Page 71 of 400 FirstFirst ... 2161697071727381121171 ... LastLast
Results 701 to 710 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #701
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like








    Loganadan Ps



    உலக அரங்கில் தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த, நம் காலத்தில், நம்மோடு வாழ்ந்த, ஒப்பற்ற கலைஞன் அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு தின...ம் இன்று.
    உலகறிந்த அவரின் நடிப்புத் திறமையைப் பற்றி நான் சொல்ல முனைவது முழுநிலவை வர்ணிக்க முனைவதற்கு ஒப்பானது. அவர் குடத்திலிட்ட விளக்காக அல்ல, குன்றிலிட்ட தீபமாகத் திகழ்ந்தார் என்றால், அது அவரின் ஒப்புவமையற்ற நடிப்புத் திறமையால் மட்டுமே.
    ஆரம்ப காலத்தில் அவருடைய நடிப்பு ஓரளவு மிகையாக இருந்ததை, 'மேடை நாடக அடிப்படையின் விளைவு' என அவரே சொல்லியிருக்கின்றார். ஆனால் காலத்துக்கு ஏற்றவாறு தனது நடிப்பை மிக,மிக இயற்கையாக மாற்றி, அனைவரையும் தனது நடிப்பால் அடிமைப்படுத்திய அவரது மாபெரும் திறமை விண்ணுயர்ந்தது.
    அவர் தோன்றாத பாத்திரப் படைப்புக்கள் இல்லை, அவரின் நடிப்பால் அந்தப் பாத்திரங்கள் மெருகு பெறாமல் போனதுமில்லை. மிகச் சிறப்பாக, நாம் படித்து மட்டுமே அறிந்த, பார்த்திராத பல வரலாற்று, இதிகாச, புராண நாயகர்கள் அவர் உருவத்திலே நம் மனதிலே வாழ்ந்து கொண்டிருப்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.
    அப்பாவாக, அண்ணனாக, நண்பனாக, அதிகாரியாக, சேவகனாக - இப்படி அவர் தோன்றி அந்தந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டிய போதெல்லாம்..........,
    சிரிக்கவும், சிந்திக்கவும், அறியவும், ரசிக்கவும், ஏன் பல நேரங்களில் தேம்பித் தேம்பி அழவும் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அவருக்குப் பெருமை.
    (2000ம் ஆண்டு என நினைவு) சென்னை விமான நிலையத்தில், கொழும்பு வருவதற்காகக் காத்திருக்கிறேன். சற்று சமீபமாக சிறிய சலசலப்பு. திரும்பிப் பார்த்தால்...,
    'கதர் சட்டை, கதர் வேட்டி, தோளில் கதர் துண்டு சகிதம், ஒரு காவல் அதிகாரியோடு வந்து கொண்டிருக்கிறார். 72 வயதின் முதிர்ச்சி தெரிந்தாலும், என்னை மாற்றிய அதே சிம்ம நடை. மிக அருகாமையில் வந்துவிட்ட அவரைப் பார்த்ததும், சடாரென்று எழுந்து வணக்கம் செலுத்துகிறேன். என்னைப் பார்த்து, தலை சாய்த்து, புன்முறுவலோடு கைகுவித்து வணக்கம் செய்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார். போய் மறையும் வரை அவரைப் பார்த்துக் கொண்டே அசந்து போய் நின்றதை என்றும் மறக்கவே முடியாது.
    தனிப்பட்ட முறையில், எனது பதினாறுகளிலேயே எனக்கு அவர் கற்றுத் தந்தது கம்பீரம் மிக்க நடை. அதில் நான் வெற்றி பெற்றி்ருக்கிறேன் என்பது அவருக்கு நான் தரும் ஆத்மார்த்தமான காணிக்கை.
    அதைவிடவும் அவரின் பலவிதமான (ஸ்டைல்) முத்திரைகள் என்னைப் பாதித்தும், என்னோடு ஒட்டிக் கொண்டும் இருக்கின்றன. இவை அவரின் நடிப்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியான பாதிப்புக்கள்.
    இன்று அவர் நம்மிடையே இல்லை. ஆனால் உலகம் உள்ளவரை, நடிப்புக் கலை என்றால் அவரது பெயரே முதலில் நினைவுக்கு வரும் என்பதில் எள்ளளவேனும் ஐயமுமில்லை.
    நடிகர் திலகமெனும் வரலாற்று நாயகனுக்கு ஆத்மார்த்த அஞ்சலியும், கோடி வணக்கமும்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #702
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Ramiah Narayanan

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவுதினம் !
    அவர் ஏற்காத பாத்திரம் எது. அத்தனை கதாபாத்திரங்களிலும் வாழ்ந்து காட்டினார். சாதாரண கூலி தொழிலாளி முதல் நீதிபதிகள் வரை அவர் நடிப்பை வியந்து பாராட்டத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரின் பரம விரோதியாக இருப்பவர் கூட ஏதாவது ஒரு படம் தங்களை பாதித்ததையும், உண்மையில் சிறந்த நடிகர் தான் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். வெள்ளாந்தி மனிதர், அவர் ரசிகர்கள் நடிப்பை ரசித்தாலும் புகழ்ந்தாலும், அரசியலில் வேறு பக்கம் நின்றனர். கண்மூடித்தனமான ரசிகர்கள் இவருக்கு கிடையாது.
    விழி நடிக்கும், புருவம் நடிக்கும், கன்னம் துடிப்போடு நடிக்கும், அவர் முதுகுகூட நடிக்கும் என்பார்கள். வித விதமான நடைகளை காட்டியவர் உலகில் இவர் ஒருவர் தான் இருக்க முடியும். நல்லதொரு குடும்பம், நல் நண்பர்கள், உயிரைக்கொடுக்கும் ரசிகர்கள் என எல்லா செல்வங்களும் பெற்றவர் இந்த நடிப்புலக சக்ரவர்த்தி.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #703
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vijaya Srinivasan

    · Calcutta


    படித்ததில் பிடித்தது.. நடிகர்திலகம் அவர்களை பற்றி ..
    சிவாஜி!!!
    சிவாஜி பற்றிய விகடன் கட்டுரை........!!!
    அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்த விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
    சிவாஜி நடித்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம் கெய்ரோவில் நடந்த ஆசிய, ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்டது. அந்த படவிழாவில் பங்கேற்க சிவாஜி, பத்மினி எல்லோரும் போயிருந்தார்கள்.
    அந்தப் படவிழாவில் சிவாஜி ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்கள் என எடுத்துக்கொள்ளும்பொழுது உலக மக்கள் தொகையில் முக்கால் பகுதி மக்கள் தொகை இந்த இரு கண்டங்களிலேயே அடங்கும்!
    இந்தியாவும், சீனாவும் மட்டுமே பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள், ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங்... போன்ற ஏராளமான நாடுகளுடன் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் உள்ள ஏராளமான நாடுகளும் இந்தப் படவிழாவில் பங்கு பெற்றவையாகும்.
    இவ்வளவு பெரிய படவிழாவில் சிவாஜியை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தப் பின்னும் இந்திய அரசு வழங்கும் சிறந்த நடிகர் விருதை சிவாஜிக்கு தராமலேயே இருந்துவிட்டார்கள். காரணம் இந்திய அரசு சார்பான இந்த விருதில் அவ்வப்போது செல்வாக்கான மனிதர்களின் குறுக்கீடு இருந்து வந்ததேயாகும்.
    ஆசிய, ஆப்பிரிக்க அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற ஒருவருக்கு இதற்கு மேலும் நாம் விருது கொடுக்காமல் தாமதித்தால் அதனால் இந்திய விருதின் மரியாதை குறையும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவேயில்லை.
    ஆனால், சிவாஜியைப் பொருத்தவரையில் அவர் நடிப்புத் துறையில் நிறைகுடமாக இருந்ததால் விருதுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அத்துடன் தனக்கு விருது தரப்படவில்லை என்பதை மனதில் குறையாக வைத்து பேசுவதுமில்லை. யாராவது வலிய அவரிடம் இது சம்பந்தமாக பேசி ‘‘உங்களுக்கு ஏன் இந்திய அரசின் விருது தராமலே இருந்துவிட்டார்கள்?’’ என கேட்கும்பொழுது அதற்கு சிவாஜி மிகப்பெருந்தன்மையாக பதில் கூறுயிருக்கிறார்.
    ‘‘விருது தருபவர்கள் அந்த விருதுக்கென்று எதிர்ப்பார்க்கும் தகுதிகள் நம்மிடம் இல்லாது இருக்கலாம்’’ என்றே சிவாஜி பதில் அளித்திருக்கிறார்.
    ஆசிய, ஆப்பிரிக்க சிறந்த நடிகர் விருது சிவாஜிக்கு கிடைத்தபின் அமெரிக்க அரசு சிவாஜியை தங்கள் நாட்டிற்கு அழைத்து கவுரவிக்க விரும்பியது. எனவே ‘சிவாஜி தங்கள் நாட்டிற்கு வருகை தர வேண்டும்’ என அமெரிக்க அரசு அழைப்பு விடுத்தது. இதுபோன்ற ஒரு அழைப்பு அதுவரை இந்திய நடிகர்கள் யாருக்கும் கிடைத்ததில்லை.
    சிவாஜியும் அந்த அழைப்பை கவுரவித்து அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் அவருக்கு என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும். அங்கே முக்கியமானவர்கள் யார் யாரைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதையெல்லாம் முன்கூட்டி அவர் தெரிந்து கொண்டதால் அதற்கேற்ப தயாராக அமெரிக்கா புறப்பட்டார்.
    அமெரிக்காவில் சந்திக்கும் முக்கிய மனிதர்களுக்கு நமது நாட்டு சார்பாக கொடுக்க வேண்டிய பரிசுப் பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதுடன் அங்கே குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் திரையிட்டுக் காட்டுவதற்காக தான் நடித்த பல படங்களில் இருந்து முக்கியக் காட்சிகளின் தொகுப்பையும் கையில் கொண்டு சென்றார்.
    ஆனால் இதற்குக் கூட யாரும் குறுக்கீடாக இருந்தார்களோ என்னவோ? சிவாஜி அமெரிக்கா போய் இறங்கியதும் அங்கே திரையிட கையில் தன்னுடன் எடுத்துவந்த அந்தப் படப்பெட்டி மட்டும் காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் வீடியோ கேசட்டில் பதிவு செய்து எடுத்துச் செல்லும் வசதி வரவில்லை. அல்லது மூன்று நான்கு கேசட்டுகளை தன் கைப்பெட்டியிலேயே எடுத்துச் சென்றிருப்பார்.
    சிவாஜி திட்டமிட்டபடி அமெரிக்காவில் முக்கிய பிரமுகர்களுக்கு தான் நடித்தப் படத்திலுள்ள அந்தக் குறிப்பிட்ட காட்சிகளை திரையிட்டுக் காட்டியிருந்திருப்பாரேயானால் அவருக்கு மேலும் வரவேற்பு கிடைத்திருந்திருக்கும். அமெரிக்கா போன்ற மேலை நாட்டினர் ஒருவருடைய திறமையை கண்டறியும்பொழுது, அதை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என எண்ணமாட்டார்கள். திறமையை மனதார பாராட்டுவதை தங்களுக்கு பெருமை என எண்ணுவார்கள்.
    ஆனாலும் சிவாஜியின் நடிப்புத் திறமையை அங்கே உள்ளவர்கள் பார்க்கிற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர்கள் கேள்விப்பட்ட செய்திகளை வைத்து சிவாஜியின் மிகப்பெரிய ஆற்றலை நன்றாகவே புரிந்திருந்தார்கள். அதனால் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை தந்தார்கள். சிவாஜி அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் அங்கே புகழ்பெற்ற நடிகர்களாக விளங்கிய மார்லன் பிராண்டோ, யூல் பிரின்னர், சார்லஸ் ஹாஸ்டன்... போன்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜியை வரவேற்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை கவுரவித்தார்கள்.
    அப்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள் சிவாஜியோடு படம் எடுக்க விரும்பி சிவாஜியை நடுவே அமரச்செய்து மற்றவர்கள் அவர் அருகே நின்று கொண்டும் சிவாஜி அமர்ந்திருந்த நாற்காலியில் கைப்பிடிகளில் அமர்ந்து கொண்டும் படம் எடுத்துக் கொண்டார்கள். சிவாஜி சில பெரிய நடிகர்களின் தனிப்பட்ட அழைப்பின் பெயரில் அவர்கள் இல்லங்களுக்கும் சென்றார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சார்லஸ் ஹாஸ்டன். இவர் உலக அளவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படத்திலும் ‘பென்ஹர்’ படத்திலும் நடித்து ஆஸ்கர் விருது பெற்றவர்.
    இவருடைய இல்லத்திற்கு சிவாஜி சென்றபொழுது சார்லஸ் ஹாஸ்டன் தம்பதிகள் அவரை வரவேற்றார்கள். சிவாஜி அப்போது சார்லஸ் ஹாஸ்டனின் துணைவியாருக்கு தமிழ்நாட்டுப் பட்டுப் புடவையை பரிசாகத் தந்தார். திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டதில் பெரிய மகிழ்ச்சி! எனவே தங்கள் இல்லத்திற்கு வந்த விருந்திருனரான சிவாஜியை கவுரவிக்க அந்தப் பட்டுப் புடவையை அப்போதே உடுத்திக்கொள்ள விரும்பினார்.
    ஆனால் அமெரிக்கப் பெண்மணியான அவருக்கு புடவைக் கட்டிய பழக்கமேயில்லை. எனவே இதை எப்படி உடுத்திக் கொள்வது என அவர் கேட்டபொழுது சிவாஜி புடவையின் முனையை இப்படி மடித்து இடுப்பில் சொருகி புடவையை சுற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நடித்துக் காட்டினார். ஆனால் திருமதி சார்லஸ் ஹாஸ்டனுக்கு அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே சிவாஜியிடம், ‘‘இதை நான் உடுத்திக் கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள்’’ எனக் கேட்டுக் கொண்டார்.
    சிவாஜிக்கு இதைக் கேட்டு சற்று திகைப்பு! ஒரு பெண்மணி புடவையை உடுத்திக் கொள்ள நாம் எப்படி உதவ முடியும்? என்று தாமதித்தார். ஆனால் சார்லஸ் ஹாஸ்ட்அனோ ‘‘என் மனைவிக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என வற்புறுத்தி கேட்கலானார். அதன்பிறகு சிவாஜி திருமதி சார்லஸ் ஹாஸ்டன் புடவை அணிந்து கொள்ள உதவினார்.. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிவாஜி என்ற மாபெரும் கலைஞரிடம் அவர்களுக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
    அமெரிக்காவில் கலையுலகம் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் மற்றும் உள்ள முக்கிய மனிதர்களும் சிவாஜியை தங்கள் விருந்தினராக அழைத்துப் பெருமைப்பட்டார்கள். அவர்களில் ஒரு சீமாட்டி சிவாஜிக்கு மிக உயர்ந்த பொருளைத் தரப்போவதாக கூறிக்கொண்டு ஒரு விலையுயர்ந்த சுருட்டை புகைப்பதற்கு தந்தார்.
    சிவாஜி அந்த சுருட்டை கையிலே வாங்கிப் பார்த்துவிட்டு அந்தப் பெண்மணியிடம் கூறினார், ‘‘அம்மா இது உங்களுக்கு அபூர்வப் பொருளாக இருக்கலாம். ஆனால் இந்தச் சுருட்டு நான் இருக்கிற நாட்டிலே உற்பத்தியாகிற சுருட்டு, அதுவும் என் சொந்த ஊரான திருச்சி அருகிலுள்ள உறையூரில் தயாராகிற சுருட்டு’’ என விளக்கினார். அதைக்கேட்டு அந்தப் பெண்மணி பெரிதாக நகைத்தார்.
    சிவாஜிக்கு அங்கே இன்னொரு மரியாதையும் கிடைத்தது. அமெரிக்காவிலுள்ள ஒரு நகரத்தின் மேயர் சிவாஜியை வரவேற்று ஒருநாள் மேயராக சிவாஜியை கவுரவப் பதவி ஏற்க வைத்தார். அதற்கு அடையாளமாக தங்கச் சாவி ஒன்றை அன்று முழுவதும் சிவாஜி கையிலே வைத்திருக்க வேண்டும் என அவரிடம் ஒப்படைத்தார்.
    அமெரிக்காவில் சிவாஜிக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது என்ற செய்தி தமிழகத்திற்கு எட்டிய நிலையில் தமிழக கலைஞர்கள் எல்லாம் சிவாஜியை சிறப்பாக வரவேற்க வேண்டும் என புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலே முடிவு செய்தார்கள். அவ்விதம் சிவாஜிக்கு அவர் சென்னையில் வந்து இறங்கியபொழுது கலைஞர்கள் எம்.ஜி.ஆர். தலைமையில் சிறந்த வரவேற்பை அளித்து கவுரவித்தார்கள்.
    சிவாஜி அமெரிக்காவில் இருந்த சமயம் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள் சிவாஜிக்கு வாழ்த்துக் கூறி ஒரு கடிதத்துக்கு சிவாஜி உடனே பதில் எழுதி தனது நன்றியை அவ்வை டி.கே.சண்முகத்திற்கு தெரிவித்தார்.
    அவ்வை டி.கே.சண்முகம் இந்தப் பதில் கடிதத்தை எதிர்ப்பார்க்காததால் மிக மகிழ்ச்சியோடு அந்தக் கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டார்.
    அமெரிக்காவை அடுத்து சிவாஜிக்கு மிகப்பெரிய மரியாதையை தந்த நாடு பிரான்ஸ் என்று கூறலாம். பிரான்ஸ் நாடு சிவாஜிக்கு வழங்கிய ‘செவாலியே விருது’ மதிப்பில் மிக உயர்ந்தது. அதாவது ஆஸ்கர் விருதுக்கு இணையான மதிப்பு கொண்ட விருது. இந்ஹ விருதை இதுவரை உலகில் நான்கு நடிகர்களுக்கே பிரான்ஸ் வழங்கியுள்ளது.
    கிளிண்ட் ஈஸ்ட் வுட், டஸ்ட் டின் ஹாப்மேன் ஆகிய ஹாலிவுட் நடிகர்களுடன் இன்னொருவருக்கும் பிரான்ஸ் அந்த விருதை வழங்கியிருந்தது. அதற்குமேல் இப்போது சிவாஜிக்கு அந்த விருதை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
    சிவாஜி நடித்த ‘நவராத்திரி’ படத்தைப் பார்த்துவிட்டு சிவாஜிக்கு ‘செவாலிய விருது’ அளிக்க பிரான்ஸ் நாடு முன் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்து உடனே பிரான்ஸ் தேர்வு கமிட்டி ‘செவாலிய விருது’ கொடுக்க முடிவு செய்துவிட வில்லை.
    ஒன்பது வேடங்களில் சிவாஜி வித்தியாசமான ஒன்பது மனிதர்கள்போல் நடித்திருக்கும் அந்த அற்புதமான நடிப்பில் முதலில் அவர்களுக்கு நிறைய சந்தேகம் இருந்தது. இது ஒரே நடிகராக இருக்க முடியுமா? என்ற சந்தேகத்தின் பெயரில் பலவித பரிசோதனைகள் செய்து கடைசியில்தான் அவர் ஒரே நடிகர்தான் என்பதை கண்டுபிடித்தார்கள்.
    புகழ்பெற்ற பல இயக்குனர்கள் அமர்ந்து அந்தப் படத்தைப் போட்டுப்பார்த்து செவாலியே விருது வழங்குவது பற்றி முடிவு செய்தார்கள். இந்த விருதை சிவாஜிக்கு அளிப்பதற்கு முன் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு அவர்கள் நடித்த படங்களையெல்லாம் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்தார்கள். அதன் இறுதியிலேதான் சிவாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    சிவாஜியைப் பற்றி இந்தியாவிலே உள்ள ஒரு கலை மேதையிடம் கருத்தறிய அவர்கள் பிரபல வங்க இயக்குனர் சத்யஜித்ரேயை அணிகினார்கள். அவரோ, ‘சிவாஜி செவாலியே விருதுக்கு மிக தகுதியான கலைஞர்’ எனக் கருத்து தெரிவித்தார்.
    சிவாஜியின் நடிப்பைப் பார்த்த ஒரு பிரான்ஸ் இயக்குனர் ‘‘இவருக்கு ஏன் இதுவரை ஆஸ்கர் விருது கொடுக்கப்பட வில்லை?ÔÔ என்ற சந்தேகத்தை கேட்டார்.
    அவருக்கு இன்னொரு இயக்குனர் பதில் கூறும்பொழுது, ‘‘ஆஸ்கர் விருது இதுவரை வழங்கப்படாததற்கு சேர்த்துதானே இந்த செவாலியே விருதை வாங்குகிறோம்’’ எனக் கூறினார்.
    இந்த ‘நவராத்திரி’ படத்தை அது வெளியான சமயத்தில் தியேட்டரில் பார்த்த தனது அனுபவத்தை நடிகரும், இயக்குனருமான விசு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார்.
    விசு வெளிநாட்டினர் சிலருடன் நவராத்திரி படம் பார்க்கச் சென்றிருந்தாராம். இடைவேளை வரை படத்தை அந்த வெளிநாட்டினர் மிக அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தார்களாம். இடைவேளையின்போது விசு அவர்களைப் பார்த்து, ‘‘இப்போது நான் உங்களுக்கு ஒரு செய்தியை கூறப்போகிறேன். இது மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம்’’ என்று கூறிவிட்டு அந்தச் செய்தியை கூறியிருக்கிறார்.
    ‘‘அதாவது இப்போது நாம் பார்த்தப் படத்தில் கிணற்றில் விழப்போகிற கதாநாயகியை காப்பாற்றுகிற பணக்காரரும், அடுத்து வருகிற குடிகார வாலிபனும், மூன்றாவதாக வருகிற டாக்டரும், நான்காவதாக வருகிற பயங்கரவாதியும் நான்கு வெவ்வேறு நடிகர்கள் அல்ல; ஒரே நடிகர்தான் அந்த நான்கு வேடங்களிலும் வருகிறார்’’ என விசு குறிப்பிட்டிருக்கிறார்.
    இதைக் கேட்டு அந்த வெளிநாட்டினர் பெரிதும் வியந்து போனார்களாம், ‘‘ஒரே மனிதரா இவ்வளவு வித்தியாசமாக தோன்றி நடிக்கிறார்? இதை முதலிலேயே சொல்லியிருந்தால் ஆரம்பத்திலேயே கூர்ந்து கவனித்திருப்போமே’’ என குறைபட்டுக் கொண்டார்களாம்.
    பின்னர் இடைவேளைக்குப் பின்னர் மேலும் ஐந்து வேடங்களில் வரும் சிவாஜியைக் கண்டு பெரிதும் வியந்து பாராட்டினார்கள் என விசு அந்தப் பேட்டியிலே குறிப்பிட்டார்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #704
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #705
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan,

    செவ்வியல் தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படும் சிவாஜி!

    ஒரு பேட்டியில் சிவாஜியின் இறப்பைப் பற்றி கமல்ஹாசன் நினைவு கூறுகையில் அவரின் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை என்கிற ஆதங்கத்தை `சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுத்தே கொன்னுட்டாங்க' என்று மேற்கோள் காண்பித்து வருந்தியிருப்பார் .

    சிவாஜியின் நினைவுநாளான இன்று, தமிழ் சினிமா அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையா எனச் சிந்தித்துப் பார்க்கிறபோது கமலின் கூற்று, சற்று மிகையாகவேத் தோன்றுகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடித்ததில் சிவாஜி முதன்மையானவர். வித்தியாசம் என்பதையும் தாண்டி அவர் நடிப்புக்கான தீனியை அன்றைய இயக்குநர்கள் சமைத்துக் கொடுக்கவே செய்தார்கள். எழுதி வைக்கப்பட்ட கதைகளில் அவர் நடித்தார் என்பதிலிருந்து அவருக்காகக் கதைகள் எழுதப்பட்டன. சிங்கத்துக்கு தயிர்சாதம் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் சிவாஜியின் பங்கும் இருந்தது என்பதையும் சேர்த்து மதிப்பிட வேண்டும்.

    தவிர, சிவாஜி இந்த மதிப்பீடுகளைத் தாண்டியவர். பாடல்கள் மட்டுமே முழு நீள சினிமாவாக வெளிவந்த காலத்திலிருந்து அதில் வசனங்கள் அதிகமாக இடம்பெற்று நவீன சினிமாவாகப் பரிணாமம் அடையத் தொடங்கியபோது தன் ஆட்டத்தை தொடங்கியவர் சிவாஜி. வசனம் பேசி நடிப்பதே புதுமையாக இருந்த சமயத்தில் அவருடைய வசன உச்சரிப்புகளில் தமிழ் சினிமா அவரை உச்சி முகர்ந்தது. வாய்மொழியாகவும் ஏடுகளிலும் அறிந்துவந்த சரித்திர நாயகர்களை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் சிவாஜிக்கு முக்கியப் பங்குண்டு.



    அண்ணா, கலைஞர் போன்றோரின் அனல்பறக்கும் வசனங்கள்கொண்ட பகுத்தறிவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். அதே சமயம் புராணங்களும் இதிகாசங்களும் சினிமாவாக எடுக்கப்பட்டபோது, படைப்பாளிகளின் முதல் தேர்வு சிவாஜி கணேசனாகவே இருந்தார். அவரின் நடிப்புத்தன்மை தண்ணீரைப் போன்றது. எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவாகவே மாறக்கூடியவராக இருந்தார்.

    மக்களின் துன்பங்களைப் போக்குபவராக, ஏழைப் பங்காளனாக, வெகுஜனங்களின் அபிப்பிராயத்தை வெல்வது மாதிரியான வசனங்களும், பாடல்களும், காட்சிகளும் அமைக்கப்பெற்று எம்.ஜி.ஆர் கோலோச்சிக்கொண்டிருந்தார். எம் .ஜி.ஆருக்கும் மக்களுக்கும் இடையே இந்த மாதிரியான அதீத உணர்ச்சிக்கு இடம் வகுக்கக்கூடிய விஷயங்கள் இருந்தன. ஆனால், சிவாஜி முழுக்கவும் தன் நடிப்பாற்றலாலும் விதவிதமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் மக்கள் மனதை வென்றவர். தன் திரைப்படங்களில் கதாநாயகப் பிம்ப வழிபாடுகளை முன்னிறுத்தாமல் அவர் நடித்துவந்தது அவருக்குப் பிறகு வந்த நடிகர்களுக்கு ஒரு செயலூக்கத்தை அது அளித்தது.

    பேசி நடிப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பாடல் வரிகளுக்கு உதட்டை அசைப்பதிலும் இருக்க வேண்டும் என்பதில் தன்னை அறியாமலேயே ஒரு பாடமாக அவர் விளங்கினார். அவருக்கு முந்தைய காலத்தில் பாடலை சொந்த குரலில் பாடியவர்களே திரையிலும் பாடியதால் வரிகளுக்கு ஏற்றாற்போல் உதட்டை அசைப்பது சவாலானதாக இல்லை. அந்தச் சவாலில் முதல் தலைமுறையாக இருந்த அவர் சிறப்புற எதிர்கொண்டார். சொற்களின் அர்த்தத்தை முழுவதும் உள்வாங்கி வெறும் வாயை மட்டுமின்றி கண்களிலும் பாடல்களின் பொருளை வெளிப்படுத்தினார். சிவாஜியின் எந்தப் பாடல்களை எடுத்துப் பார்த்தாலும் இதை உணர முடியும். உதாரணத்துக்கு, சில பாடல்களை இங்கே பட்டியலிடுகிறேன். அதைக் கேட்ட பிறகு மேற்கூறியதை இன்னொரு முறை வாசித்துப்பாருங்கள். ஓர் ஒற்றுமையை உணர முடியும்.

    1) என்னை யாரென்று எண்ணி எண்ணி... (பாலும் பழமும்)

    2) பொன்னொன்று கண்டேன்.. (படித்தால் மட்டும் போதுமா)

    3) எங்கே நிம்மதி (புதிய பறவை)

    4) தெய்வமே தெய்வமே (தெய்வ மகன் )

    5) நீயும் நானுமா (கெளரவம்)

    ‘அவரின் நடிப்பு, யதார்த்தத்தைக் காட்டிலும் மிகையானது' என்றொரு கருத்து புழங்கி வருகிறது. சரியாக அணுகிப்பார்த்தால் மிகையான நடிப்பு என்று அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம், அவருக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள் வைத்ததாகவே இருக்கும். காலத்துக்கேற்றாற்போல் ரசனைகள் மாறுவது தவிர்க்க இயலாதது. அந்த வகையில் முந்தைய தலைமுறை படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களைத் தாண்டி செவ்வியல்தன்மையுடன் மக்களால் நினைவுகூறப்படுவர் சிவாஜி என்பதில் ஐயமில்லை.

    இந்த மிகை நடிப்பை இன்னொரு விதத்தில் ஆராய்கிறபோது அவர் திரை நடிப்புக்கு வந்த பின்புலத்தையும் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. படிப்பைவிட நடிப்பில் தன்னால் சிறந்து விளங்க முடியுமென்று நினைத்தவர் மிகச்சிறிய வயதிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் ஒரு நாடக கம்பெனியை வந்தடைந்தார். “அப்பா அம்மா இல்லாத அநாதை" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பாய்ஸ் கம்பெனியில் நாடங்களில் நடித்தார். பல ஆண்டுகால நாடக அனுபவத்துக்குப் பிறகே அவர் சினிமாவுக்கு வந்தார். கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் கடையிருக்கைப் பார்வையாளனுக்கும் உணர்வுகளைக் கடத்த வேண்டும் என்பதில் குரலை உயர்த்திப் பேசுவதும் மிகையான உடல்மொழியை வெளிப்படுத்துவதும் இயல்பானதே. அந்த மரபில் ஊறிப்போய் சினிமாவுக்கு வந்த சிவாஜி. அதையொற்றி இருப்பது ஆச்சர்யமில்லை. அதே சமயம் `சிவாஜியைப்போல நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களிடமும் இதே மிகை உணர்ச்சி நடிப்பு வெளிப்பட்டதா?' எனக் கேட்டால், இல்லைதான். ஆனால், அவர்களெல்லாம் சிவாஜி அளவுக்கு இன்றளவும் பேசப்படுகிறார்களா என்பதையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

    எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் செல்வாக்கு மேலோங்கி இருந்தவரின் சமகாலத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர் சிவாஜி. கட்சி அரசியலில் சேர்ந்து தன்னால் சோபிக்க முடியாவிட்டாலும், அரசியலில் இறங்குவதற்கு முன்பும் பின்பும் மக்கள் நலனில் அவர் அக்கறைகொண்டிருந்தார் என்பது அவர் பற்றிய செய்திகளை அறிய வருகிறபோது மறுப்பதற்கில்லை.

    அவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச் செய்வதாக இருக்கும்.





    மதிய உணவுத் திட்டத்துக்கு முதல் நபராக நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தந்தார்.

    * 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.

    * `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில் மேடையேற்றி அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.

    * பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு நடந்தபோது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி, சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.

    *இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக 1,10,000 ரூபாய் கொடுத்தார்.

    நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு சமூகப் பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான் வாழ்ந்தார்.

  7. #706
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நிஜவள்ளல் நடிகர் திலகத்தின் 151 வது
    திரைக்காவியம்தேனும் பாலும்
    வெளிவந்த நாள் இன்றுதேனும் பாலும் 22 யூலை 1971





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #707
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #708
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Thambirajah Pavanandarajah




    இன்று நடிகர் திலகம் அவர்களின் நினைவுநாளையொட்டி........ அவர் ஒருமுறை இலங்கை வந்தபோது பத்திரிகையாளர்கள் கேட்டபல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார் .அதிலிருந்து ஒரு கேள்வியும் .நடிகர் திலகம் அவர்களின் பதிலும் கேள்வி உங்களிடம் எல்லாத் திறமைகள் இருந்தும் உரிய விருதுகள் ஏன் உரிய நேரத்தில் அளிக்கப்படவில்லை ?அது இப்படிக்கேட்டா எப்படிப்பதில் சொல்வது அத வாங்கிற அளவுக்கு எனக்கு திறமையில்லேன்னு நினைக்கிறேன் .இப்பதான் திறமை வந்திருக்கலாம்.நான் நல்ல சரக்கா இருந்தா உள்ளுர்ல விலைபோகும் ...நம்ம சரக்கு எங்கையும் விலை போகல்ல இப்பதான் நமக்கு பக்குவம் வந்திருக்குன்னு நெனைச் சிருப்பாங்க போலிருக்கு அதான் கொடுத்திருப் காங்க .ஆஹா...கிடைத்துவிட்டதல்லவா?கிடைக்காம இருந்திருந்தால் சொல்லலாம் சேச்சே இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லலாம். என்னவோ நான் அதப் பற்றி நினைக்கவே இல்ல.. ஏன்னா நான் சின்ன வயசுல கொஞ்சம் சுப்பீரியர் காம்ப்ளெக்ஸ் உள்ளவன் .நான் பயப்படவே மாட்டேன்.எதுக்குமே ..என்னோட பிறப்பு ,வளர்ப்பு எல்லாமே சேர்ந்தது .அதேமாதிரி அவார்டு கிடைக்கலேன்னு நான் கவலைப் படறதேயில்லை சின்னப்புள்ளையில வெளியூர்ல போயி பெரிய அவார்டை யெல்லாம் வாங்கிக் கிட்டு வந்தவன் நான்.இந்தியாவிலே ஒரு ஓரத்திலே தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய நடிகன் உலகத்திலே மிகச் சிறந்த விருதை எல்லாம் பெற்றுக் கொண்டு வந்திருக் கிறேன் .ஆகையால் உள்ளுர்ல விருது கிடைக்கவில்லையென்று நான் கவலைப்பட்டது இல்லை ஆனால் நான் நெனைக்காதபோதுதான் எல்லாம் நடக்கும் .அதுபோல இந்த அவார்டு வந்தது .அதைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டியது ஏன்? சின்ன வயசுல நான் மேயர் இன் அமெரிக்கா உங்களுக்குத் தெரியுமா?அமெரிக்காவில இரண்டே பேர்தான் மேயரா இருந்திருக்கிறாங்க ஒண்ணு இந்தியப் பிரதமர் நேருஜி .அடுத்தது உலகமே தெரியாத நான் ....ஒருகோல்டன் கீ கொடுப்பாங்க அந்த ஊரோடகேட் கீ .அதுபோல சின்ன வயசுல கெய்ரோவில இருந்து நாசர் அவார்டு கொண்டுவந்திருக்கேன் வேர்ல்ட் பெஸ்ட் அவார்டு அது .அதைக்கொண்டு வந்திருக்கேன்.பிரான்ஸ்லேருந்து ஒன்பது ஜட்ஜைப் போட்டு எனக்கு இந்த செவாலியே அவார்டைக் கொடுத்திருக்காங்க .இந்திய துணைக் கண்டத்தில இல்லாத அவார்டை எல்லாம் கொண்டு வந்து கொடுக்கிற ஒரு சாதாரண ஆளு.எங்க ஊர்ல எனக்கு புளிக்குழம்பு கிடைக்கலேன்னா கவலைப்பட்டுக்கிட்டு இருப்போம் ?சாம்பார் தின்னுகிட்டு இருப்போம் .குருமாவா தின்னுக்கிட்டு இருக்கோம் வருத்தமெல்லாம் எனக்கு இல்லீங்க தயவு செய்து தப்பா எடுத்துக் காதீங்க .(இந்தப் பேட்டி இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில். முன்னர்கடமையாற்றிய iதிரு இளையதம்பி தயானந்தா அவர்கள் எழுதிய! வானலையின் வரிகள் !என்ற நூலிலிருந்து பெறப் பட்டது அவருக்கு எனது நன்றிகள் )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #709
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sivaji Rajesh SivajiRajesh




    நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்களின் நினைவு நாள் முதியோர் இல்லத்திற்கு அண்னதானம் வழங்கப்பட்டது பவிழம் நகைக்கடை உரிமையாளர்,தலைமை சிவாஜி சக்திவேல்,விக்ரம்பிரபு மாவட்டத்தலைவர் ,சிவாஜி லோகநாதன்23-வது வார்டு தலைவர், வெள்ளிங்கிரி (Ex) Mc பறக்கும்படை ராஜ்குமார்,சிவாஜி திவாகர்,சிவாஜி சிவா,சிவாஜி கோப்பால்,அட்டோ குமார் வடகோவை,கோவை துல்லா,மாஸ்டர் நித்தின்






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #710
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •