Page 347 of 401 FirstFirst ... 247297337345346347348349357397 ... LastLast
Results 3,461 to 3,470 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3461
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நமது
    பாசத்துக்குரிய
    நண்பரும்
    நமது
    திரியின்
    ஆஸ்தான
    பதிவாளருமான
    திரு லோகநாதன்
    அவர்களின்
    அன்பு
    மகன்
    k l சந்தோஷ்
    அவர்களின்
    திருமண
    வரவேற்பு
    இன்று
    சென்னையில்
    நடைபெற்றது
    மக்கள்
    திலகத்தின்
    ஏராளமான
    பக்தர்கள்
    கலந்து
    கொண்டு
    மணமக்களை
    வாழ்த்தினர்.
    எனக்கு
    அழைப்பிதழ்
    அனுப்பி
    அலைபேசியில்
    பேசினார்.
    எனது
    நெருங்கிய
    உறவினர்
    இல்ல
    திருமண
    விழா
    பொள்ளாச்சியில்
    நடைபெற்றது.
    அதில்
    கலந்து
    கொள்ளவேண்டியிருந்ததால்
    சென்னை
    செல்லவில்லை.
    மணமக்கள்
    மக்கள்
    திலகத்தின்
    நல்லாசியோடு
    வாழ்க
    பல்லாண்டு
    என
    வாழ்த்தி
    மகிழும்

    - எஸ் ரவிச்சந்திரன்
    திருப்பூர்
    Last edited by ravichandrran; 27th February 2018 at 12:13 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3462
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3463
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் போட்டி என்றால் மிகவும் பிடிக்கும்...
    போட்டி என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவார். நிஜமான போட்டிகளில் மட்டுமல்ல; விளையாட்டுக்காக நடந்த போட்டிகளில் கூட அவர் தோற்றது இல்லை.

    படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஓய்வாக இருக்கும்போது, பொழுது போக்குக்காக நண்பர்களுடன் எம்.ஜி.ஆர். சீட்டு விளையாடுவார். பணம் வைத்து விளையாடும் பழக்கம் கிடையாது. விளையாட்டில் தோற்றுப் போனவர்கள் தனது தலைக்கு மேல் தலையணையை வைத்துக் கொண்டு ‘‘நான் தோத்து போயிட்டேன், நான் தோத்து போயிட்டேன்’’ என்று சொல்ல வேண்டும். இந்த விளையாட்டு அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடும்.

    ‘உரிமைக்குரல்’ படத்தின் சில காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டன. ‘மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை…’ என்ற பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை நடிகை லதாவும் அவரது தோழிகளும் கிண்டல் செய்து பாடுவது போல காட்சி. இந்தப் பாடலில் கடைசியில் இரண்டு வரிகள் மட்டும் கோவை சவுந்தரராஜன் பாடியிருப்பார். எம்.ஜி.ஆருக்காக அவர் குரல் கொடுத்த ஒரே பாடல் இது. படத்தின் நடன இயக்குனர் சலீம். அவரது உதவியாளர்தான் புலியூர் சரோஜா.பாடல் காட்சி அருமையாகப் படமாக்கப்பட்டது..!

    பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும், நடனக் கலைஞர்களை பாராட்டி அவர்களுக்கு விருந்தளிக்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். தங்களை எம்.ஜி.ஆர். கவுரவிக்கிறார் என்பதால் நடனக் கலைஞர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். சொன்னபடி, நடனக் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்போது, குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் திடீரென ஒரு போட்டியை அறிவித்து அவர்களுக்கு சவாலும் விடுத்தார்.

    ‘‘எல்லோரும் முடிந்த வரையில் பாயசம் குடியுங்கள். யார் அதிகம் குடிக்கிறார்களோ அவர்களை விட ஒரு கப் பாயசம் நான் கூடுதலாக குடிக்கிறேன்’’ என்று சவால் விட்டார். பலர் ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் மட்டும் அதை ஏற்றுக் கொண்டு மளமளவென பாயசத்தைக் குடிக்கத் தொடங்கினர். ஐந்தாறு கப் குடிப்பதற்குள்ளேயே சிலர் கழன்று கொண்டனர். எட்டாவது கப் குடித்துவிட்டு ஒருவர் பின்வாங்கினார்.

    ஒருவர் மட்டும் தாக்குப் பிடித்தார். எம்.ஜி.ஆரும் சளைக்காமல் அவருக்கு போட்டியாக தானும் பாயசத்தை குடித்துக் கொண்டே வந்தார். விளையாட்டாக நடக்கும் இந்தப் போட்டியை படத்தின் இயக்குநர் ஸ்ரீதரும் மற்றவர்களும் ரசித்தனர். போட்டியின் வேகம் அதிகரித்தபோது, ஒரு கட்டத்தில் ஸ்ரீதருக்கு பயம் வந்து விட்டது.

    ‘எம்.ஜி.ஆர். அளவுக்கு அதிகமாக பாயசத்தைக் குடித்துவிட்டு வயிற்றுப் பிரச்சினை ஏற்பட்டால் என்னாவது..?
    அவரது உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, படப்பிடிப்பும் பாதிக்கப்படுமே..?’ என்று ஸ்ரீதர் கவலை அடைந்தார். பயமும் கவலையும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டன. எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அண்ணே, அதிகம் சாப்பிடாதீங்க. உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது’’ என்று கூறி தடுக்கப் பார்த்தார். எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘போட்டி என்று வந்து விட்டால் விளையாட்டாக இருந்தாலும் போட்டிதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.

    போட்டியில் தாக்குப் பிடித்த ஒருவர் கடைசியாக 12-வது கப் பாயசத்தைக் குடித்துவிட்டு இனி ஒரு துளி கூட உள்ளே இறங்காது என்று சொல்லி எழுந்துவிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர். ‘‘13-வது கப்’’ என்று கூறி உயர்த்திக் காட்டி மடமடவென்று குடித்து விட்டார். பின்னர், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக சிறு குழந்தை போல கட்டை விரலை உயர்த்தி சைகை காட்டி கூடியிருந்தவர்களைப் பார்த்து பூவாய் புன்னகைத்தார். சுற்றி இருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

    இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கக் கூடாதே என்ற கவலையால், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாயசம் கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் ஸ்ரீதர் ஜாடை காண்பித்தார். எம்.ஜி.ஆருக்கு கொடுக்கும் கப்பில் முழுதாக பாயசம் ஊற்றாமல் முக்கால் கப் மட்டும் ஊற்றிக் கொடுக்கும்படி சைகையால் சொன்னார். எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து எதுவும் தப்புமா? இதை கவனித்துவிட்டார். பாயசம் கொடுப்பவரிடம் ‘‘முழுதாக ஊற்றிக் கொடு’’ என்று அதட்டலாக சொன்னார். எம்.ஜி.ஆரின் நேர்மை உணர்வு ஸ்ரீதரை நெகிழ வைத்தது...!!! நண்பர் விஜய்.....

  5. #3464
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் திரை காவியங்கள் திறனாய்வு கழகம் சார்பில் கடந்த 25-02-2018 அன்று திரையிட்ட எப்போதும் பிரகாசிக்கும் "மலை கள்ளன்" அறிவிப்பு வெளியிட்ட சில மணிகளிலேயே நிறைய தோழர்கள் மலரும் நினைவுகளோடு கண்டு பூரித்து, அளவுளாவி இருந்திருக்கின்றனர், தொடரட்டும் இந்த சேவைகள்...

  6. #3465
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம், தான் தான் வசூலிலும் திலகம் என்பதை மீண்டும் சாதித்திருக்கிறார்கள், மதுரை மாநகரில் சென்ட்ரல் அரங்கில் 3 நாட்களில் ரூபாய் ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது "எங்க வீட்டுப் பிள்ளை" என நண்பர்கள் இனிய தகவல் கூறுவது மிக்க மகிழ்ச்சி...

  7. #3466
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையம்பதியில் கடந்த வாரத்திற்கு முன் சென்ட்ரல் அரங்கில் "நேற்று இன்று நாளை" புரட்சி காவியம் ரூபாய் 122000.00 வசூலை அள்ளி குவித்திருக்கிறது மக்கள் திலகம் காவியங்களே சரித்திரம் படைத்து கொண்டேயிருக்கிறது என்ற மன மகிழ்ச்சியும் நம்மை ஆட்கொள்கிறது தோழர்களே...எந்த நடிகர் படங்களும் நினைத்து பார்க்க முடியாது👍👌

  8. #3467
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன் மன செம்மலின் பக்தர் திரு லோகநாதன் அவர்களின் புதல்வர் சந்தோஷ் புது மண தம்பதியருக்கு நமது திரி உறுப்பினர்கள் சார்பாகவும், மக்கள் திலகம் ஆசிர்வாதமும் பெற்று மணமக்கள் "இன்று போல் என்றும் வாழ்க", "பல்லாண்டு வாழ்க" என வாழ்த்துவோம்...

  9. #3468
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் ரஜினிகாந்தின் முதல் அரசியல் கூட்டம் வரும் 5ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அப்போது எம்.ஜி.ஆரின் வெண்கல திருவுருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

    அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், முதல் முறையாக அரசியல் மேடையேற உள்ளார். சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலை கழக வளாகத்தில் வரும் 5ம் தேதி எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.


    எம்.ஜி.ஆர் சிலை ஏ.சி.சண்முகம். அவருடைய பல்கலை கழகத்தில் நடைபெறும் இந்த விழாவில் மொரிஷியஸ் துணை ஜனாதிபதி கலந்து கொள்கிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் எம்ஜிஆருடன் நடித்த நடிகைகளும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதால், ரஜினிக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்பது குறித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ரஜினி, அரசியல் தொடர்பான முக்கியமானbb விஷயங்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது... தகவல் உதவி மக்கள் திலகம் பக்தர் திரு esvee சார்...

  10. #3469
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருநெல்வேலி - ரத்னா நாளை முதல் புரட்சி தலைவரின் "எங்க வீட்டுப் பிள்ளை" மற்றும் தூத்துக்குடி- ராஜ்,

    நாகர்கோயில் -கார்திகேயன் , தென்காசி- பத்மம் ஆகிய dts அரங்குகளில் வெளியாகிறது & மதுரை- அரவிந்த் dts...

  11. #3470
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருநெல்வேலி - ரத்னா நாளை முதல் புரட்சி தலைவரின் "எங்க வீட்டுப் பிள்ளை" மற்றும் தூத்துக்குடி- ராஜ்,

    நாகர்கோயில் -கார்திகேயன் , தென்காசி- பத்மம் ஆகிய dts அரங்குகளில் வெளியாகிறது & மதுரை- அரவிந்த் dts...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •