Page 328 of 401 FirstFirst ... 228278318326327328329330338378 ... LastLast
Results 3,271 to 3,280 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3271
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இருந்தார்…இருக்கிறார்..இருப்பார்…


    சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன்

    பழகியவனாக இருந்தாலும் சரி, பழகாதவனாக இருந்தாலும் சரி.. ஒருத்தர் திடீரென ஆகாதவன் ஆகப்போய்விட்டால் அவனை எந்த அளவிற்கும் தரம் தாழ்த்திப் பேசி கேவலப்படுத்தி ஆனந்தப்படுவது மன விகாரங்களிலேயே டாப் ரகம்.



    வியப்பு என்னவென்றால் அவர் உயிரோடு இருந்தபோது மட்டுமல்ல, இறந்து முப்பதாண்டுகள் ஆன பிறகும் அவரை முன்னணி அரசியல் கட்சிகளின் மேடைகளில் எதிர் மறையாய் விமர்சிக்கக்கூட எவருக்கும் தைரியமில்லை.

    தமிழக அரசியல் வரலாற்றில் அப்பேர்பட்ட மகத்தான சக்தியாய் மக்களின் மனதில் இன்றும் சாகாவரத்துடன் வாழ்கிறது எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம்..



    சிறுவனாய் கஞ்சிக்கு வழியின்றி மூன்று நாள் பட்டினியுடன் உயிருக்கு போராடியதை மறக்கவே முடியாததால்தான், நாட்டையே ஆளும் நிலைக்கு வந்தபோது லட்சோப லட்சோப குழந்தைகள் பள்ளிகளில் பசியாற மதிய உணவு திட்டத்தை எம்ஜிஆரால் சீர்பட உருவாக்க முடிந்தது.. சத்துணவு தந்த சரித்திர நாயகன் என பார் முழுவம் புகழ் பரவியது.. கிராமப்புறங்களில் பள்ளிகளை எட்டிப்பார்க்கமுடியாத வறுமைசூழ் குடும்பத்து சிறுவர்-சிறுமியரெல்லாம் மதிய உணவுக்கு உத்தரவாதம் என்ற நிலை வந்தவுடன் கல்விக்கூடங்களை நோக்கி வர ஆரம்பித்தனர்.

    ஒன்றாம் வகுப்பில் தேர்வான மாணவனுக்கும், தோல்வி என கீழே இறக்கிவிடப்பட்ட மாணவனுக்கும் இடையே அறிவில் அப்படியென்ன மலையளவு வித்தியாசம் கண்டீர்கள் என்று அவர் மனதில் உறுத்தியதன் விளைவுதான், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை அனைவரும் பாஸ் என்று அவரின் அரசு போட்ட ஆணை. ஃ

    ஃபெயில் என்பது இல்லையென்று வந்தபிறகு, மக்குப்பிள்ளை மக்கு பிள்ளை என்று காரணம் காட்டி குழந்தைகளை பள்ளியைவிட்டு நிறுத்தும் படலம் விடைபெற்று ஓடிப்போனது. மக்குப்பிள்ளைகள், கால ஓட்டத்தில் கல்வியில் வேகம்பெற்று பட்டப்படிப்பை நோக்கி முன்னேற ஆரம்பித்தார்கள்.

    பொறியியல் படிப்பு என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர். இன்றைக்கு தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் எஞ்சினியரிங் படிப்பு படிக்காத ஆளே இல்லை என்கிற அளவுக்கு அதிசயமான நிலைமை..


    மலையாளி என்று திடீர் அரசியல் எதிரிகளால் விமர்ச்சிக்கப்பட்ட அவர்தான் மதுரையில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்.. தஞ்சையில் தமிழுக்கென்றே ஒரு பல்கலைக்கழகத்தையும் உருவாக்கினார்..ஏதோ அரசியல் ஆதாயங்களுக்காக இதை செய்தவர் அல்ல.

    வயிற்றுப்பாட்டுக்காக எட்டுவயதில் நாடக மேடையேறி நடிக்க ஆரம்பித்த முதலே வசனத்தமிழை அழகழகாய் உச்சரிக்க பழகியவர் அவர். ஆசானும் நகைச்சுவை நடிகருமான காளி என்.ரத்தினத்திடம் சகல வித்தைகளும் கற்றுத் தேர்ந்த எம்.ஜி.ஆர், 1936-ல் சதிலீலாவதி படத்தில் அறிமுகமாகி பின்னாளில் ஏற்றம் பெற்றதெல்லலாம் அடுக்கடுக்காய் தமிழில் பேசிய வீர நடை வசனங்களால்தான்.

    1950களில் இளங்கோவன், கருணாநிதி, கண்ணதாசன் போன்றோரின் வசனங்கள் எம்ஜிஆர் வாயிலிருந்து வெளிப்பட்டபோதெல்லாம் கிராமத்து டெண்ட் கொட்டகைகளிலும், நகரத்து திரையரங்குகளில் கைத்தட்டல்கள் அடங்க நெடுநேரம் பிடித்தது..

    1952ல் திமுகவில் சேர்ந்தபிறகு, தமிழை நூல்களிலும் மேடைகளிலும் நாடகங்களிலும் கோலேச்ச செய்த சக அரசியல் தலைவர்கள் மத்தியில், திரையில் தமிழை மேம்படுத்தும் குறியீடுகளை தவறாமல் படத்துக்கு படம் இடம் பெறச்செய்தவர் எம்ஜிஆர்.



    முதன்முதலில் தயாரித்து நடித்து இயக்கிய நாடோடி மன்னன் (1958) திரைப்படமே, ‘செந்தமிழே வணக்கம்’ என்று தொடங்கும் பாடலோடுத்தான் ஆரம்பிக்கும் அந்த அளவு தமிழை நேசித்தவர் எம்ஜிஆர்

    உனக்கு எந்த நாடு என்று கேட்கப்படும் ஒரு கேள்விக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களின் சிறப்பம்சங்களையெல்லாம் விவரித்துவிட்டு, முத்தாய்ப்பாக தமிழ் மண்ணையும் கலை,இலக்கிய பண்பாட்டு பெருமைகளையும் ஒரே ஷாட்டில் தொடர்ந்து ஒன்றரை நிமிடம் பாய்ந்ததோடு அருவியாய் எம்ஜிஆர் பேசும் விதம்… விக்ரமாதித்தன் (1962) படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே அந்த திரையுலக பொக்கிஷம் பற்றி புரியவரும்…

    எங்கள் தங்கம் படத்தில், எம்ஜிஆர் தங்கியிருக்கும் ஓட்டை ஒடிசல் பேருந்தை இது விறகு வண்டி என்று கிண்டலடிப்பார் ஜெயலலிதா. அதற்கு பதிலடி கொடுத்துபேசுவார் எம்ஜிஆர்..’’ ஆமாம் இது தமிழ் விரோத சக்திகளை எரிக்,க விறகை கொண்டாரும் வண்டி.. எனக்கு அப்படியொரு தமிழ் வெறி.. நான் சாகும்போதும் தமிழ் படித்து சாகவேண்டும்.. என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’’ என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வார். எம்ஜிஆர் படங்களில் தமிழ் வீச்சு என ஒரு புத்தகமே எழுதலாம்..

    தமிழையும் இங்கிலீசையும் கலந்து வாழ்ந்த மேலைநாட்டு நாகரீக கோமான்கள் மத்தியில் அவர் தமிழனாகவே வாழ்ந்தவர். அவரின் ராமாவரம் தோட்டத்தில் வருடத்தில் அமர்க்களப்படும் ஒரு திருநாள் எதுவென்றால் அது பொங்கல் பண்டிகையாகத்தான் இருக்கும்.

    வீட்டில் உலைவைத்துவிட்டு நம்பிக்கையோடு அரிசிக்காக எம்ஜிஅர் வீட்டுக்கு செல்லலாம் என மறைந்த நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் உதிர்த்த வார்த்தைகள் எவ்வளவு சத்தியம் வாய்ந்தவை என்பது, வள்ளல் கையால் வாங்கி துயரை போக்கி கொண்டவர்களுக்கு மட்டுமே நூறு சதவீத மகிமை புரியும்..மற்றவர்களுக்கு அது ஒரு செய்தியாக மட்டுமே தெரியும்.

    திரையில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்த அவர் அரசியலிலும் வாக்குகளை அள்ளும் அதிசயமாகமே மாறிப்போனார். ஜுலியஸ் சீசர் சொன்னானே, Veni, Vidi,Vici… அதாவது, வந்தேன்.. பார்த்தேன்.. வென்றேன்.. என்று..அதேபோல திரையுலகிலும், அரசியல் உலகிலும் எம்ஜிஆர் வந்தார், பார்த்தார், வென்றார்.

    மிகப்பெரிய அவமானங்களை சந்தித்தபோதும் அவர் அசரவேயில்லை.. அல்லா மீது என்ற வசனத்தை பேசமறுத்து, அம்மா மீது ஆணை என்று அலிபாபாவும் நாற்பது திருடர்களும்(1956) படத்தில் பேசியதால் எம்ஜிஆர் இல்லாமலேயே, அவரிடம் சொல்லாமலேயே சில காட்சிகளை பிடித்து படத்தையே முடித்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன உரிமையாளர் சுந்தரம்.

    அதைவிடக்கொடுமை, எம்ஜிஆரின் முகத்தையும் பெயரையும் கூட போடாமல், பானுமதியை மட்டுமே முன்னிறுத்தி ரிலீஸ் விளம்பரத்தை கொடுத்தார்கள். ஒரு படத்தின் கதாநாயகனை அடையாளம் காட்டாமலேயே பட விளம்பரம் வந்து பெரிய அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டவர் எம்ஜிஆர்.

    ஆனால் அலிபாபா வெள்ளிவிழா கொண்டாடிய அதே ஆண்டில் தாய்க்குப்பின் தாரம், மதுரை வீரன் என இரண்டு வெள்ளிவிழா படங்களை கொடுத்து அவமானத்தை துடைந்தெறிந்த துருவ நட்சத்திரமாய் ஜொலித்தவர் அவர்.



    எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பேவா, குடியிருந்தகோவில், அடிமைப்பெண், ரிக்சாக்காரன், உரிமைக்குரல் என எவ்வளவு மெகா மெகா ஹிட் படங்கள்.. இன்றைக்கும் தொலைக்காட்சிகளுக்கு, நேயர்களை மறுபடியும் மறுபடியும் அனைத்து தலைமுறையினரையும் அள்ளிவரும் அட்சய பாத்திரங்கள்..

    1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபோது மறுபடியும் திரை மொழியிலேயே எதிர்ப்பை காட்டியவர். இந்திய திரை வரலாற்றில் அரசியல் காரணங்களுக்காக பட வெளியீட்டில் எவ்வளவு இடையூறு காண முடியுமோ அவ்வளவு இடையூறுகளை சந்தித்தது, அவரின் சொந்தப்படமான உலகம் சுற்றும் வாலிபன்..

    ஆனால் அத்தனை தடைகளையும் தகர்ந்தெறிந்துவிட்டு, 1973 மே 11ந்தேதி தமிழக திரையரங்குகளில், நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று பாடலோடு தொடங்கிய உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ரசிகர்கள் ஆரவாரம், அசைக்கமுடியாத அரசியல் சக்தியாகவே உருவெடுத்துவிட்டது..

    1987, டிசம்பர் 24ந்தேதி மறைகிற வரை வெற்றிச்சரித்திரத்தையும் வெற்றிப்படையையும் எம்ஜிஆர் வசமே இருக்கும்படியும் அது அச்சாரமிட்டுவிட்டுப்போனது.. மூன்று முறை முதலமைச்சர், பாரத ரத்னா, மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் என எத்தனையெத்தனையோ புகழ்மாலைகளை அவர் தோளில் சூடியது

    அதனால்தான் இந்தியாவின் ஒரு மாநில முதலமைச்சர் மறைந்த செய்தி பல்வேறு வெளிநாட்டு பத்திரிகைகளில்கூட வெளியாகும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக… கட்டுரையின் தலைப்பை மறுபடியும் படியுங்கள்..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3272
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி?”

    புதியவர்களும் இளைஞர்களும் `அது என்ன, எம்.ஜி.ஆரின் செல்வாக்கு இப்படிப் பெருகிக்கொண்டே போகிறதே!' என ஆச்சர்யப்பட்டு, அவர் படங்களை போனிலும் கம்ப்யூட்டரிலும் பார்க்கிறார்கள். ``பழைய படங்களை, என்னால் பத்து நிமிடம்கூடப் பார்க்க முடியாது'' என்று சொல்லும் எழுத்தாளர் ஜெயமோகன்கூட, ``எம்.ஜி.ஆர் படங்களை கடைசி வரை என்னால் பார்க்க முடிகிறது'' என்று ஆனந்த விகடனில் தெரிவித்திருந்தார். அதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி ஃபார்முலா. பிடிக்காதவரையும் தம் படத்தைப் பார்க்கவைத்துவிடுவார்.திரைப்படங்களில் வன்முறை அதிகரிப்பதுகுறித்து தனது கவலையைத் தெரிவித்த உளவியல் நிபுணர் ருத்ரைய்யாவும் “அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் பத்து பேரை எதிர்த்து சண்டைபோடும்போது கஷ்டமாக இருக்காது; அருவருப்பாக இருக்காது; uneasy-ஆக இருக்காது’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்பதால், ரசிகர்கள் பயப்படாமல் படம் பார்க்கலாம். நல்லவன் வாழ்வான் என்பதில், எம்.ஜி.ஆர் படங்களில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் மீது கடுமையாக விமர்சனம் வைக்கும் பலரும், அவரை ஏதேனும் ஒரு வகையில் ரசித்தனர். சிலர் அவர் திரையில் நடித்த காலத்தில் விமர்சித்துவிட்டு, பிற்காலத்தில் அவரைப் பாராட்டியதும் உண்டு. தூரத்தில் இருந்து அவரைப் பார்த்தும் கேள்விப்பட்டும் விமர்சித்தவர்கள் அவரை அருகில் நெருங்கிப் பார்த்துப் பழகியபோது, அவரது நற்குணங்களைக் கண்டு தம் தவறை உணர்ந்திருக்கின்றனர்.

    ஒருமுறை சினிமாவில் எதிர் அணியைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் திருமணத்துக்கு பணம் இல்லாமல் அலைந்தபோது சிலர் அவரை “எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்'' என்றனர். அவரும் வேறு வழியின்றி போய்க் கேட்டார். எம்.ஜி.ஆர் ``உங்கள் முகவரியைக் கொடுத்துவிட்டு போங்கள்'' என்றார். இரவு ஆகிவிட்டது. பணம் கிடைக்கவில்லை. `இனி மானம் போய்விடும்' என்று நினைத்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சட்டைப் பையில் இருந்த முகவரிச் சீட்டைப் பார்த்தார். திடீரென ஞாபகம் வந்தவராக தன் உதவியாளரை அழைத்து உடனே பணம் கொடுத்து அனுப்பினார். நல்ல வேளை அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்குள் எம்.ஜி.ஆரின் உதவியாளர் போய்விட்டார். எதிர் அணியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் உதவவில்லை என நினைத்திருந்த அந்தக் குடும்பத்தினர், தம் நன்றியைச் சொல்ல இயலாமல் திண்டாடினர். தங்கள் குடும்ப மானமும் தங்கள் மகளின் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டதால், அவர்கள் எம்.ஜி.ஆரை தெய்வமாகக் கருதினர். இவ்வாறு நண்பர்-பகைவர் எனப் பாரபட்சம் பார்க்காமல், எம்.ஜி.ஆர் பலருக்கும் உதவியுள்ளார். அதனால்தான் இன்னும் அவரைப் பற்றி மக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.எம்.ஜி.ஆர்., சினிமாவைவிட்டு விலகி நாற்பது ஆண்டுகளாகிவிட்டன; இந்தப் பூவுலகைவிட்டு மறைந்து முப்பது வருடங்களாகிவிட்டன. இன்னும் அவர் இருப்பது போன்ற ஓர் எண்ணமும் பேச்சும் நிலவிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க இயலாது. காலத்தால் அழியாத காவிய நாயகனாக இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இதற்கான காரணங்களை இப்போது வெளிவந்திருக்கும் `அடிமைப்பெண்' படத்தை மட்டும் வைத்து ஆராய்வோம்.எம்.ஜி.ஆரிடம் “உங்களை எவ்வளவு நாள் மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்?” என்று கேட்டபோது “என் படங்களின் நெகட்டிவ் இருக்கும் வரை'' என்றார். ஆம், அது சத்தியவாக்கு. அவர் படங்களின் நெகட்டிவ் இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரை அரங்குகளில் வெற்றி நடைபோடுவதைக் காண்கிறோம். இனி இந்தப் படங்களைப் பாதுகாப்பதும் எளிது. அவர் படங்களை திரை அரங்குக்குப் போய்தான் பார்க்க வேண்டும் என்றில்லை, நம்முடைய மொபைல்போனில்கூட நினைத்த நேரத்தில் நினைத்த காட்சிகளைப் பார்க்கலாம் என்ற நிலை தோன்றிவிட்டது. `பாகுபலி'யின் இமாலய வெற்றியும் கதைப் பொருத்தமும் இப்போது சேர்ந்துகொண்டு `அடிமைப்பெண்'ணுக்கு வெண் சாமரம் வீசுகின்றன.

    அன்று அடிமைப்பெண்
    `அடிமைப்பெண்' படம், 1969-ம் ஆண்டு மே தினத்தன்று வெளிவந்தது. அது ஒரு சாதனைப் படம். எம்.ஜி.ஆரின் முந்தைய சாதனைகளை அவரது படங்களே முறியடிப்பது வழக்கம். `எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்தது `அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆர் தமிழ் திரையுலகின் உச்சத்தை எட்டியபோது இந்தப் படம் வெளிவந்தது. `அடிமைப்பெண்' படம் எடுத்தபோது ஜெயலலிதாவும் அதிக செல்வாக்குடன் இருந்தார். இவரது ஆளுமையையும் செல்வாக்கையும் படம் முழுக்கக் காணலாம். இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்தது, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இயக்கினார். கலைஞரின் மைத்துனர் சொர்ணம் வசனம் எழுதினார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்போது விளம்பரங்களில் அவரது வில்லி தோற்றத்தை அதிகமாக வெளியிடுகின்றனர். எம்.ஜி.ஆர்., அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தாலும், அப்பா வேடம் மிகவும் சிறியது. ஒரு சண்டைக் காட்சியும் சில வசனங்களும் மட்டுமே அவருக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு இரண்டும் பெரிய கதாபாத்திரங்கள். அத்துடன் ஒரு பாடலும். இதற்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எம்.ஜி.ஆரிடம் 90 மெட்டுக்கள் போட்டுக்காட்டினார். `அம்மா என்றால் அன்பு...' என்ற அந்தப் பாடல், எம்.ஜி.ஆர் பாடுவதற்காக டி. எம்.எஸ்-ஸைக் கொண்டு மீண்டும் குழுப்பாடலாகப் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், படத்தில் இடம்பெறவில்லை.

    `அடிமைப்பெண்'ணின் சாதனை
    தமிழில் 1969-ல் வெளிவந்த படங்களில் `அடிமைப்பெண்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படம். சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, நூறு நாள்கள் ஓடிய வெற்றிப்படம். திருவண்ணாமலை, சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் மூன்று திரை அரங்குகள், கோவையில் இரண்டு திரையரங்குகள், பெங்களூரில் மூன்று திரை அரங்குகள், இலங்கையில் ஏழு திரையரங்குகளில் மட்டுமல்லாது, திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாகை சூடியது `அடிமைப்பெண்'. மதுரையில் சிந்தாமணி தியேட்டரில் வெளியிட்டு நூறாவது நாள் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பண்டரிபாய், அசோகன் போன்றோர் ரசிகர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்தனர்.இன்றைக்கு `அடிமைப்பெண்' (2017) வெளியாவதற்கு டிஜிட்டல் மாற்றம் காரணமாக பெரியளவில் விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள மெலடி, அபிராமி, பிருந்தா போன்ற ஏசி திரையரங்குகளில் வெளியாகி, தன் வெற்றியை மீண்டும் பறைசாற்றியது `அடிமைப்பெண்'. இதேபோன்று மற்ற ஊர்களிலும் நல்ல லாபத்தைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் படங்களுக்குக் கிடைக்கும் வசூல் காரணமாக, அரசுக்கு நல்ல வரித்தொகையும் கிடைத்தது. இன்றைக்கு படங்களுக்கு வரிவிலக்கு கேட்கின்றனரே தவிர, வரி செலுத்த யாரும் முன்வருவதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர் பட விளம்பரங்களில் அரசுக்குச் செலுத்திய வரித்தொகையைக் குறிப்பிட்டு ஒருவரும் விளம்பரம் செய்வது கிடையாது. அரசுக்கு வரி செலுத்துவதைத் தவிர்க்கவே திட்டமிடுகின்றனர்.

    அரசியலுக்கு அழைத்த ‘அடிமைப்பெண்’
    ‘அடிமைப்பெண்'ணின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கு அரசியலில் நேரடியாக அடி எடுத்துவைக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. அரசியலுக்கு வந்தால் தன்னை ஆதரிப்பார்களா என்பதை அறிய விரும்பிய எம்.ஜி.ஆர்., தயாரிப்பாளர் நாகிரெட்டியிடம் இதுகுறித்து பேசி, தன்னை வைத்து ஒரு படம் எடுக்கும்படி கூறினார். இந்தியில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த `அப்னா தேஷ்' என்ற படத்தை `நம் நாடு' என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். அந்தப் படம் `அடிமைப்பெண்' ரிலீஸாகி ஆறு மாதங்கள் கழித்து வெளிவந்தது. அதுவரை அவர் தன் படம் எதையும் வெளியிடவில்லை. 1969-ம் ஆண்டு நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரின் அதிர்ஷ்ட எண்ணான 7- நாள் அன்று தமிழகம் எங்கும் வெளியாயிற்று. சென்னையில் முதல் நாள் திரையரங்குக்கு வந்து நாகி ரெட்டியுடன் `நம் நாடு' படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வரவேற்பைப் பார்த்து அவரைக் கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியைக் வெளிப்படுத்தினார். ``மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுவிட்டனர். வெற்றி... வெற்றி!'' என்று கூறி மகிழ்ந்தார்.
    பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'
    `அடிமைப்பெண்' பற்றி பத்திரிகைகள் பல ஆண்டுக்கு முன்பிருந்தே செய்திகளை வெளியிட்டுவந்தது. முதலில் பானுமதி, அஞ்சலிதேவி நடித்து வெளிவருவதாக இருந்தது. பிறகு, சரோஜாதேவி கே.ஆர்.விஜயா மற்றும் ஜெயலலிதா நடித்து படப்பிடிப்பும் நடந்தது. அப்போது ஏற்பட்ட தீவிபத்தினால் படம் நின்றுபோயிற்று. இந்தப் படத்தில் இளவரசியான ஜெயலலிதா அடிமைப்பெண்ணாக இருப்பதாகவும், அவரை எம்.ஜி.ஆர் காப்பற்றிக் கொண்டுவந்து அரசியாக்குவதாகவும் கதை அமைந்திருந்தது. இந்தக் கதை கிட்டத்தட்ட `நாடோடி மன்னன்' கதைபோல் இருப்பதால், புதிய கதை உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு அதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.ஜெயலலிதா நடிப்பது முடிவானதும், தமிழின் முன்னணிப் பத்திரிகைகளில் `அடிமைப்பெண்'ணின் படப்பிடிப்பு குறித்து பல செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. பாலைவனத்தில் ஜெயலலிதா ஆடும் நடனத்துக்கு தைக்கப்பட்ட உடைக்கு பல மீட்டர் நீளமான துணி எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளிவந்தது. அத்துடன் அவர் ஆடும் மற்றொரு நடனத்தில் அவர் சிறிய முரசுகளைக் கட்டிக்கொண்டு ஆடுகிறார். இதில் அவர் நடனங்கள் வெளிநாட்டுப் பாணியில் அமைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அவரது நடனப் பசிக்கு இந்தப் படம் நல்ல தீனியாக அமைந்ததை மறுக்க இயலாது. எகிப்தில் ஆடும் `பெல்லி டான்ஸில்’ உள்ள நடன அசைவுகளை `ஏமாற்றாதே ஏமாறாதே...' பாடலில் தமிழ்ப் படத்துக்கு ஏற்ற வகையில் நடன அசைவுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. `காவல்காரன்' படத்தில் `நினைத்தேன் வந்தாய் நூறு வயது...' பாடல் காட்சியிலும் இதே பெல்லி டான்ஸ் மூவ்மென்ட்ஸைப் பார்க்கலாம்.

  4. #3273
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    MGR formula

    MGR acted in 116 films during the period from 1947 to 1978. He gave up acting in 1977 after he became Tamil Nadu Chief Minister. His last film ‘Maduraiyai Meetta Sundarapaandiyan’ (Madurai Liberator Sundarapaandiyan) was released in 1978. MGR himself directed parts of the film and completed it after the Director B. R. Panthulu died before shooting was over.

    Twelve of MGR’s films were silver jubilee hits running for over 25 weeks each. Another 68 films ran for more than 100 at theatres during their first screenings. Even the MGR films that did not run for a 100 days initially turned out to be money-spinners in the long run as each re-release brought large audiences to theatres.

    MGR

    MGR had a formula of his own in the films he acted in. The story had to be sentimental with displays of mother-son love or brother-sister affection. Despite ups and downs and twists and turns, the good guy had to triumph in the end. Needless to say MGR was always the good guy except for a few in the early stages of his career. The films had to have a positive message imparting a lesson to the people. The hero was regularly portrayed as a paragon of virtue who fights for justice on the side of the oppressed. The hero sings philosophical songs. Besides these features, a typical MGR film always had thrilling fight scenes and titillating love song sequences. MGR got the finest villain actors to play opposite him.

  5. #3274
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3275
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    இன்று மாலை
    கோவை
    டிலைட்
    திரையரங்கில்
    மக்கள் திலகத்தின்
    பக்தர்கள்

    நன்றி - திரு ஹரிதாஸ் - கோவை

  7. #3276
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறு வெளியீடு காவியங்களின் சக்ரவர்த்தி எந்நாளும் வாழும் தனிப்பிறவி மக்கள் திலகம் டிஜிட்டல் தயாரிப்புகளின் அணிவகுப்பு விரைவில் துவங்கவிருக்கும் தகவல்...

  8. #3277
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முரசு தொலைக்காட்சியில் நம் மன்னன் மன்னவர், மக்கள் திலகம் வழங்கும் "தாயின் மடியில்" காவியம் ஓளி பரப்பாகிறது...

  9. #3278
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி 26/01/18

  10. #3279
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி27/01/18

  11. #3280
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி 28/01/18

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •