Page 350 of 401 FirstFirst ... 250300340348349350351352360400 ... LastLast
Results 3,491 to 3,500 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3491
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மீண்டும், மீண்டும் சென்னை- மஹாலக்ஸ்மி அரங்கில் வசூல் பிரளயம் ஏற்படுத்தி இருக்கிறது வசூல் திலகம் வழங்கும் "ஒளி விளக்கு" சுமார் 1,06,000.00 அள்ளி குவிதிருக்கிறார், அது மட்டுமல்லாமல் தொடந்து வெளியாகிய நமது கோடிகளில் ஒருவன் அளிக்கும் "ஆயிரத்தில் ஒருவன்" கிட்டத்தட்ட அதே வசூலை அளித்திருக்கிறார் என்ற தித்திப்பான சேதியும் வந்துள்ளது உள்ளபடியே இரட்டிப்பு சந்தோஷம்...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3492
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எட்டாம் வள்ளல் மக்கள் திலகம் "எங்க வீட்டுப் பிள்ளை" சென்னை-அகஸ்தியாவில் ஏறத்தாழ ரூபாய் 90,000.00 வசூலை அற்புதமாக கண்டிருக்கிறது... மேற்கண்ட "அடிமைப்பெண்" திரையீடு தகவல் தந்த திரு esvee அவர்களுக்கு மிக்க நன்றி...

  4. #3493
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    1. குடியிருந்த கோயில்

    பொன்விழா ஆண்டில் மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் திரைப்படம் சென்னை - சரவணா அரங்கில் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .

    2. அடிமைப்பெண்

    2017ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் டிஜிட்டல் வெளியீடு 100 திரை அரங்கிற்கு மேல் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்தது .2018 இந்த மாதம் சென்னை பாரத் , வில்லிவாக்கம் ஏ.ஜி .எஸ் , வேளச்சேரி - லக்ஸ் மற்றும் பரங்கிமலை ஜோதி அரங்குகளிலும் மற்றும் தமிழகமெங்கும் 33 திரை அரங்குகளில் இன்று முதல் வெற்றி பவனி வருகிறது .

    3. எங்க வீட்டுப்பிள்ளை

    இன்று முதல் தமிழகமெங்கும் 20 நகரங்களில் மக்கள் திலகத்தின் எங்க வீட்டுப்பிள்ளை திரைக்கு வந்துள்ளது .


    4. ரிக்ஷாகாரன்

    சென்னை - கிருஷ்ணவேணி திரை அரங்கில் இன்று முதல் நடைபெறுகிறது .

  5. #3494
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    " சென்னை அடுத்த வேலப்பன் சாவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. விழாவில் மொரீஷியஸ் நாட்டு குடியரசு துணைத் தலைவர் பரமசிவம்பிள்ளை வையாபுரி கலந்துகொண்டு நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்துவைக்கப்போகிறார். இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியைத் திறந்துவைக்கப்போகிறார். ரஜினி, எம்.ஜி.ஆரின் வெங்கலச் சிலையைத் திறந்துவைக்கப் போகிறார். அவரின் கையில், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள்...அப்போது பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், எம்.ஜி.ஆருடன் நடத்த நடிகர், நடிகைகள், எம்.ஜி.ஆரின் உறவினர்கள்...என்று முக்கியமானவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருதுகளை வழங்கப்போகிறார். அரசியல் வானில் ஜொலிக்கப்போகும் ரஜினிக்கு இந்த விழா ஒரு மகுடமாக இருக்கப்போகிறது " என்றார்.

  6. #3495
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணாவின் கணிப்பு

    அறிஞர் அண்ணா அவர்கள், “எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் நமக்கும் ஏற்பட்ட உறவு சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்டது அல்ல, சிலர் ஊக்குவித்து வந்தது அல்ல, பாச உணர்வுகளின் பிணைப்பாக ஏற்பட்ட உணர்வு. திமுக கழகம் அவரை இழப்பதோ, அவர் திமு கழகத்தைத் துறப்பதோ நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று எழுதினார்.

    ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, ‘எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணமானதை ஆராயச் சிலர் நினைக்கலாம். அது முடியாது. மயில் தோகைக்கு அழகு தருவது நீல வண்ணமா, பச்சை வண்ணமா, மஞ்சள் வண்ணமா, பொன்னிற வண்ணமா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டால் எப்படி முடியாதோ, அதைப்போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றிக்குக் காரணங்களை ஆராய முடியாது. அவர் எந்தத் துறையிலும் வெற்றிக்கொடி நாட்டுவார். அவர் ஒரு கதை ஆசிரியராக, ஒரு இயக்குனராக, ஒரு இசை அமைப்பாளராக கலைத்துறையில் எந்தத் துறையில் இருந்தாலும் அவர் வெற்றியை நாட்டுவார். ஏன்? அவர் அரசியல் துறைக்கு வந்தாலும் நிகரற்ற வெற்றியை நாட்டுவார்”

    என்று அறிஞர் அண்ணா அவர்கள் கூறினார்கள்.

  7. #3496
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like
    வாலி MGR பாடல் r

    தொட்டால் பூ மலரும்


    ரசனையும், ரசிகனும் ; காலமும், காதலும் ; கருத்தும், கருவும் நேர வெள்ளத்தில் சில மாற்றங்கள் பெறுகின்றன. வெள்ளத்தில் நீர் பெருகி ஓடினாலும், அதில் நிற்கும் திட மரங்கள் பல உண்டு. அப்படி பட்ட தமிழ் இசை வெள்ளத்தில், அஸ்திவார தூண்களின் பாடல்களில் ஒன்று. இன்றைக்கு.

    இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லாம் : வாலி + டீ எம் எஸ் + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இதில் மூவரை இந்த ‘மூன்று பத்து இரண்டாயிரம்’ காலத்தில் காலன் வசம் சென்றனர் என்று சொல்வதை விட, கற்பக காலத்துல் கலந்தனர் என்றே கூறலாம். என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம்.ஜி.ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி, (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.

    படகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.


    இசை நால்வர்
    எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்” , எதோ ஒரு சந்த கவிவடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம் (உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்-டுங்கள்) . பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில். வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.

    இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்

    இந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….

    பாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் ! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.

    COURTESY NET

  8. #3497
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து -01/03/18

  9. #3498
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -01/03/18

  10. #3499
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் -2/03/18

  11. #3500
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின செய்தி --02/03/18
    Last edited by puratchi nadigar mgr; 2nd March 2018 at 11:50 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •