Page 29 of 400 FirstFirst ... 1927282930313979129 ... LastLast
Results 281 to 290 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #281
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Sundar Rajan added 2 new photos. · 18 mins ·


    அன்பு சிவாஜிவாதிகளே,
    ஞாபகம் இருக்கிறதா?
    நமது மக்கள்தலைவரின் படங்கள் ரிலீசாகும் நாளன்று முதல் காட்சி பார்க்க ரசிகர் மன்ற டோக்கன் வாங்க ஒரு வார காலமாக அலைந்து 10... டிக்கெட் கேட்டால் 3 டிக்கெட் தான் கொடுக்க முடியும் என்று சொல்வார்கள். சண்டை போட்டு 5 டோக்கன் வாங்கி முதல் காட்சி பார்ப்போம்.
    பல வருடங்களுக்கு பிறகு சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது.
    தற்போது மதுரை மீனாட்சிபாரடைஸ் திரையரங்கில் நாளை 18.06.2017 ஞாயிறு மாலைக் காட்சிக்கு, ரசிகர்களுக்கு சிறப்பு அனுமதி டோக்கன் வழங்கப்படுகிறது.
    இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் அனைத்து டோக்கன்களும் விற்று விட்டன.
    எனவே, இப்பொழுதே சொல்வோம். நாளை மாலை மீனாட்சிபாரடைஸ் திரையரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை ஹவுஸ்ஃபுல்.
    44 வருடங்களுக்கு பிறகு வெளியாகி சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும் மக்கள்தலைவர் சிவாஜி ரசிகர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #282
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Radhakrishnan Saijayaraman




    தந்தையர் தினம்.. ஒவ்வொரு ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிரு தந்தையர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த பதிவில் நமது நடிகர் திலகம் தந்தையாக எப்படி வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்று பாப்போம்.
    முதலில் மோட்டார் சுந்தரம்பிள்ளை .இதில் கண்ணியம் என்ன என்பதை உருவகப்படுத்தி இருப்பார். ஜெயலலிதாவிற்கு தந்தையாக நடித்திருப்பார். எனக்கு தெரிந்து ஜெயலலிதா மட்டும்தான் நமது திலகத்திற்கு அம்மாவாக , ஜோடியாக , மகளாக நடித்துள்ளார் என்று நினைகிறேன்.
    பார் மகளே பார் தந்தை . கம்பீரம் கர்வம் இரண்டையும் கலந்து... படம் முழுதும் ஒரு ராஜாங்கமே நடத்தி இருப்பார்.
    தெய்வ மகன் தந்தை பாசத்தை உள்ளடக்கி பரிதவிக்கும் பணக்கார தந்தையாக பட்டையை கிளப்பி இருப்பார்.
    தேவர் மகன் தந்தை . மிடுக்குடன் ராஜநடை நடந்து வரும் காட்சியில் கிராமத்து பெரியவரையே கண் முன் நிறுத்தும் அந்த அற்புத நடிப்பு இன்னொருவருக்கு சாத்தியமா. கமலுடன் பேசும் அந்த கட்சி மறக்க முடியுமா.
    நான் குறிப்பிட்டுள்ளது வெவேறு தன்மையுள்ள தந்தை பாத்திரங்களில் சில மட்டுமே . நண்பர்கள் தாங்கள் ரசித்த நமது திலகம் தந்தை வேடத்தில் நடித்த படங்களை பதிவு செய்யுங்கள.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #283
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Soundharya Padmavathi Soundharya Padmavathi


    பார்த்தால் பசி தீரும்,
    பாபு,
    எங்க மாமா

    உண்மையான தந்தையை விட, தன் வாழ்க்கையையே தியாகம் செய்யுமளவு தந்தையின் பொறுப்புகளை ஏற்று நடத்தும் தன்மை. ஆஹா.... பிள்ளைக்குத் தந்தை ஒருவன், இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, செல்லக் கிளிகளாம் .... உண்மையான தந்தையால் கூட அந்தளவு பாசத்தைக் காண்பிக்க முடியுமெனத் தோன்றவில்லை. அற்புதம்.
    ஆண்டாளின் தந்தையாக அமர்க்களமாக இருப்பார்.
    இரு மலர்கள்,( ஒரு மகராஜா, ஒரு மகராணி) உத்தமன் (நாளை நாளை என்றிருந்தேன்) உயர்ந்த மனிதன் (சிவகுமாரைக் காப்பாற்ற தீக்குள் குதிக்கும் பாசம்), அந்தமான் காதலி, நவராத்திரியில் சித்தப்பாவாக, முதல் மரியாதையில் மனைவியின் மகளுக்குத் தந்தையாக, துணை படத்தில் சரிதாவுக்குத் தந்தையாக, அன்புள்ள அப்பா, பந்தம், (தாத்தாதான் best. ஆனாலும் அப்பான்னு வச்சுக்குவோமே ப்ளீஸ்!!!) திருவிளையாடல் உலகத்திற்கே தந்தையான ஈசனாக..... ஆகா..... தலைவர் வாழ்க.




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #284
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #285
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    இப்படத்தில் இருக்கும் நண்பர் பெயர் D Ethirajulu
    70 வதுகளில் இவருடன் பேனா தொடர்பில் இருந்தேன்
    மிகச்சிறந்த சிவாஜி ரசிகர்
    காலப்போக்கில் தொடர்பு அற்றுப்போய்விட்டது
    தற்பொழுது எனது தொடர்பில் உள்ள பல நண்பர்களையும்
    விசாரித்துப்பார்த்தேன் ஆனால் ஒருவருக்கும் தெரியவில்லை
    இத்திரியை பார்க்கும் யாராவது உறவுகளுக்கு இன்நண்பரை
    தெரிந்திருந்தால் தயவு செய்து தகவல் தாருங்கள் நன்றி.


    Last edited by sivaa; 18th June 2017 at 05:35 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #286
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Jahir Hussain

    · 46 mins





    சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம்,,, சிவாஜி சினிமாக்கள் அதையும் கடந்த பல சிறப்புகள் பெற்றுள்ளன,,, வெறும் பொழுது போக்குடன் நின்று விடாமல் அவர் படங்களில் மக்களுக்காக சொல்லப்பட்ட "மெஸேஜ்" முக்கியத்துவம் மிக்கது,,, சில படங்களில் அவரது தேசிய பங்களிப்பு இருக்கலாம், குடும்ப உறவுகள் இருக்கலாம் தெய்வீக சிந்தனைகள் இருக்கலாம், பெண்கள் விழிப்புணர்வு இருக்கலாம், கல்வியறிவு சம்பந்தமாக இருக்கலாம் இயல் இசை நாடகம் சம்பந்தப்பட்ட நுணுக்கமாக இருக்கலாம் சமுதாய விழிப்புணர்வு கருத்துகள் இருக்கலாம்,,, இப்படி பல கருத்துகளை எடுத்து கொண்டு கதைக்களமாக்கி பார்வையாளர்களுக்கு உபயோகம் மிக்க நடிகராக ஒருவர் வாழ்ந்து மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் அண்ணல் சிவாஜி ஒருவர்தான்,, ஒரு ரசிகனாக சராசரி மனிதனாக அவருடைய அக, புற திரை வாழ்வில் நான் கற்றுக் கொண்ட விஷயங்களை பதிவிடுகிறேன்,,,,
    நான் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவன்,,, எனக்கு நான் சார்ந்த சமுதாயத்தின் பழக்கவழக்கங்கள் நன்றாக தெரியும்,,, அது இயல்பு,, ஆனால் எனது சகோதர சமயங்களான ஹிந்து கிருத்தவ மற்றும் சாதிய மக்களின் பழக்கவழக்கங்கள் மிக நன்றாக தெரியும்... எப்படி? கற்றுக் கொடுத்தது சிவாஜி சினிமாக்கள்,,, வியட்நாம் வீடு என்ற படம் ஒரு பிராமண சமுதாய பழக்கவழக்கங்களை கற்றுத்தந்தது,, தேவர் மகன் படம் தேவர் சமுதாயத்தையும் கல்தூண் கவுண்டர் சமுதாயததையும் இன்னும் பல படங்கள் பற்பல சமுதாய மக்களின் பழக்கவழக்கங்கள் நன்னெறிகளை கற்றுக் கொடுத்திருக்கிறது,, ஒரு ஞான ஒளி கிறித்துவமத சம்பிரதாயங்களையும் நன்நெறிகளையும் புட்டுப்புட்டு வைக்கவில்லையா? ஸோ மத சாதி சமய நல்லிணக்கத்தை தனது திரைப்படங்களில் போதித்த மஹான் அல்லவா அவர்,,,
    நேற்று நம் முகநூல் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்,, சில விஷயங்கள் கூறினார்.. ஆச்சர்யமும் சந்தோஷமும் ஏற்பட்டது எனக்கு,,, சந்தனக் கடத்தல் வீரப்பன் ஒரு சிவாஜி ரசிகர்,,, வீரப்பனை சுட்டுக் கொன்ற காவலதிகாரி விஜயகுமாரும் ஒரு சிவாஜி ரசிகர்,, வேலுப்பிள்ளை பிரபாகரனும் சிவாஜி ரசிகர் சந்திரிகா ரணதுங்கேவும் சிவாஜி ரசிகர்,,, அழகிரியும் சிவாஜி ரசிகர் வைகோவும் சிவாஜி ரசிகர்,,, கி வீரமணியும் சிவாஜி ரசிகர் ராம கோபாலனும் சிவாஜி ரசிகர்,,, கமல் ரஜினி இருவருமே சிவாஜி ரசிகர்,,, இப்படி அரசியல் சினிமா என்று இருவேறு துருவங்களில் இருப்பவர்கள் அனைவருமே சிவாஜி என்ற ஒற்றைப் புள்ளியில் இணையத்தானே செய்கிறார்கள்,, அப்படி இருக்கும்போது சிவாஜி நெட்வொர்க்கில் இணைந்துள்ள நாம் எல்லோரும் எந்த அளவு சிவாஜிவாதிகளாக இருக்க வேண்டும்,, மரணம் தழுவி பின் மரணத்தை கடந்த மாமனிதன் அவர் இன்று ஒரு உலகப் பொதுமறையாக அல்லவா இருக்கிறார்,,,,
    குடும்ப உறவுகளை போற்றி வளர்த்ததில் அவருக்கு நிகர் யாருமில்லை,,, தங்கைக்கு நல்ல அண்ணனாக, தாய்தந்தைக்கு அடங்கிய பிள்ளையாக,,, அண்ணனுக்கு பிரியமான இளவலாக, மனைவிக்கு மிகச்சிறந்த கணவராக,,, நண்பனுக்கு உயிர் தோழனாக எத்தனையெத்தனை குடும்ப உறவுகளை படமாக பாடமாக நமக்கு கற்றுக் கொடுத்து இருக்கிறார்
    நாட்டுக்குழைத்த நல்லவர்கள் சுதந்திர போராளிகள் மானுடம் தந்த மாமனிதர்கள் இப்படி எத்தனைவிதமான மனிதர்களின் வேடம் பூண்டு அவர்கள் வாழ்க்கையை தேசத்திற்கு அவர்களது பங்களிப்பை நாம் மறக்கவியலாத அளவிற்கு நம் மனதில் பதிவிட்டது யார்? இவரன்றி இத்தனை உபஹாரங்களையும் நமக்கு யார் செய்திருக்கப் போகிறார்கள்,,, புராண கடவுள்கள் இதிகாச கதாநாயகர்கள் இப்படி எத்தனையோ பாத்திரங்களை நமக்கு ஏன் அவர் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும்? நமக்காக நாம் அவரை நேசிப்பதைவிட கூடுதலாக நம்மை அவர் நேசித்ததால் தானே,,, நாடு போற்றும், உலகம் வியக்கும் இதுபோன்ற நாயகன் ஒருவரை இன்னொரு முறை இறைவன் தரமாட்டான்,,, தரவே மாட்டான்,,, ஏன்? கிடைத்தற்கரிய ஐஷ்வர்யத்தை நாம் எப்படி பாதுகாத்தோம்? எத்தனை வழிகளில் அவமதித்தோம்? சொல்லி மாளாது,,,,
    இனியாவது அவர் நமக்கு உரைத்த நன்னெறிகளை பின் தொடர்வோம்,,, எளியோர்க்கு இரங்குங்கள்,,, வறியோர்க்கு உதவுங்கள்,,, இளையோர்க்கு அறிவு கொடுங்கள் முதியோர்க்கு மரியாதை செய்யுங்கள்,,, குடும்ப உறவுகளை கண்ணியப்படுத்துங்கள்,,, தீமைகளை விட்டு விலகி நில்லுங்கள்,,, நண்பர்களை போற்றுங்கள்,,, பகையை பகைத்து ஒழியுங்கள்,,, தேசத்தை நேசம் கொள்ளுங்கள்,, சமூக அக்கறை, மனித நல்லிணக்கம், போன்ற நல்விதைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுங்கள்,,, இதுபோன்ற பற்பல சமுதாய நற்கருத்துகளை திரைப்படம் என்ற ஒரு சாதனத்தின் வழியே பற்பல கதைகளின் மூலம் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு சொல்லிச் சென்றிருக்கிறார்,, இந்தக் காலத்தில் நம் பிள்ளைகளுக்கு இதுபோன்ற ஒரு பொதுமனிதன் யார் சொல்லித்தரப் போகிறார்,, நான் மிகைப்படுத்தி அவரை புகழவில்லை பசும் பொன்னை உறைத்து உறைத்து ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன்,, வாழ்க வாழ்க,,,


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #287
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #288
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Soundharya Padmavathi Soundharya Padmavathi

    · 1 hr

    திரு. K G Jawarlal அவர்களின் பதிவு.
    சிவாஜி கணேசன் நடிப்பதில் மட்டும் அல்ல, நடப்பதிலும் மன்னர்.
    இது சம்பந்தமான ஒரு சம்பவம் நேற்று ஞாபகம் வந்தது.
    ... யூடியூபில் திருவருட் செல்வர் படத்து ‘மன்னவன் வந்தானடி’ பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன் தொடக்கத்தில் ஒவ்வொன்றாக ஏழு திரைகள் திறந்து கடைசியில் சிவாஜி வருவார்.
    மன்னவன் வந்தானடி தோழி …. என்று பாடி சுசீலா நிறுத்தியதும் தகதிமி தகஜூண என்று ஒரு ஆவர்த்தனம் மிருதங்கம் வரும். அந்த எட்டு அட்சரங்களில் எட்டு ஸ்டெப் நடப்பார் சிவாஜி.
    தியேட்டரில் கைதட்டலும் விசிலும் திமிலோகப்படும்.
    முகமது சுல்தான் என்று தஞ்சை மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற (சிகர மன்றம்!)தலைவர் தன் த்வஜ கஜ ரதாதிகளோடு வருவார். இந்த ஒரு ஆவர்த்தன நடை முடிந்ததும் கைதட்டிவிட்டு கூண்டோடு எழுந்து வெளியே போய் மறுபடி டிக்கெட் வாங்கிக் கொண்டு வருவார்கள் எல்லாரும்.
    கொடுத்த காசு அதற்கே சரியாப் போச்சாம்!
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #289
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Nagarajan Velliangiri

    ( மடி மீது தலை வைத்து - பகுதி 2 ).


    இப்பாடலைப் பற்றிய என் முந்தைய பதிவுக்கு லைக் களும், கமெண்ட்களும் நிறையக் கொடுத்தும், வேறு குழுக்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டும் என்னை உற்சாகப் படுத்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.

    திலகமும் தேவிகாவும் இணைந்து நடித்த 'அன்னை இல்லம்' படத்தில் வரும் இந்தப் பாடல் ஏன் என் தேர்வு என்பது பற்றிய ஒரு சிறு பதிவு. நடிகர்திலகத்தின் படப் பாடல்கள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. அவை பல்வேறு வகையான உன்னதப் பொக்கிசங்கள்.தத்துவப்பாடல்கள், தெய்வீகப் பாடல்கள்,தேசபக்திப் பாடல்கள், சோகப் பாடல்கள், பாச உறவுப்பாடல்கள், கேலி, கிண்டல் பாடல்கள், போட்டிப் பாடல்கள், கச்சேரிப் பாடல்கள் மற்றும் காதல் பாடல்கள் என்று ஏகப்பட்ட வெரைட்டி உண்டு..

    தத்துவப்பாடல்கள்,தெய்வீகப்பாடல்கள், தேசபக்திப் பாடல்கள் பற்றி எழுதும் அளவு என் உயரம் இல்லை. அதற்கான தகுதி எல்லைக்கு அருகில் கூட என்னால் நெருங்க முடியாது. அதற்கான ஜாம்பவான்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ('இது எங்க ஏரியா உள்ளே வராதே' என்று அவர்கள் சொல்லாமல் சொல்வது கேட்கிறது.)


    சோகப்பாடல்கள் சுகம்தான், ஆனால் திரும்பத் திரும்பக் கேட்டால் மனம் வருந்தும். பாச உறவுப் பாடல்கள் ஒவ்வொன்றும் கண்ணின் மணிகள் , அவற்றில் எதை எடுப்பது எதைக் கோர்ப்பது என்ற குழப்பம்.

    ( Problem of plenty என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்). கேலி கிண்டல் பாடல்கள் அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப எழுதப்பட்டவை, ரசிக்கப்படுபவை ... எல்லா நேரத்திலும் எடுபடும் என்று சொல்ல முடியாது. போட்டிப் பாடல்களும், கச்சேரிப் பாடல்களும் மேலே சொன்ன அதே வகைதான். இனி மீதம் இருப்பது காதல் பாடல்கள் தான். (அப்பாடா....இப்பவே கண்ணைக் கட்டுதே..

    ..'விசய ஞானம் உள்ள பாடல்களைப் பற்றி எழுத எனக்கு ஞானம் போதாது , அந்த அளவு கைவசம் சரக்கும் இல்லை'என்பதை நேரடியாகச் சொல்ல முடியாமல் , எப்படியெல்லாம் சொல்லிச் சமாளிக்க வேண்டி உள்ளது?) காதல் பாடல்கள் பற்றி எழுதுவது லட்டு சாப்பிடுவது மாதிரி இனிப்பான விசயம். யாருக்குத்தான் காதல் பிடிக்காது? வயதான பெரியவர்கள் முதல் யௌவன இளைஞர் இளைஞிகள் வரை அதைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ ? ( சர்க்கரை வியாதியினால் இனிப்பு சாப்பிட முடியாதவர்களையும் காதல் என்றாலே எட்டிக்காய் என்று வெறுப்பவர்களையும் இந்தப் பட்டியலில் இருந்து சற்றே விலக்கி விடலாமா?)

    சரி, நடிகர்திலகத்தின் காதல் பாடல்கள், காவியமான பாடல்கள் பலநூறு இருக்கின்றன. அதில் எதை எடுப்பது எதைத் தொடுப்பது ? அதே மாதிரி அவருடன் இணைந்து நடித்த இணை நடிகையர் ஏராளம்....கிட்டத்தட்ட ஒரு பட்டாளமே இருக்கிறது. அதில் யாருடன் நடித்த பாடல் சிறந்தது என்று சொல்வது? காதலிலும் சைவக்காதல் அசைவக்காதல் என இரு வகை உள்ளது. இதில் சைவமா அசைவமா , எந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது ? அகத்திணை புறத்திணை உட்பட்ட சங்க இலக்கியங்களையும், கம்பன் முதல் காளிதாசன் வரை, சேக்*ஷ்பியர் முதல் ஷெல்லி வரை கரைத்துக் குடித்த கவிஞர்கள் ஏராளம். இவர்களில் யார் எழுதியதை எடுத்துக் கொண்டு எழுதுவது ? (அப்பாடா...இப்பவே கண்ணைக் கட்டுதே ...முடியலடா சாமி.. காதலைப் பற்றி எழுத ஆரம்பிக்கவே இவ்வளவு கஷ்டங்களா ? அப்போ அது அவ்வளவு ஈசி இல்லையா ? நானாகத்தான் இதில் வான்டனா வந்து மாட்டிக்கிட்டேனா?) சரி. களத்தில் இறங்கியாச்சு...இனிப் புறமுதுகு காட்ட முடியாது......வாள் வீசத் தெரியா விட்டாலும் வாய் வீசியாவது சமாளிக்கப் பார்ப்போம்....... பப்பியம்மாவுடன் பாடாத காதல் பாடல்களா...? மன்னிக்க வேண்டுகிறேனும், மாதவிப் பொன்மயிலாலும் இருமலர்கள் அல்லவா? அழகு தெய்வம் மெல்ல மெல்ல..... அது காதலை அக்கு வேறு ஆணி வேராகப் பிரித்துப் பார்க்கும் பேசும் தெய்வம் ஆச்சே?அந்த உத்தம புத்திரன் என்ற முல்லைமலர் மேலே காதல் வண்டுகள் மொய்க்கவில்லையா? விஜயாவுடன் என்றால், ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ? அது சிறந்த செல்வமாச்சே

    .. ஊட்டிவரை உறவு கொண்டது பூ மாலையில் ஓர் மல்லிகை ,அதனால் அது ஹேப்பி இன்று முதல் ஹேப்பி!. ..முத்து ரதங்களில் ஊர்வலம் போகும் ராமன் எத்தனை ராமனடி..? வாணிஸ்ரீ யுடன் வசந்த மாளிகை கட்டிக் கொண்டாடிய மயக்கமென்ன.. மௌனமென்ன.. ? இந்த நூற்றாண்டின் சிறந்த காதல் பாடல் அல்லவா ? இனியவளே என்று சிவகாமியின் செல்வன் பாடி வரவில்லையா...?அலங்காரம் கலையாத சிலையொன்றை அந்த ரோஜாவின் ராஜா காணவில்லையா? லட்சுமிக்குச் தியாகமாகச் சூட்டிய தேன் மல்லிப்பூவே... மற்றெல்லாவற்றையும் விடவும் சிறந்ததோ? நினைவாலே சிலை செய்து அந்தமான் காதலியும், அந்தப்புறத்தில் ஒரு மகராணியுமான சுஜாதாவுக்குத் தீபம் ஏற்றியது உயர்வானதோ....? அவன்தான் மனிதன் எனத் தெரிந்து அன்பு நடமாடும் கலைக்கூடமே...காதல் ராஜ்ஜியம் எனது.... என்று இந்த மன்னவன் வந்தானடி என மஞ்சுளாவிடம் கல்யாண ஆசை வந்த காரணத்தை எங்கள் தங்க ராஜா கூறவில்லையா...? பொட்டு வைத்த முகமோ...என்று சுந்தரியான சுமதியிடம் கூறியதல்லாமல் காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிய அவர் தெய்வ மகனல்லவா...? இரவும் நிலவும் வளரட்டுமே ,

    என்று கூறிய கர்ணன் மகாராஜன் உலகை ஆளுவான் ஆனால் அந்த மகாராணி அவனை ஆளவில்லையா ? சிட்டுக்குருவி முத்தம் கொடுத்துப் புதியபறவையில் உன்னை ஒன்று கேட்கவில்லையா ? அவள் தாளையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடக்கவில்லையா பாகப்பிரிவினையில்? பாலும் பழமும் தந்து நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும் எனக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசவில்லையா? யாருக்கு மாப்பிள்ளை யாரோ உன்னைப் பார்த்தால் பசி தீரும் எனச் சொல்லவில்லையா...? ஆமாம் நண்பர்களே ஆமாம்...இவை அனைத்துமே தித்திக்கும் தேன் பாகாக, தெவிட்டாத தெள்ளமுதான அருமையான காதல் பாடல்கள்தான். இங்கு சொல்லியவை கொஞ்சம்தான். சொல்லாதது இன்னும் ஏராளம் இருக்கின்றன. இவற்றில் ஒன்றை விட மற்றொன்று எது உயர்வு ஏன் உயர்வு என அந்தப் படைப்புக் கடவுளும் ஏன் காமதேவனால் கூடக் கண்டறிவது கடினம்.அவ்வளவு அற்புதமான பாடல்கள் இவை அனைத்துமே. சரி நண்பர்களே , இவ்வளவு அற்புதமான காவியமான நூற்றுக் கணக்கான இனிய பாடல்களை விட, அன்னை இல்லம் படத்தில் வரும் 'மடிமீது தலை வைத்து...' பாடல் அப்படி என்ன உயர்வானது? அவை எல்லாமே மிகவும் அற்புதமானவை, அழகான சொல்லாட்சி மிக்க, ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட, மனம் மயக்கும் இசை கொண்டவை என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை.

    மடிமீது..... பாடலை நான் தேர்வு செய்ததற்கு ஒரே ஒரு சின்னக் காரணம்தான், அப்பாடலில் இருக்கும் உயிரோட்டம். அப்படியென்றால் மற்ற பாடல்கள் எதிலும் உயிரோட்டம் இல்லையா என நீங்கள் கோவிப்பீர்கள் என்று உணர்ந்துதான் சொல்கிறேன். பாடலின் முதல் வரி ஆரம்பிப்பதற்கு முன்னர் கவனித்திருப்பீர்கள், மெல்லிய புல்லாங்குழல் இசையுடன் ஆரம்பிக்கும்.அப்போது திலகத்தின் கண்களில் இருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் உதிரும் , அது தேவிகாவின் கன்னத்தில் விழும், உடனே அவர் சிலிர்ப்பார்.

    ஏன் திலகத்தின் கண்களில் இருந்து கண்ணீர் உதிர்ந்தது? அப்படி அழும் அளவிற்கு என்ன ஆயிற்று? அதுதான் நூற்றுக் கணக்கான மற்ற பாடல்களில் இருந்து இதை வேறுபடுத்துவது. நன்கு கவனித்துப் பார்த்தால் தெரியும். மற்ற பாடல்கள் எல்லாமே சந்தோசத்தில் துவங்கும்.இந்தப் பாடல் மட்டும்தான் கண்ணீருடன் துவங்கும். அது கண்ணீர்த்துளி அல்ல, திலகத்தின் உயிர்த்துளி. அவர்கள் இருவரும் நடிப்பதைப் போன்றே இருக்காது. நிஜமான காதலர்கள் கூட இப்படி இருப்பார்களா என்பது சந்தேகமே. இன்றைய இரவுதான் தங்கள் வாழ்வின் கடைசி இரவு என்பதைப் போல அவ்வளவு உருக்கமாக உருகியிருப்பார்கள்.

    அவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் இப்பாடலில் பலமுறை பார்ப்பதாகக் காட்சி இருக்கும். கூர்ந்து கவனித்துப் பார்த்தால் புரியும் அவை அனைத்துமே குளோசப் சாட் டுகள். அனைத்திலுமே கண்கள்தான் சந்திக்கும். கண்கள்தான் மனதின் கண்ணாடி என்பார்கள். ஒருவன் உண்மை சொல்கிறானா பொய் சொல்கிறானா என்று அவனின் கண்களைப் பார்த்தாலே தெரியும். இங்கு இருவரின் கண்களுமே ஆயிரம் கதை பேசும் அது அப்பட்டமாகத் தெரியும். அவர்கள் இருவரின் உயிருமே கண்களில் தெரியும்.பிரிந்து விடுவோமோ என்ற ஏக்கம் தெரியும். உன்னைத் தவிர இந்த உலகில் எனக்கு வேறு எதுவுமே உயர்வில்லை என்ற எண்ணம் தெரியும். ஒருவருக்காக மற்றவர் உயிர் உருகுவது தெரியும். தேவிகாவின் வெட்கச்சிரிப்புத் தெரியும் (தேவிகாவின் முன் பல் வரிசையில் உள்ள மிகச்சிறிய சந்து கூடத் தெரியும்).இன்றைய இரவு முடிந்து விடக்கூடாதே, பொழுது விடிந்து விடக் கூடாதே என்ற ஏக்கம் தெரியும். மணல் மேட்டிலும் பள்ளத்திலும் இருவரும் ஓடிப் பிடித்து விளையாடும் போது அவர்களின் கலங்கமில்லா மனது தெரியும். சங்க காலத் தலைவனும் தலைவியும் தனிமையில் சந்திப்பது போன்ற ஒரு அகத்திணையான பாடல்தான் இது. ஆனால் அனிச்ச மலர் போல் மிக மிக மென்மையான ஒரு மெல்லிய காமம் பாடல் வரிகளுக்கிடையே பின்னிப் பிணைந்திருக்கும்.

    ஆனால் அதற்கு அடிப்படை நாதமாக இருவரின் நளினமான காதல் மனம் இருக்கும். இதை விடக் காதலையும் காமத்தையும் மென்மையாக வேறுபடுத்திக் காட்ட முடியாது. எல்லாவற்றையும் விட இவர்கள் இருவரும் இங்கு காதலர்களாக நடிக்கவில்லை. ஊனும் உயிரும் உருகி இரண்டறக் கலந்து விட்ட உண்மைக் காதலர்களாகவே வாழ்ந்திருப்பார்கள். எனவேதான் மற்றெல்லாப் பாடல்களில் இருந்தும் இது தனித்து அமரத்துவம் பெற்றிருக்கிறது. ( அப்பாடா...ஒரு வழியா எதையோ சொல்லி ஒப்பேத்திட்டேன். அப்புறம் இன்னொரு காரணமும் இருக்கு. திலகம் தேவிகா ஜோடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் இப்பாடலை நான் தேர்வு செய்ததற்கு முச்கியக் காரணம்...இல்லையில்லை முதல் காரணமே அதுதான்...) ('அடப்பாவி....இதை நீ முதலிலேயே சொல்லி இருந்தா , நாங்க பாட்டுல முதல் வரியை மட்டும் படிச்சுட்டு வேற வேலையைப் பார்க்கப் போயிருப்பமே.. இப்படி இவ்வளவு நேரம் டைம் வேஸ்ட் பண்ணி இதைப் படிச்சிருக்கவே மாட்டோமே! இதுல ஏகப்பட்ட பில்டப் வேற' என்று நீங்கள் என்னைத் திட்டுவது எனக்குப் புரிகிறது. எனவே பதிவின் முதல் பகுதியில் ஆரம்பித்த அதே சொல்லை வைத்து இப்பதிவை நிறைவு செய்கிறேன் : 'மன்னிக்கவும்'.)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #290
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •