Page 310 of 401 FirstFirst ... 210260300308309310311312320360 ... LastLast
Results 3,091 to 3,100 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3091
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    தகவலுக்கு நன்றி சார்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #3092
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகமும் மெல்லிசை மன்னரும் ...
    மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடை பெற உள்ள விழா பற்றிய விளம்பர தகவல் பகிர்ந்து கொண்ட இனிய நண்பர் திரு ராகவேந்தருக்கு நன்றி .

  4. #3093
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் அனிமேஷன் பட துவக்க விழா : ரஜினி, கமல் பங்கேற்பு / MGR Animation Film Launch: Rajini, Kamal Participation

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை உருவாக்க எம்ஜிஆர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் பிரபுதேவா ஸ்டூடியோ இணைந்து அந்தப் படத்தை அனிமேஷனில் தயாரிக்கிறது. இதனை அருள் மூர்த்தி இயக்குகிறார், இமான் இசை அமைக்கிறார். இதில் எம்ஜிஆர் கேரக்டர் அனிமேஷனில் இடம்பெறும்.

    இதன் தொடக்க விழா அடையாறு சத்யா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. ரஜினிகாந்த் கிளாப் அடித்தும், கமல்ஹாசன் கேமராவை இயக்கி வைத்தும் தொடங்கி வைத்தனர். விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த லதா, காஞ்சனா, சி.ஐ.டி.சகுந்தலா, ெஜயமாலினி, சச்சு, சத்யப்ரியா, வெண்ணிற ஆடை நிர்மலா, ரோஜாமணி உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், வி.ஐ.டி பல்கலைகழக வேந்தர் விஸ்வநாதன், எம்.ஜி.ஆர் பல்கலைகழக வேந்தர் ஏ.சி.சண்முகம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  5. #3094
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள். மக்கள் திலகம் என்று சினிமாவிலும் புரட்சித்தலைவர் என்று அரசியலிலும் சிறப்புப் பெயர்கள் அவருக்கு வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் உண்மையான உள்ளன்புடன் சூட்டப்பட்ட 'வாத்தியார்' என்ற பெயர்தான் இன்றுவரை அழியாப் புகழுடன் நிலைத்தும் நீடித்துமிருக்கிறது.இந்தப் பகிர்வு, அவருடைய சினிமா, அரசியல் சாதனைகளைப் புள்ளிவிவரங்களுடன் சொல்வதில்லை. இது ஒவ்வொரு எம்.ஜி.ஆர் தொண்டனின் இதயத்தோடும் நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது.

    தமிழர்களின் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் நிறைவுபெறுகின்றன. இது, பல வருடங்களாகவே தொடர்ந்துவரும் நிகழ்வாக இருக்கிறது. கிராமப் புறங்களில், அதிலும் தென்மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களில், மார்கழி மாதத்தில் தெருவுக்குத் தெரு உள்ள சிறு கோயில்களில் ஸ்பீக்கர் கட்டி அதிகாலையிலும் மாலையிலும் பக்திப் பாடல்கள் போடுவது வழக்கம். மார்கழி மாதம் முடிந்ததும் அதைக் கழற்றிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சொல்லிவைத்தது போல் ஒரு மாறுதல் நடந்தது. அதாவது, மார்கழி மாதம் முதல் தேதி அன்று கட்டப்படும் அந்த ஸ்பீக்கர்கள், ஜனவரி 17-ம் தேதி முடிந்ததும்தான் கழற்றப்படும்.

  6. #3095
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    'திருடாதே பாப்பா திருடாதே' என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பார். 'நான் ஆணையிட்டால்..அது நடந்துவிட்டால்' என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை டானிக் ஊற்றிக்கொண்டிருப்பார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று இளைஞர்களுக்கு உற்சாக உரம் போடுவார். கிராமம் முழுக்க அன்றைக்கு எம்.ஜி.ஆரின் குரலாக டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். விவரம் அறிந்தவர்களுக்குத்தான் அது டி.எம்.எஸ். குரல். ஆனால்,கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றைக்கும் அது எம்.ஜி.ஆரின் குரல்தான். சினிமா பாடல்கள்மூலம் வாழ்வியலை சாமானியர்களுக்குக் கற்றுத்தந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், அவரை தங்களது மூச்சுக்காற்றாகக் கருதிய பாமர மக்கள் அவருக்கு, 'வாத்தியார்' என்று செல்லப் பெயர் சூட்டினார்கள்.

    எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத மற்றொரு 'சிறப்பு' எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருக்கிறது. பொதுவாக, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளின்போது, அந்தக் கட்சியினர் ஊரின் முக்கிய இடத்தில் போட்டோ வைத்து மலர்தூவி, புகழ்பாடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் ஒவ்வொரு தொண்டரின் வீட்டுக்கு முன்பாகப் புகைப்படம் வைத்து , ஸ்பீக்கர் கட்டி அவரது புகழ் பாடுவார்கள். தவிர, அவரவர் வசதிக்கேற்ப பானகமோ,அன்னதானமோ வழங்குவார்கள். சினிமா, அரசியல் என்ற இரட்டைக் குதிரையில் சவாரிசெய்து உச்சம் தொட்டவர் எம்.ஜி.ஆர். இங்கு குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் இன்றைக்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சென்னையில் அப்படி எல்லாம் நடப்பதில்லை என்பவர்கள், ஒரு ரவுண்டு வடசென்னை பக்கம் போய் பார்த்துவிட்டு வாருங்கள்!

  7. #3096
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் மக்கள் புரட்சி மூலமாக ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதாகக் காட்டிய நாடோடி மன்னன், அரச கட்டளை, நம் நாடு ஆகிய படங்களில் பானுமதி, சரோஜாதேவி, ஜெயலலிதா போன்ற கதாநாயகிகளை துணிச்சல் மிக்க பெண்களாகவே படைத்தார். அவர்கள் அநியாயம் செய்யும் ஆண்களைத் தட்டிக் கேட்டனர். திரையில் எம்.ஜி.ஆர் தொடங்கிய அறப்போருக்கு உறுதுணையாய் இருந்தனர். தனிக் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர், தன் படங்களில் லதாவை பிரசார நோக்கில் பயன்படுத்தினார். முந்தைய படங்களைவிட இந்த உளவியல் முயற்சி அதிகமாகவே இருந்தது. தி.மு.க-வினரை சாமான்யப் பெண்கள் எதிர்த்துப் பேசவும் தேர்தலில் அவர்களுக்கு எதிர்த்து வாக்களிக்கவும் எம்.ஜி.ஆரை நேரடியாக ஆதரிக்கவும் லதாவைக் காட்டி அவர்களைப் பழக்கினார் என்றே சொல்லலாம். திரைப்படங்களில் லதா தி.மு.க எதிர்ப்பு அல்லது வில்லனை எதிர்த்து எம்.ஜி.ஆரை ஆதரித்துப் பேசும்போது பெண்களும் அதை அமோதித்துக் கூடவே பேசினர்.

    படங்களில் லதாவின் நேரடி பங்களிப்பு

    லதாவை எம்.ஜி.ஆர் தன் ரசிகைகளுக்கு கட்சி பற்றி பேசவும் விவாதிக்கவும் பயிற்சியளிக்கும் நோக்கில் நடனம் வசனம் போன்றவற்றை சிறப்பாக அமைத்தார். அவற்றின் செயல்பாட்டு வீச்சுக்கு ஒரு எடுத்துக்காட்டை காண்போம்.

    ‘உரிமைக்குரல்’ படத்தில் ‘‘ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா’’ என்ற பாட்டில் ஓடிவந்த படியே வீடு வீடாகச் சென்று ஆண்களைக் கேலி செய்து ஆடிப்பாடுவார். அவரது ஒவ்வொரு அசைவும் ஒரு நடன ஸ்டெப்பாக இருக்கும்.

    அந்தக்கால ஆம்பளங்க போர் புரிவாங்க

    இளிச்சவாயன் பட்டம் வேறு வாங்கிவிட்டீங்க

    என்று பாடி முன்பிருந்த ஆண்கள் வீரர்கள்; இப்போது இருப்பவர்கள் கோழைகள்; அதனால் பெண்களாகிய நாங்கள் கெட்டவை அழிக்க நல்லவனை ஆதரித்து இணைந்து போராடுகிறோம் என்று பாட்டு மூலமாகத் தெரிவிப்பார். ஆண்களே வில்லனை கெட்டவனை எதிர்க்கும் செயல்பாட்டில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறீர்களே இது நியாயமா அறப்போர் நடத்தும் எம்.ஜி.ஆருடன் நீங்கள் இணைந்து நின்று அவருக்குத் தோள் கொடுக்க வேண்டாமா என்று கேட்பதாக இப்பாட்டும் டான்சும் அமைந்திருக்கும். எம்.ஜி.ஆர் பின்னால் நாம் அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தை லதா இந்த பாட்டு மூலமாக நேரடியாகச் சொல்லிவிடுவார்.

    அண்ணா தி.மு.க ஆரம்பித்த பிறகு எம்.ஜி.ஆர் படங்களில் வில்லனாக வரும் நம்பியார் நிஜத்தில் தி.மு.கவைச் சேர்ந்த ஒருவரையோ அல்லது தி.மு.க கட்சியையோ பிரதிபலித்தார். அவர் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு மக்கள் கொதித்துப் போய் அவரைத் தண்டிக்க வேண்டும்; அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருத்தை மக்கள் மனதில் விதைக்க வேன்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பினார்.

    ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் லதாவின் அரசியல் ஊக்கமளிப்பு பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அவர் தமிழ்நாட்டு பெண்குலத்தைப் பிரதிபிம்பமாக வந்தார். இப்படத்தில் தஞ்சையைச் சேர்ந்த சோழ மன்னனிடம் இருந்து பாண்டியநாட்டை மீட்கும் விடுதலைப் போரில் பாண்டிய இளவரசனான எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக நிற்கும் கதாபாத்திரத்தில் லதா நடித்தார். சோழ நாட்டு இளவரசன் நம்பியார் என்பது கலைஞர் கருணாநிதியையும் மதுரை என்பது தமிழ்நாட்டு மக்களையும் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் [எம்.ஜி.ஆர்] என்பது அ.தி.மு.க-வையும் குறித்தது.

    லதா தன்னை பலவந்தப்படுத்தும் நம்பியாரிடம் ‘‘கொஞ்சம் பொறுத்திரு; இன்னும் கொஞ்ச நாளில் உன் அதிகாரம் பஞ்சாய்ப் பறக்கும், நீ ஒரு கொள்ளைக்காரன்’’ என்று வீர வசனம் பேசுவது விரைவில் ‘‘தேர்தல் வரும். அப்போது தி.மு.க தோற்றுப் போகும்; தி.மு.க ஒரு ஊழல் அரசு’’ என்று சொல்லும்வகையில் அமைந்தது.

    அவர் ஆட்சிக்கு வந்ததும் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்ததும் அரசு அலுவலகம் அரசு பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்களைத் தாய்க்குலம் என்றே ஆண்கள் குறிப்பிடும்படியான காலகட்டமும் வந்தது.

    அவர் பெண்கள்மீது காட்டிய அக்கறை அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஒரு பொதுக்கூட்டத்தில் ‘‘கணவர் சொன்னால்கூட கேட்க மாட்டார்கள்; நான் சொன்னால் பெண்கள் கேட்பார்கள்’’ என்று அவர் தமிழ்நாட்டுப் பெண்களைப் பற்றி பகிரங்கமாகக் கூறும் அளவுக்குப் போனது. அன்றைய பெண்கள் அந்த வாக்குமூலத்துக்குக் கொதித்தெழவில்லை. மாறாக லதாவாக இருந்தனர் என்றே சொல்ல வேண்டும்.

  8. #3097

  9. #3098
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் சிறந்த தலைவர் என்று அவரது 101வது பிறந்தநாளையொட்டி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.

    மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பாணர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவு செய்துள்ளார்.

    அதில், எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாளை கொண்டாடும் தருணத்தில், அவரை நினைவு கூர்வோம் என்று தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். சிறந்த தலைவர் என்றும், திரைப்பட கலைஞர் என்றும் புகழாரம் சூட்டி உள்ளார்.

    பொங்கலை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்தும், திருவள்ளுர் தின வாழ்த்துச் செய்தியில் தமிழக மக்களை தனது சகோதர, சகோதரிகள் என்றும் மம்தா பேனர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  10. #3099
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரிடம் உள்ள ஒரு விசேஷ குணம்
    m.g.r. நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் அவர். ‘ஹா…ஹா… ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான் முதன்முதலாக இந்த இடிச்சிரிப்பை அவர் வெளிப்படுத்தினார். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பால், பின்னர், அதுவே அவரது தனி முத்திரை ஆனது. அந்த சிரிப்புக்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பா.

    1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ என்ற படத் தில் வீரப்பா அறிமுகமானார். 1946-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸின் ‘ முருகன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித் திருந்தார். அந்தப் படத்தில் வீரப்பாவும் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதிவரை நீடித்தது. எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மது ரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ உட்பட பல படங்களில் வீரப்பா நடித்துள்ளார்.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘நாம்’ படத்தை ஜூபிடர் பிக்சர்ஸுடன் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் பங்குதாரர்களாக இருந்தனர். படத்துக்கு திரைக்கதை, வசனம் கருணாநிதி. படத் தில் வரும் வில்லன் பாத் திரத்துக்கு வீரப்பாவை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார். ‘நாம்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு முற்போக் கான இளைஞர் வேடம். படத்தில் எம்.ஜி.ஆரின் வீட் டுக்கு வீரப்பா தீ வைத்துவிடுவார். இதில் எம்.ஜி.ஆரின் முகம் உருக்குலைந்து விடும். முகம் பாதிக்கப்பட்டாலும் கண்கள் தெரியும். தீயில் வெந்த முகத் தோடு இரவில் நடமாடும் அவரைப் பார்த்து பேய் நடமாடுவதாக ஊரில் வதந்தி பரவும். எம்.ஜி.ஆரின் அழகான முகத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்பு வார்கள் என்பதை இந்தப் படம் உணர்த்தியது. படம் நல்ல கதை யம்சத்துடன் எம்.ஜி.ஆரின் சிறப்பான நடிப்போடு அமைந்திருந்தாலும் அவரை வெந்துபோன முகத்தோடு பார்க்க ரசிகர்கள் விரும்பவில்லை.

    வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன. எம்.ஜி.ஆர். நடித்து 1957-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாதேவி’ படத்தில் ‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற வீரப்பாவின் வசனம் இன்றளவும் பிரபலம். அந்தப் படத்தில் வீரப்பாவின் பெயர் கருணாகரன். சந்தர்ப்பவசத்தால், வீரப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, இளவரசியாக வரும் நடிகை எம்.என்.ராஜத்தை அவருக்கு கட்டாய மாக திருமணம் செய்துவைத்து விடுவார் கள். திருமணம் முடிந்து வீரப்பாவை ‘‘அத்தான்…’’ என்று எம்.என்.ராஜம் அழைப்பார். ஆத்திரத்தை அடக்கியபடி வேதனை கலந்த சிரிப்போடு வேண்டா வெறுப்பாக, ‘‘அப்படிச் சொல்… சத்தான இந்த வார்த்தையிலே கருணாகரன் செத்தான்’’ என்று வீரப்பா கூறும்போது தியேட்டரில் எழும் சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் பிடிக்கும்.

    படங்களில் வாள் வீச்சில் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுத்து வீரப்பா சண்டையிடுவார். எம்.ஜி.ஆரிடம் உள்ள ஒரு விசேஷ குணம், எந்த பாத்திரத்தில் எந்தக் காட்சியில் நடித்தாலும் சரி, சுற்றிலும் நடப்பவற்றில் ஒரு கண் வைத்திருப்பார். ‘ஜெனோவா’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆருக் கும் வீரப்பாவுக்கும் ஆக் ரோஷமான வாள் சண்டை. இந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளத்தில் உருண்டுவிழ இருந்த வீரப்பாவை எம்.ஜி.ஆர். பிடித்து இழுத்து சரியான நேரத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்தார். இதை வீரப்பா பலமுறை நன்றி யோடு கூறியுள்ளார்.

    ‘விக்கிரமாதித்தன்’ படத்தில் வீரப் பாவை கொல்ல வரும் கூட்டத் திடம் இருந்து அவரை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு எம்.ஜி.ஆரைப் பற்றி வீரப்பா விசாரிப்பார். விவரங்களைத் தெரிந்து கொண்டபின், அவர் சொல் லும் வார்த்தைகளால் தியேட்டரில் எழும் கரவொலியால் காது கிழியும். எம்.ஜி.ஆர். பற்றி வீரப்பா சொல் வார்… ‘‘உலகத்துக்குத் தேவையான மனிதர்!’’

    அந்த வசனத்தை உறுதிப்படுத்துவது போல மட்டுமல்ல; தன்னை அவமதிப்ப வர்களை எம்.ஜி.ஆர். எப்படி தண்டிப்பார் என்பதற்கும் ஒரு சுவையான சம்பவம். அவர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்த மான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.

    ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.

    சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!

    ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத் தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப் புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.

    ‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!

  11. #3100
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Π*оссия
    Posts
    0
    Post Thanks / Like
    18.1.1957

    Chakravarthi Thirumagal 1957
    Randor Guy
    1957 alone, he had as many as four movies — Chakravarthi Thirumagal, Mahadevi, Pudumaipithan and Raja Rajan. Chakravarthi Thirumagal was directed by Pa. Neelakantan who soon became close to MGR and directed him in more than 17 films with many of them becoming hits. Written by the first star writer of Tamil Cinema, Elangovan based on a story by the forgotten screenwriter P. A. Kumar, this film had Anjali Devi as the female lead supported by S. Varalakshmi, P. S. Veerappa, N. S. Krishnan, T. A. Mathuram, Thangavelu, T. P. Muthulakshmi, Lakshmi Prabha and veteran character actor E. R. Sahadevan.

    The film had pleasing music (G. Ramanathan) with lyrics by a galaxy of poets — Thanjai Ramaiah Das, Pattukottai Kalyanasundaram, K. T. Santhanam, Subramania Bharati, Ku. Sa. Krishnamurthy, Ku. Ma. Balasubramaniam and ‘Clown' Sundaram.

    The film had intimate scenes between MGR and Anjali which thrilled moviegoers of the day.

    A folklore about kings, queens and princesses, the film was produced by RM. Ramanathan Chettiar, one of the investors in the then active Newtone Studios, in Kilpauk, Madras.

    Promoted by the well-known art director-filmmaker F. Nagoor, well supported by his professional colleagues, noted audiographer Dinshaw K Tehrani and cinematographer Jiten Banerjee, this studio was financially supported by the superstar and legend of Tamil cinema, M. K. Thyagaraja Bhagavathar. Ramanathan Chettiar, a close friend of MKT, was one of the financiers. A rich Naattukottai Nagarathar from Chettinad, he was interested in sound recording and sat at the sound mixer, recording the sound and mixing tracks. In some movies, his name was credited as the audiographer. Besides, he produced movies like this one under his banner Uma Pictures.

    A king arranges three competitions for young men seeking the hand of his lovely princess (Anjali Devi,) and a prince (MGR), who seeks her hand, wins the competitions and weds her. Earlier, the princess and her companion (Varalakshmi) go horse riding, and by sheer chance, they happen to meet the hero. The princess, who doesn't reveal her identity, falls for him, and so does her friend. The friend is ambitious and plays many evil games to get her dream man. However, her designs get exposed and after many interesting events, the couple are united in marriage. The film had many songs, some of which became popular. A song and dance sequence ‘Aaadavaanga annaathey' sung off-screen by Sirkazhi Govindarajan, Jikki and P. Leela, with words such as ‘gummaalu' was a hit. Sohanlal and Thangaraj choreographed the dances by Ragini, E. V. Saroja and G. Sakunthala.

    The cinematography was by noted lensman V. Ramamurthi. One of his assistants was Karnan who later rose to become a successful cinematographer and producer-director, making ‘curry westerns' featuring Jai Shankar such as Ganga and Jambu.

    One of the assistant directors credited as ‘Mohan' rose to become a successful filmmaker under the name Mohan Gandhi Raman. He was also active in the south Indian film workers movement and hailed from a family of Congress Party loyalists. The film was successful at the box-office.

    Remembered for: the interesting storyline, good music, song and dance sequences and taut on-screen narration.

    M. G. Ramachandran, Anjali Devi, N. S. Krishnan, T.A. Mathuram, S. Varalakshmi, P.S. Veerappa, K. A. Thangavelu, P. B. Rangachari, R. Balasubramaniam, T. P. Muthulakshmi, Susheela, E. R. Sahadevan, Lakshmiprabha (E. V. Saroja, G. Sakunthala dance)

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •