Page 294 of 401 FirstFirst ... 194244284292293294295296304344394 ... LastLast
Results 2,931 to 2,940 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #2931
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2932
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2933
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2934
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2935
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2936
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #2937
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2938
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் பொங்கல் படங்களும் பாடல்களும் நிஜ வாழக்கையில் எம்ஜிஆரின் சாதனையாகிவிட்ட சரித்திரம் .

    1962
    ராணி சம்யுக்தா
    இதழ் இரண்டும் பாடட்டும் ...
    இதழ் இரண்டும் பாடட்டும்
    இமை இரண்டும் மூடட்டும்
    உதய சூரியன் மலரும் போது
    உனது கண்கள் மலரட்டும்
    இதழ் இரண்டும்..........

    புதிய காலம் பிறந்ததென்று
    போர் முகத்தில் ஏறி நின்று
    பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
    நீயும் பழம் பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே
    இதழ் இரண்டும்........

    வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
    கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
    எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
    வெற்றித் துணிவோடு தாய் நாட்டின் புகழ் பாடுவோம்
    கண்ணே இதழ் இரண்டும்...........

    வீறு கொண்ட வேங்கை போல வெற்றி கொள்ளுவார்
    தான் வென்று வந்த சேதி எல்லாம் உனக்கு சொல்வார்
    மாறி மாறி முத்தம் இட்டு வார்த்தை உரைப்பார் இன்று
    மாலை இட்ட மங்கைப்போல என்னை அணைப்பார்


    கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
    இமை இரண்டும் மூடட்டும்
    உதய சூரியன் மலரும் போது
    உனது கண்கள் மலரட்டும்

    1963
    பணத்தோட்டம்
    பேசுவது கிளியா ...
    பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
    கோவில் கொண்ட சிலையா
    கொத்து மலர்க் கொடியா
    ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.


    பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
    ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
    (பாடுவது)


    கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா -
    இல்லைகச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
    வில்லேந்தும் காவலன்தானா
    வேல்விழியாள் காதலன்தானா
    சொல்லாமல் சொல்லும் மொழியில்
    கோட்டை கட்டும் பாவலன்தானா
    (பேசுவது)


    மன்னாதி மன்னர்கள் கூடும் மாளிகையா -
    உள்ளம்வண்டாட்டம் மாதர்கள் கூடும் மண்டபமா.. ஓய்
    செண்டாடும் சேயிழைதானா தெய்வீகக் காதலிதானா
    செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
    செவ்வாய் மின்னும் தேன்மொழிதானா

    1964
    வேட்டைக்காரன்
    உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் .......
    பாடல் வரிகள் மூலம் மக்கள் மனதில் எம்ஜிஆர் நிறைந்து விட்டார் .

    1965
    எங்க வீட்டு பிள்ளை

    நான் ஆணையிட்டால் .. அது நடந்து விட்டால்
    பாடல் வரிகள் .... நிச்சயம் எம்ஜிஆர் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை உணர்வு மக்களுக்கு உண்டானது .

    1966

    அன்பே வா
    புலியை பார் நடையிலே
    புயலை பார் செயலிலே
    புரியும் பார் முடிவிலே
    விரட்டினால் முடியுமா
    மிரட்டினால் படியுமா
    உங்கள் ஊர் எந்த ஊர்
    அந்த ஊர் எனது ஊர்
    நான் யார் தெரியுமா
    எடுத்து சொன்னால் புரியுமா
    கண்ணெடுத்து பாருங்கள்
    காதெடுத்து கேளூங்கள்
    நல்லவருக்கு நல்லவன்
    கெட்டவருக்கு கெட்டவன் நான்
    ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்
    ட்விஸ்ட் டான்ஸ் பாருங்கள்
    டெஸ்ட் மாட்ச் வாருங்கள்
    நானும் அன்று மாணவன்
    நாலும் கற்று தெரிந்தவன்
    பறவை போல் பறந்தவன்
    கவலைகள் மறந்தவன் நான்

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
    பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
    பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

  10. #2939
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1972

    இந்திய திரைப்பட வரலாற்றிலும் அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய ஆண்டு என்றால் அது மிகையல்ல .
    46 ஆண்டுகள் ... தொடர்ந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழும் செல்வாக்கும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பது மூலகாரணமாக ஆண்டு 1972 .

    இந்தியாவின் சிறந்தநடிகருக்கான பாரத் - விருது மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு ரிக் ஷாக்காரன் படத்தின் மூலம் கிடைத்து நாடெங்கும் பாராட்டு நிகழ்ச்சிகள் நடந்தது . எம்ஜிஆரின் சாதனைகளை ஜீரணிக்க முடியாத தமிழ் திரை உலகில் ஒரு சிலரும் , சில பத்திரிகை யாளர்களும் , சில நடிகர்களின் தீவிர ரசிகர்களும் தங்கள் எதிர்ப்பை வார்த்தைகளாலும் , அநாகரீகமான போக்கினாலும் தங்களை வெளிப்படுத்தி தாங்களே இழிவு படுத்தி கொண்டார்கள் . காலப்போக்கில் தங்களுடைய ஆதங்கத்தை மனதில் அடக்கி கொண்டு நேரம் வரும்போதெல்லாம் வெளிப்படுத்தி தங்களை இன்னமும் வருத்தி கொண்டு வருவதுதான் 1972ன் சிறப்பு

    +

    1972ல் எம்ஜிஆரை திமுகவிலிருந்து வெளியேற்றியதும் முடிந்தது எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கை என்று மீண்டும் ஆத்திரத்துடன் அற்ப மகிழ்ச்சியுடன் இருந்தவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது .புரட்சி நடிகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற அவதாரம் எடுத்தார் .


    எம்ஜிஆர் திரை உலக வெற்றி
    எம்ஜிஆரின் அதிமுக இயக்கம்
    பல லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்களின் ஒருமித்த பேராதரவு
    மக்களின் ஏகோபித்த ஆதரவு

    1972 முடிவில் எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வளர்ச்சி கண்டு துவண்டு போனவர்கள் இன்னமும் அதையே நினைத்து சுழன்று வருவது சரித்திரத்தில் மறக்க முடியாத ஆண்டு 1972 .

  11. #2940
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    நான் சினிமா பார்க்கத் தொடங்கிய காலம் முதல், எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியாகும் படங்களை மட்டும் தவற விட்டதே கிடையாது. அவரது படங்களை, வெளியாகும் முதல் நாளே பார்த்து விட வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். படங்கள், தாம்பரத்தில்தான் முதலில் ரிலீசாகும். அதன்பிறகுதான் சென்னை நகரில் வெளியிடுவார்கள்.

    ‘இங்கே சிட்டியில் ரிலீசாகாமலா போய்விடும்? அப்போ போய் பாருங்களேன்’ என்பார் அப்பச்சி. ஆனால் எங்களுக்கு எம்.ஜி.ஆரின் படத்தை முதல் நாள் பார்த்தால்தான், படம் பார்த்த திருப்தி கிடைக்கும். ‘நாடோடி மன்னன்’ படம் வெளியானபோது, நானும், எனது சகோதரர்கள் முருகன், குமரன் ஆகியோரும், தாம்பரம் எம்.ஜி.ஆர். தியேட்டரில்போய், முதல் நாளே படம் பார்த்த திரில் அனுபவம் இன்னும் நினைவில் இருக்கிறது.

    எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடும் பாவனைக்கு ரசிகன் நான். சண்டை போடும்போது ஒரு பறவையைப் பிடிப்பதுபோல, லாவகமாக கத்தியைப் பிடிக்க வேண்டும் என்பார்கள். மிகவும் லேசாகப் பிடித்தால் பறவை தப்பிவிடும். அதே நேரம் அழுத்திப் பிடித்துவிட்டால் இறந்து விடும். அதுபோலத்தான் கத்தியும். ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தந்து பிடித்தால்தான், கத்தியை அழகாகச் சுழற்றி சண்டை போட முடியும். அந்த லாவகம் எம்.ஜி. ஆருக்கு கை வந்த கலை.

    இப்படிச் சின்ன வயதில் இருந்தே எம்.ஜி.ஆரை மிகவும் பிடித்துப் போனதாலோ.. என்னவோ, அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் வளர்ந்துகொண்டே இருந்தது.

    நான் சொன்னதன் பேரில் ஏ.சி.திருலோகசந்தர், எம்.ஜி.ஆருக்காக ஒரு கதையைக் கூட தயார் செய்து விட்டார். அப்போது மிகவும் பிரபலமாக ஓடிய ‘கம் செப்டம்பர்’ என்ற ஆங்கிலப் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு, அந்தக் கதையை திருலோகசந்தர் எழுதியிருந்தார். இவ்வளவும் முடிந்த பிறகும் கூட, எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கப் போகிறோம் என்று அப்பச்சியிடம் சொல்ல எங்களுக்கு தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது.

    ஏனென்றால் எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஹீரோவுக்கு ஏற்றபடி கதை தயார் செய்யும் வழக்கம் கிடையாது. ஒரு கதையை தேர்வு செய்து, அதற்கு நன்றாக திரைக்கதை அமைத்து முடித்த பிறகுதான் ஹீரோவைப் பற்றிய பேச்சே வரும். ஆனால் திருலோகசந்தரோ, எம்.ஜி.ஆருக்காகவே அந்தக் கதையை எழுதியிருந்தார். எம்.ஜி.ஆருக்காக கதை தயார் செய்திருக்கிறோம் என்று சொன்னால் அப்பச்சி ஒப்புக் கொள்ள மாட்டார். இது தெரிந்தும் அவரிடம் போய் சொல்லி எதற்காக வீணாக திட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு.

    அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் அமோக வெற்றி பெற்றிருந்தது. ஆகையால் எங்களது வினியோகஸ்தர்கள் அனைவரும் ‘எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுங்க’ என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். என் நண்பர் எஸ்.ஏ.அசோகனும் கூட, ‘நீங்க எம்.ஜி.ஆரைக் கேட்டால் உடனே ஒப்புக்கொள்வார். அவருக்கும் உங்க கம்பெனியில நடிக்க வேண்டும்னு ஆசை இருக்கு’ என்று வற்புறுத்தினார்.

    எனவே ‘அப்பச்சியிடம் போய் கேட்டு விடலாம்’ என்று, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போனேன். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே சாதாரணமாக இந்த வி*ஷயத்தைக் காதில் போட்டேன்.

    அதைக் கேட்டவர், ‘ஏம்பா.. ஏன் இதை முன்னாடியே சொல்லலே?’ என்றார். எனக்கு இன்ப அதிர்ச்சி.

    அப்பச்சியின் ஒப்புதல் கிடைத்து விட்டது. அடுத்து எம்.ஜி.ஆர். ஒப்புக்கொள்ள வேண்டுமே.

    நானும், என் சகோதரர்களும் ராமாவரம் தோட்டத்திற்குப் போனோம். வி*ஷயத்தைச் சொன்னதும், ‘அதுக்கென்ன.. பண்ணிடுவோம்’ என்று ஒப்புக்கொண்டார் எம்.ஜி.ஆர். படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோதே, 3 லட்சம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

    ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படம், 1965–ம் ஆண்டு ஜனவரியில் வெளியானது. நாங்கள் எடுக்கப்போகும் படத்தை 1966–ம் ஆண்டு ஜனவரியில் பொங்கல் அன்று வெளியிட ஆசைப்பட்டோம். அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்டதற்கு, ‘அது முடியாதே. ஏன்னா வீரப்பாவுக்கு, ‘நான் ஆணையிட்டால்’ படம் ஒப்புக் கொண்டிருக்கிறேன். அவர் படத்துக்கு பிறகுதான் உங்க படம் ரிலீசாக முடியும்’ என்றார். (எம்.ஜி.ஆர். வீரப்பா என்று குறிப்பிட்டது ஆர்.எம்.வீரப்பனை. அவரை எப்போதும் வீரப்பா என்றுதான் எம்.ஜி.ஆர். அழைப்பார்)

    நான் விடுவதாக இல்லை. ‘நாங்க இப்போதான் உங்களை வைத்து முதன் முதலாக படம் எடுக்கிறோம். அது பொங்கலுக்கு வந்தாதான் நல்லாயிருக்கும்’ என்று சற்று பிடிவாதம் பிடித்தேன்.

    சற்று நேரம் யோசித்தவர், ‘நான் வீரப்பாவைக் கேட்டுப் பார்க்கிறேன்’ என்று கூறி எங்களை அனுப்பிவைத்தார்.

    நாங்கள் எங்களுடைய அலுவலகத்திற்கு திரும்பிவிட்டோம். நாங்கள் வந்த சற்று நேரத்தில் அலுவலகத்திற்கு ஆர்.எம்.வீரப்பன் நேரில் வந்து என்னைச் சந்தித்தார்.

    ‘சின்னவரைப் பார்த்தீங்க போலிருக்கு’ என்றார். (தமிழ்த் திரையுலகில் பெரியவர் என்றால் எம்.ஜி.சக்கரபாணி; சின்னவர் என்றால் எம்.ஜி.ஆர்.)

    நான் ‘ஆமாம்’ என்றேன்.

    ‘நீங்க சந்தித்துப் பேசியதைப் பற்றிச் சொன்னார். என்னை விட்டுக் கொடுக்கும்படி கேட்டார். நானும் ஒப்புக்கொண்டேன். அடுத்த பொங்கலுக்கு உங்க படம்தான் ரிலீஸ்’ என்றார்.

    எனக்கு மகிழ்ச்சி. அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    ‘அப்புறம்... சின்னவர் உங்கக்கிட்ட இன்னொரு வி*ஷயத்தைச் சொல்லச் சொன்னார்’ என்றார் ஆர்.எம்.வீரப்பன்.

    ‘சொல்லுங்க..’ என்றேன்.

    ‘மூணு லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டாராமே.. அதை மூணேகால் லட்சமா தந்துடச் சொன்னார். அடுத்த பொங்கலுக்கு படம் வர்ற மாதிரி முடிச்சுக் கொடுத்திரத் தயாரா இருக்கார்’ என்றார்.

    அப்பச்சி கூட ‘என்னப்பா இது.. இந்த அட்ஜெஸ்ட்மென்டுக்குப் போய் இருபத்தையாயிரம் ரூபாய் அதிகமாக கேக்கிறாரே’ என்று சற்று வருத்தப்பட்டார். நான் அவரை சமாதானம் செய்தேன்.

    ‘அன்பே வா’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு மூணேகால் லட்சம் ரூபாய் சம்பளம் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    ஏ.சி.திருலோகசந்தர் சொன்ன கதை எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப் போய்விட்டது. படப்பிடிப்பு வெகு வேகமாக வளர்ந்தது. நாங்கள் எடுத்த முதல் வண்ணப்படம் ‘அன்பே வா’. 14.1.1966 அன்று வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படம் 23 வாரங்கள் ஓடிய பிறகுதான், நாங்கள் நூறாவது நாள் விழாவையே கொண்டாடினோம்.

    அதில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘இந்தப் படத்தின் வெற்றிக்கு முழுக்க முழுக்க இயக்குனர்தான் காரணம். என்னைப் பொறுத்தவரை ‘அன்பே வா’, என் படங்களிலேயே ஒரு வித்தியாசமான படம். எப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும், அந்த வித்தியாசம் தெரியும்’ என்றார்.

    உண்மையும் அதுதான். இத்தனை வருடங்கள் கழித்து ‘அன்பே வா’ படத்தை, இப்போது பார்த்தாலும் எம்.ஜி.ஆர். படங்களிலேயே அது வித்தியாசமாக இருப்பதை உணரலாம்.

    அடுத்த வாரம்: ‘அன்பே வா’ படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள்.


    ‘இனி என்னை பார்க்க வராதீர்கள்’

    சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரை, எனக்கு மிகவும் பிடிக்கும். ஏவி.எம்.மில் அவரது படத்தின் ஷூட்டிங் எப்போது நடைபெற்றாலும், தவறாமல் என் அறைக்கு வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போவார். அதே போல நானும் அவர் படத்தின் ஷூட்டிங் வேறு இடங்களில் நடைபெறும்போது, குறிப்பாக எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்றால், அந்த படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று வருவேன். படப்பிடிப்பு இடைவேளையில் எம்.ஜி.ஆருடன் கொஞ்ச நேரம் பேசி அரட்டை அடித்து விட்டு வீடு திரும்புவேன். இது எனக்கு ரொம்ப நாள் பழக்கமாக இருந்தது.

    எம்.ஜி.ஆர். எங்கள் நிறுவனத்துக்காக ‘அன்பே வா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு ஒரு நாள், தேவர் பட ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆரை வழக்கம் போலவே போய் சந்தித்தேன்.

    அப்போது அவர் என்னிடம், ‘உங்களிடம் ஒரு வேண்டுகோள். இனிமேல் நான், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது நீங்கள் என்னை வந்து பார்க்க வேண்டாம்’ என்றார்.

    நான் ‘எதற்காக அப்படிச் சொல்கிறார்?’ என்பது புரியாமல், குழப்பத்துடனேயே அவர் முகத்தைப் பார்த்தேன்.

    எம்.ஜி.ஆர். தொடர்ந்தார். ‘நமது நட்பு பற்றியோ, நான் உங்கள் படத்துக்கு ஒழுங்கா கால்ஷீட் தேதிகள் கொடுத்திருப்பது பற்றியோ யாரும் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் அடிக்கடி நான் நடிக்கும் வேறு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து என்னைப் பார்த்தால், ‘பாரு... எம்.ஜி.ஆர்., ஏவி.எம். நிறுவனத்துக்கே சரியாக தேதி தரவில்லை போலிருக்கு.. சரவணனை இப்படி அலைய விடறாரே..’ என்று பேசக்கூடும். அதுக்கு நாம் ஏன் வாய்ப்பு ஏற்படுத்தித் தரணும்?. உங்களுக்கு என்னைப் பார்த்து பேசணும்னு இருந்தா, தோட்டத்துக்கு வாங்க. எப்ப வேணும்னாலும் வாங்க. அரட்டை அடிப்போம். இல்லையா... போன் பண்ணுங்க, நான் உங்க இடத்துக்கு வர்றேன்’ என்றார்.

    நான் அசந்து போய்விட்டேன். அவரது கோணம், எனக்குத் தோன்றவே இல்லை. அந்தக் கோணம், எம்.ஜி.ஆரின் பிம்பத்தை எனக்குள் மேலும் உயரச் செய்தது.

    Avm saravanan

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •