Page 173 of 401 FirstFirst ... 73123163171172173174175183223273 ... LastLast
Results 1,721 to 1,730 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1721
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Trinity Mirror 16/7/18








  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1722
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1723
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எனது எண்ணங்கள்

    தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!

    தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

    எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார்.

    இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.


    கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும்.


    எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.


    இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.


    இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.

    அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.


    அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.
    .COURTESY - fb

  5. #1724
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சோர்ந்து போனவர்களை தட்டி எழுப்பி , மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் நம்பிக்கையும் , விடா முயற்சியும் தனி மனிதனுக்கு தேவை என்று தன்னுடைய படங்கள் மூலம் பல காட்சிகளை
    அமைத்து சமுதாயத்தில் பலர் முன்னேற மக்கள் திலகத்தின் படங்கள் இருந்தது என்று பல சமூக ஆவலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .


    இந்திய சினிமாவில் எம்ஜிஆரின் சமூக படைப்புகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது .எம்ஜிஆரின் பட பாடல்கள் மொழி மாற்றம் செய்து பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் பாடல்களை திரையிட்டு அவர்களுக்கு மனதில் தெளிவும் , அமைதியும் ,ஏற்பட வழி செய்கிறார்கள் .அந்த அளவிற்கு எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இருந்ததை பாராட்டுகிறார்கள் .


    மனதில் ஒருவித அச்சம் .
    ஏமாற்றங்கள்
    நினைத்து நடக்காமல் போனது
    மற்றவர்கள் நிராகரிப்பு
    பொறாமை
    இயலாமை
    ஏக்கம்
    வரிந்து கொண்டு போர்ரடுவது
    முன்னிலை படுத்தி போராட்டம்
    வசவுகள் - ஏவுகணைகள் ]
    ஆத்திரம்
    நிர்பந்தம்
    திணறல்
    அடக்க முயற்சி
    அடங்கி போதல்
    என்ற குணங்கள் கொண்டோர் இன்றைய சமுதயாத்தில் தங்களை வருத்தி கொண்டு வாழும் அவல நிலைக்கு உள்ளதை
    எண்ணித்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய படங்களில் பாடல்களையும் , காட்சிகளையும் அமைத்து மக்கள்
    திருந்திட வழி செய்தார் . பலரும் மக்கள் திலகத்தின் அறிவுரைகளை ஏற்று கொண்டார்கள் .


    ஒரு சிலர் ...............
    ''இவர் திருந்தவில்லை ...மனம் வருந்தவில்லை ..அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ''

  6. #1725
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் உலக எம்.ஜி.ஆர் பேரவை சார்பில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்த மிகப் பெரிய மாநாட்டில், ’கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ அனிமேஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடந்தது.கல்வியாளர் மற்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஏ.சி.சண்முகம் இருவரும் இசைத்தகட்டினை வெளியிட, பிரபுதேவாவும், இயக்குநர் விஜய்யும் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் பிரபுதேவா பேசுகையில், “எம்ஜிஆரின் ஸ்டைல், அவருடைய ட்ரெஸ்ஸிங் எனக்கு மிகவும் பிடிக்கும். மைலாப்பூர் காமதேனு தியேட்டரில் என் அம்மாவுடன் அவர் படத்தை ரசித்து பார்த்த நினைவுகள் வருகின்றன. என் அப்பா, எம்.ஜி.ஆருக்கு 4 படங்களில் நடனம் அமைத்திருக்கிறார். பள்ளி நேரத்தில் அவர் காரில் எங்களை கடந்து போனபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்து மெய் மறந்தேன்” என்றார்.

  7. #1726
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    கலங்கரை விளக்கம்:
    1958இல் அல்பிரட் ஹிட்ச்கொக்கின் வெர்டிகோ என்ற சைக்கோதிறில்லர் ஆங்கிலத் திரைப்படத்தை 1965ல் கே. சங்கர் கலங்கரை விளக்கம் என்ற கறுப்பு வெள்ளை திரைப்படமாக இயக்கி அமோக வெற்றி பெற்றார். (சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு, கதை - மா. லட்சுமணன், இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்). கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் மனநிலை பாதிப்படைகிறார். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார். கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார். நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார். நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார்.
    அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடம். உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார். தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

    4) இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடல்:
    அமாவாசையானால் சித்தம் கலங்கி பிரச்சினை கொடுக்கும் நீலாவைக் குணப்படுத்த ரவி வெளியே அழைத்துச் செல்லும் போது, பிரச்சினைக்குள்ளான நீலா மலை உச்சிமீதேறி குதித்து தற்கொலை செய்யப் போகும் போது, ரவி சிவகாமி, சிவகாமி என அழைத்து தானும் நரசிம்ம பல்லவனாகி நீலாவைக் காப்பாற்ற இருவரும் பாடும் பாட்டே பொன்னெழில் பூத்தது புது வானில். பஞ்சு அருணாசலத்தின் முதற் பாட்டு. சரோஜா தேவி. பூமா தேவி, அவர் முகம் பூகோளம். அது அழும் போது உலகமே அழுகின்றது. சிரிக்கும் போது உலகமே சிரிக்கின்றது. சரணத்தில் நீலா, ஆடலரசி சிவகாமியாகி, ரவியை நோக்கி வரும்போது, லோங் சொட்டிலிருந்து, குளொஸ் அப்புக்கு வரும்போது ரவி, நரசிம்ம பல்லவனாகி இருக்கையில், அவர்கள் இருவரின் அழகின் காலடியில் உலகமே விழுந்து கிடப்பதாக தோன்றுகிறது. எம்.ஜீ.ஆர் இருந்த பல்லவனில் கமலஹாசன் இருந்தால் பெண்மையும், அஜித் இருந்தால் வெளிநாட்டுத்தனமும் தெரிந்திருக்கும். இந்தப் பாடலை ரசியுங்கள். இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடலை வரிக்க வரி ரசியுங்கள்.

    சிவகாமி..சிவகாமி....
    ஒ ஓஓஓஓஓ

    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    என் மன தோட்டத்து வண்ணப் பறவை
    சென்றது எங்கே சொல் சொல் சொல்
    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்

    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
    உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
    உன் பட்டு கை பட பாடுகிறேன்

    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்

    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
    கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
    முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

    பொன்னெழில் பூத்தது புது வானில்
    வெண் பனி தூவும் நிலவே நில்
    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா

    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
    மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
    சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வெண் பனி தூவும் இறைவா வா

    என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    என்னிடம் கோபம் கொள்ளுவதோ
    ஒன்றில் ஒன்றான பின்
    தன்னைத் தந்தான பின்
    உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

    பொன்னெழில் பூத்தது தலைவா வா
    வென் பனி தூவும் இறைவா வா
    உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
    வந்தது இங்கே வா வா வா
    ஆஆஆஆஆஆஆஆ...

    ஒரு தலைவனின் தனிமையின் பிரிவின் வலியையும், அதற்கான தலைவியின் பதிலையும் கொண்டமைந்த மென்மையான காதலும,; அழகிய எதுகைகள், மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையான தென்றலாய் மயிலிறகாகி வருடும் உணர்வும் கொண்ட பாடல் இது. கேட்க மிகவும் அருமையாக இருந்ததற்கும் கண்ணதாசன் எழுதியது போல இருந்ததற்கும் காரணம் பஞ்சுவும் கண்ணதாசனும் சுமந்த பொது நிறமூர்த்தங்களாகவும் இருக்கலாம்.

    Courtesy net

  8. #1727
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    உரிமைக் குரல் திரைப்படத்தில் ஒரு விவசாயிக்கு நிலத்தின் முக்கியத்துவம் எத்தகையது என்று ஒரு வசனம் பேசியிருப்பார். என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தார். இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்த்தாள். மானம் மரியாதை உள்ள எவனும் உயிர்போனாலும், தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக்கொடுக்கமாட்டான். இந்தத் தாயை விட்டுக்கொடுக்குற அளவுக்கு நான் கோழை இல்லைடா. ஒரு பிடி மண்ணுக்காக எந்த தியாகத்தையும் செய்யுற பரம்பரைல வந்தவன்டா நான். என் ரத்தம் வழிஞ்சா இந்த மண்ணுல தான் கலக்கும். என் உடம்பு கீழ விழுந்தா இந்த மண் தான் அணைக்கும். என் உயிர் போனாலும் இந்த மண்ணுல தான் போகும். ஆனா, அந்த நேரத்துல நான் எழுப்புற உரிமைக்குரல், இங்க மட்டுமில்ல, எங்கெங்க உழைக்குறவன் இருக்குறானோ, எந்தெந்த மண்ணுல அவன் வியர்வத்துளி விழுதோ அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சுகிட்டே தான் இருக்கும்

  9. #1728
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    வெற்றி! வெற்றி!!” என்று முழங்கியவாறே அறிமுகமாகும் அந்த நபரை பார்த்ததுமே பிடித்துவிட்டது.

    அப்போது அனேகமாக எனக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ஓம் பிரகாஷ் மாமா தலைமையில் என்னுடைய ஏகப்பட்ட அண்ணன்களோடு படத்துக்கு போயிருந்தேன். அம்மா, அப்பா இல்லாமல் தியேட்டருக்கு போய் பார்த்த முதல் படம் அதுவாகதான் இருக்கும். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர் படமும் அதுதான். மடிப்பாக்கம் தனலஷ்மி திரையரங்கம். ஐந்து ஆண்டு லைசென்ஸில் கூரைக்கொட்டகையில் இயங்கும் தற்காலிக ‘சி’ சென்டர் தியேட்டர். அந்த தியேட்டர் இருந்த இடத்தில் இப்போது ஓர் அப்பார்ட்மெண்ட்
    ஆறு மணி படத்துக்கு ஐந்து மணிக்கெல்லாம் போய் வரிசையில் முத
    லில் நின்றிருந்தோம்.

    ஒலிபெருக்கியில் பக்திப் பாடல்கள் கத்திக் கொண்டிருந்தன. டிக்கெட் கிடைத்ததுமே ஆளில்லாமல் ‘ஜிலோ’வென்றிருந்த தியேட்டருக்குள் கத்திக்கொண்டே ஓடினோம். தரை டிக்கெட். சின்னப் பையன் என்பதால் முன்னால் அமருபவரின் தலை மறைக்கும் என்பதற்காக மணலை கூட்டி, எனக்கு கொஞ்சம் ஹெயிட்டான இருக்கை ஏற்படுத்தித் தந்தார் பிரபா அண்ணா. திரையில் நியூஸ் ரீல். கருப்பு வெள்ளையில் காந்தி சத்தியாக்கிரகத்துக்காக ஸ்பீட் மோஷனில் நடந்துக் கொண்டிருந்தார். “ஆனா நம்ம படம் கலருதான்” என்றார் பாலாஜி அண்ணா. அப்போதெல்லாம் தனலஷ்மியில் கருப்பு வெள்ளை படங்கள்தான் அதிகம் திரையிடப்படும்.

    அக்கம் பக்கத்தில் அசுவாரஸ்யமாக நிறைய பேர் பீடி வலித்துக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கம் செம கூட்டம். பெஞ்ச், சேர் என்று எல்லா டிக்கெட்டுகளும் நிறைந்திருந்தது. சட்டென்று புரொஜெக்டர் வண்ணத்தை ஒளிர்ந்தது. திரையில் ‘பத்மினி பிக்சர்ஸின் ஆயிரத்தில் ஒருவன்’. தியேட்டரிலிருந்த அத்தனை பேரும் விசில் அடித்தார்கள். எம்.ஜி.ஆர் பெயர் டைட்டிலில் போடப்பட்டதுமே விசிலின் டெஸிபல் இரண்டு, மூன்று மடங்கானது. காதை பொத்திக்கொண்டேன். கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது. திரையில் வாத்யாரை கண்டதுமே அந்த அச்சம் அகன்று, விவரிக்க இயலா பரவசம் தோன்றியது. எம்.ஜி.ஆர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் அவரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய தலையலங்காரம், உடையலங்காரம், தினவெடுக்கும் தோள்கள், கருணை பொங்கும் கண்கள், லேசாக ஸ்டைலாக கோணும் வாய், சுறுசுறுப்பான நடை, புயல்வேக வாள்வீச்சு... தமிழின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக அவர் விளங்குவதில் ஆச்சரியமென்ன? “பூங்கொடி கொஞ்சம் விளையாடிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் வாளால் விளையாடும் காட்சி முடிந்ததுமே தூங்கிவிட்டதாக ஞாபகம். என்னை தூக்கிக்கொண்டு வந்துதான் வீட்டில் போட்டிருக்கிறார்கள். மறுநாள் அப்பா படத்துக்கு போகும்போதும், அவரோடு அடம்பிடித்து போய் ‘சேர்’ டிக்கெட்டில் அமர்ந்து பார்த்தேன். கடந்த முப்பதாண்டுகளில் ஆயிரத்தில் ஒருவனை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கு வழக்கேயில்லை. அந்த முதல்நாள் பரவசம் இன்னமும் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இப்போதும் பரபரப்பாக இருக்கிறது.

    நெய்தல் நாட்டின் பிரபலமான மருத்துவர் மணிமாறன். மனிதாபிமானம் கொண்டவர். அந்நாடு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடும் புரட்சிக்காரர்களுக்கு மணிமாறன் சிகிச்சை அளிக்கிறார். எனவே அவரும் சதிகாரர் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தீவாந்திர தண்டனைக்கு ஆளாகிறார். கன்னித்தீவு என்கிற தீவுக்கு இவர்கள் அடிமைகளாக அனுப்பப்படுகிறார்கள். அங்கே அடிமைகளின் தலைவனாக உருவெடுக்கிறார் மணிமாறன்.

    கன்னித்தீவை ஆளும் தலைவனின் மகள் கட்டழகி பூங்கொடி. அழகிலும், ஆற்றலிலும், மனிதாபிமானத்திலும் சிறந்துவிளங்கும் மணிமாறனை காதலிக்கத் தொடங்குகிறாள். அவனுக்கு மட்டும் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் கிடைக்க வழி செய்கிறாள். இதை மறுக்கும் மணிமாறன், தன்னுடைய தோழர்கள் அனைவருக்குமே சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறார்.

    இதற்கிடையே கடற்கொள்ளையர் கன்னித்தீவை தாக்குகிறார்கள். அடிமைகள் இணைந்து கடற்கொள்ளையரை வென்றால் சுதந்திரம் நிச்சயம் என்று அறிவிக்கிறான் தீவின் தலைவன். ஆனால் வெற்றி கண்டபிறகு துரோகம் இழைக்கிறான். கடுப்பான புரட்சிக்காரர்கள் தீவிலிருந்து கலகம் செய்து தப்பிக்கிறார்கள். சூழ்நிலையின் காரணமாக கடற்கொள்ளையரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பரபரப்பான ட்விஸ்ட்டுகளை கடந்து பூங்கொடியை கைப்பிடிக்கும் மணிமாறன், தன்னுடைய நாட்டையும் எப்படி சுதந்திர நாடாக்குகிறார் என்பதுதான் கதை.

    பார்வைக்கு பரபரப்பான காட்சிகள் மட்டுமின்றி, காதிற்கினிய பாடல்களும் படத்தின் பிரும்மாண்டமான வெற்றிக்கு அடிகோலின. ஜெயலலிதாவின் இளமை, நாகேஷின் நகைச்சுவை, நம்பியாரின் வில்லத்தனம் என்று பல்சுவை விருந்து. காசை தண்ணீராக செலவழித்து பிரும்மாண்டத்தை திரையில் உருவாக்கி காண்பவர்களின் கண்களை ஆச்சரியத்தால் விரியவைத்தார் பந்துலு.

    இயக்குனர் பி.ஆர்.பந்துலு முன்பாக தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ பல அரங்குகளில் நூறு நாள் ஓடியிருந்தாலும், மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக பலத்த நஷ்டத்துக்கு உள்ளாகியிருந்தார். அதை ஈடுகட்டும் விதமாக வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். அதுதான் ஆயிரத்தில் ஒருவன். பந்துலுவின் எல்லா கடன்களையும் ஆயிரத்தில் ஒருவன் அடைத்ததோடு மட்டுமில்லாமல், அவரை மீண்டும் திரையுலகில் தலைநிமிரவும் வைத்தான். ‘கேப்டன் ப்ளட்’ என்கிற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டது இப்படம் என்று எம்.ஜி.ஆரின் பெரும் ரசிகரான கலாப்ரியா எழுதியிருக்கிறார்.

    சினிமாத்துறையில் நீண்டகாலம் இயங்கிய ஒவ்வொரு நடிகருக்கும் ‘மாஸ்டர் பீஸ்’ என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஒரு படம் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்டர் பீஸ்களை தந்தவர்களே சூப்பர் ஸ்டார்களாக கருதப்படுகிறார்கள். பெரும் வெற்றியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஆபத்பாண்டவன். வசூலில் தன்னை யாராலும் நெருங்கமுடியாத சக்கரவர்த்தியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில்தான் தன்னை மாற்றிக் கொண்டார் எம்.ஜி.ஆர். இதற்கு பிறகு அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் என்று அவர் படைத்த சரித்திரங்கள் ஏராளம். அவ்வகையில் பார்க்கப் போனால் ‘ஆயிரத்தில் ஒருவன்’ புரட்சித்தலைவரது பிக்பேங்க் ரீ என்ட்ரி.
    எழுதியவர் யுவகிருஷ்ணா

  10. #1729
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    தினமணி 16/7/18 -
    இது போதும் நம்மளுக்கு . இதுக்கும் கூட சில பொறாமை புடிச்ச முட்டாள்கள் முகநூலில் கவர்னருக்கு இதுதான் வேலையா, கவர்னருக்கு புரட்சித் தலைவரை தெரியுமா எழுதி கொடுத்ததை தான படிக்கிறார் என்று எழுதுகிறார்கள்.எழுதி கொடுத்ததை படிச்சாலும் புரட்சித் தலைவர் பற்றி கவர்னருக்கு தெரியாமல் இருக்காது. புரட்சித் தலைவர் வெறும் நடிகர் இல்லை. 10 வருஷம் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தார்,சத்துணவு திட்டம் ஒன்று போதும். அவர் மறைந்தபோது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மூன்று பேரும் வந்தார்கள். இந்தியா பூரா அரசு லீவும் விட்டார்கள். காமராஜர் உள்பட இதுவரை நாட்டில் எந்த முதல்வருக்கும் இந்த பெருமை இல்லை. இனிமேலும் கிடைக்காது. இது அரசியல்வாதியான கவர்னருக்கு தெரியும். என்ன செய்யிறது அவர் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் தகுந்தபடிதான் விழாவுக்கு தலைமைதாங்க ஆட்கள் வருவார்கள்.

  11. #1730
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    16/7/18 -தினத்தந்தி


    இது போதும் நம்மளுக்கு . இதுக்கும் கூட சில பொறாமை புடிச்ச முட்டாள்கள் முகநூலில் கவர்னருக்கு இதுதான் வேலையா, கவர்னருக்கு புரட்சித் தலைவரை தெரியுமா எழுதி கொடுத்ததை தான படிக்கிறார் என்று எழுதுகிறார்கள்.எழுதி கொடுத்ததை படிச்சாலும் புரட்சித் தலைவர் பற்றி கவர்னருக்கு தெரியாமல் இருக்காது. புரட்சித் தலைவர் வெறும் நடிகர் இல்லை. 10 வருஷம் தமிழ்நாட்டு முதல்வராக இருந்தார்,சத்துணவு திட்டம் ஒன்று போதும். அவர் மறைந்தபோது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மூன்று பேரும் வந்தார்கள். இந்தியா பூரா அரசு லீவும் விட்டார்கள். காமராஜர் உள்பட இதுவரை நாட்டில் எந்த முதல்வருக்கும் இந்த பெருமை இல்லை. இனிமேலும் கிடைக்காது. இது அரசியல்வாதியான கவர்னருக்கு தெரியும். என்ன செய்யிறது அவர் அவர்கள் பெருமைக்கும் புகழுக்கும் தகுந்தபடிதான் விழாவுக்கு தலைமைதாங்க ஆட்கள் வருவார்கள்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •