Page 97 of 401 FirstFirst ... 47879596979899107147197 ... LastLast
Results 961 to 970 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #961
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் இனிய "தீபாவளி" திரு நாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...இறைவன் எல்லோருக்கும் அருள், கருணை புரியட்டும்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #962
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்றைக்கும் தீபாவளி மறு வெளியீடுகள் வசூல் சக்ரவர்த்தி புரட்சி நடிகர், மக்கள் திலகம் அவர்களின் காவியங்களே எண்ணும்போது நமக்கு உள்ளமெல்லாம் தித்திகின்றது***👍👌

  4. #963
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    1972

    1972......

    மலரும் நினைவுகள் .

    மக்கள் திலகத்தின் சங்கே முழங்கு , நல்ல நேரம் , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் முற்பகுதியில் வெளிவந்தது .-[ பிப் -ஜூன்]
    மக்கள் திலகம் எம்ஜிஆர் சிங்கப்பூரில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாடகத்தில் நடித்தார் .
    மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ''பாரத் '' பட்டம் .... மே
    எம்ஜிஆருக்கு பாராட்டு விழாக்கள் தொடர்ந்து நடந்தது . மே - ஆகஸ்ட்
    எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி திமுக - மதுரை மாநாடு - ஆகஸ்ட்
    எம்ஜிஆர் பற்றிய செய்திகள் இருட்டடிப்பு தொடங்கியது . செப்டம்பர்
    எம்ஜிஆரின் அன்னமிட்ட கை - செப்டம்பர் .
    எம்ஜிஆர் நீக்கம் - அக்டோபர்
    அதிமுக உதயம் - அக்டோபர்
    எம்ஜிஆரின் இதய வீணை - அக்டோபர்
    மக்கள் வெள்ளத்தில் ரயில் பயணம் சென்னை - மதுரை நவம்பர்
    சென்னை நகரில் மாபெரும் பேரணி - டிசம்பர்.

    சினிமா சாதனைகள் - 1972

    சென்னை நகரில் 4 திரை அரங்கில் வெளிவந்து 4 அரங்கிலும் 100 நாட்கள் ஓடிய படம் நல்ல நேரம் ..

    நல்ல நேரம் , இதயவீணை 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது .
    இலங்கையில் நல்ல நேரம் மற்றும் ராமன் தேடிய சீதை 100 நாட்கள் ஓடியது .
    சங்கே முழங்கு , ராமன் தேடிய சீதை , நான் ஏன் பிறந்தேன் தமிழகத்தில் 12 வாரங்கள் ஓடியது .
    அன்னமிட்ட கை சுமாராக ஓடியது .
    1972ல் மக்கள் திலகம் 10 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் .
    அனைத்து எம்ஜிஆர் மன்றங்களும் மிகவும் சுறு சுறுப்பாக இயங்கி கொண்டு வந்தது .

    ரசிகர்களுக்கு எம்ஜிஆர் தந்த விருந்து .

    சங்கே முழங்கு

    எம்ஜிஆரின் ஸ்டைல் ரசிகர்களுக்கு விருந்து . குறிப்பாக கிருபால் சிங் வேடம் கச்சிதமாக அமைந்து விட்டது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . மெல்லிசை மன்னரையும் , கண்ணதாசன் - டிஎம் எஸ் - சுசீலா - ஈஸ்வரி பாராட்ட வேண்டும் . நீதி மன்றத்தில் குறுக்கு விசாரணை காட்சியில் எம்ஜிஆர் நடிப்பு பிரமாதம் . சிலர் குடிப்பது போலே நடிப்பார் ,,,பாடல் காட்சியில் அருமையான நடனமும் முக பாவங்களும் , உடை அலங்காரமும் கண்களுக்கு விருந்து .

    நல்ல நேரம்

    தேவரின் முதல் வண்ண படைப்பு . எம்ஜிஆர் அறிமுகமாகி யானையுடன் கால் பந்து விளையாடும் காட்சியில் டைட்டில் இசை ஒன்றே போதும் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு . படம் முழுவதும் எம்ஜிஆரின் இளமை , சுறுசுறுப்பு அட்டகாசம் . நல்ல கருத்துடன் பொழுது போக்கு அம்சங்களுடன் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விருந்து படைத்த காவியம் .

    ராமன் தேடிய சீதை
    .
    நல்ல நேரம் வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டிருந்த நேரத்தில் 33 நாட்கள் இடை வெளியில் இப்படம் வெளிவந்தது .எம்ஜிஆரின் ஜாலியான படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . சண்டைகாட்சிகள் அனைத்தும் அருமை . சிறந்த ஒளிப்பதிவு .மெல்லிசை மன்னரின் இனிய இசை. .காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்து .இந்த இடத்தில் 43 வகையான டிரஸில் எம்ஜிஆர் இளமையுடன் தோன்றும் காட்சிகள் சூப்பர்,
    மொத்தத்தில் ரசிகர்களின் படம் .

    நான் ஏன் பிறந்தேன்

    குடும்ப பாங்கான கதையில் குடும்ப தலைவராக எம்ஜிஆர் இயல்பாக நடித்து அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை அடித்த காவியம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .எம்ஜிஆரின் வசனங்கள் ....மிகவும் யதார்த்தம் . மறக்க முடியாத காவியம் .

    அன்னமிட்ட கை

    டைட்டில் காட்சியில் '' முதல் முறையாக பாரத் எம்ஜிஆர்'' என்று திரையில் காணும்போது ரசிகர்களின் கைதட்டலும் விசில் சத்தமும் இன்னமும் காதில் எதிரொலிக்கிறது .1966ல் எடுக்கப்பட்ட காட்சிகளில் எம்ஜிஆரின் கணீர் குரல்; காட்சிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது
    எம்ஜிஆரின் பாசமிகு நடிப்பு . இனிமையான பாடல்கள் , பிரமிக்க வைக்கும் கம்பு சண்டை காட்சிகள் . நம் கண்களுக்கு விருந்து .

    இதய வீணை

    ராமன் தேடிய சீதை படத்திற்கு பின்னர் மீண்டும் காஷ்மீர் காட்சிகளுடன் வந்த மணியனின் காவியம்
    இனிமையான பாடல்கள் , எம்ஜிஆரின் சிறந்த நடிப்பு , குடும்ப கதை . சூப்பர் காவியம் .
    எழுத்தாளர் மணியன் மூலம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்
    ஆனந்தவிகடனில் ''நான் ஏன் பிறந்தேன் '' - எம்ஜிஆரின் தொடர் கட்டுரை
    உலகம் சுற்றும் வாலிபன் - படப்பிடிப்பிற்கு உதவி
    இதயவீணை
    சிரித்து வாழவேண்டும்
    பல்லாண்டு வாழ்க
    மூன்று மெகா ஹிட் மூவிஸ்
    மணியனை மறக்க முடியுமா ?.

    குறிப்பாக அரசியல் மற்றும் சினிமா இரண்டு துறையிலும் எம்ஜிஆரின் இமாலய வெற்றிகள் துவங்கப்பட்ட ஆண்டு 1972 என்றால் அது மிகையல்ல .எம்ஜிஆரின் வெற்றிகளும் எம்ஜிஆர் ரசிகர்களின் உண்மையான பேராதரவும் மக்கள் மன்றமும் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற நடிகருக்கும் , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற அரசியல் தலைவருக்கும் கிடைத்த வெற்றிகள் .
    எம்ஜிஆர் ரசிகர்களாகிய நாமும் இந்த 1972 முதல் தொடர் வெற்றிகளை 45 ஆண்டுகளாக நினைவு கூறும் நாம் கொடுத்து வைத்தவர்கள் .

  5. #964
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -17/10/17


  6. #965
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை மலர் -17/10/17

  7. #966
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #967
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் -17/10/17

  9. #968
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



    விழாவில் ,சிவாஜி கணேசனுக்கு விழாக் கேடயத்தை எம்.ஜி.ஆர். வழங்கி பாராட்டி பேசினார் .

  10. #969
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    குமுதம் ரிப்போர்ட்டர் -20/10/17


  11. #970
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    எழுத்தாளர் திரு.சுதாங்கன் பேட்டி -ராணி வார இதழ் -22/10/17




Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •