Page 351 of 401 FirstFirst ... 251301341349350351352353361 ... LastLast
Results 3,501 to 3,510 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3501
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் --02/03/18
    Last edited by puratchi nadigar mgr; 2nd March 2018 at 11:51 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3502
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை முரசு -02/03/18

  4. #3503
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் சென்னை கிருஷ்ணவேணியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன்" தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

  5. #3504
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3505
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3506
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3507
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3508
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (02/03/18) சென்னை சரவணாவில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர்
    எம்.ஜி.ஆர். கலக்கலாக நடித்த "குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

  10. #3509
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3510
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில் நமது பொன்மனச்செம்மல் புரிந்த திரையுலக சாதனைகளை நான்கு பிரிவுகளாக தொகுத்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன் :

    A. . உலக சாதனைகள் :

    1. உலக சினிமா நூற்றாண்டு விழா 1995ம் ஆண்டு கொண்டாடப்பட்ட போது, நமது இந்திய நாட்டிலிருந்து, மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டு, தேர்ந்தேடுக்கப்பட்ட ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். மட்டுமே. (நடிகை : நர்கிஸ், இயக்குனர் : சத்யஜித்ரே .... ஆதாரம் 1995ல் வெளிவந்த பொம்மை மாத இதழ்)

    2. 1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும், தனது பழைய படங்களை மக்கள் திரும்ப திரும்ப பார்க்க வைத்து, வசூல் சாதனை புரிந்த ஒரே நடிகர் உலகில் நடிகப்பேரரசர் எம். ஜி. ஆர். ஒருவரே.

    3. 1956லிருந்து, மதுரை வீரன் காவியம் வெளியானது முதல் இன்று வரை (1977ல் திரைஉலகை விட்டு விலகி, அமரராகி 25 ஆண்டுகள் ஆகியும்) வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை தக்க வைத்து வரும் ஒரே நடிகர் உலகில் நம் கலைவேந்தன் எம். ஜி. ஆர். ஒருவரே.

    4. ஒரு நடிகர் முதன் முதலில் அரசியலில் ஈடுபட்டு, கட்சி ஒன்றை நிறுவி, தீவிர அரசியல்வாதியுமாகி படங்களில் நடித்துக்கொண்டே, இடைத் தேர்தல்களிலும், உப தேர்தல்களிலும் வெற்றியை தொடர்ந்து குவித்து, பின் தமிழக மக்களால் முழுமையாக, முறையாக, மூன்று முறையும் தேர்ந்தேடுக்கப்பட்டு ஒரு மாநில முதல்வராக சாதனை புரிந்தது, உலகில் புரட்சித் தலைவர் மட்டுமே.

    5. அதிக அளவில் ஒருவரை பற்றி பேட்டிகளும், வெவ்வேறு தலைப்புக்களில் செய்திகளில் இடம் பெற்றவர் நமது இதய தெய்வம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களே !

    6. அதிக அளவில் இரட்டை வேடங்கள் தாங்கி அவற்றில் 90 சதவிகித படங்களை வெற்றிப்படங்களாக்கிய பெருமை படைத்தவரும் நமது நிருத்திய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களே !

    7. பாரத ரத்னா எம். ஜி. ஆர். அவர்கள் நடிக்காத பிற திரைப்படங்களிலும், மக்களின் ஆரவாரத்தையும், கை தட்டல்களையும் பெறுவதற்காக, அவரது நிழற்படங்களும், அவர் பற்றிய வசனக் காட்சிகளும், பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும், அவரை தொடர்பு படுத்தி காட்சிகள் அமையப் பெற்று தயாரிக்கப்பட்ட படங்கள் அதிக அளவில் வெளியாகி, அவருக்கு புகழ் சேர்த்தது, உலக அளவில், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியாம் நம் மன்னவர் எம். ஜி. ஆர். ஒருவருக்கு மட்டுமே !

    8. ஒரு நடிகரின் படங்கள் அதிக எண்ணிக்கையில், மீண்டும் மீண்டும் குறுகிய கால இடைவெளியில், மறு வெளியீடுகள் செய்யப்பட்டு, வசூலை ஒவ்வொரு வெளியீட்டிலும் அள்ளிக் குவிக்க வைத்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சிக்கடலில் நீந்த வைத்துக்கொண்டிருப்பவர் வையகைத்தில் நம் மனிதப் புனிதர் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

    B. ஆசிய சாதனைகள் :

    1. கத்திச்சண்டை, கம்பு சண்டை, குத்துச் சண்டை, சிலம்பம் சண்டை, வாள் சண்டை, சுருள்பட்டை சண்டை, மான் கொம்பு சண்டை ஆகிய அனைத்து சண்டை காட்சிகளிலும் புகுந்து விளையாடி புதுமையை ஏற்படுத்தினார், எங்கள் வீட்டு பிள்ளை என்று ஒவ்வொரு வீட்டினரும் போற்றும் எம். ஜி. ஆர்.

    2. கதாநாயகனாக நடித்த 115 படங்களில், சுமார் 75க்கும் அதிகமான மக்கள் திலகத்தின் காவியங்கள், 1980ம் ஆண்டு சுமார் 1100 அரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. அப்போதைய தமிழக நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், வணிக வரி பெற்றுத்தந்த விவரங்களை அறிவிக்கும்போது சட்டப் பேரவையில் தெரிவித்த தவகலின் அடிப்படையில் இந்த புள்ளி விவரம் அளிக்கப்பட்டுள்ளது. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் ஆசிய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)[/COLOR]

    C. இந்திய சாதனைகள் :

    1. ஒரு நடிகர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் மாறி, விளம்பரம் இன்றி வெளியிட்ட ஒரு காவியம் பெரும் வெற்றி கண்டு சாதனையை படைத்தது பாரத் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே ! (படம் : 1973ல் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன்)

    2. சுமார் 30,000க்கும் மேல் ரசிகர் மன்றங்களும், நற்பணி மன்றங்களும், மன்றங்களும் கொண்ட ஒரே நடிகர் இந்தியாவில் நமது கலைப் பேரொளி எம். ஜி. ஆர். மட்டுமே !. ( குறிப்பு : இது உலக சாதனையாகவும் இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    3. இந்திய துணைக்கண்ட வரலாற்றில், ஒரு பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த நடிகரின் ரசிகர் மன்றம் என்ற பெருமையையும் பெற்ற ஒரே நடிகர் நம் கொள்கைத்தங்கம் எம். ஜி. ஆர். மட்டுமே ! (இடம் : அந்தமான், பிரதமர் : மறைதிரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள்)

    4. ஒரு நடிகர் அரசியல்வாதியாகி, இணையதளம் மூலம் அதிக அளவில் வாக்குகளை பெற்று (ON LINE VOTING) இந்திய அரசியல் வாதிகளில் முதலிடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருப்பவரும் நம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்களே ! (Web site : WHO POPULAR..COM.)

    5. தமிழக முதல்வராகும் பொருட்டு, திரையுலகை விட்டு விலகும் போது, தனது 60 வயதிலும் சுமார் 17க்கும் அதிகமான படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்திய சினிமா வரலாற்றில் ஓர் புதிய அதிசயத்தையே ஏற்படுத்தினார் நமது புதுமைப்பித்தன் எம். ஜி. ஆர். அவர்கள். ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    6. நடிகர் ஒருவரின் திரைப்படங்களின் கதைகள் அதிக அளவில் RE-MAKE செயப்பட்டது மட்டுமல்லாமல், அவரது படத் தலைப்புக்களை கொண்டு அதிக அளவில் பிற நடிகர்கள் நடிப்பில் புதிய படங்கள் வெளிவந்து பெருமையுடன் பேசப்பட்ட ஒரே நடிகர் நம் சமதர்ம சமுதாய காவலன் எம். ஜி. ஆர். அவர்கள் மட்டுமே !

    7. கருப்பு-வெள்ளை காவியம் ....மதுரை வீரன் மூலம் 33 நகர அரங்குகளில் 100 நாட்கள் கடந்து, புதிய சாதனை புரிந்து, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் இதய வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

    8. அதிக அளவில், நாடகக் கலைஞர்களையும், திரைக் கலைஞர்களையும் (நடிக - நடிகையர், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள்) அறிமுகப்படுத்திய ஒரே நாயகன் நம் நாடு போற்றும் நல்லவர் எம். ஜி. ஆர். அவர்களே ! ( குறிப்பு : இதுவும் ஒரு உலக சாதனையாக இருக்கலாம்.. புள்ளி விவரம் தெரியாததால் இந்திய சாதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

    D. தமிழக சாதனைகள் :

    1. தமிழ்த் திரையுலகில் முதன் முதலில் பாரத் பட்டம் பெற்ற நடிகர் நம் மன்னவனாம் கலியுக கர்ணன் எம். ஜி. ஆர். அவர்களே !

    2. தமிழ் வண்ணப்படத்தில் கதாநாயகனாக நடித்த முதல் நடிகர் நம் கொடை வள்ளல் எம். ஜி. ஆர். தான் (படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்)

    3. முதன் முதலில் PUNCH DIALOGUE பேசி நடித்த முதல் நடிகர் நம் ஏழைபங்காளன் எம். ஜி. ஆர். தான். (படம் : மர்மயோகி)

    4. முதன் முதலில் ஒரு நடிகர் இயக்குநராகி வெற்றிக் காவியத்தை தமிழ் திரையுலகுக்கு அளித்தது நம் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வள்ளல் எம். ஜி. ஆர். தான். (படம் ... நாடோடி மன்னன்)

    5. நுழைவுக் கட்டணம் பைசாக்களில் இருந்த அந்தக் கால கட்டத்திலேயே (1956ல்) ஒரு கோடி ரூபாய் வசூல் புரிந்து, இந்தியத் திரையுலகிலேயே ஒரு பெரும் புரட்சியை, "மதுரை வீரன்" காவியம் மூலம், உருவாக்கினார் நம் தர்ம தேவன் எம். ஜி. ஆர். அவர்கள்

    6. தமிழ் திரையுலகில் பூஜை போடப்பட்டு முதல் காட்சி படமாக்கப்பட்ட அன்றே அனைத்து AREA க்களிலும், தனது காவியங்கள் விற்கப்படும் அதிசயத்தை நிகழ்த்தினார் உலகின் எட்டாவது அதிசயமான நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள்.

    7. தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறையப்பெற்று, தனது மகத்தான காவியம் "உலகம் சுற்றும் வாலிபன்" படம் மூலம் மற்றுமோர் சரித்திரம் படைத்தார், புவியுள்ளவரை புகழ் கொண்டிருக்கும் நம் தெய்வம் எம். ஜி. ஆர்.

    8. 115 படங்களில் கதாநாயகனாக நடித்து, அதிக எண்ணிக்கையில் 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் தமிழ் திரை உலகிற்கு அளித்தார், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி.ஆர். அவர்கள்.

    திரையுலகின் முடி சூடா மன்னன் எம். ஜி. ஆர். அவர்களின் புரட்சிகரமான திரையுலக சாதனைகளின் (அரசியல் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட) பட்டியல் இன்னும் தொடர்கிறது.

    COURTESY - PROF SELVAKUMAR

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •