Page 151 of 401 FirstFirst ... 51101141149150151152153161201251 ... LastLast
Results 1,501 to 1,510 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #1501
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1502
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    வெற்றிகரமாக
    தற்பொழுது
    கோவை
    டிலைட்டில்

  4. #1503
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1504
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு தீர்க்கதரிசி

    1969ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் , உரையாடல்கள் நேற்றைய அரசியல் கட்சிகளுக்கும் இன்றைய அரசியல் கட்சிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மிகவும் பொருத்தமாக உள்ளது . எதிர்கால அரசியல் கட்சிகளுக்கும் எச்சரிக்கை உணர்த்தும் படமாக நம்நாடு படம் இருப்பது குறிப்பிடத்தக்கது .

    பேரறிஞர் அண்ணா , புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொள்கைகளை மறந்து சுயநலத்தோடு உதட்டளவில் எம்ஜிஆர் பெயரை கூறிக்கொண்டு நாடகமாடி அளவிற்கு மேல் சொத்துக்களை குவித்து தண்டனை பெற்று குற்றவாளியாக ஜெயலலிதா மறைந்தது அதிமுகவிற்கு மிகப்பெரிய அவப்பெயரை உண்டாக்கிவிட்டது . மேலும் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரையும் கைது செய்து அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் .

    இன்றய ஆட்சியாளர்கள் அனைவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் .

    ஊழலின் மொத்த வடிவமான திமுக வின் 2ஜி வழக்கில் கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் மாறன் குடும்பத்தினர் அனைவையும் கைது செய்து தண்டனை அனுபவிக்க வேண்டும் .

    இனி வரும் அரசியல்வாதிகள் தவறு செய்ய கனவில் கூட நினைத்து பார்க்க கூடாத அளவிற்கு சட்டம் பாதுகாக்க வேண்டும் .

    கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவர்களை ஆதரித்து கோடிக்கணக்கில் பணம் பெற்று வரும் எல்லா கட்சி நிர்வாகிகளையும் . ஊடக நிறுவனங்களையும்
    வருமான வரி துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
    புரட்சித்தலைவரின் இயக்கம் மற்றும் இரட்டை இலை சின்னம் தற்காலிமாக இந்த பதவி பித்தர்களின் கைகளுக்கு செல்லாமல் சற்று ஓய்வெடுக்கட்டும் ...

  6. #1505
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    12-11-2017 வேலூர், திருச்சி தின மலர் நாளிதழில் "எம்.ஜி.ஆர்., ஆக முடியுமா கமல் என்ற கட்டுரை...

  7. #1506
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1507
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1508
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் , அண்ணன் சக்ரபாணியும் சிறு வயதில் கந்தசாமி முதலியார் நாடகக் கம்பெனியில் சேர, அப்போது அங்கு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த காமாட்சி என்பவர் பெரும் உதவி செய்தார். பாகவதர், சின்னப்பா, எம்.கே.ராதா, எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் வரவுக்குப் பின் நாடகங்கள் குறைந்து சினிமா பிரபலமானது.

    காமாட்சிக்கு நடிப்பு வாய்ப்பு குறைந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இவர்தான்

    "உன் கண் உன்னை ஏமாற்றினால் " - வாழ்க்கை,

    "புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே ", "ஓ ரசிக்கும் சீமானே வா" - பராசக்தி,

    "தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டு " _ அமரதீபம்,

    "சிற்பி செதுக்காத பொற்சிலையே" - எதிர் பாராதது

    ஆகிய சிறந்த பாடல்களை எழுதிய காமாட்சி என்கிற கவி கே.பி. காமாட்சி.

    புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் தன் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்திற்கு பாட்டெழுத , செய்த நன்றியை மறவாமல் கவி கே.பி. காமாட்சியை தமக்கு கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் சேர பெரிதும் உதவி
    செய்ததற்கு நன்றிக்கடனாக பாடல் எழுத அழைத்திருந்தார்.

    எம் ஜி ஆரை சந்திக்கச் சென்ற காமாட்சிக்கு இருந்த குடிப்பழக்கத்தினால் நாடோடி மன்னன் படத்திற்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று. இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் எம்ஜிஆர் எதுவும் சொல்லாமல் அனுப்பி விட்டார்.

    சில நாட்களுக்குப் பின் கவி.காமாட்சி காலமாகிவிட விஷயத்தைக் கேள்விப்பட்ட எம் ஜி ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி, கே.ஆர்.ராமசாமி போன்றவர்கள் வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    காமாட்சியின் உடல் அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைக்கப்பட்டது. உடலைத் தூக்கிச் செல்ல சரியான ஆட்கள் இல்லை. இதை கவனித்த மக்கள் திலகம் சிறிதும் யோசிக்கவில்லை.

    உடல் வைக்கப்பட்ட பாடையின் முன்புற கைப்பிடியை பற்ற அடுத்த கைப்பிடியை என்.எஸ்.கிருஷ்ணன் பற்ற பின்புறம் கே.ஆர்.ராமசாமியும் ,வி.கே.ராமசாமியும் தூக்கிக் கொண்டார்கள். சுமார் முக்கால் கிலோ மீட்டர் சுமந்து வந்த எம் ஜி ஆர், என்.எஸ்.கே ஆகிய நால்வரும் கண்ணம்மாபேட்டையில் வந்து தான் இறக்கினார்கள்.

    அங்கு போயும் எம்.ஜி.ஆர் சும்மா இருந்தாரா. காமாட்சியின் உறவினர்கள் யார் எனக் கேட்டார். தயாரிப்பாளரும், கதைவசனகர்த்தாவும், இயக்குநருமான கலைஞானம்

    "நான் தான் அவருடையதம்பி "என்றார்.. "

    "காமாட்சி அண்ணன் ஏதாவது கடன் எவச்சிருக்காரா "? என்றார்.

    "ஆயிரம் ரூபாய் கடன் இருக்குதுங்கண்ணே" என்றார் கலைஞானம்.

    " நாளைக்கு வந்து ஆபீஸ்ல வாங்கி கொண்டு போய் கடனை அடைத்து விடு" என்றார் மக்கள் திலகம்.

    அதே போல் அடுத்த நாள் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ஆபீஸ் சென்ற போது தயாராக ஒரு கவரில் ரூ 1000 போட்டு ரெடியாக இருந்தது. பிணம் தூக்கியதுமல்லாமல் கடனையும் அடைத்த தர்மதேவன் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.

    இந்த கவி கே.பி. காமாட்சி வேறு யாருமல்ல. பராசக்தி படத்தில் போலி பூசாரி் நடித்தவர் இவர்தான்.

    புரட்சித் தலைவரைப் பாேன்ற மகானை இனிமேல் காண முடியுமா?

    கலைஞானம் அவர்களின் சினிமா சீக்ரெட் என்ற புத்தகத்திலிருந்து படித்ததில் பிடித்ததைப்
    பகிர்கிறேன்.

    நன்றி லட்சுமண குமார் - எம்ஜிஆர் முகநூல் பக்கம்

  10. #1509
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like


    நன்றி - அண்ணார் நெல்லை எஸ்.எஸ். மணி

  11. #1510
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் தங்கம் நடித்த 'எங்கவீட்டு பிள்ளை' படம் எல்லா நடிகர்களையும் ஏங்க வைத்த படம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. எப்படி ஒரு நடிகரால் மாறி மாறி இதில் இயற்கை நடிப்பை காட்டமுடிந்தது என்ற பிரமிப்பு அனைவருக்கும் இருந்தது..இன்னுமொரு செய்தி..'நான் ஆணையிட்டால்..அது நடந்து விட்டால் பாடலில் வரும்..ஒரு காட்சியில் புரட்சித்தலைவர் எலெக்ட்ரிக் சுறுசுறுப்பில் பிரமாதமாக நடித்திருப்பார்..

    அதில் முத்தாய்ப்பாக, ஒரு சுற்று சுற்றி இரண்டு கால்களையும், ஒரு கையையும் தரையில் ஊன்றி, ஒரு கையை உயர்த்தும் காட்சியில்,.....


    திரு. திலீப்குமார் மற்றும் திரு. என்.டி.ஆர். அவர்களால் மக்கள் திலகத்தைப் போல நடிக்க முடியாததால் அந்த ஸ்டெப் தவிர்க்கப்பட்டது.




    நன்றி - பால சுப்பிரமணியன் முகநூல்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •