Page 349 of 401 FirstFirst ... 249299339347348349350351359399 ... LastLast
Results 3,481 to 3,490 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #3481
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறு வெளியீடு காவியங்களின் நாயகன், அகில உலகமெங்கும் தேடினாலும் நடத்த முடியாத சாதனைகளை மறைந்து 30 ஆண்டுகளாகினும் நடத்தி வரும் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "பல்லாண்டு வாழ்க" காவியம் வரும் தீபாவளி திருநாள் முதல் மதுரை - சென்ட்ரல் dts வெளி வருகிறது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3482
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    எம்.ஜி.ஆரின் 'அன்பே வா' (1966) - திரை விமர்சனம்
    MGR's Anbe Vaa Tamil Review 1
    ஒரு நாள் இயக்குனர் A.C. திருலோகசந்தர் அவர்கள், Rock Hudson நடித்த Come September படத்தை பார்த்தார். அந்த படம் ஒரு Romantic Comedy வகைப் படம். இந்த படத்தின் மையக் கருவை மட்டும் எடுத்து தமிழிற்கு ஏற்றாற்போல் மாற்றி நாம் ஒரு படத்தை இயக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, அதை தன் ஆஸ்தான கம்பெனியின்
    முதலாளி திரு. A.V. மெய்யப்ப செட்டியாரிடம் தெரிவித்தாராம். செட்டியாரும், 'சரி, பண்ணலாம். யாரை ஹீரோவா போடலாம்னு இருக்க?' என்று அவர் கேட்க, அவர் ஒரு வித தயக்கத்தோடு 'எம்.ஜி.ஆரை போட்டு படம் பண்ணலாம்னு இருக்கேன்' என்று சொன்னாராம். செட்டியாரோ 'எம்.ஜி.ஆரா? அவர் நமக்கு தோது பட மாட்டாரே? அதுவுமில்லாம இது காதல் & காமெடி கலந்த படம். அவர் இதுக்கு ஒத்துக்குவாருன்னு நினைக்கிறியா?' என்று கேட்க, அதற்க்கு A.C. திருலோக்கோ 'நீங்க அனுமதி மட்டும் கொடுங்க. நான் போய் பேசி பார்கிறேன்' என்று சொன்னார். A.V. மெய்யப்ப செட்டியாரும் அனுமதி கொடுக்க, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு பறந்தது A.C. திருலோகசந்தரின் கார்.


    ராமாவரம் தோட்டத்து வீட்டு ஹாலில் ஏற்கனவே பல தயாரிப்பு கம்பெனி மேனேஜர்களும், இயக்குனர்களும் எம்.ஜி.ஆரை தங்களின் அடுத்த படத்தில் புக் செய்ய காத்துக்கொண்டிருந்தார்கள். A.C.திருலோகசந்தரும் தான் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்த சொல்லிவிட்டு, அவரும் தலைவரின் வருகைக்காக காத்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர் 'அவர் எங்க இந்தப்பக்கம்? அட்ரஸ் மாறி வந்துட்டாரா?' என்று சொன்னாராம். காரணம், A.V. மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். அதனால் தான் எம்.ஜி.ஆர் அப்படி கேட்டார். சிறிது நேரம் கழித்து ஹாலுக்கு வந்த எம்.ஜி.ஆர், 'உள்ளே வாங்க' என்று திருலோக்கை அழைத்து கதை கேட்க ஆரம்பித்தார். முழு கதையை கேட்ட எம்.ஜி.ஆர் 'கதை நல்லா இருக்கு. ஆனா என் ஆடியன்ஸுக்கு பைட்டு சீன்ஸ் இருந்தா தான் பிடிக்கும். இதுல ஒரு ரெண்டு இடத்துல மட்டும் பைட்டு வைக்கிற மாதிரி திரைக்கதை வைங்க. நாம இந்த படத்தை பண்ணலாம்' என்று சொன்னாராம். அந்த படம் தான் இந்த 'அன்பே வா'.
    MGR's Anbe Vaa Tamil Review 2
    படத்தின் கதை ரொம்ப சிம்பிள். பெரும் தொழிலதிபரான ஜே.பி, விடுமுறைக்காக சிம்லாவில் இருக்கும் தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறார். ஆனால் அந்த மாளிகையை நிர்வகிக்கும் வேலைக்காரன், வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டிருப்பதை அறிந்து கொள்ளும் ஜே.பி, அங்கே தன்னை பாலுவாக அறிமுகப்படுத்திக்கொண்டு சொந்த வீட்டிற்க்கே வாடகை கொடுத்துக்கொண்டு தங்க ஆரம்பிக்கிறார். ஏற்கனவே அந்த மாளிகையில் தங்கி வரும் கீதா என்ற பெண்ணுடன் சின்னத் சின்ன மோதல்கள் ஏற்பட்டு அதுவே காதலாக மாறுகிறது அவருக்கு. இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பதை மிகவும் பொழுது போக்காக காட்டியிருக்கும் படம் தான் இந்த 'அன்பே வா'.

    ஜே.பி என்கிற பாலுவாக எம்.ஜி.ஆர். எனக்கு தெரிந்து தலைவர் நடித்த படங்களில், ரொமாண்டிக் காமெடி Genre வகை திரைப்படம் இது ஒன்று தான். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்தாலும், அதுவும் சிறப்பான படமாக அமைந்தது எம்.ஜி.ஆரின் சிறப்பு. இந்த படத்தில் தலைவர் காமெடியில் கலக்கியிருக்கிறார். அதுவும் புரட்சித் தலைவரின் குறும்புத்தனங்கள் இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. சரோஜா தேவியை செல்லமாக 'சின்ன பாப்பா' என்று கிண்டலாக அழைக்கும்போதும் சரி, ஒவ்வொரு முறையும் கண்டத்து பைங்கிளியை ஏமாற்றும் போதும் சரி, ஒவ்வொரு இடத்திலும் சிக்சர் அடிக்கிறார் தலைவர். 'நாடோடி' பாடலில் தலைவரின் வேகத்தை நடனத்தில் கலந்து கட்டி அடிக்கிறார். அதே போலத் தான் சண்டை காட்சிகளும். குறிப்பாக Sitting Bull 'ஆந்திரா' குண்டுராவை அசால்டாக தூக்கி தோளில் நிறுத்தும் காட்சி இருக்கே, கலக்கிட்டிங்க தலைவரே (இந்த படத்தில் நடிக்கும்போது தலைவருக்கு வயது 49 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்). தலைவர் பொதுவாகவே அழகு தான் என்றாலும், இந்த படத்தில் பலவிதமான உடைகளில் இன்னும் அழகாக தெரிகிறார் மக்கள் திலகம்.
    MGR's Anbe Vaa Tamil Review 3
    கீதா என்கிற 'சின்ன பாப்பாவாக' கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி. அன்றைய காதல் கதாநாயகிக்கே உரிய நடையில் நளினம், காதல் சொட்டும் பார்வை என்று நடிப்பில் பல பரிமாணங்களை காட்டுகிறார். அதுவும் அவரின் குரல், நிஜக் குயிலே தோற்று விடும் போங்கள். சமையற்காரன் ராமையாவாக நாகேஷ் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள். 'உங்க கிட்ட நிறைய பணம் இருக்கு. என் கிட்ட கொஞ்சம்... கூட பணம் இல்ல' என்று நாகேஷ் வசனம் பேசும் போது செய்யும் ஏற்ற இறக்கம், நாகேஷால் மட்டுமே செய்ய முடிகிற விஷயம். சரோஜா தேவியின் அப்பாவாக வரும் T.R. ராமச்சந்திரன், மனோரமா, S.A. அசோகன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    படத்தின் ஒளிப்பதிவு, மாருதி ராவ். ஈஸ்டர் மேன் கலரில், சிம்லாவை மிகவும் அழகாக தன் கேமராவில் படம் பிடித்திருக்கிறார். பாடலாசிரியர் வாலி & M.S. விஸ்வநாதனின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மயக்கும் ரகம். புதிய வானம், நான் பார்த்ததிலே, ராஜாவின் பார்வை, நாடோடி மற்றும் அன்பே வா போன்ற பாடல்கள் அனைத்தும் அருமை. எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்த பாடல்கள் புதிய வானம் & நாடோடி. வசனம், ஆரூர் தாஸ். 'ஒருத்தன் ஏழையா கூட இருக்கலாம், ஆனா எந்திரமா மட்டும் இருக்கவே கூடாது', ஒருத்தன் நொண்டியா கூட இருக்கலாம், ஆனா ஒண்டியா மாத்திரம் இருக்கவே கூடாது' என்று மிகவும் யதார்த்தமான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார். கதை & இயக்கம், A.C. திருலோகசந்தர். படத்தின் எந்த இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் படத்தை கொண்டு சென்ற விதம், மிகவும் அருமை. எந்த ஒரு இடத்திலும் 'Come September' படத்தின் ஒரு காட்சியைக் கூட காப்பியடிக்காமல், வெறும் மூலக்கதையை வைத்து அற்புதமான திரைக்கதையை இயற்றி படம் எடுத்தது Simply Super. படத்தை தயாரித்தது, AVM Productions.
    MGR's Anbe Vaa Tamil Review 4
    'அன்பே வா' திரைப்படம், 1966 அன்று வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அந்த வருடத்தில் எம்.ஜி.ஆர் நடித்த 9 படங்களில், இந்த படம் தான் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு ஆன தொகை, 30 லட்சம். ஆனால் வசூல் ஆன தொகையோ 62 லட்சம். ஏ.வி.எம் நிறுவனம், எம்.ஜி.ஆருக்கு தந்த சம்பளம் 3 லட்சம். இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும், ராமாவரம் தோட்டத்தில் நன்றாக ரிகர்சல் பார்க்கப்பட்ட பின், படமாக்கப்பட்டது. காரணம், எம்.ஜி.ஆரின் தொழில் பக்தி மற்றும் ஸ்டன்ட் ஆட்களுக்கு எந்த காயமும் ஏற்படக்கூடாது என்ற அக்கறை. இந்த படம் வெள்ளிவிழாவை நோக்கிக் ஓடிக்கொண்டிருந்த போது, திடீரென்று அன்பே வா படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. காரணம், ஏ.வி.எம்மின் மற்றொரு படம் திரைக்கு புதிதாக வந்திருந்தது. எம்.ஜி.ஆர் செட்டியாரிடம், 'படம் வெள்ளிவிழா நாள் வரைக்கும் இருக்கட்டும். அப்போ தான் படத்துக்கு ஒரு Record கிடைக்கும்' என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் தான் எம்.ஜி.ஆருக்கு 'அன்பே வா' திரைப்படம் ஏ.வி.எம் நிறுவனத்தோடு முதலும், கடைசியுமான படமாக போய் விட்டது.
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி..... Thanks Friends...

  4. #3483
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    #இதுவன்றோ #பக்தி !!!

    எங்க அப்பாவுக்கு ஹார்ட்ல ஓட்டை...எவ்வளவோ மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தும் பயனில்லை...கடைசி முயற்சியாக சி.எம்.சி.மருத்துவமனை போகச்சொல்லி எங்க சர்ச் பாதிரியார் ஒரு லெட்டர் கொடுத்தனுப்பினாரு. அங்கே போனா, ஒரு லட்சம் ஃபீஸ் கட்டணும் ...இந்த சிகிச்சைக்கு இலவச மருத்துவம் இல்லைன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க...

    எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல... அப்ப எங்க நண்பர் ஒருவர், 'நீ புரட்சித்தலைவரிடம் உதவிகேட்டு சி.எம். செல்லுக்கு கடிதம் போடு...கண்டிப்பாக உதவி புரிவார்'னு சொல்ல, நானும் எங்க மாவட்ட செயலாளர் மூலம் கடிதம் அனுப்பினேன்...

    வெறும் மூன்றே நாளில் ரூ.150000/- அப்ரூவ் ஆகி புரட்சித்தலைவரிடமிருந்து ஆணை வந்தது. அதாவது ஒரு லட்ச ரூபாய் மருத்துவமனைக்கும் ரூபாய் ஐம்பதாயிரம் எங்களின் குடும்பத்திற்கும் வழங்கச்சொல்லி அந்த உத்தரவில் இருந்தது...

    வாரி வழங்கி என் தந்தையார் உயிரைக் காப்பாற்றி எங்களின் குடும்பத்தையே வாழவைத்த தெய்வம் புரட்சித்தலைவர்....

    சில ஆண்டுகள் கழிந்தன...டிசம்பர் ஆண்டு...கிறிஸ்துமஸ் கொண்டாட எங்கள் வீட்டில் எல்லோரும் ஆயத்தமாக...

    ஒரு செய்தி 'இடி போல' எங்களனைவரின் இதயங்களில் இறங்கியது...
    அது, 'புரட்சித்தலைவர் மறைந்துவிட்டார்' என்ற செய்தி...

    இதைக் கேள்விப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் எனது தந்தையார் இறந்துவிட்டார்...

    எப்பேர்ப்பட்ட பக்தி...!

    புரட்சித்தலைவர் இல்லாத உலகில் எனது தந்தையாருக்கு வாழ விருப்பமில்லை...அவருடனேயே சென்றுவிட்டார்...

    எங்களைப் போல எத்தனையோ பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழவைத்த தெய்வம் அவர்...! அதெல்லாம் வெளிய தெரியாது...!!!

    #நகைச்சுவை #நடிகர் #பெஞ்சமின் அவர்களின்
    கண்ணீர் மல்கிய பேட்டி

  5. #3484
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    #மகாசக்தி

    நான் தீவிர சிவாஜி ரசிகன். சுவரொட்டியில் இருக்கும் எம்ஜிஆர் போஸ்டரைப் பாரத்தாலே தவறான செயலோ என நினைப்பவன் நான்...
    அந்த அளவு தீவிர சிவாஜி ரசிகன்...!

    நான் சினிமாத்துறையில் நுழைந்தபோது தொடரந்து எம்ஜிஆர் பற்றிய நல்ல விஷயங்களைக் கேட்டபோது , "இப்பேர்ப்பட்ட ஒரு மாமனிதரையா வெறுத்தோம்" என வருந்தினேன். அன்றிலிருந்தே எம்ஜிஆர் அவர்களை தீவிரமாக நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒருசமயம் அம்மன் கோவில் கிழக்காலே படஷூட்டிங்கிற்கு சென்றிருந்தேன்.. இரவு என் ரூமிலுள்ள டீவியில் 'ஒலியும் ஒளியும்' பார்த்துக் கொண்டிருந்தேன்...ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது...

    அப்போது என் பின்னாலிருந்து ஒரு குரல், "என்ன ஒரு பேரழகுய்யா", நான் திடுக்கிட்டு பின்னால் பார்க்க அங்கே இசைஞானி இளையராஜா...!
    'நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே...'

    திரையில் எம்ஜிஆர் சரோஜாதேவி டூயட் சாங் ஓடிக்கொண்டிருந்தால் நாம் எம்ஜிஆரைத் தான் ரசிப்பேன்...இப்படி பத்மினி, சாவித்திரி யாருடன் டூயட் சாங் நடித்தாலும் என் கண்கள் அனிச்சையாக எம்ஜிஆரை ரசிக்க ஆரம்பித்துவிடும்...
    அப்படிப்பட்ட பேரழகன் அவர்... அப்பேர்ப்பட்ட ஈர்ப்புசக்தி எம்ஜிஆருக்கு மட்டும் தான்...

    நான் பாடியதால் தான் எம்ஜிஆர் முதலமைச்சராக ஆனார் என்று ஒரு மேடையில் டிஎம்எஸ் சொன்னார்... அப்படிப் பார்த்தால் சிவாஜிக்குப் பாடியுள்ளாரே? ஏன் அவர் முதலமைச்சராகவில்லை??? ஏன் டிஎம்எஸ்ஸே சில படங்களில் ஹீரோவாக நடித்துப் பாடியும் உள்ளாரே?? அவர் முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டுமல்லவா???

    எம்ஜிஆர் அவர்கள் ஒரு தனிப்பட்ட மகாசக்தி...
    ஒப்பீடு செய்ய இயலாத தனிப்பிறவி...

    எம்ஜிஆர் 100 வது பிறந்தநாள் விழாவில்
    இயக்குனர் திரு. ஆர்.சுந்தர்ராஜன் பேசியது...

  6. #3485
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “இந்தக் கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா,

    நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?”

    -என்ற ஒரு மூதாட்டி

    வரலாற்றிலும் புனைவுகளிலும் இடம்பெற்றுள்ள விக்ரமாதித்தனைப் போலவே 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரைச் சுற்றியும் கதைகளும் நம்பிக்கைகளும் நிலவுவதைப் பார்க்கும்போது, விக்ரமாதித்தன் பெரிய அதிசயமாகத் தோன்றாது.

    அந்த அதிசயமே எம்.ஜி.ஆர்தான்.

    எம்.ஜி.ஆர். பற்றி நாம் ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கேட்டிருப்போம். நம்பக்கூடிய விஷயங்களும் நம்ப முடியாத விஷயங்களும் அதில் இருக்கும்.

    #MGR படத்தை பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரிக்குறவர், திரையில் எம்.ஜி.ஆரைத் தாக்க நம்பியார் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டதாகச் சொல்வார்கள்.

    கிராமத்தில் பிரச்சாரத்துக்கு செல்லும்போது “இந்தக் கிராமத்துல அம்புட்டு ஓட்டும் ஒனக்குத்தான் ராசா, நீ ஏன் இந்த வேகாத வெயில்ல வந்த?” என்று ஒரு மூதாட்டி வருந்தியதாகச் சொல்வார்கள்.

    “ஆனா, அந்த நம்பியார்கிட்ட மட்டும் சாக்கர்தயா இருப்பா” என்று இன்னொரு மூதாட்டி அன்பாக எச்சரித்ததையும் சொல்வார்கள்.

    எம்.ஜி.ஆர். குறித்த கதைகளுக்கும் புனைவம்சம் கொண்ட தகவல்களுக்கும் பஞ்சமே இல்லை.

    எம்.ஜி.ஆர். தினமும் தங்க பஸ்பம் சாப்பிடுவார்.

    எம்.ஜி.ஆர். அணிந்திருந்த கண்ணாடி
    X-ray தன்மை கொண்டது.

    எம்.ஜி.ஆரின் கைக்கடிகாரம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இப்படி நிறைய. இதில் எது உண்மை, எது கற்பனை என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் #மக்கள்திலகம்.... Thanks Friends...

  7. #3486
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தற்போது வெளியாகியிருக்கும் "வடசென்னை" படத்தில் மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது...

  8. #3487
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்ணதாசன்
    பாடல்கள்... பாடங்கள்!
    தினம் ஒன்று...... 1
    -----------------------------------
    கவியரசு திரைப்படங்களுக்காக
    எழுதிய பாடல்களாக மட்டும் இல்லாமல்
    அன்றாட மனித வாழ்க்கைக்கு உதவும்
    உணர்த்தும், உயர்த்தும் உன்னத பாடங்கள்... ஏன் தினம் ஒரு பாடலை
    எடுத்து சுவைக்க கூடாது? என்ற எண்ணத்தில் இத் தொடரை எனது
    நண்பர்களுக்காக எழுதுகிறேன்...
    வழக்கம்போல் உங்கள் ஆதரவும், கருத்துப் பதிவும், ஆலோசனைகளும்
    இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    விஜயதசமியில் முதல் பாடல்.

    "அ"வில் தொடங்குவோம்...

    அதோ அந்தப் பறவைபோல வாழ வேண்டும்.
    இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே
    ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாடல்.
    எப்பேர்ப்பட்ட வரிகள்... அடிமைகளாக
    இருக்கும் மனிதர்கள், தன் தாய் நாடு
    சென்று சுதந்திர மனிதராக வாழ எண்ணும் நிலையில் பாடும் பாடல்...

    கருத்துகள் அற்புதம்.

    பறவைக்கு ஏது தடை?
    பறவைக்கு ஏது விசா?

    நான் எனது கூட்டங்களில் சொல்லும் கருத்து... பதவியில் இருக்கும் போது எனது வாழ்க்கை "பட்டம்" போல இருந்தது... எந்த உயரத்தில் பறந்தாலும்
    நூல் வேறொருவரின் கையில்... சுதந்திரம் இல்லை... இன்று ஓய்வு பெற்ற பிறகு எனது வாழ்க்கை " பறவை" போல.. இறக்கை என் வசம்... பறப்பது என் இஷ்டப்படி.... இதை அன்றே கவியரசர்
    அருமையாக எழுதி உணர்த்தி விட்டார்.

    அலைகள் போல என்றால் நான் உணர்வது... விடாமுயற்சி... விடாது
    ஆடுவது... ஓய்ந்து பின் வந்தாலும்
    மீண்டும் ஆர்ப்பரித்து ஆடுவது..

    "காற்று நம்மை அடிமை என்று விலக்கவில்லையே!
    கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
    காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
    காதல் பாசம் தாய்மை நம்மை
    மறப்பதில்லையே!

    இயற்கைக்கு நம்மிடம் பேதம் இல்லை..
    பேதம் மனிதனே உருவாக்கினான் என்பதை மறைமுகமாக சாடியுள்ளார்.
    காலம் பொதுவானது... ஏழை, பணக்காரன், ஆண், பெண், என்ற வித்தியாசம் இல்லை...

    அந்தப் படத்தில் அடிமைகளுக்கு எழுதிய பாடல்... ஆனால் நமக்கு உரைக்கும் பாடம்..

    தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே!
    சொல்லில்லாமல் மொழியில்லாமல்
    பேசவில்லையே!
    வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே!
    போகும்போது வேறு பாதை போகவில்லையே!

    என்ன ஒரு உவமைகள்...

    அடிமைகளும் பத்து மாதம் தாய் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள்தான்
    அவர்களுக்கும் எல்லோரையும் போல மொழி உண்டு.. பசி உண்டு.. ஏன் இந்ந வித்தியாசம் காட்டுகிறாய் மனிதா?
    யாராக இருந்தாலும் இறுதியில் சென்று
    அடைய வேண்டிய இடம் இடுகாடு...
    வேற பாதை இல்லை..

    வரிகள் வலியை சொல்லும் வழிகள்.

    இன்றும் இந்தப் பாடலை கேட்கும் போது
    உள்ளம் பூரித்துப் போகிறது..
    உவகை கொள்கிறது...

    புரட்சித்தலைவருக்காக எழுதி இருந்தாலும் ஒரு புரட்சிப் பாடல்தான்.
    எம். எஸ். வி அவர்களின் துள்ளல் இசை.
    டி. எம். எஸ்..குழுவினரின் குரல்..

    பாடம் புகட்டும் பாடல்.

    இங்கு அடிமைக்காக எழுதியிருந்தாலும்
    சாதியை காட்டி பிரிவினை பேசுவோர்க்கு
    ஒரு பாடம் புகட்டும் பாடல்.

    கவியரசின் புகழ் நிலைக்கும்.

    நாளை சந்திப்போம்.

    வெற்றி நிச்சயம்... Thanks Friends...

  9. #3488
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 நாளை இதே நாளில் துவங்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கம் அரைக்கால் டிரௌசர் பசங்களை நம்பி ஆட்சிக்கு வர முடியாது தம்பி என்றும் இது என்ன எம்ஜியார் நடித்த படமா 100 நாட்கள் ஓடுமா என்று தலைவா உன் ரசிகர்கள் ஆக இருந்த எங்களை வெறுப்பேத்தி ஏற்றிய உங்களை எட்டி உதைத்து ஏளனம் செய்த கூட்டத்துக்கு பதிலடி தர உங்களால் ஆரம்பிக்க பட்ட மக்கள் இயக்கம் பிறந்த தினம் .இந்த நேரம் உங்களுக்காக இந்த இயக்கத்துக்காக தன் உயிர் தந்து கொடி காத்த வத்தலகுண்டு ஆறுமுகம் பூலாவரி சுகுமாரன் போன்ற தொண்டர்களுக்கு அஞ்சலி முதலில். காலம் உருண்டு ஓடி விட்டது. மக்களால் தாங்கி பிடிக்கப்பட்ட நீங்கள் 3 முறை முதல்வர்.பின் அன்னை ஜானகி அம்மா. பின் புரட்சித்தலைவி அம்மா பின் அண்ணன் ஓ.பி.எஸ். பின் இன்று நிமிடம் வரை அண்ணன் எடப்பாடியார். ...எத்துணை முதல்வர்கள். அதிசயம் ஆனால் உண்மை நம்ப முடியவில்லை. இந்த தமிழக மக்களுக்கு எத்துணை பாசம் உங்கள் மீதும் இந்த இயக்கத்தின் மீதும் கேலி பேசியவர்கள் இன்று இல்லை ஆனாலும் அவர்கள் குடும்பம் அதை தொடர்கிறது. நடக்கட்டும் வந்தவன் போனவன் உங்கள் பேர் சொல்லி வாழ்ந்தவன் இருக்கட்டும் அவர்களை பற்றி ஒரு கவலை இல்லை. இதுதான் அரசியல். இருந்தாலும் நீங்கள் கண்ட அண்ணாவின் கொடியை கீழே இறக்க எவன் வந்தாலும் சந்திப்போம் சாதிப்போம். ஏன் என்றால் நாங்கள் வெற்றி திருமகனின் அரைக்கால் டிரௌசர்கள். விசில் அடிக்கும் குஞ்சுகள். 100 நாட்கள் தாண்டி 48 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தொண்டர்கள்.இன்று எங்களோடு பயணிக்கும் இளைய சமுதாயமே வாழ்த்துக்கள் நன்றி .அன்பு மலர்களே நம்பி இருங்கள் நாளையும் நமதே...ஏன் என்றால் நம் அஸ்திவாரம் பலமானது உண்மையானது நம் தலைவன் கண்டது நன்றி.....( 47 ஆண்டுகள்) ..... Thanks Friends...

    .

  10. #3489
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை விஜயதசமி வெற்றித்திருநாளில் வெற்றித்திருமகன் புரட்சித்தலைவர் இருவேடத்தில் நடித்து தயாரித்து இயக்கியவரலாற்றுசாதனை காவியம் உலகம்சுற்றும்வாலிபன் படத்தின் ஸ்டிக்கர் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது மதுரையில் படத்தை வெளியிட இருக்கும் திரு. கலைமதி கம்பைன்ஸ். திரு. தியாகராஜன் ஸ்டிக்கர்களுவழங்கினார் படத்தை மீண்டும் புதிய டிஜிட்டல் வடிவத்தில் கீயுப்சிஸ்ட்டத்தில் பெரும் பொருள் செலவில் வெளியிடவிருக்கும் திண்டுக்கல் ரிஜி.மூவிஸ் திரு நாகராஜன் உடன் இருக்கின்றார் ஸ்டிக்கர் வாங்கிய மகிழ்ச்சியில் மதுரை ரசிகர்களுடன் படம் மாபெரும் வெற்றி பெறும் என்ற உங்கள் அனைத்து நண்பர்களின் வாழ்தொழியில் அனைவருக்கும் இனிய காலைவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...

  11. #3490
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இலங்கையில் யாழ் - ராணி தியேட்டரில் "குலவிளக்கு " (1969) இரவுக்காட்சி யை பார்த்துவிட்டு மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார்கள். போலீஸ்காரர்களை வரவழைத்தே மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
    அடுத்தநாள் அடிமைப்பெண் திரைப்படவுள்ளதாலேயே மக்கள் தியேட்டருக்குள்ளேயே இருந்துவிட்டார்கள. அடிமைப்பெண் முதல் காட்சி காலை 5:00 மணிக்கே House Full காட்சியுடன் தொடங்கியது. வேறு எந்த நடிகரின் படமும் இப்படி அதிகாலையில் காண்பிக்கப்படவில்லை.....👍 👌 Thanks Friends...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •