Page 346 of 401 FirstFirst ... 246296336344345346347348356396 ... LastLast
Results 3,451 to 3,460 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3451
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    முதல்வர் பதவியிேலே புரட்சித் தலவர் இருந்தபோது ஒரு இஞ்ச் நிலம் கூட வாங்கவில்லை.

    ராமாவாரம் தோட்டம், சத்தியா ஸ்டூடியோ, ராயப்பேட்ட கட்சி ஆபீஸ், வட பழனி ஸ்கூல் இுடம், நினைவு இல்லம் இருக்கும் இுடம் எல்லாமே புரட்சித் தலைவர் நடிச்ச காலத்தில் வாங்கியது. சினிமாவில் நடித்து உழைத்த பணத்தில் வாங்கினார். ஊழல் செய்து எந்த சொத்தும் வாங்கவில்லை.

    பதவியப் பயன்படுத்தி சொத்து வாங்காத தலைவர் புரச்ட்சித் தலைவர். தான் உழைச்சி சம்பாதித்த ராமாவராம் தோட்டம் ஊமை ெசவிட்டுக் குழந்ைதைகள் பள்ளி, வட பழனி பள்ளி, ராயப்பேட்ட வீட்டை கட்சி ஆபிஸ் என்று தன் உழைப்பில் வந்த சொத்துக்களை தர்மத்துக்கும் கட்சிக்கும் எழுதி ெவச்ச ஒரே தலைவர் புரட்சித் தலைவர்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3452
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    மாம்பலத்தில் வாங்கிய வீட்டயும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் ரசிகர்கள், தொண்டர்களுக்காக நினவு இல்லமாக மாற்ற உயில் எழுதி ைவத்து சென்ற தொண்டர்களின் தலைவன் புரட்சித் தலைவன்.

    புரட்சித் தலைவர் வாழ்க.

  4. #3453
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    இப்போது மக்கள் திலகம் அவர்களின் 125 காவியத்தின் பெயரை தூக்கி கொண்டு காட்சிகள் அரங்கேறுகிறது, இதற்கு மற்ற நடிகர்கள் ஆசியோ முன் மாதிரியோ தேவை படுகிறதா? புலியை(சிங்கத்தை) பார்த்து பூனை(எலி) சூடு போட்ட கதையாக ஆகாமல் இருந்தால் சரி😊

    சுகாராம் அய்யா எதுக்கு ஒளிவு மறவு. தயிரியமாக சொல்லுங்கள்.

    ரஜனி காந்தோ கமலகாசனோ புரட்சித் தலவர் ஆக முடியாது.

    இவர்கள் ஒருதடவை ஆட்சியை பிடிக்கிறதே முடியாது. சத்தியமா 3 முறை தொடர்ந்து இவர்களால் வெற்றி பெற்று ஆட்சி பிடிக்க முடியது.

    இவர்கள் காரைக்குடி பக்கம் போனால் ஆச்சியை பிடிக்கலாம்.

  5. #3454
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3455
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி ரவிச்சந்திரன்,

    கமலகாசன் நல்ல நடிகர்தான். ஆனால் மூன்றம் பிறை படத்தில் கமலகாசனைவிட சிறீதேவி பயித்தியம் மாதிரி நன்றாக நடித்திருந்தார்.

    அந்த படத்தின் விருது விழாவில் சிறீதேவியின் நடிப்பை புரட்சித் தலவர் குறிப்பிட்டு பாராட்டினார். சிறீதேவிக்கு புரட்சித் தலைவர் விருது வழங்கியபோதுதான் எடுத்தது நீங்கள் போட்டிருக்கும் படம். நன்றி.

  7. #3456
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    கோவை டிலைட் திரையரங்கில் மக்கள் திலகத்தின் பக்தர்கள்


    Courtesy - VKM, Coimbatore
    Last edited by ravichandrran; 25th February 2018 at 09:35 PM.

  8. #3457
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் "குடியிருந்த கோயில்" தற்போது கோவை- டிலைட் அரங்கில் வெற்றி நடை காண்கிறது...

  9. #3458
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சங்கே முழங்கு & ராமன் தேடிய சீதை

    நேற்று விடுமுறை நாள் என்பதால் நீண்ட நாடகளுக்கு பிறகு சன் லைப் தொலைக்காட்சியில் எம்ஜிஆரின் இரண்டு படங்களையும் முழுவதுமாக கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது . சன் லைப் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் மட்டும் மிகுந்த எரிச்சலை தந்தது ,

    ராமன் தேடிய சீதை

    1972ல் வந்த படம் .பிரிண்ட் அட்டகாசமாக இருந்தது .புதுப்படம் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது .இந்த படத்தில் எம்ஜிஆரின் எனெர்ஜி சூப்பர் ,
    எம்ஜிஆரின் உடைகள் மிகவும் பிரமாதம் . படம் முழுவதும் ஜாலியாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார் . இனிமையான பாடல்கள் குறிப்பாக என் உள்ளம் உந்தன் ஆராதனை மற்றும் நல்லது கண்ணே எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ..
    சண்டை காட்சிகள் பற்றி கேட்கவே வேண்டாம் . குறிப்பாக மெல்லிசை மன்னரின் ரீ ரெக்கார்டிங் வர்ணிக்க வார்த்தை இல்லை .டைட்டில் காட்சி மிகவும் இனிமையாக இருந்தது .காஷ்மீர் காட்சிகள் மற்றும் ஒகேனக்கல் இயற்க்கை காட்சிகள் கண்களுக்கு விருந்து .

    எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி பொருத்தம் ஏ ஒன் .எல்லா வயது ரசிகர்களும் என்றென்றும் விரும்பி பார்க்கும் படம் ராமன் தேடிய சீதை .


    சங்கே முழங்கு


    எம்ஜிஆரின் சிறந்த நடிப்பில் இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் வசனத்தில் படம் முழுவதும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தது .
    கண்ணதாசனின் பாடல்கள் , மெல்லிசை மன்னரின் இசையில் எல்லா பாடல் காட்சிகளும் சூப்பர் ஹிட் ஹெலன் நடனத்தில் இடம் பெற்ற
    பின்னணி இசை அமர்க்களம் . சிலர் குடிப்பது போலே நடிப்பார் -பாடலில் எம்ஜிஆர் - ஹெலன் நடன அசைவுகள் மற்றும் இசை மிகவும் அற்புதம்
    சீக்கியர் வேடத்தில் காவல் அதிகாரியாக எம்ஜிஆரின் உடை மற்றும் தோற்றம் கட்சிதமாக இருந்தது
    கோர்ட் காட்சிகளில் வி.கே . ராமசாமி மற்றும் அசோகனை எம்ஜிஆர் மடக்கும் விதம் சூப்பர் ..


    எம்ஜிஆரின் இரண்டு வண்ணப்படங்ளை முழு திருப்தியுடன் பார்த்த மனநிறைவு கிடைத்தது . 46 ஆண்டுகள் முன்பு வந்த படம் போல் நினைக்க முடியவில்லை .

    வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் இப்படங்களை பார்க்க விரும்புகிறேன் .

    சன் லைப் தொலைக்காட்சிக்கு நன்றி .
    .

  10. #3459
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    திரை உலகில் எம்ஜிஆர் செய்தது என்ன ?


    ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்தது .
    ரசிகர்களை முழுவதுமாக நம்பியது



    எம்ஜிஆர் அவர்கள் ஏற்று கொண்ட கதையின் தன்மைக்கு ஏற்றவாறு முழு ஈடுபாடுடன் நடித்தது .
    தனக்கு பொருத்தமில்லாத கதைகளில் நடிக்க்க மறுத்தது .
    மக்கள் ரசனைகளை அறிந்தது அதற்கேற்றவாறு காட்சிகளை அமைத்தது .
    தான் சார்ந்திருந்த இயக்கத்தின் கொள்கைகளை படத்தின் மூலம் பிரகடனம் செய்தது
    மன்னராட்சி காலத்தை தன்னுடைய வேடத்தினால் மக்கள் கண் முன் நிறுத்தியது

    .
    வாள்வீச்சு , சிலம்பம் , குத்துசண்டை , கம்பு சண்டை வீரதீர சண்டைக்காட்சிகளில் நடித்தது
    மக்கள் மனதை கொள்ளை அடித்த இனிய பாடல்களை வழங்கியது
    வெண்கலக்குரலில் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது
    எல்லா படங்களிலும் நீதி போதனைகளை வழங்கியது
    யார் மனதையும் புண்படுத்தாத வசனங்களை பேசியது
    சமூக படங்களில் திறமையான நடிப்பினால் வெற்றிக்கொடி நாட்டியது
    நேர்மறையான வசனங்களை படங்களில் காட்டியது
    திரையில் சொன்னதை ..... நிஜ வாழ்க்கையில் நடத்தி காட்டியது


    1947லிருந்து இன்று 2018 வரை

    திரைப்பட தயாரிப்பாளர்களை
    திரைப்பட விநியோகஸ்தர்களை
    திரை அரங்கு உரிமையாளர்களை

    வாழ வைத்தார் .
    வாழ வைக்கிறார்
    வாழ வைப்பார் .

    உலகில் எம்ஜிஆர் என்ற தனிப்பட்ட நடிகரால் மட்டுமே இந்த புகழை சாதிக்க முடிந்தது
    2018 இந்த வாரம் .
    1965ல் வெளிவந்த எங்கவீட்டு பிள்ளை - மதுரை மண்ணில் நேற்று சென்ட்ரல் அரங்கில் அரங்கு நிறைந்தது .
    1965ல் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் சென்னை மஹாலக்ஷ்மி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெற்றி நடை .
    1968ல் வெளிவந்த குடியிருந்த கோயில் சென்னை ஸ்ரீநிவாஸா மற்றும் கோவை டிலைட் வெற்றி நடை
    சமூக ஊடகங்களில் எம்ஜிஆரின் பட்டி மன்றங்கள் - நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடிய வண்ணம் உள்ளது .
    பத்திரிகைகளில் எம்ஜிஆர் பற்றிய பல் வேறு தொகுப்புகள் வந்த வண்ணம் உள்ளது .

    எம்ஜிஆர் ரசிகர்கள் அன்றும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார்கள்
    இன்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆரின் சாதனைகளை முன் நிறுத்தி மகிழ்கிறார்கள் .
    நாளையும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் .. கொண்டாடுவோம் .. மகிழ்வோம் .

  11. #3460
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு மஸ்தான் சாஹிப் , எதையும் ஒழிக்க, மறைக்க தேவையில்லை... மயிலிரகால் வருடி பதிவு போடுகிறோம், அவ்வளவே, திரு வினோத் சாரின் மக்கள் திலகம் பற்றிய எழுத்து நடை சூப்பர்...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •