Page 130 of 401 FirstFirst ... 3080120128129130131132140180230 ... LastLast
Results 1,291 to 1,300 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1291
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - எம்.ஜி.ஆர்.






    தமிழ்த் திரைப்பட உலகில், வரலாறு படைத்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கப் படம், உலகம் சுற்றும் வாலிபன்.


    நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என, திரை உலகின் முப்பெரும் பரிமாணங்களில், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட படம், உலகம் சுற்றும் வாலிபன்.
    வெளிநாடுகளில் நடப்பது போல கதையை அமைப்பது சுலபம். ஆனால், கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களுக்கே நடிகர்களை அழைத்துச் சென்று, படப்பிடிப்பை நடத்தி, அந்தப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவது என்பதை, அந்த நாளில் நினைத்துக் கூட பார்க்க முடியாது. சுமார், 40 ஆண்டுகளுக்கு முன், ஜப்பான் தலைநகர் டோக்கியோ, பாங்காக் மற்றும் சிங்கப்பூர் என, தென் கிழக்காசிய நாடுகளில் நடந்த உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு அனுபவங்களை, 'திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம்' எனும் தலைப்பில், 'பொம்மை' இதழில், எம்.ஜி.ஆர்., தொடராக எழுத, அது வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.


    முதன் முறையாக வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய போது, எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், இன்றைய வாசகர்களுக்கு மட்டுமல்ல; பட உலகினருக்கும், அடுத்து வரும் தலைமுறையினருக்கும் ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    உலகம் சுற்றும் வாலிபன். படத்துக்காக வெளிநாடு செல்ல இருந்த சமயம்...
    'திரை கடலோடியும், திரவியம் தேடு' என்று, பெரியவர்கள் சொன்னாலும், சொன்னார்கள்; அந்தச் சொல், என்னை, எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்தது என்பதை எண்ணும் போது, சிரிப்பு வருகிறது. ஏனெனில், பணம் சம்பாதிக்கச் சென்றேனா, செலவு செய்ய சென்றேனா என்பதை நினைத்தல்ல; கையில் போதிய பணம் இல்லாத நிலையில், என்னை நம்பிய, கலைஞர்களை, பரிதாபமான நிலைக்கு ஆளாக்கும், விபரீத சூழ்நிலைக்கு அழைத்துச் சென்றேன் என்று தான், சொல்ல வேண்டும்.


    ஆம்... அந்த அன்புள்ளம் கொண்ட, நல்ல நண்பர்களை, கையில் பணமில்லாத ஏழைகளாக, உறவினர்களில்லாத அனாதைகளாக, என்னுடைய எந்த முடிவிற்கும் அசைய வேண்டியவர்களாக, சுருங்கச் சொன்னால், என்னைத் தவிர, வேறு துணையற்றவர்களாக ஆக்கிவிட்ட நிலையில், அவர்களை, என்னோடு வெளிநாட்டுப் படப்பிடிப்பிற்கு, அழைத்துச் சென்றேன்.


    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக, ஜப்பானுக்கு பயணமான அன்று,
    காலையிலேயே அண்ணா நினைவிடத்திற்கு சென்றேன். முன்பு ஒருமுறை, இலங்கையில் நடந்த பாராட்டு விழாவுக்கு சென்ற போது, நேரில் வந்து, எனக்கு மாலையணிவித்து வாழ்த்திய அந்த அன்பு இதயம், இன்று மீளா துயிலில் ஆழ்ந்து விட்டது.
    அவருடைய பாதத்தை, என் இதயத்தால் தொட்டேன். என் உள்ளமெல்லாம் சிலிர்க்க, ரத்த நாளமெல்லாம் துடிக்க, கண்கள் குளமாக, விரல்கள் நடுங்க, அந்த நினைவு மேடையில், அண்ணா கால்களை வருடினேன்.

    அண்ணா ஏதோ சொல்வது போல், ஒரு பிரமை...
    'தம்பி... தமிழகத்துக்கோ, தமிழ்ப் பண்புக்கோ, இந்திய துணைக் கண்டத்து உயர்வுக்கோ, ஏதும் பங்கம் வராமல் நடந்து கொள்!'
    இப்படி அண்ணா சொன்னது போல், ஒரு எண்ணம் தோன்றியது.
    ஏன் சொல்லியிருக்கக் கூடாது... அவர் எத்தனையோ முறை பேசி, எழுதி, நமக்கெல் லாம் அறிவுறுத்தியது தானே!
    இருப்பினும், அன்று, அது ஒரு புதிய கட்டளை போல், மனத்தெளிவை உண்டாக்கும் அறிவுரை போல் இருந்ததுடன், எனக்கு புத்துணர்வையும், புது தெம்பையும் அளித்த வரமாகவும் இருந்தது.
    கிடைத்தற்கரிய பெரு நிதியை பெற்று விட்டவனாக நான் மாறினேன். அந்தத் துணிவோடு நேரே என் உடன் பிறந்த அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை காணச் சென்றேன்.
    அண்ணனின் காலில் விழுந்து வணங்கினேன். தழுதழுத்த குரலில் அவர், 'உடம்பை ஜாக்கிரதையாக பாத்துக்க; எதுக்கும் அவசரப்படாதே. நீ குற்றமில்லாதவனா இருக்கலாம். உன்னைச் சுற்றி இருக்கிறவங்க எல்லாரையும் அப்படி எதிர்பார்க்காதே, எல்லாரையும் நம்பிடாதே; அதுக்காக எல்லாரையும் சந்தேகப்படாதே. எல்லாத்துக்கும் நீ தான் பொறுப்பு. அதனால், அமைதியா இருந்து, எச்சரிக்கையா நடந்துக்க. படப்பிடிப்பிலே கவனமா தொழில் செய்யணும். முடிஞ்சா அடிக்கடி கடிதம் போடு...' என்று கூறினார்.
    இந்த ஆசியை தாய், தந்தை, ஆசான் என, மூன்றுமாக இருந்து வாழ்த்தி வழங்கியதை, என் பாதுகாப்பு கவசமாக்கிக் கொண்டு புறப்பட்டேன்.
    விமான நிலையத்தில் அன்பு தோழர்களின் நெரிசல் இருக்கும் என்று நினைத்து, வீட்டிலேயே வழியனுப்ப வந்திருந்த நண்பர்களிடம், மாலை, மரியாதையை ஏற்று,ஆசி பெற்றுக் கொண்டேன்.
    எந்த வித தொழில் தொடர்பு இல்லாவிடினும், என் மீது உடன்பிறப்பு போன்ற பாச உணர்வு காட்டி, எப்போதும், தனித்தன்மை வாய்ந்த அன்புணர்வோடு பழகும், என்.டி.ராமராவ், என் வீட்டிற்கு வந்து, மாலை அணிவித்து, வாழ்த்தினார்.
    அவரிடம் ஆசி பெறுமாறு, படத்தில் நடிக்க வந்த சந்திரலேகா, மஞ்சுளா மற்றும் லதா ஆகிய மூன்று கதாநாயகிகளையும் வணங்கச் சொன்னேன்.
    இம்மூன்று பெண் களும், தங்களுடன் எந்த உறவினரையும், அழைத்து வர இயலாத நிலை. எனவே, என் வாழ்க்கைத் துணைவி ஜானகி தா,ன் அவர்களுக்குத் தாய், தமக்கை, அண்ணன் எல்லாமாக இருந்தார்.
    இயக்குனர்கள் கிருஷ்ணன், பஞ்சு, இருவரும் மலர் மாலைகளை அணிவித்து, வாழ்த்தினர். கிருஷ்ணன் அதிகமாகப் பேச மாட்டார். அப்படி ஏதாவது பேசினால், அது, ஊக்கம் தருவதாக இருக்கும். 'கொஞ்சங் கூடப் பயப்படாதீங்க. ரொம்ப நல்லாப் படம் எடுத்துக்கிட்டு வருவீங்க...' என்று கூறினார் கிருஷ்ணன். வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து வாழ்த்தினார் இயக்குனர் பந்துலு.
    'நிறைய நாளாகுமோன்னு பயப்படாதீங்க; நல்லதைப் பாத்தா விட்டுடாதீங்க... நீங்க எங்கே விடப்போறீங்க! நான்தான் மொதல்ல போயி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர்ல படம் பிடிச்சேன். அப்புறத்தான் நீங்க, அடிமைப் பெண் படத்துக்கு போனீங்க. நான் எடுத்த மாதிரியா எடுத்தீங்க...ஒரு சந்து, பொந்து விடாம படம் பிடிச்சிட்டு வந்து, என்னையே அசர வெச்சுட்டீங்களே... ஜப்பானெல்லாம் போனா விட்டுடுவீங்களா... போய் வெற்றிகரமாக முடிச்சுட்டு வந்துடுங்க சுவாமி...' என்று வாழ்த்தினார். அவர் எப்போது என்னைக் கண்டாலும், 'என்ன சுவாமி, சவுக்கியமா...' என்று கேட்பது வழக்கம்.
    நாகேஷும் வீட்டிற்கே வந்து விட்டார். அவரோடு, அவருடைய நெருங்கிய நண்பர், நடிகர், ஸ்ரீகாந்த்தும் வந்திருந்தார்.
    ஸ்ரீகாந்த் தனியாக என்னிடம், என் கையைப் பிடித்து கண் கலங்கியவாறு, 'நாகேஷை உங்கக் கிட்டே ஒப்படைக்கிறேன். நீங்க தான் உங்க தம்பி போலப் பாத்துக்கணும்...' என்றவர், 'அவன் நல்ல நடிகன்; ஆனா, ஒண்ணும் தெரியாதவன், நல்லவன்...' என்றார்.
    இதை அவர் சொல்வதற்குள்ளே, என் மனதில் ஓடிய எண்ணங்கள் தான் எத்தனை, எத்தனை! நான் வயது முதிர்ந்த பின்பும் கூட, என் தாயார், பிறரிடம் என்னைச் சிறு குழந்தையாக பாவித்து, ஒப்படைப்பார்.
    அந்த அன்புத் தாயுள்ளத்திற்கும், இந்த நண்பரின் அன்புள்ளத்திற்கும் வித்தியாசம் காண முடியவில்லை! இதைப்பற்றி நினைத்தவாறே, அவர் தொடர்வதற்கு வாய்ப்பு கொடுக்காமல், 'கொஞ்சங்கூடக் கவலைப்படாதீங்க, நான் இருக்கேன்; பாத்துக்குறேன்...' என்று கூறினேன்.
    இப்படி உணர்ச்சி குவியலாக இருந்த நாங்கள், விமான நிலையத்துக்கு புறப்பட்டோம்.
    விமான நிலையத்திற்கு செல்லும் பாதையில், என் மீது பற்றும், பாசமும் கொண்ட பொதுமக்களும், அன்புத் தோழர்களும் கொடிகள், தோரணங்களைக் கட்டி, மாலைகளோடு காத்திருப்பதைக் கண்டேன்.
    நாங்கள் சென்ற வேனிலிருந்து எழுந்து நின்றோம்.
    நாகேஷ், அசோகன், மூன்று கதாநாயகிகள், நான் உட்பட எல்லாருக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல், வாழ்த்துடன், மாலைகளும் தந்தனர் மக்கள்.
    இப்படி நெரிசல் ஏற்படும் அளவிற்கு, மக்கள் கூட்டமாக கூடுவர் என்று, நான் எதிர்பாக்கவில்லை. ஏனெனில், நானே, 'என் தொழில் பயணத்தை விழாவாக்க வேண்டாம்...' என்று, முன்பு ஓர் அறிக்கை வெளிட்டிருந்தேன். 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்பது போல், மக்கள் கூட்டம் கூடி விட்டது.
    விமான நிலையத்தில் இறங்கினேன். கலையுலகப் பிரமுகர்களும், நண்பர் ஜெமினிகணேசன் முதலானவர்களும் மாலை அணிவித்தனர். அப்போது, கருணாநிதி வந்தார்; மாலையை என் கழுத்தில் அணிவித்தார். நான் உணர்ச்சிவசப்பட்டிருந்தபோதே, அவர் அதிகாரிகளிடம், வண்டியை நேராக விமானத்திற்கு அருகில் கொண்டு செல்லும்படி கட்டளையிட்டார். நான் வேனில் ஏற்றப்பட்டேன்; வண்டி நகர்ந்தது.
    விமானத்தின் உள்ளே சென்று, உட்கார்ந்தேன். திடீரென வெளியே இருந்து, போலீஸ் அதிகாரிகள் சிலர், விமானத்திற்குள் வந்தனர்.
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1292
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    துக்ளக் இதழில்,
    நான் அண்மையில் படித்த – திருமதி ராதிகா அவர்களின்
    பேட்டியின் இடையே, இவர்கள் இரண்டு பேரைப்பற்றியும்
    திருமதி ராதிகா கூறிய கருத்துக்கள்.

    அவற்றை படிக்க வாய்ப்பில்லாத நமது வலைத்தள
    நண்பர்களின் பார்வைக்காக அதை கீழே தருகிறேன்….

    —————

    கேள்வி – உங்கள் அப்பாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும்
    பகை இருந்தது. நீங்கள் உங்களது சினிமா வாழ்க்கையில்
    எம்.ஜி.ஆரைச் சந்தித்தது உண்டா ? அப்போது உங்கள்
    மனநிலை எப்படி இருந்தது…?

    ராதிகா – “சிறைச்சாலை சிந்தனைகள்” என்று
    ஒரு புத்தகத்தில் தெளிவாக என்னுடைய அப்பா கூறியுள்ளார்.
    அவர்கள் இருவரும் பகைவர்கள் இல்லை.
    நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள்.

    அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த சண்டையில் அந்த
    அசம்பாவிதம் நடந்து விட்டது. அந்த புத்தகத்தில் கூட
    இதைப்பற்றி குறிப்பிட்டிருப்பார். “கையில் துப்பாக்கி கிடைத்தது.
    சுட்டு விட்டேன். கம்பு கிடைத்திருந்தால் அடித்திருப்பேன்”
    என்று எழுதி இருக்கிறார்.

    “பெற்றால் தான் பிள்ளையா ” என்ற படத்தில் நடிக்கும்போது
    தான் இருவருக்குள்ளும் சண்டை வந்திருக்கிறது. அந்தப்பட
    ஷூட்டிங் சத்யா ஸ்டூடியோவில் நடந்தபோது நான் போயிருந்தேன்.
    எங்களுடைய குடும்பத்தில் எல்லாருக்கும் எம்.ஜி.ஆரை ரொம்ப
    பிடிக்கும். அவருடைய படங்களை விரும்பி பார்ப்போம். அந்த
    ஷூட்டிங்கில் என்னை கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தார்.
    அதற்காக ரெண்டு நாள் நான் என்னுடைய முகத்தை கழுவாமல்
    வைத்திருந்தேன். சின்ன வயதில் அந்த அளவுக்கு அவர் மீது
    எனக்கு கிரேஸ் இருந்தது.

    அவரை துப்பாக்கியால் என்னுடைய தந்தை சுட்டதற்குப் பிறகு
    நாங்கள் யாரும் இங்கே இல்லை. அந்த சமயத்தில் தான்
    ஸ்ரீலங்கா சென்று ஹாஸ்டலில் சேர்ந்து படித்தேன்.

    நான் நடிகையான பீறகு, எம்.ஜி.ஆர். முதலமைச்சர் பொறுப்பு
    ஏற்றவுடன் பாரதிராஜா ஒரு விழா எடுத்தார். அந்த நிகழ்ச்சியில்
    நான் எம்.ஜி.ஆரை மீண்டும் சந்தித்தேன்.

    பிறகு ஒரு சமயம், நான் சம்பந்தப்படாத ஒரு படத்தில்,
    தயாரிப்பாளர் என்று என்னுடைய பெயரை யாரோ பயன்படுத்தி
    விட்டதால், நான் ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கிக்கொண்டேன்.
    அந்த சமயத்தில் யாரிடம் உதவி கேட்பது என்று யோசித்து,
    கடைசியில் நேராக எம்.ஜி.ஆரின் ராமாவரம் வீட்டிற்கே சென்று
    விட்டேன்.

    என்னை அங்கு எதிர்பார்க்காத எம்.ஜி.ஆர். அதிர்ச்சி அடைந்து
    விட்டார். என்னுடைய பிரச்சினையை அவருக்கு சொன்னேன்.
    அவரால் பேச முடியாத காரணத்தால், சைகை செய்தார்.
    பக்கத்தில் இருந்த நெடுஞ்செழியன், ” நீ வீட்டிற்கு போ;
    நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் ” என்று சொன்னார்.

    ராமாவரத்திலிருந்து, நான் தி.நகர் வருவதற்குள் அத்தனை
    பிரச்சினையும் சரியாகி விட்டது. நெருக்கடி அளித்த அனைத்து
    வினியோகஸ்தர்களும், என் வீட்டிற்கு வந்து மன்னிப்பு
    கேட்டுச் சென்றார்கள்.

    அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர். மிகவும் நல்ல குணம் கொண்டவர்.
    என்னுடைய அப்பா எதையும் யோசிக்காமல் செய்யும் குணம்
    உடையவர். இந்த புத்தகத்தை ( சிறைச்சாலை சிந்தனைகள் )
    படிக்கும்போது, அது இன்னும் தெளிவாக எனக்கு புரிகிறது.
    அவர், அவருடைய கண்ணோட்டாத்திலேயே வாழ்க்கையை
    வாழ்ந்து முடித்து விட்டார்.

    ————

  4. #1293
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1956- அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இது அரபீய சரக்கு. எம்.ஜி.ஆருக்கு இதெல்லாம் அல்வா சப்ஜெக்ட். புகுந்து விளையாண்டு இருப்பார். எம்.ஜி.ஆர் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகலாம், பொழுதைப் போக்கிவிட்டு வரலாம்! மதுரை வீரன். இதில் எம்ஜிஆரை மாறுகால், மாறுகை வாங்கிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் என்ற பிரம்மாண்டமான தமிழ் சினிமா பிம்பம் உருவாகிவருகிற காலம். பின்னால் ஒரு படத்தில் அவர் செத்துப்போவதாகக் காட்ட, படம் படுத்துவிட்டது. இந்தப் படத்தில் கூட, தண்டனைக்குப் பிறகு அவர் இருதேவிகளுடன் தெய்வமாக மீண்டும் வந்துவிடுவார். "சுபம்" என்று கடைசியில் போடுவார்கள்.
    Courtesy net

  5. #1294
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரம்
    1967 தேர்தலின் பொது குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்த எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வர இயலவில்லை. 1967 தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம். கருணாநிதி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறார்கள். ராஜாஜி சில மேடைகளில் காமராஜரோடு இணைந்து பேசுகிறார். சிவாஜி கணேசன், மூப்பனார், குமரி அனந்தன், நெடுமாறன், திண்டிவனம் ராமமூர்த்தி, ப. ராமசந்திரன் ஆகிய பல தலைவர்களும் காமராஜரின் பிரதிநிதிகளாக பிரச்சாரம் செய்கிறார்கள்.


    எம்ஜி ஆர் கிராமம் கிராமமாக செல்கிறார். மக்கள் கூட்டத்தில் நீந்தி வருகிறார். எங்கும் அவரை பார்க்க மக்கள் வெள்ளம், இரண்டு நாள் வரை தாமதமாக வருகிறார். காலையில் பத்து மணி என்றால் மறுநாள் இரவு 11.00 மணிக்கு வருவார். அதுவரை மக்கள் கூட்டம் அந்த இடத்தை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். திடீரென்று இரண்டு மூன்று கார்கள் ஒன்றாக சென்றால் தூரத்தில் வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருப்பவர்களெல்லாம் எம்ஜி ஆர் வந்து விட்டார் என கத்திக் கொண்டே ரோட்டருகே வருவதும் வந்து ஏமாற்றத்தோடு திரும்பி போவதும் அடிக்கடி நடக்கும்.


    கூட்டம் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், வேனிலிருந்து பேசி விட்டு போவார். எம்ஜி ஆரால் குறித்த நேரத்தில் வர இயலாது என்பதால் கூட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக கடைகள் தோன்றி வியாபாரம் களைகட்டும். திமுக முன்னணி கிராம தலைவர்களை சுற்றி கூட்டம் விசாரித்துக் கொண்டே இருக்கும். அவர்களுக்கும் எம்ஜி ஆர் எப்போது வருவார் என தெரியாது. எதாவது ஒரு பதிலை சொல்லி கொண்டிருப்பார்கள்.

    கிராமங்கள் தோறும் திருவிழா கோலம். எங்கு பார்த்தாலும் திமுக கொடிகளும், ஒலிபெருக்கி சத்தங்களும் என ஒரே ஆரவாரம். இறுதியில் இதோ வந்துவிட்டார் பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் என ஒலிபெருக்கி சத்தமிட்டு கொண்டு முன்னே ஒரு கார் செல்ல தொடர்ந்து நாலைந்து கார்கள் தொடர்ந்து ஒரு வெள்ளை வேனில் நிஜமாகவே வந்து விட்டார் புரட்சி தலைவர். இரண்டு நிமிடம் பேசி விட்டு மின்னல் போல தோன்றி மறைவார். யாரும் நல்ல பார்த்ததாக சொல்ல முடியாது.

    பக்கத்துக்கு ஊருக்கு சென்று மீண்டும் பார்ப்பது, கூட்டம் முழுவதும் தேர்தல் முடியும் வரை அவரை பற்றியே பேசி கொண்டிருக்கும். இடையில் சிவாஜி, காமராஜர். கருணாநிதி யார் வந்தாலும் எம்ஜி ஆருக்கு வந்த கூட்டமும் தாக்கமும் இருக்காது. இந்த நிகழ்வுகள் நடக்கும் பொது எனக்கு எம்ஜிஆர் மீது எந்தவித ஈர்ப்பும் கிடையாது. நான் சிவாஜி ரசிகன். எம்ஜிஆரை பார்க்க எல்லோரும் போகும் பொது விருப்பமில்லாமல் நண்பர்களுடன் போனவன் நான். ஆனால் அவரை பார்த்ததும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உடல் புல்லரிப்பதை நானும் உணர்ந்தேன். அப்படி ஒரு தோற்றம்.

  6. #1295
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்களின் மனதில் சிம்மாசனம்
    Charisma என்னும் ஆங்கில வார்த்தைக்கு சரியான உதாரணம் எம்ஜிஆர்தான். நான் அவரது பரங்கிமலை தொகுதிக்குட்பட்ட மடிப்பாக்கத்தில் இப்போது வசித்து வருகிறேன். இன்றைக்கும் முகம் தெரியாத கட்சியில் எந்த பலனையும் அனுபவிக்காத தொண்டர்கள் அவரது பிறந்த நாள் அன்று சாலைகளில் அவரது படத்தை வைத்து மாலை அணிவித்து பார்க்கிறவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்குவதை இப்போதும் பார்த்து கொண்டிருக்கிறேன். இது எப்படி அவரால் சாத்தியமாயிற்று.

    கேரளாவை சேர்ந்தவர், கண்டியில் பிறந்து சிறு வயதில் அப்பாவை இழந்து, தமிழ்நாடு வந்து படிப்பை தொடர முடியாமல், நாடகத்தில் நடிக்க தொடக்கி சினிமாவில் நுழைந்து மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அவரது வாழ்வு உலக வரலாற்றில் யாருக்கும் அமைய வில்லை. என்டிஆரை கடவுளாக பாவித்த ஆந்திராவில் அவர் இரண்டாவதாக சிவபார்வதியை திருமணம் செய்த போது அவரது மருமகன் சந்திரபாபு நாய்டுவிடம் ஆட்சியை பறிகொடுத்து திரும்பவும் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை.

    சட்டமன்ற உறுப்பினர்களை சந்திரபாபு நாயுடு தங்க வைத்திருந்த ஹோட்டலுக்கு பஸ் கூரையில் அமர்ந்து சென்று அழைத்து பார்த்தும் யாரும் உடன் வரவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற ஆட்சியை இழந்தார். எம்ஜி ஆர் ஊழல் செய்தார் என எதிர் கட்சிகள் குறிப்பாக கருணாநிதி சொல்லும் போது ஒருவர் கூட நம்ப தயாராக இல்லை. அவர் அப்படி செய்ய மாட்டார். அவருக்கு ஊழல் செய்ய அவசியம் இல்லை. அவர் சொந்த பணத்தை தான் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குகிறார் என குற்றசாட்டை வந்த வேகத்தில் நிராகரித்ததை பார்த்திருக்கிறேன்.


    சேரன்மகாதேவி தொகுதி
    எம்ஜி ஆர் மேல் மக்களுக்கு இருந்த அன்பு தமிழ்நாடு முழுவதும் இருந்தாலும் கன்னியாகுமாரி மாவட்டத்தில் மட்டும் சற்று குறைவாக இருந்ததாக ஞாபகம். அங்கு காமராஜர் மீது ஒரு வித பக்தி இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். மீண்டும் 1971 தேர்தலுக்கு வருவோம். என்னுடைய சேரன்மகாதேவி தொகுதியில் சுதந்திரா கட்சி சார்பாக திரு D.S.A. சிவபிரகாசமும், திமுக சார்பில் திரு ரத்தினவேல் பாண்டியன் என்பவரும் போட்டியில். திரு ரத்தினவேல்பாண்டியன் திமுகவின் மாவட்ட செயலாளரும் ஆவார். இவர்தான் பின்னாளில் உச்ச நீதி மன்றத்தின் நீதியரசராக பணியாற்றியவர். திரு சிவப்பிரகாசம் முக்கூடல் சொக்கலால் பீடி அதிபரின் மைத்துனரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான D.S. ஆதிமூலம் என்பவரின் மகனுமாவார். குறைந்த வயது. இவர் சுதந்திர கட்சி பின் நாளில் கலைக்கப்பட்ட பின் திமுகவில் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர்


    1971தேர்தல் முடிவுகள்

    கருணாநிதி அவர்கள் சென்ற இடமெல்லாம் தன்னுடைய நாவன்மையால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒருவாறாக தேர்தல் முடிந்து முடிவுகள் வந்தது. பாராளுமன்ற தேர்தலில் காமராஜர் மட்டும் வெற்றி பெற்றார். சட்ட மன்ற தேர்தலில் திமுக 184 தொகுதி களையும் இந்திரா காங்கிரஸ் திமுக கூட்டணி 205 இடங்களையும் கைப்பற்றியது. சுதந்திரா கட்சி ஆறு இடங்களையும், காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் பதினைந்து இடங்களிலும் மொத்தம் 21 இடங்களை கைப்பற்றியது.என்னுடைய சேரன்மகாதேவி தொகுதியில் திரு சிவப்பிரகாசம் 193 ஓட்டில் வெற்றி பெற்றார். திரு கருணாநிதி மீண்டும் மிருக பலத்துடன் ஆட்சி அமைத்தார்.

    எம்ஜிஆருக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்கு தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர், எதிர் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம், படத்தயாரிப்பாளர்களுக்கு லாப தேவன், வறியவர்களுக்கு வள்ளல், தமிழ்நாட்டு பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்ஜிஆர் என்ற மனிதரில் புதைந்து கிடக்கின்றன. 1972 ம் ஆண்டு கலைஞர் தனது மூத்த மனைவி திருமதி பத்மாவதியின் மகன் மு. க. முத்துவை சினிமாவிலும் அரசியலிலும் நுழைத்தார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எடுத்த பிள்ளையோ பிள்ளை தொடக்க விழாவிற்கு எம்ஜிஆர் வந்தார். அவரே கிளாப் அடித்து படத்தை துவக்கினர். முத்துவிற்கு வாழ்த்துக்களை கூறினார். இடைப்பட்ட காலத்தில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பனிப்போர் தொடக்கி இருந்தது. ஆனால் இருவருமே அதை பகிரங்கப் படுத்த வில்லை. படம் முடிந்தது. சிறப்பு காட்சிக்கு எம்ஜிஆர் வந்தார். படத்தை பார்க்க பார்க்க உதட் டை கடித்தபடியே யோசித்து கொண்டிருந்தார்.

    முகமுத்துவின் நடிப்பில், நடனம், சண்டை காட்சிகள், பாடல்கள் எல்லாவற்றிலும் எம்ஜிஆரை: அப்படியே பிரதிபலித்தார். எதோ சதி நடக்கிறது என எம்ஜிஆருக்கு புரிந்து விட்டது. ஆனாலும் அதை வெளிக்காட்டவில்லை. உனக்கென ஒரு பாணியை உருவாக்கி கொள் என முத்துவிடம் கூறி விட்டு ஒரு கடிகாரத்தை பரிசளித்து விட்டு கிளம்பினார். அது முத்துவுக்கு புரிந்ததோ இல்லையோ கலைஞருக்கு புரிந்தது.

  7. #1296
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் என்ற ஒரு மாமனிதருக்காக பல கவிஞர்கள் அவரை வாழ்த்தியும், உயர்த்தியும் பால பாடல்கள் இயற்றி இருக்கிறார்கள். ஆனால் எந்தக் கவிஞர்களும் எழுத முடியாத இப்படிப்பட்ட இதயப்பூர்வமான பாடல் வரிகளைப் படைத்த கவிஞர் கண்ணதாசனை எண்ணிப் பாருங்கள்!

    எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த இயக்கம் 1967 – ஆம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கட்டில் ஏறியது. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், அந்த இயக்கம் எம்.ஜி.ஆர் என்ற பெறற்கரிய சக்தியால் 1971 – ஆம் ஆண்டும் மீண்டும் பெரும் வெற்றி பெற்றது.

    1972 – ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்; அந்த இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனாலும், அவர் பின்னால் அளப்பரிய மக்கள் சக்தி திரண்டது.மக்களின் மாபெரும் ஆதரவுடன் தனி இயக்கம் தொடங்கினார்.

    திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அவர் காட்டிய இரட்டை விரல் சின்னம் மகத்தான வெற்றி கண்டது. இப்படிப் படிப்படியாக எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிகளைக் கண்டல்லவா மற்ற கவிஞர்கள், அவரது படப்பாடல்களில் அவரது புகழைக் கலந்து எழுதினார்கள்.

    ஆனால், கவியரசர் கண்ணதாசனோ, திராவிட இயக்கத்தில் தான் இருந்தபோது எழுதிய பாடல்களோடு, வசனங்களோடு, எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வையை மட்டும், தான் தேசீய இயக்கத்தில் பயணித்தபோதும் மாற்றிக் கொள்ளவில்லையே!

    அங்கேதானே அந்தக் கவிஞர் தனித்துவத்தோடு இன்று நம் மனங்களில் நிற்கிறார். தர்மம் தலை காக்கும் என்ற படத்தில் வரும் இதோ அந்தப் பாடலில்,

    “தர்மம் தலைகாக்கும்!
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்!”

    என்ற வரிகள்,

    எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் எத்தனை முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன?

    கால் எலும்பு முறிந்தபோது, எம்.ஜி.ஆர். ராதாவால் சுடப்பட்டபோது, அமெரிக்காவில் புருக்ளீன் மருத்துவமனையில் இருந்தபோது….

    இப்படி எத்தனையோ முறைகள் உயிர்பெற்று எழுந்துள்ளன!

    “கூட இருந்தே குழி பறித்தாலும்
    கொடுத்தது காத்து நிற்கும்!”

    இந்த வரிகளும் உயிர் பெற்றெழுந்த உயர் வரிகள்தானே!

    மலைபோல வரும் சோதனை யாவும்
    பனிபோல் நீங்கிவடும்! – நம்மை
    வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
    வணங்கிட வைத்துவிடும் – செய்த
    தர்மம் தலைகாக்கும்!

    மலைபோல எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனைகள் எத்தனையோ? அவரது ஆட்சியே கவிழ்க்கப்பட்டது… அதுபோன்ற பல சோதனைகள்! அவையெல்லாம் பனிபோல் விலகியதை நாமும் கண்டோம்!

    அவரை வீழ்த்த நினைத்தோர்! அரசியலை விட்டே விரட்ட நினைத்தோர், அவரது வாசலில் நின்று வணங்கி பதவிகள் பெற்று உயர்ந்த பல கதைகள் இந்த உலகிற்கே தெரியுமே! அவரது தர்மம் அவரை என்றுமே காத்து நின்றது.

    அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்தப் பூந்தோப்பு! – வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
    நான்குமறைத் தீர்ப்பு!”

    அள்ளிக்கொடுத்து வாழ்ந்த எம்.ஜி.ஆர் நெஞ்சம், என்றும் ஆனந்தப் பூந்தோட்டமாகவே புன்னகை பூத்து நின்றது. வாழ்வில் நல்லவர் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல… எந்த நல்லவரும் கெடுவதில்லை.

    இது நான்கு வேதங்களின் தீர்ப்பு!… என்று கவிவேந்தர் கண்ணதாசன் சொல்லிய வாக்கு என்றுமே பலிக்கும்… தேவ வாக்காகும்.

    படம் - தர்மம் தலை காக்கும்
    பாடல் - கவியரசர் கண்ணதாசன்
    இசை - கே.வி.மகாதேவன்
    குரல் - டி.எம்.செளந்திரராஜன்... Thanks - net- 👌

  8. #1297
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    👍👌🏼👌🏼💪🏻நல்லதொரு பெருமைக்குரிய விஷயம்......பொன்மனச்செம்மலின் புகழை மென்மேலும் பரப்பிட,எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ,அதை நம்மைப்போன்றோர் கிஞ்சித்தும் நழுவ விடக்கூடாது.,,,நன்றி.நண்பரே!👍👌🏼👌🏼 மிக சரியாக கூறி இருக்கிறீர்...

  9. #1298
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Wish you a happy birth day
    suha ram sir.

  10. #1299
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    எம்ஜிஆர் ஸ்டைல்

    எம்ஜிஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யம் தமிழ்ச் சூழலில் இன்னும் குறைந்து விடவில்லை. அது தீராத நதியாக அவ்வப்போது புதுப்புது வண்ணம் கொண்டு, தமிழ் மனப்பரப்பில் நுங்கும் நுரையுமாக கொப்பளித்து பெருக்கெடுத்தபடியேதான் இருக்கிறது.



    எம்ஜிஆர் மரணமடைந்த தருணத்தில் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள், கருத்துகளாகவும், கருத்துகள் தமிழ்ச் சமூகத்தின் உளவியலை ஆட்டிப்படைத்தன. எம்ஜிஆர் கதை என்ற பெயரில் புத்தகம் கூட வந்ததாக நினைவு. பத்திரிகை உலகில் இருந்த அவரது விசுவாசிகளும், ரசிகர்களும் பேசப்பட்ட தகவல்கள் அனைத்தையும் புத்தகங்களாக்கினர். இரண்டு மூன்று திரைப்படங்கள் கூட எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வெளி வந்தன. இவை அனைத்திலும், எம்ஜிஆரது பூர்வீகம், இளமைக்காலம், திரையுலக வாழ்க்கை, அரசியல் பிரவேசம் என பேசப்பட்ட பொருள்களே திரும்பத் திரும்பப் பேசப்பட்டன. இருந்தாலும், அவரது ரசிகர்கள் சலிப்பின்றி அவற்றைப் படித்தும், பார்த்தும், எம்ஜிஆரின் நினைவுகளைத் தோண்டி எடுத்து நுகர்ந்தபடியே லாகிரியில் திளைத்தனர்.



    எம்ஜிஆரின் பெரும் செல்வாக்குக்கு முக்கியமான காரணம், அவரது தோற்றம்தான். எம்ஜிஆர் இயல்பிலேயே சிவந்த நிறம் என்பதையும் தாண்டி பளிச்சிடும் சருமத்தைக் கொண்டவர். ரோஸ் வண்ணம் என்று அவரது தோலின் நிறத்தை வர்ணிப்பார்கள். ஆனால்… எம்ஜிஆரின் தோற்றப் பொலிவு என்பது அது மட்டுமே அல்ல. இயல்பு வாழ்க்கையில் ஒரு காலக்கட்டம் வரை அவர் பாகவதர் கிராப் வைத்திருந்தார். காஷ்மீர் குல்லாயும், பின்னர் கருப்புக் கண்ணாடியும் அணியத் தொடங்கினார். இவற்றையெல்லாம் விட திரைப்படங்களில் அவர் தன்னை வடிவமைத்துக் கொண்ட விதம்தான், மக்களின் மனதில் அவரைப் பற்றிய சித்திரமாக இன்றுவரை பதிந்து விட்டது. அதி mgr anniv 4முக்கியமானது அவரது அரும்பு மீசை. பெரும்பாலும் இது வரையப்பட்டதுதான் என்றாலும், ஒட்டு



    மீசையாகக் கூட அவர் பெரிய மீசையை வைத்துக் கொண்டதில்லை. அவரது சிகையலங்காரம் சீசன்களுக்கு தகுந்தாற் அவ்வப்போது மாற்றம் கொண்டாலும், மீசை மட்டும் அதே வரையப்பட்ட அரும்பு மீசைதான். பல்லாண்டு வாழ்க, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற சில பிற்காலப்படங்களில் மட்டும், லேசாக திருகிவிட்டதைப் போல வரைந்திருப்பார். மாறுவேடங்களில் வருவதாக அமைக்கப்பட காட்சிகளில் மட்டும், முரட்டு மீசை, வித்தியாசமான தாடி, கருப்பு மச்சம் என தோற்றத்தில் சில வித்தியாசங்களைக் காட்டுவார்..



    அதே போல, நிற்பது, நடப்பது, வாள் சுழற்றுவது என எல்லாவற்றிலும் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றார். குறிப்பாக வாள் சுழற்றுவதில் வல்லவரான எம்ஜிஆர், அதற்கான ஸ்டெப்பிங் ஸ்டைல், சுழற்றும் லாவகம், புன்னகை மாறாத முகத்துடனேயே எதிரியுடன் மோதுவது போன்ற தனித்துவங்களை, வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்.

  11. #1300
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    · ஒரு எம்ஜிஆர் ரசிகையின் #டைரி

    எம்ஜிஆர் அதிகம் விமர்சிக்கப்பட்டதுஅவரின் உடைகளுக்காக. "என்னய்யா...மஞ்ச சட்ட, பிரவுன் பேண்ட், மெரூன் கலர் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவு ஜீவிகளுக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.பொதுவாக அறுபதுகளின் இறுதியில் வந்த படங்களில்தான் அவர் அந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்திருப்பார்.அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
    1964ம் ஆண்டு ' ஈஸ்ட்மென் கலர்'
    தொழில் நுட்பம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்யப்படுகிறது.ஈஸ்ட்மென் கலரில் எடுக்கப்படும் படங்களில் பொதுவாக அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாகத் தெரியும்.நடிப்பது மட்டுமின்றி ஒரு காட்சி திரையில் செம்மையாக எப்படி தோன்றவேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர். அதற்கேற்றவாறு உடை அணியவும் ஆரம்பிக்கிறார்.
    இரண்டாவது காரணம், உலக சினிமா விரும்பிகளுக்கு தெரிந்த ஒன்று. அறுபதுகளில் வந்த ஹாலிவுட் படங்களில் சக்கைப் போடுபோட்டுக்கொண்டிருந்த 'கேரி கிராண்ட்' கிரிகோரி பெக்' ' பால் நியுமேன்' போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது.ஹாலிவுட்டின் ஆடை ட்ரெண்டைத்தான் எம்.ஜி.ஆர் அவர் படங்களிலும் கடை பிடித்தார்.

    ஆடைகள் என்கிறபோது இந்த முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்.ஜி.ஆர்.ஒரு ' fashion icon' என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிக்கக் கூடும்.நான் அதற்கு கோபப்பட மாட்டேன்.மாறாக எம்.ஜி.ஆரைப்போல அழகான ஒரு நமுட்டுச் சிரிப்புடன் உண்மைகளைத் தெளியவைப்பேன்.எம்.ஜி.ஆர்.தன் இளமைக்காலம் தொடங்கி ஹாலிவுட் படங்களில் இருந்த ' fashion trend' ஐ நேர்த்தியாக கடைபிடித்தவர்.மேலே கூறிய நடிகர்களின் படங்களைப் பார்த்தீர்களானால், அவர்கள் ஏழைக் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது கூட சட்டையை ' tuck in ' செய்து, ஷூ அணிந்து இருப்பார்கள்.அது அப்போதைய பாரின் ஸ்டைல்.எம்.ஜி.ஆர். ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.


    'V' கட் கழுத்து வைத்த குர்தாக்கள், slim fit பேண்ட், வலது கையில் அழகிய பிராண்டட் வாட்சுகள், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பிகள், ஸ்கார்ப்புகள் என்று தான் அணியும் உடைகளில் தனி கவனம் எடுத்துக்கொண்டது அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே.இன்று கூட ஆண்டிப்பட்டியில் இருக்கும் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம், ஜிப்பா வேட்டியில் வந்த பாகவதர் போன்ற தமிழ் ஹீரோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு பேண்ட், ஷூ சகிதமாக வந்த எம்.ஜி.ஆர்.நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருப்பார்தானே?

    52 வயதில் ரோம் மன்னர்கள் பாணியில் முட்டிக்கு மேல் ஒரு உடையணிந்து ' ஆயிரம் நிவே வா 'என்று பாடி வருவார். நான் அடித்துச் சொல்கிறேன், எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யார் அந்த உடை அணிந்து இருந்தாலும் கொஞ்சம் முகம் சுளிக்கத்தான் வைத்திருக்கும்.ஆனால் எம்.ஜி.ஆரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.இது ஒன்று போதும் அவரின் ஆடையலங்கார நேர்த்தியை பறை சாற்ற.


    அடுத்து எம்.ஜிஆரின் நடனக் காட்சிகளுக்கு வருவோம்.அவரது நடனம் பெரும்பாலும் ' broad way musicals' பாணியில் இருக்கும்.அதே போல் எம்.ஜி.ஆரின் பெரும்பாலான பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் இருக்கும்.அதிலும் முக்கியமாக மிகவும் கடினம் என கருதப்படும் ' லத்தீன் அமெரிக்க ' நடனஅமைப்புகள் இருக்கும்.' துள்ளுவதோ இளமையில்' வரும் ' 'paso-double' , 'என்னைத் தெரியுமா'வில் வரும் ' rock and roll ',அன்று வந்தது அதே நிலா' வில் வரும் ball room dance என்று பல வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.


    கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார்.நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும். எம்.ஜி.ஆர். எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து சிறப்பாக செய்திருப்பார்.'ஆடலுடன் பாடலை' பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி மேற்கொண்டார். ஆழ்ந்து யோசித்துப் பார்க்கிறேன். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை வேறு யாரும் அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் முயற்சி கூட செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை
    COURTESY NET

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •