Page 180 of 401 FirstFirst ... 80130170178179180181182190230280 ... LastLast
Results 1,791 to 1,800 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1791
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சீர்மேவு குருபதம்
    ஆதிகாலந்தொட்டே மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்த நிலையில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒருவர் தலைமை வகித்து அக்கூட்டத்தினர் அனைவரையும் வழிநடத்திச் செல்வது மரபாக இருந்தது. நாகரீகமடையாத நிலையில் தலைவனாயிருக்க ஒருவரது வலிமை ஒன்றே அடிப்படையாக இருந்த நிலை நாகரீகம் வளர வளர மாறி ஒரு தலைவன் வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நல்லவனாகவும் அறிவுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதியில் காடுகளில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த மனிதர்கள் அதன் பின்னர் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியால் காடுகளில் ஒரு பகுதியை அழித்து நாடுகளை உருவாக்கி சமுதாயங்களாக மிருகங்களிடமிருந்து விலகி வாழத் தலைப்பட்டனர். ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக அமைக்கப்பெற்று அவனுக்குப் பின்னர் அவனது தலைமுறையினர் பாரம்பரிய முறையில் அரசர்களாக விளங்கும் வகையில் மனித சமுதாயம் வளர்ந்த நிலையில் பல சந்தர்ப்பங்களிலும் வீரத்தில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க வீர விளையாட்டுப் போட்டிகளும் அறிவாளிகளைத் தேர்வு செய்யத் தர்க்கம் முதலிய பல்வித அறிவுப் போட்டிகளும் நடைபெறுவது நடைமுறை ஆனது.

    அறிவுப் போட்டிகளில் பங்குபெறுவோரது சமுதாய நோக்கும் தனிமனிதக் கடமைகளும் குறித்த விழிப்புணர்வும் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய அறிவுப் போட்டிகளில் அரச குடும்பத்தினர் மட்டுமின்றி மத, சமூகநல அமைப்புகளில் முனைந்து ஈடுபட்டவர்களும், புலவர்களும் பங்கு பெற்றனர் என்பது பல புராண, இதிகாச சரித்திரக் கதைகள் மற்றும் குறிப்புகளிலிருந்து தெளிவாகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி ஒற்றுமை உணர்வுடன் வாழ்வதும், உண்மையே பேசி, மூத்தோரை மதித்து, சக மனிதர் அனைவரிடமும் விலங்குகள் உட்பட ஏனைய பிற உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்தி எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமான வாழ்வை மேற்கொள்வது ஒவ்வொரு மனிதருக்கும் தலையாய கடமையாக அன்று முதல் இன்று வரையிலும் கருதப்பட்டு வருகிறது.

    வரலாற்றில் சொல்லப்பட்ட இத்தகைய அறிவுப்போட்டிகளும் அவற்றின் மூலம் விளங்கும் பலவித செய்திகளும் மக்களால் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இத்தகைய அறிவுப் போட்டிகள் பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அமைக்கப்பெற்று அதன் மூலம் அவற்றைக் காணும் ரசிகர்களது அறிவையும் பண்பையும் வளர்க்கப் பயன்பட்டு வருகின்றன.

    அத்தகைய அறிவுப் போட்டி ஒன்று புரட்சித் தலைகர் எம்ஜிஆர் அவர்களும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும் பங்குபெற்று நடித்த காட்சி ஒன்றில் அவ்விருவரும் தம் கேள்விகளையும் பதில்களையும் இனிய இசையுடன் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சியாக சக்கரவர்த்தித் திருமகள் எனும் திரைப்படத்தில் படமாக்கப் பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் தன் சொந்தக் குரலில் பாட, எம்ஜிஆர் அவர்களுக்கு சீர்காழி கோவிந்த ராஜன் குரல் கொடுக்க மிகவும் கருத்தாழம் மிக்கதாகவும் எத்துணை முறைகள் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலைத் தூண்டும் விதத்திலும் இப்பாடல் அமைந்துள்ளது.

    சீர்மேவு குருபதம்

    திரைப்படம்: சக்கரவர்த்தித் திருமகள்
    இயற்றியவர்: கிளௌன் சுந்தரம்
    இடை: ஜி. ராமநாதன்
    பாடியோர்: என்.எஸ். கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன்

    சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
    சிரமீது வைத்துப் போற்றி
    ஜெகமெலாம் மெச்சச் ஜெயக்கொடி பறக்கவிடும்
    தீரப் பிரதாபன் நானே

    சங்கத்துப் புலவர் பல தங்கத்தோழா பொற்பதக்கம்
    வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
    எனக்கிங்கில்லை இதெனச் சொல்லிக் களித்தார் இந்த
    சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டு தாரார் நேரர்

    ஈரெழுத்துப் பாடி வாரேன் பேரே அதற்கு
    ஓரெழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்

    யானையைப் பிடித்து
    யானையைப் பிடித்து ஓரு பானைக்குள் அடைத்து வைக்க
    ஆத்திரப்படுபவர் போல் அல்லவா உம
    தாரம்பக் கவி சொல்லுதே புலவா வீட்டுப்
    பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்துத் தின்னப்
    புறப்பட்ட கதை போலே அல்லவா தற்
    புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா

    ஆங்.. அப்புறம் ஓஹோ.. சர்தான்
    பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
    கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு
    மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

    ஹாய் கேள்விக்குப் பதிலக் கொண்டா டேப்பே
    ஒடைச்செறிவேன் ரெண்டா ஒன்னே
    ஜெயிச்சுக் காட்டுவேன் முண்டா அப்புறம்
    பறக்க விடுவேன் செண்டா
    ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

    பதில்.. சொல்றேன்

    எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
    தானத்தில் சிறந்தது நிதானந்தான்
    நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்

    சொல்லிட்டான்! இரு

    கோவிலைக் கட்டி வைப்பதெதனாலே? இப்போ
    வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே

    ஹஹங் ஹங் சர்தான் ம்

    அன்ன சத்திரம் இருப்பதெதனாலே பல
    திண்ணை தூங்கிப் பசங்கள் இருப்பதாலே எப்படி? ஹங் ஹங்

    பரதேசியாய்த் திரிவதெதனாலெ?
    ஹங் அவன் பத்து வீட்டு ஆங் ஆஆங் சரி வேணாம்
    அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

    தம்பி இங்கே கவனி

    காரிருள் சூழுவது எவ்விடத்திலே? தம்பி
    காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
    கற்றறிவில்லாத மூடர் நெஞ்சத்திலே

    சொல்லிப் புட்டியே!

    புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
    புகையும் நெருப்பும் இல்லாம அது எப்படி எரியும்?
    நாஞ்சொல்லட்டுமா? சொல்லு
    புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
    பசித்து வாடும் மக்கள் வயிறு அது

    சர்தான் சர்தான் சர்தான்

    உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
    கத்தி இல்லே கோடாலி இல்லே
    ஈட்டி ம்ஹ்ம் ஆங் கடப்பாரை இல்லே
    அதுவும் இல்லையா? அப்புறம்.. பயங்கரமான ஆயுதம்
    அக்கினி திராவகமோ? அது ஆயுதம் இல்லையே
    சரி தெரியமாட்டேங்குதே அட நீயே சொல்லப்பா

    உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
    நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது ஆஹாஹா!
    நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது
    COURTESY
    Posted by A K Rajagopalan

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1792
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நீங்க நல்லாயிருக்கோணும்
    தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்து தமிழ்த் திரையுலக நாயகர்களுள் முதலிடத்தைப் பெற்று, அதன் பின்னர் தன் வாழ்நாள் உள்ளளவும் அந்த முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட பெருமைக்குரியவர். தான் ஈட்டிய பொருளில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை ஏழை எளிய மக்களின் சமுதாய நலனுக்காகத் தொடர்ந்து செலவிட்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு மக்களின் மேல் மிகுந்த அக்கரை கொண்டு விளங்கியமையால் அவருக்கு "மக்கள் திலகம்" எனும் பட்டத்தை வழங்கினார் புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன்.

    வறியார்க்கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீரதுடைத்து

    எனும் குறளின் வழி நின்று தன் வாழ்நாள் உள்ளளவும் வறுமையில் வாடும் மக்களுக்கு வாரி வழங்கிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். இவரது கருணை உள்ளம் கண்டு வியந்து திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு இட்ட பெயர் "பொன்மனச் செம்மல்" என்பதாகும்.

    1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1967ஆம் ஆண்டுவரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து வந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் தவிரப் பிற கட்சிகள் 1967 வரையிலும் மிகவும் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து இருந்து வந்தன. வெற்றி எளிதில் கிடைத்து வந்த மமதையால் காங்கிரசார் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தத் தவறியதால் விலைவாசி உயர்வு மற்றும் சாலை வசதிகள் போன்ற பொதுப் பணிகள் நடைபெறாமை முதலிய குறைபாடுகள் மலிந்து வந்தன.

    அந்த நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்து பின்னர் சுதந்திரா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்த மூதறிஞர் ராஜாஜியின் ஆலோசனையில் இந்திய அரசியலில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஃபார்வார்டு பிளாக், சுதந்திரா கட்சி ஆகிய எதிர்க் கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணியமைத்து 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் சட்டசபைத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்களது தலைமையில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியடைந்தனர். அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக மிகக்குறுகிய காலமே பதவிவகித்த பின்னர் தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தார். அதன் பின்னர் முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி கட்சியிலும் ஆட்சியிலும் முறையான கணக்கு வழக்கு வைக்கத் தவறியதால் அவரிடம் கணக்குக் கேட்டார் எம்.ஜி.ஆர். இதனால் எம்ஜியார் உடனடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினின்றும் வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் இருந்தவரையிலும் அவரை எவராலும் அசைக்க முடியவில்லை.

    அறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று அனைவராலும் புகழப்பெற்ற எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.முதலிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் பொருளாதார நிலையில் நலிந்த மக்களுக்குப் பேருதவி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பிற அமைச்சர்கள் அனைவரும் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்றும் நடக்கும்படியான ஒரு கட்டுப்பாடு இருந்ததால் குறிப்பிடத்தக்க பெரும் ஊழல்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

    இன்று தமிழகம் உள்ள நிலைமை நான் சொல்லாமலே அனைவரும் அறிவர். வேலியே பயிரை மேய்வது போல் மக்களைக் காப்பதாக மார்தட்டிப் பேசியே மக்களைச் சுரண்டி வாழும் மந்திரிகளும். காமராஜர் ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளும் இலவசமாக இருந்த கல்வித்துறையைத் தனியாருக்கு விற்று அதன் பின்னர் கல்விக் கட்டணம் லட்சக்கணக்கில் உயர்ந்த நிலையில் தங்கள் பெயரிலும் தங்கள் பினாமி பெயரிலும் பொறியியற் கல்லூரிகளும் மருத்துவக்கல்லூரிகளும் ஏற்படுத்தி மக்களை மொட்டையடித்துப் பெரும் பொருள் சேர்க்கும் அரசியல்வாதிகளும் தமிழகத்தையும் நம் பாரத நாட்டையும் ஆளும் இழிநிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் அன்று நடத்திய நல்லாட்சியை மீண்டும் தருவதாக அவரது வழித் தோன்றல்கள் வாக்குறிதி தருகின்றனர். எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின் இதன் முன்னர் பலமுறை இந்த வழித் தோன்றல்கள் ஆட்சியில் இருந்தபோதிலும் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆயினும் இவர்கள் செய்ததாகக் கருதப்படும் தவறுகள் இன்று ஆட்சியிலுள்ளோர் அடிக்கும் பகல் கொள்ளைக்கு முன்னர் ஒரு தூசளவேயாகும். நம் துரதிருஷ்டவசமாக இந்தியத் திருநாட்டின் சட்டதிட்டங்கள் முறையாக வகுக்கப்படாமல் நேர்மையானவர் யாரும் அரசியலுக்கு வந்து தேர்தல்களில் வெற்றிபெறுதல் சாத்தியமில்லாத நிலையே தொடர்ந்து நிலவுவதால் தற்பொழுது உள்ள அரசியல்வாதிகளில் யாரும் மிகவும் நேர்மையாளர் என்று சொல்ல இயலாது.

    இருப்பினும் இருப்பவர்களில் குறைவான தீமையைத் தருபவர்களையே மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு வழியில்லை. எம்ஜிஆர் அவர்களை மனதில் நிறுத்தி அவரது வழித்தோன்றல்கள் இனியாகிலும் எம்ஜிஆர் அவர்களது வழியில் உண்மையாக நின்று மக்களுக்காக உழைக்க வேண்டுமென வேண்டி நம் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் நிறைவேற்றுவோம். தேர்தலில் தவறாது வாக்களிப்போம். தீயவர்களை அகற்றி நல்லவர்களை நாற்காலிகலில் அமர்த்துவோம். அவ்வாறு நல்லவர்கள் எனக் கருதி நாம் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்துபவர்கள் தவறு செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனை தருவோம்.

    நீங்க நல்லாயிருக்கோணும்

    திரைப்படம்: இதயக்கனி
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி
    ஆண்டு: 1975

    தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
    கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
    தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
    ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
    நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

    வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
    கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
    அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
    கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
    தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
    தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
    செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
    கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
    பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
    வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
    எங்கள் இதயக் கனி இதயக் கனி

    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
    நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
    என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
    நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

    உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
    உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
    உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
    உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
    மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
    என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
    அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
    அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக

    பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
    வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
    பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
    வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
    பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
    சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
    பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
    சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
    அமைதி என்றும் இல்லை

    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

    காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
    காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
    காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
    காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
    பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
    பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
    பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
    அமைதி நிலவுமே

    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

    நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
    கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
    வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
    வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
    விளங்கிட வேண்டும்

    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
    நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
    COURTESY
    Posted by A K Rajagopalan

  4. #1793
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.r.m.வீரப்பன் அவர்கள் அளித்த பேட்டியில் இருந்து:

    Mgr முதலமைச்சராக இருந்தபொழுது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன்.அப்போது
    ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார்.

    அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?'

    என்று கேட்டேன்அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை.நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன் ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன் என்றார்!

    சரி உட்காருங்க எம்.ஜி.ஆர் வெளிய
    வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.

    சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
    அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
    வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
    " இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
    ஏறிச் சென்றுவிட்டார்.

    அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
    தவிப்புடன் நின்றார்.
    இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
    சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
    போங்க " என்றேன். "நான் எப்படிச் சாப்பிடுவது..என்
    குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
    என்றார் அவர்.

    'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
    அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
    சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
    சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
    எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
    விட்டார்.

    அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
    எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
    அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
    போங்க..என்றேன். சரி..என்றார்.
    வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
    பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
    கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
    நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
    மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
    அவர் காருக்கு அருகில் சென்று சற்று
    தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
    அவரும் காருக்கு மிக அருகில் போய்
    நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
    ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
    எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
    அவர் என்னருகே வந்து கவரைப்
    பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
    இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
    விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
    எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
    மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
    சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
    கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
    நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
    அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
    கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
    வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
    நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
    இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
    வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
    அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
    சில கணங்கள் என்னை அமைதியாகப்
    பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
    " எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
    அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
    கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
    சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
    படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
    கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
    கொடுத்திடனும் " என்றார்.

    எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
    அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
    அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
    ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
    கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.

    அதனால் தான் அவர் இறந்தும் இன்னும்
    வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
    Last edited by ravichandrran; 23rd July 2018 at 11:24 PM.

  5. #1794
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று ஈரோட்டில் கவிதாலயம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலையரசி லதா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அந்நிகழ்விற்கு முன்பு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலையரசி தெரிவித்த கருத்துக்கள் இன்றைய ஈரோடு நாளிதழ்களில் வெளியானது. தினமணி, தினமலர் & தினத்தந்தி நாளிதழ்களில்வெளியான செய்திகள்.


    தினமணி - கோவை
    Last edited by ravichandrran; 23rd July 2018 at 11:35 PM.

  6. #1795
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    தினமலர் - ஈரோடு

  7. #1796
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    தினத்தந்தி - ஈரோடு

  8. #1797
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நாங்கள் ஏன் ஜெயிக்கவில்லை ?

    எங்கள் அபிமான நடிகரின் படங்கள் வெளி வந்த நேரத்தில் திரை அரங்கு முன் கூடி நின்று வேடிக்கை பார்த்தோம் . சில நண்பர்கள் ஸ்டார் வைத்தார்கள்.
    சிலர் நோட்டீஸ் விநியோகித்தார்கள். சில படங்கள் வெற்றிகரமாக ஓடியது , பல படங்கள் வெளிவந்த சில நாட்களில் பெட்டிக்குள் புகுந்துவிட்டது எங்கள் அபிமான நடிகர் நடித்த 70 படங்கள் முதல் வெளியீட்டிற்கு பின்னர் மறு வெளியீடு காணவே இல்லை .

    எதிர் முகாம் நடிகரின் பல படங்கள் வெற்றி அடைந்தது எங்களால் ஜீரணிக்க முடியவில்லை . எதிர் முகம் நடிகரையும் , அவருடைய படஙககளின் பெயரையும் அவருடைய ரசிகர்களையும் மிகவும் கேவலமாகவும் தரமின்றி விமர்சித்து நோட்டீஸ் விநியோகித்தோம்

    எதிர் முகாம் நடிகரின் ரசிகர்கள் உண்மையுடனும் உற்சாகத்துடனும் அவர் நினைவாகவாக வாழ்ந்தார்கள் . உழைத்தார்கள் . வெற்றி மேல் வெற்றி கண்டார்கள் .
    நாங்களோ வேதனை தீயில் அன்றும் வெந்தோம் .இன்றும் அவர்களை நினைத்து வெந்து நொந்து மீண்டும் பழைய எங்கள் குப்பைகளை பதிவிட்டு மகிழ முயற்சிக்கிறோம் .

    சத்தியமாக எங்களுக்கு நிம்மதியே கிடைக்காது .
    எங்கள் ராசி அப்படி .
    எதிர் முகாம் நடிகரின் ரசிகர்கள் நினைத்ததை முடித்தவர்கள் . உணர்கிறோம் , ஆனாலும்
    எங்கள் பாடல் நினைவிற்கு வருகிறது
    சிறிய காயம் பெரிய துன்பம்
    ஆறும் முன்னே அடுத்த காயம் ....

    நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

    இப்படிக்கு
    ஆனந்தத்தின் மனசாட்சி

    எங்கள் சோக கதை தொடரும் ..........இனியும் சொல்வேன் .

  9. #1798
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர்கள்
    திரு மஸ்தான்
    திரு அக்பர்
    திரு மகாலிங்கம்
    திரு சுந்தரபாண்டியன்
    மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களாகிய நீங்கள் நால்வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் மற்றவர்கள் போட்ட பதிவுகளை பாராட்டி பதிவிடுகிறீர்கள் . மாற்று திரியில் தவறான தகவலுக்கு பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள் . ஆனால் மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றியும் அவருடைய சாதனைகள் மற்றும் அரசியல் சரித்திரங்களை பற்றியும் உங்கள் சொந்த கருத்துக்களை பதிவிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை .
    மக்கள் திலகம் எம்ஜிஆரின் அடுத்த பாகத்தை துவக்க உங்களில் ஒருவர் முன் வரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் . இனி வரும் காலத்தில் நீங்கள் நால்வரும் தொடர்ந்து திரியில் பங்கு பெற்று சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

  10. #1799
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    FROM

    27.07.2018

    COIMBATORE

    ROYAL THEATRE

  11. #1800
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=ravichandrran;1335725]

    FROM

    27.07.2018

    COIMBATORE

    ROYAL THEATRE[/QUOTE
    super.
    tnx
    Ravi sir

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •