Page 342 of 401 FirstFirst ... 242292332340341342343344352392 ... LastLast
Results 3,411 to 3,420 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3411
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    ஆவணத்தை வெளியிட்டதற்கு நன்றி.

    சென்னையில் 3 அரங்கில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் எங்க வீட்டுப் பிள்ளை.

    காசினோ, பிராட்வே, மேகலா தியேட்டர்களில் வெள்ளி விழா.

    ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பார்த்தால் 1965-ல் அதிக வசூல் செய்த படம் எங்க வீட்டுப் பிள்ளை. மொத்தம் 7 தியேட்டர்களில் வெள்ளி விழா.

    தஞ்சாவூரில் முதல் முதலில் வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீ்ட்டுப் பிள்ளை. (யாகப்பா டாக்கீஸ்)

    கோயம்புத்தூரில் முதல் முதலில் வெள்ளி விழா கொண்டாடிய படம் எங்க வீட்டுப் பிள்ளைை (ராயல் டாக்கீஸ்) கோயம்புத்தூரில் முதல் முதலில் எங்க வீட்டுப் பிள்ளைதான் வெள்ளி விழா என்பதில் யாருக்காவது சந்தேகம் இருந்து விளக்கம் கேட்டால் சான்று தரப்படும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3412
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதித்தனாருக்கு மக்கள் திலகத்தை கண்டால் பிடிக்காது. அவருக்கு சொந்தமான தினத்தந்தி, மாலை முரசு பத்திரிகைகளில் மக்கள் திலகத்தின் பெயரை இருட்டு அடிப்பு செய்வார்.

    மக்கள் திலகத்தின் சந்திரோதயம் படத்தில் கூட பத்திரிகை முதலாளியாக வரும் எம்.ஆர்.ராதா பாத்திரம் ஆதித்தனாரை கிண்டல் செய்வது போல இருக்கும்.

    ஆதி்த்தனார் பத்திரிக்கைகள் ஆதரவும் இல்லை. மற்ற பெரும்பாலான பத்திரிக்கைகள் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களிடம் இருந்தது. அந்த குறி்ப்பிட்ட இனத்தவர்களுக்கு திராவிட இயக்கம் திமுக என்றாலே பிடிக்காது. காங்கிரசைத்தான் தூக்கி பிடிப்பார்கள். மக்கள் திலகம் திமுகவில் இருந்ததால் அந்த குறிப்பிட்ட மேல்மட்ட இனத்தைச் சேர்ந்த பத்திரிக்கை முதலாளிகளும் மக்கள் திலகத்தை ஆதரிக்க மாட்டார்கள்.

    இப்படி பத்திரிக்கை ஆதரவு இல்லாமல் மக்கள் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு திரைப்படத்துறையிலும் அரசியல் துறையிலும் மக்கள் திலகம் வெற்றி பெற்றார்.

    நன்றி கெட்ட ஆதித்தனாருக்கு 1971 தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மக்கள் திலகம் பிரசாரம் செய்து வெற்றி பெற வைத்தார். அதுவும் கொஞ்ச காலம்தான். மக்கள் திலகம் அதிமுகவை தொடங்கிய பின் மறுபடி அவரை தினத்தந்தி, மாலை முரசு பத்திரிக்கைகள் இருட்டு அடிப்பு செய்தன. பட விளம்பரத்தைக் கூட வெளியிட மறுத்தார்கள்.

    புரட்சித் தலைவர் ஆட்சி அமைத்ததும்தான் அவருக்கு ஆதரவாக செய்தி போட்டனர்.

    ஆனால், பழசை எல்லாம் மனசில் வைத்துக் கொள்ளாமல் சென்னையில் ஆதித்தனார் சிலை அமைக்க அனுமதி கொடுத்ததோடு அந்த சிலையையும் முதல்வர் புரட்சித் தலைவர் திறந்து வைத்தார். எழும்பூர் பக்கத்தில் அந்த ரோடுக்கு
    ஆதித்தனார் சாலை என்று பெயர் வைத்தார்.

    நன்றி கெட்ட உலகத்திடம் நன்றியை எதிர்பார்க்காதவராக புரட்சித் தலைவர் இருந்தார். எல்லாருக்கும் நல்லது செய்தார்.

  4. #3413
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" கோவை- ராயல் அரங்கில் ஒரு வாரதொடு வினியாஹஸ்தரால் நிறுத்த பட்டுள்ளது, அனால் வசூல் ரூபாய் 114000.00 சூப்பர் ஆக ஆகி இருக்கிறது, நியாயமாக இரண்டு வாரங்கள் ஓடி இருக்க வேண்டும்...

  5. #3414
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    உண்மையான ரசிகர்கள் - தொண்டர்கள் - பொதுமக்கள் ஆதரவு - எம்ஜிஆரின் வெற்றி மேல் வெற்றி .

    திரு மகாலிங்கம் சார்

    தினத்தந்தி பற்றிய தங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே .

    1967க்கு முன்பு தினத்தந்தி பத்திரிகை மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் விமர்சனத்தை எந்த அளவிற்கு மோசமாகவும் தரக்குறைவாகவும் எழுதியது என்பதை அன்றைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நன்கு அறிவார்கள் . 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தினத்தந்தியில் 1972 வரை எம்ஜிஆர் படங்களின் விளம்பரங்கள் செய்திகள் தொடர்ந்து இடம் பெற்றது .பின்னர் 1972-1977 வரை மீண்டும் தினத்தந்தியில் எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது .பின்னர் தினத்தந்தியின் வியாபார போக்கு நாடறிந்தது ,
    அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தினசரி பத்திரிகைகள் வார , மாத இதழ்களான
    தினத்தந்தி
    தினமணி
    நவமணி
    நவசக்தி
    சுதேசமித்திரன்
    ஹிந்து ஆங்கில பத்திரிகை
    பேசும்படம்
    குண்டூசி
    கலைப்பூங்கா
    அலைஓசை
    கல்கி
    ஆனந்த விகடன்
    குமுதம்
    மலைமுரசு பேப்பரில் எம்ஜிஆர் பற்றியும் எம்ஜிஆர் படங்களை பற்றியும் எதிர்மறையான தகவல்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது .ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களை பற்றி சிறிதும் கவலை படவில்லை . அதைபோல் அவருடைய ரசிகர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை .

    மாறாக யாரெல்லாம் எம்ஜிஆரை தாக்கினார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் தவறை உணர்ந்து எம்ஜிஆரை பற்றியும் அவரின் நடிப்பை பற்றியும் மனித நேயத்தை பற்றியும் , அவரின் ஆளுமைகளை பற்றியும் . எம்ஜிஆரின் திரை உலக சாதனைகள் பற்றியும் அரசியல் வெற்றிகள் பற்றியும் அனைவரும் எழுதிவருவது மூலம் எம்ஜிஆரின் பொறுமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி .என்பதை அறியலாம் .

    எம்ஜிஆர் தன்னை நம்பினார்
    தன்னுடைய ரசிகர்களை நம்பினார்
    தொண்டர்களை நம்பினார்
    மக்களை நம்பினார்
    விளைவு ?

    வெற்றி மேல் வெற்றி கண்டார் .
    கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
    Last edited by esvee; 11th February 2018 at 11:12 AM.

  6. #3415
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தேர்தலில் தோல்வி பெற்றால் கருணாநிதி மக்களை கேவலமாக திட்டுவார் .
    அப்படியும் சமாதானம் இல்லை என்றால் மக்களுக்கு சாபம் இடுவார் .
    அரசியலில் ஜொலிக்காதவர்கள் மக்கள் மீது காரி உமிழ்ந்து தங்களையே அசிங்கப்படுத்தி கொள்வார்கள் .
    ஆனால் மக்கள் மிகவும் திறமைசாலிகள் .
    யாரை எங்கே எப்படி வைப்பது என்று தெளிவாக தீர்ப்பு வழங்கி சொல்லிவிடுவார்கள் .

  7. #3416
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1977 அருப்புக்கோட்டை --------------- எம்ஜிஆரை தமிழக கோட்டைக்கு அழைத்து சென்றது.

    1980 மதுரை மேற்கு --------------- மீண்டும் எம்ஜிஆரை தமிழக கோட்டைக்கு அழைத்து சென்றது.

    1984 ஆண்டிபட்டி ---------------- மூன்றாவது முறை எம்ஜிஆரை தமிழக கோட்டைக்கு அழைத்து சென்றது.

  8. #3417
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சாத்தியமான வரிகள்
    சத்தியமான வார்த்தைகள்
    சரித்திரத்தில் இடம் பெற்றவை
    கற்பனை கோட்டை இல்லை
    கனவை நினைவாக்கியவரின் கோட்டை



    மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
    உனக்கு மாலைகள் விழவேண்டும் -
    ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்


    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்

    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
    பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

    தவழும் நிலவாம் தங்கரதம்
    தாரகை பதித்த மணிமகுடம்
    குயில்கள் பாடும் கலைக்கூடம்
    கொண்டது எனது அரசாங்கம்

    ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
    பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
    ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
    பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
    ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
    அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு


    ஒரு சம்பவம் என்பது நேற்று -
    நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
    இன்று அது சாதனை ஆவது நாளை -
    நாளை வரும் சோதனைதான் இடை வேளை

    புதிய சூரியன் உன் வரவு
    இந்த உலகம் யாவுமே உன் உறவு
    புதிய சூரியன் உன் வரவு
    இந்த உலகம் யாவுமே உன் உறவு
    எதையும் தாங்கிடும் நிலை பெறவே
    எங்கள் இதய பூமியில் ஒளி தரவே

    பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே
    பெருமையுடன் வருக*
    உன் திருவடித் தாமரை தொடங்கிய பாதையில்
    தேசம் நன்மை பெருக !

    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
    கையும் காலுந்தானே மிச்சம்
    நானே போடப்போறேன் சட்டம்
    பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்
    நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்

    வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
    சட்டம் ஆகணும் தம்பி
    வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
    பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
    சட்டம் ஆகணும் தம்பி
    நல்ல சமத்துவம் உண்டாகணும்
    அதிலே மகத்துவம் உண்டாகணும்
    நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
    படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
    படிப்பினை தந்தாகணும்

    நினைத்ததை நடத்தியே --
    முடிப்பவன் நான் ! நான் ! நான் !
    துணிச்சலை மனத்திலே
    வளர்த்தவன் நான் ! நான் !
    என்னிடம் மயக்கம் கொண்டவர் பழக்கம்
    இன்றும் என்றும் தேவை என்று சொல்லடி தங்கம் !!

    அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
    ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
    நல்லவர் என்றும் கெடுவதில்லை-
    இது நான்குமறை தீர்ப்பு,..
    வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
    இது நான்குமறை தீர்ப்பு

  9. #3418
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post

    உண்மையான ரசிகர்கள் - தொண்டர்கள் - பொதுமக்கள் ஆதரவு - எம்ஜிஆரின் வெற்றி மேல் வெற்றி .

    திரு மகாலிங்கம் சார்

    தினத்தந்தி பற்றிய தங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே .

    1967க்கு முன்பு தினத்தந்தி பத்திரிகை மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களின் விமர்சனத்தை எந்த அளவிற்கு மோசமாகவும் தரக்குறைவாகவும் எழுதியது என்பதை அன்றைய மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நன்கு அறிவார்கள் . 1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தினத்தந்தியில் 1972 வரை எம்ஜிஆர் படங்களின் விளம்பரங்கள் செய்திகள் தொடர்ந்து இடம் பெற்றது .பின்னர் 1972-1977 வரை மீண்டும் தினத்தந்தியில் எம்ஜிஆர் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது .பின்னர் தினத்தந்தியின் வியாபார போக்கு நாடறிந்தது ,
    அன்றைய காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தினசரி பத்திரிகைகள் வார , மாத இதழ்களான
    தினத்தந்தி
    தினமணி
    நவமணி
    நவசக்தி
    சுதேசமித்திரன்
    ஹிந்து ஆங்கில பத்திரிகை
    பேசும்படம்
    குண்டூசி
    கலைப்பூங்கா
    அலைஓசை
    கல்கி
    ஆனந்த விகடன்
    குமுதம்
    மலைமுரசு பேப்பரில் எம்ஜிஆர் பற்றியும் எம்ஜிஆர் படங்களை பற்றியும் எதிர்மறையான தகவல்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது .ஆனால் மக்கள் திலகம் எம்ஜிஆர் இவர்களை பற்றி சிறிதும் கவலை படவில்லை . அதைபோல் அவருடைய ரசிகர்களும் இவர்களை கண்டு கொள்ளவில்லை .

    மாறாக யாரெல்லாம் எம்ஜிஆரை தாக்கினார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் தவறை உணர்ந்து எம்ஜிஆரை பற்றியும் அவரின் நடிப்பை பற்றியும் மனித நேயத்தை பற்றியும் , அவரின் ஆளுமைகளை பற்றியும் . எம்ஜிஆரின் திரை உலக சாதனைகள் பற்றியும் அரசியல் வெற்றிகள் பற்றியும் அனைவரும் எழுதிவருவது மூலம் எம்ஜிஆரின் பொறுமைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி .என்பதை அறியலாம் .

    எம்ஜிஆர் தன்னை நம்பினார்
    தன்னுடைய ரசிகர்களை நம்பினார்
    தொண்டர்களை நம்பினார்
    மக்களை நம்பினார்
    விளைவு ?

    வெற்றி மேல் வெற்றி கண்டார் .
    கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
    உண்மை. பத்திரிக்கை பலத்தால் புரட்சித் தலைவர் வளரவில்லை. பெரிய நிறுவன பத்திரிக்கைகள், உயர்மட்ட இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் நடத்திய பத்திரிக்கைகள், அதிகமாக விற்பனை ஆன பத்திரிக்கைகள் எல்லாம் புரட்சித் தலைவருக்கு எதிராகவே எழுதின.

    மக்கள் திலகத்தின் பட விமர்சனங்களிலும் படத்தையும் அவரையும் கிண்டல் செய்தே எழுதினார்கள்.

    அதை எல்லாம் பற்றி கவலைப்படாமல் எதிர் நீச்சல் போட்டு, படங்களில் நடித்தும் மக்களுக்கு உதவிகள் செய்தும் அதன் மூலம் கிடைத்த மக்கள் செல்வாக்கால் புரட்சித் தலைவர் வளர்ந்தார்.

    நன்றி ஐயா.

  10. #3419
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் மக்கள் திலகத்தின் புகழ் மறையாது.

    தமிழ் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்கள் மட்டுமல்லாது வட இந்திய நடிகர்களும் மக்கள் திலகத்தின் பெருமையை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கால இந்தி நடிகர்கள் மட்டுமல்லாது இந்தக் காலத்து பிரபல இந்தி நடிகர்கள் கூட மக்கள் திலகத்தின் ரசிகர்களாகவும் அபிமானிகளாகவும் இருக்கிறார்கள். இது மக்கள் திலகத்தின் ரசிகர்களான நாம் எல்லாரும் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்பட வேண்டிய விடயம்.


    பிப்ரவரி 6-ம் தேதி (6-2-2018) வெளியான தினத்தந்தி பேப்பரில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கின் பேட்டி வெளியாகி உள்ளது. இவர் இந்தியில் பிரபலமான நடிகராக இருக்கிறார். இப்போது பல மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடும் பத்மாவத் படத்தில் நடித்து இருக்கிறார்.

    ரன்வீர் சிங்கின் பேட்டி..



    ரன்வீர் சிங் போல இப்பத்திய நடிகர்களின் நடை,உடை, பாவனை எல்லாம் அப்பவே ஸ்டைல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் செய்து அசத்தி விட்டார்.

    மக்கள் திலகத்தைப் போற்றி பின்பற்றும் ரன்வீர் சிங்குக்கு நன்றி.

    இருந்தாலும் அவர் ஸ்டைலும் அழகும் உனக்கு மட்டுமல்லாமல் யாருக்குமே வராதுப்பா ரன்வீர் சிங்.

    மக்கள் திலகம் தனது தொப்பியின் வலது பக்கம் லேசாக மடக்கி விட்டிருக்கும் அழகு ஒன்று போதும்.


  11. #3420
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இரங்கல் செய்தி
    -----------------------
    மக்கள்.திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரும் பக்தருமான திரு.மோகன்குமார் (வழக்கறிஞர் ) அவர்களின் அன்பு தந்தையார் திரு.எஸ்.மணி செட்டியார்
    (வயது 82) அவர்கள் உடல் நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில்
    அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி இன்று இரவு மரணமடைந்தார் என்பதை
    மிகுந்த துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

    அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள்
    புரியட்டும் .

    தனது தந்தையை இழந்து வாடும் திரு.மோகன்குமார் மற்றும் அவரது
    குடும்பத்தினருக்கும் என் சார்பாகவும்,அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள்
    சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

    இரங்கல் செய்தி அனுப்ப விரும்பும் நண்பர்கள் / பார்வையாளர்கள் 9841575552
    -மோகன்குமார் என்கிற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும் .
    திரு.மோகன்குமார் (வழக்கறிஞர் ) அவர்களின் தந்தையாரின் பூத உடல் இன்று மாலை (13/02/2018) 5 மணி அளவில் சென்னை ஜார்ஜ் டவுன் , சண்முகராயன்
    தெருவில் இருந்து (ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் ) ஊர்வலமாக
    எடுத்து செல்லப்பட்டு மூலக்கொத்தளம் மயானத்தில் இறுதி அஞ்சலிக்கு பின்னர் எரியூட்டப்படும்

    ஆர். லோகநாதன்,
    இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
    Last edited by puratchi nadigar mgr; 13th February 2018 at 03:08 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •