Page 150 of 401 FirstFirst ... 50100140148149150151152160200250 ... LastLast
Results 1,491 to 1,500 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #1491
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Vaidyanathan K‎
    to
    MGR ninaivugal blog
    November 7 at 9:01am

    இன்றைய தினத்தந்தி இதழில் தலையங்கத்தின் ஒரு பகுதி-எம்.ஜி.ஆரைப்பற்றி

    "மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒரு முறை கடுமையான அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது..அப்போது மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக அரிசி கிடைத்தால்தான் பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கி நிலைமையை சமாளிக்க முடியும் என இருந்தது.

    அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ராகவன் மத்திய உணவுத்துறை செயலாளராக இருந்தார். எம்.ஜி.ஆர் டெல்லிக்கு சென்ற நேரத்தில் அவரை சந்திக்க வரட்டுமா? என்று கேட்டார். உடனே அந்த அதிகாரி, 'தமிழக முதலமைச்சர் என்னை பார்க்க வருகிறாரா?, நானே வருகிறேன்' என்று சொல்லி தமிழ்நாடு இல்லத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தார்.எம்.ஜி.ஆரும் கோரிக்கையைச் சொன்னார்.

    உடனடியாக பி.எஸ்.ராகவன் தனது அமைச்சக மந்திரியிடம், 'எங்கள் முதலமைச்சர் கோரிக்கை வைக்கிறார்.இதை நாம் கண்டிப்பாக செய்யவேண்டும்' என்று கூறி, அன்றே தமிழ்நாட்டிற்கு கூடுதலாக அரிசி வழங்கும் ஆணையை முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் கொடுத்தார்.

    எம்.ஜி.ஆர். மேற்கொண்ட நடைமுறையாலும் , தமிழக அதிகாரி பி.எஸ்.ராகவன் உணவுத்துறை செயலாளராக இருந்ததாலும் கூடுதல் அரிசி கிடைத்தது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1492
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    உழைப்பே உயர்வு தரும்..

    மக்கள் திலகத்தின் இந்த பொன்மொழியை அவருடைய பக்தர்கள் இன்றளவும் தெய்வத்தின் வாக்காய் எடுத்துக்கொண்டு உழைப்பிலே நம்பிக்கை வைத்து முன்னேறி கொண்டிருக்கிறார்கள்...எத்தனையோ லட்சோப லட்சம் மக்கள் அவருடைய நற்போதனைகளை கேட்டு அதன் வழி நடக்கிறார்கள்...வறுமையாய் இருந்தாலும் தவறான வழியில் நடக்காமல் வாழ்பவர்கள்.. பொதுசேவை மனப்பான்மை கொண்டவர்கள்..மற்றவர்களுக்கு உதவுவதில் இன்பம் காண்பவர்கள்..இத்தகைய பக்தர்களை உருவாக்கி வியக்கத்தக்க சாதனையை நம் தெய்வத்தால் மட்டுமே நிகழ்த்த முடிந்தது..

    புதுச்சேரியில் 'உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்ற பொன்மொழிக்கேற்ப டீக்கடை நடத்தி வாழ்ந்துகொண்டிருக்கும் திரு. பரமானந்தம் கூறும்போது..'நான் எம்ஜிஆரின் தீவிர ரசிகன்..என் கடையில் கூட எந்த தெய்வங்களின் படங்களை வைத்திருப்பது கிடையாது..எம்ஜிஆரின் ஓவிய படத்தை வைத்துதான் பூஜை செய்கிறேன்..அவர்தான் என் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருந்து வருகிறார்" என்கிறார்.








    கமண்ட் பகுதியில் ஒரு கமண்ட்


    Arumugam Palli பக்தர்கள் உண்மை.
    பக்தர்களாக நடிக்கும் அரசியல்வாதிகள் எம் ஜி ஆர் கொள்கை மறந்து விட்டார்கள்

  4. #1493
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Palaniappan Subbu


    விகடன் பாலுவுடன்....





    குறிப்பு



    இவர் பெயர் பழனியப்பன் சுப்புவாம். சிவாஜி கணேசன் தீவிர ரசிகராம். சிவாஜி பெயரில் முகநூல் தளம் நடத்தி வருகிறார். இருந்தாலும் மக்கள் திலகத்தின் மீதும் பிடிப்பு கொண்டவர். அதனால், மக்கள் திலகம் எம்ஜிஆர் முகநூல் தளத்திலும் உறுப்பினராகி மக்கள் திலகத்தின் அபூர்வ புகைப்படங்களை அந்த தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

    விகடன் பாலுவுடன் மக்கள் திலகம் இருக்கும் புகைப்படத்தையும் இவர்தான் பதிவு செய்துள்ளார். இவர் பற்றிய தகவல்களை எம்ஜிஆர் தளம் குரூப் அட்மின் துரை வேலுமணி சாென்னார்.

    வேறுபாடு இல்லாமல் எல்லாரின் மனதையும் மயக்கும் மக்கள் திலகம் வீச்சை நினைத்தால் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  5. #1494
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like


    நன்றி பழனியப்பன் சுப்பு. எம்ஜிஆர் முகநூல் தளம்

  6. #1495
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like



    நன்றி விநாயகம் தங்கவேல் முகநூல்

  7. #1496
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    தூத்துக்குடிக்கு, முதல்வர் புரட்சித்தலைவர் வருகை தந்த போது அவர் பேசுவதற்காக "தருவை" மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தலைவர் வரார்னா கூட்டத்துக்கு சொல்லணுமா ??? செம கூட்டம்...
    ஆண்களும், பெண்களுமென அலைமோதியது.. அதனால் நெரிசல் அதிகமாகியது...

    வெளியில் நின்றிருந்த பல தாய்மார்கள் தலைவரின் மீதிருந்த பேரன்பின் காரணமாக, மைதானத்திற்குள் வருவதற்காக, காம்பவுண்டு சுவர் மீது ஏறிக்குதித்து போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி, உள்ளே நுழைந்தனர். இதனால் காவலர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக லத்திக்கம்பால் அவர்களை கண்ட்ரோல் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

    இதை மேடையிலிருந்து கவனித்த எம்ஜிஆர் உடனே ஒலிப்பெருக்கியில், "காவலர்கள் தங்களிடமுள்ள லத்திக்கம்புகளை உடனே மேடையில் ஒப்படைக்கவும்" என அறிவிப்பு செய்தார். போலீசாரும் லத்திக்கம்புகளை மேடையில் ஒப்படைத்தனர்... நிகழ்ச்சி முடியும் வரை வத்திக்கம்புகளை காவலர்கள் வசம் ஒப்படைக்கவில்லை..

    நிகழ்ச்சி முடியும் போது எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா ?

    கையில் ஒரு லத்திக்கம்பை எடுத்துக்கொண்டு, மேடையிலிருந்து தமக்கே உரிய பாணியில்... வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, மக்கள் கடலின் நடுவே, "#சிலம்பம்" ஆடியவாறே லத்தியை சுழற்றிக் கொண்டு , மக்களைப் பார்த்துப் புன்னகைத்தவாறே தனது கார் வரை சென்று கையசைத்தவாறு விடைபெற்றார்...

    இப்பேர்ப்பட்ட ஒரு காட்சியைக்கண்ட மக்களும், பணியில் இருந்த காவலர்களும் எழுப்பிய விசில் சத்தங்களிலும், கரவொலிகளிலும் விண்ணைக் கிழித்தன... அந்தக் காட்சியைக் கண்ட கண்கள் புண்ணியம் செய்தவை. என் கண்களும் புண்ணியம் பெற்றன. வாழ்க்கையில் மறக்க முடியாத காட்சி.

    பின்னர் அனைத்து லத்திகளும் காவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

    #முதலமைச்சராக #இருந்தாலும், #நமக்கு #எப்பவுமே #எம்ஜிஆர் #பாசமிகு #வாத்தியார் #தான்




    நன்றி முத்து செல்வ ரத்தினம் முகநூல்.

  8. #1497
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Santhanam Admk


    புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது.

    "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை .
    நன்றி ஆனந்த விகடன் 18-07-1982.


  9. #1498
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி பாஸ்கரன் செல்லத்துரை

    இந்த நிகழ்வு 2013-ம் ஆண்டு நடந்தது.






    மலேசியா பிரதமர் துறை அமைச்சரின் கையில் மக்கள் திலகத்தின் புத்தகம்

    இந்தியாவிற்கே பெருமை தேடித்தந்த இதய தெய்வம்.

    புரட்சி நடிகர் நடித்த படங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டெல்லி போன்ற இடங்களில் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது. அதே போல உலக அளவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர், பினாங் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது..மலேசியாவில் தலைவரின் படங்கள் வெளியாகும்போது தமிழரல்லாத சீனர்களும், மலேயரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த வரலாறுகளும் உண்டு..அவர்களில் பல பேர் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆனார்கள். அப்படி எம்ஜிஆரின் படங்களின் பாதிப்பினால் ரசிகர் ஆகி, பினாங் மாநிலத்தில் சுமார் 7 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..
    சமீபத்தில் மலேசிய கோலாலம்பூர் நகரில் அமைந்துள்ள செந்தூல் கன்வென்ஷன் சென்டரில் மலேசியா எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் சார்பில் - எம்ஜிஆர்-96' என்ற மாபெரும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தலைமை தாங்கியவர்தான் மேலே கூறப்பட்ட திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன்..இவர் தற்போது மலேசியா பிரதமர் துறை அமைச்சராக உள்ளார்.
    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகள் பணியாற்றிய எம்ஜிஆரின் பாதுகாவலர் திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார்..மலேசியா எம்ஜிஆர் ரசிகர்கள் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவசுப்ரமணியத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. டத்தோ துரைராஜ், மலேசியா பத்திரிகையாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மலேசியா இசைக்குழு சார்பாக நமது தெய்வத்தின் திரைப்பட பாடல்கள் பாடப்பட்டு எம்ஜிஆர் உடையில் கலைஞர்கள் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.. டி.எம்.எஸ். செல்வகுமார் அவர்கள் தலைவரின் பாடல்களை பாடினார்
    நமது வள்ளலின் உயர்ந்த குணங்களையும் சிறப்புகளையும் ரசிகர்களிடம் திரு.கே.பி.ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார். மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை பத்திரிகை சார்பில் ராமதாஸ் கலந்து கொண்டார்..
    மலேசியா பிரதமர் துறை அமைச்சர் திரு. டான் ஸ்ரீ கோ சூ கூன் பேசுகையில் எம்ஜிஆரை போலவே அவரது வாழ்வில் படிப்படியாக உயர்ந்தவர் தான் தங்கள் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீத் என்று கூறி, எம்ஜிஆரின் சிறப்பை மேலும் உயர்த்தினார்..இதை கேட்கும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமைதானே..திரைப்படத்தின் மூலம் நல்ல கருத்துகளை கூறி, அதன் வழி நடந்து, மங்கா புகழ் பெற்று, உலகத்தலைவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நம் தெய்வத்தின் ரசிகர்களாக இருப்பதில் பெருமிதம் ஏற்படுகிறது. விழா செய்திகள் தினமலர் மற்றும் மக்கள் குரல் நாளேட்டில் வந்திருக்கிறது.
    விழா ஏற்பாடுகளை மலேசிய எம்ஜிஆர் நற்பணி இல்லத்தின் தலைவர் ஆர்.ஜே தாமோதரன் செய்திருந்தார்..திரு. தாமோதரன் அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தர்..எம்ஜிஆர் புகழை உலகமெல்லாம் பரப்ப பாடுபடும் ஒரு உண்மைதொண்டர்..அவர் புதுச்சேரி வந்திருந்தபோது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளையின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதை இப்போது நினைவு கூர்கிறேன்..


  10. #1499
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    இதற்கு மேல் நாங்கள் என்ன சொல்ல?






    நன்றி பாஸ்கரன் செல்லத்துரை

  11. #1500
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •