Page 157 of 401 FirstFirst ... 57107147155156157158159167207257 ... LastLast
Results 1,561 to 1,570 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #1561
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    1967- 2017 மக்கள் திலகம் எம்ஜிஆர் பொன்விழா நினை

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பொன்விழா நினைவலைகள் .

    1967.

    மக்கள் திலகம் எம்ஜிஆர் 12.1.1967ல் மறுபிறவி கண்டார் . குரலில் பாதிப்பு ஏற்பட்டாலும் ரசிகர்களும் , மக்களும் எம்ஜிஆரை தங்கள் வீட்டு பிள்ளயாக ஏற்று கொண்டு மாபெரும் ஆதரவு தந்தார்கள் .
    1967ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
    தாய்க்கு தலைமகன்
    அரசகட்டளை
    காவல்காரன்
    விவசாயி .
    சத்யா மூவிஸின் காவல்காரன் மாபெரும் வெற்றி. 1967ன் சிறந்த படமாக தமிழக அரசு விருது பெற்றது .

    1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் திலகம் முதல் முறையாக பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு மாநிலத்திலேயே அதிக வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார் .

    1968

    1968ல் நடந்த தென்காசி இடைத்தேர்தலில் எம்ஜிஆரின் பிரச்சாரத்தில் திமுக வெற்றி .


    மக்கள் திலகம் எம்ஜிஆரின் 8 படங்கள் வெளிவந்தது .அத்தனை படங்களிலும் ஜெயலலிதா ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது ,
    ரகசிய போலீஸ் 115
    தேர்திருவியிழா
    குடியிருந்த கோயில்
    கண்ணன் என் காதலன்
    புதியபூமி
    கணவன்
    ஒளிவிளக்கு
    காதல் வாகனம் .

    எம்ஜிஆரின் முதல் படம் 1936ல் சதிலீலாவதி
    1968ல் ஒளிவிளக்கு எம்ஜிஆரின் 100 வது படம் .

    எம்ஜிஆர் கதை எழுதிய ஒரே படம் ''கணவன் ''
    ஜானகி , எம்ஜிஆர் நினைவாக ஜேயார் மூவிஸ் என்ற பெயரில் வி.சி .குகநாதனின் வசனத்தில் புதிய பூமி படம் .
    ரசிகர்களுக்கு விருந்த 3 வண்ணப்படங்கள்
    ரகசியபோலீஸ் 115 , குடியிருந்தகோயில் , ஒளிவிளக்கு பிரமாண்ட வெற்றி பெற்றது .
    கண்ணன் என் காதலன் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து படைத்த படம் .
    காதல் வாகனம் - புதுமையான படம் .
    தேர்த்திருவிழா - எல்லா பாடல்களும் ரசிகர்களுக்கு தித்திக்கும் விருந்து
    அடிமைப்பெண் - ராஜஸ்தான் அரண்மனை , பாலைவனத்தில் படப்பிடிப்பு நடந்தது ..


    1969

    காதல் வாகனம் படத்திற்கு பின் 6 மாத இடைவெளிக்கு பின்னர் அடிமைப்பெண் வெளிவந்து மாபெரும் பாராட்டையும் , வசூலையும் குவித்து மதுரை நகரில் வெள்ளிவிழா கண்டது .
    சென்னை நகரில் 4 திரை அரங்கில் தொடர்ந்து 400 காட்சிகள் நிறைந்து சாதனை .
    தீபாவளி வெளியீடாக நம்நாடு படம் வெளிவந்து பிரமாண்ட வெற்றி அடைந்தது .
    மக்கள் திலகம் சிறுசேமிப்பு துணை தலைவராகவும் , திமுகவின் பொருளாளராகவும் பதவி வகித்தார் .

    1970

    எம்ஜிஆரின் 5 படங்கள் வெளிவந்தது
    மாட்டுக்கார வேலன் .
    சென்னை நகரில் 4 திரை அரங்கில் தொடர்ந்து 444 காட்சிகள் நிறைந்து மீண்டும் சாதனை .
    மாட்டுக்கார வேலன் வெள்ளிவிழா . சென்னை மற்றும் மதுரை .

    என் அண்ணன் - மாபெரும் வெற்றி . சேலம் நகரில் 70 அடி உயர கட் வுட் வைத்து சாதனை
    தலைவன் - ஜனரஞ்சகமான பொழுது போக்கு படம்
    தேடிவந்த மாப்பிள்ளை - இன்னிசை விருந்து படம்
    எங்கள் தங்கம் - திமுக தலைவரின் குடும்ப கடனை மீட்டு இன்றளவும் பணம் குவிக்கும் அமுதசுரபி படம் .
    உலகம் சுற்றும் வாலிபன் கீழ்த்திசை நாடுகளில் படப்பிடிப்பு நடந்து . சென்ற இடமெல்லாம் எம்ஜிஆருக்கு மக்கள் வெள்ளம் .
    ராமன் தேடிய சீதை - முதல் முறையாக எம்ஜிஆர் படம் காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தது .



    1971ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள்
    குமரிக்கோட்டம்
    ரிக் ஷாக்காரன்
    நீரும் நெருப்பும்
    ஒருதாய் மக்கள்

    1971ல் நடந்த தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தலில் திமுக பிரமாண்ட வெற்றிக்காக மக்கள் திலகம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு தானும் பரங்கிமலை தொகுதியில் வெற்றிபெற்று திமுகவை 2 வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்தினார் .

    குமரிக்கோட்டம் படம் 26.1.1971 அன்று வெளிவந்தது 100 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி .
    29.5.1971 அன்று வெளிவந்த ரிக் ஷாக்காரன் தென்னிந்திய திரை உலகில் பிரமாண்ட வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது .
    ரிக் ஷாக்காரன்
    நீரும் நெருப்பும்
    இரண்டு படங்களின் ஆரம்ப விசேஷ காட்சிகள் தேவி பாரடைஸ் அரங்கில் அன்றைய தமிழக முதல்வர் தலைமையில் விழா நடந்தது .

    மக்கள் திலகத்தை வைத்து மணியன் அவர்கள் இதயவீணை படத்தை துவக்கினார் . ஆனந்த விகடனில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் ''நான் ஏன் பிறந்தேன் '' தொடர்கட்டுரையையும் , பொம்மை சினிமா இதழில் ''திரைக்கடலோடி திரைப்படம் எடுத்தோம் ''என்ற தலைப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படமாக்கப்பட்ட காட்சிகளை விவரித்து தொடர்கட்டுரை எழுதினர் .

    ஒரே நேரத்தில் காஷ்மீரில் மக்கள் திலகத்தின் புதிய படங்கள்
    உலகம் சுற்றும் வாலிபன்
    இதயவீணை
    நினைத்ததை முடிப்பவன்
    நேற்று இன்று நாளை
    4 படங்களின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது .
    சென்னை வானொலியில் எம்ஜிஆர் அவர்கள் சுதந்திர தினத்தன்று சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்ச்சி நடத்தினார் .

    மக்கள் திலகம் புகழ் பெற்ற முன்னிலை நிறுவனங்களிலும் , புதிய தயாரிப்பிலும் சுமார் 15 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியிருந்தார் .

    அனைத்துலக எம்ஜிஆர் மன்றம் மிகவும் சிறப்பாக செயல் பட்டு கொண்டு வந்தது. திரை உலகம் மற்றும் திரைச்செய்தி இதழ்கள் வெளிவந்தது .
    பொம்மை , பேசும்படம் , பிலிமாலயா , சித்ராலயா போன்ற சினிமா இதழ்களில் எம்ஜிஆர் படங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெற்றது .

    முரசொலி, நவமணி , சுதேசமித்திரன் ,தினத்தந்தி தினசரி இதழ்களில் எம்ஜிஆர் பற்றிய சினிமா , மற்றும் அரசியல் இடம் பெற்று இருந்தது .

    பொம்மை இதழ் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி வாசகி மக்கள் திலகம் எம்ஜிஆரை நினைத்ததை முடிப்பவன் படப்பிடிப்பில் நேரிடையாக பேட்டி கண்டார் .

    1972.....
    தொடரும்
    Last edited by esvee; 21st November 2017 at 09:32 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1562
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகராய் இருந்து , புரட்சி தலைவராக உயர்ந்தவர் எம்ஜிஆர்


    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் நூறாவது ஆண்டு விழாவில் அவர் புகழ் மேலும் மேலும் ஓங்க அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்
    .
    சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, வறுமையை துணையாகக் கொண்டு, வாழ்க்கையை துவங்கி ஒரு நேரம் ஒரு வயிறு கஞ்சி குடிக்க வேண்டும் என்றாலும், இவர் உழைத்தால் தான் உண்டு என்கின்ற நிலையிலும் பள்ளிப் படிப்பை படிக்க வேண்டிய வயதில் நாடக வேடம் தரித்து இளம் வயதில் சினிமாவில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் ,சின்னஞ் சிறு வேடங்களை கூட தட்டிக் கழிக்காமல் நடிப்பினை காட்டி நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு கதாநாயகன் வேடம் கிட்டிய போது, தான் பெற்ற செல்வத்தை தனக்கென சேர்த்துக் வைக்காமல் தன்னை நாடி வந்த சக நடிகர் நடிகையர்க்கும், ஏழை எளியவர்க்கும் வாரி வழங்கிய வள்ளல் என பேரெடுத்து தமிழ் கூறும் நல்லுலகின் திரைப்பட நாயகனாய் உயர்ந்து புரட்சி நடிகர் என்ற சிறப்பினை பெற்றவர்எம்.ஜி.இராமசந்திரன் அவரகள் .


    தான் நடித்த திரைப்படங்களில் புகை பிடித்தல் , மது அருந்துதல் , களவு செய்தல், பெண் பித்தன் ஆதல் போன்ற சமூகத்தைப் பாதிக்கும் எந்த ஒரு தன்மையையும் தன் கதாபாத்திரத்தில் ஏற்காது அதர்மத்திற்கு எதிராய் போராடி தர்மத்தை காக்கும் உயர்ந்த குணம் படைத்த நன் மனிதராய் நடித்து தமிழக மக்களின் குறிப்பாய் பெண்களின் அன்பிற்குப்பாத்திரமாய் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களை அவரது ஒவ்வொருரசிகர்களும்தங்கள் குடும்பத்தின் தலைவராய்மதிக்கப் பெற்றார்கள்.


    எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் பெற்ற பெயரையும், புகழையும் திராவிட முன்னற்ற கழகத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வசதியாக தான் நடித்த அனைத்து திரைப்படங்களில் வசனம் அல்லது காட்சி அல்லது பாடல் ஏதேனும் ஒன்றின் மூலம் தான் கொண்ட கொள்கையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சிக்கு உரமாக நின்றவர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள்.



    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அக்கட்சியின் கணக்கு வழக்குகளில் தவறு செய்திருக்கிறது என்று உணர்ந்த போது அக்கட்சியில் கணக்கை காட்ட வேண்டும் என்று குரல் கொடுத்து, அது நடவாத போது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கின்ற புதிய கட்சியை தோற்றுவித்து, புரட்சி நடிகராய் இருந்தவர் , புரட்சி தலைவராக உயர்ந்தார்.
    திராவிடர்கழகம், திராவிடமுன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும், ஆன்மீகத்திற்கு எதிராகவும், தேசிய சிந்தனைக்கு எதிராகவும், ஜாதிய காழ்ப்புணர்ச்சியை தூண்டும் வகையில் செயல்பட்டு வந்த தன்மைக்கு மாற்றாக, அன்னை மூகாம்பிகையை தரிசிப்பதற்காக கொல்லூர் சென்று கழக அரசியலில் ஆன்மீகத்தை மலரச்செய்த பெருமை இந்த புரட்சித்தலைவரை மட்டுமே சேரும்.


    தேசிய சிந்தனைக்கு மாற்றாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எக்காலத்திலும் உருவாகிடக்கூடாது என்று, அது தன்னுடைய காலமாக இருந்தாலும், தன் காலத்திற்குப் பின்பாக இருந்தாலும், தன் கட்சியில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அ.தி.மு.க. என்று இருந்ததை அ.இ.அ தி.மு.க. என்றுபெயர் மாற்றி,தரம் உயர்த்தி, தான் என்றும் தேசியத்தின் பக்கம்தான் என்று உறுதிபட காட்டியவர் தேசபக்தர் எம்.ஜி.ஆர்.


    தனது ஆட்சியை முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு தமிழகத்தில் நிறுவிய போது, தன்னால்தான் அனைவரும் வெற்றி பெற்றார்கள் மற்றும் எம்.எல்.ஏ, அமைச்சர் ஆனார்கள் என்று நன்கு தெரிந்த பிறகும் கூட, தன்கட்சியை சார்ந்த எம்பி மற்றும் எம்.எல்.ஏக்களையும், அடி மட்டத் தொண்டர் முதல் அனைவரையும் மிகுந்த மரியாதையோடு நடத்திய மனிதாபிமானத்தின் வடிவமானவர்இந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள்.


    தனது ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை கூட்ட, பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டு வரப்பெற்ற மதிய உணவு திட்டத்தை அப்படியே ஏற்று, அதனை சத்துணவு திட்டமாக உருவாக்கி கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு வழங்கி படிக்க வைத்தவர் இந்த ஏழை பங்காளர். மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவன் உடல் நலம் இன்றி அயல் நாட்டில் சிகிச்சை பெற்றாலும், தமிழ் நாட்டில் அவரது பெயரும், புகழும் அவரது கட்சியை வெற்றி பெற வைக்க முடியும் என்று சரித்திரம் படைத்தவர், இந்த சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர்.



    தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். இனி இவர் பிழைக்கவே முடியாது என்ற நிலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும், இரண்டாவது முறையாக, உடல் நலம் குன்றி, சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போதும், அவர் செய்த தர்மம் அவரை காத்தது
    .
    கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் குடிகொண்ட இவர் பிழைக்க வேண்டும் என நம் மக்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை மீண்டும்பிழைக்க வைத்தது. இவ்வாறு, இரண்டு முறை எமதர்மனின் வீடு வரை சென்று திரும்பிய பெருமை இத்தர்மத்தலைவன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மட்டுமே உண்டு.


    திரு.எம்.ஜி.ஆரின் பேருக்கும், புகழுக்கும் ஏராளமான விஷயங்கள் இருந்தாலும், இந்திய அரசின் பாரத ரத்னா என்ற உயரிய விருதை பெற்ற மகத்தான தலைவர் என்ற பெருமையை கொண்டு விளங்கும் எம்.ஜி.ஆர்.அவர்களின் 100 ஆவது பிறந்த நாளில் அவர் தன்னைச் சார்ந்தவர்களுக்கு உணர்த்தி வைத்த ஆன்மீக உணர்வும், தேசபக்த உணர்வும், அணையாமல் காப்பது மட்டுமே எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும், எம்.ஜி.ஆரை மதிக்கின்ற நம்மைப்போன்ற அனைவருக்கும் அவர் விட்டுச்சென்ற செய்தியாகும்.

    அந்த உயர்ந்த இரு இலட்சியங்களை மனதில் ஏற்றி தமிழகத்தை தேசியத்தின் பக்கமும், தெய்வீகத்தின் பக்கமும் எடுத்துச்செல்வது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். அது ஒன்றே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில் நாம் எடுக்க வேண்டிய சபதம் ஆகும்.


    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் மேலான இத்தனலமற்ற குணங்களை போற்றுகின்ற வகையில் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், திரு.எம்.ஜி. ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு தபால் தலை வெளியிட்டிருப்பதற்காக பாரத பிரதமர் அவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பிலும், ஒட்டு மொத தமிழ் சமுதாயத்தின் சார்ப்பிலும், மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலைசாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன்

  4. #1563
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    1972

    1972
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு மகத்தான ஆண்டாக திகழ்ந்தது என்றால் அது மிகையல்ல .
    கலைத்துறையில எம்சிஆருக்கு பாரத் பட்டம்
    அரசியல் துறையில் புரட்சித்தலைவர் பட்டம்
    புதிய அரசியல் கட்சி அதிமுக நிறுவன தலைவர்
    மக்கள் செல்வாக்கின் முதல்வர்
    சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தலைவராக எம்ஜிஆர்
    ரசிகர்களுக்கு எம்ஜிஆர் படைத்த விருந்து 5 படங்கள்
    சங்கே முழங்கு
    நல்ல நேரம்
    ராமன் தேடிய சீதை
    நான் ஏன் பிறந்தேன்
    அன்னமிட்ட கை
    இதய வீணை

    எம்ஜிஆர் என்ற மாமனிதரின் ரசிகர்கள் மற்றும் மக்களின் செல்வாக்கு .கண்டு பத்திரிகைகளும் அரசியல் கட்சிகளும் வியந்து பாராட்டினார்கள் .
    மூதறிஞர் ராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து எம்ஜிஆர் வாழ்த்து பெற்றார் .

    அன்றய திமுகவின் அராஜக போக்கினாலும் , அதிகார மிரட்டல்களாலும் எம்ஜிஆர் ரசிகர்கள் , மற்றும் அனுதாபிகள் , எம்ஜிஆர் பட தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் , திரை அரங்கு உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள் . இருந்தாலும் அனைவரும் எம்ஜிஆர் என்ற மாபெரும் தலைவருக்காக இன்னல்களை தாங்கி கொண்டு எம்ஜிஆரின் பக்க பலமாக நின்றார்கள் . வெற்றியும் கண்டார்கள்

    குறிப்பாக ஒரு சிலர் எம்ஜிஆரின் வளர்ச்சியை கண்டு மனம் வெதும்பி எம்ஜிஆரின் சாதனைகளை தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்து படு தோல்வி கண்டார்கள் .

    எம்ஜிஆரின் மதுரை ரயில் பயணம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது .மக்களின் ஆதரவும் கண்கூடாக காண முடிந்தது .திரையில் மட்டுமல்ல அரசியலிலும் எம்ஜிஆர் எங்க வீட்டுப்பிள்ளை என்று மக்கள் முழக்கமிட்டது கண்டு எதிரணியினர் மிரண்டு அடங்கி போனார்கள் .

    1973... தொடரும் ///.

  5. #1564
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர்-வாரமலர் -19/11/17

  6. #1565
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து -22/11/17



  7. #1566
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் லைப் -22/11/17


    முன்னாள் முதல்வர்கள் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிடம்
    விருது பெறும் பிரபல பின்னணி பாடகி திருமதி பி.சுசீலா .

  8. #1567
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -21/11/17

  9. #1568
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் திரு.சொக்கலிங்கம் அனுப்பிய புகைப்படங்கள்
    அடங்கிய வாட்ஸ் அப் செய்திகள்

  10. #1569
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1570
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •