னிலையில் ஹிந்துக்களின் உண்மையான நிலையை தாணுலிங்க நாடார் எடுத்துரைத்தார். கிறிஸ்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டனர். பொய்யான விவரங்களைத் தெரிவித்தனர் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் இதற்கு பிராயச்சித்தம் தேட முடிவு செய்தார்.

    மத கலவரத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பதற்காக நீதிபதி வேணுகோபால் தலைமையில் ஆய்வு குழுவை எம்ஜிஆர் அமைத்தார். இக்குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலனை செய்தது. வெவ்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கிடையே குறிப்பிட்ட தொலைவு இடைவெளி இருக்கவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஜெபக்கூடங்கள் என்று தொடங்கி அவற்றை சர்ச்சுகளாக மாற்றும் கலையில் வித்தகம் பெற்றிருந்தார்கள். நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரை இந்த மோசடியை நிர்மூலமாக்கியது.

    கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கும் இஸ்லாமிய மசூதிகளுக்கும் அரசு பணத்தை எம்ஜிஆர் அநாவசியமாக வாரி வழங்கியதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகமும் சம்புரோக்ஷணமும் தங்குதடையின்றி நடைபெற அவர் வழிவகை செய்தார். ஹிந்து ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே ஹிந்து ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளவேண்டியது அரசின் தலையாய கடமை.

    சர்ச்சுகளையும் மசூதிகளையும் பாதுகாக்கவேண்டிய, பராமரிக்க வேண்டிய பணி அரசைச் சார்ந்தது அல்ல. ஏனெனில் இவற்றுக்கு கோடிக்கணக்கில் சொத்து உண்டு. இந்த வருவாயைக் கொண்டே சர்ச்சுகளையும் மசூதிகளையும் செம்மையான முறையில் நிர்வகிக்க முடியும்.

    இன்றைய சூழ்நிலையில் மதப் பாரபட்சமின்மை சார்ந்த உறுதிப்பாடு இன்றியமையாதது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத பாரட்சம்தான் தலைதூக்கியுள்ளது. ‘ஹிந்துக்களை நிந்திப்பவர்கள் முற்போக்கு வாதிகள். ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் பிற்போக்கு வாதிகள்’ என்ற மாயை எம்ஜிஆரிடம் இல்லை. இப்போதைய அரசியல்வாதிகள் பலர் இந்த மாயையின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர். போன்ற ஒரு முதல்வர் அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்களுக்கு வாய்க்கவில்லை.





    எம்.ஜி.ஆர் என்ற ஹிந்து…

    * பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில், ‘தோமையார் மலை’ என்று அதைப் பெயர்மாற்றம் செய்துவிடும் சர்ச் விஷமத்தை முறியடித்தார்.

    * ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற தனது ‘ஆனந்த விகடன்’ தொடரில் ஹிந்துக்கள் போற்றும் பசுவை பாதுகாப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.

    * மண்டைக்காட்டில் கிறிஸ்தவ வெறியர்கள் பகவதி அம்மனின் பக்தைகள் கடலில் நீராடப் போனபோது மானபங்கம் செய்ததைக் கேள்விப் பட்டு கொதித்துப் போன எம்.ஜி.ஆர். தமிழனை தமிழ்நாட்டில் தடுப்பதா?” என்று கர்ஜித்தார்.

    * சென்னை கதீட்ரல் சாலை பெயர் மாற்றப்பட்டபோது சர்ச் அமைப்புகள் பெரிய ரகளை நடத்தி தடுத்தன. அதை சுட்டிக்காட்டிய எம்.ஜி.ஆர். ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக கண்டனக் குரல் எழுப்ப வேண்டும், மனுக்கள் குவிய வேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வழிவகை சொல்லிக் கொடுத்தார்.

    * வேலூர் ஆலயத்தில் ஜலகண்டேஸ்வரர் மீண்டும் எழுந்தருளியதற்கு காரணமானவை ஹிந்து அமைப்புகள். சட்டமன்றத்தில் ஹிந்து விரோத கூச்சல் எழுந்தது. மற்ற மதத்தினருக்கு அமைப்பு இருக்கலாமானால் ஹிந்துக்களுக்கு அமைப்பு இருக்கக் கூடாதா?” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் எழுப்பிய கேள்விக்குப் பின் அடங்கினார்கள்.



    COURTESY NET

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1312
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

    Post

    மக்கள் திலகம் புகழ் பாடும் திரியில் பல உறுப்பினர்கள் அதிகமாகவோ, அல்லது சாரசரியாகவோ பங்கெடுபதில்லை, அதனால் புரட்சி நடிகர் பதிவுகள் நிறைய பகிர அனைவரும் விரும்பி வருமாறு பாசத்துடன் அழைக்கிறோம்...
    Last edited by suharaam63783; 17th June 2018 at 06:08 AM.

  4. #1313
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    உன்னை நான் சந்தித்தேன்


    உலகில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு மொழியிலும் நடந்திராத வரலாற்று உண்மை .
    தமிழ் மொழியில்
    மக்கள் திலகத்தின் பேரழகை ஆளுமைகளை பாடலாசிரியர்கள் கவியரசரும் வாலியும் ஜெயலலிதாவின் வாயால் பாட வைத்த வரிகள் உண்மையிலே சிலிர்க்க வைக்கிறது . மக்கள் திலகத்தின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் சாத்தியமான வார்த்தைகள் . சத்தியமான வார்த்தைகள்

    உன்னை நான் சந்தித்தேன்
    நீ ஆயிரத்தில் ஒருவன்
    என்னை நான் கொடுத்தேன்
    என் ஆலயத்தின் இறைவன்
    ஆலயத்தின் இறைவன்


    பொன்னைத்தான் உடல் என்பேன் -
    சிறுபிள்ளை போல் மனம் என்பேன்
    கண்களால் உன்னை மணந்தேன் -
    தொட்டகைகளால் நான் மலர்ந்தேன்
    உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
    (உன்னை)
    உண்மைதானே . 1965ல் மக்கள் திலகத்தின் கதாநாயகியாக ஜெயலலிதா பாடிய அருமையான வரிகள் .


    கன்னம் சிவந்தது எதனாலே
    கைகள் கொடுத்த கொடையாலே
    உன் கன்னம் சிவந்தது எதனாலே
    கைகள் கொடுத்த கொடையாலே

    வண்ணம் மின்னுவதெதனாலே
    வள்ளல் தந்த நினைவாலே
    உன் வண்னம் மின்னுவதெதனாலே
    இந்த வள்ளல் தந்த நினைவாலே

    விடிய விடிய வீசு -
    உன் விழியை எடுத்து வீசு
    உன் கைகளில் நான் குடியிருந்தால்
    உலகம் எனக்கு தூசு

    1965ல் வெளிவந்த கன்னித்தாய் படத்தில் எம்ஜிஆரை பெருமை படுத்திய வரிகள்

    எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
    இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
    நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
    இனியாருக்கு இங்கே கிடைக்கும்

    1966ல் முகராசி படத்தில் ஜெயலலிதா மக்களுக்கு தெரிவித்த வரிகள் .


    இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ
    செவ்வானமே உந்தன் நிறமானதோ
    பொன் மாளிகை உந்தன் மனமானதோ
    என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

    எம்ஜிஆரின் பேரழகை பற்றி 1966 சந்திரோதயம் படத்தில் ....


    ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்
    நீ ஒரு தனிப்பிறவி
    ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்
    ஏன் இனி மறுபிறவி 1966ல் தனிப்பிறவி படத்தில் ......

    என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
    என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
    ஒரு குற்றமில்லாத மனிதன் -
    அவன்கோவில் இல்லாத இறைவன்
    (என்னை)
    ...
    அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
    அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
    குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
    நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
    (என்னை)


    அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
    அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
    அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
    நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
    (என்னை)


    அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
    அந்த வாசலில் காவல்கள் இல்லை
    அவன் கொடுத்தது எத்தனை கோடி
    அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி
    (என்னை)
    தன்னை திரை துறையில் காலூன்ற செய்த பொன் மனச்செம்மலுக்கு ஒரு சமர்ப்பணமாக வாலி அவர்கள் எழுதிய பாடல் இது

    196அரச கட்டளை படத்தில் .. ஜெயாவின் புகழுரைகள்


    பொன்னைத் தேடும்போது பூப்போல வந்து
    மாளிகை ஓரத்தில் நின்றாடுது
    இன்று நாளை என்று எதிர்பார்த்த உள்ளம்
    காவிய வள்ளலைக் கண்டாடுது
    பட்டுக் கன்னம் தட்டித் தட்டித் தவிக்கின்றது
    பார்க்கவும் பேசவும் நினைக்கின்றது

    1968 ரகசியப்போலீஸ் 115

    சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
    இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
    சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
    இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
    தலைமகன் கலைமகள் புண்ணியமோ
    தாய் குலம் வழங்கிய சீதனமோ
    தலைமகன் கலைமகள் புண்ணியமோ
    தாய் குலம் வழங்கிய சீதனமோ

    1968 கண்ணன் என் காதலன்


    நீங்க நெனச்சா நடக்காதா

    நான் நெனச்சது கெடைக்காதா

    1968 கணவன் படத்தில் ....


    காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ
    வேதனை தீர்த்தவன்
    விழிகளில் நிறைந்தவன்
    வெற்றித் திருமகன் நீ....


    அழகாக விடிந்திடும் பொழுதும் உனக்காக
    வேங்கையின் மைந்தனும் எனக்காக
    ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
    ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ..
    (காலத்தை)


    பாவாய் பாவாய் பாரடியோ
    பார்வையில் ஆயிரம் வேலடியோ
    தங்கம் தங்கம் உன் உருவம்
    தாங்காதினிமேல் என் பருவம்

    1969 அடிமைப்பெண் படத்தில் .....

    புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
    தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
    1969 நம்நாடு படத்தில் .........

    நான் உனக்காகப் பிறந்தவள்
    உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
    உன்னை ஒருபோது தழுவி
    மறுபோது உருகிதனியாகத் துடிப்பவள்
    1970 எங்கள் தங்கம் படத்தில் .........
    மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்மின்னுவதென்ன.. என்ன...
    மன்னன் முகம் கனவில் வந்தது
    மஞ்சள் நதி உடலில் வந்தது
    1970 தேடிவந்த மாப்பிள்ளை படத்தில்


    மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
    என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

    1971 நீரும் நெருப்பும் படத்தில்


    என் உள்ளம் உந்தன் ஆராதனை
    என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

    1972 ராமன் தேடிய சீதை படத்தில் ...

  5. #1314
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    முனைவர் இராஜேஸ்வரி செல்லையா

    எம்.ஜி.ஆர்


    எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உதவிய சண்டைக் காட்சிகள்


    எம்.ஜி.ஆர் தன் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக சம வலிமையுள்ள வில்லன், அவனது அடியாட்களாக வரும் ஸ்டன்ட் பார்ட்டி, சண்டைக் கருவிகள், சண்டையின் தீவிரத்தை அதிகரிக்கும் மழை, பாறை, மின்சாரம், பெண்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் சண்டைக்கு இடையே மாட்டிக்கொள்ளும் கதாநாயகி, குழந்தைகள் போன்ற எமோஷனல் விஷயங்கள் என ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமாக அமைப்பார். இவற்றுடன் புலி சிங்கம் பாம்பு போன்றவையும் இவரது சண்டைக் காட்சிகளில் இடம்பெறுவதுண்டு.

    குலேபகாவலியில் புலியோடு மோதும் சண்டை

    1955ம் ஆண்டில் பொங்கல் அன்று கேவா கலரில் வெளிவந்து வெற்றி விழா கொண்டாடிய அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தை தொடர்ந்து ஜூலை 24இல் வெளிவந்த வெற்றிப் படம் குலேபகாவலி. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் ஆர்.ஆர் பிக்சர்சின் ராமண்ணா. இவர் டி.ஆர் ராஜகுமாரியின் தம்பி. இப்படத்தில் எம்.ஜி.ஆர் குலேபகாவலி என்ற மலரைத் தேடி வருவார். அந்த மலர்ச்செடிக்கு ஒரு புலி பாதுகாப்பாக இருக்கும். அந்த மலரைப் பெற எம்.ஜி.ஆர் புலியுடன் சண்டை போட்டுக் கொல்ல வேண்டும். அந்தக்காலத்தில் புலிக்குட்டி கோவிந்தன் என்பவர் புலி,பாம்பு,சிறுத்தை இவற்றை வளர்த்து படப்பிடிப்புக்குத் தருவார். அவரே சண்டைக்காட்சியில் டூப்பாகவும் நடிப்பார். ஆறடி பள்ளம் வெட்டி அதற்குள் கூண்டு அமைத்து புலியை வெளியே வர விடாமல் வைத்து சண்டைக் காட்சியைப் படமெடுக்க திட்டமிட்டனர்.

    எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர் ஷூட்டிங்குக்கு வந்தார். வெளியே கிரேனில் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் இருந்தனர். கோவிந்தன், புலியைக் கூண்டை விட்டு வெளியே வா என்று அழைத்ததும் புலி விருட்டென்று வெளியே வந்து ஆறடி பள்ளத்தை தாவி மேலே ஸ்டுடியோவுக்குள் புகுந்து விட்டது. கோவிந்தன் ஐயோ ஐயோ என் புலி புலி என்று ஓடுகிறார். கிரேன் சட்டென்று மேலே போனது. அதனால் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் உயரே இருக்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர் எங்கும் ஓடவில்லை, பதற்றப்படவில்லை. தன் கையில் துப்பாக்கியுடன் கேமராவின் ஸ்டாண்ட் அருகே புலியைக் குறி பார்த்தபடி நிற்கிறார். அந்த ராஜ உடைக்குள் எங்கே துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தாரோ?. ஆனால், சமயம் வந்ததும் சட்டென்று துப்பாகியால் குறி பார்த்தபடி அங்கேயே நின்றுவிட்டார். இதுதான் எம்.ஜி.ஆரின் சமயோசித புத்தி, துணிச்சல், நிதானம். பிறகு மறுநாள் முதல் ஒரு வாரம் வரை சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர் படங்களில் சிங்கம்

    வேட்டைக்காரன் படத்தில் சிங்கம் ஒரு கதாபாத்திரமாகவே வரும். ஒரு காட்சியில் சிங்கம் வலியுடன் படுத்திருக்கும். அப்போது எம்.ஜி.ஆர் அதன் காலில் குத்தியிருந்த முள்ளை எடுத்துவிடுவார். அது பிறிதொரு சமயம் நன்றிக்கடனுக்காக எம்.ஜி.ஆரின் மகனை சிறுத்தையிடம் சண்டை போட்டு காப்பாற்றும். Androcles and the Lion கதை நினைவுக்கு வருகிறதா..!

    ராமாவரம் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட சிங்கம்

    அடிமைப்பெண் படத்தின் சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர் இரண்டு சிங்கங்களை வாங்கிவந்தார். அதில் ராஜா என்ற ஆண் சிங்கத்தை மட்டும் சண்டைக்காகப் பழக்கினார். சிங்கத்தை வைத்துக்கொள்ள மாநகராட்சியிடம் அனுமதி பெற்றார். அதற்கு நல்ல சாப்பாடு போட்டார். சிங்கத்தை சர்க்கஸில் பார்த்துக்கொண்டவர், ’சர்க்கஸில் கூட நாங்க இப்படி சாப்பாடு போட்டதில்லை’ என்றார். அவ்வளவு கவனிப்பு. தினமும் எம்.ஜி.ஆர் சிங்கத்திடம் போய் அதற்கு உணவளிப்பார்.

    அடிமைப்பெண் ஷூட்டிங்கில்

    சிங்கத்துக்குச் சண்டைக் காட்சியில் நடிக்க மயக்க மருந்து கொடுத்த போதும் அது உர் உர் என்று உறுமிக்கொண்டே இருந்தது அதனால செட்டில் இருந்தவர்கள் பயந்தபடியே இருந்தனர். முதல் நாள் சிங்கம் எம்.ஜி.ஆரை சட்டென்று அறைந்துவிட்டது. அங்கிருந்த ஒருவர் ஐயோ அண்ணனை சிங்கம் அடிச்சுடுச்சு என்று கத்தியதும் எம்.ஜி.ஆர் அவரை ஒரு அறைவிட்டார். ஏன் பீதியைக் கிளப்புகிறாய் என்று அதட்டினார். அதன்பின்பு அங்கிருந்த வசனகர்த்தா சொர்ணம் முதற்கொண்டு சண்டைக்காட்சிக்குத் தேவையில்லாதவர்களை வெளியேற்றினார். பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. காலையில் அடி கொடுத்தவருக்கு மாலையில் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு கொடுத்து இனி அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு எங்கேயும் கத்தக் கூடாது என்று அறிவுரை கூறினார்.

    எம்.ஜி.ஆர்

    அடிமைப்பெண் படத்துக்குத் தொடர்ந்து பத்து நாள்கள் சிங்கத்துடனான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டன. சிங்கம் எம்.ஜி.ஆரின் தோள் மீது முன்னங்கால் இரண்டையும் போட்டு நிற்கும்போது அதன் முழு எடையைத் தாங்கக்கூடிய வலிமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது. சிங்கத்துடன் உருளும்போது அதன் முழு எடையை எம்ஜி ஆர் தாங்கிகொண்டு உருண்டார். எம்.ஜி.ஆரின் உடல்வலிமையும் மனதுத்துணிவும் அந்தக் சண்டைக் காட்சியை வெற்றி பெறச் செய்தது. அந்தக் காட்சியில் ஜெயலலிதா, பண்டரிபாய் போன்ற பெண்களும் இடம்பெற்றது, படப்பிடிப்பை மிகவும் ரிஸ்க் உடையதாக்கியது.

    எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் அதே சிங்கம்

    அடிமைப்பெண் படப்பிடிப்பு முடிந்ததும் இந்தச் சிங்கம் சர்க்கஸுக்குத் திருப்பித் தரப்பட்டது. சிங்கம் அங்கே இறந்ததும் அதன் உடலை எம்.ஜி.ஆர் பம்பாய்க்கு அனுப்பி பாடம் செய்து வாங்கினார் . இப்போது அது எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள் கம்பீரமாக நிற்கிறது.. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இந்தச் சிங்கத்தின் அருகே நின்று படம் எடுத்துக்கொள்கின்றனர்.

    கதைக்கு ஏற்ற சண்டைக் காட்சி வடிவமைப்பு

    படத்தில் எம்.ஜி.ஆர் என்ன தொழில் செய்கின்றாரோ அதற்கேற்ப சண்டைக் காட்சி அமைக்கப்படுவதும் உண்டு, கதை நடக்கும் இடத்துக்கேற்ப சண்டைக்காட்சிகள் அமைக்கப்படுவதும் உண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்.

    விவசாயி படத்தில் கடைசிக் காட்சியில் அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்கள் மீது நம்பியார் முகமூடி அணிந்து பூச்சி மருந்து அடித்ததால் எம்.ஜி.ஆர் அவருடன் சண்டையிடுவார். இந்த முகமூடிச் சண்டை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


    மாட்டுக்காரவேலன் படத்தில் எம்.ஜி.ஆர் தன் குடிசைக்குள் தோசை சுட்டுக்கொண்டிருப்பார். அப்போது வெளியே அசோகனின் ஆட்கள் வந்து அவரை சண்டைக்கு இழுக்கும்போது எம்.ஜி.ஆர் மாட்டுக்குக் கழுத்தில் அணிவிக்கும் சலங்கை கோத்த கழுத்துப்பட்டியை வைத்து சண்டை போடுவார். அதன் வீச்சால் எதிரிகளின் முகத்தில் விழும் கீறல்கள் ஆங்கில எழுத்துகளைப் போல தோன்றும். இதுவும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து பார்க்கும் காட்சி ஆகும்.


    உரிமைக்குரல் படத்தில் நம்பியாரின் ஆட்கள் எம்.ஜி.ஆரின் ரேக்ளா வண்டி வரக் கூடாது என்பதற்காக அவர் வரும் பாலத்துக்கு தீ வைத்து விடுவர். ஆனால், எம்.ஜி.ஆர் சரியாக டைமிங் பார்த்து ரேக்ளாவுடன் அந்தப் பாலத்தை கடந்துவிடுவர். இந்தக் காட்சியில் எம்.ஜி.ஆர் டூப் போடாமல் செய்திருப்பார். அவர் படம் முழுக்க ரேக்ளாவில் வருவதால் ரேக்ளாவைச் சண்டைக்காட்சியிலும் சேர்த்திருப்பார்.


    ரிக்*ஷாக்காரன் படத்தில் ரிக்*ஷாவில் இருந்தபடியே எதிரிகளைக் கம்பு சுற்றி விரட்டியடிப்பார். படகோட்டியில் எம்.ஜி.ஆர் வயதான தாத்தாவாக மாறு வேடத்தில் வந்து தன் படகில் இருந்தபடி அடுத்த படகில் இருந்த அசோகனின் கம்பை அடித்துத் தூக்கி கடலில் எறிவார். கலங்கரை விளக்கம் படம் மாமல்லன் ஒரு கதாபாத்திரமாகவும் அவன் எழுப்பிய மகாபலிபுரமே கதைக்களமாகவும் கொண்டிருந்ததால் அந்த மலைப் பாறைகளில் சண்டைக் காட்சிளை அமைத்திருப்பார்.


    கடைசி சண்டையில் இயற்கையோடு போராட்டம்

    எம்.ஜி.ஆர்

    படத்தின் கடைசி சண்டைக்காட்சி வரும் போது வாழ்வா சாவா போராட்டம் போல தோன்றும். இதில் எம்.ஜி.ஆர் வென்றால் அது நீதியின் வெற்றி வில்லன் வென்றால் அது அநீதியின் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் எம்.ஜி.ஆர் சில இயற்கை சீற்றங்களையும் இரக்க உணர்வுகளையும் இடம்பெறச் செய்வார். இயற்கை சீற்றம், படம் பார்க்கும் ஆண்களை கவர்வதற்கான உத்திமுறை ஆகும்.

    அடுத்ததாக வெள்ளமும் நெருப்பும் சூழ்ந்து ஆபத்தை விளைவிக்கும் சண்டைக் காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளையும் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்வார். இரக்க உணர்வை மிகுவிக்கும் இச்சூழ்நிலையில் இயற்கையோடு போராடும் நிலையும் எம்.ஜி.ஆருக்கு ஏற்படும். இது பெண் ரசிகைகளை கவர்வதற்கான உத்திமுறை ஆகும். இவற்றிற்கு இரண்டு மூன்று உதாரணங்களை மட்டும் இங்குக் காண்போம்.

    நாடோடி மன்னன் படத்தில் கடைசி காட்சிகளில் கழுகுக்குகை சிதைந்து வெள்ளமாக நீர் வெளியேறும். அந்த வெள்ளத்தில் மன்னன் மார்த்தாண்டனைக் காப்பாற்றும் முயற்சியில் நாடோடி போராடுவதை பார்க்கும் ரசிகர்கள் இருக்கையின் நுனிக்கே வந்திருப்பர்.

    என் கடமை படத்தின் கடைசிக் காட்சியில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் சிக்கியிருக்கும் இடத்தில் தண்ணீர் மேலே மேலே ஏறி அவர்களை மூழ்கடிக்கும். மேலும் கடைசியில் எம்.ஜி.ஆரின் ஷூவும் மாட்டிக்கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு டென்ஷனை அதிகப்படுத்தும். தண்ணீரின் மட்டம் உயர்வதும் சரோஜாதேவி மயங்கிக் கிடப்பதும் படம் பார்க்கும் ஆண்களையும் பெண்களையும் டென்ஷனோடு படம் பார்க்க வைக்கும்.

    அரசகட்டளை படத்தில் சரோஜாதேவியைக் காப்பாற்றும் முயற்சியில் எம்.ஜி.ஆர் மணல் மேடாகிவரும் வெற்றி மண்டபத்தை விட்டு வெளியேற முயல்வார். அப்போது ஒவ்வொரு வாயில் வழியாக வெளியேற முயலும் போது அங்கு பாதியில் மணல் கொட்டி வழியை அடைத்துவிடும். அடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடியும்போது படம் பார்க்கும் பெண்கள் பரிதவித்துப் போவார்கள். நாடோடி மன்னனில் அம்பு பட்டு இறந்து கிடக்கும் மானை காட்டி பானுமதியின் மறைவை குறிப்பாக உணர்த்தியது போல அரச கட்டளையில் நரம்பு அறுந்த வீணையை காட்டி சரோஜாதேவியின் மறைவை உணர்த்துவார்கள் எம்.ஜி.ஆரின் ஜோடி அவரது அத்தை மகள் ஜெயலலிதாதான் என்பதை உணர்த்த அவர் கனவில் பாடிய ஒரு டூயட் பாட்டைக் காட்டுவார்கள். உரிமைக்குரல் படத்திலும் என் அண்ணன் படத்திலும் கடைசி சண்டைக் காட்சிகளில் நெருப்பு முக்கிய இடத்தை பெறும்.

    கடைசிக் காட்சியில் விரட்டுதல் [சேசிங்]

    ஆங்கிலப் படங்களில் கார் சேஸிங், பைக் சேஸிங் என்பன ரசிகர்களால் மிகவும் விரும்பப்படுவன. அது போல தமிழ்ப் படத்தில் வைக்க இயலாவிட்டாலும் தேவையும் இல்லை என்பதாலும் எம்.ஜி.ஆர் தனது படங்களில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் சில சேஸிங் காட்சிகளை வைத்திருப்பார்.

    என் அண்ணன் படத்தில் தன் குதிரை வண்டியைக் கொண்டு காரை விரட்டிச் சென்று பிடிப்பார். தாயின் மடியில் படத்தில் இருவரும் சகோதர முறை என்று தெரிந்தவுடன் ஜீப்பில் படு வேகமாக மலை உயர்த்துக்குப் போய் விழுந்து செத்துப்போக எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் முயல்வர். அப்போது சகோதரர்கள் கிடையாது என்பதைச் சொல்ல நாகேஷ் இன்னொரு வண்டியில் படுவேகமாக இவர்களைத் துரத்தி வருவார். மீனவ நண்பன் படத்தில் கடைசியில் மின்சாரப் படகில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு வருவர். இதில் பொம்மை படகுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஸ்டுடியோவுக்குள் வைத்து அதிக காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும்.

    எம்.ஜி.ஆர்

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் எம்.ஜி.ஆர் ஸ்கேட்டிங் செய்தபடியே பலருடன் வாள் சண்டை போடுவார். அடுத்து விஷ ஊசியுடன் ஒருவர் தாக்க வரும்போது அவருடனும் மோதுவார். இந்தக் காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக முதலில் நீச்சல் குளத்திலும் பிறகு தன் வீட்டு மொட்டை மாடியிலும் எம்.ஜி.ஆர் 55ஆவது வயதில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்றார். பறக்கும் பாவை படத்தில் நடிக்கும் போது பார் விளையாட்டு பயின்றார். டூப் இல்லாமல் அவர் டிரபீஸ் விளையாடியிருப்பதை காணலாம். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சண்டையும், பாட்டும் மாறி மாறி வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

    இன்றைக்கும் சிறு நகரங்களில் திரையரங்க உரிமையாளர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் எம்.ஜி.ஆர் படம் போட்டால் போதும் என்கின்றனர். அதுவும் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை போட்டால் வசூல் அள்ளி விடலாம் என்று நம்பும் அளவுக்கு இப்படம் இலாபம் தருகிறது.

    நடிகைகளின் சண்டைக்காட்சி

    எம்.ஜி.ஆர் படத்தில் பெண்களுக்கு முக்கிய ரோல் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருவதுண்டு. அது சரியல்ல. கதைக்கு ஏற்ப அவர் முக்கியப் பங்கை வழங்கியுள்ளார். அதிமுக ஆரம்பித்த பின்பு எம்.ஜி.ஆர் படத்தில் லதாவின் விழிப்புஉணர்வு வசனங்களும் காட்சிகளும் ஏராளமாக இடம்பிடித்தன. அதற்கு முன்பு சாவித்திரி மகாதேவி படத்திலும் பி பானுமதி ராஜா தேசிங்குப் படத்திலும் வாள் சண்டை போட்டு தங்களைக் காத்துக்கொள்ள முனைவார்கள். மருத நாட்டு இளவரசியிலும் அடிமைப்பெண்ணிலும் எம்.ஜி.ஆருக்கே கதாநாயகிகள்தான் சண்டை சொல்லிகொடுப்பர். முகராசி படத்தில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குச் சிலம்பு சுற்ற கற்றுக்கொடுப்பார். இதுவும் பெண்கள் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையைக் கற்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே எம்.ஜி.ஆர் இக்காட்சியை அமைத்திருப்பார்.

    சண்டைக்காட்சிகளில் பாட்டும் ஆட்டமும்

    தமிழ் பாரம்பர்யத்தில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு போன்ற வீர விளையாட்டுகளை ஆட்டம் பாட்டம் என்றே அழைக்கின்றனர். அவற்றிற்கென்று தனி தாளக்கட்டில் பாடல்களும் உள்ளன. அதனை பின்பற்றி எம்.ஜி.ஆர் தன் படங்களில் சில சண்டை காட்சிகளில் ஆடல்பாடலையும் புகுத்தியுள்ளார்.

    நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று’ என்ற பாடல் காட்சி சிறுவர்கள் சண்டைப் பயிற்சி பெறுவதை காட்டும். இதில் எம்.ஜி.ஆர் கையில் இரண்டு வாள்களை ஏந்திய வீசி அபிநயித்தபடி பாட்டுப் பாடிக்கொண்டு வருவார். அப்போது மிகவும் லாகவமாக இரண்டு பக்கமும் வரிசையாக வந்து எட்டு போடும் சிறுவர்கள் மீது படாமல் ஆடிவருவார். ஒரு சிறுவனுடன் மிகவும் மென்மையாக தன் வாளால் அவன் வாளை தட்டிச் சண்டையிடுவார். அவரது வாளின் அசைவில் காணப்படும் மென்மை அவரது நடிப்புக்கு ஓர் உதாரணம் ஆகும்.

    எம்.ஜி.ஆர்

    அரச கட்டளை படத்தில் சரோஜாதேவியை ஆட விடாமல் தடுப்போரை விரட்டி அடிக்கச் சண்டையிடும் காட்சியில் ‘ஆடி வா ஆடி வா ஆடி வா --ஆடப்பிறந்தவளே ஆடி வா - புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா -- ஆடி வா ஆடி வா ஆடி வா’ என்று பாடவும் செய்வார்.

    தெய்வத்தாய் படத்தில் தன்னைச் சிறைப்பிடித்திருக்கும் மூவரை விட்டு தப்பியோடுவதற்கு பார்க்கும் ஒத்திகையாகப் பாட்டோடு கலந்த ஒரு சண்டைக் காட்சி இடம்பெறும் . ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் –அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் --உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்’ என்று பாடியபடி சண்டையிடுவார். பாட்டு முடியும் தருவாயில் வெளியேறிவிடுவார்.

    கலைஞரின் எங்கள் தங்கம் படத்தில் திமுகவின் கட்சி நிகழ்வுகளை விளக்கும் ‘நான் செத்து பொழச்சவன்டா – எமனை பார்த்து சிரிச்சவன்டா’ என்ற பாடல் காட்சியில் சண்டைக் காட்சியும் இணைந்திருக்கும். பாட்டு முடியும்போது அனைவரையும் அடித்து போட்டிருப்பார்.

    சண்டை காட்சியில் நகைச்சுவை

    சண்டை காட்சியில் காமெடி நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் இருந்தால் நகைச்சுவையும் சேர்ந்திருக்கும். இது போன்ற காட்சிகள் கதையின் பிரச்னை தீவிரமடையாத வேளையில் அதாவது படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இதுபோன்ற நகைச்சுவை காட்சி முதல் சண்டைக் காட்சியில் இருக்கும்.

    காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆர் ஓங்கி ஒரு பீரோவை குத்துவார் பீரோ உடைந்துவிடும் உள்ளே போன தன் கை வெளியே வந்ததும் அந்தக் கையில்கட்டியிருக்கும் கை கடிகாரத்தை காதில் வைத்து ஓடுதா என்று பார்ப்பார். சண்டையின் தீவிரத்தில் மூழ்கியிருக்கும் ரசிகர்கள் இந்தக் காட்சியைக் கண்டதும் சிரித்துவிடுவர். எதிரியை மடக்கி துப்பாக்கியைப் பறித்து திரும்பவும் அவரிடமே எறிந்துவிடும் காட்சிகளில் எம்.ஜி.ஆர் துப்பாக்கியின் குண்டுகளை எடுத்துவிட்டு சத்தமில்லாமல் எதிரியின் வீரத்தைச் செல்லா காசாக்கும் போது ரசிகர்கள் சிரித்து மகிழ்கின்றனர்.



    சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்வார் என்பதை இதுவரை கண்டோம். இதனை மேலும் வலியுறுத்த ஒரு முத்தாய்ப்பு சான்று. பணத்தோட்டம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. மறுநாள் காலை வரை நடந்தது. இரவும் பகலும் 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைத்து இந்தக் காட்சியை நடித்து முடித்தார். இந்தக் காட்சியை நீங்கள் படத்தில் பார்த்து அதன் மதிப்பை புரிந்துகொள்ளுங்கள். அவரது பட வெற்றியில் அவர் காட்டும் அக்கறைக்கு இது ஒரு சோறு பதம் ஆகும்.

    COURTESY NET

  6. #1315
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்


    ’நல்லவர்களைக் காக்கவும் தீயவர்களை அழிக்கவும் இறைவன் அவதாரம் எடுப்பான்’ என்கிற கருத்து காலங்காலமாக தெய்வ நம்பிக்கை உள்ளவர்களிடமிருந்து வருகிறது. ஆனால், எம்.ஜி.ஆர் படங்களில் அதைவிட ஒரு படி மேலான மனித நேயத்துடன் தீயவன் அழிக்கப்படாமல் அவனது தீய பண்புகள் மட்டும் அழிக்கப்பட்டு அவன் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டு நல்லவன் ஆவான். தீயவன் திருத்தப்படுவான், மனமாற்றம் அடைவான், இந்நோக்கில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அவரை வாத்தியார் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது.

    வாத்தியார் எம்.ஜி.ஆர்

    ஆங்கிலேயர் வந்து பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, வாத்தியார் என்ற சொல் குஸ்தி வாத்தியார், சிலம்பு வாத்தியார் என்று வீர விளையாட்டுகளைக் கற்றுத் தரும் வாத்தியாரையே குறித்தது. இதற்கென்று ஊர்தோறும் திடல்கள் இருந்தன. இங்கு வந்து ஊர் இளைஞர்கள் வீரப் பயிற்சி பெறுவர். எம்.ஜி.ஆரும் இது போன்ற பயிற்சிகளைக் கோவையிலும் சென்னையிலும் பெற்றிருக்கிறார். கோவையில் சாண்டோ சின்னப்பா தேவர் நம்பியார் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் இந்த வீர பயிற்சிகளில் ஈடுபடும்போது பெரும்பாலும் எம்.ஜி.ஆரே முதலிடத்தில் இருப்பார். அங்கு சின்னப்பா தேவர் மாருதி தேகப் பயிற்சி சாலை என்று ஓர் உடற்பயிற்சி கூடம் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும் சென்னையில் வட பழனியில் ஓர் இடம் வாங்கி அதில் ஸ்டண்ட் நடிகர்களைப் பயிற்சி பெறும்படி ஊக்கமளித்தார். இன்று அந்த இடம் ஜானகி ராமச்சந்திரா கலாலயம் என்ற பெயரில் ஜே.ஆர்.கே பள்ளிக்கூடமாக உள்ளது.

    எம்.ஜி.ஆர்

    உளவியல் கருத்து

    ஏழை ரசிகர் தன் கொடுமைக்கார முதலாளியை அடித்து உதைக்க வேண்டும் என்ற உள்மன ஆசை எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை காண்பதன் மூலம் நிறைவேறுகிறது. உளவியல் அணுகுமுறையில் ஆராய்ந்தால் ஒருவர் கனவில் எலி, பூனையைத் துரத்தினால் அவர் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறார். அதிலிருந்து விடுபட அவர் உள்மனம் விரும்புகிறது. எனவே, அவர் கனவில் வலிமை குறைந்த எலி, வலிமையான பூனையைத் துரத்துகிறது. இது அவரது ஒடுக்கப்பட்ட ஆசையின் [oppressed wishes] வெளிப்பாடு ஆகும். இதுபோன்ற ஆசை இருப்பவர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது மன அமைதி பெறுகிறார். ஒடுக்குதலிலிருந்து விடுபட்ட உணர்வைப் பெறுகிறார். இதை [vicarious suffering] என்பர். அதாவது படம் பார்ப்பவர் தன் துக்கத்தையும் ஆற்றாமையையும் படத்தில் வரும் நடிகர்களின் இன்ப துன்பங்களோடு இணைத்து பார்த்து இன்பமோ துன்பமோ அடைவதாகும்.

    ரசிகர் வகைகள்

    சண்டைக் காட்சிகளை ரசிப்பவரில் இரண்டு வகையினர் உண்டு. ஒருவர் நேரடியாக மனதளவில் சண்டைப் போட்டு மகிழ்வார். இன்னொருவர் அவ்வாறு சண்டையிடாமல் முதல் பிரிவினரை வேடிக்கை பார்த்து மகிழ்வார். முதல் பிரிவைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஏழை தொழிலாளி ஒருவர் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சியைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்குள் மனதளவில் கூடு விட்டு கூடு பாய்கிறார். அவரே கெட்டவனை அடித்து உதைக்கும் உணர்வைப் பெற்று அமைதியடைகிறார். இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர்கள், நமக்காகவே எம்.ஜி.ஆர் கெட்டவனை அடித்துத் திருத்துகிறார் என்று நம்பி அமைதி பெறுகின்றனர். இவர்கள் எந்தச் சமூக மாற்றத்துக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு யாராவது ஒருவர் தானாக வந்து நல்லது செய்ய வேண்டும். அதன் பலனை மட்டும் இவர்கள் அடைய வேண்டும். எம்.ஜி.ஆர் படம் பார்த்துவிட்டு வரும் கூட்டத்தினரில் முதல் வகையினர் வழியில் இருக்கும் தட்டி போர்டுகளை உதைத்து கீழே தட்டிவிட்டு அழிச்சாட்டியம் செய்த படி வருவர். இந்த இரண்டாவது பிரிவினர் அவர்களை ஊக்கப்படுத்தி ரசித்துச் சிரித்தபடி நடந்துவருவர்.

    சண்டையின் பாரம்பர்யம்

    ராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் என நம் பாரம்பர்ய நூல்கள் அனைத்தும் இறுதியில் பெரிய சண்டையின் மூலமாகவே நீதியை, நன்மையை நிலைநாட்டுகின்றன. அதன் வழியில் திரைப்படத்திலும் பெண், நிலம், பொருள் எனப் பல்வேறு காரணங்களுக்காகக் கடைசியில் ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் இடையில் சிறு சிறு சண்டைக் காட்சிகளும் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் இது போன்ற சண்டைகள் இடம்பெறுகின்றன. ஆக மனித சமுதாயம் தோன்றிய காலம் தொட்டு தன் தேவை அதிகரிக்கும்போது போட்டிகளும் பொறாமையும் பேராசையும் உருவாகி சண்டைகள் வருகின்றன. இது நபர் அளவில் வந்தால் வாய்ச்சண்டை என்றால் தகராறு என்றும் கைகலப்பு ஏற்பட்டால் சண்டை என்றும் நாடு அல்லது சமூகம் என்றளவில் ஏற்படும்போது அதைப் போர் என்றும் அழைக்கிறோம்.

    எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர் படத்தில் சண்டைக் காட்சி அமைப்பு

    தர்ம யுத்த முறைகளின் அடிப்படையில் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள் அமைக்கப்படும்.
    1.எம்.ஜி.ஆர் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போவதோ தன் பலத்தைக் காட்டுவதற்காக யாரையும் முதலில் அடிப்பதோ கிடையாது.
    2. கெட்டவனின் தீய செயலைத் தடுக்கவே அவர் அவனைத் தாக்குகிறார்.
    3. கெட்டவன் தன்னைத் தாக்க வரும்போது தற்காப்புக்காக அவனை அவர் எதிர்க்கிறார்.
    4. ஏழை, மூதியவர் பெண்கள் குழந்தைகள் என உடல் பலமற்றவர் , கெட்டவனை எதிர்க்க வலுவற்றவர் அவனின் பிடியில் சிக்கித் தவிக்கும்போது அவர்களை அவனிடமிருந்து மீட்க அவனுடன் சண்டைப் போடுகிறார்.

    சண்டைப் போடும்போது

    எம்.ஜி.ஆர் சண்டையிடும் போது வில்லனை முதுகில் குத்துவதோ அல்லது அவன் ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும்போது தாக்குவதோ கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியார் எம்.ஜி.ஆரின் குத்துவாளை அவர் இடுப்பிலிருந்து பிடுங்கிக்கொண்டு சண்டை செய்யும் போது எம்.ஜி.ஆர் அதை நம்பியாரிடமிருந்து தன் நீண்ட வாளால் தட்டிப் பறித்துவிட்டு ‘நீ உன் குத்துவாளை எடுத்துக்கொள் இது என்னுடையது’ என்பார். அதன் பின்பு அச்சண்டை ஒரு பெரிய வாள் ஒரு குத்து வாள் எனச் சம பலத்துடன் தொடரும். படகில் மனோகருடன் எம்.ஜி.ஆர் சண்டையிடும்போது நம்பியார் விஷம் தோய்ந்த கத்தியை மனோகரின் முதுகில் விடுவார். அப்போது முதுகில் தாக்குகிறாயே நீயெல்லாம் ஓர் ஆண்மகனா என்று நம்பியாரைக் கண்டிப்பார்.

    வில்லிகளுடன் சண்டை

    எம்.ஜி.ஆர் படங்களில் பெண்கள் வில்லன் கூட்டத்திலிருந்து தொல்லை கொடுத்தாலும் அவர்களுடன் அவர் நேரடியாக மோதுவது இல்லை. மகாபாரதத்தில் சிகண்டி பீஷ்மர் கதையின் சாராம்சமே இதுதானே. பெண்ணை அடிப்பது தவறு என்பதால் நவரத்தினம் படத்தில் குமாரி பத்மினி எம்.ஜி.ஆருடன் மோதும் போது அவர் விலகிக் கொள்வார் குமாரி பத்மினி பொத் பொத்தென்று கீழே விழுந்து அடிபட்டு சோர்வடைவார். பிறகு எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப்போட்டுவிடுவார். அது போல இதயக்கனியில் மெயின் வில்லி ராஜசுலோசனாவிடம் இருந்து உண்மைகளை வரவழைக்க பெண் போலீஸ்களைப் பயன்படுத்துவார். எம்.ஜி.ஆர் வில்லியின் அடியாட்களுடன் நேருக்கு நேர் மோத சிதம்பரம் அருகே உள்ள ஒரு மண் திட்டையில் கப்பல் போல செட் அமைத்து சண்டைக் காட்சிகளை எடுத்தார். அந்த மேடு இன்றும் எம்.ஜி.ஆர் மேடு என்று அழைக்கப்படுகிறது.

    எம்.ஜி.ஆர்

    சண்டைக்குப் பின்

    எம்.ஜி.ஆர் தன் படங்களில் வில்லன் நடிகருடன் சண்டை முடிந்த பிறகு ஓரிரு படங்கள் தவிர மற்றவற்றில் அவர் அவனைக் கொல்வது கிடையாது. அவனை ஊனப்படுத்துவதும் இல்லை. அவன் செயல்பாட்டை மட்டும் முடக்குவார். பல படங்களில் கட்டிப்போட்டு விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுப்பார் அல்லது அந்த நேரத்தில் போலீஸே வந்துவிடும். புத்திமதி கூறுவதாகவும் வில்லன் திருந்தி மன்னிப்புக் கேட்பதாகவும் சண்டையின் முடிவு அமையும். பல படங்களில் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற சொல்லுக்கேற்ப வில்லன் அவன் செய்த தீய செயல்களுக்கு அவனே பலியாகிவிடுவான்.

    வில்லனும் இதர ஸ்டண்ட் நடிகர்களும்

    எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் [88] வில்லனாக நடித்தவர் அசோகன். ஆனால், எம்.ஜி.ஆர் என்றாலே அவரது பரம விரோதி என்று கருதுவது நம்பியாரை மட்டுமே. பி. எஸ் வீரப்பா மஹாதேவி சக்கரவர்த்தி திருமகள் ஆனந்த ஜோதி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இவர்களுடன் துணை வில்லனாக ஆர்.எஸ். மனோகர் நடிப்பதுண்டு. இந்த வில்லன்களின் அடியாட்களாக எம்.ஜி.ஆரின் ஸ்டண்ட் குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் , ராமகிருஷ்ணன், நடராஜன், காமாட்சி, தர்மலிங்கம் போன்றோர் இடம்பெறுவர். இதயக்கனி, அடிமைப்பெண் போன்ற படங்களில் ஜஸ்டினுடன் தனிச் சண்டையும் இருந்தது. ஆனால், அவர் முக்கிய வில்லன் கிடையாது. புத்தூர் நடராஜன் சியாம் சுந்தர் ஆர்.என்.நம்பியார் சங்கர் போன்றோர் எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பர்.

    வாள் சண்டை

    வாள் சண்டையில் எம்.ஜி.ஆர் வல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அந்த வாள் வித்தையை மேடை நாடகங்களில் கூட நடித்துக்காட்டினார். பி.யு.சின்னப்பாவைப் போல வாள் சுழற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்று அசுரப் பயிற்சி பெற்றார். அவர் நாடக மன்றத்தின் முதல் நாடகமான இடிந்த கோபுரம் நாடக மேடையில் குண்டுக் கருப்பையாவுடன் சண்டைக் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது. வாள் மட்டும் அல்லாது குறுவாள் அல்லது குத்துவாள். பிச்சுவா போன்றவற்றையும் வைத்து சண்டைப் போடுவதையும் நாம் வாள் சண்டை என்ற பிரிவிலேயே சேர்த்துவிடுவோம்
    எம்.ஜி.ஆருக்குச் சமமாக வாள் சண்டைப் போடுவதில் நம்பியார் கெட்டிக்காரர். அரச கட்டளையில் சரோஜா தேவியின் காதல் பரிசுக்காக இவர்களின் சண்டை சுவாரஸ்யமாக இருக்கும். வசனமும் இடம்பெறும். முதலில் எம்.ஜி.ஆர் சிரித்தபடி சண்டைப் போடுவார். தன் கையில் இருந்த மாலையை நம்பியார் பறித்துவிடவும் அதைத் திரும்பப் பெறுவதற்காக பின்பு கோபமாகச் சண்டை போடுவார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா என்று நம்பியார் கேட்க சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்று எம்.ஜி.ஆர் பதிலளிக்க ஒரு விவாதத்துடன் தொடங்கிய பிரச்னை இறுதியில் வாள் சண்டையில் முடியும். அதன் பின்பு கடற்கரையில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் ’’இரு பூங்கொடி சற்று விளையாடி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்பியாருடன் சரிவுப் பாறையிலும் கடல் தண்ணீரிலும் வாள் சண்டை இடுவது இன்றும் ரசிக்கப்படுகின்றது. அதனால்தான் இன்றும் இப்படம் கோவாவில் நடைபெறும் சர்வதேச விழாவில் இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் மகாதேவி, அரசக் கட்டளை போன்ற படங்களில் பி.எஸ். வீரப்பாவுடன் போடும் வாள் சண்டைகளும் சிறப்பாக இருக்கும்.

    எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர் இரண்டு கையாலும் வாள் சுழற்றத் தெரிந்தவர். மாயா மச்சீந்திரா படத்தில் இரண்டு கையாலும் வாள் சுழற்றி சண்டைப் போட்டார். மருத நாட்டு இளவரசி முதலான சில படங்களில் எம்.ஜி.ஆர் பத்துப் பேர் வந்து சுற்றி நின்று சண்டைப் போட்டாலும் தன் கை வாளை கொண்டு சுழன்று சுழன்று உட்கார்ந்து எழுந்து குதித்து தாவிச் சண்டைப் போடும் காட்சிகள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். இதைப் போல கம்புச் சண்டையும் பல பேருடன் மோதுவதாக அமையும்

    எம்.ஜி.ஆர் மணிமாறன், கரிகாலன் என இரண்டு வேடங்களில் நடித்த நீரும் நெருப்பும் படத்தில் வாள் சண்டையில் ஒருவர் வலது கை பயிற்சி உள்ளவர்; அடுத்தவர் இடது கை பயிற்சி உள்ளவர். இருவரும் மோதும் காட்சியில் டூப் போட்டு எடுத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் முகம் தெரியும் காட்சிகளில் கதாபாத்திரத்துக்கு ஏற்ப இரண்டு கைகளிலும் வாளை மாற்றி அனாயசமாக சண்டையிடுவார். இதே படத்தில் பிச்சுவா சண்டை ஷூட்டிங் நடக்கும்போது வந்த தர்மேந்திராவும் ஹேமாமாலினியும் இவர் நிஜ பிச்சுவா வைத்து சண்டைப் போடுவதை பார்த்து வியந்தனர்.

    ஒரு படத்தில் நம்பியார் வீசிய கத்தி எம்.ஜி.ஆரின் கண் புருவத்தை வெட்டிவிட்டது. அதன் தழும்பு கடைசி வரை மாறவில்லை. புருவம் வரையப்படாத அவர் படங்களில் இந்தத் தழும்பைக் காணலாம். எம்.ஜி.ஆர் வால் வீசிய வேகத்தில் எதிரே சண்டையிட்ட ஸ்டன்ட் நடிகரின் வாள் நுனி உடைந்து பறந்தது. அதை எம்.ஜி.ஆர் தன் கையால் லாகவமாகப் பிடித்து ‘இந்தா இதை என் நினைவாக வைத்துக்கொள்’ என்றார்.

    மீனவநண்பன் படத்தில் வாள் சண்டையில் வெற்றி பெற்றவருக்கே தன் மகள் லதா சொந்தம் என்று வி.ஆர்.ராமசாமி சொன்னதால் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைப் போடுவார்கள். இது காலத்துக்கும் கதைக்கும் பொருந்தவில்லை என்றாலும் சண்டை ரசிக்கும்படியாக இருந்ததால் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இச்சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர் பெல்பாட்டம்ஸ் போட்டு நடித்திருப்பார். மற்ற காட்சிகளில் கட்டம் போட்ட சங்கு மார்க் லுங்கி கட்டி வருவார். இந்தப் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கு மூச்சு வாங்குவதை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதறகாக அவர் ஒரு பக்கமாகப் போய் சில நிமிடங்கள் யாருடனும் பேசாமல் நிற்பார் என்று ஸ்ரீதர் தன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

    எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ஒரு கையில் பெரிய வாள் மறு கையில் சிறு குத்துவாள் வைத்து சண்டைப் போடுவதாகவும் காட்சிகள் உண்டு. அடிமைப்பெண் படத்தில் அப்பா எம்.ஜி.ஆர் சூரக்காட்டின் தலைவனான அசோகனுடன் வலை கட்டி அதில் சண்டையிடும் காட்சியில் அசோகனுக்கு ஒரு காள் ஊனம் என்பதால் எம்.ஜி.ஆரும் ஒரு காலை மடித்துக்கட்டி அவருடன் மோதுவார். இது ஒரு புதுமையான சண்டைக் காட்சி. எதிரி தனக்குச் சம பலம் உள்ளவனாக இருக்க வேண்டுமே தவிர நம்மை விட குறைந்த பலம் உள்ளவனுடன் மோதுவது ஆண்மை ஆகாது அது வீரம் எனப் போற்றப்பட மாட்டாது என்பதால் சவால் விட்டு ஒற்றைக் காலுடன் மோதினார். இதில் அசோகனுக்கு டூப் போட்டவர் சங்கர்.

    எம்.ஜி.ஆர் சட்டமன்ற தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் நாள் நெருங்கிவிட்டதால் அவசரம் அவசரமாக மைசூரில் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு நடந்தது. அதில் எம்.ஜி.ஆருடன் சண்டைக் காட்சியில் நடித்த கடைசி ஆள் இந்த சங்கர். இவர் நம்பியாருக்கு டூப் போட்டு இருந்தார்.

    சண்டைக் கருவிகள்

    வாள் சண்டை என்பது அரச குடும்பம் மற்றும் படை வீரர்களுக்கு உரியது. அது தவிர சாமன்ய மக்களுக்குத் தெரிந்த கிராமங்களில் அதிகமாகப் புழங்குகின்ற சிலம்பம், சுருள் வாள், செடிக் குச்சி, மான் கொம்பு போன்ற கருவிகளைக் கொண்டும் சண்டைக் காட்சிகளை எம்.ஜி.ஆர் தன் படங்களில் வைத்தார்.

    சிலம்பு

    எம்.ஜி.ஆர்

    சிலம்பாட்டம் பல படங்களில் இடம்பெற்றாலும் பெரிய இடத்துப் பெண் படத்தில் வரும் சிலம்புச் சண்டை மறக்க முடியாதது. மயக்க மருந்து கலந்த சோடாவைக் குடித்ததால் எம்.ஜி.ஆர் போட்டியில் தோற்றுப் போய் ஊரை விட்டே வெளியேறிவிடுவார். தான் கல்யாணம் செய்ய ஆசைப்பட்ட பெண்ணையும் இப்போட்டியின் தோல்வியால் இழந்துவிடுவார். ஆனால், ரிக்*ஷாக்காரன் படத்தில் சுற்றி நின்று தன்னைத் தாக்கும் மூன்று பேருடன் ரிக்*ஷா சீட்டில் உட்கார்ந்தபடியே கையில் சிலம்பு வைத்து எம்.ஜி.ஆர் சண்டைப் போட்டு மஞ்சுளாவைக் காப்பற்றுவார். இக்காட்சியில் சர்க்கஸில் வருவது போல ரிக்*ஷாவை வட்டப் பாதையில் சுற்றிச் சுற்றி வரும்படி அமைத்திருந்தனர். தாயைக் காத்த தனயன் படத்தில் எம்.ஜி.ஆர் கம்பு சுற்றி வெற்றி பெற்றதைப் பாராட்டும் எம்.ஆர்.ராதா தன் கந்த விலாஸ் டீக்கடையில் வந்து ஒரு கப் டீ குடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்வார்.

    எங்க வீட்டு பிள்ளை படத்தில் வரும் நான் ஆணையிட்டல் பாட்டில் எம்.ஜி.ஆர் சவுக்கை சுழற்றியபடி படிக்கட்டுகளில் ஓடி ஆடிப் பாடும் காட்சிகளில் அவர் சிலம்பு சுற்றுவதில் பின்பற்றும் காலடி வைப்பு முறைகளையே பயன்படுத்தியிருப்பார்.

    செடிக்குச்சி

    செடிக்குச்சி என்பது சிலம்புக் குச்சியைப் போலவே அளவில் சிறியது. எம்.ஜி.ஆர் ஒருவருக்கே திரையுலகில் இந்தச் செடிக்குச்சி சுற்றத் தெரியும். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆர் சிறிய பைப்புகளை வைத்து செடிக்குச்சி விளையாட்டை நிகழ்த்துவார். திரையரங்கில் இந்தக் காட்சியை நம் ரசிகர்கள் ரசித்தது போல அமெரிக்க மாணவர்களும் ரசித்தனர்.

    கோபுடா

    கோபுடா என்பது கையில் மாட்டும் ஒரு முள் கவசம் அகும். அரசிளங்குமரி ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட சூழ்நிலையில் அதில் க்ளைமாக்ஸ் சண்டையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர கருதிய எம்.ஜி.ஆர் இந்தக் கோபுடா சண்டையை வைத்தார். இதில் கெட்டிக்காரரான சின்னப்பா தேவரை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து அரை மணி நேரத்தில் சமாதானமாகி செட்டுக்கு அழைத்து வந்தார். ஆக்ரோஷமான இந்தக் கோபுடா சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

    மான் கொம்பு

    மான் கொம்பு சண்டையை உழைக்கும் கரங்கள் படத்தில் சங்கர் அருமையாக வடிவமைத்திருப்பார். கால் சவடு [ஸ்டெப்] வைத்து எம்.ஜி.ஆர் இந்தச் சண்டையைப் போடும்போது ஒரு நேர்த்தியான கலை வடிவத்தைக் காணலாம்.

    மல்யுத்தம்

    எம்.ஜி.ஆர் பளு தூக்கும் போட்டியில் நம்பியார் சின்னப்பா தேவர் தோற்கடித்து விடுவார். மல் யுத்தம் குஸ்தி போன்றவற்றையும் முறைப்படி கற்றிருந்தார். காஞ்சித் தலைவன் படத்தில் அவர் மல்யுத்தத்தில் வல்லவனான மாமல்லன் நரசிம்ம பல்லவன் வேடத்தில் நடித்ததால் ஒரு தனி மல்யுத்தக் காட்சி வைக்க திட்டமிட்டனர். அப்போது ஆந்திராவில் காவல் துறையில் பணியாற்றிய பஜ்ஜையா என்பவர் மல்யுத்தப் போட்டிகளில் பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றிருந்தார். நல்ல உயரமும் கம்பீரமான தோற்றமும் கொண்டிருந்தார். அவரை அழைத்து காட்சியை விளக்கி நடிக்கவைத்தனர். எம்.ஜி.ஆரை அவர் சரியாக மதிப்பிடாததால் சொன்ன படி கேட்காமல் நடித்துவந்தார். மறுநாள் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் அவரை தலைக்கு மேலே தூக்கிக் கீழே போட்டார். பஜ்ஜையா எழுந்து வந்து எம்.ஜி.ஆர் காலைப் பிடித்து அழுதுவிட்டார். இதுவரை யாரும் அவரை அப்படித் தூக்கி எறிந்ததில்லை அது ஒரு மல்யுத்த வீரனுக்குப் பெருத்த அவமானம். எம்.ஜி.ஆருக்கு மல்யுத்தம் தெரியும் என்பதை நம்பாமல் அலட்சியமாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டார்.

    காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஆர்.எஸ்.மனோகரும் மல்யுத்தம் செய்வர். ஆர்.எஸ்.மனோகர் மல்யுத்தம் கற்றவர். பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும் மல்யுத்தக் காட்சிகள் இடம்பெறும். அன்பே வா படத்தில் வரும் சிட்டிங் புல் கர்நாடகக் காவல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு எம்.ஜி.ஆருடன் ஒரு படத்திலாவது ஃபைட் சீனில் நடிக்க ஆசை. இவர் அன்பே வா படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளில் எம்.ஜி.ஆருடன் மோதினார். அவரையும் எம்.ஜி.ஆர் அப்படத்தில் தோளுக்கு மேலே தூக்கி வைத்திருந்து கீழே போடுவார்.

  7. #1316
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்புகளுக்கும் அவரது தனிமனிதச் செயற்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் தந்தை அன்பை அறியாதவர். தாயால் வளர்க்கப்பட்டவர். தாயாரின் கண்டிப்பு மொழிகளும் வசைமொழிகளும் அவரது நினைவில் நின்றன. அண்ணனின் பாசமும் அன்பும் ஏழு வயது முதல் அவரை திரையுலகம் வரை அரவணைத்துக் கொண்டு சென்றது. எம்.ஜி.ஆரின் அரசியல் ஈடுபாட்டில் அவர் அண்ணனுக்கு பெருவிருப்பம் கிடையாது. அம்மா, அண்ணன், அண்ணி, மனைவி குழந்தைகள் மட்டுமே அவரது குடும்பம் திரையுலகிலும் அரசியலிலும் அவருக்கு நண்பர்கள் இருந்தனர். நலம் விரும்பிகள் இருந்தனர். அடி வருடிகள் இருந்தனர். எதிரிகளும் துரோகிகளும் அவரைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தவர் பேச்சைக் கேட்டு அவரைப் பகைத்துக் கொண்ட சில அப்பாவிகளும் இருந்தனர். அவரது ரசிகர்கள் அவரது ரத்தத்தின் ரத்தமாக விளங்கினர். அவரது உயிர்நாடியாக இருந்தது உழைக்கும் வர்க்கத்தினரும் தாய்மாரும் பெண்களும் ஆவார். இவர்களை மையப்படுத்தியே அவரது படத்தலைப்புகள் வைக்கப்பட்டன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்பு சில இலக்கியச்சான்று உடைய தலைப்புகளைப் பற்றி காண்போம்.


    ஆயிரத்தில் ஒருவன்

    எம்.ஜி.ஆர்

    1965ஆம் ஆண்டு ஜூலை ஒன்பதாம் நாள் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். கம்ப இராமயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்த போது கம்பர் தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை நூறுபாட்டுக்கு ஒரு பாட்டாகப் புகழ்ந்திருந்தார். அதனைக் கேட்ட சபையினர் ‘இராமகாதையில்’ (கம்பர் சூட்டிய பெயர்) நரஸ்துதி (மனிதனைப் புகழ்வது) அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். உடனே கம்பர் சரி நான் ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடலாக சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து பாடுகிறேன் என்றார். மேலும், சடையப்ப வள்ளல் நூற்றில் ஒருவர் அல்லர் அவர் ஆயிரத்தில் ஒருவர் என்றார். இந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற பெயர் எம்.ஜி.ஆரின் படத்துக்கு சூட்டப்பட்டது. எம்.ஜி.ஆரின் கதை இலாகாவில் இருந்த வித்வான் வே. இலட்சுமணன் எம்.ஜி.ஆர் கம்பராமாயணம், தொல்காப்பியம் போன்றவற்றைப் படிக்க உதவினர். மேல்சபைத் தலைவராக இருந்த மா.பொ.சி. அவருக்குச் சிலப்பதிகாரச் சுவையைப் புகட்டினார்.

    கம்பன் விழா ஒன்றில் சிறப்புரை ஆற்றிய எம்.ஜி.ஆரை வியப்புடன் பார்த்த மு.மு. இஸ்மாயில் அவர்கள் ‘நீங்கள் கம்பனை எங்குக் கற்றீர்கள்?’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர் சிறுவயதில் சம்பூர்ண இராமாயணத்தில் நடித்த காலத்தில் இருந்தே எனக்கு கம்பராமாயணத்தில் பரிச்சயம் உண்டு என்றார்.

    கம்பன் விழாவில் பங்கேற்கும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு கம்பராமாயணம் தெரிந்திருந்தது. அவர் படத்துக்கு அவருடன் இருந்த இலக்கிய இதிகாசத் தேர்ச்சி பெற்ற நண்பர்கள் காட்சி சித்தரிப்பு. வசன உதவி, பெயர் சூட்டல் ஆகியவற்றிற்கு உதவினர். ஆஸ்தான நாத்தகி, கவிஞர் என்பவை எல்லாம் அவர் முதலமைச்சர் ஆன பிறகு நடைமுறைக்கு வந்ததற்கு அடிப்படை காரணம் அவர் சினிமாவில் இருக்கும் போதே இலக்கியம் இதிகாசம், இசை, நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை தன்னுடன் வைத்திருந்ததே ஆகும்.

    ஆசை முகம்

    எம்.ஜி.ஆரின் தேர்தல் நிதியை விட அவர் தன் முகத்தை ஒருமுறை மக்களிடம் வந்து காட்டினாலே போதும் திமுக அதிக ஒட்டுகளை பெற்று வெற்றி வாகை சூடும் என்றார் அறிஞர் அண்ணா. எம்.ஜி.ஆரின் மலர்ந்த முகத்தைப் பார்க்க மணிக்கணக்கில் மக்கள் காத்துக் கிடந்தனர். இதனால், ஆசை முகம், முகராசி என்ற பெயர்கள் அவர் படங்களுக்கு சூட்டப்பட்டன.

    ஆசை முகம் (10-12-65) படம் தமிழில் வந்த முதல் முகமாற்று அறுவை சிகிச்சை படம் ஆகும். ராம்தாஸ் தன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக எம்.ஜி.ஆர் முகம் போல மாற்றிக் கொள்ளும் படம் ஆசைமுகம். ரேவதியும் அவர் கணவரும் இதே கதையமைப்பில் ஒருபடம் எடுத்தபோது ‘புதியமுகம்’ என்று பெயரிட்டனர். இது அறிவியல் சாதனையைக் குறிக்கும் பெயர். ஆனால் எம்.ஜி.ஆர் முகம் ‘செண்டிமெண்ட்’ சார்ந்தது. அது “ஆசைமுகம்”.

    பாரதியார் பாடல்களில் காதலி ஒருத்தி

    “ஆசைமுகம் மறந்து போச்சே - இதை
    ஆரிடம் சொல் வேண்டி தோழி”

    என்று காதலனின் முகம் மறந்துவிட்டதை பற்றி தன் தோழியிடம் கூறுவாள். இந்த ‘ஆசை முகம்’ என்ற பெயர் ரசிகர்கள் ஆவலோடு பார்க்க விரும்பும் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு ஏற்ற பெயராகவும் கதையோடு பொருந்திச் செல்கின்ற பெயராகவும் அமைந்தது.

    முகராசி

    எம்.ஜி.ஆர்

    1966ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் நாள் தேவர் ஒரு படம் வெளியிட்டார். எம்.ஜி.ஆரை வைத்து 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனை படைத்த இப்படத்துக்கு அவர் ‘முகராசி’ என்று பெயரிட்டார். படம் அமோக வெற்றி. குறைந்த செலவில் எடுத்து நிறைய இலாபம் கிடைத்த படம் முகராசி. இதில் ஜெயலலிதா சிலம்பு சுற்றுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்.ஜி.ஆர் அவருக்கு தற்காப்புக் கலையின் அவசியத்தை எடுத்துரைப்பார். அமெரிக்க மாணவிகள் இப்படத்தைப் பார்த்தபோது ஜெயலலிதா கதாபாத்திரத்தை ‘Empowered Woman' எனப் பாராட்டினார்.

    குடியிருந்த கோயில்

    எம்.ஜி.ஆர் படங்களில் தாய்க்குலம் விரும்பும் வகையில் தாய்ப்பாசம் இடம் பெற்று இருக்கும். தந்தைப் பாத்திரம் புதியபூமி, விவசாயி, பணக்காரக்குடும்பம் போன்ற சில படங்களில் மட்டுமே காணப்படும்.

    தாயைப் பற்றிக் குறிப்பிடும்போது சில பெரியவர்களின் கதைகள் நமக்கு நினைவுக்கு வரும். உலகத்தையே வெறுத்த துறவிகளால் கூட தாய்ப்பாசத்தை துறக்க இயலவில்லை. நபிகள் நாயகம் தாயின் காலடியில் உன் சொர்க்கம் இருக்கிறது என்றார். இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது தன் சீடர்களைப் பார்த்து ‘இதோ உன் தாய்’ என்று தன் தாயாரை பார்த்துக்கொள்ளும்படி வேண்டுகிறார். சங்கரர் தன் தாய்க்கு இறுதிக்கடன் தீர்க்க எங்கிருந்தாலும் வந்துவிடுவேன் என்கிறார். ஒரு தாய்க்கு மகன் செய்யும் கடமையை அவர் மறக்கவில்லை. பட்டினார்த்தார் தன் தாயின் சிதைக்கு தீ மூட்டிய பிறகு குடியிருந்த கோயிலை தீக்கு இரையாக்கிவிட்டேனே என வருந்துகிறார். இங்கு தாயை இவர் ‘குடியிருந்த கோயில்’ என்று குறிப்பிட்டது, எம்.ஜி.ஆர் படத்துக்கு பொருத்தமான தலைப்பாக இடம்பெற்றது. ஆரம்பத்தில் இதற்கு ‘சங்கமம்’ என்றுதான் பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் அதைவிட குடியிருந்த கோயில்’ என்ற பெயரை எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமாகத் தோன்றியது. படமும் வெள்ளிவிழா கொண்டாடியது.

    உலகம் சுற்றும் வாலிபன்

    எம்.ஜி.ஆர்

    தமிழ்மொழி அகராதியைத் தொகுத்த ஏ.சிதம்பரநாதன் செட்டியார் உலகநாடுகள் பலவற்றைச் சுற்றிவந்து உலகம் சுற்றிய தமிழன் என்று ஒரு நூல் வெளியிட்டார். எம்.ஜி.ஆர் இத்தலைப்பை உலகம் சுற்றும் வாலிபன் என்று தனக்கேற்றபடி மாற்றிக் கொண்டார்.

    காவல்காரன்

    1967-ல் திமுக வெற்றி பெற்றதும் செப்டம்பர் ஏழாம் நாள் வெளிவந்த திரைப்படம் இது. இந்தப் படத்துக்கு முதலில் “மனைவி” என்று பெயர் சூட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி குழந்தை பெறும் படமாக இருந்ததால் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளித்து “மனைவி” என்று பெயர் சூட்டப்பட்டது.

    விளம்பர ஸ்டில்கள் எடுத்த போது “ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கையில் டார்ச் லைட்டும் மறுகையில் சிறு தடியுமாக இரவில் காவல்பணி மேற்கொள்ளும் ரோந்துப் போலிஸ் போலத் தோன்றினார். அதைப்பார்த்த கவிஞர் வாலி இந்தப் படத்துக்கு ‘காவல்காரன்’ என்று பெயரிடலாமே என்றார். எம்.ஜி.ஆருக்கும் சரியனப்பட்டது ஏனென்றால் இப்படத்தில்

    “என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும்
    நான் தான் காவலடி”

    என்று பாடல்வரிகள் அமைந்திருக்கும். எனவே மனைவிக்கும் காதலிக்கும் நானே காவல்காரன் என்ற பொருளில் இந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்ததால் ‘காவல்காரன்’ என்பதே பொருத்தமான தலைப்பாகத் தோன்றியிருக்கும்.

    ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் செல்வாக்குப் பெறுவதை விரும்பாத சிலர் ஆரம்பம் முதலே ஜெயலலிதாவை கழற்றிவிடத் திட்டமிட்டனர். ‘மனைவி’ என்ற பெயரை நீக்கிட்டாலும் பிடிவாத குணம் உடைய ஜெயலலிதா அடுத்தடுத்த படங்களில் கணவன் கண்ணன் என் காதலன் படத்தலைப்புகளில் தன் முக்கியத்துவத்தை நிறுவி அடிமைப்பெண்ணில் தன் செல்வாக்கின் உச்சத்தைத் தொட்டார்.

    திருடாதே

    ‘பாக்கெட் மார்’ என்ற இந்திய படத்தைப் பார்த்து எடுக்கப்பட்ட திருடாதே படம் 1958ல் தொடங்கி 1961-ல் வெளிவந்தது. இப்படத்துக்கு “நல்லவனுக்குக் காலமில்லை” என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் இத்தலைப்பு எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.

    எம்.ஜி.ஆரே நல்லவனுக்கு காலமில்லை என்று சொல்லிவிட்டார். இனியெதற்கு நல்லவனாக வாழவேண்டும் என்ற எதிர்மறை எண்ணத்தை இத்தலைப்பு உருவாக்கிவிடும் என்று எம்.ஜி.ஆர் தான் குழுவினரிடம் தெரிவித்தார். பின்பு “அந்தப் படக்குழுவினரைச் சேர்ந்த மா. லட்சுமணன் என்பவர் (இவர் வித்வான் வே. லட்சுமணன் கிடையாது) ‘திருடாதே’ என்ற பெயரைக் கூறினார். எம்.ஜி.ஆருக்கு இந்தப் பெயர் பிடித்திருந்ததால் அவருக்கு ரூ.500 அன்பளிப்பாகக் கொடுத்தார். படத்தில் வரும்

    திருடாதே பாப்பா திருடாதே
    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
    திறமை இருக்கு மறந்துவிடாதே

    என்ற பாடல் படத்தலைப்புக்கு வலுச் சேர்த்தது. ‘திறமை இருக்கு’ என்று பாடியது வறுமையில் உழன்றவருக்கு உழைத்து வாழும் நம்பிக்கையை வாழ்வில் ஏற்படுத்தியது.

    நல்லவன் வாழ்வான்

    எம்.ஜி.ஆர்

    ‘திருடாதே’ படத்துக்கு ‘நல்லவனுக்குக் காலமில்லை’ என்று முதலில் சூட்டியிருந்த பெயர் சரியில்லை என்று மாற்றிய எம்.ஜி.ஆர் தன் அடுத்த படத்திற்கு ‘நல்லவன் வாழ்வான்’ என்று பெயர் வைத்தார். இது அறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம். அண்ணா தனது இதயக்கனி எம்.ஜி.ஆர் என்பதைக் குறிப்பிடும் வகையில் ஒரு கூட்டத்தில் பேசினார். அதனால் இதயக்கனி என்று ஒரு படத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரிட்டார். பணத்தோட்டம், பணம் படைத்தவன், பணக்காரக் குடும்பம் ஆகியவை பணக்காரனின் முகத்திரையைக் கிழித்த படங்கள்.

    திமுக ஆட்சியில்

    திமுக அரசாட்சி அமைந்ததும் தமிழ் நாட்டில் பொற்காலம் பிறந்துவிட்டதாகக் கருதும் வகையில் புதியபூமி, ஒளிவிளக்கு தேர்த்திருவிழா, ஒரு தாய்மக்கள், நல்லநேரம், போன்றவை வெளிவந்தன. புதியபூமி என்பது கிறிஸ்தவக் கோட்பாடான ‘புதிய வானம், புதிய பூமி’ என்பதைச் சார்ந்ததாகும். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது இந்துமத, எதிர்ப்பாளராக இருக்கிறார் என்பதை நம்பிய கிறிஸ்தவர்கள் பலர் அவரை Secret Christian என்றே நம்பினார். அவர் தினமும் பைபிள் வாசித்து ஜெபம் செய்வார் என்றும் கூறி வந்தனர். தென் தமிழகத்தில் இவருக்கு இருந்த ஆதரவைப் பார்த்ததால் இவரை வைத்து ‘பரமபிதா’ என்ற படத்தை எடுக்க முன் வந்தனர். கேரளாவில் எம்.ஜி.ஆர் இயேசு கிறிஸ்து வேடத்தில் இருக்கும் படத்தை தம் வீட்டில் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றினர். படகோட்டி படப்பிடிப்புக்கு கொல்லத்துக்குப் போயிருந்த எம்.ஜி.ஆரிடம் இத்தகவலைத் தெரிவித்ததும் அவர் என்னப்பா உயிரோடு இருக்கும்போது எனக்கு பூ, மாலை, மெழுகுவர்த்தி ஏற்றுகிறீர்களோ என்று சொல்லிச் சிரித்தாராம்.

    அண்ணாவின் தலைப்புகள்

    அறிஞர் அண்ணாவைத் தன் தலைவராகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவரது கதைகளின் தலைப்புகளைத் தன் படங்களுக்குச் சூட்டி தன்னை ஒரு திமுக காரர் என்று பறைசாற்றிக் கொண்டார். காங்கிரஸ் ஆட்சியில் துணிச்சலுடன் எம்.ஜி.ஆர் செயல்பட்டதற்கு படத்தலைப்புகளும் நற்சான்றாக அமைந்தன. அவரது நாவல்களின் தலைப்புகளான குமரிக்கோட்டம் பெரிய இடத்துப் பெண் என்ற பெயர்களில் படம் எடுத்து வெளியிட்டு வெற்றிவாகை சூடினார்.

    தனக்கான பெயர்கள்

    தனது பெயரையும் புகழையும் உயர்த்தும் வகையில் தன்னை நேசிக்கும் தமிழ் மக்களின் உள்ளங்களில் உயர்ந்த ஓரிடத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் சில படங்களுக்குப் பெயர் சூட்டினார். அவற்றுள் சில, உலகம் சுற்றும் வாலிபன், எங்க வீட்டுப்பிள்ளை, என் அண்ணன், அன்னமிட்ட கை, தனிப்பிறவி, முகராசி, நினைத்தை முடிப்பவன், கருணாநிதிக்கு இலவசமாக நடித்துக் கொடுத்த கலைஞரின் எங்கள் தங்கம், தர்மம் தலை காக்கும் ஆகியன. இவை எம்.ஜி.ஆரின் மீதான நல்லவன், வல்லவன், கொடையாளி என்ற கருத்துக்களை மேலும் வலுப்படுத்த உதவிய படத்தலைப்புகள் ஆகும்.

    திமுக ஆட்சிக்கு முன்

    எம்.ஜி.ஆர் பட வரலாற்றை திமுக ஆட்சிக்கு முன்பு, திமுக ஆட்சியின் போது, அதிமுக ஆரம்பித்த பிறகு என்று மூன்றாகக் பகுக்கலாம்.

    புதிய பூமி

    எம்.ஜி.ஆர்

    கதிரவன் என்ற பெயருடைய எம்.ஜி.ஆர் ஆங்கில மருத்துவராக ஒரு மலைக்கிராமத்துக்கு வந்ததும் அங்கிருந்த மந்திரம் தந்திரம் என்ற அறியாமை இருள் மறைந்து பகுத்தறிவுப் பகலவனின் ஒளி தோன்றியது. இது திமுகவின் ஆட்சி நாட்டில் புதிய பூமியை உருவாக்கியதற்கான அத்தாட்சிப் பத்திரம் ஆகும்.

    அதிமுக தோன்றிய பின்பு...

    அதிமுக ஆட்சியில் சேர்ந்து தன்னைப் பின்பற்றுவோருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் படத்தலைப்புகளை அமைத்தார். முதலில் நேற்று இன்று நாளை, பின்பு அதைத் தொடர்ந்து உரிமைக்குரல், நாளை நமதே, பல்லாண்டு வாழ்க, இன்று போல் என்றும் வாழ்க நிறைவாக மதுரையை (தமிழகத்தை) மீட்ட (திமுகவிடம் இருந்த) சுந்தரபாண்டியன் (அழகான தலைவன் எம்.ஜி.ஆர்). இப்படத்துடன் அவர்காலத்திய அவரது திரையுலக வரலாறு நிறைவு பெற்றது. அவர் காலத்திற்குப் பின்பு அவர் நடித்த அவசரப்போலீஸ் படம் வெளி வந்தது. எம்.ஜி.ஆர் நடித்த இரண்டு பாடல்காட்சிகளும் சில வசனக்காட்சிகளும் மட்டுமே அப்படத்தில் இருந்தன.

    அதிமுக தொடங்கிய பிறகு நல்லதை நாடு கேட்கும், உன்னை விட மாட்டேன், புரட்சிப் பித்தன் போன்ற படங்கள் எம்.ஜி.ஆர் நடித்த வரவேண்டியவை. ஆனால் அவர் முதல்வராகி விட்டதால் வரவில்லை.

    ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்

    ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆர் பாட்டாளிகளில் ஒருவராகத் தான் நடித்து பணக்கார முதலாளிகளின் கொட்டத்தை ஒடுக்கியதால் பலரும் எம்.ஜி.ஆரை தம் பங்காளியாகவும் தம் ரட்சகராகவும் பார்த்தனர். துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யும் இறையம்சம் பொருந்தியவராகவே எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தோன்றினார். எனவே எம்.ஜி.ஆர் ‘உங்களில் ஒருவன் நான்’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையிலான உழைக்கும் வர்க்கத்தினரின் பாத்திரங்களை ஏற்று நடித்தார். தன் படங்களுக்கும் உழைப்பவரின் பெயரையே சூட்டினார். ஆட்டோகிராஃப் போடும்போதும், ’உழைப்பவரே உயர்ந்தவர்’ என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
    தொழிலாளி, படகோட்டி, விவசாயி, ரிக்ஷாக்காரன், மீனவநண்பன், உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன், உரிமைக்குரல் என்று தன் படங்களுக்குப் பெயர் சூட்டினார்.

    1001 அரபுக்கதைகள்

    மேடை நாடகமாக குலேபகாவலி நாடகம் ‘பகடை 12’ என்ற பெயரில் நடைபெற்று ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இதை எம்.ஜி.ஆர் நடித்து ராமண்ணா தனது ஆர் ஆர் பிக்சர்ஸ் மூலமாக படமாக எடுத்தார். ஆயிரத்தோரு அரபுக்கதைகளைச் சேர்ந்த குலேபகாவலி, பாக்தாத் திருடன், அலிபாபாவும் 40 திருடர்களும் படங்கள் எம்.ஜி.ஆருக்கு பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.


    படத்தலைப்பு என்பது ஒரு படத்துக்கு முகம் போன்றது எனவே எம்.ஜி.ஆர் மிகவும் ஆலோசித்து படத்தலைப்பைச் சூட்டியுள்ளார்.

  8. #1317
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    1940களில் தமிழ் திரையுலகம்

    எம்.ஜி.ஆர் 1936-ல் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழித்து 1947-ல் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். அந்த சமயம் பி.யு சின்னப்பாவும் டி.கே. தியாகராஜ பாகவதரும் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாக இருந்த நிலை மாறியதால், ஓர் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதான பாகவதர் 1966-ல் விடுதலை பெற்று வந்ததும் படங்களில் முன்பு போல் ஆர்வம் காட்டவில்லை. சில படங்கள் நடித்தபோதும் அவை சரியாக ஓடவில்லை.

    எம்.ஜி.ஆர் ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக நடித்த பிறகும் சில படங்களில் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1948-ல் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’யில் எம்.ஜி.ஆர் தளபதி வேடம் ஏற்றிருந்தார். 1949-ல் பாகவதர் நடித்து வெளிவந்த ரத்னகுமார் படத்தில் பாலதேவனாக சிறுபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பாகவதருக்குத் தரவில்லை. அவர் சரிவை சந்தித்தார். அந்தச் சரிவு எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர் 1948-ல் வி.என். ஜானகியுடன் ‘மோகினி’, 1950-ல் ஜி. சகுந்தலாவுடன் ‘மந்திரிகுமாரி’, 1951-ல் மாதுரிதேவியுடன் ‘மர்மயோகி’ அதே ஆண்டில் அஞ்சலி தேவியுடன் ‘சர்வாதிகாரி’ என தொடந்து நடித்து முன்னேரிக்கொண்டே வந்தார். மர்மயோகி பேய்ப் படம் என்பதால் குழந்தைகள் பயப்படுவார்கள் என ஏ முத்திரை பெற்றது. அது நிஜப் பேய் அல்ல என்பதால் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.

    “கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறும் என்றால் குறி வைக்க மாட்டான்” என்று எம்.ஜி.ஆர் பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயிற்று. பலர் தம் ஆண்பிள்ளைகளுக்கு ‘கரிகாலன்’ என்று பெயர் சூட்டினர்.

  9. #1318
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பி.யு. சின்னப்பா

    முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று “உத்தமபுத்திரன்” படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா, ஒரே படத்தில் பத்து வேடம் போட்டார். ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தில் நான்கு கதாநாயகிகளுடன் நடித்தவர், வாள்வீச்சில் கெட்டிக்காரர்; எம்.ஜி.ஆர் வியந்து போற்றும் மேடைக்கலைஞர். இவர் ராஜபார்ட வேடம் ஏற்ற நாடகங்களில் எம்.ஜி.ஆர் ஸ்திரீபார்ட் வேடம் ஏற்றிருக்கிறார். இத்தகைய சிறந்த கலைஞரின் மரணம் எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்துக்கு ‘ராஜபாட்டையை’ (நெடுஞ்சாலை) அமைத்துக் கொடுத்தது. 1951-ல் பி.யு. சின்னப்பா திடீரென ஒரு விபத்தில் காலமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் (1952) படங்களில் ‘என் தங்கை’ இலங்கையில் ஒரு வருடம் ஓடி வெற்றிவாகை சூடியது. கிறிஸ்தவ மன்னராக எம்.ஜி.ஆர் நடித்திருந்த ‘ஜெனோவா’ (1953) நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டது. இந்தப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையை எம்.ஜி.ஆர் முதன்முதலாக அங்கீகரித்தார்.

  10. #1319
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனாதிபதி பரிசு பெற்ற ‘மலைக்கள்ளன்’

    பியுசின்னப்பா 1951-ல் மறைந்த பின்பு தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வாள்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பி.யு. சின்னப்பாவைப் போல எம்.ஜி.ஆரும் இரண்டு கைகளாலும் வாள் சுழற்றுவதில் கெட்டிக்காரர். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்” தமிழுக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

  11. #1320
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1955-ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி 1955 ஆகியன வெற்றிப் படங்களாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தன. அடுத்த ஆண்டில் (1956) ‘மதுரை வீரன்’, ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் எம்.ஜி.ஆருக்கு வெற்றிப் பரிசு அளித்தன. ‘தாய்க்குப் பின் தாரம்’ படப்பிடிப்பில் காளையுடன் சண்டை போடுவதில் எம்.ஜி.ஆர் காட்டிய தயக்கம் தேவருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்டுக்காக’ காத்திருக்காமல் தேவர்தனது அடுத்த படமான ‘நீலமலைத் திருடனில்’ ரஞ்சனை கதாநாயகன் ஆக்கினார். படம் எம்.ஜி.ஆர் படம் போலவே இருந்தது. பெரிய வெற்றியும் பெற்றது.

    எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ரஞ்சனின் ரசிகர்களும் தம்முள் மோதிக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு சமமான ஒரு போட்டியாளர் வந்துவிட்டதான சூழ்நிலை உருவானது. எம்.ஜி.ஆர் உடனே தனது ‘நாடோடிமன்னன்’ படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார். பாதிப் படத்தை வண்ணப்படமாகவும் எடுத்தார். 1958-ல் வெளிவந்த நாடோடிமன்னனில் எம்.ஜி.ஆரை ரசித்த ரசிகர்கள் அதன்பின்பு ரஞ்சனை ரசிக்கவில்லை. அடுத்த ஆண்டு (1959) வெளிவந்த ராஜாமலையசிம்மனும், மின்னல் வீரனும் ரஞ்சனுக்கு தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. 1960-ல் வெளிவந்த ‘கேப்டன்’ ரஞ்சனும் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. படங்கள் ஓடாததால் அவர் தன் மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் போய்த் தங்கிவிட்டார். இப்போது தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர் தனிச்செல்வாக்கு பெற்ற உச்ச நட்சத்திரம் ஆனார். சிலருடைய மரணமும் சிலருடைய தோல்வியும் கூட எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தன.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •