Page 340 of 401 FirstFirst ... 240290330338339340341342350390 ... LastLast
Results 3,391 to 3,400 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3391
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3392
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    சென்ைன காசினோ தியட்டரில் 30 வாரங்கள் மேல் 211 நாட்கள் ஓடி சாதனை செய்த படம் எங்க வீட்டுப் பிள்ளை.
    29 மற்றும் 30வது வார விளம்பரம்.


  4. #3393
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    அன்றும் .. இன்றும்.. என்றும்..



    தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முதலில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா (25 வாரங்கள்) கொண்டாடி சாதனை செய்த படம் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப் பிள்ளை. சென்னை காசினோ திரையரங்கில் 211 நாட்கள் ஓடி பழைய சாதனைகளை முறியடித்த படம். காசினோவில் மட்டுமே ரூ. 5 லட்சத்துக்கு மேல் வசூல் செய்தது.


    இதற்கு முன் அதே காசினோ திரையரங்கில் காதலிக்க நேரமில்லை படம் 25 வாரங்களைக் கடந்த ஓடினாலும் தினசரி 2 காட்சிகளாக நடைபெற்றது. ஆனால், எங்க வீட்டுப் பிள்ளை 3 காட்சிகளாக 211 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்ததையும் குறிப்பிட வேண்டும். தஞ்சையில் வெள்ளி விழா கண்ட படம் (யாகப்பா திரையரங்கம்) என்ற சிறப்பும் எங்க வீட்டுப் பிள்ளைக்கு உண்டு.


    கடந்த 2-ம் தேதி டிஜிட்டல் மெருகேற்றப்பட்டு சென்னை, கோவை, வேலூர், திருச்சி நகரங்களில் பல திரையரங்குகளில் எங்க வீட்டுப் பிள்ளை படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் முறையில் வந்த மக்கள் திலகத்தின் படங்கள்.. சென்னையில்
    1. ஆயிரத்தில் ஒருவன், 2.ரிக்க்ஷாக்காரன், 3.அடிமைப்பெண், 4.நினைத்ததை முடிப்பவன் ஆகிய படங்கள் தொடர்ந்து சென்னை தேவி திரையரங்க வளாகத்தில் வெளியாகி இப்போது 5வது படமாக எங்க வீட்டுப் பிள்ளையும் அதே வளாகத்தில் வெளியாகி உள்ளது.

    மக்கள் திலகத்தின் பழைய டிஜிட்டல் படங்கள் தொடர்ந்து ஏசி அரங்குகளிலும் மால்களில் உள்ள திரையரங்குகளிலும் குறிப்பாக தேவி வளாகத்தில் (சத்தியம் அரங்கையும் சேர்த்துக் கொள்ளலாம்) வெளியாகி வருவதும் ஒரு சாதனைதான். வேறு எந்த பழைய படங்களுக்கும் கிடைக்காத பெருமை இது.


    அந்த அளவுக்கு பெரிய ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் மக்கள் திலகம் படங்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. பழைய படங்கள் என்ன? சில நேரங்களில் ஒரு சில புதிய படங்களையும் கூட வசூலில் மிஞ்சிவிடும் ஆற்றல் மக்கள் திலகத்தின் படங்களுக்கே உண்டு. தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதமே அதற்கு உதாரணம்.


    முதலில் தேவி திரையரங்கை விநியோகஸ்தர் தரப்பில் அணுகியபோது புதிய படங்கள் வருவதால் இப்போதைக்கு எங்க வீட்டுப் பிள்ளைக்கு தியேட்டர் கொடுக்க முடியாது என்று திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி, இதற்காக காத்திருக்க வேண்டாம் என்று தேவி வளாகம் தவிர்த்து மற்ற திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. திடீரென தேவி திரையரங்கு சார்பில் எங்க வீட்டுப் பிள்ளை விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு தேவி பாலாவில் படத்தை திரையிட விரும்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். விநியோகஸ்தருக்கு இன்ப அதிர்ச்சி...



    தேவி பாலாவில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியாகி இப்போது நடக்கிறது. படத்தை வெளியிட மறுத்த தியேட்டர் நிர்வாகம் விரும்பிக் கேட்டு வாங்கி திரையிட்டிருக்கிறது. இடையில் நடந்தது என்ன? சஸ்பென்ஸை கடைசியில் பார்ப்போம்.

    அதற்கு முன் ஒரு சின்ன ஃபிளாஷ் பேக். மக்கள் திலகத்தின் 100 நாட்கள் ஓடிய வெற்றிப் படமான ரகசிய போலீஸ் 115 படம் 1968-ம் ஆண்டு வெளியாகி வசூல் பிரளயம் செய்தது. சென்னையில் மட்டுமே வெறும் பத்து நாட்களில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 470 ரூபாய், 44 காசுகள் வசூலாகி உள்ளது. சென்னையில் முதல் பத்து நாட்களில் மட்டுமே 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இத்தனைக்கும் இது பழைய டிக்கெட் கட்டணம்.


    மக்கள் திலகம் புரட்சித் தலைவராக உருவெடுத்து மக்கள் செல்வாக்கோடு தமிழக முதல்வராக அரியாசனம் ஏறிய பிறகு தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்தினார். அதற்கு முன்பு 1968-ல் தியேட்டர்களில் அதைவிடக் குறைவான டிக்கெட் கட்டணமே இருந்தது. இத்தனைக்கும் சென்னையில் ரகசிய போலீஸ் 115 படம் ஏசி திரையரங்குகளில் வெளியாகவில்லை. சென்னையில் அப்போது ஏசி திரையரங்கம் அதிகம் இல்லை. இருந்தாலும் ஏசி திரையரங்கம் என்றால் டிக்கெட் கட்டணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அதைவிட ரகசிய போலீஸ் 115 படம் திரையிட்ட அரங்குகளில், ஏசி இல்லாத அரங்குகளில் குறைவான கட்டணம்தான்.

    அப்படி இருந்தும் வெறும் 10 நாட்களில் சென்னையில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான வசூலை ரகசிய போலீஸ் வாரிச் சுருட்டினார் என்றால், M(aximum). G(uarantee). Ramachandran -ஐ வசூல் சக்ரவர்த்தி என்று அழைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

    சென்னையில் 10 நாட்களில் வசூலான தொகையையும், வசூல் சக்ரவர்த்தி என்று மக்கள் திலகத்தைக் குறிப்பிட்டும் 1968-ல் படம் வெளியானபோது நாளிதழில் கொடுக்கப்பட்ட விளம்பரம்.

    இதில், இன்னொன்று... எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியானபோது காசினோவில் மட்டுமே ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்தது என்று முதலில் சொல்லியிருந்தேன். அதற்கு ரகசிய போலீஸ் விளம்பரம் போல விளம்பர ஆதாரம் கிடைக்கவில்லை. அப்போதைய ரசிகர்கள் குறித்து வைத்திருந்தது மற்றும் நோட்டீஸ்கள்தான் உள்ளது.

    ஆனால், 10 நாட்களில் 5 தியேட்டர்களில் ரகசிய போலீஸ் 115 படம் 2 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்றால், காசினோவில் 211 நாட்கள் ஓடிய எங்க வீட்டுப் பிள்ளை படம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக (காசினோவில் மட்டும்) நிச்சயம் வசூலித்திருக்கும் என்று புரிந்து கொள்ள கணக்கில் புலியாக இருக்கத் தேவையில்லை. பச்சைக் குழந்தைக்கும் புரியும்.



    இப்போது, தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளையை திரையரங்க உரிமையாளர்களே திரையிட விரும்பி விநியோகஸ்தரை அணுகியதன் சஸ்பென்சை உடைப்போம்...

    கடந்த 2-ம் தேதி ‘ புதிய படம் வெளியாகி உள்ளது. தேவி வளாகத்திலும் அந்தப் படம் திரையிடப்பட்டது. படத்துக்கு ஒற்றை இலக்கத்திலேயே ஆட்கள் வந்துள்ளனர். பதறிப் போன தியேட்டர் நிர்வாகம் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை விநியோகஸ்தரிடம் விரும்பிக் கேட்டு வாங்கி தேவி பாலாவில் திரையிட்டுள்ளது.

    முதலில் தேவி நிர்வாகம் மறுத்ததால்தான் எங்க வீட்டுப் பிள்ளை படம் 2-ம் தேதி தேவி பாலாவில் வெளியாகவில்லை. இரண்டு நாள் கழித்து 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் திரையிடப்பட்டது. அதிலும் நாளிதழ் விளம்பரத்தில் பகல் 12.30 மணி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், படத்துக்கு மற்ற திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பால் முக்கிய நேரமான மாலைக் காட்சியாக 7 மணிக்கு திரையிட்டு வருகின்றனர். இதுதான் தேவி வளாகத்தில் எங்க வீட்டுப் பிள்ளை படம் வெளியான விதத்தின் சுவாரசியம்.

    ஒரு சில புதிய படங்களை விடவும் மக்கள் திலகத்தின் பழைய படங்கள் வசூலைக் கொடுக்கும் என்பதற்கும் அதனால்தான் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் (ஏசி திரையரங்குகள், மால்களில் உள்ள திரையரங்குகள் கூட) விரும்புகிறார்கள் என்பதற்கும் இப்போதைய உதாரணமாக திகழ்கிறார் தமிழக மக்கள் சொந்தம் கொண்டாடும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’யான மக்கள் திலகம்.

    1968-ல் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரகசிய போலீஸ் 115 படம் வெளியானபோது அன்று மட்டுமல்ல, எல்லா வகையறாக்களையும் ஓரம் கட்டி, ஏழைகளின் இதய தெய்வம் இன்றும் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார் . என்றும் திகழ்வார்.

    நன்றி - அகில உலக எம்ஜிஆர் மன்றம் முகநூல்
    Last edited by esvee; 7th February 2018 at 05:24 PM.

  5. #3394
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    COURTESY - FACEBOOK
    MADURAI KANNAN MGR FAN


  6. #3395
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3396
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3397
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3398
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    திராவிட இயக்கத்தை வளர்த்தவர்... பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்

    அவர் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைத் தன் படங்களில் பேசினார். பாடல்களில் பரப்பி னார். நாடோடி மன்னன் படத்தில் நான்கு திராவிட மொழிகளிலும் ஒரு பாடலை வைத்தார். அவரது படங்களில் உதய சூரியன் சின்னம் வரும். அண்ணா என்ற பெயர் வரும். அண்ணா மறைந்தபிறகு அவரது உருவம் மறைந்து விடாமல், அவரது உருவத்தைக் கொடியில் போட்டுப் பாதுகாத்தவர் எம்.ஜி.ஆர்., என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அதனால் தான் நான் பேசுகிறேன். திராவிட இயக்கத்திற்கு அழிவு வரும் என்கிறார்களே அதனால் பேசுகிறேன். அண்ணா என்ற எழுத்தையும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். சோதனையான காலத்தில் திராவிட இயக்கத்தைப் பாதுகாத்தார்.

    இன்றைக்குத் திரைப்படங்களில் எத்தனையோ வன்முறைக் காட்சிகள் வருகின்றன. அரிவாளால் துண்டு துண்டாக வெட்டுகின்ற காட்சிகள், கத்தியால் குத்திக் கொல்லுகின்ற காட்சிகள் வருகின்றன. ஆனால், எம்ஜிஆர் நடித்த எந்தப் படத்திலாவது ரத்தம் கொட்டுகின்ற காட்சிகள் உண்டா? குரூரமான காட்சிகள் உண்டா? வன்முறை உணர்வை ஏற்படுத்துகின்ற காட்சிகள் உண்டா?

    எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகள் போர்த்திறனையும் வீரத்தையும் ஊட்டின. வக்கரித்துப் போன ஆத்திர உணர்ச்சியை ஏற்படுத்தவில்லை. அவரது படங்கள் கருத்து களைச் சொன்னது, கொள்கையைப் பேசியது. பிள்ளைகள் திருந்தி வாழ வேண்டும் என்றார். கலையை, தன் வாழ்வைச் சமூக முன்னேற்றத்திற்காகவே ஒப்படைத்துக் கொண்டு பாடு பட்டார்.

    அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர்., அவர்களைப் பற்றித் தம்பி பிரபாகரன் அவர்கள் என்னிடம் சொன்ன போது, இவ்வளவு செய்து இருக்கின்றாரே... அவர் இன்னும் பத்து ஆண்டுகள் இருந்திருந்தால் இந்தப் படுகொலைகள் நடை பெற்று இருக்காதே... தமிழ் ஈழம் மலர்ந்து இருக்குமே... என்பதை எண்ணிப் பார்த்தேன். (கைதட்டல்) உலகம் முழுமையும் வாழுகின்ற தமிழர்கள் அவரைத் தெய்வமாகப் போற்றுகின்றார்கள். கோடானுகோடித் தாய்மார்கள் உள்ளங்களில் இன்றைக்கும் அவர் வாழ்கின்றார்.

    அண்ணா இன்று உயிரோடு இருந்தால் எம்.ஜி.ஆரைப் பற்றி என்ன சொல்வாரோ, அண்ணா இமயம், நான் ஒரு கூழாங்கல், நான் அவரது தொண்டன் என்ற முறையில் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லுகிறேன்.

    அவருடைய நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கு இந்த அரங்கத்தைத் தந்தவர்களுக்கு நன்றி. நெடுநேரம் அமர்ந்து இந்த எளியவன் உரையைச் செவிமடுத்ததற்கு நன்றி. எம்.ஜி.ஆர். புகழ் என்றைக்கும் நிலைத்து இருக்கும்.

    இன்றைக்கு இந்த நூற்றாண்டுத் தொடக்கவிழாவை நடத்தியது போல், நிறைவு விழாவையும் கட்சி சார்பு அற்ற முறையில் நானே நடத்துவேன். வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

    எம்.ஜி.ஆர். புகழ் வாழ்க!

    இவ்வாறு பொதுச்செயலாளர் வைகோ உரை ஆற்றினார்.

  10. #3399
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்த் திரைப்பட உலகில் வசூலில் சாதனை படைத்த எங்க வீட்டுப் பிள்ளை 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ல் வெளியானது. இப்போது 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், எஸ்.வி. ரங்காராவ், பண்டரிபாய், தங்கவேலு, நாகேஷ் நடித்தது. பாடல்கள் வாலி, ஆலங்குடி சோமு. இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி. தயாரிப்பு விஜயா புரொடக் ஷன்ஸ், நாகிரெட்டி, சக்ரபாணி. இயக்கம் சாணக்யா.

    சிக்கல் இல்லாத தெளிவான கதை, அளவான வசனங்கள், உறுத்தல் இல்லாத காதல் காட்சிகள், மிகையில்லாத நடிப்பு. அற்புதமான படத்தொகுப்பு. தெவிட்டாத இசை. சுவையான காட்சிகள். எம்.ஜி.ஆர். என்ற நட்சத்திரக் கதாநாயகனுக்காகத் திணிக்கப்பட்ட காட்சிகளாக இல்லாமல் திரைக்கதைக்கு ஏற்ற காட்சிகளை மட்டுமே வைத்து சுவை குன்றாமல் கொண்டு போயிருக்கிறார்கள். பாடல்களில் ‘பெண் போனால்… இந்தப் பெண் போனால்’ என்ற பாட்டு மட்டுமே சுமார். அதுகூட இல்லாவிட்டால் அந்தக் காலத்து தியேட்டர் பீடா ஸ்டால்கள் பிழைப்பது எப்படி?

    பூஞ்சோலை ஜமீன்தார் குடும்பக் கதை. ஜமீன்தாருக்கு ஒரு மகள், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டைக் குழந்தைகளாக இரண்டு பையன்கள். பழனி பங்குனி உத்திரத் திருவிழாவில் இளைய மகன் காணாமல் போய்விடுகிறான். புத்திசாலியான ஜமீன்தார் தம்பதி தங்களிருவரின் புகைப்படங்கள் பொருத்திய லாக்கெட்டை இரண்டு மகன்களுக்கும் முதலிலேயே போட்டுத்தான் கூட்டிச் செல்கிறார்கள். சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்குப் பிறகு அதை ஆதாரமாக வைத்து அவர்கள் இணைகிறார்கள். சின்ன மகன் காணாமல் போன ஏக்கத்தில் ஜமீன்தாரிணி இறந்துபோக, அவர் இறந்த ஏக்கத்தில் ஜமீன்தார் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். பிறகு அவரும் இறந்துவிடுகிறார். ஜமீன்தாரின் பெண்ணுக்கே தனது தம்பியைத் திருமணம் செய்துவைத்துவிடுகிறாள் இளைய ஜமீன்தாரிணி.

    ஜமீன்தாரின் மகன் ராமுவைப் படிக்க வைக்காமல், பயந்தாங்கொள்ளியாக வளர்த்து சொத்தை அபகரிக்கப் பார்க்கிறார் நம்பியார். கிராமத்தில் குடியானவர் வீட்டில் வளரும் இன்னொரு எம்.ஜி.ஆர். நன்றாகப் படித்ததுடன் அடி தடி சண்டைகளில் ஆர்வமுள்ளவராக வளர்கிறார். விவசாயத்தில் நாட்டம் போகவில்லை அவருக்கு. அந்த ஊருக்குப் பக்கத்தில் சங்கரன்காடு என்ற கிராமத்தில் பழைய ஜமீன்தாரிணி அம்மா புத்தி பேதலித்து, பேத்தியுடன் தனியாக வாழ்கிறார். அவர்தான் இரட்டையர்கள் புதிரை அவிழ்த்து கிளைமேக்ஸில் அனைவரையும் இணைத்து வைக்கிறார்.

    குதிரை சவுக்கால் அடி வாங்கி நொந்துபோகும் சாது எம்.ஜி.யார் வீட்டைவிட்டு ஓட, இன்னொரு எம்.ஜி.ஆர். தற்செயலாக அதே வீட்டுக்கு வந்தவுடன் கதை சூடு பிடிக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முழுக்கதையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ராமாயணம், மகாபாரதம், பராசக்தி ஆகியவற்றுக்குப் பிறகு அதிகம் பாராயணம் செய்யப்பட்ட கதை இதுவாகத்தான் இருக்கும். நம்பியார், அப்பாவி எம்.ஜி.ஆரை அடிக்கும்போது நமக்கு ஏற்படும் வருத்தம் எல்லாம், துணிச்சல்கார எம்.ஜி.ஆர். வந்து நம்பியாரை அடிக்கும்போது மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. இந்த ஒரு காட்சியே இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய ஈர்ப்பு.

    தீமையை நன்மை வெல்லும் இந்த சவுக்கடியோபதேசம் பிற்காலத் திரைப்படங்களில் பல வழிகளில் காட்டப்பட்டாலும் ‘அசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை’ இனிப்பாக நாவில் புரளுவது இந்தக் காட்சிதான். இன்னொரு 50 ஆண்டுகளுக்கும் இந்தத் திரைப்படம்தான் வழிகாட்டிப் படமாக இருக்கும்.

    வடிவேலு இக்காலத் திரைப்பட ரசிகர்களுக்கு அளித்திருக்கும் ஒரு பஞ்ச் டயலாக், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’. அதை இந்தத் திரைப்படத்தில் கேட்கலாம். தம்பி எம்.ஜி.ஆர். (இளங்கோ) ஏகப்பட்ட பலகாரங்களை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நைசாக நழுவிவிட, அப்பாவி எம்.ஜி.ஆர். (ராமு) அதே மேஜையில் வந்து உட்கார்ந்து, ‘ரெண்டு இட்டிலி’ என்று கேட்டதும் அந்த சர்வர், ‘மறுபடியும் முதல்லேருந்தா?’ என்று வாயைப் பிளக்கிறார்.

    நாகேஷ் இப் படத்தில் கோவிந்தன் என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் வந்தாலும் குளறுவாயன் என்றே எம்.ஜி.ஆரால் அழைக்கப்படுகிறார். அவர் குளறுவதும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் சுருளிராஜனும் ஒரு ஓரத்தில் தெரிகிறார் பாருங்கள்.

    ஒரு படத்தில் ஆயிரம் இருந்தாலும் சரியான திரைக்கதை இல்லாவிட்டால் வேலைக்காகாது. எம்.ஜி.ஆரின் அனாயாசமான நடிப்பு, அவரது நட்சத்திர வசீகரம், கதாநாயகிகள், பாடல்கள் என எல்லாம் சரியாக அமைந்திருந்த இந்தப் படத்திற்குத் தெளிவான, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதைதான் மகுடம். நாடோடி மன்னன், மாட்டுக்கார வேலன், நீரும் நெருப்பும், குடியிருந்த கோயில், நாளை நமதே ஆகிய அனைத்தும் வெற்றிப் படங்களாக இருந்தாலும் இரட்டை வேடக் கதாநாயகன் படங்களுக்கான டெம்பிளேட் படம் இதுதான். இந்தப் படம் தந்த வெற்றியை மறக்காமல் ‘புதிய பூமி’ திரைப்படத்தின் ஒரு பாடலே, ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று ஆரம்பமாகிறது.

    இதெல்லாம் இருக்கட்டும். காவியத் தன்மை பெற்றுவிட்ட அந்தப் பாடலைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் கட்டுரை எப்படி முடியும்? ஒரு வீட்டில் நடக்கும் அராஜகத்தை எதிர்க்கும் இளங்கோ என்னும் பாத்திரம் கொடுமைக்கார மாமாவின் கையிலிருக்கும் சாட்டையைப் பிடுங்கி அவரையே அடிக்கும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதில் வியப்பில்லை. ஆனால், அந்த வீட்டில் இருப்பவர்களைக் காப்பாற்றும் காட்சியில் வரும் பாடலில் ஏழை எளியவர்கள் எங்கே வந்தார்கள் என்று யாரும் கேட்கவில்லை. காரணம், சவுக்கு கையில் வந்ததும் இளங்கோ எம்.ஜி.ஆராகிவிடுகிறார். பாத்திரங்கள் தமிழக மக்களாகிவிடுகிறார்கள். “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த ஏழைகள் வேதனைப்பட மாட்டார்” என்று எம்.ஜி.ஆர். சொல்லும்போது திரையரங்கம் புல்லரிக்கிறது.

    எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றியதில் இந்தப் பாடலுக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. இந்தப் படத்தை மறக்க முடியாத படமாக ஆக்கும் காரணிகளில் ஒன்றாகவும் இது அமைந்துவிட்டது.

  11. #3400
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post

    நண்பர் லோகநாதன் அவர்களக்ககு நன்றி.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •