Page 81 of 400 FirstFirst ... 3171798081828391131181 ... LastLast
Results 801 to 810 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #801
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #802
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #803
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Ganesan Samiayya

    அட பாவிகளா இந்த கம்பீரமான தங்கப்பதுமை யான அழகுச் சிலையை எடுக்க உங்களுக்கு எப்படியடா மனசு வந்தது, நீங்க ஒரு தாய் வயித்தில தான் பொறந்திங்களா, ? இல்லை பேய் வயித்தில பொறந்திங்களா ? உங்களை நாய் ன்னு சொல்ல மாட்டேன், ஏன் தெரியுமா நாய் ஒன்னு தான் நன்றி உள்ளது, இது திரிசூலம் படத்தில் எங்கள் தலைவன் சிவாஜி சொன்னது இப்ப ஞாபகத்திற்கு வருகிறது ,எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ? 1989 தேர்தலில் நம் தலைவன் நடிகர்திலகம், அதிமுக வை காப்பாற்ற, தன் உயிர் நண்பன் கலைஞரை எதிர்த்து அதிமுக வுடன் கூட்டணி வைத்ததால் நாம் தோற்றோம்,
    நாய்க்கு கூட நன்றி இருக்கும் , ,
    இவர்களுக்கு நன்றி இருக்காது, இவர்களுக்கு தெரிந்த தெல்லாம் கொள்ளயடிப்பதும் ஊழல் செய்வதும் தான்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #804
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #805
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #806
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Ganesan Samiayya

    தலைவர் நடிகர்திலகம் சிலைக்குப்பின்னால் ஏறத்தாழ சிலை உயரத்திற்கு சிம்சன் கடிகாரமும்,
    அதற்குப் பின்னால் சிலை உயரத்தில் அசோக ஸ்தூபியும் உள்ளது,
    சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறு என்றால், மற்ற இரண்டும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லையா ?




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #807
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram

    நடிகர்திலகத்தின் நடிப்பை மட்டுமே போற்றிக் கொண்டாடி வந்ததன் விளைவு தான் சிலை அகற்றும் அளவிற்கு எதிர் தரப்பினர் துணிந்ததன் காரணம்,
    நடிகர் திலகத்தின் பொதுத் தொண்டினை யும் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்தந்த கால கட்டத்தில் அவர் முன்னெடுத்து சென்ற ஊழல் எதிர்ப்பு, மது எதிர்ப்பு, அராஜக ஆட்சியை எதிர்த்து நின்று போராடியது மக்கள் வெள்ளத்தில் ஆட்சி அவலங்களை எதிர்த்து முழங்கியது என்று எதையுமே நாம் நினைவு கூற மறந்து விட்டோம்
    கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை திராவிட ...கட்சிகள் சீரழித்து விட்டன எனக் கூறும் பத்திரிகைகளும் தற்போதைய அரசியல் பேசுகின்ற மேதாவிகள் கூட அன்றைய நடிகர்திலகத்தின் பங்களிப்பு பற்றி வாய் திறப்பது கிடையாது,
    இத்தனைக்கும் ஊடக விவாதங்களின் போது கலந்து கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் நல்லவர்கள் கூட வாய் திறப்பது இல்லை,
    இனியாயினும் நாம் முன்னெடுத்து சென்று நடிகர்திலகம் வெறும் நடிகர் மட்டுமே கிடையாது, இந்த தமிழகத்தை தலை நிமிர செய்ய தனது வாழ்வில் பல தியாகங்களை புரிந்தவர் என்ற உண்மையான வரலாற்று விவரங்களை வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ள சபதம் எடுப்போம்,





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #808
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    Sivaraman Rangadoss

    மாலை மலர் 3.8.2017
    சென்னை:
    தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:-
    ... தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே காமராஜரும், சிவாஜி கணேசனும்தான் என்பது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனுக்கும் தெரியும். அந்த அப்பழுக்கற்ற நடிகர் திலகத்தின் சிலையை ஒதுக்குப்புறமாக மணிமண்டபத்துக்குள் வைப்பது கவுரவமாக இருக்காது.
    சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அவரது படத்தை வைத்து கொண்டாடிய இப்போதைய தலைமைக்கு சிவாஜி கணேசனின் சிலை கடற்கரையில் உள்ள தலைவர்களின் சிலையின் வரிசையில் வைக்க நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
    எம்.ஜி.ஆருக்கு காட்டிய ஆர்வத்தை காங்கிரஸ் தலைமை, காங்கிரசை வளர்த்த தலைவனுக்கு ஆர்வம் காட்டாதது நிச்சயமாக ஒவ்வொரு தொண்டனையும் வருத்தத்தில் ஆழ்த்தும்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:-
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை நடு நிசியில் அகற்றி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. போக்குவரத்திற்கு இடையூறு என்று காரணம் காட்டி தொடரப்பட்ட வழக்கில் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டு இருப்பது வியப்பாக உள்ளது.
    போக்குவரத்துக்கு இடையூறாக எத்தனையோ ஆக்கிரமிப்புகள் சென்னையில் உள்ளன. குறிப்பாக சாலையின் நடுவே பல தலைவர்கள் சிலைகள் உள்ளன. அதே போல சிவாஜி கணேசன் சிலையும் சாலையின் நடுவே அமைந்துள்ளது.
    அதன் அருகில் விடுதலை பொன் விழாவிற்கான நினைவு தூண் ஒன்று சாலையில் அமைத்து இருக்கிறார்கள். அதனால் போக்குவரத்து இடையூறு இல்லை. ஆனால் சிவாஜி சிலையால்தான் இடையூறு என்பது ஆச்சரியமாக உள்ளது.
    அவருடைய சிலையை அப்புறப்படுத்தியவர்கள் அதே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை தேர்வு செய்து நிறுவி இருக்கலாம். ஆனால் அவரது மணிமண்டபத்திற்கு கொண்டுபோய் கிடத்தி இருக்கிறார்கள் என்பது அவரை அவமதிக்கும் செயலாகும்.
    அவர் நடிகர்தான் என்றாலும் நாட்டுப்பற்று உள்ளவராக விளங்கினார். திரைப் படங்கள் மூலம் நாட்டுப் பற்று உணர்வை பொது மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார்.
    அவருடைய சிலையை அவர் பெரிதும் மதித்த காந்தி, காமராஜர் சிலைகளுக்கு இடையில் மெரீனா கடற்கரையிலேயே வைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:-
    நள்ளிரவில் நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய- மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுத்தாலும் இரவில்தான் எடுப்பார்களா? பணமதிப்பு நீக்க நடவடிக்கை, வரிவிதிப்பு போன்றவை நள்ளிரவில் அமல்படுத்தப்பட்டது.
    காந்தி இரவில் சுதந்திரம் வாங்கி கொடுத்தார் என்பதற்காக இதுபோன்று செயல்படுகிறார்களா?
    நீதிமன்ற உத்தரவுப்படி சிவாஜி சிலை அகற்றப்படும் பட்சத்தில் அதனை மெரினா கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். எத்தனையோ தலைவர்கள் சிலைகள் அங்கு இருக்கும் போது, சிவாஜி சிலையை மட்டும் வைக்க மறுப்பது ஏன்?
    சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றப்பட்டது போல ஆட்சியும் நள்ளிரவில் அகற்றப்படும்.
    சிவாஜி சிலையை மெரினாவில் வைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் அறிவிப்போம்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    சென்னை கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றி இருக்கிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றி இருக்கிறோம். மணி மண்டபத்தில் அதை வைப்போம் என்று கூறுகிறார்கள். சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என்று வழக்கு போட்டதும், அதற்கு ஆதரவாக அரசு செயல்பட்டதும் தவறு.
    நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் சிவாஜி கணேசன். அவரைப் பார்த்து தான் பலர் திரை உலகத்துக்கு வந்தார்கள். நடிப்பால் உலகப் புகழ் பெற்றவர். அவருக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கூட எந்த பெருமையும் செய்யவில்லை. செவாலியே என்ற பட்டத்தை கூட வெளிநாட்டுகாரன்தான் கொடுத்தான்.
    சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியது நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அவமானப்படுத்தும் செயல். இதற்கு தமிழர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும். பெருமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு புகழ்பெற்ற தமிழனை இதுபோன்று அவமானப்படுத்தக் கூடாது. தமிழக அரசு, மத்திய அரசு சொல்லும் எதற்கும் தலையாட்டும் அரசாக இருக்கிறது. ஒரு நல்ல கலைஞனை பெருமைப்படுத்த தவறி விட்டது.
    இவ்வாறு மன்சூர் அலி கான் கூறினார்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #809
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sekar Parasuram

    ·


    எங்கள் சிங்கத் தமிழன் சிம்மக் குரலோனின் திரு உருவச்சிலை நடு ரோட்டில் இருப்பதாக வழக்கு தொடுத்த கயவர் கூட்டமே அதற்கு துனை போன தமிழக அரசே அதே இடத்தில் சிமஷன் தூனும், அசோக சக்கர ஸ்தூபியும் நடு ரோட்டில் தானே இருக்கிறது, என்ன செய்ய போகிறார்கள்?
    ஏன் எங்கள் நடிகர் திலகம் தமிழன் என்பதனாலா?
    மலையாள, கன்னட தலைவர்களை கொண்டாடிய உங்களுக்கு தமிழத் தேனமுதை ஊட்டி விட்ட " என் தமிழ் என் மக்கள்" எனக் கண்ட எங்கள் தெய்வமகனின் அருமை உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #810
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Abdul Razack



    நம் ஐயனின் சிலை எடுத்த விடயத்தில் அண்ணன்களை சிலர் அறியாமல் குற்றம் சுமத்துகிறார்கள் அவர்களுக்குதான் இந்த பதிவு அன்னை இல்லமும் அவன் தான் மனிதன் படத்தில் வரும் ஆனந்த பவனும் ஒன்று தான் அது அன்னை இல்லத்தை பற்றி உள்ளப்பூர்வமாக நேசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் எந்த காலத்திலும் அவர்கள் ஆட்சியாளர்களிடம் சென்று கையேந்தி நிற்க மாட்டார்கள் அரசாங்கம் எதுவும் செய்தால் நேரில் சென்று ஆள்பவவர்களை பார்த்து நன்றி சொல்லிவிட்டு வருவார்கள் மேலும் ஐயா சிவாஜி அவர்கள் வாழ்ந்த காலத்திலும் எவர...ிடமும் கையேந்தி போகவில்லை தன் கையில் இருந்து நிதி என்ற பெயரில் அள்ளி அள்ளி தான் கொடுத்து இருக்கிறார் அன்னை இல்லத்தின் உள் விபரங்களை பதிவிடக்கூடாது இருந்தாலும் நம் அண்ணன்களை சிலர் அறியாமல் குறைசொல்கிறார்கள் அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் நீங்கள் சொல்வது போல் அவர் தனக்கு என்று தன் பேத்தி வாழ்க்கை நல்ல இருக்கனும் என்று ஜெயலலிதாவை பார்த்து இருந்தால் இன்றும் அவர் உயிரோடு தான் இருந்து இருப்பார் செய்தாரா தன் உயிரைத்தானே விட்டார் அதற்கு காரணமாணவர்கள் இன்று என்ன ஆனார்கள் ஐயா உயிர் பிரிந்ததது அவன் தான் மனிதனை நினைவு படுத்த வில்லையா உங்களுக்கு அப்பேற்பட்ட பெருமைகொண்டவரின் வாரிசுகளா இன்று ஆளும் கழிசடைகளிடம் போய் கையேந்தி நிற்பார்கள் அப்படி போய் இருந்தால்தான் நமக்கு அவமானம் சிலை எடுத்துபிறகு நாம் பல இடங்களில் கண்டனம் தெரிவிக்கிறோம் அது அப்பா ரசிகர்களின் உள்ள குமுறல்கள் என்று தான் சொல்கிறார்கள் அதை விட்டு எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு உங்கள் வேலையை பாருங்கள் என்றா சொல்கிறார்கள் இல்லையே எனவே இனி யாரும் அண்ணன்கள் பற்றி தவறாக கருத்து கூறவோ பதிவிடவோ வேண்டாம் நாம் அடுத்து செய்ய வேண்டியது பல பிரிவுகளாக பிரிந்து இருக்கிறோம் அனைவரும் ஒரு தலைமையின் கிழ் வர வேண்டும் அப்போதுதான் ஆளுகிறவர்களும் நம்மை அழைத்து பேசுவார்கள் அதற்கு என்ன செய்யலாம் என்று அண்ணன்களிடம் பேசுவோம் நன்றி....



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •