Page 140 of 401 FirstFirst ... 4090130138139140141142150190240 ... LastLast
Results 1,391 to 1,400 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1391
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1392
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    இனிய நண்பர் திரு லோகநாதன்
    தங்களின் அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி . தங்களின் ஆஸ்திரேலியா இன்ப சுற்றுலாப் பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது அறிந்து மகிழ்ச்சி .

  4. #1393
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ''புதிய பூமி '' பொன்விழா .

    27.6.1968

    மக்கள் திலகத்தின் 98 வது திரைப்படம் புதிய பூமி .

    இயக்குனர் சாணக்யா அவர்களின் எங்கவீட்டுப் பிள்ளை மற்றும் நான் ஆணையிட்டால் படத்திற்கு பின்னர் இயக்கிய 3 வது படம் .

    மக்கள் திலகத்தின் மீதும் அவரது துணைவியார் திருமதி ஜானகி அவர்கள் மீதும் பற்றும் பாசமும் வைத்திருந்த திருவாளர்கள் சங்கரன் - ஆறுமுகம் அவர்கள் இருவரும் ஜானகி எம்ஜிஆர் என்பதை சுருக்கமாக ஜேயார் மூவிஸ் என்ற நிறுவனத்தை துவக்கி முதல் படமாக புதியபூமி படத்தை 27.7.1966ல் துவக்கினார்கள் .

    மக்கள் திலகம் - ஜெயலலிதா - நம்பியார் - அசோகன் - நாகேஷ் - ராமாபிரபா - ஷீலா - திருச்சி சௌந்திரராஜன் - பண்டரிபாய் நடித்திருந்தார்கள் .
    கவியரசரின் பாடல்கள் மற்றும் பூவை செங்குட்டுவனின் பாடலும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்துவிட்டது . மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான இலங்கை வி.சி .குகநாதன் முதன் முதலில் வசன கர்த்தராக அறிமுகமான படம் . படத்தின் டைட்டில் இசை மிகவும் அருமை .மக்கள் திலகம் மருத்துவராக சிறப்பாக நடித்திருந்தார் . மக்கள் திலகத்தின் சண்டைக்காட்சிகள் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது ,

    புதிய பூமி - சிறந்த கருத்துக்கள் நிறைந்த பொழுதுபோக்கு படம் .

  5. #1394
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் புதிய பூமி படத்தில் கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் மருத்துவராக நடித்தார் . 1963ல் வெளிவந்த தர்மம் தலைகாக்கும் படத்தில் எம்ஜிஆர் மருத்துவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது . சின்னவளை என்ற பாடலில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தை ஜெயலலிதாவிற்கு உடை அலங்காரத்தில் இடம் பெற செய்தார்கள் . 1968 தென்காசி சட்ட சபைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெயரும் கதிரவன் என்ற சம்சுதீன். தேர்தலில் திமுக வெற்றி

  6. #1395
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    வி.சி. குகநாதன்

    “நான் பள்ளியில் படித்த காலத்தில் எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகனாக இருந்தேன். ஒரு முறை அவருடைய படங்களைப் பார்த்து அவருக்கு கடிதம் எழுதினேன். தங்களைப் பார்க்க எனக்கு அனுமதி அளித்து நேரம் தருமாறு கேட்டிருந்தேன்.

    அதற்கு அவருடைய உதவியாளர் பதிலளித்தார். நீங்கள் நேரில் வரவேண்டாம், உங்கள் ஊருக்கு அவர் வரும் போது நீங்கள் சந்திக்கலாம் என்றார்.

    ஆனால், அவரைச் சந்திக்கும் நாட்கள் எனக்கு உடனே கிடைத்தது. பள்ளிப் படிப்பு முடிந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த போது, ஒரு விழாவிற்கு அவரை அழைத்து வர சந்தர்ப்பம் கிடைத்தது.

    அந்த விழா முடிந்ததும், அவரிடம் எனக்கு நடிக்கும் ஆசை உள்ளது, வாய்ப்பு கிடைக்குமா என கேட்கலாம் என்றிருந்தேன். ஆனால், அவரை நேரில் பார்த்ததும், அவருடைய அழகுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து, அந்த ஆசையையே அறவே வெறுத்தேன்.

    அவர் படிப்பைத் தவிர வேறு என்ன தெரியும் என்று என்னிடம் கேட்ட போது, கதை எழுதுவேன் என்றேன். உடனே, அவருக்கு ஒரு கதை எழுதித் தருமாறு கேட்டார்.

    சில நாட்கள் கழித்து, அவரிடம் போய் ஒரு கதை சொன்னேன். ஆனால், அந்த கதை பெண்களை மையப்படுத்திய கதை. எனக்காக நீ கதை எழுத வேண்டுமென்றால் இப்படியா எழுதுவாய் என்றார். நானும் சில நாட்கள் சந்தர்ப்பம் கேட்டு, நான்கு நாட்கள் கழித்து வேறு ஒரு கதையுடன் சென்றேன்.

    அந்த கதைதான் ‘புதிய பூமி’ திரைப்படமாக வெளிவந்தது. என்னை முதன் முதலாக திரையுலகில் ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தியது அவர்தான்.

    அதன் பின் ஒரு நாள் என்னை சந்திக்க தயாரிப்பாளர் கோவை செழியனை, எம்ஜிஆர் அவர்கள் அனுப்பி வைத்தார். அவர் நேராக வகுப்பறைக்கு வந்து பேராசிரியடம், உங்களைப் பார்க்கத்தான் நான் வந்தேன் என்றார். அவரோ என்னையா என்று கேட்டார். நீங்கள்தானே வி.சி.குகநாதன் என்றார். அவரோ, நானில்லை, குகநாதன் இந்த வகுப்பின் மாணவன் , என்று என்னை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தார்.

    கோவை செழியன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு கல்லூரி மாணவரைப் பார்க்க எம்ஜிஆர் நம்மை அனுப்பி இருக்கிறாரே என்று.

    அவருக்கு நான் சொன்ன கதைகளில் ஒன்றுதான் பின்னர் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘குமரிக்கோட்டம்’ திரைப்படம்.

    எம்ஜிஆரால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் அதன் பின் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கதைகளை திரைப்படங்களுக்காக எழுதியிருக்கிறேன்.

    ஒருவரிடத்தில் உள்ள திறமையை, அத்துடன் நிறுத்திக் கொள்ள வைக்காமல், அவர் மேலும் வளர்வதற்கு வாய்ப்புத் தரும் ஒரே மனிதர் எம்ஜிஆர் அவர்கள்.

    அவர் ஏற்றி வைத்த விளக்குதான் இன்று வரை என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, ” என்றார்.

    அவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எங்களுக்கும் மகிழ்ச்சி….

  7. #1396
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய பூமி

    எம்.ஜி.ஆர்

    கதிரவன் என்ற பெயருடைய எம்.ஜி.ஆர் ஆங்கில மருத்துவராக ஒரு மலைக்கிராமத்துக்கு வந்ததும் அங்கிருந்த மந்திரம் தந்திரம் என்ற அறியாமை இருள் மறைந்து பகுத்தறிவுப் பகலவனின் ஒளி தோன்றியது. இது திமுகவின் ஆட்சி நாட்டில் புதிய பூமியை உருவாக்கியதற்கான அத்தாட்சிப் பத்திரம் ஆகும்.

  8. #1397
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை எம்.எம்.பிரி வியூ அரங்கில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "அன்பே வா "
    எவர்க்ரீன் சூப்பர் ஹிட் மெகா திரைப்படம் ,24/6/18 காலை 10 மணியளவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யின் நினைவாக திரையிடப்பட்டது .

    திரைப்படத்தின் முடிவில், திரு.சுகி சிவம் அவர்கள் பேசிய வீடியோ பதிவு
    வெளியிடப்பட்டது . கணவன் மனைவி இருவரிடமும் உங்களில் யார் சொர்க்கத்திற்கு செல்வதற்கு தயார் என்கிற கேள்விக்கு கணவன் சொன்னான் ,மனைவியை அனுப்பி வையுங்கள் என்று. ஏன் என்று கேட்டதற்கு அப்போதுதான் நான் இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியும். அதுவே எனக்கு சொர்க்கம் என்றான் .
    மனைவியுடன் கேட்டதற்கு கணவனை அனுப்பி வையுங்கள் . ஏனெனில் நான் இல்லாமல் அவர் கஷ்டப்பட கூடாது . மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோரிடம் பேச்சு வாங்கக்கூடாது. நோய் நொடி வந்து கவனிக்க ஆள் இல்லாமல் இருக்கக் கூடாது என்றாராம் . இவற்றை நடைமுறை வாழ்க்கையில் அவரவர் தங்கள் விருப்பப்படி முடிவு எடுக்கலாம். ஆனால் நான் சொன்னவற்றை கருத்தில் மட்டும் கொள்ளுங்கள்.

    மெல்லிசை மன்னர் எம்.எஸ். வியும் , கவிஞர் கண்ணதாசனும் திரையுலகில் கணவன் மனைவி போல்தான் வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். சுமங்கலியாக
    கண்ணதாசனை அனுப்பி விட்டு எம்.எஸ். வி. சில காலம் வாழ்ந்தார் .



    மேலும் வைசாலி கண்ணதாசன் பேசிய வீடியோ பதிவும் ஒளிபரப்பப்பட்டது .
    அவர் பேசும்போது, கவிஞர் கண்ணதாசன் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைவிட கலைஞர் கருணாநிதி அவர்களிடம்தான் மிகவும் நெருங்கி பழகினார். புகழ்மிக்க பல சிறந்த பாடல்களை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதினாலும் ஒரு கால கட்டத்தில் புரட்சி தலைவர் அவர்களை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்ததோடு, மாறுபட்ட கருத்துகளுடன், கருத்து வேறுபாடுகளுடன் செய்திகளை வெளியிட்டவர் .ஆனால் அதையெல்லாம் பொருட் படுத்தாமல் , தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் கண்ணதாசன் பாடல்கள், உறுதுணையாக இருந்ததாக கருதி,
    அவரை அரசவை கவிஞர் ஆக்கிய பெருமை புரட்சி தலைவரையே சாரும் .
    அதுமட்டுமின்றி , கண்ணதாசன் மறைந்ததும், அஞ்சலி செலுத்த வந்தபோது
    அவரது உடலை கிடத்தி இருந்த இடத்தை பார்த்து மனம் வருந்தி, எப்பேர்ப்பட்ட கவிஞர் அவர், இப்படியா அவரை வைப்பது என்றவாறு, பொதுமக்கள் ஊர்வலத்தில் அனைவருக்கும் அவர் முகம் தெளிவாக தெரியும் வண்ணம் உடலை கிடத்தும்படி ஏற்பாடு செய்திருந்தார் . அப்போது அவர்தான் தமிழக முதல்வர் .
    அதுமட்டுமின்றி, இறுதி ஊர்வலத்தில் மயானத்திற்கு சகல கலைஞர்களுடன் நடந்தே வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் .


    திரையுலகில் அவர்தான் முதல்வர் . அரசியலிலும் அவர்தான் முதல்வர் . மனிதநேயத்திலும் முதல்வர் மக்கள் தொண்டிலும் முதல்வர் . கொடைப்பணி செய்வதில் முதல்வர் .
    மக்களின் வாக்கு வங்கி பெறுவதிலும், செல்வாக்கு பெறுவதிலும் முதல்வர் .
    அதனால்தான் புரட்சி நடிகராக இருந்தவர் புரட்சி தலைவரானார்.எப்பேர்ப்பட்ட மனிதநேய மிக்க மனிதர்குல மாணிக்கம் அவர் என்று புகழ்ந்தார் .


    தொடர்ந்து , கவிஞர் கண்ணதாசன் பாடல்களான ஒருதாய் மக்கள் (ஆனந்த ஜோதி )
    கட்டி தங்கம் வெட்டியெடுத்து (தாயை காத்த தனயன் ) பாடல்கள் திரையிடப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது .
    Last edited by puratchi nadigar mgr; 26th June 2018 at 08:51 PM.

  9. #1398
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் -25/6/18

  10. #1399
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (26/6/18) ம.பொ. சி. அவர்களின் பிறந்த நாள் அனுசரிக்கப்படுகிறது .


    புகைப்படம் உதவி :நண்பர் திரு.சி.எஸ். குமார், பெங்களூரு.

  11. #1400
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அந்தி மழை -ஜூன் 2018

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •