Page 70 of 400 FirstFirst ... 2060686970717280120170 ... LastLast
Results 691 to 700 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #691
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sundar Rajan shared his post.

    · 2 hrs

















    Sundar Rajan


    அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
    நாளை 22.07.2017,
    சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, நமது
    ... மக்கள்தலைவரின் நினைவுதின சிறப்பு நிகழ்ச்சியாக
    தந்தி தொலைக்காட்சியில் இயல், இசை, சிவாஜி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
    இதில் நமது மக்கள்தலைவரின் புகழ் காப்பதையே தனது கடமையென நினைத்து, அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த அன்பு சகோதரி கிரிஜா அவர்கள் பங்கு பெறுகிறார்.
    தனது உண்மையான உழைப்பிற்கு என்றாவது ஒருநாள் அங்கீகாரமும், புகழும் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.
    யாருடைய பரிந்துரையும் இல்லாமல் சகோதரி கிரிஜா அவர்கள் தனது உண்மையான உழைப்பினால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்பது முக்கியமான விசயம்.
    இது நமது மக்கள்தலைவரின் ஆசியால் நமது சகோதரி கிரிஜா அவர்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது தான் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.
    உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும், நமது சிவாஜிகணேசன்.இன் சார்பிலும் சகோதரி கிரிஜா அவர்களை வாழ்த்துவோம்......
    அனைவரும் நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள்...
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #692
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Jahir Hussain

    இன்றைய சினிமா,, அன்றைய சினிமா ,,, அடடா எவ்வளவு வேறுபாடுகள்,,, மாறுபாடுகள்,,, நான் அன்றைய சினிமா என்று குறிப்பிட விரும்புவது சிவாஜி சினிமாக்களை,,, மற்றவர்கள் சினிமாவும் அதில் கலந்து இருந்தாலும் சிவாஜி சினிமாக்களே தலைவாழை இலைபோட்டு 16 வகை காய்கறிகளோடு அறுசுவை விருந்தளித்தது.,,, அன்றைய சினிமாவில் கூட்டு பொரியல் அவியல் துவையல் வேண்டுமானால் மற்ற நடிகர்களாக இருக்கலாம், மெய்ன் மீல்ஸ் அதற்குரிய சாம்பார், ரசம, புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு, வடை பாயாசம் அப்பளம், ஊறுகாய், தயிர், மண்ணச்ச நல்லூர் பொன்னி ரைஸ் என்று வெரைட்டியாக இருக்கும் மீல்ஸ் சிவாஜி டிஷ்,,, அதாவது சிவாஜி சினிமாக்கள்,,, ஸோ அற்றை நாளில் இந்த ஒற்றை மனிதன் சினிமாக்களை அன்றைய சினிமா என்ற கணக்கீட்டில் கொண்டு வருகிறேன்,,, இன்றைய சினிமாவில் என்ன என்ன இருக்கிறது? சொல்வதற்கு நிறைய இருக்கிறது,,, காட்சிக்கு காட்சி வன்முறை,,, யதார்த்தம் என்ற பெயரில் வாயோடு வாய் வைத்து அழுத்தும் முத்தக் காட்சிகள், யதார்த்தம் என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக காட்டுதல், நகைச்சுவை என்ற பெயரில் நேரடி ஆபாச வசனங்கள்,,, டூயட் என்ற பெயரில் கதாநாயகியை வன்புணர்வு செய்வது போல பாடல்கள், ரத்தம் ஒழுக ஒழுக வன்முறை காட்சிகள்,,, பிஞ்சுகள் வெம்பிப் பழுப்பது போன்ற பதின்பருவத்து காதல் காட்சிகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,,, சமுதாயத்தில் இவையெல்லாம் இல்லையா என்று கேட்டால் இருக்கிறதுதான் அற்காக அதை அப்படியே காட்சிப்படுத்த வேண்டுமா? யதார்த்தம் என்ற பெயரில அதை அப்படியே காட்ட வேண்டுமா? சினிமா என்பது கொஞ்சம் ரியலிசத்தை கடந்து வந்திருக்க வேண்டும்,,, அது நடைமுறை வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் மறைபொருளாக இருக்க வேண்டும் என்பது சிவாஜி பட கணக்குகள்,,, இன்றைய கால சினிமாவில் இத்தனை அலங்கோலங்களையும் 95% படங்களில் நிரப்பி விட்டு மீதமுள்ள 5% "மெஸேஜ்" என்ற பெயரில் கருத்து கூறிவிட்டு செல்வது நகைப்புக்குரியதாக எனக்கு தென்படுகிறது,,, ஜனங்களை கவர்ந்திழுக்க மெனக்கெட்டு பாடல்காட்சிகளுக்கு கூட வெளிநாடுகளில் படம் பிடிப்பது இன்னொறு கேலிக் கூத்து,,, கதைக்கு பொருத்தமில்லாத வெளிநாட்டு லொகேஷன்களை காண்பிப்பது யதார்த்த சினிமாவை மீறிய செயலாக தெரியவில்லையா? நல்ல நல்ல விஷயங்களை சொல்வதற்காக கொஞ்சம் யாதார்த்தங்களை மீறுகிற சிவாஜி சினிமாக்களை குறைசொல்ல இன்றைய சினிமா ரசனையாளர்கள் விமர்சன வியாதிகயஸ்தர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது,, தேவையற்ற பிரமாண்டம் பொருத்தமற்ற வெளிநாட்டு படப்பிடிப்புகள் சினிமா தயாரிப்பு பட்ஜெட்டை கடுமையாக உயர்த்தவில்லையா அதையெல்லாம் பார்வையாளர்கள தலையில் கட்டி மும்மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட வில்லையா? பார்வையாளர்கள் கைவிட்ட படங்கள் வசூலில் மரண அடி வாங்குவதில்லையா? இதில் மீள இயலாத தயாரிப்பாளர்கள் வநியோகஸ்தர்கள் மீளாத உலகத்திற்கு செல்லவில்லையா? இதுதான் இன்றைய சினிமாக்களில் லட்சணம்,, அதாவது அவலட்சணம்,,, அனறைய கால சினிமாவில் நஷ்டத்தின் காரணம் கொண்டு எந்த பட முதலாளி வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருக்கிறார்கள்? ஸ்பெஷலாக சிவாஜி சினிமாக்களை உருவாக்கிய பட முதலாளிகள் யார் தற்கொலை செய்து இருக்கிறார்கள்,,,அப்படியே நஷ்டக் கணக்கு சொன்னாலும் அதை அடுத்த படங்களில் சரி செய்த பெருந்தன்மை சிவாஜிக்கு இருந்தது,,, அதை தொடர்ந்து ஜெய்சங்கர் போன்ற சில சில நடிகர்கள் சிவாஜியை பின்பற்றி நடந்தார்களே,
    அன்றைய சிவாஜி சினிமாக்களில் கதைக்கும் காட்சி அமைப்புகளுக்கும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே பிரமாண்டம் இருந்தது,,, மஹா பாரதத்தில் கர்ணனை ஹீரோவாக பரிநாமம் செய்யப்பட்டது, அதற்கு காட்சி அமைப்புகள் யானை,குதிரை, காலாட்படை போன்ற திரைக்கதைக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது, சோழர் வரலாறு கூறும் ராஜ ராஜ சோழனுக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது,, சிவபுராணம் கூறிய திருவிளையாடலுக்கு,, சரித்திரம் பேசிய கட்ட பொம்மனுக்கு திரைக்கதையில் பிரமாண்டம் தேவைப்பட்டது,, புதிய பறவை திரைக்கதைக்கு, சிவந்தமண் திரைக்கதைக்கு திரிசூலம் திரைக்கதைக்கு ,,, இப்படி தேவையான படங்களுக்கு மட்டுமே பிரமாண்டம் தேவையாக இருந்தது,,, ஒரு பாசமலருக்கோ, பாவ மன்னிப்புக்கோ, பாலும் பழமும் படத்திறகோ பிரமாண்டம் தேவைப்படவில்லை,,, மாறாக சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடிகக நட்சத்திரப் பட்டாளமதான் தேவைப்பட்டது,,, தில்லானா மோனாம்பாள், தங்கப் பதக்கம், வசந்த மாளிகை போன்ற படங்களுக்கு தேவையான பிரம்மாண்டமும் நல்ல துணை நடிகர்களும்தான் தேவைப் பட்டது,, மொத்தத்தில் சிவாஜி நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல கதை தேவைப்பட்டது,, கூர்மையான வசனங்கள், இனிமையான பாடல்கள், கருப்பு வெள்ளையோ கலரிலோ நேர்த்தியான ஒளிப்பதிவு தேவைப்பட்டது,,, தேவையற்ற பிரமாண்டம் அருவருப்பான காட்சி அமைப்புகள்,,, கொடூரமான கற்ப்பழிப்பு காட்சிகள் தேவைப் படவில்லை,,, யதார்த்தம் சிறிதளவு மீறப்பட்டு இருந்தால்த்தான் அது சினிமா,,, யதார்த்தத்தை மீறி நடிப்பதுதான் சினிமா நடிப்பு,,,
    உதாரணமாக பல சினிமாக்ளை குறிப்பிடலாம்,,, ராமன் எத்தனை ராமனடி படத்தில் வீர சிவாஜியை கண்முன் கொண்டு வந்த நடிப்பு,,, அதிக பட்ச நடிப்புதான்,,, யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்றால் வசனங்கள் மராத்தி மொழியில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்,,, வீர சிவாஜி தமிழில்தானே முழங்கினார்? வீரபாண்டிய கட்ட பொம்மன் தெலுக்கில் வீர வசனம பேசவில்லை,, யதார்த்தத்தை தாண்டி தமிழ் வசனம் பேசினார்,,, சிவன் பிரம்மா விஷ்ணு நாரதர் முதற் கொண்டு தமிழில்தானே பேசினார்,,, பாவை விளக்கு படத்தில் ஷாஜஹான் தமிழில்தானே பாட்டு பாடினார்,,, அவர் ஏசுவாக நடித்திருப்பாரே ஆனால் அவரும் தமிழில்தான் பேசி நடித்து இருப்பார்,,, சாணக்ய சந்திர குப்தாவில் அலெக்ஸாண்டர் தெலுங்கில்தானே பேசினார்,, யதார்த்த சினிமாவை தாண்டியதால் தான் இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்தது,,, இந்த விஷயங்களில் யதார்த்த சினிமாவாக எடுத்தால் அது மண்ணாங்கட்டி சினிமாவாகத்தான் போயிருக்கும,,,,, சிவாஜிக்கு யதார்த்த நடிப்பு வராது போலிருக்கு,,, என்று கூவார்கள் சில குக்கர்கள்,,, முதல் மரியாதையையும் தேவர் மகனையும் சொன்னால் அது தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி என்று கூவுவார்கள்,,, ஏன் கப்பலோட்டிய தமிழன் இல்லையா? இனறைக்கு சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த சிவாஜி சினிமா? சிவாஜி முதற்கொண்டு எல்லோருமே யாதார்த்த நடிப்பில் நடித்தார்களே? எஸ் வி சுப்பைய்யா கொஞ்சம் ஓவர் ஆக்ட்டுங்க என்றது ஒரு குக்கர்,,, கோபக்கார கவிஞன் பாரதி என்ன லேசுப்பட்டவனா? கொந்தளிக்கும் கடலானவன்,, குமுறும் எரிமயைானவன்,, அவன் வேஷத்தை போட்டுக்கொண்டு நந்தனார் போல நடிக்கச் சொல்கிறார்களா? யாதார்த்த சினிமாவை அப்போதே பரிஷித்து பார்த்தவர்தான் எங்கள் சிவாஜி,,, உயிரைக் கொடுத்து நடித்தார்,,, என்ன குறை கண்டார்கள் அந்த படத்தில்? போங்கைய்யா நீங்களும் உங்கள் யதார்த்த சினிமாவும்,,, வ வு சி யாக அவர் தன் பாணியில் நடித்திருப்பாரே ஆனால் அந்தப் பட முதலாளி இன்னும் பல அந்தக்கால லட்சங்களை சம்பாதித்து இருப்பார்,,, இன்றைய சினிமா அறிவாளிகள் கேள்வி ஒன்று என்னை தைத்தது,, சிவாஜி சிவாஜி என்று ஓவர் பில்ட்அப் கொடுக்கறீங்களே என்ன மெஸேஜ் சொல்லிட்டார் உங்கள் சிவாஜி என்றார்,,, திருக்குறள் 133 அதிகாரத்தில் 1330 குறள்களை சொன்ன உலகப் பொதுமறை,,, அந்த 1330 குறள்களுமே மனித வாழ்க்கைக்கு தேவையான "மெஸேஜ் ஐ கொடுப்பன,,, எந்தக்குறளை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டுங்கள் அந்தக் குறளை ஒத்த வடிவத்தில் அவர் படத்தில் கருத்து இருக்கும்,,, அல்லது காட்சி அமைப்பு இருக்கும்,,, அல்லது வசனம் இருக்கும் அல்லது பாடல் இருக்கும் ,, இப்படி வள்ளுவரையே தனதாக்கி தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டவர்,,, குறளை மட்டுமா அவர் பயன்படுத்தினார் முக்கிய இதிகாசஙகளான இராமாயணம், மஹா பாரதம், பகவத் கீதை, குர் ஆன், பைபிள் என்று அத்தனை புத்தகங்களில் இருந்தும் நன்நெறிகளை தன் படத்தில் ஏதோ ஒரு வகையில் "டை அப்" செய்திருப்பார்,, அதுமட்டுமா, ஒளவையார் முதற்கொண்டு வள்ளலார் வரை,,, விவேகானந்தர் முதற்கொண்டு கனியன் பூங்குன்றனார் வரை அத்தனை பேர்களின் நன்னெறி கருத்துகள் மட்டுமின்றி சமணம் பௌத்தம் போன்றவற்றிலிருந்தும் தேவையான மெஸேஜ் சொல்லி இருப்பார்,, ஸோ சிவாஜி சினிமாக்கள் ஆராய்ச்சி மாணவர்களின் சரணாலயம்,,, அவர் ஏற்று வாழ்ந்த கதாபாத்திரங்ள் ஒவ்வொன்றும் அந்த மாணவர்களின் அறிவுப் பசிக்கு உணவளிக்கும் அட்சய பாத்திரங்கள்,,, சிவாஜி சினிமாக்களில் இருந்ததெல்லாம் நாட்டுக்கும் மனித இனத்திற்கும் சொல்லப்பட்ட கருத்துகள்,,, அந்தக்கால பட முதலாளிகள் பணமூட்டைகளை மட்டுமே நம்பி சிவாஜி சினிமா களத்துக்குள் வரவில்லை,, அவரது நல்ல கருத்துகளை உள்வாங்கி சினிமா மூலம் மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தான்,,, இன்றைய தயாரிப்பாளர்கள் பணம் மூட்டைகளை சுமக்க விரும்புபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் அதற்காக எந்த ஹீரோ முதுகுக்கும் சோப்பு போட சொறிந்துவிட தயாராக இருப்பவர்கள்,,, அதனால்தான் அவர்களை "பட முதலாளிகள்" என்றும் இவர்களை "தயாரிப்பாளர்கள்" என்றும் குறிப்பிட்டு வருகிறேன்,, சினிமா பொழுது போக்கு சாதனம்தான்,,, மாற்றுக் கருத்து இல்லை,,, பொழுதை எப்படி போக்க வேண்டும் என்பதிலேயே நிறைய மாற்றுக் கருத்துகள் உண்டு,, இன்று சிவாஜி என்ற டிக்ஷ்னரியை புரட்டிப் பார்த்தேன்,,, அருஞ்சொற்பொருள் பொதிந்த அந்த கலைமகனை அவரது நினைவுநாளில் நானும் என் பங்கிற்கு பதிவிட்டேன்,,,


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #693
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Baskar Seshadri


    விடிவெள்ளி ( நடிகர் திலகத்தின் நினைவு நாள் இன்று )
    --------------------
    சைக்கிள் ஓட்டுவதில் நண்பர் சிதம்பரம் கெட்டிக்காரன் . பெரும் பொறுமை . எந்த இடர்பாடும் இல்லாமல் ஓட்டும் அந்த லாவகம் எனக்கு சுட்டு போட்டாலும் வராது . எங்கள் இணைப்பு பாலம் இரவு காட்சி . அது வெலிங்டனா சித்ராவா என்று நினவு இல்லை . கணேசனை பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய உடைத்து எரியும் சந்தோஷம்.இதில் மணியும் எங்கள் கட்சி .அவனுடன் நான் செல்வது தனி பந்தி . விடிவெள்ளியில் தோரணம் கட்டும் காட்சியில் அவர் காட்டும் அதிர...்ச்சியோ , அல்லது பச்சை விளக்கில் அவர் திருக்குறள் சொல்லும் அழகோ , உயர்ந்த மனிதனில் அசோகனிடம் கைகளை மடக்கி அவன் நல்லா பைட் பண்றாண்டா என சிவகுமாரை பார்த்து சொல்லும் பாங்கோ .. தெய்வ மகனில் தம்பியிடம் பணம் கொடு என கண்களால் பேசும் என கணேசனை சுமந்து கொண்டே போகலாம் . எந்த பெரிய பின் புலம் இல்லாமல் நாடக திறமையை கொண்டு ஒரு பாத்திரத்தில் ஊறி அதை செம்மையாக கொண்டு வருவதில் அவருக்கு நிகர் இல்லை.ஒரு படத்தில் அவர் பாட அமரும் முன் அந்த பெரிய சபையை பார்த்து பிரமித்து பயப்படும் நிலையை முகத்தில் காட்ட வியர்வையை சிரித்தவாறு துடைத்து கொள்ளும் ஒரு ப்ரில்லியன்ட் பெர்போர்மேர் அவர். . பாசமலரில் அவர் ஜெமினியோடு பேசும்போது பென்சிலை சீவிக்கொண்டே முறைக்கும் முறைப்பு நினைவு உண்டா ?எனக்கு விஸ்வநாதன் இடது என்றால் நடிகர் திலகம் வலது கண் .



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #694
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vignesh Ramkumar

    ·


    அவரின் நினைவுநாளான இன்று, அவர்தம் கலைத் திறமையைக்கொண்டு மக்களுக்கு ஆற்றிய சிலவற்றைத் தெரிந்துகொள்வது அவருக்கான அஞ்சலியை முழுமையடையச் செய்வதாக இருக்கும்.
    கர்ணன் சிவாஜி
    * மதிய உணவுத் திட்டத்துக்கு முதல் நபராக நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் தந்தார்.
    ... * 1962-ம் ஆண்டில் சென்னையில் வெள்ளம் வந்தபோது உறைவிடத்தையும் உடமைகளையும் இழந்துத் தவித்த குடிசைவாழ் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் பண உதவியும் செய்தார்.
    * `வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தை பல இடங்களில் மேடையேற்றி அதில் கிடைத்த 32 லட்சம் ரூபாய்க்கும் மேலான தொகையை பல நல்ல காரியங்களுக்குக் கொடையாக வழங்கினார்.
    * பாகிஸ்தானுடன் எல்லைத் தகராறு நடந்தபோது எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்காக கலை நிகழ்ச்சி நடத்தி, சுமார் 17 லட்சம் ரூபாயை அரசுக்கு அளித்தார்.
    *இலங்கைத் தமிழர்களுக்கு உதவியாக 1,10,000 ரூபாய் கொடுத்தார்.
    நடிப்பு சம்பந்தமாக பல விஷயங்களில் நடிகர்களுக்கு முன்னோடியாக இருந்த அமரர் சிவாஜி கணேசன், திரைக்கு வெளியேயும் ஒரு கலைஞனுக்கு சமூகப் பணிகளில் தொடர்பும் பொறுப்பும் இருக்கிறது என்பதற்கும் முன்னோடியாகத்தான் வாழ்ந்தார்.






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #695
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Edwin Prabhakaran Eddle

    ‎நடிகர் திலகத்தின் கடைசி மேடை பேச்சு............................................ .....இறுதி உரை அதுதான் என்று தெரியாமலேயே....."எனது ஆயுளையும் சேர்த்து நீங்கள் எடுத்துக்கொண்டு பல்லாண்டு காலம் வாழுங்கள்" என்று கலைஞர் அவர்களை பார்த்து சொன்னதை யாரால் மறக்க முடியும்....................அப்படியே ஆகிவிட்டது இறுதியில் ......உயிரையே தியாகம் செய்தது போலாகிவிட்டது ...............சிவாஜி என்னும் மாமேதை மீண்டும் இவ்வுலகில் பிறப்பாரோ மாட்டாரோ....நாம் காத்திருப்போம்.....




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #696
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Sekar K

    தாரமங்கலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்ட போது எடுத்த படம்.
    · Provide translation into English







    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #697
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Vetri Vel Murugan












    Kumaresan Singa Kutti G



    சிவாஜிகணேசன் நினைவு தினம்
    கீழப்பாவூர் நகர சிவாஜி நற்பனி மன்றத்தின் சார்பில் நினைவு தினம் அனுசரிக்க பட்டது.
    தலைமை A.G.M.சிங்ககுட்டி(எ)குமரேசன்.நகர காங்கிரஸ் தலைவ...ர்
    மாவட்ட இலக்கியஅணி தலைவர்
    M.பொன்கணேசன்.மற்றும்
    சிவசுப்பிரமணிய முதலியார் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
    நகரசிவாஜி மன்ற தலைவர்.M.சுப்பிரமணியபிரபு அனைவரையும் வரவேற்றார்.
    வட்டார இலக்கிய செயலாளர் ராமகிருஷ்ணன் சிவாஜி பற்றி பேசினார்.
    வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர்.மகாராஜா.தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கார்த்திக்செல்வன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நகர கலைபிரிவு தலைவர்
    S.வெற்றிவேல்முருகன் நன்றி கூறினார்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #698
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    From Vikatan,

    நடிகர் திலகம் சிவாஜியின் முதற்படம் பராசக்திக்கு எழுதப்பட்ட ‘பொளெர்’ விமர்சனம்.





    தமிழத்திரையுலகின் நடிப்புக்கு இலக்கணமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவரது நினைவுநாள் இன்று!

    1928 ம் ஆண்டு அக்டோபர் 1 ந்தேதி தஞ்சை சூரக்கோட்டையில் சுதந்திரப்போராட்ட வீரர் சின்னய்யா - ராஜாமணி தம்பதிக்குப் பிறந்தவர் வி.சி. கணேசன் என்கிற விழுப்புரம் சின்னய்யா கணேசன். இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால் படிப்பைத் துறந்து அரிதாரம் பூசிக்கொண்டார். சக்தி நாடக சபா, கே.ஆர் ராமசாமியின் நாடகக்குழு, அவ்வை தி.க ஷண்முகத்தின் நாடகக்குழு எனப் பல நாடகக் குழுக்களைக் கடந்து 40 களின் இறுதியில் அறிஞர் அண்ணாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். திமுகவில் எம்.ஜி.ஆருக்கு முன்னதாக முக்கியத்துவம் பெற்ற நடிகராக இருந்தவர் சிவாஜிகணேசன்.

    மங்கள கான சபா குழு சென்னையில் சென்னை ஒற்றைவாடைத் தியேட்டரில் நாடகங்கள் நடத்திவந்தபோது அந்த நாடகத்திற்கு அன்றைக்கு சினிமாவில் சிறுசிறுவேடங்களில் நடித்துவந்த ஒரு நடிகர் தினமும் நாடகம் பார்க்க வருவார். ஒருமுறை கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து அந்த நடிகர், நேரில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். பொன்னிற மேனி, கருகுரு முடி, கருணை குணம் இவற்றால் கவரப்பட்ட கணேசன், அவருடன் நட்பானார். அந்த பழக்கம் நாளடைவில் அவர்களை அண்ணன் தம்பிகளாக்கியது. உணவு வேளைகளில் கணேசன் வராமல் தன் சொந்த மகனுக்கு ஒருநாளும் உணவு பரிமாறியதில்லை சத்தியபாமா என்ற அந்த தாய். ஒரே இலையில் உணவோடு உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட அவர்கள்தான் பின்னாளில் திரையுலகைக் கட்டி ஆண்டார்கள். அந்த அண்ணன் எம்.ஜி.ஆர்.

    காஞ்சியில் அண்ணாவின் வீட்டில் தங்கி திராவிட நாடு இதழ்ப் பணியில் உதவியாக இருந்தபடியே நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் கணேசன். அண்ணா சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றத் திட்டமிட்டிருந்தார். சிவாஜியாக நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசி நடிக்க ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்க கணேசனுக்கு உள்ளுர ஆசையிருந்தாலும் வசனத்தைத் தவிர அண்ணா எதிர்பார்த்த விஷயங்கள் அவரிடம் இல்லை. அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்தில் நடிக்க எம்.ஜி.ஆரை பரிந்துரைத்தார்.



    ஒரு மதிய வேளையில் எம்.ஜி.ஆரை கையோடு காஞ்சிக்கு அழைத்துவந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். திரையுலகில் புதிய வீச்சுக்கு அந்த நாள் அடித்தளம் இட்டது. சிவாஜியாக நடிக்க எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார். நாடகத்தில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் சில காரணங்களால் நாடகத்தில் நடிக்க மறுத்து ஒதுங்கிக்கொண்டார். அதேசமயம் நாடக ஆசிரியர் அண்ணாத்துரையின் எழுத்து மீது பெரும் காதல் புத்தது அவருக்கு. வாய்ப்பு இப்போது கணேசனுக்கு வந்தது. சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்ஜியம் நாடகத்திற்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்தார் பெரியார். கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனை காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சிமுகர்ந்தார். கணேசன் , 'சிவாஜி' கணேசன் ஆனார்.


    நேஷனல் பிக்சர்ஸ் நடத்திவந்த பெருமாள் முதலியார் ஒருமுறை சிவாஜியின் நாடகத்தைப் பார்க்கநேர்ந்தது. கணேசனின் நடிப்பு பிடித்துப்போய்விட்டது அவருக்கு. சில நாள்களில் தான்எடுக்கவிருந்த படத்திற்கு கதாநாயகனாக கணேசனை ஒப்பந்தம் செய்தார். பராசக்தி என்ற அந்தப்படம் வளர்ந்துவந்தபோது ஒரு சம்பவம் நடந்தது.

    படத்திற்கு பைனான்ஸ் செய்துவந்த ஏ.வி.எம் செட்டியார் ஒருநாள் படப்பிடிப்பை காணவந்தார். சிறிதுநேரத்திற்கு பின் ஏ.வி.எம், பெருமாள் முதலியாரிடம் அதிருப்தியான குரலில் சொன்னார். பையன் நல்லாத்தான் இருக்கான். கொஞ்சம் குதிரைமூஞ்சியா இருக்கே. உடம்பும் ஒல்லியா இருக்கு... இத்தனை ஆயிரம் பணம் போட்டு எடுக்கிறோம். எதுக்கு விஷப்பரீட்ஷை. கே.ஆர்.ராமசாமி இல்லேன்னா டி.ஆர் மகாலிங்கத்தை வெச்சி எடுத்துக்கலாம். பையனை செட்டில் பண்ணி அனுப்பிடு”- இடிவிழுந்ததுபோலானது சிவாஜிக்கு. சினிமாக்கனவு கண்ணெதிரில் கலைந்துகொண்டிருந்தது. ஆனால் பெருமாள் முதவியார், எதுக்கும் அண்ணாகிட்ட ஒருவார்த்தை கேட்டிடலாம் என அப்போதைககு முடிவை தள்ளிப்போட்டார். தகவல் அண்ணாவுக்கு சென்றபோது, ராமசாமி நிறைய படங்கள்ல நடிச்சிட்டு வர்றார். புதுப்பையனைப் போட்டே முடிங்க... நல்லா நடிப்பான்... என சிவாஜிக்கு வாழ்வு கொடுத்தார். சில மாதங்களுக்கு சிவாஜிக்கு நல்ல ஓய்வும், சத்தான உணவும் தந்து அவரை குண்டாக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர்.

    படத்தில் குணசேகரன் வேடத்தில் சிவாஜி அறிமுகமானார். தமிழ்சினிமாவில் ஒரு புதிய சகாப்தம் உருவானது. எஸ்.எஸ் ராஜேந்திரனுக்கும் இதுவே முதல்படம். பராசக்தி படம் முழுக்க முழுக்க சமூக சீர்திருத்தக்கருத்துகளைப் பொட்டில் அடித்தாற்போல் பேசியது. அன்றைய சமூகத்தில் அந்தப்படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். நாத்திகக் கருத்துக்களை பேசிய பராசக்தியை ஆஸ்திகர்கள் வசைபாடித்தீர்த்தனர். நாத்திகர்கள் கொண்டாடினர். திராவிட இயக்க வரலாற்றில் பராசக்திக்குத் தனியிடம் உண்டு.
    பராசக்தி படம் அன்றைக்கு சமுதாயத்தில் ஏற்படுத்திய எதிர்வினைக்கு உதாரணமாக அன்றைக்கு பிரபல சினிமா இதழான குண்டூசி அதற்கு எழுதிய விமர்சனத்தை இங்கு தருகிறோம். விமர்சனத்தை படியுங்கள்...


    ஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்! தெய்வ நிந்தனைத் திருப்பணி நிறைந்த ''பராசக்தி"

    ஒரு குறிப்பிட்ட கொள்கையைப் பிரசாரம் செய்ய விரும்பி செய்யப்படும் ஒரு காரியமானது, அதற்கு நேர்மாறான பலனை அளிக்குமானால், அந்த முயற்சியில் முனைந்தவர்களைக் குறித்து நாம் அனுதாபப்படத்தான் வேண்டும்! அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான் நேஷனல் பிக்சர்ஸின் ''பராசக்தி". ஆஸ்திகத்தை அழித்து, நாஸ்திகத்தை வளர்த்துவிடநினைத்து செய்யப்பட்ட முயற்சியான "பராசக்தி", நாஸ்திகம் நசித்து, ஆஸ்திகம் பலப்படவேதான் வழி செய்திருக்கிறது. ஆகவேதான், 'ஆஸ்திகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்' என்று குறிப்பிட்டேன்.




    ஏதோஒரு பராசக்தி கோயில் பூசாரி. கோயிலின் உள்ளேயே ஓர் அபலையைக் பலாத்காரம் முயற்சிக்கிறான் என்று கதை ஒன்றைக் கையாண்டு, அதை மனதில் கொண்டு வசனங்களை எதுகை மோனை பிராஸங்களுடன் 'தீட்டி', கடவுளை மனம் கொண்ட மட்டும் தூஷணை செய்யப்படுகிறது இப்படத்தில். இதைப் பார்த்து, வெறுப்புற்று ஆஸ்திகர்கள் நாஸ்திகர்களாக மாறி விடுவார்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களின் எண்ணமாயிருக்கலாம். ஆனால், அது வீண் கனவாக முடிந்ததோடு மட்டுமின்றி ஆஸ்திகத்தை பலப்படுத்தி விட்டது. 'எத்தகைய பதிதனாயினும், இவ்வளவு அக்கிரமமான காரியத்தை தெய்வ சன்னிதியில் செய்யத் துணிவு கொள்ள மாட்டான்' என்பது அவர்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல; ''அடடா, நாம் இனி பிரதி தினமும் கோவிலுக்குப் போயாக வேண்டும். அப்படிப் போனால் தான் எங்காவது பதினாயிரம் இடத்தில் ஓரிடத்திலாவது இப்படி நடப்பதாயிருந்தாலும் அதைத் தடுக்க முடியும்" என்ற எண்ணம் தான் நிலைத்து அவர்களது ஆஸ்திகமனப்பான்மை ஸ்திரப்படுகிறது. இந்த ஒரு ''பராசக்தி"யில்லை; இதை விட விஷமப் பிரசாரம் நிறைந்த படங்கள் அநேகம் வந்தாலும் நம் மக்களின் ஆஸ்திக மனத்தைக் கலைத்துவிட முடியாது!

    'பராசக்தி வெறுங் கற்சிலை' என்று அழுத்தம் திருத்தமாக' பிரசாரம் செய்கிறார் கதாசிரியர். ஆனால், படக் கதையிலேயே பல இடங்களில் பல்டி அடித்திருக்கிறார். பராசக்தியின் சன்னிதியிலே கல்யாணியைக் கற்பழிக்க முயன்றானே பூசாரி, அவனால் அது முடிந்ததா? பூசாரியின் தயவிலே ஜீவனம் நடத்தும் அவன் கையாள், சரியான தருணத்தில் தூக்கத்திலிருந்து எழுந்து, அலட்சிய மணியை அடிக்க - அதனால் பூசாரியின் காரியம் கைகூடாமல் போக வழி செய்தது பராசக்தியின் அருள்தானே. அது மட்டுமா? பூசாரி உடலெல்லாம் ரண காயம் ஏற்பட்டு ஊர் சிரிக்க உயிர் தப்பினான். 'தெய்வம் நின்றுதான் கொல்லும்' என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?

    கல்யாணி ஆற்றுப் பாலத்திலிருந்து குழந்தையைக் கீழே வீசுகிறாள். அதே தினம், அதே நேரம் விமலா உல்லாசப் படகில் வருகிறாள்; வீசி எறியப்பட்ட குழந்தை தவறாமல் அந்தப் படகில் வந்து விழுகிறது; அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்ததும், ஒரு சிறு காயம் கூடப் படாமல் குழந்தை உயிர் பிழைக்கிறது. - இதெல்லாம் பராசக்தியின் அருளில்லாமல் சாதாரணமாக முடியக்கூடிய காரியங்களா?
    அருமைத் தங்கை கல்யாணி. அவள் கல்யாணத்திற்கு வர முடியாத அருமை அண்ணன்மார் மூவர், சிங்கப்பூரில் தவிக்கின்றனர். ஒருவன் மட்டும் பணத்துடன் கிளம்புகிறான். அதற்குள் தங்கை கல்யாணி ஒரு குழந்தைக்குத் தாயாகி, அதே தினம் கணவன், தந்தை இருவரையும் இழந்து கதியற்றவளாகி இட்லி சுட்டு விற்றுப் பிழைக்கிறாள். பணத்துடன் வந்த அண்ணன் குணசேகரன், சென்னை நகர் அடைந்து, ஒரு விலைமகளால் ஏமாற்றப்பட்டு பணத்தைப் பறி கொடுக்கிறான். பிறகு, காரியப் பைத்தியமாக மாறி தங்கையைத் தேடிவந்து, தான் இன்னாரென்று காட்டிக்கொள்ளாமலே அவளுக்கு உதவி வருகிறான்.



    காமுகன் ஒருவனது செயலினால் கல்யாணி அங்கு விட்டுக் கிளம்பி, ஒரு பிளாக்மார்க்கெட் பேர்வழியிடம் சிக்கித் தப்புகிறாள். இதற்கிடையில் சிங்கப்பூரிலிருந்து நடையிலேயே கிளம்பிய சந்திர சேகரன், ஞானசேகரன் ஆகிய மற்ற இரு சகோதரர்களும் வழியில் குண்டு வீச்சு சமயம் பிரிந்து விடுகின்றனர். தமிழ்நாட்டை அடைந்த சந்திரசேகரன் நீதிபதியாகி விடுகிறான். ஞானசேகரன், மூடவனாகி பிச்சைக்காரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு புரட்சிப் பண்ண ஆரம்பிக்கிறான். பூசாரியினால் கற்பழிக்கப் படவிருந்த கல்யாணி தப்பி பசியால் துடித்த குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்று கைதாக்கப்படுகிறாள்.

    நீதிபதி சந்திரசேகரன் முன், அந்தக் குற்றவிசாரணை ஆரம்பமாகிறது. குற்றவாளி தன் தங்கை என் அறிந்த நீதிபதி மூளைக் கலக்கம் அடைகிறார். தங்கையைத் தேடிவந்த குணசேகரன் பூசாரி செய்ய நினைத்த அட்டூழியத்தை அறிந்து அவனை வாள் கொண்டு தாக்கி கைதாகிறான். வழக்கு நடைபெறுகிறது. குழந்தை உயிர் தப்பிவிடவே கல்யாணிக்கு விடுதலை கிடைக்கிறது; பூசாரியைத் தன் தற்காப்புக்காகவே தாக்கியதாக குணசேகரனுக்கு மன்னிப்புக் கிடைக்கிறது. குடும்பம் ஒன்று சேர கதை சுபமாக முடிகிறது. இதுதான் படக்கதை. கதையில் ஒரு புதுமையுமில்லை. படக் கதைக்கும் பெயருக்கும் 'குலாம் காதருக்கும் கோகுலாஷ்டமிக்கும்' உள்ள சம்பந்தம்தான் இருக்கிறது. பராசக்தியின் மீது வசை புராணம் பாடப்படுகிறதே, அதற்காக இந்தப் பெயர் கொடுத்தார்களோ என்னவோ?

    நாடகமாகப் பிரபலமானது இந்த "பராசக்தி" நாடகம் நடிக்கப்பட்ட போதே இந்த நாடகத்தைத் தடை செய்ய வேண்டுமென கிளர்ச்சிகள் நடந்தது உண்டு. நாடகக் கதையை திரைக்கு ஏற்றபடி, முக்கியமாக கடவுளையும் சர்க்காரையும் சமூகத்தையும் தாக்கு தாக்கென்று தாக்க இடம் வைத்து - மாற்றி அமைத்திருக்கிறார் மு.கருணாநிதி. தமது உத்வேகத்தில் அதற்காக வரம்பைக் கூட கடந்து கீழ்த்தரமான அளவுக்குச் சென்றிருக்கிறார். பல நூறு ரூபாய் நோட்டுகளைப் பறிகொடுத்த - சூட்டும் கோட்டும் அணிந்த - படித்த நாகரிக வாலிபனுக்கு உடனே போலீஸில் புகார் செய்யத் தோன்றாதது ஆச்சர்யமே. இதற்காக அந்தப் பாத்திரம் கதையின் பின்பகுதியில் கூறும் சமாதானம் சிரிக்கத்தான் செய்கிறது. இறுதியில், நீதிமன்றக் காட்சியில் கல்யாணி மீதும், குணசேகரன் மீதும் வழக்கு நடக்கும்போது, மைனர் வேணு, பிளாக்மார்க்கெட் நாராயண பிள்ளை, ஏமாற்றிப் பணம் பறித்த விலைமகள் இவர்களெல்லாம் அங்கு எப்படி, ஏன் வந்தார்கள் என்பதைப் படம் பார்ப்பவர்களின் கற்பனா சக்திக்கே விட்டிருக்கிறார்கள்!

    மக்கள் பக்தியுடன் காவடி எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கிண்டல் செய்யவே 'பாடைக் காவடி' எடுப்பதாக உள்ள கட்டம் புகுத்தப்பட்டிருக்கிறது. கதையின் தொடர்ச்சிக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. இது விஷமத்தனமான - விஷமான அறிவிலிகளின் செயலாகும். இதைவிட மக்களின் மனதைப் புண்படுத்தும், கீழ்த்தரமான குரூரமான கற்பனை இருக்கவே முடியாது.
    இப்படத்தின் வசூல் வெற்றிக்கு ஒரு காரணம் படத்தின் வசனங்கள், உணர்ச்சி ததும்பும் நடையிலே படத்தின் வசனங்களை எழுதியிருக்கிறார் மு.கருணாநிதி என்பது மறுக்க முடியாத உண்மை கடவுளை இழிவு படுத்தும் இடங்களிலும் சர்க்காரையும் சமூகத்தையும் விளாசும் கட்டங்களிலும் மட்டுமின்றி, படம் முழுவதிலுமே வசனங்கள் உள்ளத்தைத் தொடும் முறையில் இருக்கின்றன.
    "இட்லி விற்றுப் பிழைப்பது தமிழ் நாட்டில் தாலி அறுத்தவர்களின் தாசில் உத்தியோகம்" என்கிறார் வசனகர்த்தா. அவருக்குப் பழக்கமான, அவருக்குத் தெரிந்த ஒரு சில விதவைகள்தான் உலகம் என்று நினைத்திருக்கும் அவரது குறுகிய நோக்கத்தையே இது காட்டுகிறது.
    'பரஸ்திரீயை நாடிப்போவேன்' என்று ஒரு கணவன் சொல்லும்போது, 'நானும் வேறு புருஷனைத் தேடிக் கொண்டு போகிறேன்' என்று ஒரு ஸ்திரீ சொல்லுவது தமிழ்நாட்டுப் பெண்மணிகளையே அவமதிப்பதாகும் என்பதை தமது ஆவேசத்தில் வசன கர்த்தா மறந்து விட்டார் போலும்!

    பைத்தியத்தின் வாயிலாக பஜனைகள் வருண ஜபம், காவடி எடுத்தல் இவற்றைப்பற்றியெல்லாம் பிதற்றவைத்திருக்கிறார். ஆம்; எல்லாம் ஒரே பிதற்றல்தான், அர்த்தமற்ற முறையிலே காந்திஜி செய்த காரியம் ஒன்றும் இழுக்கப்படுகிறது. “பிள்ளைக் கறி சமைத்த சிறுத்தொண்டர், ஏழு குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்லதங்காள், இந்தக் கதைகளைத் தடை செய்யாத அரசாங்கம் குழந்தையைக் கொல்ல முயன்ற கல்யாணியைக் குற்றம் கூறுவது தவறு” என்று வசனகர்த்தா கூறுவது அர்த்தமற்ற வாதம். அக்கதைகள், நடந்த காலத்தையும் அப்போதய சூழ்நிலையையும் பற்றி நிதானமாக ஆழ்ந்து யோசித்தால் அவருக்கே அது தெரியவரும்.

    புதிய முகம் கணேசனைத் திரையுலகில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்ப்பட ரசிகர்களின் பாராட்டுதலுக்கு உரியவர்கள் நேஷனல் பிக்சர்ஸார். இப்படத்தில் நடிப்பில் முதல் ஸ்தானத்தை குணசேகரனாக வரும் கணேசனுக்குத்தான் அளிக்க வேண்டும். நல்லதொரு கதாபாத்திரத்தில் தோன்றி பிரமாதமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றுவிட்டார் அவர். காரியப் பைத்தியமாக மாறும் கட்டத்திலிருந்து இவரது நடிப்பில் காணப்படும் விறுவிறுப்பு படிப்படியாக முன்னேறி, படத்தின் இறுதிக் கட்டத்தில் உச்சநிலையை அடைகிறது. வசனங்களை அழுத்தம் திருத்தமாக உணர்ச்சியுடன் பேசுகிறார். இவரது எதிர்கால வெற்றிக்கு இப்படம் நல்ல சூசனையாகும். சிற்சில இடங்களில் மட்டும் நாடக மேடை வாசனை வீசுகிறது.

    நீதிபதியாக வரும் சஹஸ்ரநாமத்திற்கு படத்தில் அதிக சந்தர்ப்பங்கள் இல்லை யெனினும், உள்ளவரை வெகு நன்றாக நடித்துள்ளார். நீதிமன்றத்திலே, குற்றவாளி தன் தங்கை என அறிந்ததும் அவரது நடிப்புப் பிரமாதம். பிச்சைக்காரர்களை மகாநாடு கூட்ட அழைக்கும் சகோதரன் ஞானசேகரனாக வரும் எஸ்.எஸ்.ராஜேந்திரனது நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. தன் தங்கையைப் பற்றி அறிந்து துடிக்கும்போதும், இறுதியில் தன் குடும்பத்தினரைக் காணும் கட்டத்திலும் அவரது நடிப்பு மயிர்க்கூச்செறியச் செய்கிறது. நடிகர்களில் இம்மூவரைத் தவிர, மற்றவர்களுக்கு அதிகமாக வேலையில்லை. பிளாக் மார்க்கெட் நாராயண பிள்ளையாக வரும் வி.கே.ராமசாமி இப்படத்தில் தம் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். புஸ்தகங்களின் பெயரைக் கொண்டே இவர் கல்யாணியிடம் பேசுவதாக உள்ள இடம் தமாஷாக இருக்கிறது. ஆனால் அது உபயோகிக்கப்படும் கட்டம், புத்தக ஆசிரியர்களை இழிவு படுத்துவதாகவே படுகிறது.
    நடிகைகளில் கல்யாணியாக வரும் ஶ்ரீரஞ்சனி நன்கு நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நடிகையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தன் தமையன்மார் கல்யாணத்துக்கு வராமை குறித்து வருந்தும் போதும், நீதிமன்றக் காட்சியில் வாதாடும் கட்டத்திலும் இவரது நடிப்பு நன்கு சோபித்துள்ளது . விதவையாக சித்தரிக்கப்பட்டுள்ள இவர் பாடாமலிருந்திருந்தால் அந்தக் கதாபாத்திரத்தின் மீது மேலும் இரக்கம் ஏற்பட்டிருக்க இடமுண்டு. தவிர படத்தின் விறுவிறுப்பும் பாதிக்கப்பட்டிருக்காது. குணசேகரனைக் காதலிக்கும் விமலாவாக பண்டரி பாய் கச்சிதமாய் நடித்திருக்கிறார். குணசேகரனுடன் வாதாடும் கட்டங்களில் உணர்ச்சியுடன் பேசி, நடித்திருக்கிறார், மற்ற பெண் கதா பாத்திரங்களுக்கு படத்தில் அதிகமாக வேலை இல்லை.

    பாட்டுகள் அனைத்துமே கருத்து நிறைந்தவையா யிருக்கின்றன. முக்கியமாக "கா...கா...கா...", "தேசம் ஞானம்" ஆகிய இரு பாராட்டுகளையும் குறிப்பிட வேண்டும். பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாட்டையும் சரியான கட்டதில் பாட வைத்திருக்கிறார்கல். பாட்டுகள் யாவும் இனிமையாகப் பாடப்பட்டுள்ளன.

    ஸ்டுடியோ சம்பந்தப்பட்ட வேலைகள் திருப்திகரமாக உள்ளன. ஒலி - ஒளிப் பதிவுகள் தரமாயிருக்கின்றன. முக்கியமாக ஒளிப்பதிவு பாராட்டப்பட வேண்டிய முறையில் இருக்கிறது. ஆடம்பரமான ஸெட்டுகள் எதுவுமில்லை.

  10. #699
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உறுதி ஏற்கிறோம் !
    ----------------------------------

    இசைக் கச்சேரி
    நடந்து கொண்டிருக்கும்.

    ஒரு பாடல் முடிந்து
    அடுத்த பாடல் வருவதற்கான
    சில நிமிஷ இடைவெளியில்
    தாள வாத்தியங்கள் அதிரும்...

    தந்தி வாத்தியங்கள்
    அதீதமாய் சுண்டப்படும்.

    ஊதல் வாத்தியமொன்று
    யானைக் குரலில் பிளிறும்.

    ஏதோ ஒன்றில்
    எதையோ வைத்து அடித்து
    உடுக்கையொலி போன்றதொரு ஒலி
    எழுப்பப்படும்.

    காதில் வந்து மோதும்
    எந்தச் சத்தமும்
    ஒரு முழுமையோடு வாராது
    நாராச இரைச்சலாய்ப் பாயும்.

    அடுத்த பாடலுக்கான
    ஒரு சுருக்க ஒத்திகைதான் அது
    என்பது புரிந்தாலும்
    அது என்ன பாடலென்று
    சத்தியமாய்ப் புரியாது.

    திடீரென்று மேடையும், சபையும்
    மொத்தமாய் அமைதியாகும்.

    ஒரு மேடைக் குரல்
    " ஒன்.. ட்டூ ..த்ரீ " சொல்ல..
    ஒரு ஊதல் வாத்தியத்திலிருந்து
    " உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடலின்
    துவக்க இசை இனிமையாகப் புறப்பட...

    மனதின் ஆழத்திலிருந்து
    ஒரு கனத்த சோகம்
    பந்தாய் மேலெழும்பி
    கண்ணீர்த் தொட்டி உடைத்து
    மேலெங்கும் ஈரப்படுத்த...

    பதினாறு ஆண்டுகளாய் நடக்கிறது
    இந்தப் பரிதாபக் கதை.
    *****

    அய்யா... நடிகர் திலகமே!

    உங்களுக்கான
    எங்கள் பரிதவிப்பும், சோகமும்
    சட்டென்று வெளிப்பட்டு
    தீர்ந்து போகிற உணர்வுகளல்ல.

    அவைகள்..
    ஜென்மங்களுக்கு இடையே நீளும்
    நமது அன்புப் பாலம்.

    இதோ...

    எங்களூர்ச் சுவர்கள்
    உங்கள் திருவுருவம் தாங்கிய
    சுவரொட்டிகளைப்
    போர்த்திக் கொள்ளத் துவங்கி விட்டன.

    பசை வாளிகளோடு
    பின்னிரவில் துவங்கிய
    எங்கள் சிங்கங்களின் பயணங்கள்
    வெயிலடிக்கும் காலையிலும்
    முடிந்தபாடில்லை.

    அவனது சுவரொட்டிகளில்
    அய்யனே...
    உங்களைப் போற்றும்
    வாசகங்கள்.

    ஆண்டவனே...
    என் தலைவனைத் திருப்பித் தா என
    உங்களுக்கான யாசகங்கள்.

    கொடுமையாய்க் கடந்து போன
    இந்தப் பதினாறு வருடங்களில்
    அவன் உங்களைக்
    கொஞ்சமும் மறக்கவில்லை.

    மறக்க மாட்டான்.

    சிவாஜி ரசிகன்
    சாமர்த்தியசாலி.

    காலம் குணசேகரனைச் சாகடித்தால்
    அவன் ராஜசேகரனை உயிர்ப்பிக்கிறான்.

    கட்டபொம்மனைக் கொன்றால்
    ராஜராஜ சோழனைக்
    கொண்டு வருகிறான்.

    வியட்நாம் வீடு பத்மநாபனை
    வீழ்த்தினால்
    ஆனந்த பவனம் ரவிக்குமாரை
    எழுப்புகிறான்.

    ரகுராமனை ஒளித்து வைத்தால்
    ராஜனை வைத்துக்
    கண்டுபிடிக்கிறான்.

    சிவாஜி ரசிகன்
    சாமர்த்தியசாலி.
    *****

    அய்யா...
    உங்களை இழந்த
    உங்கள் ரசிகர்கள்...
    உங்கள் தொண்டர்கள்...
    சோர்ந்திருக்கலாம்.

    சோகித்திருக்கலாம்.

    செயலற்றுப் போய்விடவில்லை.

    நீங்கள்
    எங்களுக்கு
    நீங்கள் தோன்றும்
    காட்சிகளை மட்டும் காட்டவில்லை.

    வாழ்க்கையைக்
    காட்டியிருக்கிறீர்கள்.

    காசோ.. வார்த்தையோ..
    அள்ளி விடுவதல்ல அழகு..
    அவசியத்துக்கு உபயோகிப்பதே
    அழகென்று காட்டியிருக்கிறீர்கள்.

    என்னத்தையாவது பேசி
    அரசியலில் ஜெயிக்கக் கூடாது..
    எண்ணத்தின் தூய்மையே
    அரசியலென்று காட்டியிருக்கிறீர்கள்.

    "முன்னே போகிறேன்.. பின்னே வா.."
    என்று கடந்து போகாமல்
    எங்கள் முன்னோடியாய்
    நடந்து காட்டியிருக்கிறீர்கள்.

    பலத்த காற்றுக்கு விரிகிற
    புத்தகப் பக்கம் போல
    எளிமையாய்.. யதார்த்தமாய்
    நல்ல மனசு காட்டியிருக்கிறீர்கள்.

    உங்கள் ரசிகர்கள் அனைவருமே
    நடிப்புத் தொழில் செய்கிறவர்கள் அல்ல..
    ஆனால்...
    அவரவர் தொழிலில்
    உங்களைப் போலவே
    உண்மையான ஈடுபாட்டுடனிருக்க
    வழி காட்டியிருக்கிறீர்கள்.

    இதோ...
    நீர் தளும்பும்
    எங்கள் விழிகளுக்கு நேரே
    உங்கள் திருவுருவப் படம் இருக்கிறது.

    உண்மையை மட்டுமே
    பேசத் தெரிந்த
    உங்கள் உதடுகளிரண்டும்
    சிரிக்கிறது.

    விழி மூடிக் கரம் குவிக்கிறோம்.

    உளமார உறுதி ஏற்கிறோம்.

    உங்கள் வழியில் செல்வோமென்றும்,
    உங்களைப் போலவே வெல்வோமென்றும்
    உறுதி ஏற்கிறோம்!

    அடிதடி, வன்முறை
    மறுப்போமென்றும்,
    அறவழி வெல்லும் வரை
    பொறுப்போமென்றும்
    உறுதி ஏற்கிறோம்!

    எங்கள் கண்களுக்கெட்டிய
    தலைமுறை வரைக்கும்
    உங்களைக் கொண்டு சேர்க்கப்
    பாடுபடுவோம் என்று
    உறுதி ஏற்கிறோம்!

    நீங்கள் காட்டிய நல்வழியில்
    நடப்போருக்கு
    செருப்பாயிருப்போமென்றும்,
    உங்களைத் தவிர்ப்போருக்கும்,
    பழிப்போருக்கும்
    நெருப்பாயிருப்போமென்றும்
    உறுதி ஏற்கிறோம்!

    தேசத்தின் பசியமர்த்தும்
    சத்திய உணவுகள்
    சமைப்போமென்றும்,
    சீரும், சிறப்புமாய்
    இங்கே
    சிவாஜி தேசம்
    அமைப்போமென்றும்
    உறுதி ஏற்கிறோம்!

  11. #700
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri

    நடிகர் திலகத்துக்கு அஞ்சலி. சென்னை வானொலியில்,நடிகர் திலகத்தின் கலந்துரையாடல்.







    Sivaji Ganesan - Rainbow FM 15-08-14
    Nadigar Thilagam's interview in radio and television (audio track seperated) compiled
    youtube.com
    Last edited by sivaa; 21st July 2017 at 09:47 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •