Page 80 of 400 FirstFirst ... 3070787980818290130180 ... LastLast
Results 791 to 800 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #791
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Vino Mohan shared a link.

    ·




    வீரபாண்டிய கட்டபொம்மனில் கடைசி காட்சி ...தூக்கில் இடும் முன்னர் விலகி போங்கள் ! துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சுமெத்தை என அந்த பாஞ்சை சிங்கம் சீறும் .................
    அந்த சிம்மக்குரலோன் சிலையை சாக்குத்துணியால் மூடி , சங்கிலியால் பிணைத்து , பீடத்தோடு அகற்றி கிரேனில் ஊசல் ஆடவிட்டு ........................
    சோபன்பாபுவின் சிலை அசடு தட்டிய முகத்தோடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நிற்க ------------
    அதே கட்டபொம்மனில் கர்ஜிப்பார் நடிகர் திலகம் , வெட்கம் ! என ............
    ஆம் . வெட்கமாய்த்தான் இருக்கிறது இந்த மாநிலத்தில் வாழ்வதற்கு.


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #792
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like



    Abdul Razack





    ஒருமனித சிலையை எப்போது அகற்றுவார்கள் ஒரு நாட்டில் சர்வாதிகாரமாக கொடுங்கோலன் ஆட்சி புரிவான் அங்கு புரட்சி ஏற்பட்டு ஜனநாயகம் மலர்ந்த பின் அந்த கொடுங்கோலனின் சிலையை அகற்றுவார்கள் அதே போல் இங்கு உங்கள் ஆட்சியை அகற்றும் புரட்சி ஏற்பட்டு பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் சிலையை அகற்றி இருக்க வேண்டும் ஆனால் சாரயத்துக்கும் பணத்துக்கும் தன் மானத்தையே விற்பவன் எதை புரட்சி என்று அழைக்கிறான் திருட்டு கொள்ளை துரோகம் ஆணவம் இதை செய்பவர்களைத்தானே புரட்சி என்று சொல்லி அதன் அர்த்ததையே கேவலபடுத்துகிறான்,
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #793
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #794
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #795
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Natarajen Pachaiappan




    அய்யன் சிவாஜியின் தன்மை
    ++++++++++++++++++++++++++
    எத்தனை தோற்றங்கள்,
    எத்தனை மாற்றங்கள்...
    இமை பொழுதில் !?
    இனி யார்தான் செய்வார்
    இப்படி? உமக்குத்தான்
    இவையெல்லாம்
    அத்துப்படி, மற்றோருக்கு
    அவையெல்லாம் படிப்புடி!
    படிப்படியாய் முன்னேறி
    பாடம் படித்தாய்,
    படங்கள் கொடுத்தாய்
    பாடமாய் ஆனவரே...
    ஆசிரியன் இல்லாதவன் நீ!
    ஆச்சரியந்தான், நாம்
    அவரை படித்தவர்தானே?
    அவரோ படைப்பாளியான
    ஆண்டவன். அவர் கட்டளை
    'ஆண்டவன் கட்டளை'
    அய்யா நீ! ஆண்டவன்தான்!
    ஆண்டது நம்மையல்லவா?
    அது நன்மையல்லவா?
    அவை உண்மைல்லவா?
    அது உம், தன்மையல்லவா?
    அன்புடன்...
    சிவாஜியின் பக்தன்
    ப.நடராசன்/:

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #796
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிவாஜியின் புதிய சிலையை மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்: ராமதாஸ்


    Published : 03 Aug 2017 16:53 IST
    Updated : 03 Aug 2017 16:55 IST

    சிவாஜியின் புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை கடற்கரை சாலையில் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது.





    தொடர்புடையவை

    வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார் உள்ளிட்ட வரலாற்றுப் பாத்திரங்களுக்கு திரையில் உயிரூட்டிய நடிகர் திலகத்திற்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு அவரது நினைவுநாளான ஜூலை 21-ஆம் தேதி கடற்கரை சாலையில் காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது.
    அப்போதே இச்சிலையால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சிவாஜி சிலையை அகற்ற முடியாது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது. அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 2013-ஆம் ஆண்டு இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிவாஜி சிலையால் சாலை விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிவாஜி சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
    ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தமிழக அரசு சிவாஜி சிலையால்தான் அப்பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் சிலையை அகற்றலாம் என்றும் கூறியது. இதன் அடிப்படையில் தான் சிவாஜி சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. சிலை அமைக்கப்பட்ட 7 ஆண்டுகளில் அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு திட்டமிட்டு செய்த சதி என்பதில் ஐயமில்லை.
    இப்போதும் கூட சிலையை அகற்ற வேண்டும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த சிலையை சிவாஜி மணிமண்டபத்தில் வைப்பதற்கு பதிலாக கடற்கரைச் சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் காந்தி சிலை, காமராசர் சிலைக்கு நடுவில் அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
    அவ்வழக்கு கடந்த 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்த தமிழக அரசு, அதன் முடிவை தெரிவிக்காமலேயே சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியிருப்பது இரண்டாவது சதி என பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன்.
    கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை இருந்ததால் விபத்துகளோ, போக்குவரத்து பாதிப்புகளோ ஏற்பட்டதில்லை. சென்னை அண்ணா சாலையின் நடுவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் சாலைகளின் நடுவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவற்றால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறிவரும் தமிழக அரசு, இந்த உண்மையை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து சிவாஜி சிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க வகை செய்திருக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.
    இவ்வாறாக சிவாஜி சிலையை அகற்றுவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டு விட்ட நிலையில், அதேபோன்ற புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும். சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் அவரது புதிய சிலையை அரசு திறக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #797
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Gopalakrishnan Sundararaman





    திருவிளையாடல்- 1965.(31/07/1965)


    சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.
    1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.
    திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)
    முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).
    இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)
    இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.
    உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.
    "இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
    ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
    இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
    ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
    சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
    சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
    அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
    ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
    ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
    ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
    ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
    சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).
    இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )
    நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.
    கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
    இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.
    இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.
    முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.
    அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.
    அடுத்த episode love teasing பிரச்சினை.
    அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.
    இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.
    இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )
    முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.
    என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.
    சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.
    சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)
    குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).
    மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.
    அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.
    கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.
    நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?
    ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.
    இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #798
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    padmanaban a

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #799
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #800
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •