Page 133 of 401 FirstFirst ... 3383123131132133134135143183233 ... LastLast
Results 1,321 to 1,330 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1321
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்பு திறனைக் காட்ட மாறு வேடங்கள் புனைந்த எம் ஜி ஆர்!

    எம்.ஜி.ஆர் இளைஞனாக நடித்தது அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் அது அவரது கலை ஆர்வம் அல்லது நடிப்பு ஆர்வத்தை நிறைவு செய்யவில்லை. அதனால் அவர் வேறு பல கதாபாத்திரங்களிலும் நடிக்க விரும்பி தன் படங்களில் அவற்றை மாறு வேடக் காட்சிகளாக அமைத்தார். மாறு வேடத்தில் நடிக்கும்போது அதற்கேற்ற உடை, குரல், நடிப்பு என அனைத்தையும் நேர்த்தியாகச் செய்தார். காதல் சண்டை என காட்சிக்கு காட்சி துள்ளிச் செல்லும் ஹீரோவாக நடிக்கும் எம்.ஜி.ஆர் கிழவனாகவும் பெண்ணாகவும் பல்வேறு தொழில் செய்பவராகவும் நடிப்பதையும் ஆடி பாடியதையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.



    பெண் வேடத்தில் எம்.ஜி.ஆர்


    எம்.ஜி.ஆர் புதுமை பித்தனில் நடன மங்கையாகவும் காதல் வாகனம் படத்தில் நவீன மங்கையாகவும் சில காட்சிகளில் வருவார். கவுன் போட்ட இளம்பெண்ணாக எம்.ஜி.ஆரின் வேடப் பொருத்தமும் பெண்ணை போல அவர் கொஞ்சி பேசுவதும் நளினமாக் நடப்பதும் ரசிகரகளை வெகுவாக கவர்ந்தன. சங்கே முழங்கு படத்தில் பெண்ணாக வேடம் போடாவிட்டாலும் திருமண சம்பந்தம் பேசும் பெண்ணை போல நடித்து காட்டியிருப்பார். அதை போல மாட்டுக்கார வேலனில், வேலன் எம்.ஜி.ஆர் தன்னை ரகு என நினைத்து காதலிக்கும் ஜெயலலிதாவை பற்றி தெரிவிக்கும்போது,


    ''ஒரு பக்கம் பாக்குறா
    ஒரு கண்ணை சாய்கிறா
    அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
    சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா''

    என்று பாடி ஒரு பெண்ணை போல ரகு எம்.ஜி.ஆரிடம் நடித்து காட்டுவார். அந்த பாட்டில் அவர் நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். இந்தக் காட்சிக்கு திரைஅரங்கில் கைதட்டலும் விசில் சத்தமும் காதைப் பிளக்கும்.



    சாமியாராக எம்.ஜி.ஆர்

    நல்லவன் வாழ்வான், ஆனந்த ஜோதி, இதய வீணை போன்ற படங்களில் சாமியாரை போல வருவார். நல்லவன் வாழ்வான் படத்தில் கொலை பழி சுமந்து ஒளிந்து வாழும் நிலையில் உண்மைக் கொலைகாரனை அறிய அதே ஊரில் எம்.ஜி.ஆர் சாமியாராக வந்து தங்கியிருப்பார். அப்போது ‘‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்’’ என்ற பாட்டு பாடுவார்.



    இதய வீணையில் திருட்டு பழி சுமந்த அண்ணனான எம்.ஜி.ஆர் தன் தங்கை லட்சுமியின் கல்யாணத்துக்கு சாமியார் வேடத்தில் வந்து ‘‘திருநிறைச் செல்வி மங்கையர்க்கரசி – திருமணம் கொண்டாள் இனிதாக’’ என்று பாடி வாழ்த்துவார். இந்த படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆர் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ஜி சகுந்தலாவிடம் என் கடைசிக்காலம் இப்படிதான் (ஆன்மீக வழியில்) இருக்க போகிறது என்று தன் சாமியார் கோலத்தை காட்டினாராம். அதன் பிறகு அவர் திமுக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்கள் ஆங்காங்கே தாமரை கொடியை ஏற்றி அவர்களாகவே புது கட்சி தொடங்கினர். பின்பு எம்.ஜி.ஆர் அவர்களை ஒருங்கிணைத்து ஓர் அரசியல் தலைவராகிவிட்டார். அவரை திமுகவில் இருந்து வெளியேற்றாமல் விட்டிருந்தால் ஒரு வேளை அவர் ரஜினியை போல ஒரு ஆன்மீகவாதியாகி இருப்பார். திமுக தன் சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டது.



    முஸ்லீம் வேடத்தில் எம்.ஜி.ஆர்

    மலைக்கள்ளன், மகாதேவி, சங்கே முழங்கு, போன்ற படங்களில் எம்.ஜி.ஆர் துப்பு துலக்குவதற்காக பட்டாணி முஸ்லீம் வேடமிட்டு வந்தார். மலைக்கள்ளனில் அப்துல் ரஹீம் என்னும் வடநாட்டு முஸ்லீம் வேடம் ஏற்றிருப்பார். தமிழை அன்றைய வடநாட்டுக்காரர் போல பேசுவார். இன்ஸ்பெக்டர் நடத்தும் விசாரணையில் அவரது திருட்டுப் பார்வையும் உடல்மொழியும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றுத் தந்தது.



    மகாதேவியில் லப்பை முஸ்லீம் போல மாறு வேடமிட்டு வந்து மக்களுக்கு இளவரசன் உயிரோடு இருக்கும் உண்மையை தாயத்து மூலமாக வெளிப்படுத்துவார். தாயத்தை விற்பதற்காக ‘‘தாயத்து தாயத்து – சில சண்டாளர் வேலைகளை சனங்களின் மத்தியிலே தண்டோரா போட வரும் தாயத்து’’ என பாடுவார். அப்போது அவர் தலைப்பாகையில் காதோரத்தில் சொருகிய பத்தி புகைந்துகொண்டிருக்கும். கண் இழந்தவர் போல வருவதால் கண்களை சுற்றி கறுப்பாகத் தோன்றும். உடையும் வெகு பொருத்தமாக இருக்கும். கழுத்தில் தாயத்து அணிந்திருப்பார். கையில் டேப் வைத்து அடித்துக்கொண்டு வருவார். கைலியை உயர்த்தி கட்டியிருப்பார். தோளில் ஒரு துணி மூட்டை தொங்கும்.



    சங்கே முழங்கு படத்தில் வீண் கொலைப் பழியேற்று ஊரை விட்டு முஸ்லீம் பாய் வேஷத்தில் ரயிலேறிவிடுவார். அப்போது தன் காதலி லக்ஷ்மியை அதே வேஷத்தில் சந்தித்து அவருடன் பேசுகின்ற காட்சிகளில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வசனங்கள் உருக்கமானவை. வசதியான முஸ்லீமாக வருவதால் தலையில் குஞ்சம் தொங்கும் உயரமான குல்லா, கையில் ஒரு ப்ரீஃப் கேஸ் மற்றும் சிறு கைத்தடி வைத்திருப்பார், கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற படி மேக்கப், உடை, உடல் மொழி ஆகியவற்றில் சின்ன சின்ன விஷயங்களில் கூட எம்.ஜி.ஆர் மிகுந்த கவனம் செலுத்தியிருப்பார்.



    பஞ்சாப் சிங்காக எம்.ஜி.ஆர்


    சங்கே முழங்கு படத்தில் எம்.ஜி.ஆர் கொலைப்பழியில் இருந்து தப்பிக்கவும் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் பஞ்சாப் சென்று கிருபால் சிங் என தன் பெயரையும் உருவத்தையும் மாற்றிக்கொள்வார். அங்கேயே ஐ.பி.எஸ் முடித்து தமிழகம் வந்து காவல்துதுறை அதிகாரியாகி உண்மையான கொலையாளியைக் கண்டு பிடிப்பார்... (சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா கதையும் இது போன்ரதுதான்) எம்.ஜி.ஆருக்கு சிங் வேஷம் மிகவும் பொருத்தமாக இருக்கும். சிங்குகளை போல அவரும் தலையில் டர்பன், முகத்தில் சிறிய கருந்தாடி என வருவார். இவ்வேடம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.



    குடியிருந்த கோயிலில் ஆனந்த் எம்.ஜி.ஆர், திருடன் பாபுவாக கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்தபோது ஒரு முறை மட்டும் சிங் வேடம் போடுவார். இந்த வேஷத்துடன் தான் எல்.விஜயலட்சுமியுடன் இணைந்து ‘ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதில் தான் சுகம் சுகம் சுகம்’ என்ற பாட்டுக்கு பங்க்ரா நடனம் ஆடியிருப்பார். அதிலும் வேஷ பொருத்தும் மிக சரியாக இருக்கு
    ம்.

    பூட்டுக்காரராக எம்.ஜி.ஆர்

    ANATHA JOTHI படத்தில் எம்.ஜி.ஆர் கள்ள நோட்டு அடிக்கும் கும்பலை தேடும் காவல்துறை அதிகாரி மாறனாக நடித்தார். இதில் பூட்டு விற்பவரை போல மாறு வேடம் போட்டு கள்ள நோட்டு மாற்றும் கும்பலைக் கண்டுபிடிக்க ஊரை சுற்றி வருவார். அவரது பம்பை க்ராப், முறுக்கு மீசை, ஏற்றிக்கட்டிய கைலி, கையில்லாத ஓவர் கோட், தோளில் தொங்கும் இரும்புப்பெட்டி, ஒரு கையில் பெரிய இரும்பு வலையத்தில் கோர்க்கப்பட்ட பல தினுசு சாவிகள் இத்துடன் காலை அகட்டி வைத்து நடக்கும் நடை என பொருத்தமாக மாறு வேடம் போட்டிருப்பார். பூட்டு சாவி ரிப்பேர் என்று தொடங்கும் ஒரு பாட்டை பாடுவார். அதில் பூட்டும் சாவியும் என்ற சொற்கள் சமூக சிந்தனையோடு இடம்பெற்றன. காங்கிரஸ்காரர்களின் வெற்றுப்பேச்சுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும் என்றும் பாடுவார்.



    வளையல்காரராக எம்.ஜி.ஆர்

    படகோட்டி நம்பியாரால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் சரோஜா தேவியை சந்திக்க எம்.ஜி.ஆர் வளையல்கார வருவார். அந்த வீட்டில் நம்பியார் – சரோஜாதேவி திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் அப்போது எம்.ஜி.ஆர் கறுப்பு மேக்கப்பில் தலையில் வட்டக் குடுமி, பெரிய வயிறு, மேலே கனத்த கோட், முகத்தில் ஒரு கறுப்பு மரு, பெரிய உருண்ட மீசை, தோளில் வளையல் பெட்டி கையில் வளையல் சரம் எனத் தன் குண்டு உடம்பை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து ஒரு சோபாவில் பொத் என விழுவார். அந்த தோற்றத்தில் அவரை படம் பார்க்கும் புதியவர்களால் அடையாளம் கண்டுகொள்ள இயலாது.



    ‘‘கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு - கொண்டாடி வரும் வளையல் – அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே - சிங்கார தங்க வளையல்’’ என்ற பாட்டும் பாடி வளையல்களை அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு விற்பார். இந்தக் காட்சியில் வயதான ஒரு தம்பதியர் வரும்போது ‘மாமனாரை மாமியாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சு தந்த வளையல்’ மற்றும் ‘இளங்காளையர்கள் கெஞ்சிவர கன்னியர்கள் கொஞ்சி வர தூதாக வந்த வளையல்’ என்ற வரிகள் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றன.


    மின்சாரத்துறை ஊழியர்

    காதல் வாகனம் படத்தில் மின் பயன்பாட்டை பதிவு செய்யும் மின்சார துறை ஊழியராக வயதான தோற்றத்தில் வருவார். தலையில் தொப்பி, கண்ணில் ஒரு காந்தி கண்ணாடி, கையில் ஒரு பதிவேடு, குடு குடு நடையுடன் அவரது நடிப்பும் தோற்றமும் பாராட்டும்படியாக இருக்கும். துப்பறியும் நோக்கில் எம்.ஜி.ஆர் மாறு வேடத்தில் வரும் இக்காட்சி நகைச்சுவை காட்சியாக அமைந்திருக்கும்.

    வெஸ்டெர்ன் டான்ஸ் மாஸ்டராக எம்.ஜி.ஆர்

    என் கடமை படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு கடமை தவறாத போலிஸ் அதிகாரி. அவருக்கு எம்.ஆர்.ராதா மீது சந்தேகம் இருப்பதால் அவர் வீட்டுக்குள் போய் வந்து துப்பு கண்டுபிடிக்க வழி தேடுவார். அப்போது சரோஜாதேவிக்கு வெஸ்டெர்ன் டான்ஸ் கற்றுத்தர ஒரு மாஸ்டர் வேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்த்தும் எம்.ஜி.ஆர் அவர் வீட்டுக்கு போய் பணியில் சேர்ந்துவிடுவார். அவரை அடையாளம் கண்டுகொண்ட சரோஜாதேவியிடம் உனக்காகத்தான் இந்த வேடத்தில் வந்தேன் என்று சொல்லிவிடுவார். கடைசியில் குற்றவாளி எம்.ஆர்.ராதா அல்ல அவருக்கு வைத்தியம் பார்க்க வரும் டாக்டர் என்பதை கண்டுபிடிப்பார். டாகடர் வேடத்தில் பாலாஜி நடித்தார். அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இதுதான். யாரது யாரது தங்கமா என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் வெஸ்டெர்ன் டான்ஸ் ஆடுவார்கள். படிக்கட்டில் சுற்றி வந்து ஸ்டெப் போட்டு இருவரும் ஆடுவது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எம்.ஜி.ஆர் கறுப்பு தாடி கறுப்பு கண்ணாடி என வித்தியாசமான கெட்டப்பில் வருவார். அடிக்கடி தாடியை தடவிக்கொள்வார். ஹீல்ஸ் ஷூ போட்டு தன்னை நல்ல உயரமாகக் காட்டியிருப்பார்.

    கதா காலட்சேபம் செய்பவராக எம்.ஜி.ஆர்

    எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் போலிசுக்கு பயந்து ஒரு காலட்சேபம் நடத்தும் இடத்துக்கு வந்து அங்கு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவரே காலட்சேபம் செய்வார். இந்து சமயத்தின் பார்ப்பனீயக் கருத்துகளுக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரது காலட்சேபன் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கும். 1967-ல் வெளிவந்த படம் என்பதால் அப்போது அமெரிக்கா விண்வெளிவீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் சந்திர மண்டலத்தில் கால் வைத்த நிகழ்ச்சி பிரபலமாகியிருந்தது. எனவே அதையே தம் காலட்சேபப் பாடுபொருளாக்கி மூட நம்பிக்கைகளை கேலி செய்து ஒரு கலகலப்பான நிகழ்ச்சியை நடத்துவார். முழுக்க முழுக்க பின்னணி குரல் கொடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இவரது நடிப்பும் முக பாவனைகளும் காண்போர் மனதை கவரும். மேலும் இவரது வேட பொருத்தம் வியக்க வைப்பதாக அமையும். மொட்டை தலை அதில் பட்டை விபூதி, சிவந்த நிறம், மேல் அங்கவஸ்திரம், கைகளில் தப்பளா கட்டை, கழுத்தில் மாலை என வெகு நேர்த்தியாக அவரது மேக்கப் அமையும். அவர் தலையை திருப்பி இரு பக்கம் இருப்பவரையும் பார்த்து பேசுவதும் கைகளை வீசி வீசி பாடுவதும் அவரது முக பாவமும் நொடிக்கு நொடி மாறும் முக பாவங்களும் அந்நிகழ்ச்சியை ரசிக்க வைக்கும் அவரது நடிப்பு திறனுக்கு இக்காட்சி ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும்.


    கலை மக்களுக்காக


    e
    எம்.ஜி.ஆர் தனது நடிப்பார்வத்துக்கு தீனி போடவே பல படங்களிலும் மாறு வேடக் காட்சிகளை அமைத்து நடித்துள்ளார். இக்காட்சிகளின் வெற்றி இவர் இதே கதாபாத்திரங்களில் படம் முழுக்க நடித்திருந்தாலும் இப்படித்தான் வெகு சிறப்பாக நடித்திருப்பார் என்பதை நமக்கு உறுதி செய்கிறது.

    ஒரு படம் முழுக்க அவர் ஒரு சாமான்யனை போல நடிப்பதை மக்கள் விரும்பவில்லை. எனவே எம்.ஜி.ஆர் தன்னுள் இருந்த கலைஞனை ஒதுக்கிவிட்டு கலையார்வத்தை மட்டுப்படுத்திவிட்டு மக்களின் மகிழ்ச்சி ஆதரவு என்ற இலக்கை மட்டும் நோக்கி பயணித்ததால் அவர் வெற்றி திருமகன் ஆனார். இங்கு ஒரு கலைஞனின் தனிமனித ஆர்வத்தை விட அவன் சார்ந்திருக்கும் சமூக அக்கறையே முக்கியத்துவம் பெறுகிறது. எந்த ஒரு கலையும் கலைஞன் என்ற ஒருவனுக்கானது அல்ல அது கலைஞனை வாழவைக்கும் சமூகத்துக்கானது என்பதை எம்.ஜி.ஆரின் கலை வாழ்க்கை புரிய வைக்கிறது. எம்.ஜி.ஆர் கலை கலைக்காக என்ற கூட்டத்தை சேர்ந்தவரல்ல; கலை மக்களுக்காக என்ற சித்தாந்தத்தை அவர் நமபினார். மக்களை மகிழ்விக்கின்ற அவர்களுக்கு படிப்பினை தருகின்ற படங்களை உருவாக்கினார். அதன் மூலமாக மக்கள் மனம் கவர்ந்த மக்கள் திலகம் ஆனார். பின்பு மக்கள் முதல்வர் ஆனார். அவர் இறந்து முப்பது வருடங்கள் ஆனாலும் இன்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்

    COURTESY NET

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1322
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    வாழ்வளித்த எம்ஜிஆர்:

    தமிழ் சினிமா உலகில் பாட்டுக்கு தகுந்த மெட்டு, மெட்டுக்கு தகுந்த பாட்டு என்று இரண்டு வகையாக எழுதுவார்கள். இதில் மெட்டுக்கு தகுந்த பாட்டு எழுதுவது என்பது சற்று சிரமமான விஷயம்தான். இதில் வல்லவர் நமது கவிஞர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராக இருந்த கவிஞருக்கு, சினிமா உலகில் இருக்கும் எல்லோருக்கும் உண்டாகும் ஆசை வந்தது. சொந்தமாக படம் ஒன்றை எடுத்தார். கையைச் சுட்டுக் கொண்டார். கடனாளி ஆனார். இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

    “1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார். அந்தக் காலக் கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

    கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

  4. #1323
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத பாடல்கள்:

    கீழே மறக்க முடியாத, அந்தக் கால இலங்கை வானொலியில் நான் கேட்ட கவிஞர் மருதகாசி அவர்களது சில பாடல்களின் முதல் வரிகளை மட்டும் தந்துள்ளேன். அடைப்புக் குறிக்குள் படங்களின் பெயர்கள்.

    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே (பாகப்பிரிவினை)
    மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி (மக்களைப் பெற்ற
    மகராசி)
    விவசாயி விவசாயி (விவசாயி)
    தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் (தை பிறந்தால் வழி பிறக்கும்)
    சின்ன பாப்பா எங்க சின்ன பாப்பா (வண்ணக்கிளி)
    சின்ன அரும்பு மலரும் (பங்காளிகள்)
    எஜமான் பெற்ற செல்வமே (அல்லி பெற்ற பிள்ளை)
    மாமா மாமா மாமா (குமுதம்)
    வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)
    ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே (பாவை விளக்கு)
    வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி (பாவை விளக்கு)
    வாராய் நீவாராய் போகுமிடம் வெகு தூரமில்லை (மந்திரி குமாரி)
    வண்டி உருண்டோட அச்சாணி தேவை (வண்ணக்கிளி)
    தென்றல் உறங்கிய போதும் ( பெற்ற மகனை விற்ற அன்னை)
    என்னை விட்டு ஓடிப்போக முடியுமா (குமுதம்)
    எத்தனை எத்தனை இன்பமடா (யாருக்குச் சொந்தம்)
    காட்டு மல்லி பூத்திருக்க … மாட்டுக்கார வேலா ( வண்ணக்கிளி)
    கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும் (கைதி கண்ணாயிரம்)
    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். (நினைத்ததை முடிப்பவன்)
    இதுதான் உலகமடா மனிதா ( பாசவலை)
    சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்)
    ஆத்திலே தண்ணி வர ( வண்ணக்கிளி)
    அடிக்கிற கைதான் அணைக்கும் ( வண்ணக்கிளி)
    இன்பம் எங்கே இன்பம் எங்கே (மனமுள்ள மறுதாரம்)
    சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ( நீலமலைத் திருடன்)

  5. #1324
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வாரம் சன் லைப் சேனலில் மக்கள் திலகம் விஜயம் 19-06-2018 செவ்வாய் பகல் 11 மணிக்கு கன்னித்தாய், 20_06-2018 புதன் கிமை இரவு 7 மணிக்கு திருடாதே, 21-06-2018 வியாழன் இரவு 7 மணிக்கு நம் நாடு, 23 - 06-2018, சனிக்கிழமை இரவு 7 மணிக்கு நான் ஆனையிட்டால், 24 -06-2018 ஞாயிறு பகல் 11 மணிக்கு நவரத்தினம் ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கண்டு மகிழவும் காலை வணக்கங்ள் மதுரை ராமகிருஷ்ணன்... thanks

  6. #1325
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிரித்து வாழ வேண்டும் படத்தில், ஒருபாடலில் "மேரே நாம் அப்துல் ரஹ்மான்" என்று பாடுவார் தலைவர்.

    #எம்ஜியார் ஏன் அந்த 'அப்துல் ரஹ்மான்' பெயரை தேர்ந்தெடுத்தார்...? அதற்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு... வாங்க என்னனு பார்போம்...

    மக்கள் திலகத்தை மிகவும் நேசித்தவர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள். இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு.

    ஒரு முறை தான் நடித்து வெளியான 'சிரித்து வாழ வேண்டும்' என்கிற திரைப்படத்தில் தான் ஏற்ற முஸ்லீம் பாத்தரத்திற்கு அப்துல் ரஹ்மான் எனப் பெயரிட்டு.. தானே அப்பாத்திரத்திலும் நடித்தார்.

    ஒரு பாடலை உருவாக்கும்போது.. 'தனது நண்பரின் பெயர் வர வேண்டும்' என்று கேட்டுக்கொள்ள..

    புலவர் புலமைப்பித்தன் அவர்களின் எழுதுகோல் வழங்கிய வரிகள் இவை..
    டி.எம.எஸ். குரலில் மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த மற்றுமோர் இஸ்லாமிய கீதம்தான் இந்த 'ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்' என்ற பாடல்.

    எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
    அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !
    ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
    அவனே அப்துல் ரஹ்மானாம்
    ஆண்டான் இல்லை அடிமை இல்லை
    எனக்கு நானே எஜமானாம்

    ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
    ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
    உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
    அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
    வந்தான் வாழ்ந்தான் போனான்
    என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
    சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
    ஊரார் சொல்ல வேண்டும் !!!

    எம்.ஜி.ஆர். திருப்தியடைந்தது ஒரு பக்கம் என்றாலும், திரு. அப்துல் ரஹ்மான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவிருக்க முடியுமா?

    பகுத் அச்சா என்பதைவிட!! இது இறைவனின் சித்தமே! திரைப்பாடலில் எவ்வளவு நற்கருத்துக்களை ஊட்ட முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர்.. புலமைப்பித்தன்.. எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி கட்டியம்கூறும்.

    நண்பர் ஒருவரின் மீது தான் கொண்ட பற்றிக்கு எம்.ஜி.ஆர். பாணியில் சொல்லப்பட்ட நன்றி இது!

    நன்றி:கவிஞர் காவிரி மைந்தன்..... நன்றி9

  7. #1326
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர் மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    நமது வெற்றியை
    நாளை
    சரித்திரம் சொல்லும்
    இப்படை தோற்கின்
    எப்படை வெல்லும்

    எம்ஜிஆர் ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!

    M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன் சாதனைகூட, படத்துக்கு சிக்கலையும் கெடுபிடியையும் ஏற்படுத்தின.

    பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக- வில் எம்.ஜி.ஆர். இணைந்தார். திமுக-வில் அவர் சேர்ந்தபோது, அது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பப்படி 1957-ம் ஆண்டில்தான் திமுக தேர்தலில் போட்டி யிட்டது. அப்போது, காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. அதனால், எந்த லாப நோக்கத்தோடும் திமுகவில் எம்.ஜி.ஆர். சேரவில்லை. சொல்லப்போனால், அன்றைய சூழலில் திமுகவில் இருந்ததால் அவருக்கு இழப்புகளும் சோதனைகளும்தான் அதிகம். அவரது படங்களுக்கு சென்சாரின் பிடி இறுகும். புராணப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, திமுகவின் கொள்கைகளை மனதில் கொண்டு அந்த வாய்ப்புகளை எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.

    1959-ம் ஆண்டில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு காலில் மிகக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். ‘‘இனிமேல் அவரால் நடிக்க மட்டுமல்ல; நடக்கவே முடியாது’’ என்றனர். ஆனால், நடக்காது என்பது எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடக்காது. வெற்றிகரமாக மீண்டு முன்பை விட வேகமாகவும் வலிமையோடும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், ‘‘அவர் உயிர் பிழைத்திருக்கலாம்; ஆனால், சினிமா வாழ்வு முடிந்தது’’ என்றனர். அதைப் பொய்யாக்கி சினிமாவில் ஏற்கனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.

    அப்படி, ரிசர்வேஷனிலேயே சாதனை படைத்த படம் ‘இதயக்கனி’ தியேட்டர்களில் அலங்காரம், கொடி, தோரணங்கள், கட் அவுட்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆகியவை எம்.ஜி.ஆர். படங்களில் இருந்துதான் முதலில் ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர்.படங்களை பார்க்க ரிசர் வேஷனுக்கு முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்த அதிசயமும் நடந்தது.

    ‘இதயக்கனி’ திரைப்படம் சென்னையில் மட்டும் ரிசர்வேஷனிலேயே மூன்றே நாட்களில் வசூல் ரூ.90 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த நாட்களில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரிந் தவர்களுக்கு, இந்த 90 ஆயிரம் வசூல் எத்தகைய சாதனை என்பது புரியும். அதுவரை இல்லாத இந்த சாதனையை, படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப் பன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டார். அந்த விளம்பரம் இங்கே இடம் பெற்றுள்ளது. அந்த விளம்பரமே படத்துக்கு சோதனையை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி மக்களின் ஆதரவோடு கட்சி வேகமாக வளர்ந்து வந்த நேரம் அது. படத்துக்கு கெடுபிடி தொடங்கியது.

    உண்மையிலேயே அவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியிருக்கிறதா? என்று வணிகவரித் துறை அதிகாரிகள் படம் வெளியாக இருந்த தியேட்டர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். படம் பார்க்க வரும் மக்கள் மிரண்டு திரும்பிப் போகும் அளவுக்கு டிக்கெட் கவுன் டர்களுக்கு வெளியே பலமான கண்காணிப்பு களும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டன. தியேட் டர்களின் அலுவலகத்திலும் கெடுபிடிகள். இவ்வளவையும் தாண்டி ‘இதயக்கனி’ படம் அபார வெற்றி பெற்றது. சென் னையில் சத்யம் தியேட்டரில் முதன்முதலில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது ‘இதயக்கனி’.

    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னையில் தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் ‘தி இந்து’ தமிழ் நாளித ழில், ‘உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை’ என்ற கட்டுரை வெளியானது. அதில், பஸ் இன்ஜின் உள்ளே பாதுகாப்பாக மறைத்து ரீல் பெட்டியை தியேட்டருக்குள் கொண்டு சென்ற செய்தி இடம் பெற்றது நினைவிருக்கலாம்.

    கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி, எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் நண்பரின் பிள்ளைகளுக்காக படத்தை அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!

    படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.பி.நாகராஜன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு, தனது மகன்கள் வெங்கடசாமி, பரமசிவம் ஆகியோரிடம் படத்தின் சிறப்புகளை தெரிவித் தார். அவர்களுக்கு உடனடியாக படம் பார்க்க ஆசை. தியேட்டருக்குச் சென்றால் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட ஏ.பி.நாக ராஜன், தனது மகன்களுக்காக இரண்டு டிக்கெட்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

    ஆனால், ஏ.பி.நாகராஜனின் மகன்களுக்காக படத்தின் பிரின்ட்டையே எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை பல்லாவரம் லட்சுமி திரையரங்கிற்கு அனுப்பி வைத்துவிடும்படி கூறினார். உருகிவிட்டார் ஏ.பி.நாகராஜன். இத்தனைக்கும் அவர் அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தது இல்லை.

    திமுகவின் முக்கிய பிரமுக ராக விளங்கிய மதுரை முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்’’ என்றுகூட சவால்விட்டார். படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு புடவைகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இங்கே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். பின்னர், அதே மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்தபோது அவரை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டதோடு, மதுரை மாநகராட்சி மேயராகவும் ஆக்கினார்.

    எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!

    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தேவி திரையரங்கில் 1970-ல் வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது... Thanks

  8. #1327
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972ல் எம்.ஜி.ஆர் அதுவரை தான் சார்ந்திருந்த தி.மு.க கட்சியிலிருந்து விலகி அ இ .அ.தி.மு.க என்ற புதிய கட்சி தொடங்கிய நேரம். மக்களிடையே தன்னுடைய கட்சியின் செல்வாக்கை அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்தது திண்டுக்கல் இடைத்தேர்தல் .

    திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மறைவையொட்டி 1973ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.கட்சி ஆரம்பித்து ஆறே மாதங்களில் 6 மாதக் குழந்தையை கடும் பயிற்சி பெற்ற தி.மு.க, ஸ்தாபன காங்கிரஸ் என்ற ஓட்டப்பந்தய வீரர்களுடன் ஓடவிட்டார்
    எம் ஜி ஆர்.

    மும்முனைப் போட்டியில் அ.இ.அ.தி.மு.க என்ற ஆறு மாதக் குழந்தை வீரர்களை முந்திச் சென்று மாபெரும் வெற்றி பெற்றது.படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆர் வெற்றிச் செய்தி கேட்டவுடன், அருகில் இருந்த பாடலாசிrயர் கவிஞர் வாலியை கட்டி அணைத்துக் கொண்டார்.

    "அண்ணே இந்த இடைத் தேர்தல் வெற்றி மூலம் மக்கள் உங்க பக்கம்னு நிரூபிச்சிட்டாங்க."

    என்றார் வாலி,எம் ஜி ஆரிடம் .

    " எனக்கு முன்பே தெரியும் ஆண்டவனே"

    என்றார் மக்கள் திலகம்.

    "எப்படிங்கண்ணே தெரியும் "

    என்று வாலி கேட்க

    " நீங்கதான் எழுதிட்டீங்களே, மூன்றெழுத்தில் ( தி.மு.க)என் மூச்சிருக்கும்.அது முடிந்த பின்னால் (கட்சியை விட்டு வெளிவந்த பின்)என் பேச்சிருக்கும்னு , கவிஞன் வாக்கு பொய்க்குமா ?"

    என்றாராம் எம் ஜி ஆர்.

    தெய்வத்தாய் படத்தில் வரும் இந்தப் பாடல் எம் ஜி ஆர் அவர்களின் அரசியல் வாழ்க்கையை கணித்த பாடலாக வாலி அவர்கள் தேர்தலுக்கு முன்பே அமைந்தது பிற்காலத்தில் நடந்தது. தெய்வத்தாய் படத்தில் இருந்து மக்கள் திலகம் நடிப்பில் செளந்திர்ராஜன் குரலில் மெல்லிசை மன்னர்களின் இசையில் இனிய பாடல்.

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது
    முடிந்த பின்னால் என் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்.
    கடமை........ அது கடமை
    கடமை......... அது கடமை..... Thanks...

  9. #1328
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    Mgr first hero movie rajakumari 1947


  10. #1329
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1330
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •