Page 286 of 401 FirstFirst ... 186236276284285286287288296336386 ... LastLast
Results 2,851 to 2,860 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #2851
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

    டான்ஸுக்காக வியர்வை சிந்திய எம்.ஜி.ஆர்..! -

    எம்.ஜி.ஆர் தன் படங்களில் வித்தியாசமான நடனக்காட்சிகள் அமையவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆகவே அவருடன் நடிக்கும் நடிகையாரும் நடனப்பயிற்சி உடையவர்களாக இருக்க வேண்டும். மந்திரிகுமாரி பட நாயகி சரோஜா (உதயசங்கரின் மாணவி) முதல் பத்மினி, ஜெயலலிதா, லதா எனப் பலரும் நடனத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். சரோஜாதேவி ‘குரூப் டான்சராக’ இருந்து கதாநாயகி ஆனவர். கே.ஆர். விஜயா ‘ஸ்ட்ரீட் டான்சராக’ இருந்து திரையுலகிற்கு வந்தவர். இவர்களும் ரசிகர்களைக் கவரும் வகையில் ‘சினிமா டான்ஸ்’ ஆடுவதில் வல்லவர்களாக இருந்தனர். இவர்கள் தவிர சிறந்த நாட்டியக்காரர்களான e.v. சரோஜா, எல் விஜயலட்சுமி, ஹெலன் (ஹிந்தி) ஆகியோரையும் எம்.ஜி.ஆர் தனது பாடல் காட்சிகளில் பயன்படுத்தினார். நடனக் காட்சிகளில் எம்.ஜி.ஆர் தனது உடையும் நடையும் வெகுப் பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர்.





    கதாநாயகியின் தகுதி

    கதாநாயகியாக நடிக்க விரும்புவோர் நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழைத் தெளிவாகப் பேசவேண்டும் என்று ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆர் நடனத்தை அடிப்படைத் தகுதியாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மஞ்சுளாவை ஐந்து வருடத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது அவருக்குத் தனி ஆசிரியர் வைத்து நடனம் கற்பிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். நடனப்பயிற்சியே கதாபாத்திரத்தின் உணர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு கண்களாலும் முகபாவத்தாலும் உடல்மொழியிலும் அவற்றைப் பிரதிபலிக்க உதவும் என்பதில் எம்.ஜி.ஆர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் நடிப்பில் அவர் தன் உடல்மொழியோடு நயனபாஷையையும் பொருத்தமாகச் சேர்த்திருப்பார். பாடல் காட்சிகளில் அவர் கண் அசைவு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

    காவல்காரன் படத்தின் காவல்நிலையக் காட்சியில் நம்பியார்தான் நிரபராதி என நிரூபிக்க முயலும் போது எம்.ஜி.ஆருக்கு அதிக வசனமே இருக்காது. அவரது கண் அசைவும் தலை அசைவும் அவர் பேசவேண்டிய வசனங்களைப் படம் பார்ப்போருக்கு உணர்த்திவிடும். திரை அரங்கில் ரசிகர் இக்காட்சியை மிகவும் ரசித்துப் பார்ப்பர்.

    சினிமாவில் நடனக்காட்சி

    எம்.ஜி.ஆர் தன் படங்களில் பல வகையான நடனங்களை இடம்பெறச் செய்தார். அவர் ஒவ்வொரு ரசிகரும் அந்த நடனத்தை ரசிக்கும்படி மாற்றியமைத்தும் இருப்பார். நடனத்தில் இலக்கணம் நடன மேடையில் நடக்கும் நடன நிகழ்ச்சிக்குப் பொருந்தும். ஆனால், திரைப்படக்கலை மக்களின் ரசனை சார்ந்தது என்பதால் நடன இலக்கணத்தை விட படம் பார்ப்போரின் ரசனையோ முக்கியமாகும். அவர்கள் திரையரங்கை விட்டு வெளியே செல்லும்படி நடனக்காட்சி அமையக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார்.

    நடனப்பயிற்சி

    எம்.ஜி.ஆர் சாஸ்திரீயக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். அதனால், நாடகங்களில் நடிக்கும் போது கர்நாடக சங்கீதப் பயிற்சி பெற்றார். அவர் காரில் போகும்போது தியாகராஜ பாகவதர் பாபனாசம் சிவன், எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் பாடல்களை விரும்பிக் கேட்பார். அதுபோல நடனப் பயிற்சியும் பெற்றார். குமாரன் ஆசான் என்பவரிடம் முறைப்படி நடனம் பயின்றார். ஸ்ரீ முருகன் படத்தில் நடிகை மாலதியோடு இணைந்து சிவதாண்டவம் ஆடினார்.

    நாடகங்களில் பெண்வேஷம் ஏற்று நடித்து வந்த எம்.ஜி.ஆர் பின்னாளில் தனது மேக்கப்மேனாக வைத்துக்கொண்ட ராம்தாஸ் என்பவருடன் இணைந்து ஒரு நாடகத்தில் இருவரும் ஊர்வசியும் மேனகையுமாக நடனம் ஆடினர். மேடையில் மக்கள் முன்னிலையில், (சினிமாவில் இருக்கும் ‘ரீடேக்’ வசதிகள் இன்றி) நேரடியாக அழகாக நடனம் ஆடத் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். பின்னர் சினிமாவிலும் நடனக் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத் தேவைப்படும்போது உரிய நடனப் பயிற்சிகளை மேற்கொண்டார்.

    வழுவூர் ராமையாபிள்ளை ஒரு பேட்டியில் சிறந்த”எம்.ஜி.ஆர் நடனக்கலைஞர் அவரது நடனங்களை அவரே பெரும்பாலும் அமைத்துக் கொள்வார். நாங்கள் சொல்லித்தர வேண்டிய தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

    நடன வகைகள்



    எம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி எழுப்பி பாட்டு வடிவில் பதில் அளிப்பதாகும். இதை என் அண்ணன் படத்தில் ஒரு நடனக்காட்சியாக அமைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன் படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் பாடல் காட்சியாக அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நடனப் போட்டியில் (ஆடவாங்க அண்ணாத்தே) இ.வி. சரோஜா மற்றும் சகுந்தலாவுக்கு இணையாக ஆடி வெற்றி பெறுவார்.

    குடியிருந்த கோயில் படத்தில் பங்க்ரா நடனமும் மன்னாதி மன்னனில் பரதமும், தாயின் மடியில் படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் (ராசாத்தி காத்திருந்தா ரோசா போலே பூத்திருந்தா), ரிக்ஷாக்காரன் படத்தில் உறுமி கொட்டுக்கான ஆட்டமும், பெரிய இடத்துப் பெண்ணில் மேலைநாட்டு நடனமும், எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தோனேஷியா நடன உடையில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாட்டில் டபுள் எக்ஸ்போஷர் காட்சியில் நடன காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

    மதுரை வீரன், ராஜா தேசிங்கு, ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மதுரை வீரன் மற்றும் ராஜா தேசிங்கு படங்களில் பத்மினிக்கு இணையாக எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். ஒளிவிளக்கு படத்தில் ஜெயலலிதாவுடன் சிங்கா சிங்கி என்று அழைத்தபடி ஆடுவார். திமுக அரசின் சாதனை விளக்கமாக இந்நடனக்காட்சி அமைந்திருந்தது. மூன்றுமே மாறுவேடக் காட்சிகளாகப் படத்தில் இடம் பெற்றன.

    நடனத்தில் வீரவிளையாட்டு அசைவுகள்



    எம்.ஜி.ஆருக்கு நடனத்திலும் சண்டையிலும் சம அளவு ஈடுபாடு இருந்ததால் நடனக்காட்சிகளில் வீரவிளையாட்டு நடைகளை இணைத்திருப்பார். பறக்கும் பாவை படத்தில் முத்தமோ, மோகமோ என்ற கனவுப் பாடலில் காஞ்சனாவோடு ஆடும் போது அவர் கையில் “கலர் ரிப்பனைச் சுற்றுவது போலிருக்கும். அது சுருள்வாள் சுற்றுவதாகும். சுருள்வாள் என்பது இருபுறமும் கூர்மையான சுருள் சுருளாக உள்ள பல அடி நீளம் உடைய கத்தி இதைச் சுற்றும் போது தரையில் படாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் வேகமாகவும் தடங்கல் இல்லாமலும் சுற்ற முடியும். இதை லாவகமாக எம்.ஜி.ஆர் அப்பாட்டில் சுற்றுவார். இதுவும் ஒரு நடனம் போலவே தோன்றும்.

    எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாட்டில் சாட்டையை வீசியும் சொடுக்கியும் பாடும்போது சிலம்பாட்ட முறைப்படி அவர் கால்களை அடி வைத்து ஆடுவார். இந்தக் கால்வைப்பை சிலம்பாட்டக்காரர்கள் ‘சவடு’ (காலடிச்சுவடு) வைத்தல் என்பர், பின்னும் முன்னும் அடி வைத்து அவர் கையில் சவுக்கை வீசி ஆடி வருவது இரண்டு கால்களைப் பொருத்தமான இணைப்பாகும்.

    நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று’ பாட்டுக் காட்சி முழுக்கவும் சிறுவர்களின் வீரவிளையாட்டுப் பயிற்சிப் பாடலாக அமைந்தது.

    பொய்க்கால் குதிரை ஆட்டம்

    ‘தாயின் மடியில்’ படத்தில் எம்.ஜி.ஆர் ரேஸ் குதிரை ஜாக்கியாக நடித்திருப்பார். அதில் ஒரு மேடைக் காட்சியில் இவரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவார்கள்.

    “ராசாத்தி பூத்திருந்தா, ரோசாபோலே காத்திருந்தா
    ராசாவும் ஓடிவந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
    ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
    ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி “

    என்ற பாட்டும் நடனமும் அந்தப் படத்தை அக்காலத்தில் ஓடவைத்தது. அந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்காததால் படம் நூறுநாள் ஓடவில்லை. ஆனால், இந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவி நாட்டுப்புறக் கலைஞர்களைப் போலவே முகபாவமும் உடலசைவும் காட்டி நடித்திருப்பார். இதைக்கண்டு ரசிக்க ரசிகர்கள் விரும்பினர். திரையரங்கிற்குச் சென்றனர்.

    பங்க்ரா நடனம்



    பஞ்சாபியர் அறுவடை முடிந்த பின்பு ஆடும் மகிழ்ச்சியான நடனம் பங்க்ரா நடனம் ஆகும். இந்த நடனத்தைக் குடியிருந்த கோயில் படத்தில் அமைத்தபோது சிறந்த நடனக் கலைஞரான எஸ்.விஜயலட்சுமிக்கு இணையாக தான் ஆடவேண்டும்’ என்ற அக்கறையில் அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். படத்தில் அவரது தோற்றமும் நடன அசைவும் துள்ளலும் எல்.விஜயலட்சுமியை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. அது மிக நீண்ட பாடல் என்பதால் ‘டபுள் சைட்’ ரெக்கார்டு என்பார்கள்.

    மேலை நாட்டு நடனம்

    பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆர் பட்டிக்காட்டு முருகப்பனாக இருந்து படித்த அழகப்பனாக மாறிய அறிமுகக் காட்சியில் சரோஜாதேவியைக் கவர்வதற்காக ஒரு மேலை நாட்டு நடனக்காட்சி அமைக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் ஆட வேண்டும் என்று இயக்குநர் ராமன்னா கூறியபோது அவர் மிகவும் தயங்கினார். “என் ரசிகர்கள் நான் மேலை நாட்டு நடனம் ஆடுவதை விரும்புவார்களா? என்று கேட்டார்.” நிச்சயம் விரும்புவார்கள். இந்த நடனக் காட்சியைப் பிரமாதமாக எடுப்போம் என்று இயக்குநர் கூறவும் எம்.ஜி.ஆர் ஆட சம்மதித்தார். அந்தப் பாட்டும் நடனமும் ரசிகர்களின் மறக்கமுடியாத பெட்டகக் காட்சியாக அமைந்துவிட்டது.

    அன்று வந்ததும் இதே நிலா - சச்சச்சா
    இன்று வந்ததும அதே நிலா - சச்சச்சா

    என்று இருவரும் பாடிய ஜோடிப் பாட்டும் சச்சச்சா நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

    புலியூர் சரோஜா பாராட்டிய “பிரேம்’ டான்ஸ்



    டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் காலத்தில் டான்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்தார். பின்பு, கமல் ரஜினி காலத்தில் மாஸ்டர் ஆகிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரின் மேலைநாட்டு நடனத் திறமையைப் பாராட்டி “அன்பே வா” படத்தில் நாடோடி, நாடோடி, போகவேண்டும், ஓடோடி, ஓடோடி” என்ற பாட்டில் எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் இன்றைய ‘பிரேக்’ டான்சை விட சூப்பராக இருக்கும்”, என்றார்.

    டான்ஸ் மாஸ்டர்கள்

    எம்.ஜி.ஆர் தன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்கள் தூய்மையான பழக்க வழக்கங்களோடு எளிமையான செயற்பாடுகளுடன் தொழில்பக்தி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தன் குழுவினருடன் பம்பாய் போன போது அங்குக் குடித்துவிட்டு வந்த டான்ஸ் மாஸ்டரை டிக்கெட் எடுத்துக் கொடுத்து உடனே சென்னைக்கு அனுப்பிவிட்டார். குடித்து விட்டு வந்து தொழில் செய்வது தொழிலின் மீதான மரியாதையைக் கெடுத்துவிடும் என்று எம்.ஜி.ஆர். நம்பினார்.

    ஓர் இளம் டான்ஸ் மாஸ்டர் ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு கேட்க பெரிய ‘ஒசி’ கார் ஒன்றில் வந்தார். எம்.ஜி.ஆர் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் அந்த டான்ஸ்மாஸ்டர் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோவில் போய்ப் பார்த்தார். தன் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பாக நடனக்காட்சிகளை அமைத்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரே அவருக்கு ஒரு பெரிய கார் வாங்கி பரிசளித்தார். அதன்பிறகு அவர் தன் சொந்த பெரிய காரில் வலம் வந்தார். அவர்தான் டான்ஸ் மாஸ்டர் சலீம்.



    எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஒரே மாதிரி இரண்டு பாடல் / நடனக் காட்சிகள் அமைக்காமல் வித்தியாசங்களைப் புகுத்தியதால்தான் ரசிகர்கள் விசிலடித்து கை தட்டி அனைத்துக் காட்சிகளையும் ரசித்தனர்.
    Courtesy - vikadan.com

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2852
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். போல ஹிந்துத்துவ ஆதரவு முதல்வர் நேற்றும் இல்லை, நாளையும் இல்லை!


    மாநில அரசில் கிரகங்கள் கால்வைத்த பின் ஹிந்துக்களை ஒடுக்க ஹிந்து சமயத்தை ஹிந்துப் பண்பாட்டை இழிவுபடுத்துவதே ஆட்சி பீடத்தார் தொழிலாகி விட்டது. வாய்த்த தலைமை அப்படி. கஞ்சாத் தோட்டத்தில் ரோஜாமலராக வந்தார் எம்.ஜி.ஆர். ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் ஹிந்து சமுதாயம் அந்த நல்ல ஹிந்துவை நினைத்துப் பார்க்கிறது.

    தமிழக முதல்வராக பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பதவி வகித்தவர் என்ற சிறப்பு எம்.ஜி.ஆர்ருக்கு மட்டுமே உண்டு. 1977 முதல் 1987ஆம் ஆண்டு அவர் மறையும் வரை வேறு யாரும் முதல்வர் பதவியை நெருங்க முடியவில்லை.

    எம்.ஜி.ஆர். வெறும் கூத்தாடிதான் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். அவருக்கு படிப்பறிவு கிடையாது, நிர்வாக அனுபவம் துளியும் இல்லை. சினிமா கவர்ச்சியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார் என்றெல்லாம் கணைகள் வீசப்பட்டன.

    எம்.ஜி.ஆர். மெத்தப்படித்த மேதாவி அல்லர் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் மக்களின் நாடித்துடிப்பை அவர் நன்கு உணர்ந்திருந்தார். இதனால்தான் மக்கள் திலகம் என்ற பெயர் இன்றுவரை அவருக்குப் மட்டுமே பொருத்தமாக உள்ளது. பொருளாதாரம் மிகவும் நுட்பமானது. நிதி சார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்க நிபுணர்களே தடுமாறுவது உண்டு. ஏனெனில் பொருளாதார ரீதியான விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை யாராலும் துல்லியமாக முன்கூட்டியே அவதானிக்க முடியாது.mgr

    பொருளாதார பிரச்சினையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். இதை நன்கு உணர்ந்திருந்தார். அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை அவர் கட்டுக்குள் வைத்திருந்தார்.

    சிறுவயதில் ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அவர் பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார். தன்னைப்போல யாரும் எதிர்காலத்தில் பட்டினி கிடக்கக் கூடாது, பசிப்பிணியால் வாடக்கூடாது என்ற உணர்வு அவர் நெஞ்சில் வலுவாக இருந்தது. இதுதான் பிற்காலத்தில் சத்துணவு திட்டமாக உருவெடுத்தது. காமராஜர் ஆட்சி காலத்திலேயே மதிய உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற போதிலும் அதை செம்மைப்படுத்தி மெருகேற்றியது எம்.ஜி.ஆர். தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

    குழந்தைகள் வயிறார உணவு உண்டால்தான் படிப்பில் அவர்களால் கவனத்தை செலுத்த முடியும் என்பதை கல்வியியல் வல்லுனர்கள் உறுதிபட உரைக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் சேர்ந்த மாணவர்கள் வெவ்வேறு காரணங்களால் இடையிலேயே நின்றுவிடுவது உண்டு. இப்போது இந்த இடைநிற்றல் பெருமளவு குறைந்துள்ளதற்கு சத்துணவும் ஒரு முக்கிய காரணம். இப்போது இத்திட்டம் அநேகமாக எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

    எம்.ஜி.ஆர். திரையில் நடித்தவரே தவிர, பொதுவெளியில் தன்னால் யாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்தார். எம்.ஜி.ஆர். ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்த காலக்கட்டத்தில் கூட தன்னை நாத்திகன் என்று அவர் ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை.

    பிரபல படத் தயாரிப்பாளரும் நடிகருமான சாண்டோ சின்னப்ப தேவர், மருதமலை முருகன் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். பக்தர்களின் வசதிக்காக மருதமலையில் விளக்கு வசதியை சின்னப்ப தேவர் ஏற்பாடு செய்தார். இதை தனது நண்பரான எம்.ஜி.ஆர்.தான் திறந்து வைக்க வேண்டும் என்பதில் சின்னப்பா தேவர் இருந்தார்.

    கோயில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமோ அக்கறையோ காட்டக்கூடாது என்று திமுக பிரமுகர்கள் சிலர் எம்ஜிஆருக்கு முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து அப்போதைய முதல்வர் சி.என். அண்ணாதுரையிடம் எம்.ஜி.ஆர். இது குறித்து பேசியி பின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலம் வாக்கை ஏற்ற தி.மு.க. மறுக்க முடியவில்லை.

    எம்ஜிஆரைப் பொறுத்த வரை தான் இறைநம்பிக்கை உடையவர் என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள ஒருபோதும் தயங்கியது இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையை எம்ஜிஆர் வெளிப்படுத்தியுள்ளார்.

    கிருபானந்தவாரியார் ஆற்றிய சொற்பொழிவு காரணமாக சர்ச்சை எழுந்தது. அவர் மீது கல்வீசும் அளவுக்கு நிலைமை மோசமானது. இது பல்லாயிரக்கணக்கானோருக்கு மன வேதனையை அளித்தது. எம்ஜிஆரும் மன உளைச்சலால் தவித்தார். எம்ஜிஆர் நேரடியாகத் தலையிட்டு மோதலை தணித்தார். இதன்வாயிலாக, பொன்மனச் செம்மல் என்ற மகுடத்துக்கு பொருந்தமானவர் என்பதை அவர் நிரூபித்தார்.

    எம்ஜிஆரின் இஷ்ட தெய்வம் கொல்லூரில் வீற்றிருக்கும் மூகாம்பிகை அம்மன். வாய் பேச முடியாத அசுரனை அம்மன் வதம் செய்த இடம்தான் கொல்லூராகும். இதனால்தான் அம்மனுக்கு மூகாம்பிகை என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. காலடியில் அவதரித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டுள்ளார். அவர் கொல்லூரில் அமர்ந்து தியானம் செய்தார். ஆதிசங்கரர் தியான பீடம் இப்போதும் பக்தர்களை ஈர்த்துவருகிறது.

    திரைப்படம் ஒன்று அமோக மதுரையில் எம்ஜிஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. இது சுமார் அரை கிலோ எடை கொண்டது. இந்த தங்க வாளை மூகாம்பிகையம்மன் கோயிலுக்கு எம்ஜிஆர் காணிக்கையாக அளித்தார்.

    இப்போதும் இந்த தங்க வாள் மூகாம்பிகை அம்மன் கோயிலை அலங்கரிக்கிறது. திமுகவில் சிவாஜி கணேசன் இருந்தபோது அவர் திருப்பதிக்குச் சென்றதை பிரச்சினை ஆக்கினார்கள். இதைப்போல மூகாம்பிகை கோயிலுக்கு எம்ஜிஆர் சென்றதையும் சிலர் பிரச்சினை ஆக்க முற்பட்டார்கள். ஆனால் மூகம்பிகையை நான் என் தாயாகக் கருதுகிறேன். என் தாயையும் மூகம்பிகையையும் என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை என்று எம்ஜிஆர் ஆணித்தரமாக கூறியதையடுத்து, பிரச்சினையை எழுப்பியவர்கள் செல்லாக்காசுகளாகிவிட்டார்கள்.

    எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகும் மத பாரபட்சத்தை அண்டவிட்டதில்லை. பெரும்பான்மையினர் என்பதற்காக ஹிந்துக்களை ஒதுக்கி தள்ளவேண்டும் என்றோ, சிறுபான்மையினர் என்பதற்காக முஸ்லிம்களை தாஜா செய்ய வேண்டும் என்றோ எம்ஜிஆர் ஒருபோதும் நினைத்தது இல்லை.

    வேலூர் கோட்டையில் உள்ள ஆலயத்தில் மூலவர் இல்லாமல் இருந்தது மிகப் பெரிய குறையாக விளங்கியது. எப்படியாவது ஆலயத்தில் மூலவரை பிரதிஸ்டை செய்ய வேண்டும் என்பதில் ஹிந்து அமைப்புகள் முனைப்பு காட்டின. இரவோடு இரவாக ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மூலவரை ஹிந்து அமைப்பைச் சேர்ந்த காரியகர்த்தர்கள் ஸ்தாபித்தனர். இதை ஹிந்து மத துவேஷிகள் ஊதிப் பெரிதாக்க முயன்றனர். ரத்தக்களரியைத் தூண்டிவிட்டனர். ஆனால் இப்பிரச்சினையில் ஹிந்துக்களின் செயல்பாடு நியாயமானதுதான் என்பதை நன்கு உணர்ந்த எம்.ஜி.ஆர்., பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவருக்கு குந்தகம் எதுவும் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது என காவல்துறையைப் பணித்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ வெறியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. மாவட்டத்தின் பெயரையே கன்னிமேரி என்று மாற்றவேண்டும் என்று எல்லாம் அவர்கள் குரல் எழுப்பினார்கள். மண்டைக்காட்டில் கடலில் நீராடிய ஹிந்து பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். இதையடுத்து கலவரம் வெடித்தது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் எம்ஜிஆர் முன்னிலையில் ஹிந்துக்களின் உண்மையான நிலையை தாணுலிங்க நாடார் எடுத்துரைத்தார். கிறிஸ்தவர்கள் தன்னை ஏமாற்றிவிட்டனர். பொய்யான விவரங்களைத் தெரிவித்தனர் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் இதற்கு பிராயச்சித்தம் தேட முடிவு செய்தார்.

    மத கலவரத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பதற்காக நீதிபதி வேணுகோபால் தலைமையில் ஆய்வு குழுவை எம்ஜிஆர் அமைத்தார். இக்குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலனை செய்தது. வெவ்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கிடையே குறிப்பிட்ட தொலைவு இடைவெளி இருக்கவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவர்கள் ஜெபக்கூடங்கள் என்று தொடங்கி அவற்றை சர்ச்சுகளாக மாற்றும் கலையில் வித்தகம் பெற்றிருந்தார்கள். நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரை இந்த மோசடியை நிர்மூலமாக்கியது.

    கிறிஸ்தவ சர்ச்சுகளுக்கும் இஸ்லாமிய மசூதிகளுக்கும் அரசு பணத்தை எம்ஜிஆர் அநாவசியமாக வாரி வழங்கியதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஹிந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகமும் சம்புரோக்ஷணமும் தங்குதடையின்றி நடைபெற அவர் வழிவகை செய்தார். ஹிந்து ஆலயங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே ஹிந்து ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளவேண்டியது அரசின் தலையாய கடமை.

    சர்ச்சுகளையும் மசூதிகளையும் பாதுகாக்கவேண்டிய, பராமரிக்க வேண்டிய பணி அரசைச் சார்ந்தது அல்ல. ஏனெனில் இவற்றுக்கு கோடிக்கணக்கில் சொத்து உண்டு. இந்த வருவாயைக் கொண்டே சர்ச்சுகளையும் மசூதிகளையும் செம்மையான முறையில் நிர்வகிக்க முடியும்.

    இன்றைய சூழ்நிலையில் மதப் பாரபட்சமின்மை சார்ந்த உறுதிப்பாடு இன்றியமையாதது. ஆனால் துரதிருஷ்டவசமாக மத பாரட்சம்தான் தலைதூக்கியுள்ளது. ‘ஹிந்துக்களை நிந்திப்பவர்கள் முற்போக்கு வாதிகள். ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் பிற்போக்கு வாதிகள்’ என்ற மாயை எம்ஜிஆரிடம் இல்லை. இப்போதைய அரசியல்வாதிகள் பலர் இந்த மாயையின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். எம்.ஜி.ஆர். போன்ற ஒரு முதல்வர் அவருக்கு முன்பும் சரி பின்பும் சரி தமிழர்களுக்கு வாய்க்கவில்லை.





    எம்.ஜி.ஆர் என்ற ஹிந்து…

    * பரங்கிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில், ‘தோமையார் மலை’ என்று அதைப் பெயர்மாற்றம் செய்துவிடும் சர்ச் விஷமத்தை முறியடித்தார்.

    * ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற தனது ‘ஆனந்த விகடன்’ தொடரில் ஹிந்துக்கள் போற்றும் பசுவை பாதுகாப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.

    * மண்டைக்காட்டில் கிறிஸ்தவ வெறியர்கள் பகவதி அம்மனின் பக்தைகள் கடலில் நீராடப் போனபோது மானபங்கம் செய்ததைக் கேள்விப் பட்டு கொதித்துப் போன எம்.ஜி.ஆர். தமிழனை தமிழ்நாட்டில் தடுப்பதா?” என்று கர்ஜித்தார்.

    * சென்னை கதீட்ரல் சாலை பெயர் மாற்றப்பட்டபோது சர்ச் அமைப்புகள் பெரிய ரகளை நடத்தி தடுத்தன. அதை சுட்டிக்காட்டிய எம்.ஜி.ஆர். ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக கண்டனக் குரல் எழுப்ப வேண்டும், மனுக்கள் குவிய வேண்டும் என்று ஹிந்துக்களுக்கு வழிவகை சொல்லிக் கொடுத்தார்.

    * வேலூர் ஆலயத்தில் ஜலகண்டேஸ்வரர் மீண்டும் எழுந்தருளியதற்கு காரணமானவை ஹிந்து அமைப்புகள். சட்டமன்றத்தில் ஹிந்து விரோத கூச்சல் எழுந்தது. மற்ற மதத்தினருக்கு அமைப்பு இருக்கலாமானால் ஹிந்துக்களுக்கு அமைப்பு இருக்கக் கூடாதா?” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் எழுப்பிய கேள்விக்குப் பின் அடங்கினார்கள்.

    COURTESY - NET

  4. #2853
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் அவர்கள் சம்பந்தமான பதிவுகள் வழங்கும் திரு வினோத் அவர்தம் முயற்சி அபாரம், மற்றும் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு "தர்மம் தலை காக்கும்" டிஜிட்டல் 6 இடங்களில் திரையிட படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...

  5. #2854
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -10/01/2018

  6. #2855
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (10/01/2018) பிற்பகல் 3 மணியளவில் நடிகை லதாவுடன் திரு.சங்கரன் (கவிஞர் கண்ணாதாசனுடன் நெருங்கி பழகியவர் )-நிருபர் பேட்டி எடுத்தார் .
    உடன் இருந்தவர்கள் திரு.ஒம்பொடி பிரசாத், திரு.ஆர். லோகநாதன்


    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தன்னை அறிமுகம் செய்த விதம் பற்றியும், அவருடன்
    நடித்த அனுபவங்கள், பழகிய விதங்கள், அவருடைய எளிமை, பண்புகள், குணநலன்கள் ,தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் செய்த உதவிகள் , கலை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி 1976ல் சுமார் ரூ.35 லட்சம் வசூல் செய்து
    கட்சிக்கு நிதி சேர்த்ததையும் , தனது குடும்ப பாரம்பரியத்தையும் ,தன்னுடைய பெயர், புகழ், பணம், எல்லாவற்றிற்கும் பெரும் பங்காற்றியவர் என்றும் , அவரால்தான் இன்று தனக்கு எந்த ஊர் , நகரம், நாடு, அயல்நாடு சென்றாலும் சிறப்பான வரவேற்பு , மரியாதை, கௌரவம் எல்லாம் கிடைக்கிறது .என்று பெருமையுடன் குறிப்பிட்டார் .
    அ.தி.மு.க. கட்சி தலைமை முறைப்படி அழைத்தால் என்னால் முடிந்த அளவு
    உதவ தயார் . எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி இன்னும் பல காலம் நீடித்திருக்க வேண்டும் என்பது எனது அவா .என்றும் தெரிவித்தார்
    .
    அதன் புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .

  7. #2856
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    நடிகை லதாவுடன், திரு.சங்கரன் (நிருபர் )

  8. #2857
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகை லதாவுடன், திரு.ஆர். லோகநாதன்



    திரு.ஒம்பொடி பிரசாத், திரு.சங்கரன், திரு.லோகநாதன் ஆகிய அனைவருக்கும்
    பேட்டியின் இறுதியில் தேனீர் ,மற்றும் சாக்லெட்டுகளை வழங்கி மகிழ்வித்தார் .

  9. #2858
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #2859
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2860
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •