Page 343 of 401 FirstFirst ... 243293333341342343344345353393 ... LastLast
Results 3,421 to 3,430 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3421
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மனித நேயர் எம்ஜிஆர்

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

    இந்த கேள்விக்கு பதில் காண சரித்திர புத்தகத்தை புரட்டினால் கிடைக்கும் அனைத்து பெயர்களும் வரலாறாக அறிந்தவை மட்டுமே. நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்து, மறைந்து 30 ஆண்டுகள் கடந்தும் ஒருவரை மக்கள் மறக்காமல் தாமாகவே முன் வந்து நினைவை போற்றுகின்றார்கள் என்றால் அந்த பெருமைக்கு சொந்தக்காரர், எம்ஜிஆர்.

    கொடிது கொடிது இளமையில் வறுமை. அந்த வறுமையின் கொடூரம் தாங்காமல் இலங்கை, பாலக்காடு, சேலம், கோவை என குடும்பத்துடன் புலம் பெயர நேரிட்ட அவலத்தை சந்தித்தவர். அந்த துயர வடுக்களை அனுபவித்த காரணத்தாலேயே வாடிய மக்களை கண்ட போதெல்லாம் துயர் துடைக்க கரம் நீட்டியவர். தமிழக ஜனநாயகத்தின் வரலாற்றை எழுதினால் அவருடைய பெயரை நிச்சயமாக தவிர்க்க முடியாது. சினிமா கவர்ச்சியால் ஆட்சியை பிடித்தவர், அட்டை கத்தி வீரர் என வசைமாரி பொழிந்தவர்கள் தங்கள் உள்மனதை தொட்டுப் பார்த்தால், அவரது நீடித்த புகழுக்கு அது மட்டுமே காரணமல்ல என்ற உண்மை புரியும்.

    மனித நேயம் என்பது எம்ஜிஆரின் ரத்தத்தில் ஊறிய குணம். 1940களில் சாதாரண நாடக நடிகராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியே அதற்கு உதாரணம். நாடக கம்பெனியில் இருந்தபோது தேநீர் அருந்தும் வேளைகளில் தினமும் எம்ஜிஆரே தேநீருக்கு பணம் அளிப்பதை பார்த்த வி.கே.ராமசாமி, ‘ஏம்பா, தினமும் நீயே கொடுக்கிறாய்..?’ என்று கேட்டபோது, ‘எங்கள் வீட்டில் நானும் என் அண்ணனும் சம்பாதிக்கிறோம். ஆனால், நம்முடன் இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பாத்தியம் மட்டுமே. அவர்கள் கொண்டு செல்லும் பணத்தை எதிர்பார்த்து குடும்பமே காத்திருக்கும்’ என்று பதிலளித்தவர், எம்ஜிஆர். நாடக கம்பெனியில் 4 ரூபாய் சம்பாதித்தபோது இருந்த மனித நேயத்தை லட்சங்களில் சம்பாதித்தபோதும் பட்டுப்போகாமல் காப்பாற்றியதால் தான் கோடிக்கணக்கான மக்களின் நாயகராக உயர்ந்து நிற்கிறார்.

    திரை உலகிலும் தன்னால் யாருக்கும் எந்தவித நட்டமும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால் தான், தனது முயற்சிகளை ‘நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்’ என சொந்த பணத்தைக் கொண்டே செய்து பார்த்தவர். மேலும், தனக்கு சேர வேண்டிய பணம் வந்தால் போதும் என கருதாமல் தன்னுடன் திரைப்படத்தில் பணியாற்றிய கடைக்கோடி தொழிலாளி வரை சம்பளம் பட்டுவாடா ஆகி விட்டதா என்பதை உறுதி செய்யும் குணம் தான் அரசியல் வரை அவரை அழைத்து வந்தது.


    திரைப்படம் என்பது மக்களின் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்ததாலேயே புகைப் பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்தவர். வில்லனை கை, கால்களை வெட்டி திருத்தாமல் அடி, உதையிலேயே திருத்துவது அவரது பாணி. இது என்ன சினிமாத்தனம் என்று கேட்கலாம். நிஜத்தில் எவ்வளவோ நடந்தாலும், எதிரியாக இருந்தாலும் ஒரு மனிதனை திருத்துவதற்கு அதுவே சிறந்த வழி என்பது அவரது கருத்து. ஆரம்பத்தில் தனது கதாநாயகியாக நடித்த பெண்களுக்கு மகனாக நடிக்க வேண்டிய சூழல் பின்னாளில் ஏற்பட்டபோது, அவர்களின் கதாபாத்திரத்தை அண்ணி கதாபாத்திரமாக மாற்றியவர். (உதாரணம்=உரிமைக் குரல்)

    திரைப்படத்தில் தனக்கென இப்படி சில கொள்கைகளை பின்பற்றியது மட்டுன்றி, 1952ல் தான் இணைந்த திமுகவின் கொள்கைகளையும் படங்களில் புகுத்தினார், அந்த சமயத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருந்தும் கூட. அந்த துணிச்சல், வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா? அச்சம் என்பது மடமையடா.. நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு..., உன்னை அறிந்தால்... தூங்காதே தம்பி தூங்காதே... புதியதோர் உலகம் செய்வோம்... இப்படி அவரது பாடல்களை கேட்டால் போதும் ஆயிரம் தன்னம்பிக்கை புத்தகங்களை படித்து முடித்த உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும்.

    எம்ஜிஆரின் இந்த குணங்கள் தான், அரசியலிலும் அவரை உச்ச நிலைக்கு கொண்டு சென்றது. தமிழகத்தில் இருந்து மாநில கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்புக்கு 1977ம் ஆண்டிலேயே பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் எம்ஜிஆர். மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். காங்கிரஸ் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தார். இது முரண்பாடாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘நான் தனி ஆள் அல்ல. எனது விருப்பு வெறுப்பை பார்க்க. ஒரு மாநில முதலமைச்சர். எனவே, மாநிலத்துக்கு தேவையான உதவிகளை எப்படி பெற முடியுமோ அதை எப்படியும் பெறுவேன்’ என்பது அவரது பதிலாக இருந்தது. அந்த எண்ணம் தான் தமிழக மக்களிடம் இன்னமும் நிரந்தர முதல்வராக எம்ஜிஆரை அமர்த்தி வைத்திருக்கிறது.

    அதேநேரத்தில், மத்திய அரசுக்கு வளைந்து கொடுப்பவரா? என்ற சந்தேகத்தை எழுப்பியவர்களுக்கு, ‘ராணுவம் வந்தாலும் எதிர்கொள்ள தயார்’ என மத்திய அரசுக்கு துணிச்சலாக சவால் விடுத்து மறைமுகமாக பதிலளித்தவர். இலங்கையில் உச்சகட்ட இனக்கலவரம் நடைபெற்றபோது போராளிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளித்ததோடு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சென்னைக்கு அழைத்து தனது சொந்த பணம் ரூ.5 கோடியை வழங்கியவர். பின்னாளில், இந்திரா காந்தி மூலமாக புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க உதவியவர்.

    அரிசி, உணவு, போக்குவரத்து என சாதாரண ஏழை மக்களுக்கு தேவையான அனைத்தையும் மிக நிறைவாகவே பூர்த்தி செய்தது, எம்ஜிஆரின் 10 ஆண்டு கால தொடர்ச்சியான ஆட்சி. எம்ஜிஆர் போலவே திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து கோலோச்சி விடலாம் என பலரும் கருதுகின்றனர். சிலர் முயற்சித்தும் பார்க்கின்றனர். அவர்கள் எல்லாம், ‘மனித நேயம், ஏழைகளின் மீதான அன்பு, எதிரியாக இருந்தாலும் அரவணைக்கும் குணம், தன்னம்பிக்கை, நாடி வந்தோருக்கு வாரி வழங்குதல், தேடி வந்தோருக்கு பசிப்பிணி போக்குதல் என நினைத்து பார்க்க முடியாத மாபெரும் குணங்களே அவரது நிரந்தர வெற்றிக்கு காரணம் என்பதை அறியாதவர்கள்.

    இன்றளவும் தமிழக அரசியல் அரங்கில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு இருக்கும் மரியாதை அளவிட முடியாதது. அவரது சமாதியை தினந்தோறும் சுற்றி வணங்கிச் செல்லும் மக்களே அதற்கு சாட்சி.

    வை.ரவீந்திரன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3422
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    திரையில் பேசும் வசனம் பேச்சளவில் மட்டும் அல்ல, நிஜத்திலும் அப்படியாய் தான் வாழ்ந்தவர் எம்ஜிஆர் , ஹரிதாஸ் எனும் படம் தொடர்ந்து நான்கு தீபாவளி கண்ட திரைக் காவியம். அதை குறித்து கட்டுரை எழுதுவதற்கு நான் ப்ராட்வே ( இந்த திரை அரங்கில் தான் நான்கு வருடம் ஓடியது) திரை அரங்கு உரிமையாளர் திரு, சுரேஷ் அவர்களை 2008 ஆம் ஆண்டு சந்திதேன். அப்பொழுது உலகம் சுற்றும் வாலிபன்' திரைபடத்தை மறுபடியும் வெளியிட்டு இருந்தார்கள்.

    எம்ஜிஆர் பற்றி திரு சுரேஷ் அவர்கள் சில சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொண்டார்.
    எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த நேரம், ஒரு படத்தின் வெற்றி விழா ப்ராட்வே திரை அரங்கில் மதியம் நடப்பாக இருந்தது, ஆனால் வேலை பளு காரணமாக
    எம்ஜிஆர் அவர்கள்
    3 மணி நேரம் தாமதமாக வந்தார், அவரை கண்டவுடன் கூட்டம் அலைமோதியது, ஆர்பரித்தது.
    அந்த இரைச்சலில்லும் ஒரு ஏழை மூதாட்டியின் நடுக்கமான குரலை கேட்டு அவர் அருகில் செலுகிறார், அந்த மூதாட்டி எம்ஜிஆர் அவர்களிடம் , 'மவராசா உனக்காக நான் சமைச்சி ஒரு கை பிடி சோறு கொண்டு வந்தேன், ஆனா கூட்டத்தில் எல்லாமே கொட்டி போச்சு என்றார், அவ்வளவுதானே என கூறிய எம்ஜிஆர், உடனே மூதாட்டியின் கையில் ஒட்டியிருந்த 2 பருக்கை சோற்றை மூதாட்டியின் கையே வைத்தே ஊட்டி விட வைத்தார்'. இது தான் எம்ஜிஆர் .

  4. #3423
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    .




    1940களில் தமிழ் திரையுலகம்

    எம்.ஜி.ஆர் 1936-ல் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் கழித்து 1947-ல் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். அந்த சமயம் பி.யு சின்னப்பாவும் டி.கே. தியாகராஜ பாகவதரும் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்களாக இருந்த நிலை மாறியதால், ஓர் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. 1944 ஆம் வருடம் நவம்பர் 27-ல் லட்சுமி காந்தன் கொலைவழக்கில் கைதான பாகவதர் 1966-ல் விடுதலை பெற்று வந்ததும் படங்களில் முன்பு போல் ஆர்வம் காட்டவில்லை. சில படங்கள் நடித்தபோதும் அவை சரியாக ஓடவில்லை.

    எம்.ஜி.ஆர் ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக நடித்த பிறகும் சில படங்களில் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 1948-ல் பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’யில் எம்.ஜி.ஆர் தளபதி வேடம் ஏற்றிருந்தார். 1949-ல் பாகவதர் நடித்து வெளிவந்த ரத்னகுமார் படத்தில் பாலதேவனாக சிறுபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பாகவதருக்குத் தரவில்லை. அவர் சரிவை சந்தித்தார். அந்தச் சரிவு எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர் 1948-ல் வி.என். ஜானகியுடன் ‘மோகினி’, 1950-ல் ஜி. சகுந்தலாவுடன் ‘மந்திரிகுமாரி’, 1951-ல் மாதுரிதேவியுடன் ‘மர்மயோகி’ அதே ஆண்டில் அஞ்சலி தேவியுடன் ‘சர்வாதிகாரி’ என தொடந்து நடித்து முன்னேரிக்கொண்டே வந்தார். மர்மயோகி பேய்ப் படம் என்பதால் குழந்தைகள் பயப்படுவார்கள் என ஏ முத்திரை பெற்றது. அது நிஜப் பேய் அல்ல என்பதால் மக்களிடையே பெரும்வரவேற்பைப் பெற்றது.

    “கரிகாலன் குறிவைத்தால் தவறமாட்டான் தவறும் என்றால் குறி வைக்க மாட்டான்” என்று எம்.ஜி.ஆர் பேசிய வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயிற்று. பலர் தம் ஆண்பிள்ளைகளுக்கு ‘கரிகாலன்’ என்று பெயர் சூட்டினர்.

  5. #3424
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பி.யு. சின்னப்பா

    முதன் முதலில் இரட்டை வேடம் ஏற்று “உத்தமபுத்திரன்” படத்தில் நடித்த பி.யு.சின்னப்பா, ஒரே படத்தில் பத்து வேடம் போட்டார். ‘ஜகதலப் பிரதாபன்’ படத்தில் நான்கு கதாநாயகிகளுடன் நடித்தவர், வாள்வீச்சில் கெட்டிக்காரர்; எம்.ஜி.ஆர் வியந்து போற்றும் மேடைக்கலைஞர். இவர் ராஜபார்ட வேடம் ஏற்ற நாடகங்களில் எம்.ஜி.ஆர் ஸ்திரீபார்ட் வேடம் ஏற்றிருக்கிறார். இத்தகைய சிறந்த கலைஞரின் மரணம் எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்துக்கு ‘ராஜபாட்டையை’ (நெடுஞ்சாலை) அமைத்துக் கொடுத்தது. 1951-ல் பி.யு. சின்னப்பா திடீரென ஒரு விபத்தில் காலமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆரின் (1952) படங்களில் ‘என் தங்கை’ இலங்கையில் ஒரு வருடம் ஓடி வெற்றிவாகை சூடியது. கிறிஸ்தவ மன்னராக எம்.ஜி.ஆர் நடித்திருந்த ‘ஜெனோவா’ (1953) நூறு நாட்களைக் கடந்து வெற்றி நடைபோட்டது. இந்தப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையை எம்.ஜி.ஆர் முதன்முதலாக அங்கீகரித்தார்.

  6. #3425
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    ஜனாதிபதி பரிசு பெற்ற ‘மலைக்கள்ளன்’

    பியுசின்னப்பா 1951-ல் மறைந்த பின்பு தமிழ்த்திரையுலகில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நிரப்ப வாள்சண்டையில் தேர்ச்சி பெற்றிருந்த எம்.ஜி.ஆருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. பி.யு. சின்னப்பாவைப் போல எம்.ஜி.ஆரும் இரண்டு கைகளாலும் வாள் சுழற்றுவதில் கெட்டிக்காரர். 1954-ல் வெளிவந்த “மலைக்கள்ளன்” தமிழுக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. 150 நாட்கள் வெற்றிநடை போட்ட இந்தப் படம் எம்.ஜி.ஆரின் வெற்றிப் பாதையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

  7. #3426
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1955 ல் குலேபகாவலி 1956-ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும், ஆகியன வெற்றிப் படங்களாக எம்.ஜி.ஆருக்கு அமைந்தன. மதுரை வீரன்’, ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் எம்.ஜி.ஆருக்கு வெற்றிப் பரிசு அளித்தன. ‘தாய்க்குப் பின் தாரம்’ படப்பிடிப்பில் காளையுடன் சண்டை போடுவதில் எம்.ஜி.ஆர் காட்டிய தயக்கம் தேவருக்கும் அவருக்கும் இடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் எம்.ஜி.ஆரின் ‘கால்ஷீட்டுக்காக’ காத்திருக்காமல் தேவர்தனது அடுத்த படமான ‘நீலமலைத் திருடனில்’ ரஞ்சனை கதாநாயகன் ஆக்கினார். படம் எம்.ஜி.ஆர் படம் போலவே இருந்தது. பெரிய வெற்றியும் பெற்றது.

    எம்.ஜி.ஆர் ரசிகர்களும் ரஞ்சனின் ரசிகர்களும் தம்முள் மோதிக் கொண்டனர். எம்.ஜி.ஆருக்கு சமமான ஒரு போட்டியாளர் வந்துவிட்டதான சூழ்நிலை உருவானது. எம்.ஜி.ஆர் உடனே தனது ‘நாடோடிமன்னன்’ படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார். பாதிப் படத்தை வண்ணப்படமாகவும் எடுத்தார். 1958-ல் வெளிவந்த நாடோடிமன்னனில் எம்.ஜி.ஆரை ரசித்த ரசிகர்கள் அதன்பின்பு ரஞ்சனை ரசிக்கவில்லை. அடுத்த ஆண்டு (1959) வெளிவந்த ராஜாமலையசிம்மனும், மின்னல் வீரனும் ரஞ்சனுக்கு தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. 1960-ல் வெளிவந்த ‘கேப்டன்’ ரஞ்சனும் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. படங்கள் ஓடாததால் அவர் தன் மனைவி டாக்டர் கமலாவுடன் அமெரிக்காவில் போய்த் தங்கிவிட்டார். இப்போது தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர் தனிச்செல்வாக்கு பெற்ற உச்ச நட்சத்திரம் ஆனார். சிலருடைய மரணமும் சிலருடைய தோல்வியும் கூட எம்.ஜி.ஆருக்கு நல்வாய்ப்பாக அமைந்தன.

  8. #3427
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மீண்டும் மீண்டும் எம்ஜிஆர்...

    —–சோழ. நாகராஜன்—————
    பழையகாலத்துத் தமிழ் சினிமாக்களை இப்போது மீண்டும் பார்க்கவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி இணையம்தான் என்றாகிப்போன காலம் இது. யூடியூபில் மட்டுமே பழைய படங்களைக் காண இயலும் என்கிற நிலை தோன்றி அநேக காலம் ஆகிவிட்டது. தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்த கதி.

    உலகமெங்கும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை மங்கச் செய்திருக்கிற டிவிடி வருகை மற்றும் பரவலாகிவிட்ட இணையதளப் பயன்பாடு போன்றவை சினிமாக்களின் திரையரங்கத் திரையிடல்களுக்குப் பெரும் சவால்களாகியிருக்கின்றன. முதல்முறை வெளியீடுகளுக்குக்கூட வசூல் உத்தரவாதமற்ற நிலைமை உருவாகியிருக்கும் இன்றைய காலத்திலும் தமிழில் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் திரையரங்குகளில் திரையிடல் வாய்ப்பையும் ரசிகர்களின் அமோக ஆதரவினையும் பெற்றிருப்பவை எம்ஜிஆர் படங்கள் என்றால் அது மிகையல்ல.

    . எம்ஜிஆர் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஒருசில படங்கள் டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிடப்பட்டு ஒரு கலக்குக் கலக்கியது பல திரையரங்குகளில்.

    புதிதாகத் தயாரிக்கப்படும் படங்களுக்குக்கூடக் கிடைக்காத பெரும் வரவேற்பைக் காலம்தோறும் எம்ஜிஆர் படங்கள் பெற்றுவருவதை உள்ளபடியே ஆய்வுக்குட்படுத்தினால் இங்கே எத்தனை ரசனை மாற்றங்கள் வந்தபோதிலும் எம்ஜிஆர் படங்களுக்கான வரவேற்பினை அவற்றால் ஒன்றும் செய்துவிட இயலவில்லை என்பதற்கான அடிப்படைகளை அறிந்துகொள்ளவும் இயலும். இந்தச் சூழலில் இதோ மற்றுமொரு எம்ஜிஆர் சினிமா 48 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, 5.1 ஒலி நுட்ப அமைப்புடன், சினிமாஸ்கோப் திரைப்படமாக வெளிவரத் தயாராகிக்கொண்டிருக்கிறது.

    எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த இந்தப்படத்தில் மறைந்த ஜெயலலிதாவும், லட்சுமியும் அவருக்கு ஜோடிகள். அவர்களுடன் அசோகன், வி.கே.ராமசாமி, சோ போன்றோரும் நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வாலி எழுதியிருக்கிறார். திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் இசை.

    ப.நீலகண்டன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். 1970ல் இந்தப் படம் முதன்முதலில் வெளியானபோதே மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. சென்னையில் மட்டும் அது திரையிடப்பட்ட அரங்குகளில் தொடர்ந்து அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் ஓடி சாதனை படைத்திருக்கிறது. ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என். கனகசபை தயாரிப்பில் உருவான இந்த மாட்டுக்கார வேலன் படத்தின் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட்ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறாராம்.

  9. #3428
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" தற்போது தஞ்சை- ராணி பாரடைஸ் A/C Dts அரங்கில் வெற்றி கரமாக நடை பெறுகிறது, அடுத்த மகத்தான டிஜிட்டல் வெளியீடுகள் "மாட்டுக்கார வேலன்", "இதயக்கனி"👌👍

  10. #3429
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    16-02-2018 @Sunlife channel telecasted Makkalthilagam's "Navarathinam" & Today 17-02-2018 @ Mursasu channel Puratchi Nadigar's "Neethikku thalai vanangu" Showing...

  11. #3430
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் இணைந்த மூன்றாவது வாரமாக பொன் மன செம்மல் "எங்க வீட்டுப் பிள்ளை" வெற்றி நடை போடுகிறார்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •