Page 37 of 401 FirstFirst ... 2735363738394787137 ... LastLast
Results 361 to 370 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #361
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #362
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் - 19/9/17




  4. #363
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #364
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய தலைமுறை வார இதழ் -21/9/17





  6. #365
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின்
    நூற்றாண்டு விழாவை
    அனைவரும் வியக்கும்
    வண்ணம் அனைத்துலக
    எம்.ஜி ஆர் பொதுநல
    சங்கம் கடந்த ஞாயிறு
    அன்று சென்னையில்
    நடத்தியது. இவ்விழாவில்
    நிகழ்ச்சி தொகுப்பாளர்
    பணி எனக்கு. மிகவும்
    மகிழ்ச்சியோடு அனைவரின்
    பாராட்டுதலோடு அப்பணியை
    செய்தேன். விழா பற்றி
    எனது அன்புநண்பர்
    திரு வெங்கட்ராமன் தியாகு
    முகநூலில் பதிவிட்ட பதிவினை
    இங்கு பதிவிட்டுள்ளேன்.
    புகைப்படங்கள் மற்றும்
    பிற விபரங்களை பின்னர்
    பதிவிடுகிறேன்.

    - எஸ் ரவிச்சந்திரன்


    சத்தமில்லா சாதனை!!
    ---------------------------------------
    ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது!! ஆனால்-எம்.ஜி.ஆர் என்னும் பௌர்ணமி பற்றி எத்தனை பேர் எத்தனை விதமாக எத்தனை முறை குறிப்பிட்டாலும் ஆவலோடு அதைக் கேட்கவும் அதற்காகக் காத்திருக்கவும் நீங்கள் தயார் தானே???
    அப்பாடா! பதினேழாந்தேதி நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பற்றி--அதுவும் பலர் மிகச் சிறப்பாக பதிவிட்ட பின்னர் பதிவிடும் என் சுறுசுறுப்புக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டாயிற்று???
    அகில உலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம்!!
    எத்தனையோ திங்கள்,,நித்திரை தொலைத்து--சொந்த அலுவல்கள் மறந்து--
    எம்.ஜி.ஆர் என்னும் அணையாத ஜோதியின் --
    பிரகாசமான-- நூற்றாண்டு என்னும் ஒளிப் பிழம்பு ஓங்கி எரிய--தங்கள் உதிரம் கலந்த உழைப்பை நெய்யாக வார்த்த உன்னதமானத் திரு நாள்!!
    இந்த வருடம் தொடங்கியது முதல் --
    அடை மழையாக அந்தக் கொடை மழைக்கு விழாக்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்றாலும்--??
    நம் அகில உலக எம்.ஜி.ஆர் பொது நல சங்கம் --தம் குடும்பத் தலைவனுக்கு நடத்துவது ஒரு தனி குதூகலம் தானே?? அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால்--
    நம் சங்கம்,,எந்தவொரு அமைப்போடும் இணைந்து நடத்தாமல் தனியே நடத்தும் முதல் விழாவே-எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தான்!!
    சந்திக்காத சோதனை இல்லை--சிந்திக்காத நேரமில்லை-அவ்வளவு ஏன்?? சங்கத்தின் நிகழ்ச்சியா? என்று சிலரின் நிந்திக்காத உதடுகளும் இல்லை??
    அத்தனை இடர்களையும் அடவிச் சென்று விழாவை நடத்துங்கள் என்று தடவிக் கொடுத்தது எம்.ஜி.ஆரின் சூட்சும தாயுள்ளம்!! முடிவு??
    வெற்றி மீது வெற்றி என சங்கம் பார்த்தது--அதை
    வாங்கித் தந்த வேலையை அந்த சிங்கம் பார்த்தது!!!
    திருப்பூர் ரவியின் நிகழ்ச்சித் தொகுப்பு--அருமையானதோர் பகுப்பு!!
    இயக்குனர் லியாகத் அலிகானின் எழுச்சி உரையோ இளைய தலைமுறைக்கு பெருமையானதோர் வகுப்பு!!
    சந்திரனைப் பற்றி ஆங்கே ஆதவன் புகழ்ந்தது??--ஓ!! அந்த சந்திரன் சாதித்தது எல்லாமே புரட்சி தானே!!
    கருத்தரங்கம்--ராஜா அண்ணாமலை மன்றம் என்ற
    பெருத்தரங்கம் தன்னையே அசைத்துப் பார்த்தது என்றால் மிகையில்லை!!
    ஒருவர் வாழ்வில் சற்று உயர்ந்து விட்டாலே தன் நிலை மறக்கும் இக்காலத்தில்--45 வருடங்கள் கழிந்தும்
    புது முக நடிகையின் பணிவான உரையைப் போல் --எம்.ஜி.ஆர் பற்றி அலசி--கண்ணியத்தில் இமயம் தொட்டார் லதா!! மலேயா போன்ற வெளி நாடுகளில் தன்னை--எம்.ஜி.ஆர் லதா என்றே அழைக்கிறார்கள் என்று அவர் குழந்தையின் சந்தோஷத்தோடு தன்னை மறந்து எம்.ஜி.ஆர் பற்றி உரையாற்றும்போது அரங்கு அதிர்ந்தது!!!--இத்தனைக்கும்--அந்த
    ஆரணங்கு அன்று இரவே அவுட்-டோர் ஷூட்டிங் செல்ல வேண்டிய நிலையிலும் வந்திருந்தது தான்!!--அந்த--லதா என்னும்--
    ஆரணங்கு பேசும்போது ஊரடங்கு அமைதியைப் போல் உன்னிப்பாக செவிமடுத்துக் கேட்டது கூட்டம்!!!

    காவல் துறையில் பெண்களுக்கு எம்.ஜி.ஆர் அளித்த முக்கியத்துவம்--அவரது ஆட்சி காலத்தில் இருந்த காவல் துறையின் கண்ணியம்--சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு--என்று மடை திறந்த வெள்ளமென
    கொட்டித் தீர்த்த திலகவதி ஐ.பி.எஸ்--கடைசியில்
    குட்டித் தீர்த்தார் இப்படி??
    இப்படிப்பட்ட எம்,ஜி.ஆரின் பேரை-- நேற்றைய மழையில் முளைத்த இன்றைய காளான்கள் சொந்தம் கொண்டாடுவதா என்று????
    இயல்பான தன் அனுபவங்களை இனிமையாகப் பகிர்ந்து கொண்டார் சச்சு!!
    ஆண் சிங்கமாம்--இன்று நம்மிடையே கம்பீரமாக உலா வரும் திரு கே.பி.ராமகிருஷ்ணன் அவர்களின்
    மலரும் நினைவு--பலரின் நினைவை பலமாக ஆக்ரமித்தது!!
    ஆக நூற்றாண்டில் மூன்று எம்.ஜி.ஆர் படங்கள்??
    ராஜகுமாரி-!!-லதா!!!
    குமாரி!!--சச்சு!!!
    காவல்காரன்!!--திலகவதி!!!
    நெல்லை மணி,,இதயக்கனி விஜயன்,,ஓமப்பொடி பிரசாத்,,ஸ்ரீ வில்லிபுத்தூர் ராஜப்பா- மத்ரை ராமகிருஷ்ணன்,,திண்டுக்கல் மலரவன்-இப்படி விழாவுக்கு வந்த ஜாம்பவான்களைக் குறிப்பிட வேண்டுமென்றால் அதற்கு என்று தனிப் பதிவே தேவைப்படும்??
    அவ்வளவு பெரிய அரங்கில் எவ்வளவு பெரிய கூட்டம்??
    இதை நான் கூறவில்லை.--சகோதரி லதா அவர்களின் கமெண்ட்!!
    அங்கிருந்த ஆள் உயர தலைவரின் படத்துக்கான மலர் அலங்காரத்தைப் பார்த்த லதாவின் உபரி கமெண்ட்--
    இவர் ஒருவருக்கே இது சாத்தியம்!! இவர் ஒருவரே இத்தகைய கௌரவத்துக்கு தகுதியானவர்!!!
    சங்கத்தின் செயலாளர்-பேராசிரியர் செல்வகுமார்,,உப தலைவர்-திரு மனோகரன்,,அமைப்பாளர்-ஹயாத்,,பொருளாளர்--பாபு,,நுங்கம்பாக்கம் பாலாஜி--மேஜர் தாசன்---உட்பட்ட செயல் வீரர்கள்!!
    இவர்களின் உழைப்பையும்--முனைப்பையும்--
    அருமை என்ற மூன்றெழுத்தில் அவ்வளவு எளிதில் முடக்கி விட இயலாது!!
    ஓரிடத்தில் நில்லாமல்--இங்கங்கு என்று இல்லாமல்--
    மேடையில் இவர்களது செயல்பாடுகள்--நாளைய இவர்களின் இன்னும் பல--இதை விடப் பெரிய வெற்றி நிகழ்ச்சிகளுக்காக எம்.ஜி.ஆர் இவர்களுக்கு அளித்த பயிற்சி எனலாம்!!
    ஜெண்டில் மேன் எம்.ஜி.ஆருக்கு என்றே ஏற்பாடு செய்யப்பட்டது போலிருந்தது
    ஜெண்டில் மென் குழுவின் இசை நிகழ்ச்சி!!
    அனைவருக்கும் சிற்றுண்டியோடு--அங்கே --
    ஆயிரத்தில் ஒருவனைக் காண வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு--
    எம்.ஜி.ஆர் புகைப்படத்துடன் கூடிய கீ--செயின் வழங்கப்பட்டது---????எம்.ஜி.ஆர் என்னும்---
    கீ--செயினாக தன் தொண்டர்களை இணைத்து வைத்திருப்பதை இயல்பாகக் காட்டியது!!!!
    ஆக மொத்தம் அன்று கூவத்தூரில் கட்டாயத்தில் அடைக்கப்பட்ட கூட்டத்தைப் போல் இல்லாமல்
    பாதி தமிழகத்தை தன்னுள் சிறை பிடித்திருந்தார் எம்.ஜி.ஆர் என்றால் தகும்!!!!
    இவ்வளவு செய்தும் சங்க நிர்வாகிகளுக்கு இருந்த வருத்தம்??
    இன்னும் சிறப்பாக நம்மால் நம் நாயகருக்கு செய்ய இயலவில்லையே???---ஆக--
    ஞாயிற்றுக் கிழமையைக் கூட பணி நாளாக்கி விட்டார்கள் சங்கத்தினர்??
    2-மணியிலிருந்து
    10-மணி வரை--எட்டு மணி நேரம் சென்னையில் போக்குவரத்து நெரிச்சல் இந்த நிகழ்ச்சிக்காக!!
    அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொது நல சங்கம்-தம்முள்
    பினைத்துலவி வரும் பெருந்தலைவராம் நம் புரட்சியாரின் பெருமையை மணிக்கணக்கில் பேசியும்
    வறட்சி யாரும் அடைந்து நீர் பருகா அதிசயம் அன்று அங்கே நடந்தது??
    இனியும் நடக்கும்--இனிக்கவே நடக்கும் என்ற என் நம்பிக்கையில் இணைகிறீர்கள் தானே நீங்களும்????
    Last edited by ravichandrran; 20th September 2017 at 08:58 PM.

  7. #366
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளி முதல் (22/9/17) மதுரை வண்டியூர் கல்லாணையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி
    4 காட்சிகளில் திரைக்கு வருகிறது .



    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

  8. #367
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வரும் வெள்ளி முதல் (22/9/17) மதுரை மீனாட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
    திரை மற்றும் அரசியல் உலகின் "ஒளிவிளக்கு " தினசரி 4 காட்சிகளில் திரையிடப்பட உள்ளது. தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களில் அதிக முறை
    வலம் வருவதோடு , வசூலிலும் முதலிடம் பெறும் ஒரே திரை காவியம் .



    தகவல் உதவி :மதுரை நண்பர் திரு. எஸ்.குமார்.

  9. #368
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் -20/9/17


  10. #369
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #370
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல்-20/9/17

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •