Page 80 of 401 FirstFirst ... 3070787980818290130180 ... LastLast
Results 791 to 800 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #791
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    குப்பனும் சுப்பனும் நினைத்திருந்தால் ...
    அல்லது நேர்மையாக உழைத்திருந்தால் ...
    இன்று அவர்களின் மனக்குமுறல்கள் நியாயமாக இருந்திருக்கும் .
    இவர்களின் அறிவுக்கு கண்கள் பழுதாகிவிட்டது என்பதே உண்மை .

    அவர்களின் நாயகன் சிம்மக்குரலில் கர்ஜித்து , உரத்த குரலில் விழி பிதுங்கி ரத்தத்தை கக்கி பல் வேறு பாத்திரங்களில் நடித்தது அவருடைய திறமை . தன்னுடைய நடிப்பில் அரசியல் மற்றும் மக்கள் விரும்பும் ரசனைகள் கொண்ட சண்டைக்காட்சிகள் , பிரமாண்ட அரங்கங்கள் ,இத்யாதிகளை செய்ய வேண்டாம் என்று யார் தடுத்தது ? மக்கள் அவரை ஏற்று கொண்டது ஒரு சிறந்த நடிகராக மட்டுமே .

    அவருக்கு வாழ்ந்த காலத்தில் எது கிடைக்க வேண்டுமோ அவைகள் கிடைத்தது .
    இப்போது எது கிடைக்கிறதோ அதை ஏற்று கொள்ளும் பக்குவம் வேண்டும் சுப்பா ....
    முழு நிலவு சந்திரன் .... என்றுமே பேரழகு ...
    ஒளி வீசும் குளிர் நிலவு ...
    நாங்கள் நினைத்தோம் ...
    நினைத்ததை நடத்தி காட்டினோம் .
    இன்றும் வெற்றிகளை குவிக்கிறோம்
    எங்களை பார்த்து ..............
    உங்களுக்கு கிடைத்தது இவ்வளவுதான் ...
    மனசாந்தி அடையவும் .

    நன்றி .
    திரு கார்மேகம்
    முகநூல்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #792
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    ரவிச்சந்ரன்

    என் வேண்டுதலை ஏற்று என் பதிவ நீக்காமல் இருந்ததற்கு நன்றி. நன்றி. நன்றி. ஆனால், இன்னும் கூட மாற்றுத் திரியில் புரட்சி்த் தலைவரை மலையாளி என்றும் கேவலமாகவும் பதிவு போடுகிறார்கள். நீங்கள் தொடர்ந்த என் பதிவை நீக்காமல் இரு்ங்கள். அதுபோதும். நான் பாத்துக்கறேன்.

    எஸ்வி அய்யா

    நாம்பளாக அவர்கள் நடிகரைப் பத்தி சீண்டவில்லை. முதல்ல பதிவு போட்டு புரட்சித் தலைவரை கடுமையா விமரிச்சது அவர்கள்தான். அதுக்குத்தான் பதில் சொல்றோம். நீங்கள் போட்ட முகநூல் பதிவை எடுத்துப் போட்டு அதுக்கு பதில் சொல்வதாக சொல்லி புரட்சித் தலைவரை கேவலமாக விமர்சிக்கிறார்கள்.

    சினிமாவிலும் மார்க்கெட் போயி அரசியல்லயும் மக்களால் தோற்கடிச்ச இவங்க நடிகரின் ரசிகர்களுக்கே இவ்வளவு என்றால் வெற்றி தெய்வம் புரட்சித் தலைவர் ரசிர்க்ளான நமக்கு எவ்வளவு இருக்கும்.

    கடந்த காலத்தில் அவர்கள் நடிகரைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்ச வண்டவாளத்தை எல்லாம் சொல்லுங்கள் அய்யா.

  4. #793
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று மணிமண்டபத்துல வெச்ச அவர்கள் நடிகரின் சிலையில் கருணாநிதி பெயரை எடுத்துவிட்டா்களாம். கூப்பாடு போடுகிறார்கள். 1979-ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவார் சிலை வைக்க புரட்சித் தலைவர் அடிக்கல் நாட்டினார். பிறகு 2000ல் கருணாநிதி சிலை திறந்து வெச்சார். அப்போ, புரட்சித் தலைவர் நாட்டிய அடிக்கல்ல தூக்கி எறிந்துவிட்டார்கள். அந்த மேடையில் அந்த நடிகரும் இருந்ார். யாராச்சும் புரட்சித் தலைவர் பெயர் பொறி்த்த அடிக்கல் எங்கே என்று கேட்டாரகளா? இப்போது அதுதான் கருணாதிக்கு நடக்கிறது.

    அண்ணன் நெல்லை எஸ்.எஸ். மணி முகநூல் பதிவு.

    -----

    இன்று ஊடகங்களில் கலைஞர் பெயர் அமரர் சிவாஜி சிலையில் கீழ் இல்லை என்று மணிமண்டபம் திறப்புவிழா பற்றி பேசியுள்ளார்கள்.நல்ல ஆரோக்கியமான வினா தான். தவறும் கூட.இந்த அரசில் ஆலோசனை கூறும் இடிப்பார்கள் இல்லை.சரி. பெரியவர் கலைஞர் அவர்கள் 1.1.2000ல் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தாரே !.அதில் அமரர் சிவாஜியும் கலந்துகொண்டு பேசினாரே. யாரும் என் தானைத்தலைவன் எம்.ஜி.ஆர்.பெயரை ஏன் மறைத்தீர்கள்? அந்த 133 அடி திருவள்ளுவர் சிலையை அமைக்க தமிழக அரசு சார்பாக அடிக்கல் நாட்டினார் என் தலைவன் எம்.ஜி.ஆர்.அடிக்கல் நாட்டிய கல்வெட்டை தூக்கி எறிந்தீர்களே.ஏன் ? கலைஞரும் சிவாஜியும் கலந்து கொண்ட விழா தானே.முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்.தீதும் நன்றும் பிறர் தர வாரா.ஏனெனில் அந்த இரண்டு விழாக்களிலும் கலந்து நிர்வாக ஏற்பாடுகள்(hospitality) கவனிக்கும் அதிகாரியாக இருந்தேன்.இன்னும் உயிர் வாழ்கிறேன்.தலைவர் எம்.ஜி.ஆர் அடிக்கல் நாட்டிய நாள் 15.4.1979. நெல்லை எஸ்.எஸ்.மணி


    நன்றி அண்ணன் நெல்ல எஸ்எஸ் மணி முகநூல்

  5. #794
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவர் பாரத் விருதை கைக்கூலிங்களை வைத்து வாங்கினார் என்று மாற்று திரியில் பதிவு போட்டிருக்கார்கள்.

    ஆனால், அவர்கள் நடிகருக்கு ஏன் கிடைக்கலை என்ற காரணத்தை அவர்கள் திரியிலேயே அந்தப் பதிவை போட்டவரே சொல்லிருக்கார். அவரோட ஓவர் ஆக்டிங்தான் காரணம் என்று அவர்கள் திரியிலேயே சொல்கிறார்கள். பிராணர்கள்தான் அந்த நடிகருக்கு பாரத் விருது கிடைக்காமல் தடுத்து விட்டர்கள் என்று சொல்கிறார்கள்.

    ஓவர் ஆகடிங் நடிப்பவருக்கு எவன் பரிசு கொடுப்பான். என்னமோ கெய்ரோ காரன் காக்கா வலிப்பு வந்த மாதிரி அந்த ஆளு நடிக்கிறாரே என்று பாவப்பட்டு பரிசு கொடுத்தான்.

    பாரத் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் அவர்கள் நடிகரின் நடிப்ப பார்த்து விட்டு இங்கீலீஸ்சில் வெஞ்சாராம். (அது என்ன வார்த்த என்று எனக்கு புரியவில்லை. தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள்) அவர்கள் திரியிலேயே வெக்கமில்லாமல் அதை போட்டிருக்கார்கள். ஓவர் ஆக்டிங்கால் பிறாமணர்களால் அவர்கள் நடிகருக்கு பாரத் விருது கிடைக்கவில்லை என்ற உண்மையான காரணத்தை எல்லாருக்கும் சொன்ன மாற்றுத்திரியில் பதிவு போட்டவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

    மாற்று திரி பாகம் 19 பக்கம் 102-ல் வந்த்த பதிவு
    -----

    ‎Ramiah Narayanan‎

    தெய்வமகன் !

    சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
    தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.

    தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.

    ------------------------------

    உண்மையை ஒப்புக் கொண்டு மாற்றுத் திரியில் பதிவு போட்டவருக்கு நன்றி நன்றி நனறி

  6. #795
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் நெல்லை எஸ்.எஸ்.மணி அவர்கள் மக்கள் திலகத்தின் நடிப்பு இயற்கையானது என்று விளக்கும் வகையில் எதார்த்தமாக முகபாவம் காட்டுவார் என்றும் சிவாஜி கணேசனின் நடிப்பு மிகையாக இருக்கும் என்ற பொருளிலும் இன்று ஒரு பதிவில் கூறியிருப்பது மிகச் சரி. இது உலகிற்கே தெரிந்த உண்மை.

    மக்கள் திலகத்தின் நடிப்பு இயற்கையானது. அதனால்தான் இந்தியாவின் இயற்கை நடிகர் என்று ஆஸ்திரேலிய இயக்குநர் ஜான் மெக்கலம் பாராட்டினார். ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ என்று மக்கள் திலகத்துடன் கூட்டுத் தயாரிப்பாக அவர் படம் எடுப்பதாக இருந்தது. அரசியலில் தலைவர் தீவிரமாகிவிட்டதால் அந்த முயற்சி நிறைவேறவில்லை.
    சிவாஜி கணேசனின் மிகை நடிப்பை அன்று அவரது ரசிகர்கள் சிலர் ரசித்திருக்கலாம். ஆனால், இன்று இளையதலைமுறையினர் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாத அவரது ஓவர் ஆக்டிங்கை பார்த்து சிரிக்கின்றனர். சிவாஜி கணேசனின் மிகை நடிப்பால்தான் ‘உனக்காக நான்’ படம் ஓடவில்லை என்று அந்தப் படத்தில் நடித்திருந்த ஜெமினி கணேசன் குமுதம் பேட்டியில் அந்தக் காலத்தில் கூறினார்.

    ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக மக்கள் திலகத்துக்கு இந்திய அரசு பாரத் விருது கொடுத்தது. இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியார் செளந்தரா கைலாசம் மட்டுமல்ல, கண்ணதாசனின் அண்ணன் படத்தயாரிப்பாளர் ஏஎல். சீனிவாசனுக்கும் பங்கு உண்டு. இவர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தார். செளந்தரா கைலாசம் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று அப்போது மதிஒளி பத்திரிகையில் வந்த செய்தியை முகநூலில் பதிவு போட்டு சில அறிவிலிகள் ‘வாங்கிய பட்டம்’ என்று சொல்கின்றனர். மதிஒளி பத்திரிகை சிவாஜி கணேசன் ஆதரவு பத்திரிகை. சண்முகம் என்பவர் அதை நடத்தி வந்தார். மேலும், தமிழர்கள் என்ற முறையில் செளந்தரா கைலாசமும் ஏ.எல்.சீனிவாசனும் மக்கள் திலகத்துக்கு ஆதரவு தேடியதில் என்ன தவறு?

    இதே சிவாஜி கணேசன் பின்னர், தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டபோது, அதற்காக தேர்வுக்குழுவில் இயக்குநர் கே.பாலச்சந்தர் வாதாடினார். பிறகு தன்னை பார்க்க வந்த பாலச்சந்தரை பார்த்து சிவாஜி கணேசன் ‘தேங்க்ஸ் பாலு’ என்றாராம். இதை எல்லாம் வக்கனையாக சொல்பவர்கள் மக்கள் திலகத்துக்கு பாரத் பட்டம் கிடைத்ததை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். பொறாமை பிடித்தவர்கள். சிவாஜி கணேசனுக்காக பாலச்சந்தர் வாதாடும்போது மக்கள் திலகத்துக்காக செளந்தரா கைலாசமும் ஏஎல் சீனிவாசனும் வாதாடுவதில் என்ன தவறு?

    1971-ம் ஆண்டுதான் சிவாஜி கணேசனுக்கு பாரத் விருது கிடைக்கவில்லை. அதற்கு பிறகு எத்தனை ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தார். ஏன் ஒரு படத்துக்கு கூட கிடைக்கவில்லை. எந்த தலையீடும் இல்லாமல் கமல்ஹாசன் இரண்டு முறை இந்தியாவின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்படும்போது சிவாஜி கணேசனுக்கு ஏன் கிடைக்கவில்லை? புரட்சித் தலைவரா தடுத்தார்?

    விருது கிடைக்காததற்கு சிவாஜி கணேசனின் மிகை நடிப்புதான் காரணம். தேவர் மகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதுதான் (Best supporting actor) சிவாஜி கணேசனுக்கு கிடைத்தது. அதுவும் கமலஹாசன் புண்ணியம் கட்டிக் கொண்டார். கடைசியில் சிவாஜி கணேசன் துணை நடிகரானதுதான் மிச்சம்.

    எங்க வீட்டுப் பிள்ளை ஒரு படம் போதும். மக்கள் திலகத்தின் எதார்த்தமான, வித்தியாசமான நடிப்பை நடிப்பு கல்லூரியில் பாடமாகவே வைக்கலாம். ராமுவாக வரும் மக்கள் திலகத்திடம் எப்போதும் கண்களில் ஒரு பயம் இருக்கும். இளங்கோவாக வரும் மக்கள் திலகத்திடம் பார்வையில் ஒரு அலட்சியமும் வீரமும் குறும்பும் மகிழ்ச்சியும் பொங்கும். நான் ஆணையிட்டால் பாடலில் தரையில் சுழன்று ஒரு கையை தரையில் ஊன்றி இன்னொரு கையை மேலே உயர்த்தி கொடுப்பாரே ஒரு போஸ். அவரைத் தவிர எந்த நடிகனுக்கும் அந்த போஸ் வராது.
    அந்த ஸ்டில் இணைத்துள்ளேன். இரண்டு வேடங்களின் ஸ்டில்களையும் இணைத்துள்ளேன். நீங்களே பாருங்கள். பார்வையிலேயே குணாதிசயத்தை காட்டி இருப்பார். அந்தப் படத்துக்கே அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கலாம். 1965-ல் அகில இந்திய விருது ஏற்படுத்தப்படவில்லை. 1967-ல்தான் விருது ஏற்படுத்தப்பட்டது.

    அதோடு, தமிழில் முதல் முதலில் 7 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீட்டுப் பிள்ளைதான். பின்னர், 14 வருடம் கழித்து சிவாஜி கணேசனின் திரிசூலம் படத்தை ஒரு தியேட்டரிலாவது கூடுதலாக ஓட்ட வேண்டும் என்று 8 தியேட்டர்களில் ஓட்டினார்கள்.

    அதிலும் சென்னை சாந்தி தியேட்டர் சிவாஜி கணேசனின் சொந்த தியேட்டர். சென்னையில் கிரவுன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்கள் அவரது குடும்பம் குத்தகைக்கு எடுத்தவை. திருச்சி பிரபாத் தியேட்டர் உரிமையாளர் பெரியண்ண பிள்ளை, சிவாஜி கணேசனின் பினாமி. சிவாஜி கணேசனை வைத்து படம் கூட எடுத்திருக்கிறார். இதுதான் திரிசூலம் வெள்ளிவிழா ஓட்டப்பட்ட சாதனை. அதிலும் ஷிப்டிங்கில் ஓடிய 3 தியேட்டரையும் சேர்த்து 11 தியேட்டரில் வெள்ளி விழா என்று இன்னமும் புளுகி வருகின்றனர்.

    காலத்தை வென்று நிற்கும் இயற்கை நடிப்புக்கு சொந்தக்காரர் மக்கள் திலகம். அதனால்தான் இன்றும் அவரது படங்கள் இளைய தலைமுறையினராலும் ரசிக்கப்படுகின்றன. மெர்சல் படத்தில் டீசர் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் விஜய் எம்ஜிஆர் ரசிகராக நடிக்கிறார். டீசரில் இரண்டு இடங்களில் புரட்சித் தலைவர் படம் இடம் பெறுகிறது. இதிலிருந்தே மக்கள் திலகத்துக்கு இளைஞர்களிடம் இருக்கும் மவுசை தெரிந்து கொள்ளலாம்.

    கொசுறு: சிவாஜி கணேசன் சிலை சென்னையில் எடுக்கப்பட்டதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழும், எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக அழியும் என்று சிவாஜி கணேசன் ரசிகர்கள் முகநூலில் சாபம் கொடுத்தார்கள். ஆனால், நிஜமாகவே இப்போது அரசு கவிழும்போல இருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி கணேசன் மணி மண்டபத்தை முதல்வர் எடப்பாடி திறக்கிறாராம்.
    உஷாரய்யா, உஷாரு… சிவாஜி கணேசன் ராசி உஷாரு…


    நன்றி; பால சுப்பிரமணியன் முகநூல் பதிவு

    குறிப்பு: இந்த பதிவு முகநூலில் செப்டம்பர் 26ம் தேதி போட்டிருக்கிறது. அதனால்தான் மணி மண்டபத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறாராம் என்று இருக்கின்றது. அப்பறம் மாற்றங்கள் ஏற்பட்டு பன்னீர்ச் செல்வம் திறந்திருக்கார். ஒருவேளை அவர்கள் நடிகரின் ராசிக்கு பயந்துதான் மணி மண்டபத்த எடப்பாடி திறக்கவில்லை என்று தெரிகிறது.

  7. #796
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    மாற்றுத் திரி பதிவு போடுபவர்கள் இனிமேலும் புரட்சித் தலைவரை பற்றி அவதூறு பதிவுகள் இட்டு சீண்டிக் கொண்டார்கள் என்றால் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

    நாடகம், நடிப்பு, சினமா, அரசியல் அனைத்திலும் ஒழுக்கமாக இருந்தவர் என்ற சிக்நேச்சரில் கீழே போட்டு பீத்திக் கொள்கிறார்களே அந்தக் கதை எல்லாம் வெளியே வரும்.

    புரட்சித் தலைவர் ஒழுக்கத்தை நீங்க சொல்வது பற்றி கவலை இல்லை. புதிதாக என்ன இருக்கிறது. வி.என். ஜானகி, ஜெயலலிதா பறறி சொல்வீரகள். இதில் மறைக்க ஒன்றும் இல்லை. ஆனால் உங்க நடிகர் யோக்கியன் என்ற சொல்கிறீர்களே/ வெக்கமாக இல்லியா?

    பிரபு மீதான துப்பாக்கிச ்சூடு கதை எல்லாம் வெளியே வரும். இதோடு நிறுத்திக் கொள்ளளுங்கள் உத்தம சிகாமணிங்கேளே.

  8. #797
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமை மக்கள் திலகம் புகழ் பாடும் அருமை சகோதரர் திரு மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... அந்த நடிகருக்கு இந்த அளவுக்கு நடந்ததே அதிகம் என சிலர் பேசுவது அந்த ரசிகர்கள் உணர வில்லை என்பதை உளறி கொட்டி அம்பல படுத்துகின்றனர்... சபாஷ் சாஹிப்...

  9. #798
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் ஏக சக்ரவர்த்தியாக திரை உலகில் மட்டுமன்றி அரசியல் உலகிலும் அவ்வாறே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பேரற்புத நாயகனை யாரும், எவரும் அவ்வளவு எளிதில் தப்பு கணக்கு, தவறாக எடையும் தயவுசெய்து ஒப்பிட்டு பார்த்து முகமும், மண்டையும் நொறுங்கி விட வேண்டாம் என பாசத்துடன் கேட்டு கொள்கிறோம்...

  10. #799
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமக்கு நம் நல்லவர் மக்கள் திலகம் புகழை சுவாசித்தல் ஒன்றே போதுமானது, ஆனால் மற்ற சிஹா மணிகள் நம் பெருமானோடு ஒப்பிட்டு அவர்கள் நடிகரை நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமானது என அறிய மாட்டார்கள், இப்போது அந்த கும்பலுக்கு செய்தது இதயக் கனியின் அரசே என்பதை உணர்ந்து உள்ளனரா?

  11. #800
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    அருமை மக்கள் திலகம் புகழ் பாடும் அருமை சகோதரர் திரு மஸ்தான் சாஹிப் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்... அந்த நடிகருக்கு இந்த அளவுக்கு நடந்ததே அதிகம் என சிலர் பேசுவது அந்த ரசிகர்கள் உணர வில்லை என்பதை உளறி கொட்டி அம்பல படுத்துகின்றனர்... சபாஷ் சாஹிப்...
    பாராட்டுகள்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •