Page 333 of 401 FirstFirst ... 233283323331332333334335343383 ... LastLast
Results 3,321 to 3,330 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3321
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Flash back 1981


    எம்.ஜி.ஆர்., நடத்திய ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு, மதுரையில், 1981ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தலைமையில், கவர்னர் சாதிக் அலி தொடங்கி வைத்தார். இந்த மாநாடு யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் கொண்டாடப்பட்டது. இதற்கு தமிழக அரசும் நிதியுதவி வழங்கியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.மாநாட்டுக்காக மதுரை நகர் முழுவதும் அலங்கார வளைவுகளும், தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலைகளும் நிறுவப்பட்டன. மதுரை நகரில் புகும் பகுதியிலேயே, கம்பீர நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. நகர் முழுவதும் அமைக்கப்பட்ட தோரண வளைவுகளுக்கு மட்டும் ஏழு லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. மதுரை மேலூர் சாலையில் அமைக்கப்பட்ட நக்கீரர் தோரண வாயிலை சத்தியவாணி முத்து திறந்து வைத்தார். மதுரை தமிழ்ச்சங்க தலைவர் டி.வி.எம்.பெரியசாமி இதற்கு தலைமை தாங்கினார். சேரன் நுழைவு வாயிலை நெடுஞ்செழியன் முன்னிலையில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு சர் முத்தையா செட்டியார் தலைமை வகித்தார். சோழன் நுழைவு வாயில் திறப்பு விழாவுக்கு தமிழக முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். மாநகராட்சி கட்டடங்கள், விருந்தினர் மாளிகைகள் புதுப்பொலிவு பெற்றன. சில விருந்தினர் மாளிகைகள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டன.


    நகரில் நடமாடிய பிச்சைக்காரர்கள், பிச்சைக்காரர்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர். உலகம் முழுவதிலும் இருந்து வந்த 600க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் பங்கேற்றனர். இலங்கை, மலேசியா நாடுகளில் இருந்து மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், செனகல், இந்தோனேசியா, மொரிஷியஸ், மேற்கு ஜெர்மனி, ஸ்வீடன், செக்கோஸ்லோவாகியா, நெதர்லாந்து, நேபாளம், பின்லாந்து, பிஜி தீவுகளில் இருந்தும் மாநாட்டில் பங்கேற்க பிரதிநிதிகள் வந்தனர். வெளிநாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகளை, தமிழக செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.மகாராஜன் ஆகியோர் வரவேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள், பஸ்கள் மூலம் மக்கள் வந்து குவிந்தனர். இதற்காக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் பார்க்க வசதியாக 10 இடங்களில் "டிவி'க்கள் வைக்கப்பட்டன. இதில் 9 கோடி ரூபாய் மதுரை நகரில் நிரந்தர வசதிகளுக்காகவே செலவிடப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மகால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. அங்கு திருமலை நாயக்கரின் வரலாற்றை விவரிக்கும் ஒளி-ஒலி காட்சி துவக்கிவைக்கப்பட்டது.சீர்காழி கோவிந்தராஜனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்கியது.


    மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தமிழக கவர்னர் சாதிக் அலி தமிழ் புலவரின் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற கூற்றின் அடிப்படையில் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார்.துவக்க விழாவில் தலைமை வகித்து பேசிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் நிறுவப்படும் என அறிவித்தார். கோர்ட்டில் தமிழை வழக்கு மொழியாக கொண்டு வர தமிழக அரசு பாடுபடும் என குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய விவசாய அமைச்சர் ஆர்.வி.சாமிநாதன் தான் தமிழன் என்ற முறையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் தனது பேச்சின் போது உலகதத் தமிழ் மாநாடு நடைபெற காரணமாக இருந்த தனிநாயகம் அடிகளாருக்கு நன்றி தெரிவித்தார். மதுரை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் கேரள முதல்வர் நாயனார் கலந்து கொண்டார். பொதுமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் பங்கெடுத்துக்கொள்ளும் வகையில், பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாநாட்டு திடலில் நடந்தது. இதற்கென பந்தயத்திடலில் முப்பதாயிரம் பேர் அமரக்கூடிய பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் கவிதை போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமுக்கம் மைதானத்தில் நடந்த கண்காட்சியில், பண்டை தமிழர்களுடைய கலை, நாகரிகம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வகை காட்சிகள் அமைக்கப்பட்டன. தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. மாநாட்டின் போது தமிழ் புலவர்கள் 49 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்வர் எம்.ஜி.ஆர்., வழங்கினார்.


    இறுதி நாளான ஜனவரி 10ம் தேதி பிரதமர் இந்திரா மாநாட்டில் உரையாற்றினார். "உலக தமிழ் மாநாடு, வணக்கம்' என தமிழில் பேச்சை துவங்கிய பிரதமர் இந்தி மொழி திணிக்கப்படாது என வாக்குறுதி அளித்தார். பிரமாண்ட அலங்கார வண்டிகளின் ஊர்வலத்தை பிரதமர் இந்திராவும், முதல்வர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் அமர்ந்து பார்த்தனர். இந்த ஊர்வலத்தை காண வழிநெடுகிலும் 25 லட்சம் பேர் கூடியிருந்தனர். இந்த ஊர்வலத்தில் 5 யானைகளில் இசைக்கலைஞர்கள், பெண்கள், போலீஸ் வாத்தியக்குழு, விவசாய காட்சி வாகனம், கொடி பிடித்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள், மேளக்கலைஞர்கள், கரகாட்டக்காரர்கள், பொய்க்கால் குதிரை, தமிழ் வளர்த்த அயல்நாட்டு அறிஞர்கள், அவ்வையார், கண்ணகி, ஆண்டாள், கம்பர், தமிழன்னை வேடமிட்டவர்கள் கலந்து கொண்டனர்.விழா மேடைக்கு அருகே அமைக்கப்பட்ட தமிழன்னை சிலையை எம்.ஜி.ஆர்., திறந்து வைத்தார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3322
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" டிஜிட்டல் வடிவாக்கம் எப்படி என நம் சகோதர பெரு மக்கள் கருத்துக்கள் பதிவிடவும்...

  4. #3323
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    சினிமா விமர்சனம்: எங்க வீட்டுப் பிள்ளை

    சந்தர்: ஒரே மாதிரி இருக்கும் இரு நபர்களின் ஆள் மாறாட்டத்தை அடிப் படையாகக் கொண்டு வந்த படங்களி லேயே இதுதான் சிறந்த படம், சேகர். இடம் மாறி வந்தவர்கள், தொடர்ந்து அங்கேயே தங்கிவிடவேண்டிய அவசி யத்தை ஏற்படுத்தி இருப்பதில் இந்தக் கதை புதுமையாக இருந்தது. முன் பின் தெரியாத ஒருத்தியின் நல்வாழ்வுக்காகவும், அவள் குழந்தையின் மேல் உள்ள பாசத் துக்காகவும் ஜமீன்தார் வீட்டில் இளங்கோ ராமுவாகவே இருக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது மிகவும் பொருத் தமாக இருந்தது.

    சேகர்: ஆமாம், இளங்கோ ஜமீன் மாளிகைக்குள் நுழைந்தவுடன், அந்த வீட்டுக் கதை முழுவதையும் பாத்திரங்களின் பேச்சின் மூலமே இளங்கோவுக்குப் புரிய வைத்தது, நல்ல அமைப்பு!

    சந்தர்: இரட்டையரின் இரு பாத்திரப் படைப்புகளுமே பிரமாதம்தான்!

    சேகர்: அதை எம்.ஜி.ஆர். நடித்த விதம், அதைவிடப் பிரமாதம்! பயந்தங்கொள்ளியாக வரும்போது, சிரிப்புடன் அழவும் வைக்கிறார். முரடனாக வரும்போது, வீரத்தைக் காட்டிச் சிரிக்க வைக்கிறார்.

    சந்தர்: நம்பியாரிடம் அவர் சவுக்கடி வாங்கி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், 'நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன் அப்பா' என்று பெற் றோரின் படத்துக்கு முன் நின்று சைகை யால் பேசும் இடம், எவர் உள்ளத்தையும் உருக வைக்கும்.

    சேகர்: இரண்டு பாத்திரப் படைப்பும் நன்றாகவே இருந்தன. ஆனால் வீட்டை விட்டு வந்த இரண்டு பேரும் அம்மா வைப் பற்றியோ, அக்காவைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்தது தான், அவ்வளவு சரியாக இல்லை!

    சந்தர்: சரோஜாதேவிக்குப் புது மாதிரி ரோல். எப்போது பார்த்தாலும் அப்பாவை மட்டம் தட்டிக்கொண்டு...தினுசு தினுசாகப் புடவை கட்டிக் கொண்டு... காதிலே ஏதேதோ மாட்டிக் கொண்டு... அந்த அருமையான கலருக் கும், படப்பிடிப்புக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

    சேகர்: வின்சென்ட் - சுந்தரம் படப்பிடிப்பு, படத்துக்குத் தனிச் சிறப்பு கொடுத்தது. முக்கியமாக, பிருந்தாவனத்தில் அழகு கொழித்தது. ஓரிடத்தில், கீழே படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை மாடியிலிருந்து மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

    சந்தர்: இந்தப் படத்திலே இன்னொரு புதுமை பார்த்தியா? தங்கவேலு - நாகேஷ் காமெடி ஜோடி!

    சேகர்: ரொம்ப நாளைக்கப் புறம் தங்கவேலுவைப் பார்க் கிறதே சந்தோஷமா இருந்தது. அந்த மாவு மில்லிலே அவர் நடுங்கிக்கொண்டே நடக்கிற இடம்...

    சந்தர்: அது தங்கவேலு முத்திரை! நாகேஷ் அந்த அசட்டு முகத்தையும், அரை மீசையையும் வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் தப்பு தப்பா வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ரொம்ப பிரமாதமாக கடிச்சிருக்கார்... சே... நடிச்சிருக்கார்..!

    சேகர்: மொத்தத்திலே பொழுது போகிறதே தெரியாமல் விறுவிறுப்பாகப் போகிறது படம். சமீபத்தில் வந்த நல்ல தமிழ்ப் படங்களில், 'எங்க வீட்டுப் பிள்ளை'க்கு ஓர் இடம் உண்டு.



    -

  5. #3324
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1970ம் வருடம்தான் கருணாநிதியின் சொந்த திரைப்பட நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரித்து எம்.ஜி.ஆரும் – ஜெயலலிதாவும் நடித்த ‘ எங்கள் தங்கம்’ படம் வெளிவந்தது!
    இந்தப் படத்தை முரசொலி மாறன் தயாரித்து அவரே வசனமெழுதியிருந்தார்!
    படத்தை கிருஷ்ணன்– பஞ்சு இயக்கியிருந்தார்கள்!
    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்., உண்மையான எம்.ஜி.ஆராக அதாவது, சிறு சேமிப்புத் துறை தலைவராகவும், அதில் தங்கம் கதாபாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு பரிசு வழங்குவது போலவும் ஒரே ஒரு காட்சியில் வந்திருந்தார்!
    அதுதான் படத்தின் ஆரம்பம்!
    அந்த சிறுசேமிப்புத் துறை தலைவர் எம்.ஜி.ஆரை படத்தில் முரசொலி மாறன்தான் அறிமுகப்படுத்துவார்!
    படம் சித்ரா திரையரங்கில் வெளியாகி அமோகமாக ஓடியது!
    அதில் எம்.ஜி.ஆர்., நடத்திய ஒரு கதாகாலேட்சேபமும், ‘ நான் செத்துப் பிழைச்சவண்டா! எமனை பார்த்துச் சிரித்தவண்டா’ பாடலும் எம்.ஜி.ஆருக்கே மிகவும் பொருத்தமாக இருந்ததாக அவர் ரசிகர்கள் நினைத்தார்கள்!
    காரணம், எம்.ஜி.ஆர்., குண்டடிபட்டு திரும்பி வந்த சம்பவம்தான்.
    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா இருவருமே காசு வாங்காமல் நடித்துக்கொடுத்தார்கள் என்று இந்த படத்தின் வெற்றி விழா மேடையில் மாறன் பேசிய போது, ரசிகர்கள் மனதில் எம்.ஜி.ஆரின் இமேஜ் உயரத்துவங்கி விட்டதாக தாத்தா வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்!

    Courtesy sudhangan

  6. #3325
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஒளி விளக்கு (Oli Vilakku)

    விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்.

    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள். அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

    1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
    2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
    3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
    4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
    5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்ச்சித் துறை.
    6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி. கல்லூரி மாணவர், சென்னை.
    7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.

    திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!

    லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

    சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.

    லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?

    துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!

    ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!

    சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!

    சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!

    குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!

    சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.

    திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.

    சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

    திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.

    சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!

    திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.

    ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு. ‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!

    சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.

    ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.

    சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரை இருக்கணுமே!

    குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.

    சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!

    கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!

    திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி! ‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

  7. #3326
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்





    டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.

    பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.

    உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.

    கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.

    வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.

    ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.

    கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.

    ஷீலா: இந்தப் படத்திலே எம்.ஜி.ஆர். அவர்களின் நடிப்புக்கு அடுத்தபடியா என்னைக் கவர்கிறது ‘எடிட்டிங்’. அதுவும் அந்த ரேப்பிங் ஸீனில் எடிட்டிங் ரொம்ப நல்லா இருந்தது. அதேபோல, லதாவின் நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

    வதூது: டைரக்டரோட திறமைக்கு எடுத்துக்காட்டா அந்த ரேப் ஸீன்லே ரிக்கார்டு வால் யூமை அதிகப்படுத்துவதுபோல் காட்டுவது நன்றாக இருக்கிறது. ரேப் முடிஞ்சதும் ரிக்கார்டில் ஊசி தேய்ந்துகொண்டிருப்பது நல்ல டெக்னிக்!

    ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.

    கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.

    ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.

    சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!

    கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!

    (லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)

    உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

    பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.

    ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.

  8. #3327
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++
    சிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.


    படம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.


    அப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.
    அடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்

    வேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.



    செங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...



    இதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.
    எம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.
    செங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..
    இதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.
    படத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.

    பாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.

    ஏமாற்றாதே....ஏமாறாதே...
    தாயில்லாமல் நானில்லை...
    அம்மா என்றால் அன்பு....
    உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது
    காலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ
    ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
    என ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.


    இதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.
    ஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.

    கே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)
    எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.

    கண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.


    நேசங்களுடன்
    ஜீவானந்தம்

  9. #3328
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!
    Posted by பால கணேஷ்

    ================================================== ============

    ================================================== ============

    பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

    ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.


    எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

    ‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்*ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.


    வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

    ‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.


    சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்*னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

    ================================================== ============

  10. #3329
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    காவல்காரன், ரகசிய போலீஸ் படங்களில் வாத்தியார் சண்டை வித்தியாசமாக இருக்கும்.
    ஒளிவிளக்கு/நம் நாடு படத்தில் ஒரு தூள் கிளப்பும் சண்டை பார்த்த ஞாபகம் - அப்புறம் புதிய பூமி - சிறந்த சண்டைகளில் ஒன்று

    நீரும் நெருப்பும் படம் ரொம்பவே சுமார். நான் ரசிச்சது இடது கையால வாள் சுழற்றுகிற லாகவத்தைத் தான்! ஆயிரத்தில் ஒருவன்ல அந்த பழங்கால பாய்மரப் படகை வடிவமைச்சு கொண்டு வந்த விதத்துக்காகவே பாராட்டலாம்!

    வாள் சண்டை என்றவுடனேயே அதிகம் ஞாபகம் வருவது "நீரும் நெருப்பும்" தான்...
    மாட்டுக்கார வேலன் சண்டைக்காட்சி எனக்கு மிகவும் பிடித்த சண்டைக் காட்சி..

    என் தந்தை வாத்தியார், வாத்தியார் என்று உயிரை விடுவார்.எங்கப்பாவே வாத்தியார், அவருக்கு யாரு வாத்தியார்ன்னு ஒரு ஆர்வத்துல தான் எம்ஜியார் படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன்.. அப்புறம் அவரோட ட்ரெஸ்ஸிங் சென்ஸ், ரோமேன்ஸ், டயலாக் டெலிவரி, அப்புறம் சண்டை காட்சிகள் இப்படி ஒவ்வொன்னும் எனக்கு ரொம்ப பிடிச்சு போனது.. எவர்கிரீன் ஸ்டார் அண்ட் டிரெண்ட் செட்டர்ன்னு சொல்லணும் அவரை..!

    நான் முதலில் அவர் சண்டையை ரசித்தது 'மாட்டுக்கார வேலனி'ல்.

    எம் ஜி ஆர் - ஜஸ்டின் சண்டைக் காட்சிகள் பெரும்பாலான படங்களில் இருக்கும்.

    நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியே! சில நாட்களுக்கு முன் ஒரு புலியுடன் எம்.ஜி.ஆர் சன்டையிட்டதை ரசித்துப்பார்த்தேன். சண்டைக்காட்சிகள் மட்டுமல்ல, காலத்தால் அழியாத தித்திக்கும் பாடல்கள் பலவற்றைத் தந்ததற்காகவே அவரை என்றும் மறக்க இயலாத வண்ணம் செய்து விட்டார்!

    சண்டை காட்சின்னாலே வாத்தியார் படம்தாங்க. என்ன ஒரு வேகம், சுறுசுறுப்பு. சும்மா மின்னல் மாதிரி சுத்தி சுத்தி வருவாரு. 'ஆயிரத்தில் ஒருவன்' இப்பதான் ரெண்டு நாள் அப்படி ரசிச்சு பாத்தேன். அதே மாதிரி குடியிருந்த கோவில் சண்டை காட்சிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படமே எனக்கு அவ்வளவு பிடிக்கும். பல தடவ பாத்திருக்கேன். தலைப்பை படிச்சதுமே மனசுல வந்த படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. நீங்களும்
    அதை பத்தி அழகா எழுதி இருக்கீங்க. ஆயிரம் இருந்தாலும் ஒரு கைல ஹீரோயினை தூக்கிண்டு, இன்னொரு கைல வாத்தியார் சண்டை போடற அழகே தனிதான், இல்லையா! )
    காவல்காரன் - குத்து சண்டை, அன்பே வா - குண்டனோட, இதயக்கனி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் - வாள் சண்டை, படகோட்டி கடைசி சண்டை இப்படி எல்லாமே கிளாஸ்.
    இதிலும் எப்பவும் ரொம்ப ரொம்ப ரசிச்சு பாக்கறது எம்.ஜீ.ஆர். நம்பியாரோட போடற சண்டைதான்.

    Courtesy comments portion

  11. #3330
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை சண்டை போட்டாலும் புரட்சித் தலைவர் முகத்தில் துளிக் கூட அயர்வே தெரியாது! உடைகள் கசங்காது!அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி!
    உங்கள் பதிவு, அதற்கு வந்திருக்கும் கருத்துரைகள் எல்லாமே ரசிக்க வைத்தது.
    துரைஜி! புரட்சித் தலைவர் பாய்ந்து பாய்ந்து போடும் சண்டைகள் போலவே நீங்களும் பாய்ந்து பாய்ந்து போட்ட காமெண்டுகள் ரசிக்க வைத்தன!புரட்சித்தலைவரின் உண்மையான ரசிகன் நீங்கள் என்று மற்றொருமுறை (முதல்முறை எப்போ?) நிரூபித்து விட்டீர்கள்!

    நான் மிகவும் ரசிக்கும் சண்டைக் காட்சி:
    எங்கள் வீட்டுப் பிள்ளையில் ஒரு சினிமா காட்சிக்காக புரட்சித்தலைவர்
    சண்டை போட வருவார். தன்னுடன் மோத வருகிறவர்களை மொக்கு மொக்கென்று மொக்கிவிடுவார். அடிபட்ட ஒருவர் டைரக்டரிடம் வந்து 'ஸார்! இவன் நிஜமாவே அடிக்கிறான், ஸார்!' என்பார்!
    பயங்கர காமெடி!

    Looking to the numerous comments conveying so many things about the fighting scenes of the heroes on the silver screen, I really feel like wathcing MGR movies just for the sake of comparing the same with the present day fighting scenes of so called heroes. The arguments and the counter arguments put forth by the readers of the post, make me really feel proud that I am a regular reader of this post. Above all, the comments are very very decent like the author of the post. THIS IS THE SUCCESS OF THE AUTHOR.

    வரலாற்று நாவல்கள் படிக்கையில்...
    வாள் சண்டைகள் பற்றிய வருணனைகள்
    வருகையில்...
    கற்பனையிலேயே அதற்கான
    திரைபோட்டு
    இப்படித்தான் போரிட்டு இருப்பார்கள்
    என்று எண்ணம் தோன்றும்..
    அதற்கு உயிரூட்டம் கொடுத்தவை
    திரு.எம்.ஜி.ஆர் அவர்களின் சண்டைக் காட்சிகள்...

    அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே...

    சிலம்பத்தை நினைச்சதும் ‘தாயைக் காத்த தனயன்’ மனசுல வந்தது. பெ.இ.பெண் தோணாதது என் பிழை. அதுல வர்ற அந்த கம்பு சண்டை, அதுலயும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கண் மயங்கற நிலையிலயும் கம்பு வீசற லாகவம் இருக்கு பாருங்க... ரொம்பவே ரசிச்ச விஷயம் அது. நினைவுபடுத்தி, ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி பிரசன்னா கண்ணன்!

    courtesy comments portion

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •