Page 168 of 401 FirstFirst ... 68118158166167168169170178218268 ... LastLast
Results 1,671 to 1,680 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #1671
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் 24/11/17

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1672
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை முரசு -25/11/17

  4. #1673
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1674
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1675
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1676
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -25/11/17

    Last edited by puratchi nadigar mgr; 26th November 2017 at 11:23 PM.

  8. #1677
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினச்செய்தி -25/11/17

  9. #1678
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    1962

    1962ல் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்கள்

    ராணி சம்யுக்தா
    மாடப்புறா
    தாயை காத்த தனயன்
    குடும்பத்தலைவன்
    பாசம்
    விக்கிரமாதித்தன்

    ராணி சம்யுக்தா

    ப்ரித்விராஜ் சம்யுக்தா கதை வடக்கே மிகவும் பிரபலமானது. நம்மூரில் முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, கட்டபொம்மன் கதை போன்று அதற்கும் ஒரு folk ballad பாரம்பரியம் உண்டு. அழையாத ஸ்வயம்வரத்துக்கு போய் சம்யுக்தையை தூக்கி வரும் சாகசத்தில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. எம்ஜிஆரும் அந்த வீர சாகசத்தால் கவரப்பட்டுத்தான் இந்த படத்தை எடுத்திருக்கவேண்டும்.

    கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு கதையை அங்கங்கே மாற்றி இருக்கிறார்கள். ஜெயச்சந்திரனும் தில்லி அரசுக்கு ஒரு வாரிசு என்றும் அதனால்தான் அவருக்கும் ப்ரித்விராஜுக்கும் பகை ஆரம்பித்தது என்று ஒரு ரீல் விட்டிருக்கிறார்கள். மற்றபடி தெரிந்த கதைதான். சம்யுக்தாவை காதலிக்கும் ப்ரித்விராஜ் அவரை ஜெயச்சந்திரனுக்கு பாவ்லா காட்டிவிட்டு சம்யுக்தாவை தூக்கி சென்று மனம் செய்துகொள்கிறார். முஹம்மது கோரி ஜெயச்சந்திரன் உதவியுடன் ப்ரித்விராஜை தோற்கடிக்கிறார்.

    ப்ரித்விராஜ் போர்க்களத்தில் இறப்பதாக காட்டுகிறார்கள். அவர் சிறைப்படுத்தப்பட்டு இறக்கிறார். ப்ரித்விராஜ் ராஸோவின் படி அவர் குருடாக்கப்படுகிறார். கோரி பிறகு ப்ரித்விராஜின் சத்தம் மட்டுமே கேட்டு அம்பு விடும் திறமையை பார்க்க விரும்பும்போது அவர் கோரியின் குரலை வைத்து கோரியை தன் அம்பால் கொன்றுவிடுகிறார். இந்த பழி வாங்கல் ராஸோவை எழுதிய சாந்த் பர்டாயின் உதவியோடு செயப்படுகிறது.

    நீண்ட நாள் தயாரிக்கப்பட்ட படம்.
    ரிச்சாக எடுத்திருக்கிறார்கள். நல்ல செட்கள், அழகான எம்ஜிஆர், பத்மினி.
    பல பாட்டுகளை நான் முன்னால் கேட்டதில்லை. ஆனால் இனிமையாக இருந்தன. நினைவில் இருக்கும் பாட்டுகள் இவைதான்.
    “முல்லை மலர்க்காடு எங்கள் மன்னவர் தம் நாடு” என்ற பாட்டுக்கு ராகினி நன்றாக ஆடுகிறார்.
    “நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்” என்ற பாட்டு
    “இதழ் இரண்டும் பாடட்டும் இமை இரண்டும் மூடட்டும்” பாட்டும் நன்றாக இருக்கிறது. கண்ணதாசன். வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் பாட்டு இதுதானாம். டிஎம்எஸ், ஏ.பி. கோமளா பாடி இருக்கிறார்கள்.
    “சித்திரத்தில் பெண்ணெழுதி” சுமாரான பாட்டு.
    இந்த 4 பாட்டுகளையும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர்கள் மட்டும் இங்கேகேட்கலாம்.
    “நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும்” என்பது மிக அருமையான பாட்டு. டிஎம்எஸ்ஸும் சுசீலாவும் கலக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.
    “ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா” என்பது மட்டும்தான் நான் முன்னால் கேட்டிருக்கிறேன். அருமையான பாட்டும் கூட. இந்த வீடியோவையும் கட்டாயம் பாருங்கள்.

    மாடப்புறா

    M. G. Ramachandran, B. Saroja Devi, M. R. Radha, M. N. Nambiar, K. Vasanthi, Gemini Chandra, ‘Kuladeivam’ V. R. Rajagopal, M. K. Mustafa, T. K. Balachandran, N. S. Narayana Pillai, Seethalakshmi

    The film was written by ‘Thilakam’ Narayanaswami, a well-known playwright of the time. His play Thilakam was made into a fairly successful film; hence, his prefix. He also worked as a dubbing-in-charge in some of this writer’s film ventures. S. A. Subburaman, the director, was a school teacher before his love for writing stories helped him become a filmmaker. The story of Madappura is rather confusing. Two women (Vasanthi and Saroja Devi) fall in love with MGR, whose younger brother (T. K. Balachandran) is suspected of murdering a lawyer. MGR takes the blame and becomes a fugitive from justice. Nambiar, as was the norm, is the villain and heads a gang of crooks. He wears many disguises, including that of a police officer. M. R. Radha, as a father, is remarkable with his characteristic style of dialogue delivery and brings about the story’s resolution.

    M. K. Mustafa, a well-known character actor of the day, plays a police officer who runs from pillar to post to nab the real killer (Nambiar). The murder, fortunately for him, is witnessed by a young woman who helps him catch the culprit.The film was shot at the erstwhile Majestic Studios in Kodambakkam. Successful writer, director and producer K. S. Gopalakrishnan, who hit the bull's-eye with his first film Karpagam, took over it and renamed it Karpagam Studios before it eventually shut shop.

    Madappura was edited by Surya, a top editor, who created many successful editors including K. Shankar. The songs were by K. V. Mahadevan, who was assisted by his right-hand man Pugazhenthi, while the background music was by ‘Violin’ Mahadevan.A. Marudhakasi penned the lyrics, while the singers included illustrious names such as T. M. Soundararajan and P. Susheela.

    Remembered for: the performances of M. R. Radha, MGR, and Saroja Devi, and pleasing music.

    தாயை காத்த தனயன்

    மவுண்ட்ரோடு ஏரியாவில் பிளாசாவில் தாயைக் காத்த தனயனும், மிட்லண்டில் படித்தால் மட்டும் போதுமாவும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.
    அன்று காலை எம்ஜிஆரின் அடுத்த படத்துக்காக வசனம் எழுதச் சென்றிருந்தபோது எம்ஜிஆர் என்னை அழைத்து, ‘போன படம் வெற்றியடைஞ்சதுக்கு உனக்கு எந்த பரிசும் நான் கொடுக்கலை. இப்போ தாயைக் காத்த தனயன் பெரிய வெற்றியடைஞ்சிருக்கு உனக்கு என்ன பரிசு வேணும்?’ என்று கேட்க, ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ணே, உங்க அன்பு இருந்தா போதும்’ என்றேன். ‘அப்படியா அப்போ நானே ஏதாவது பண்றேன்’ என்று சொல்லிவிட்டார்.
    அன்று பிற்பகல் சிவாஜி பட ஷூட்டிங் போனபோது அவர் என்னை தனியே அழைத்து, ‘ஆரூரான், இதற்கு முந்தி நீ எழுதின பாசமலர் பெரிய வெற்றியாச்சு. அதுக்கு நான் பரிசு எதுவும் தரலை. இப்போ நீ எழுதின படித்தால் மட்டும் போதுமாவும் நல்லா ஓடிக்கிட்டிருக்கு. உனக்கு என்ன பரிசு வேணும் சொல்லு. அண்ணன் கிட்டே இருந்தா தர்ரேன். இல்லேன்னா வாங்கித் தர்ரேன்” என்று கேட்டதும் நான் ஆடிப்போனேன். அதெப்படி அவர்கள் இருவரது மனதிலும் ஒரே மாதிரி எண்ணம் ஓடுதுன்னு ஆச்சரியப்பட்டேன். எம்ஜிஆருக்கு சொன்ன அதே பதிலையே இவருக்கும் சொன்னேன். ‘அன்புதான் நிறைய இருக்கே, வேறென்ன வேணும்?’ என்றார். நான் ஒண்ணும் சொல்லவில்லை.

    இரண்டு நாள் கழித்து எம்ஜிஆர் பிக்சர்ஸ் அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி வரச் சொன்னாங்க. போனபோது எம்ஜிஆர் இருந்தார். ஒரு பெரிய வெள்ளித் தட்டில் நான்கு மூலைகளிலும் சிறிய தங்கத் தகடுகள் பொருத்தியிருக்க, தட்டின் நடுவில் ‘எம்ஜியார் பிக்சர்ஸ் தாயைக் காத்த தனயன் வெற்றிக்கு ஆரூர் தாஸ் அவர்களுக்கு அன்பளிப்பு’ என்று பொறிக்கப்பட்டிருந்த அந்த தட்டை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

    1962 – ஆம் ஆண்டு, தமிழ்ப்புத்தாண்டில், திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய ‘தாயைக் காத்த தனயன்’திரைப்படத்தைத் தொடர்ந்து தேவர் பிலிம்சாரின் ‘குடும்பத் தலைவன்’ திரைப்படம் அதே ஆண்டு சுதந்திரதிருநாளன்று வெளியிடப் பெற்று மகத்தான வெற்றியைக் கண்டது.

    இதில் அதிசயம் என்னவென்றால், தேவர் பிலிம்ஸ் என்ற ஒரே நிறுவனம் தொடர்ந்து வெளியிட்ட இரண்டுபடங்களிம் வெற்றியை ஈட்டின என்பது மட்டுமன்று. இரண்டு படங்களிலும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்,கதாநாயகி சரோஜாதேவி; கதை வசனம் ஆரூர்தாஸ், இயக்கம் எம்.ஏ. திருமுகம்; இசை கே.வி.மகாதேவன்; பாடல்கள் கண்ணதாசன்.

    இப்படியொரு கூட்டமைப்பினரின் இரு படங்கள் இடைவெளியின்றி, நான்கு மாதங்களுக்குள்வெளியிடப்பட்டு வெற்றி பெற்றதாக உலகப்பட வரலாற்றில் எங்கும் காண இயலாது என்பதே உயர்வானஅதிசயம்.

    ‘குடும்பத்தலைவன்’ படத்தில் கண்ணதாசன் எழுதியுள்ள பாடல்கள் எல்லாம் நல்ல பாடல்களே!

    “மழை பொழிந்து கொண்டே இருக்கும்
    உடல் நனைந்து கொண்டே இருக்கும்!”

    இவ்விதம் தொடங்கும் பாடலில்,

    “ஆயிரம் யானை பலமிருக்கும்
    அல்லிக்கொடி போல் மனமிருக்கும்
    தாயின் பாசம் நிறைந்திருக்கும்
    தாவியணைத்தால் மெய் சிலிர்க்கும்!”

    என்று, புரட்சிநடிகரைப் பார்த்து நாயகி பாடுவதுபோல் கவியரசர் எழுதிய பாடல், எம்.ஜி.ஆரைஎடைபோட்டுப் பார்த்து, இந்தப் புவியோர்க்குச் சொன்ன உண்மையைப்போல் உள்ளதல்லவா?

    பலம் – ஆயிரம் யானை பலம்!

    மனம் – அல்லிக்கொடிபோல் மென்மை மனம்!

    பாசம் – தாயின் பாசம்!

    அணைப்பு – ஆடவர்க்கும் மெய்சிலிர்க்கும் அணைப்பு!

    கவியரசர் எம்.ஜி.ஆரைப் பார்த்த பார்வைகள் அனைத்துமே பாங்கானவையே.

    “திருமணமாம் திருமணமாம்
    தெருவெங்கும் ஊர்வலமாம்!”

    என்று தொடங்கும் பாடலும், இன்றும் திருமண மேடைகள்தோறும் ஒலிக்கக் கேட்கிறோம்.

    “அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்!”

    இப்படித் தொடங்கும் கவிஞர் பாடலில், எம்.ஜி.ஆரின் புகழ் எப்படியெல்லாம் எடுத்துக் கூறப்பெற்றுள்ளனஎன்பதைப் பாருங்களேன்!

    “வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை – மன
    வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை!
    …………………………………
    அத்திப்பூ முகத்தைக் காண எத்தனைக் கூட்டம் – அதைத்
    தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம்!”

    பார்த்தீர்களா?

    எல்லோர்க்கும் எங்க வீட்டுப் பிள்ளையாய்த் திகழ்ந்து, ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’, என்று கூறியஎம்.ஜி.ஆருக்கு எல்லோரும் வேண்டியவர்கள்தானே! மக்களின் மனமெனும் வீடுகளுக்குள் அவர் என்றும்இருப்பார்! அதனால்தானே அவர் ‘மக்கள் திலகம்’ எனும் மகுடத்தைச் சூடிக்கொள்ள முடிந்தது.

    மனங்களுக்குள் இருக்கும் அவரைக் காணாமல், அழகு மிளிரும் அவரது அத்திப்பூப் போன்ற முகத்தைக்கண்டு தரிசிக்கவே தினம் மக்கள் கூட்டம் எல்லையின்றி அலைமோதுகிறதாம்.

    இதனால்தான் அறிஞர் அண்ணாவும், எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘தம்பீ! நீ முகத்தைக் காட்டினால் போதும்!முப்பது இலட்சம் ஓட்டு வரும்!’ என்று கூறினாரோ?

    அத்தகு அருள்பாலிக்கும் முகத்தைத் தொடர்ந்து பார்த்து வந்தால், மனதிலுள்ள வாட்டமெல்லாம் தீர்ந்துபோகுமாம்!

    இப்படியோர் திரையிசைப் பாடலில், அதுவும் காதலி கூற்றாக வரும் பாடலில், எம்.ஜி.ஆர் எனும்தனிமனிதரின் குணநலன்களைக் கூறிப் பக்குவமாகப் புகழ யாரால் முடியும்? கவியரசரால் மட்டுமேமுடியும்!

    இன்னும்;

    “கட்டான கட்டழகுக் கண்ணா! – உன்னைக்
    காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?….”

    எனும் வினாவோடு தொடங்கும் பாடலில்;

    “மதயானை வடிவமே!
    நடமாடும் வீரனே!
    மலர் போன்ற உள்ளமே வா!….”

    என்று மதுரைவீரனாய், மன்னாதிமன்னனாய்த் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் வடிவப் பொலிவினையும், வீரத்தின்திட்பத்தையும்; கண்ணதாசன் பாடலை யாரால்தான் கேட்காமல் இருக்க முடியும்?
    உலகியல் தத்துவம்!

    புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள்,தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

    அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில்ஐயமில்லை.

    விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன்எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி,டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!

    “மாறாதய்யா மாறது!
    மனமும் குணமும் மாறாது!
    துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
    தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)

    காட்டுப் புலியை வீட்டில் வச்சு
    கறியும் சோறும் கலந்து வச்சாலும்
    குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
    கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)

    வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
    மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
    காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
    காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!

    திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
    திருடும் கையைக் கட்டி வச்சாலும்
    தேடும் காதைத் திருகி வச்சாலும்
    ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”

    பாடலைக் கண்டீர்கள்!

    இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால்புறந்தள்ள முடியும்?

    இவற்றைப் புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்ததரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத்தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன்எழுதியுள்ளார். முடிந்த மட்டும் நாமும் பார்ப்போமாக.
    உலகம் பிறந்தது எனக்காக!
    எம்.ஜி.ஆருக்காக!

    ‘குடும்பத்தலைவன்’ படம் வெளிவந்து பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த இரண்டாவதுவாரமே, ஆர்.ஆர். பிக்சர்ஸாரின் ‘பாசம்’ திரைப்படம் 31.8.1962 அன்று திரையிடப்பட்டது.

    தித்திக்கும் தேனாறாய் இப்படத்தின் பாடல்கள் தமிழகமெங்கும் ஒலிக்கத் தொடங்கின.

    “ஜல் ஜல ஜல்லெனும் சலங்கையொலி”

    என்று, ஒலி எழுப்பி,

    “அவன்தான் திருடன் என்றிருந்தேன்
    அவனை நானும் திருடிவிட்டேன்!
    முதல் முதல் திருடும் காரணத்தால்
    முழுசாய்த் திருட மறந்துவிட்டேன்!….”

    எனத் தொடரும் பாடலை, எஸ். ஜானகியின் இன்பக் குரலில் எழுந்த பாடலை, சரோஜாதேவியினஇன்முகத் தோற்றத்தில் காட்சி வடிவாய் வரும் பாடலை, பெண்மனக் காதலை, புதிய இலக்கிய நயத்தில்கண்ணதாசன் எழுதிய பாடலை எவரால் மறக்க முடியும்?

    கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கவிதைக் கடலில் நீந்தியவர் கவியரசர். அந்தக் கம்பரின் இலக்கியத்தைத்தேன்சுவைச் சாறாக்கிக் கொடுப்பதில் தனி இன்பம் கண்டவர் கவியரசர்.

    இப்படத்தில் கம்பரின்,

    “கால்வண்ணம் அங்கே கண்டேன்!
    கைவண்ணம் இங்கே கண்டேன்!”

    எனும் பாடலைச் சுவைத்த கவியரசர்,

    “பால்வண்ணம் பருவம் கண்டு
    வேல்வண்ணம் விழிகள் கண்டு
    மான்வண்ணம் நான் கண்டு
    வாடுகிறேன்!…..
    கண்வண்ணம் அங்கே கண்டேன்
    கைவண்ணம் இங்கே கண்டேன்
    பெண்வண்ணம் நோய் கொண்டு
    வாடுகிறேன்!….”

    என்றெல்லாம் ஆரம்பமாகி, மெல்லிசைக் குரலோன் பி.பி. ஸ்ரீநிவாசனும், கொஞ்சும் சலங்கைக் குரல் எஸ்.ஜானகியும் மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – ராம்மூர்த்தி இருவரது இணைந்த இசையில் மயங்கிப்பாடும் பாடலாக யார்த்துத் தந்தார்.

    இன்றைய திரைக் கவிஞர்கள் இதுபோன்ற பாடல்களைத் தினமும் கேட்டு, சிந்தித்தால் தரமானபாடல்களைத் தமிழ்த் திரையுலகிற்குச் சீதனமாகத் தரலாமே! சிந்திப்பார்களா?

    ‘பாசம்’ படத்தில் வரும் பரவசமான பாடல்! பைந்தமிழ் நாடெங்கும் இன்னும் இனிமையாய் ஒலிக்கும்பாடல்! டி.எம். சௌந்தரராஜன் குரலில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல்! புரட்சித்தலைவருக்கென்றேபுத்துணர்ச்சியோடு, புதுமை எண்ணங்களோடு, புவியே பாராட்டக் கவியரசர் உருவாக்கித் தந்த உயர்வானபாடல்! எதுவென்று எல்லோர்க்கும் தெரியுமே! பாடலை ஆனந்தமாய்ப் படித்து… ஏன்? பாடித்தான்பாருக்களேன்!

    “உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
    மடியை விரித்தாள் எனக்காக!…..”

    படித்து, பாடித்தான் பார்த்தீர்களா?
    உலகம் பிறந்ததும்
    ஓடும் நதிகளும்
    மலர்கள் மலர்வதும் எனக்காக!
    என்று சொல்வது யார்? எம்.ஜி.ஆர்!
    சொல்ல வைத்தவர் யார்? கண்ணதாசன்.
    எல்லாமே எம்.ஜி.ஆருக்காக! அதற்காகத்தான் இயற்கை
    அன்னையும்; சத்யா அன்னையும் மடியை விரித்தார்களாம்!

    இன்னும் பாருங்களேன்!

    “காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
    கடலில் தவழும் அலைகளிலே
    இறைவன் இருந்ததை நான்றிவேன்
    என்னை அவனே தான்றிவான்!….”

    ஆம்!

    பண்டைத்தமிழர் மரபுப்படி, இயற்கையின் வடிவங்கள் எல்லாம் இறைவனே! அம்முறைப்படி, காற்றின்ஒலியில், கடலின் அலையில் இறைவன் இருப்பதைப் புரட்சித்தலைவர் அறிவாராம்! பூமி தந்த அந்தப்புனிதனை இறைவனும் அறிவானாம்!

    அவரது அரசாங்கம் எத்தன்மையாதாம்? கவிஞரின் கவிதையே சொல்லட்டுமே!

    “தவழும் நிலவாம் தங்கரதம்
    தாரகை பதித்த மணிமகுடம்
    குயில்கள் பாடும் கலைக்கூடம்
    கொண்டது எனது அரசாங்கம்!”

    தன்னைத் தாங்கும் தங்க ரதமே வானத்தில் தவழும் நிலவாம்! தனது மணிமகுடமோ வானத்துநட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட மணிமகுடமாம்! அரச மாளிகையோ, இன்னிசைக் குயில்கள் பாடும்கலைக்கூடமாம்! இவையனைத்தும் கொண்டதுதான் எம்.ஜி.ஆரின் அரசாங்கமாம்!

    அவர் ஆண்டபோது, தமிழக மக்களின் மனமகிழ்ச்சியும், எழுச்சியும் இப்படித்தானே எட்டமுடியாதனவற்றையெல்லாம் எட்ட முடிந்த நிலையில் இருந்தன….

    நியாயவிலைக் கடைகளில் அரிசி முதல் அனைத்திற்கும் பஞ்சமில்லையே! ஐந்துகிலோ எடையுள்ளபாமாயில் டின்கள் அல்லவா தங்களைத் தாங்குவார் கரங்களித் தேடித்தேடி அலைந்தன?

    எதற்கும் பஞ்சமில்லாத ஆட்சியல்லவா எம்.ஜி.ஆரின் ஏற்றமிகு பொற்கால ஆட்சி!

    படங்களில் பாடியதுபோல் பாராண்ட பண்பாளர் அல்லவா எம்.ஜி.ஆர்! இதிலென்ன ஐயம் என்றுதானேஅனைவரும் கேட்பார்கள்?

    எல்லாம் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் எண்ணம் மட்டும் எப்படி இருந்ததாம்….?

    கண்ணதாசன் கவி வழியில் கேட்போமே!

    “எல்லாம் எனக்குள் இருந்தாலும்
    என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
    அன்னை மனமே என் கோயில்
    அவளே என்றும் என் தெய்வம்!….”

    கேட்டீர்களா?

    பொங்கித் ததும்பும் தாய்ப்பாசத்தை….! கருவறைக்குள் பத்துமாதங்களாக உருவாகும் பச்சைப்பசும்பொன்னாம் பச்சிளங்குழந்தைக்காக, கண்ணிலே உறக்கமின்றி, ஊன் உண்ணும் உற்சாகமுமின்றி,வயிற்றில் எட்டி உதைக்கும் மழலை எப்படிப்பிறக்குமோ என்று எண்ணியெண்ணி, ஈன்றபொழுதுபெரிதுவக்கும் பெறற்கரிய அன்னையைவிடப் பெருந்தெய்வம் உலகில் உண்டா? இல்லை! இல்லவேஇல்லை.

    இதனால்தான்,

    ‘எல்லா நலங்களும், வளங்களும் எனக்கென்றே இருந்தாலும், என்னைத் தனக்குள்ளேயே வைத்திருக்கும்அன்னையின் மனமே என் ஆலயம்! அவளே என்றும் என்னை ஆளுகின்ற தெய்வம்!’ என்றார் எம்.ஜி.ஆர்.

    அன்னையை வணங்காமல் எந்தச் செயலையும், எந்நாளும் செய்தறியாத எம்.ஜி.ஆரைப் பற்றிஅறிந்ததால்தான், கண்ணதாசனால் அவருக்கு ஏற்றபடி, காலத்தை வெல்லும் பாடலை எழுத முடிந்தது.

    கண்ணதாசன் பாடல்களையும், எம்.ஜி.ஆரால் என்றும் அறிந்து, புரிந்து போற்ற முடிந்தது.

    1962 – ஆம் ஆண்டு வெளியான ‘விக்கிரமாதித்தன்’ படத்திலும்,

    “கன்னிப் பெண்ணின் ரோஜா
    கன்னங்கண்ட ராஜா கவிஞரம்மா…
    சிறுவிழிப் பார்வையில் காணாத சொல்லையே
    செந்தமிழ்க் காவியம்தான் காணவில்லையே!”

    என்றதோர் அருமையான பாடலைக் கண்ணதாசன் எழுதினார்.
    Courtesy .net.
    Last edited by esvee; 27th November 2017 at 11:29 AM.

  10. #1679
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினச்செய்தி -25/11/17

  11. #1680
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •