Page 283 of 401 FirstFirst ... 183233273281282283284285293333383 ... LastLast
Results 2,821 to 2,830 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2821
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின்
    புகழ் பாடும் பக்தர்களே

    மீண்டும் ஒரு அரிய பதிவு

    நிச்சயம் கண்கள் கசியும்

    காவல்காரன் படத்தில் வரும்
    நினைத்தேன் வந்தாய்
    நூறு வயது
    பாடல் படமான
    அரிய பதிவின் தொகுப்பு

    சென்னை மெரீனா.ஊரடங்கிய பிறகு மெல்ல ஒரு உருவம் கடலில் இறங்குகிறது.சுற்றிலும் அவரது உதவியாளர்கள்.கழுத்தளவு நீரில் நின்று அவர் கத்துவது அவருக்கே கேட்கவில்லை.இருந்தாலும் விடாமுயற்சியாக கத்திக்கொண்டே இருக்கிறார்.சுற்றி நிற்பவர்கள் அவருக்காக உயிரையே விடக்கூடியவர்.இந்தக் காட்சி அவர்களின் நெஞ்சில் முள்ளாகக் குத்துகிறது. கத்தியது போதும் கரையேறுங்கள் என்றாலும் அவர் விடுவதாக இல்லை.இப்படி உயிரைக்கொடுத்து கத்துவது வேறுயாருமல்ல மக்கள் திலகம் தான்.

    1967 ஜனவரி 12 காலை எட்டு மணி சுமாருக்கு பரங்கி மலைத் தொகுதியில் உள்ள வேளச்சேரி நாராயண புரம் பகுதிகளில் ஓட்டுச் சேகரித்துவிட்டு தோட்டத்திற்குத் திரும்பினார் மக்கள் திலகம்.வாக்காளர்களை அதிக நேரம் சந்தித்ததால் வீடு திரும்ப மாலை நான்காகிவிட்டது.வீட்டிற்கு வந்ததும் மாடிக்குச் சென்ற மக்கள் திலகம் அங்கு தனது மனைவி கே.ஆர்.ராமசாமி மனைவி கல்யாணி அம்மாளுடன் பேசிக்கொண்டிருப்பதை காண்கிறார்.சாப்பிட அமர்கிறார்.பட அதிபர் வாசுவின் ஃபோன்.கோவை பார்ட்டி வந்திருக்கிறது.படம் பற்றிப் பேச வேண்டும்.இப்போது வரலாமா?.

    வாசு வந்தார்.கூடவே வம்பும் வந்தது.அதற்குப் பிறகு நடந்தது ஊருக்கே தெரியும்.விடா முயற்சியில் வெற்றி கிடைக்க குரல் மட்டும் கிடைக்கவில்லை.கிடைக்க வைக்க படும்பாட்டைத் தான் மேலே கண்டோம்.காரணம் ஓரிரு காட்சிகளோடு நின்றுபோயிருக்கிறது ஒரு படம்.தனது நிர்வாகியும் நம்பிக்கைக்கு உரியவருமான ஆர்.எம்.வி.படம்.முதலில் மனைவி என பெயரிடப்பட்டு பிறகு காவல்காரனாக மாறிய அந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய அவசரத்தில் எம்.ஜி.ஆர்.நீண்ட நாள் ஓய்விற்குப் பிறகு அன்று தான் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகிறார்.மாலை மரியாதையுடன் ஏக தடபுடலான வரவேற்பு.மொத்த யூனிட்டும் கைதட்டி வரவேற்க பொன்மனச் செம்மலின் புன்னகையைக் கண்ட நண்பர்களுக்கோ உற்சாகம்.

    அது ஒரு பாடல் காட்சி.அட்டகாசமான எகிப்து ஸ்டைலில் பிரமிடுகள் ஸ்பீங்ஸ் சிலைகள் என அசத்த அவரது காஸ்டியூம் கூட எகிப்து மன்னரின் அலங்காரத்தோடு.அருகிலுள்ள கலைச்செல்வியைப் பார்க்கிறார்.அவரும் எகிப்து ராணியாக பளபளப்பாக நிற்கிறார்.பாடலின் பல்லவியைக் கேட்கிறார்.முதல் வரியைக் கேட்டுவிட்டு மேலே பார்க்கிறார் கண்ணீரோடு வாலி.அது ஆனந்தக் கண்ணீர்.

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது.

    ஒரு புன் சிரிப்போடு வாலியை அருகில் அழைத்து தட்டிக்கொடுக்கிறார்.அவரது கண்களும் கலங்குகிறது. காலனின் கைகளில் அகப்படாமல் அந்த கவர்ச்சி நாயகன் கலந்துகொண்ட முதல் காட்சியை கேமிரா விழுங்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

    மெல்லிசை மன்னர் இந்த டீரீம் சாங்கை அசத்தலாகப்போட்டிருப்பார்.இது ஒரு வித்தியாசமான கலிங்கடா ராகம்.ஏற்கனவே சிவந்த மண் பாடலான பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலை இதே ராகத்தில் போட்டிருப்பார்.அதையே கொஞ்சம் மாற்றி வித்தியாசமான ஒரு கலவையாகத் தந்திருப்பார்.வாலியின் அருமையான வரிகளுக்கு டி.எம்.எஸ் சுசீலா அம்மாவின் இனிய குரல்களில் மக்கள் திலகம் கலைச்செல்வி அசத்திய இந்தப் படத்தில் மணி என்ற பாத்திரம் மக்கள் திலகத்திற்கு.துப்பறிய வந்த இடத்தில் நாயகியான சுசீலாவைச் சந்திக்க இருவருக்கும் பற்றிக்கொண்ட காதலின் வெளிப்பாடாக நாயகி காணும் கனவுப் பாடலிது.

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது
    கேட்டேன் தந்தாய் ஆசை மனது

    மெல்லிசை மன்னர் அந்த நூறு வயதை நீட்டி முழக்கியிருப்பார்.அருமையான அம்மாவின் ஆலாபணையோடு தொடங்கும் பாடலில் புகை மூட்டத்திற்கு ஒரு வாத்தியம் கொடுத்து அசத்தியிருப்பார் மன்னர்.பிரமாண்ட செட்டைப்போலவே இசையும் எகிப்திய பாணியில் இருக்கும்.கேட்டேன் தந்தாய் ஆசை மனது ஐயாவின் கொஞ்சலான குரலில் கேட்பதே இனிமை.

    நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன்

    பாவையை பக்குவமாக மாற்ற நாயகியோ

    ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்றேன்

    கண் மீனாக நின்றாடவோ?.
    சொல் தேனாக தானாக பண்பாடவோ
    மாலை நேரம் வந்துறவாடவோ
    ஓ ஓ ஓ ஓ ஓய்யா...

    வாலியின் அசத்தல் வரிகள்.மீனாக மானாக தேனாக தானாக ஆங்காங்கே தூவிய அழகு தமிழை மெல்லிசை மன்னர் இன்னும் அழகாக்கியிருப்பார்.சரண முடிவில் அது இன்னும் அழகாகிறது.அடுத்தடுத்த சரணங்கள் அவர் கரம் பட்டு அற்புத அனுபவமாகிறது.

    நிலைக் கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
    மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓஹோ
    அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
    அன்பு தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா

    மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
    அவன் தேரோடு பிண்ணிச் செல்லும் முல்லை
    உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
    உந்தன் கைகொண்டு முன்னாக கன்னித்தேன்

    மறு பிறவி கண்ட மக்கள் திலகத்தை கண்ட ரசிகன் புளகாங்கிதம் அடைந்தான்.அந்தப் புன்னகையும் தேனீயின் சுறுசுறுப்பும் எங்கே காணாமல் போய்விடுமோ என்ற கவலையை நீக்கிய பாடலிது.அதற்காகவே சுறுசுறுப்பான ஒரு இசைக் கோர்வையைத் தந்து அவரை இன்பமாக ஆடவிட்டிருப்பார் மெல்லிசை மன்னர். கலைச்செல்வி ஏற்கனவே நடனம் கற்றவர்.ஆனால் மக்கள் திலகம் அவருக்கு இணையான ஃபாஸ்ட் பீட்டிற்கு அவரது அசத்தலான ஸ்டெப்ஸ்களை அமைத்து பாடலை அழகாக்கியிருப்பார்.வாலியின் வளமான வரிகள்.இன்பமாக பாடிக்கொடுத்த இசை ஜோடி.

    விழி நூலாகச் செல்லச் செல்ல ஆஹா
    அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
    சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
    சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன

    ஓஓஓஓ ஓய்யா....

    சில பாடல்களைக் கேட்டாலே உற்சாகம்.விஷூவலாகக் காணும்போது அந்த உற்சாகத்தை இரு மடங்காக மாற்ற ஒரு திறமையாளர் வேண்டும்.மக்கள் திலகம் அதில் கரை கண்டவர்.அவரது உற்சாகம் கூட ஆடுவோருககு இன்னும் ஊக்கம் தரும்.மருத்துவமனைமிலிருந்து நேராக வந்து இப்படி ஆடிக் கொடுக்க ஒரு மனோ தைரியம் வேண்டும்.பாட்டு முடிந்தாலும் இன்னும் இருக்கா என்று அதையும் ஆடிக் களிக்கும் அந்த அற்புத மனிதரை இன்னும் தெய்வமாகக் கொண்டாடக் காரணம் அது ஒரு சகாப்தம் என்பதால் தான்.
    புரட்சித் தலைவர் பக்தர்கள்... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2822
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -18/9/18

  4. #2823
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலைமலர் -18/9/18

  5. #2824
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    என்னுடைய 22000 பதிவுகள் குறித்து பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும் கைபேசி /அலைபேசி,வாட்ஸ் அப் மூலமும் மற்றும் நேரிலும்
    தெரிவித்த கீழ்கண்ட நண்பர்கள் /பக்தர்கள் அனைவருக்கும் எனது கனிவான,
    இதயங்கனிந்த நன்றி.


    திருவாளர்கள் :
    வினோத் ,பெங்களூரு,
    சி.எஸ். குமார், பெங்களூரு,
    சுஹாராம், மன்னார்குடி,
    மஸ்தான் சாஹிப்
    ராமு, தங்கசாலை,
    இளங்கோவன், அரும்பாக்கம்,
    ரவிசங்கர், முகப்பேர்,
    சுப்பு,
    கலீல் பாட்சா, திருவண்ணாமலை,
    கா. நா. பழனி, பெங்களூரு
    ஈ.பாண்டியராஜ் ,இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
    சம்பங்கி , பெங்களூரு ,
    ராமமூர்த்தி, வேலூர்,
    இளவேனில் , ஜெயா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ,
    கலியபெருமாள் , புதுவை,
    கஜ்சிங்
    ஜெகன், ஆரணி,
    ரவி, ஆரணி,
    ராஜேந்திரன், சங்கீதா ஓட்டல் ,எழும்பூர்,
    மாரிமுத்து ,
    பாஸ்கரன், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை ,
    ஜி . வெங்கடேசப்பெருமாள் ,
    வெங்கடேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாத இதழ்
    ஏ.பி.பாபு, பெங்களூரு,
    விஜய் முரளி, பம்மல் ,
    தாமோதரன், போரூர் ,
    எஸ். குமார், மதுரை ,
    தீனதயாளன், ஏழு கிணறு, சென்னை
    வி.சுந்தர், மடிப்பாக்கம்,
    குமரவேல், திண்டுக்கல்,
    மலரவன், திண்டுக்கல் ,
    ஜேம்ஸ், கனடா ,
    எம்.ஜி.ஆர். மணி, சாம்ராஜ்பேட்டை, பெங்களூரு,
    சாமுவேல், சத்தியமங்கலம் ,
    சேர்மக்கனி, எ . வீ. பிள்ளை விநியோகஸ்தர்
    சிரஞ்சீவி அனீஸ், ஆசை டிவி,
    செந்தில் ராஜ்குமார், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம் ,
    சேகர், கோவை,
    கமலக்கண்ணன், கோவை,
    எம்.கே.ராஜா, ஈரோடு ,
    பூக்கடை சக்தி ,
    சிட்கோ சீனு, வில்லிவாக்கம் ,(தலைமை கழக பேச்சாளர் ).
    லோகேஷ், நெல்லை,
    மணி, நெல்லை,
    பொன்னையா . நெல்லை,
    சதக், நெல்லை,
    சுகுமார், சென்னை,
    சத்யா, ஓட்டேரி,
    சதானந்தன், கனடா,
    மோகன்குமார், வழக்கறிஞர் ,
    ஓமப்பொடி பிரசாத்,
    தாமஸ், மாநகர போக்குவரத்து கழகம் )
    மொஹமட் இர்பான் , அடையாறு,
    பி.டி. தனசேகரன், ஸ்ரீவில்லிபுத்தூர்,
    சொக்கலிங்கம், திவ்யா பிலிம்ஸ்,
    மோகன்குமார், பெங்களூரு,
    எம்.ரவி, பெங்களூரு,
    பி.ஜி.சேகர், சென்னை,
    பி.எஸ். ராஜு, உரிமைக்குரல் ஆசிரியர்,
    மயிலை லோகநாதன்,
    ராஜா, ராமாவரம் தோட்டம்,
    நீலமேகம், சேலம்,
    ஜெய்கிரண் , ஸ்ரீவில்லிபுத்தூர்,
    மின்னல் பிரியன்,
    எஸ். செல்வம், வங்கி ஊழியர்,
    ஆர். முருகேசன், வங்கி ஊழியர் ,
    சி.ரவீந்திரன், வங்கி ஊழியர்,
    வி.என். சுந்தர், வங்கி ஊழியர் ,
    சி.வி. ராமலிங்கம் , வங்கி ஊழியர்,
    எச். நாகேஷ் பந்தார்கர் , வங்கி ஊழியர்,
    திருமதி, சுதா விஜயன், ராமாவரம்,
    திருமதி, மேரி செல்வமணி, கோடம்பாக்கம்,
    திருமதி, பானு, வேதா , செங்கல்பட்டு
    டாக்டர் சி. ராஜேஸ்வரி, மதுரை,
    மற்றும் பலர்
    Last edited by puratchi nadigar mgr; 18th September 2018 at 10:27 PM.

  6. #2825
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    எனது 22000 பதிவுகளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுதல்களும் தெரிவித்த இனிய நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .

    மாற்று முகாமில் பதிவிடும் பொய் செய்திகளுக்கு, தக்க பதிலடி அளித்தும் ,
    அட்டகாசமாக , ஆர்ப்பரித்து செய்திகளை சமீப காலத்தில் ,சமயோஜிதமாக
    பதிவிட்டு வரும் தாங்கள் 24 வது பாகத்தை துவக்கி வைக்க இப்பொழுதே
    தயாராகி வரும்படி அன்பு வேண்டுகோள்

    ஆர், லோகநாதன் .

  7. #2826
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    1970 களில் மட்டும் இல்லை. 1950 களில் கூட சிவாஜி கணேசனை விட புரட்சித்தலைவர் அதிகமாய் சம்பளம் வாங்கினார். கூண்டுக்கிளி படத்தில் நடிக்கிறபோதும் சிவாஜி கணேசனை விட புரட்சி தலைவர் அதிகம்சம்பளம் வாங்கி கொண்டு இருந்தார். இருந்தாலும் படத்தை தயாரித்து டைரக்ஸன் செஞ்ச ராமண்ணாவின் சகோதரி டி.ஆர். ராஜகுமாரி மேல புரட்சித் தலைவர் அதிக மரியாதையை வெச்சிருந்தார். அவர் கையால் ஒத்த ரூபாய் அட்வான்சு வாங்கிக்கொண்டார். சிவாஜிக்கு கொடுக்கப்படட அதே 25 ௦௦௦ ரூபாய் சம்பளத்தை தானும் வறட்டு கவுரவம் பார்க்காமல் புரட்சி தலைவர் பெற்று கொண்டார். இதை டி.ஆர்.ராமண்ணாவும் சொல்லி உள்ளார்.

    அந்த ஒரு படத்துக்குத்தான் சிவாஜி கணேசனுக்கு சமமான சம்பளம் புரட்சித் தலைவர் பெற்றுக் கொண்டார். அதுவும் டி.ஆர்.ராஜகுமாரிக்காக. மற்றபடி அவர் சம்பளம் அளவுக்கு சிவாஜி கணேசன் சம்பளம் வாங்கியது இல்லை.




    இன்னொரு உத்தாரணம்.சினிமாவில் புரட்சித் தலைவர் நடிச்ச வரை அவர்தான் அதிகம் சம்பளம் பெற்ற நடிகர். 1973 ம் வருசம் பொம்மை கேள்வி பதில்.

    கேள்வி; சினிமாவில் நடிக்க எம்ஜிஆர் அதிகப் பணம் வாங்கறாரா/ அல்லது சிவாஜி கணேசன் அதிகப் பணம் வாங்கறாரா?

    பதில்: இதுவரை எம்ஜிஆர்தான் அதிகப் பணம் வாங்கி இருக்கிறார்.

    (இந்த பதிலை நன்றாய் கவனிக்கவும். இதுவரை..... அதாவது இந்த கேள்வி பதில் வந்த பொம்மை பத்திரிகை 1973 ம் ஆண்டு . அதுவரை. அதுக்கப்புறம் புரட்சித்தலைவர் இன்னும் உயரே யாராலும் எட்ட முடியாத உயரம் புகழுக்கு போய்விட்டார். கடைசிவரை புரட்சித் தலைவர் வாங்கின சம்பளம் சிவாஜி கணேசனுக்கு இல்லை.)

    1973 ல் பொம்மையில் வந்த கேள்வி பதில். இது ரசிகர் மன்ற நோட்டீஸ் இல்லை. பொம்மை பத்திரிகையில் வந்தது. இதோ பாருங்கள். முதல் கேள்வி பதில் படிச்ச்சு தெரியவும்.





    1954 ல் மலைக்கள்ளன் வந்ததில் இருந்தே புரட்சித் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி. அதற்கு முன் பல படங்கள் வந்தாலும் மலைக்கள்ளன் தான் தமிழில் முதல் பாக்ஸ் ஆப்பிஸ் ஹிட்.




    1971 பேசும் படம் பத்திரிகையில் வந்த கேள்வி பதில்.

    கேள்வி; இன்று தென்னகத்தில் வசூல் சக்கரவர்த்தி யார்/
    பதில் : எம்ஜிஆர்.





    இதெல்லாம் 1970 ம் வருசம் நிலைமை மட்டும் இல்லை. 1950 காளில் இருந்தே இதான் நிலைமை.


    1950 களிலேயே புரட்சித்தலைவர் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர்.

    1950 களில் இருந்தே புரட்சித்தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி.

    சினிமாவில் அவர் இருக்கும் வரை அவர்தான் சூப்பர் ஸ்டார்.

    இவ்வளவு ஆதாரம் குடுத்த பிறகும் இப்பவாச்சும் புரியவேண்டியவங்களுக்கு புரியலைன்னால் ஒன்னும் செய்ய முடியாது. தூங்கறவனை எழுப்பலாம். தூங்கறா மாதிரி நடிக்கறவனை எழுப்பவே முடியாது.

  8. #2827
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2828
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2829
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2830
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்த பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்காக வண்டியில் ஏற்றப்பட்டது..

    அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு.
    கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வண்டியில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
    கீழே நின்ற மக்களுக்கு அவரின் முகம் சரியாக தெரியவில்லை..!

    கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர்..

    அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், மின்னல் வேகத்தில் வண்டி மேல் தாவி ஏறினார்.

    கவிஞரின் உடலை சற்றே உயர்த்தி, ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை வைத்து கட்டி விட்டு அந்த மனிதர், சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!

    திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!

    ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!

    திருப்தியோடு அந்த வண்டியை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்தான்..

    அன்றைய தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்..

    அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே ஆயிரம்பேர் தயாராக இருப்பர்..

    ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!

    காரணம் கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை... மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!

    கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர்.அவர்கள் வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான்,

    1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். !

    அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக,
    ‘‘நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!

    எப்படி தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?

    1981-இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!

    ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!

    எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
    'சங்கே முழங்கு' பாடல் வரிகள்..

    'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
    வார்த்தையாலே நன்றி சொல்வோம்..

    வார்த்தை இன்றி போகும் போது
    மௌனத்தாலே நன்றி சொல்வோம்...

    அந்த நாலு பேருக்கு நன்றி'... Thanks Friends...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •