Page 233 of 401 FirstFirst ... 133183223231232233234235243283333 ... LastLast
Results 2,321 to 2,330 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2321
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர்- சிவாஜி ரசிகர்களின் பொற்காலம் 1952- 1977

    25 ஆண்டுகள் தமிழ் திரை உலகில் மிகவும் போட்டியாளர்களாக திரைவானில் ஜொலித்த நட்சத்திரங்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜிகணேசன்

    1947ல் ராஜகுமாரி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகராக எம்ஜிஆர் வளர்ந்து வந்தார் . அவருக்கென்று ரசிகர்களும் உருவாகினார்கள் . மிக குறுகிய காலத்தில் எம்ஜிஆர் நடித்த படங்கள் மருத நாட்டு இளவரசி , மந்திரிகுமாரி , மர்மயோகி , சர்வாதிகாரி என்தங்கை வெற்றி அடைந்தது . மக்கள் மத்தியில் பிரபல நடிகராக உயர்ந்து இருந்தார் .
    தமிழகமெங்கும் எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள் .எம்ஜிஆரின் வசீகர தோற்றம் , அபாரமான வாள் வீச்சு
    மன்னர் வேடத்திற்கு ஏற்ற கம்பீர தோற்றம் , சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் மூலம் அன்றைய கால காட்ட இளம் வயதினரை தன் பக்கம் ஈர்த்தார் எம்ஜிஆர் .

    1952ல் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தில் சிவாஜிகணேசன் அறிமுகமாகி , தொடர்ந்து பல்வேறு குணச்சித்திர வேடங்கள் , வில்லன் வேடம் , இரண்டாவது கதாநாயகன் வேடம் , என்று சமூக படங்களிலும் , புராண படங்களிலும் நடித்ததின் மூலம் அவருக்கென்று ரசிக பட்டாளம் உருவானது .

    1952 முதல் 1977 வரை எம்ஜிஆர் - சிவாஜி நடித்த படங்கள் தொடர்ந்து வெளிவந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தது . எம்ஜிஆர் திமுக நடிகராகவும் சிவாஜிகணேசன் காங்கிரஸ் நடிகராகவும் அறியப்பட்டார்கள் . ரசிகர்களும் கட்சித்தொண்டர்களும் அவர்கள் படம் வெளிவரும் நாளை ஒரு திருவிழாகவே கொண்டாடினார்கள் .

    ரசிக மன்றங்கள் இருவருக்கும் தமிழமெங்கும் துவங்கப்பட்டது . பின்னர் கர்நாடகம் ,கேரளா , ஆந்திர , பம்பாய் அந்தமான் , மற்றும் சிங்கப்பூர் என்று உலக நாடுகளிலும் துவங்கப்பட்டது . எம்ஜிஆர் ஆதரவு பத்திரிகைகள் சிவாஜி ஆதரவு பத்திரிகைகள் தோன்றியது . பல் வேறு மோதல்கள் , ஏட்டிக்கு போட்டி விமர்சனங்கள் , வசூல் பிரளயங்கள் என்று மோதிக்கொண்டார்கள் .

    எம்ஜிஆர் சினிமா அரசியல் இரண்டிலும் தீவிரமாக இருந்ததால் 134 படங்கள் மட்டுமே நடித்திருந்தார் .
    சிவாஜி முழு நேர திரை உலகில் இருந்ததால் 280 படங்கள் மேல் நடித்திருந்தார் . மேலும் சிவாஜிக்கு படங்கள் 100 நாட்கள் ஓடினால்தான் பெருமையாகவும் கவுரமாகவும் இருக்கும் என்று அவருடைய ரசிகர்கள் உணர்ச்சியுடன் போராடினார்கள் . எம்ஜிஆருக்கு அந்த நிலை இல்லை . ஏபிசி என்ற மூன்று சென்டர்களிலும் நிரந்த மார்க்கெட் இருந்தது . எம்ஜிஆர் படங்களுக்கு என்றுமே எங்குமே நல்ல மவுசு இருந்தது .

    சிவாஜிக்கு பராசக்திக்கு பிறகு மனோகரா , வீரபாண்டிய கட்ட பொம்மன் , பாகப்பிரிவினை , பாசமலர் , பாவமன்னிப்பு , ஆலயமணி , திருவிளையாடல் , தில்லானா மோகனாம்பாள் , சிவந்தமண் ,பட்டிக்காடா பட்டணமா
    வசந்த மாளிகை , எங்கள் தங்க ராஜா , தங்கப்பதக்கம் அவன்தான் மனிதன் போன்ற படங்கள் சிவாஜிகணேசன் ரசிகர்களை உற்சாப்படுத்தியது .

    எம்ஜிஆருக்கு சில படங்களை தவிர பல படங்கள் வெற்றி வாகை சூடியது . வசூலிலும் எம்ஜிஆர் படங்களே முதலிடத்தை தக்க வைத்து கொண்டது . எம்ஜிஆர் திரை உலகிவிட்டு விலகும் வரை 1977 அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமை உண்டு . அவருடைய திரை உலக சாதனைகளை அவர் இருக்கும்வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை .

    எம்ஜிஆர் திரை உலகை விட்டு விலகிய பிறகு நடிகர் சிவாஜிகணேசனுக்கு போட்டியாளர்கள் யாருமில்லை . எனவே அவர் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் .

    1977க்கு பிறகு இன்று வரை 41 ஆண்டுகளாக எம்ஜிஆரின் பல பழைய படங்கள் தமிழகமெங்கும் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது . எம்ஜிஆர் ரசிகர்களும் இன்னமும் எம்ஜிஆரின் நினைவுகளோடு புதிய தலைமுறை எம்ஜிஆர் ரசிகர்களளோடு பயணித்து கொண்டு வருகிறார்கள் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2322
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    எம்.ஜி.ஆர்: தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றி

    எம்.ஜி.ஆர்: தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றிய ஹீரோ!


    மிகவும் ஓப்பனாக பேசவேண்டும் என்றால், தமிழகம் இன்றிருக்கும் நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தேவையா? என்ற கேள்வியை இளைஞர்கள் வெகு சுலபமாக கேட்டுவிடுகிறார்கள் என்பதை முதலில் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால், இதைப்பற்றித் தான் இந்தக் கட்டுரை முழுவதிலும் பேசப்போகிறோம்.

    எம்.ஜி.ஆர் என்ற நடிகர் இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தினால் தான் இப்படிப்பட்ட கேள்விகள் எழுகின்றன. அவர்களிடம் சென்று, தமிழ்க் கலாச்சாரத்தை தமிழ் சினிமாவின் மூலம் பதிவு செய்தவர் எம்.ஜி.ஆர் என்று சொன்னால் முதலில் நம்பமாட்டார்கள். ஆனால், தேடிப்பார்ப்பார்கள். அப்படித் தேடிப்படிப்பவர்களுக்குத் தெரியவேண்டிய மிகமுக்கியமான விஷயங்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை, எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் தன் திரைப்படங்களில் பதிவு செய்தார் என்பது.



    தாயைக் காத்த தனையன் என்ற திரைப்படம் ஒன்று உண்டு. ஓப்பனிங் சீனிலேயே வேட்டைக்குச் செல்லும் எம்.ஜி.ஆர் ஒரு மாட்டை புலியிடமிருந்து காப்பாற்றுவார். தப்பி ஓடிவிடும் புலி என்றாவது ஒருநாள் கொல்லவரும் என்று, அந்தப்புலியைத் தேடிச் செல்லும்போது, சரோஜா தேவியை மானபங்கப்படுத்த முற்படும் அசோகனிடமிருந்து அவரைக் காப்பாற்றுவார்.

    எம்.ஜி.ஆர்-இன் திரைப்படங்களில் இப்படி முக்கியத்துவம் பெறும் குறிப்புகள் அதிகம் இருக்கும். இந்த முதல் இரண்டு காட்சிகள் தான் திரைப்படத்தின் நாடி. இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் படம் முழுக்க நகரும். மனிதன் வாழ வீடு இருக்கும்போது, காட்டிலிருக்கும் மிருகங்களை தொந்தரவு செய்வதால் தான் அவை மனித வேட்டையைத் தொடர்கின்றன என்று படத்தில் வசனம் வரும். இது 100 சதவிகிதம் உண்மை.

    காட்டு மிருகங்கள் மனிதர்களை, தங்களது தற்காப்புக்காக மட்டுமே தாக்குகின்றன. அப்படி ருசி கண்ட மனிதனை மீண்டும் எங்கு பார்த்தாலும் மிருகங்கள் வேட்டையாடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை 1962-லேயே தனது படத்தின் மூலம் சொல்லியிருப்பார். அத்துடன் நகரமயமாக்கலுக்காக காடுகள் அழிக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நிரூபிக்கும் விதத்தில் தான், துப்பாக்கியுடன் சென்றும் புலியினால் தாக்கப்பட்டு, பாறை மறைவுக்குள் ஒளிந்திருக்கும் எம்.ஜி.ஆர்-ஐ, சரோஜா தேவி காப்பாற்றுவார்.

    இது மட்டுமா? காதலித்த பெண்ணே மனைவியாக கிடைக்காதபோது தற்கொலைக்கு முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார் என்று சொன்னால் நம்ப முடியுமா? இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் அப்படி ஒரு முயற்சியை செய்வார். அதன்பின், அவரது தாய் மூலம் காப்பாற்றப்படுவார். இந்தத் திரைப்படத்தில் ஹைலைட்டான சம்பவம் எம்.ஜி.ஆர். சிலம்பாட்டம் ஆடும் காட்சி.



    அசோகனின் அடியாளுடன் எம்.ஜி.ஆர் சிலம்பமாடும் காட்சியை இன்றைய சூழலில் டூப் போட்டு நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோக்கள் மிக முக்கியமாகப் பார்க்கவேண்டும். அப்படி ஒரு கச்சிதமான சண்டையை எந்த ஹீரோவாலும் செய்யமுடியாது. ஏனென்றால், எம்.ஜி.ஆர் உண்மையாகவே பி.யூ.சின்னப்பாவிடம் பயின்றிருந்தார்.

    தாயைக் காத்த தனையன் திரைப்படத்தைப் பார்த்தபிறகு சிலம்பமும் கையுமாக சுற்றிய அந்தக்கால இளவட்டங்கள் இப்போது முடிநரைத்த இளைஞர்களாக இருப்பார்கள். முடி நரைத்த இளைஞர்கள் என ஏன் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்-இன் சிலம்பாட்டம் பற்றிக் கேட்டுப்பாருங்கள். எம்.ஜி.ஆர்-ஆகவே மாறி கையில் கம்பைப் பிடித்து இளைஞர்களாக மாறி வீடு கட்டுவார்கள். சிலம்பாட்டம் மட்டுமல்ல... மல்யுத்தம், குஸ்தி, கபடி என தமிழர்களின் நிலங்களில் காணப்பட்ட அனைத்துவிதமான போட்டிகளையும் எம்.ஜி.ஆர்-இன் படங்களில் காணலாம். அப்போது அவர் தான் டிரெண்ட் செட் நடிகர். அவர் படத்தில் என்ன செய்தாலும், அது மக்களின் வாழ்க்கையில் இடம்பெறும். அக்குள்களில் சிக்கிக்கிடந்த துண்டு, கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டதும் அப்படித்தான். இவையெல்லாம் எம்.ஜி.ஆர் என்ற சூப்பர் ஹீரோவினால் சாத்தியப்பட்டது.

    ஏழைகளின் ஒளிவிளக்கு என்று இப்போது யார் யாருக்கோ பட்டம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அப்போது ஏழைப்பங்காளனாக இருந்தவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். தொடர்ந்து பாட்டாளி மக்களில் ஒருவராக தன்னை முன்நிறுத்தியது அவரது மிகப்பெரிய ஸ்டண்ட். அது தான் அவரை மக்களின் வீடுகளுக்குள் கொண்டு சென்றது. அவர் பணக்காரராக நடிக்கும் படங்கள் தான் கமெர்ஷியல் படங்கள் எனப்பட்டன. அந்தமாதிரி படங்களிலும் எம்.ஜி.ஆர் தன் சொத்தை யாருக்காவது கொடுத்துவிட்டு ஏழையாக குடிசையில் தங்கி இருப்பார். அவருக்கு அங்கிருப்பவர்கள் உணவு கொடுப்பார்கள். இது தான் தமிழர் கலாச்சாரம். வீடு தேடி வந்தவருக்கு உணவளிக்காத வீட்டைத் தமிழ் நாட்டில் காண்பது நடக்குமா?


    மேலே எம்.ஜி.ஆர்-ஐ புகழ்ந்து எதுவும் பேசவில்லை. நேரிடையாக எம்.ஜி.ஆர் என்ற உருவத்தின் குணங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன

    courtesy - net

  4. #2323
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கேள்வி ; எம்ஜிஆர் படங்கள் செய்த சாதனைகள் என்ன ? ஒரு சிலரின் மனக்குமறலுக்கு என்ன காரணம் ?

    பதில் ; எம்ஜிஆர் படங்கள் இந்திய திரை உலகில் யாருமே நினைத்திராத புரட்சிகரமான சாதனைகளை படைத்தது .

    மலைக்கள்ளன் - 1954
    தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும் திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்றும் எல்லோராலும் பாராட்டை பெற்றது எம்ஜிஆருக்கு கிடைத்த முதல் பெருமை .

    மதுரை வீரன் - 1956
    தமிழ் படங்களில் முதல் முறையாக 30 திரை அரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் ஓடியது . வசூலில் மிகப்பெரிய சாதனை . 1979 வரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்கப்படவில்லை .

    நாடோடி மன்னன் - 1958
    அகில இந்திய அளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த காவிய படைப்பு . திமுகவின் உயிர்த்துடிப்பு .
    அண்ணாவின் கனவு நினைவானது . எம்ஜிஆர் நிறைவேற்றினார் . 1967ல் அண்ணாவை நாடோடிமன்னன் தாக்கத்தின் விளைவாக தமிழக முதல்வராக அமர வைத்த எம்ஜிஆர் சாதனையை மறக்க முடியுமா ?

    1977ல் நாடோடி மன்னனே தமிழக முதல்வராக அரியணை அமர்ந்ததும் நாடோடி மன்னனின் உழைப்பே .


    எங்க வீட்டு பிள்ளை - 1965
    அன்பே வா -1966
    காவல்காரன் - 1967
    குடியிருந்த கோயில் - 1968
    அடிமைப்பெண் / நம்நாடு - 1969
    மாட்டுக்காரவேலன் - 1970
    ரிக் ஷாக்காரன் -1971
    நல்ல நேரம் - 1972
    உலகம் சுற்றும் வாலிபன் - 1973
    உரிமைக்குரல் - 1974
    இதயக்கனி - 1975
    நீதிக்கு தலை வணங்கு -1976
    மீனவ நண்பன் -1977

    தொடர்ந்து 1977 வரை தென்னிந்திய திரை உலகில் No -1 வசூல் மன்னராக வலம் வந்தார் .

    இலங்கை மண்ணில் எம்ஜிஆர் படங்களின் சாதனைகளை கண்டு மனம் பொங்கி அன்று முதல் இன்று வரை கண்ணீர் வடிக்கும் கருத்து குருடர்கள் ஒரு சிலரின் பரிதாப நிலைமை [ செல்லரித்த காகிதம் போல ]
    கண்டு அனுதாபம் படுகிறோம் .

    எப்படியோ கடந்த 41 ஆண்டுகளாக எம்ஜிஆரின் சாதனைகளை ஜீரணிக்கமுடியாத சிவனடியார்கள் சித்தம் கலங்கி பித்த நிலைக்கு செல்ல வைத்ததும் ஒரு சாதனையே .
    Last edited by esvee; 24th August 2018 at 09:36 PM.

  5. #2324
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    இன்று முதல்

    கோவை

    ராயலில்

  6. #2325
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவரின் புகழ் பரவ
    அவர்களின்
    மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    இது ஒரு நெகிழ்ச்சியான பதிவு
    எங்கள் தங்கம்
    தன்னையே புடம் போட்ட நிகழ்ச்சி

    👆#தோல்வியை #ஒப்புக்கொண்ட #எம்ஜிஆர்

    கார்வார்... கர்நாடக மாநிலத்தில் தீவு போலத் தோற்றமளிக்கும் மலைப்பிரதேசம்...

    "ஆயிரத்தில் ஒருவன்" படப்பிடிப்பில் கலந்து கொள்ள எம்ஜிஆரும் அவரது உதவியாளரும் காரில் அந்தப் பகுதியில் விரைந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எம்ஜிஆர், "விஞ்ஞானத்தின் விலாசமிழந்த, நவநாகரிகத்தின் வெளிச்சம் படாத இந்த மலைப்பகுதியில் என்னை யாருக்கு அடையாளம் தெரியப்போகுது..." அப்படின்னு சொல்ல...
    அதற்கு உதவியாளரோ..."உலகின் எந்தப்புள்ளிக்கு நீங்கள் சென்றாலும், உங்கள் பொன்நிறத்தைக் காணக் காத்து நிற்கும் மக்கள் கூட்டமுண்டு..." அப்படீன்னு சொல்ல, மக்கள்திலகம், "மாநிலம் கடந்து வாழும், அதிலும் இந்த மலையக மக்கள் என்னை அறிந்துகொள்ள வாய்ப்பில்லை" இப்படியே பேச்சு தொடர...

    வழியில் ஒரு வயதானவர் தலையில் விறகுக்கட்டை சோர்வுடன் சுமந்து செல்வதைப் பார்த்துக் காரை நிறுத்தச்சொல்கிறார். உதவியாளரைப் பார்த்து, 'எங்கே போனாலும் என்னை மக்கள் அடையாளம் கண்டுப்பாங்கன்னு சொன்னியே...இந்தப் பெரியவருக்கு என்னைத் தெரியுதான்னு பார்ப்போம்னு சொல்லி, அவரைக் காரில் ஏற்றுகிறார்.

    பெரியவரிடம் பேச்சுக்கொடுக்கிறார் பொன்மனச்செம்மல். ஆனால் எம்ஜிஆரை பார்த்ததுக்கான எவ்வித உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் 'கேஷுவலாகப்' பேசியதைப் பார்த்த எம்ஜிஆர் தன் உதவியாளரிடம் 'நா சொன்னது போல நடந்துச்சு பார்த்தியா ' என்று சைகையிலும், பார்வையிலும் கூறுகிறார்...

    ஊருக்கு கொஞ்சம் வெளியே இறங்கிய அப்பெரியவரிடம், தனது கர்ச்சீப்பில் கொஞ்சம் பணத்தைக் கொடுக்க, அப்பெரியவர் மறுக்க, பலவந்தமாக கையில் திணிக்க, அப்பெரியவர், "நீங்க கொடுத்ததை நான் வாங்கிக்கொண்டேன்.நான் உங்களுக்கு ஏதேனும் கொடுக்க நினைக்கிறேன்...என்னிடம் கொடுக்க ஏதுமில்லாததால் உங்களுக்கு குடிக்க ஒரு சொம்பு தண்ணீர் எடுத்துவருகிறேன்...சற்று பொறுங்க..." ன்னு சொல்லிட்டு விறுவிறுவென்று தலையில் விறகுக்கட்டுடன் நடந்து ஊருக்குள் செல்கிறார்...

    அடுத்த சில நிமிடங்களில் 'கிராம மக்கள் புடை சூழ' அப்பெரியவர் காரை நோக்கிவர எம்ஜிஆருக்கும், உதவியாளருக்கும் புரியவில்லை.

    காரருகே வந்த பெரியவர், "சாமீ..ஒரு நிமிஷம் வெளிய வந்து எங்க ஜனங்களுக்கு உங்க முகத்தைக் காட்டுங்க..."என சொல்ல திகைத்துப் போய் காரிலிருந்து இறங்குகுறார் எம்ஜிஆர்...

    அவ்வளவு தான் கூட்டத்தில், "ஹைய்யா வாத்தியார்" என்றும், "ஹைய்யா எம்ஜிஆர்" என்றும், "நிசமாவே எம்ஜிஆர் தான்டா" என்றும் அந்த கிராம மக்கள் கொண்டாடுகின்றனர்...

    இப்ப அந்தப் பெரியவர் பேச ஆரம்பிக்கிறார்..."இவ்வளவு நேரம் நீங்க யாருன்னு தெரிஞ்சும் ஏன் வெளிக்காட்டாம சும்மா இருந்தேன்னு நெனச்சீங்களா! இப்ப அந்த இடத்துலயே நீங்க யாருங்கிறதை தெரிஞ்சிட்டு நா மட்டும் சந்தோஷப்பட்டிருந்தேன்னா, உங்கள நா வழியில பார்த்ததாகவோ, உங்க கார்ல வந்ததாகவோ, நீங்க எனக்கு பணம் தந்ததாகவோ எங்க ஜனங்ககிட்ட சொன்னா, "போடா பைத்தியக்காரா, இதையெல்லாம் எங்கள நம்பச்சொல்றீயா! ன்னு என்னைக் கேலி பண்ணுவாங்க...அதனால தான் ஊர் ஜனங்க எல்லோரையும் கூட்டி வந்து, 'உங்களைத் தரிசிக்க வெச்சுட்டேன்..'

    "எங்க ஊர்ல பால் குடிக்கிற புள்ளைக்குக்கூட உங்க முகம் தெரியறப்ப...இந்தப் பாழும் கிழத்துக்கு உங்க முகம் தெரியாமலா இருக்கும் சாமீ..." அப்படீன்னு பெரியவர் உணர்ச்சிப்பிழம்பாய்ப் பேச, அதைக் கேட்ட பொன்மனச்செம்மல் நெகிழ்ந்து உருகிப் போகிறார். அங்கிருந்து விடைபெறுகிறார்...

    உதவியாளரிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.

    இனிய காலை வ*ணக்கத்துட*ன்...✌️🙏✌️
    புரட்சித் தலைவர் பக்தர்கள் 🙏 Thanks Friends...

  7. #2326
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நிகழ்வு 1. 1977 இல் நம் தலைவர் இயக்கம் கண்டு எதிரிகளை பந்தாடி வெற்றிவாகை சூடி முதல்வர் ஆகிறார். மரியாதைக்காக அவர் வீட்டில் வாழ்த்து சொல்ல அனைத்து தரப்பினரும் குவிந்து வண்ணம் இருந்தனர்.ஒரு நாள் நடிகர் வி.கே ராமசாமியும் வந்து வாழ்த்து சொல்கிறார்.அவரை பார்த்து நீங்கள் நான்கிளம்பும் வரை இங்கேயே இருங்கள் என்று சொல்லி கோட்டைக்கு செல்ல தயார் ஆகிறார்.கிளம்பும் போது வி.கே.ஆர்.ஐ அழைத்து தன் காரில் ஏற்றி கொள்கிறார்.அவருக்கு ஒன்றும் ஓடவில்லை.வழியில் குவிந்து வந்த மக்கள் வாழ்த்துகளோடு கோட்டைக்கு சென்று காரை விட்டு இறங்கும் போது அங்கே தயாராக நின்று இருந்த ஒருவரை அழைத்து இவரை கோட்டை முழுவதும் சுற்றி காண்பித்துவிட்டு என் அறைக்கு அழைத்து வா என்று கட்டளை இடுகிறார். சுற்றி பார்த்து விட்டு வந்த வி.கே.ஆர்.அண்ணே ரொம்ம நன்றி என்று சொல்ல இருக்கட்டுமென்கிறார். தலைவர் வி.கே.ஆர் அவர்களை பார்த்து அண்ணே 1948 இல் நீங்க சென்னை வால்டாஸ் சாலையில் நாடகங்கள் நடத்தி வந்ததை நாம் அறிவோம். உங்கள் நாடகத்தை பார்க்க நான் தினமும் வருவேன்.ஒரு பொங்கல் நாள் அன்று நீங்கள் நாடகம் நடிக்காமல் ஊர் சுற்றி பார்க்க போய் விட்டீர்கள் என்று சொல்ல உடனே விகேஆர் அண்ணே நிறுத்துங்கள் எனக்கு நினைவு வந்து விட்டது.மறுநாள் நீங்கள் என்னிடம் நேற்று காணோமே என்று விசாரிக்க நான் ஊரை சுற்றி பார்க்க போனேன்.பார்த்தேன் ஆனால் கோட்டைக்கு மட்டும் உள்ளே போகமுடியவில்லை.வாசலில் துப்பாக்கி வைத்து போலீஸ் காவல் நிற்க பயந்து திரும்பி வந்த நிகழ்வை உங்களிடம் சொன்னேன் என்கிறார்.இது நடந்தது 1945 இல்.. வாத்தியார் முதல்வர் ஆனது 1977 இல். 32 ஆண்டுகள் கழித்து ஒருவர் ஆசைப்பட்ட விஷயத்தை நினைவு கொண்டு அவர் எண்ணத்தை நிறைவேற்றிய விதம் அலாதியானது. வி கே ஆர் .கண்ணீர் மல்க கோட்டையை விட்டு ராஜ மரியாதையுடன் வீட்டுக்கு தலைவரால் அனுப்பி வைக்க படுகிறார்.இப்படி பட்ட பழமையை மறக்காத இவர் பின்னால் இன்று வரை நம்மை போன்ற ரசிகர்கள் பின் தொடர்ந்து வருவது அதிசயம் இல்லை.ஆன்மா நமக்கு இடும் கட்டளை.உள்ளதை சொல்லி நல்லதை செய்து வருவது வரட்டும் என்று நித்தம் அவர் வழி நடப்போம்....நிகழ்வு 2..விரைவில் தொடரும்.நன்றி வாழ்க எம்ஜிஆர் புகழ்... Thanks dear friends...

  8. #2327
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2328
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    மாட்டுக்கார வேலன் வேலூர் மலரில் 1970ல் வெளியிட்டபோது பதிவாகியிருந்த
    இரட்டை இலை சின்னத்தின் அடையாளம்

  10. #2329
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2330
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •