Page 291 of 400 FirstFirst ... 191241281289290291292293301341391 ... LastLast
Results 2,901 to 2,910 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2901
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2902
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2903
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இது ஒரு மீள் பதிவு... வேறு ஒரு தளத்தில் சென்ற ஆண்டு ஐயன் நினைவு நாளில் சற்று கோபத்துடன் நான் இட்ட பதிவு... இன்றைய சினிமா,, அன்றைய சினிமா ,,, அடடா எவ்வளவு வேறுபாடுகள்,,, மாறுபாடுகள்,,, நான் அன்றைய சினிமா என்று குறிப்பிட விரும்புவது சிவாஜி சினிமாக்களை,,, மற்றவர்கள் சினிமாவும் அதில் கலந்து இருந்தாலும் சிவாஜி சினிமாக்களே தலைவாழை இலைபோட்டு 16 வகை காய்கறிகளோடு அறுசுவை விருந்தளித்தது.,,, அன்றைய சினிமாவில் கூட்டு பொரியல் அவியல் துவையல் வேண்டுமானால் மற்ற நடிகர்களாக இருக்கலாம், மெய்ன் மீல்ஸ் அதற்குரிய சாம்பார், ரசம, புளிக்குழம்பு, மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு, வடை பாயாசம் அப்பளம், ஊறுகாய், தயிர், மண்ணச்ச நல்லூர் பொன்னி ரைஸ் என்று வெரைட்டியாக இருக்கும் மீல்ஸ் சிவாஜி டிஷ்,,, அதாவது சிவாஜி சினிமாக்கள்,,, ஸோ அற்றை நாளில் இந்த ஒற்றை மனிதன் சினிமாக்களை அன்றைய சினிமா என்ற கணக்கீட்டில் கொண்டு வருகிறேன்,,, இன்றைய சினிமாவில் என்ன என்ன இருக்கிறது? சொல்வதற்கு நிறைய இருக்கிறது,,, காட்சிக்கு காட்சி வன்முறை,,, யதார்த்தம் என்ற பெயரில் வாயோடு வாய் வைத்து அழுத்தும் முத்தக் காட்சிகள், யதார்த்தம் என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக காட்டுதல், நகைச்சுவை என்ற பெயரில் நேரடி ஆபாச வசனங்கள்,,, டூயட் என்ற பெயரில் கதாநாயகியை வன்புணர்வு செய்வது போல பாடல்கள், ரத்தம் ஒழுக ஒழுக வன்முறை காட்சிகள்,,, பிஞ்சுகள் வெம்பிப் பழுப்பது போன்ற பதின்பருவத்து காதல் காட்சிகள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,,, சமுதாயத்தில் இவையெல்லாம் இல்லையா என்று கேட்டால் இருக்கிறதுதான் அற்காக அதை அப்படியே காட்சிப்படுத்த வேண்டுமா? யதார்த்தம் என்ற பெயரில அதை அப்படியே காட்ட வேண்டுமா? சினிமா என்பது கொஞ்சம் ரியலிசத்தை கடந்து வந்திருக்க வேண்டும்,,, அது நடைமுறை வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் மறைபொருளாக இருக்க வேண்டும் என்பது சிவாஜி பட கணக்குகள்,,, இன்றைய கால சினிமாவில் இத்தனை அலங்கோலங்களையும் 95% படங்களில் நிரப்பி விட்டு மீதமுள்ள 5% "மெஸேஜ்" என்ற பெயரில் கருத்து கூறிவிட்டு செல்வது நகைப்புக்குரியதாக எனக்கு தென்படுகிறது,,, ஜனங்களை கவர்ந்திழுக்க மெனக்கெட்டு பாடல்காட்சிகளுக்கு கூட வெளிநாடுகளில் படம் பிடிப்பது இன்னொறு கேலிக் கூத்து,,, கதைக்கு பொருத்தமில்லாத வெளிநாட்டு லொகேஷன்களை காண்பிப்பது யதார்த்த சினிமாவை மீறிய செயலாக தெரியவில்லையா? நல்ல நல்ல விஷயங்களை சொல்வதற்காக கொஞ்சம் யாதார்த்தங்களை மீறுகிற சிவாஜி சினிமாக்களை குறைசொல்ல இன்றைய சினிமா ரசனையாளர்கள் விமர்சன வியாதிகயஸ்தர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது,, தேவையற்ற பிரமாண்டம் பொருத்தமற்ற வெளிநாட்டு படப்பிடிப்புகள் சினிமா தயாரிப்பு பட்ஜெட்டை கடுமையாக உயர்த்தவில்லையா அதையெல்லாம் பார்வையாளர்கள தலையில் கட்டி மும்மடங்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட வில்லையா? பார்வையாளர்கள் கைவிட்ட படங்கள் வசூலில் மரண அடி வாங்குவதில்லையா? இதில் மீள இயலாத தயாரிப்பாளர்கள் வநியோகஸ்தர்கள் மீளாத உலகத்திற்கு செல்லவில்லையா? இதுதான் இன்றைய சினிமாக்களில் லட்சணம்,, அதாவது அவலட்சணம்,,, அனறைய கால சினிமாவில் நஷ்டத்தின் காரணம் கொண்டு எந்த பட முதலாளி வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருக்கிறார்கள்? ஸ்பெஷலாக சிவாஜி சினிமாக்களை உருவாக்கிய பட முதலாளிகள் யார் தற்கொலை செய்து இருக்கிறார்கள்,,,அப்படியே நஷ்டக் கணக்கு சொன்னாலும் அதை அடுத்த படங்களில் சரி செய்த பெருந்தன்மை சிவாஜிக்கு இருந்தது,,, அதை தொடர்ந்து ஜெய்சங்கர் போன்ற சில சில நடிகர்கள் சிவாஜியை பின்பற்றி நடந்தார்களே,
    அன்றைய சிவாஜி சினிமாக்களில் கதைக்கும் காட்சி அமைப்புகளுக்கும் தேவைப்படும் இடங்களில் மட்டுமே பிரமாண்டம் இருந்தது,,, மஹா பாரதத்தில் கர்ணனை ஹீரோவாக பரிநாமம் செய்யப்பட்டது, அதற்கு காட்சி அமைப்புகள் யானை,குதிரை, காலாட்படை போன்ற திரைக்கதைக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது, சோழர் வரலாறு கூறும் ராஜ ராஜ சோழனுக்கு பிரமாண்டம் தேவைப்பட்டது,, சிவபுராணம் கூறிய திருவிளையாடலுக்கு,, சரித்திரம் பேசிய கட்ட பொம்மனுக்கு திரைக்கதையில் பிரமாண்டம் தேவைப்பட்டது,, புதிய பறவை திரைக்கதைக்கு, சிவந்தமண் திரைக்கதைக்கு திரிசூலம் திரைக்கதைக்கு ,,, இப்படி தேவையான படங்களுக்கு மட்டுமே பிரமாண்டம் தேவையாக இருந்தது,,, ஒரு பாசமலருக்கோ, பாவ மன்னிப்புக்கோ, பாலும் பழமும் படத்திறகோ பிரமாண்டம் தேவைப்படவில்லை,,, மாறாக சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடிகக நட்சத்திரப் பட்டாளமதான் தேவைப்பட்டது,,, தில்லானா மோனாம்பாள், தங்கப் பதக்கம், வசந்த மாளிகை போன்ற படங்களுக்கு தேவையான பிரம்மாண்டமும் நல்ல துணை நடிகர்களும்தான் தேவைப் பட்டது,, மொத்தத்தில் சிவாஜி நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு நல்ல கதை தேவைப்பட்டது,, கூர்மையான வசனங்கள், இனிமையான பாடல்கள், கருப்பு வெள்ளையோ கலரிலோ நேர்த்தியான ஒளிப்பதிவு தேவைப்பட்டது,,, தேவையற்ற பிரமாண்டம் அருவருப்பான காட்சி அமைப்புகள்,,, கொடூரமான கற்ப்பழிப்பு காட்சிகள் தேவைப் படவில்லை,,, யதார்த்தம் சிறிதளவு மீறப்பட்டு இருந்தால்த்தான் அது சினிமா,,, யதார்த்தத்தை மீறி நடிப்பதுதான் சினிமா நடிப்பு,,,
    உதாரணமாக பல சினிமாக்ளை குறிப்பிடலாம்,,, ராமன் எத்தனை ராமனடி படத்தில் வீர சிவாஜியை கண்முன் கொண்டு வந்த நடிப்பு,,, அதிக பட்ச நடிப்புதான்,,, யதார்த்தமாக நடிக்க வேண்டும் என்றால் வசனங்கள் மராத்தி மொழியில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்,,, வீர சிவாஜி தமிழில்தானே முழங்கினார்? வீரபாண்டிய கட்ட பொம்மன் தெலுக்கில் வீர வசனம பேசவில்லை,, யதார்த்தத்தை தாண்டி தமிழ் வசனம் பேசினார்,,, சிவன் பிரம்மா விஷ்ணு நாரதர் முதற் கொண்டு தமிழில்தானே பேசினார்,,, பாவை விளக்கு படத்தில் ஷாஜஹான் தமிழில்தானே பாட்டு பாடினார்,,, அவர் ஏசுவாக நடித்திருப்பாரே ஆனால் அவரும் தமிழில்தான் பேசி நடித்து இருப்பார்,,, சாணக்ய சந்திர குப்தாவில் அலெக்ஸாண்டர் தெலுங்கில்தானே பேசினார்,, யதார்த்த சினிமாவை தாண்டியதால் தான் இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்தது,,, இந்த விஷயங்களில் யதார்த்த சினிமாவாக எடுத்தால் அது மண்ணாங்கட்டி சினிமாவாகத்தான் போயிருக்கும,,,,, சிவாஜிக்கு யதார்த்த நடிப்பு வராது போலிருக்கு,,, என்று கூவார்கள் சில குக்கர்கள்,,, முதல் மரியாதையையும் தேவர் மகனையும் சொன்னால் அது தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி என்று கூவுவார்கள்,,, ஏன் கப்பலோட்டிய தமிழன் இல்லையா? இனறைக்கு சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த சிவாஜி சினிமா? சிவாஜி முதற்கொண்டு எல்லோருமே யாதார்த்த நடிப்பில் நடித்தார்களே? எஸ் வி சுப்பைய்யா கொஞ்சம் ஓவர் ஆக்ட்டுங்க என்றது ஒரு குக்கர்,,, கோபக்கார கவிஞன் பாரதி என்ன லேசுப்பட்டவனா? கொந்தளிக்கும் கடலானவன்,, குமுறும் எரிமயைானவன்,, அவன் வேஷத்தை போட்டுக்கொண்டு நந்தனார் போல நடிக்கச் சொல்கிறார்களா? யாதார்த்த சினிமாவை அப்போதே பரிஷித்து பார்த்தவர்தான் எங்கள் சிவாஜி,,, உயிரைக் கொடுத்து நடித்தார்,,, என்ன குறை கண்டார்கள் அந்த படத்தில்? போங்கைய்யா நீங்களும் உங்கள் யதார்த்த சினிமாவும்,,, வ வு சி யாக அவர் தன் பாணியில் நடித்திருப்பாரே ஆனால் அந்தப் பட முதலாளி இன்னும் பல அந்தக்கால லட்சங்களை சம்பாதித்து இருப்பார்,,, இன்றைய சினிமா அறிவாளிகள் கேள்வி ஒன்று என்னை தைத்தது,, சிவாஜி சிவாஜி என்று ஓவர் பில்ட்அப் கொடுக்கறீங்களே என்ன மெஸேஜ் சொல்லிட்டார் உங்கள் சிவாஜி என்றார்,,, திருக்குறள் 133 அதிகாரத்தில் 1330 குறள்களை சொன்ன உலகப் பொதுமறை,,, அந்த 1330 குறள்களுமே மனித வாழ்க்கைக்கு தேவையான "மெஸேஜ் ஐ கொடுப்பன,,, எந்தக்குறளை வேண்டுமானாலும் மேற்கோள் காட்டுங்கள் அந்தக் குறளை ஒத்த வடிவத்தில் அவர் படத்தில் கருத்து இருக்கும்,,, அல்லது காட்சி அமைப்பு இருக்கும்,,, அல்லது வசனம் இருக்கும் அல்லது பாடல் இருக்கும் ,, இப்படி வள்ளுவரையே தனதாக்கி தன் படங்களில் பயன்படுத்திக் கொண்டவர்,,, குறளை மட்டுமா அவர் பயன்படுத்தினார் முக்கிய இதிகாசஙகளான இராமாயணம், மஹா பாரதம், பகவத் கீதை, குர் ஆன், பைபிள் என்று அத்தனை புத்தகங்களில் இருந்தும் நன்நெறிகளை தன் படத்தில் ஏதோ ஒரு வகையில் "டை அப்" செய்திருப்பார்,, அதுமட்டுமா, ஒளவையார் முதற்கொண்டு வள்ளலார் வரை,,, விவேகானந்தர் முதற்கொண்டு கனியன் பூங்குன்றனார் வரை அத்தனை பேர்களின் நன்னெறி கருத்துகள் மட்டுமின்றி சமணம் பௌத்தம் போன்றவற்றிலிருந்தும் தேவையான மெஸேஜ் சொல்லி இருப்பார்,, ஸோ சிவாஜி சினிமாக்கள் ஆராய்ச்சி மாணவர்களின் சரணாலயம்,,, அவர் ஏற்று வாழ்ந்த கதாபாத்திரங்ள் ஒவ்வொன்றும் அந்த மாணவர்களின் அறிவுப் பசிக்கு உணவளிக்கும் அட்சய பாத்திரங்கள்,,, சிவாஜி சினிமாக்களில் இருந்ததெல்லாம் நாட்டுக்கும் மனித இனத்திற்கும் சொல்லப்பட்ட கருத்துகள்,,, அந்தக்கால பட முதலாளிகள் பணமூட்டைகளை மட்டுமே நம்பி சிவாஜி சினிமா களத்துக்குள் வரவில்லை,, அவரது நல்ல கருத்துகளை உள்வாங்கி சினிமா மூலம் மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தான்,,, இன்றைய தயாரிப்பாளர்கள் பணம் மூட்டைகளை சுமக்க விரும்புபவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் அதற்காக எந்த ஹீரோ முதுகுக்கும் சோப்பு போட சொறிந்துவிட தயாராக இருப்பவர்கள்,,, அதனால்தான் அவர்களை "பட முதலாளிகள்" என்றும் இவர்களை "தயாரிப்பாளர்கள்" என்றும் குறிப்பிட்டு வருகிறேன்,, சினிமா பொழுது போக்கு சாதனம்தான்,,, மாற்றுக் கருத்து இல்லை,,, பொழுதை எப்படி போக்க வேண்டும் என்பதிலேயே நிறைய மாற்றுக் கருத்துகள் உண்டு,, இன்று சிவாஜி என்ற டிக்ஷ்னரியை புரட்டிப் பார்த்தேன்,,, அருஞ்சொற்பொருள் பொதிந்த அந்த கலைமகனை அவரது நினைவுநாளில் நானும் என் பங்கிற்கு பதிவிட்டேன்,,,



    courtesy jahir hussain f b
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2904
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஊறுகாய் போல தொட்டுக் கொள்ளப்பட்ட நகைச்சுவை நடிகர்களுக்கும் அவர்கள் திறமைகளுக்கேற்ப கதாபாத்திரங்களை தன் சினிமாக்களில் வழங்கிய பெருமகன் நடிகர் திலகம்.... சந்திரபாபு ஒரு திறமையான நகைச்சுவை நடிகர்... சபாஷ் மீனா படத்தில் தனக்கு நிகரான கதாபாத்திரம் கொடுத்து அவரது திறமைக்கு மணி மகுடம் சூட்டினார்... மற்றவர் திரைப்படங்களில் அவர் வெறும் கோமாளிதான்... தங்கவேலு.. தன்னை மட்டம்தட்ட முயற்சித்த நடிகர்... ஆனால் அவரது திறமைக்கு மதிப்பளித்து கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி என்று திரையுலகில்... அவர் ஒரு ரவுண்டு வர ஏதுவாக கதாபாத்திரங்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் நடிகர் திலகம்.... டி.எஸ். பாலையா... பாவமன்னிப்பு, ஊட்டி வரை உறவு, தில்லானா மோனாம்பாள் போன்ற படங்களில் வெளுத்துக்கட்ட ஏதுவாக கதாபாத்திரங்களை கொடுக்க வழிவகை செய்தவர் நடிகர் திலகம்... எம்.ஜி.ஆர். சினிமாக்களில் ஆஸ்தான கோமாளி என்றழைக்கப்பட்ட தேங்காய் சீனிவாசனுக்கு படிக்காத பண்ணையார் என்ற படத்தில் நச் என்று ஒரு கதாபாத்திரம் கொடுத்தாரே மறக்கவியலுமா?
    பார் மகளே பார்... படத்தில் அறிமுகம்... தங்கப்பதக்கத்தில் முழுதாக விளையாட விட்டிருப்பார் சோ அவர்களை... எம்.ஜி.ஆர். படங்களில் எல்லாமே அவருக்கு துண்டு துக்கடா ரோல்கள்தான்... மனோரமா... ஜில் ஜில் ரமாமணியாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் பட்டையை கிளப்பியதை உலகறியும்... இன்னும் எத்தனையோ நல்ல நல்ல நகைச்சுவை நடிகர்கள்..
    கலைவாணர் என்.எஸ்.கே, டி.ஆர்.ராமச்சந்திரன், முதற்கொண்டு ஏ. கருணாநிதி, வெண்ணிற ஆடை மூர்த்தி வரை சொல்லிக் கொண்டே போகலாம்.. காகா ராதாகிருஷ்ணனை தேவர் மகனில் பயன்படுத்திய விதம்... எக்ஸலண்ட்... அந்தப் படத்தில் நினைவில் நின்ற கதாபாத்திரம் செய்த வடிவேலுவையும் இந்த லிஸ்ட்டில் இணைத்துக் கொள்ளலாம்... சிவாஜி சினிமாக்களில் ஆஸ்தான கலைஞர்களான வி.கே.ஆர்... எம்.ஆர்.ஆர். வாசு போன்றவர்களுக்கு பாரதவிலாஸ் போன்ற படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களை தந்தவர் நம்மவர் அன்றோ.. முத்தாய்ப்பாக நாகேஷ்... சிவாஜி சினிமாக்களில்... தருமி, வைத்தி, சின்னப்பண்ணை, ரஸாக் பாய்... போன்ற கதாபாத்திரங்களை எவ்வளவு இயல்பாக நடிக்கச் செய்ய ப்ளாட்ஃபார்ம் அமைத்துக் கொடுத்தார்... தன்னுடைய படங்களில் வலுவான கதாபாத்திரங்களை உருவாக்கும் திரைக்கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்... அந்த குணச்சித்திர நடிகர்களின் பட்டியல் இதைவிட நீளமானது... நகைச்சுவை கலைஞர்களையும் மதித்து அவர்களுடைய குணச்சித்திர நடப்புகளையும் உயிரோட்டமாக வைத்திருந்து தன்னுடைய சினிமாக்களில் தான் அணிந்த கதாபாத்திரங்களை இன்னும் கூர்மையாக்கிக் கொண்டவர் நடிகர் திலகம்... ஒரே ஒரு விஷயம்தான் எதத்தனை திறமைசாலிகளும்.தனக்குள்ளே அடக்கம் என்கிற தன்னம்பிக்கை உள்ளதால்தானே அவர்களது வாய்ப்புகளை பிரகாசிக்கச் செய்கிறார்... எந்தக்காலத்திலும் யாராலும் இதுபோல் செய்ய மாட்டார்கள் "அண்ணல் சிவாஜி"யை தவிர... (புகைப்படம் உதவி... திரு. நாகராஜன அவர்கள்.)
    See more



    courtesy j. hussain fb
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2905
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2906
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2907
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2908
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2909
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2910
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •