Page 236 of 400 FirstFirst ... 136186226234235236237238246286336 ... LastLast
Results 2,351 to 2,360 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2351
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2352
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வருகிற 16 மே ,60 ஆண்டு காணும் நமது கட்டபொம்மனுக்கு வாழ்த்துக்கள். லண்டனில் 10 மே அன்றே 60 கண்டு விட்டார்.(பிரீமியர் )
    வீரபாண்டிய கட்டபொம்மன் -16/05/2018-பகுதி-1
    என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.
    Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.
    உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
    கட்டபொம்மன் ஒவ்வொரு தமிழனின் பூஜா பலன். உச்ச அதிர்ஷ்டம். மேற்கு மக்களுக்கு ஒரு ten commandments ,ஒரு lawrence of Arabia போல கீழை மக்களின் சுதந்திர போராட்ட சரிதம். நிகழ்வுகள் ஓரளவு சரித்திரத்தை ஒட்டியவை ஆனாலும் நம் மக்களின் ரசனையை ஒட்டி அழகு படுத்த பட்ட பிரம்மாண்ட சரித்திரம். கட்டபொம்மனின் சரித்திரம் ,அவன் சுதந்திர காற்றுக்காக ஏங்கி , சிறுமையும் மடமையும் கொண்ட அடிமை கூட்டத்தில் தனித்தியங்கி வீரம் காட்டிய முன்னோடி. இந்த ஒரு அம்சம் போதும் அவனை நடையில்,உடையில்,அந்தஸ்தில்,பேச்சில் மக்களின் எதிர்பார்ப்புகேற்ப தமிழ் புலவர்களின் சங்க கால கவிதை தொடர்ச்சியாக காட்சியமைப்பில், வசனத்தில்,உயரிய நடிப்பில், தமிழகத்துக்கே பிரம்மன் வடித்த தந்த உன்னத நடமாடும் சிற்பத்தால் உரிய உன்னதம் கொடுக்க பட்டு, சிற்றரசன் என்று கீழ் நிலை விமர்சகர்கள் இகழ்ந்தாலும் பெரிய நோக்கம் கொண்ட உயரிய மனிதன், மகாராஜாவாக ஆக்க பட்டான். நிலத்தின் அளவை பொருத்தல்ல ,மனத்தின் திண்மையின் அளவு.கொண்ட நோக்கத்தின் அளவு.
    கட்டபொம்மனின் 1791 முதல் 1799 வரை ஆன கால கட்டமே இந்த படத்தின் காலகட்டம்.ஆற்காடு நவாப் வாங்கிய கடனுக்கு கும்பனியிடம் தனக்குட்பட்ட பாளய சிற்றரசர்களிடம் இருந்து வரி வசூல் உரிமையை கொடுப்பதில் இருந்து கட்டபொம்மன் அதை மறுத்து எதிர் வினை புரிந்தது, வெள்ளையர்கள் மற்றோரை தன் வசப்படுத்தி அடிமையாக்கி கட்டபொம்மனை தனிமை படுத்தி ,அவனுடன் போர் செய்து ,தப்பியோடிய அவனை பிடித்து தூக்கிலிடுவது படத்தின் காலகட்டம். கட்டபொம்மனின் வயதுதான் நடிகர்திலகத்தின் அன்றைய வயது. ஏறக்குறைய முப்பது. கட்டபொம்மனின் நிறம்தான் நடிகர்திலகத்தின் நிறம். அப்பப்பா இந்த படத்தில் அவர் இயல்பான நிறம் காட்ட பட்டதில்,ஒப்பனையாளர் பாதி சாதனை புரிந்து விட்டார்.
    கட்டபொம்மனின் உயரம்? அவன் உயரம் அத்தனை சமகால பாளய சிற்றரசர்களின் உயரம்,ஆற்காடு நவாப் உயரம், அனைத்துக்கும் மேலல்லவா? அந்த உயரமும் கிடைத்து விட்டது ஒரு நடிக மேதை தன் நடிப்பால் மட்டுமே தன் உயரத்தை மேலும் ஓரடி கூட்டி கொண்ட அதிசயம் .அதை நாம் மட்டுமே வியக்கவில்லை ,உலகமும் நாசரும் (எகிப்து அதிபர்)கூடவியந்தனர். தானே தேடி வந்து நடிகர்திலகத்தை பார்த்த நாசர் ,இவரா(?) ,படத்தில் ஆறடிக்கு மேல் தெரிந்தாரே ,என்று மூக்கில் விரலை வைத்தார்.
    இப்போது சொல்லுங்கள் கட்டபொம்மன் அதிர்ஷ்டம் செய்தவரா இல்லை ஒவ்வொரு தமிழனுமா என்று?actors should never feel small என்று சொன்ன Stella Adler கூட இப்படி ஒரு ஏகலைவனை அடைய கொடுத்த வைத்தவர்தானே?
    எனக்கு நமது சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளில் விமர்சனம் உண்டு. அது அவ்ளோ பெரிய விஷயமா ,ராகத்தை ஒட்டி வார்த்தை நிரப்பல்தானே என்று? ஆனால் தஞ்சாவூர் சங்கரன் என்பவர் மும்மூர்த்திகளின் கீர்த்தனை சிலதை எடுத்து விளக்கினார். ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் எப்படி முக்கியத்துவம் பெற்று ராகங்களின் அழகை மிளிர வைக்கிறது என்று.
    அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?அதுதானே பலரை கவர்ந்து தமிழை பாமரர் முதல் பண்டிதர் வரை பள்ளி மாணவரில் இருந்து பல் போன முதியவர் வரை தமிழ் மீது ஆர்வத்தை தூண்டி புலவர் எழுத்துக்கும் பாமரர் மனதுக்கும் தொடர்பு கண்ணியானது? எனக்கு முதல் பரிச்சயம் கட்டபொம்மனுடன் ஒலிச்சித்திரம் (soundtrack ) மூலமே ஏற்பட்டது.பிறகு வசன புத்தகத்தை வாங்கி வசனங்களை மனனம் செய்தேன். அவரை போல் பேச முயன்றேன்.
    listen only to soundtrack and you will realise the timbre ,modulation ,tonal clarity ,subtle and quick flow of variation in octave levels that plucks every known &buried emotional suggestions from the dialogue with its rhythm and beauty(He lived in his voice) .அவருடைய ஆண்மையான குரலில் வசனத்தின் ஒவ்வொரூ எழுத்தும் சொல்லும் அவரின் பாவம், ஏற்ற இறக்கம், தெளிவு, கவிதையின் அழகு,முக பாவத்திற்கேற்ற கை கால் உடல் அசைவுகளுக்கேற்ப மெல்லிய துல்லிய குரல் மாற்றங்கள், நம்மில் அந்த பாத்திரத்தை அதன் உணர்வை மனகண்ணில் காட்டி விடும் வலிமை கொண்டது.
    நான் இந்த குரலுக்கு அடிமையாகி ஐந்து வருடங்கள் கழித்தே படத்தை வெள்ளித்திரையில் கண்டேன்.ஆனால் சமீபத்தில் எனக்கொரு சந்தேகம். நாம் முதலில் வசனம்,பிறகு படத்தோடு வசனம் மகிழ்ந்து அதில் திளைக்கிறோம். ஆனால் உலக அங்கீகாரம் பெற்ற இந்த படத்தில், அந்நிய நாட்டை,மொழியை சார்ந்தவர்களை ,இந்த வசனங்களின் முழு பொருளும் அருமையும் தெரியாமலே அடிமை ஆக்கி ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகராக அங்கீகரிக்க வைத்ததே? எப்படி?
    அந்த படத்தை ,முழுவதும், வசனத்தை mute பண்ணி பார்த்தேன்.(மனதில் வசனம் ஓடாமல் பிரயத்தனம் )
    எனக்கு முதல் அதிசயமே அந்த நடையும், கைகளை,விரல்களை அவர் பயன் படுத்தும் விதமும். நான் ஏற்கெனவே கூறிய படி நிறைய hollywood மற்றும் உலக நடிகர்கள் ,அந்த பாத்திர குணங்களை establish செய்ய ,விலங்குகளின் நடை, குணங்கள் இவற்றிலிருந்து inspiration எடுத்து, சமயங்களில் imitate கூட செய்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
    இந்த படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
    அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
    ஒரு சராசரி நடிகனுக்கும், ஒரு மகா நடிகனுக்கும் உள்ள வேறுபாடு காலுக்கும், உடல் மொழிக்கும் ஏற்றவாறு கைகளை பயன் படுத்தும் முறை. ஜாக்சனுடன் ஆரம்ப பேச்சில் கைகளை சிறிது ஒடுக்கி கட்டுபடுத்துவார். எண்ணிக்கை தெரியாத குற்றம் என்னும் போது விரல்கள் எண்ணிக்கையோடு அசையும். போர் விடை பெரும் காட்சியில் வலது கை புறம் காட்டி இடது புற உரையில் கத்தியை சடாரென்று மணிக்கட்டை மட்டும் பயன் படுத்தி தள்ளும் தன்னம்பிக்கை நிறைந்த style .
    Mute பண்ணி பார்க்கும் போதும், ஜாக்சன் உடன் தன்னை கட்டு படுத்தும் ஆரம்ப restlessness நிறைந்த restraint , பிறகு தன் நிலையை உணர்த்தும் force ,வன்முறைக்கு படிப்படியாய் தள்ள படுவது வசனங்களின் உதவி மஞ்சளரைத்து கொடுக்கவே அவசியமில்லாமல் அந்நியர்களுக்கு புரிந்திருக்கும். தானாபதி பிள்ளை ஒப்பந்தத்தை மீறி கொள்ளையிட்ட குற்றத்தின் போது நடுநிலையை எண்ணி, சிறிதே குன்றி போய் பேசும் போதும், ஆனால் வரம்பு மீறும் போது மந்திரிக்கு சார்பாய் நிலை எடுத்து வருவது வரட்டும் என்று முடிக்கும் போதும் ..... வசனம் தேவையே படவில்லை. முகக்குறிப்புகள் போதுமானதே அன்னியருக்கு.
    போரில் தன்னை மீறி செல்லும் நிலைமையில் மகளுக்கு தைரியம் சொன்னாலும் நிலைமையை உணர்ந்து தளரும் நிலை, தானறியாமல் தன்னை மற்றோர் போர்களத்திலிருந்து அப்புறப் படுத்தி தப்பிக்க வைத்ததை எண்ணி மருகுவது இதற்கும் வசனம் தேவையே இல்லை.
    ஆனால் இறுதி காட்சி பற்றி எனக்கே சந்தேகம். அரைகுறை விமர்சகர்கள் குறிப்பிடுவது போல் இது வசனம் சார்ந்த காட்சியா என்று. ஆனால் சங்கிலியால் கட்ட பட்டு முன்னும் ,பின்னும், பக்கவாட்டிலும் நகர்ந்து ,முகக்குறிப்பை பார்க்கும் போது ,எதையும் சந்திக்க தயார் என்ற prime text எல்லோருக்கும் விளங்கி இருக்கும்.ஆனால், காட்டிகொடுத்த கோழைகளை எள்ளும் முறை,தன இனத்தை பற்றி குறிக்கும் பெருமிதம்,இப்போதும் பணிய விரும்பவில்லை என்ற குறிப்பு, என் நிலையே சரி என்ற conviction ,யாராவது வந்து தன் பணியை தொடர்வான் என்ற நம்பிக்கை, சாவின் விளிம்பை தொடும் அலட்சியம் என்று காட்சியின் subtext களும் வசனமின்றியே அந்நியர்களுக்கு புரிந்திருக்கும்.
    ஆனாலும் வசனம் புரியாமலே கூட ,அந்த காட்சியுடன் சிம்ம குரல் இயைந்து நடத்தும் வித்தையை சராசரி அந்நியனும் அதிசயித்து வியந்திருப்பான்.
    வீர பாண்டிய கட்டபொம்மன் காட்சியிலும், நடிப்பிலும் ,பிரம்மாண்டத்தை காட்டும் படம்.
    வசனங்கள் ஒரு கூடுதல் பலமே ,அது இல்லாமலே கூட இந்த படத்தின் வலு குறையவில்லை, என்று அரைகுறை விமர்சகர்கள் முகத்தில் படகாட்சிகளே தூ என்று கட்டபொம்மன் போலவே உமிழ்கிறது. இதை அவர் வேறு விதமாக நடித்திருக்கலாம் என்று சொல்லும் எட்டப்பர்களுக்கு அந்த பணியை நாமே செய்து விடலாம்.
    (அடுத்த பகுதியில்)
    courtesy G. S f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2353
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2354
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2355
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2356
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கலாட்டா கல்யாணம் - பொன் விழா
    தமிழ் சினிமாவின் இளமை புயலாக, காண்பவர் உள்ளம் கொள்ளை கொள்ளும் மன்மதனாக, இளைய தலைமுறையின் காதல் தலைவனாக, இயல்பான காமெடியில் நகைச்சுவை நடிகர்களுக்கே சவால் விடுபவராக நடிகர் திலகம் பிரமாதப்படுத்திய கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் 50ம் ஆண்டு நிறைவு (1968 - 2018) பொன்விழா கொண்டாட்டம் வரும் ஞாயிறு (மே 20ந் தேதி) மாலை 6 மணிக்கு ரஷியன் கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் அண்மையில் மறைந்த திரு சி.வி.ஆர். அவர்களுக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கு பிறகு திரைப்படம் திரையிடப்படும். அனைவரும் வருக!



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2357
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    16.05 2009.அன்று 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பொன்விழா ,சென்னை இந்தோ-ரஷ்யன் கலாச்சார மையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தி௫.G.ராம்குமார் வரவேற்க,மையத்தின் இயக்குநர்.தி௫மிகு.ஸ்டானிஸ்லாவ் சிமாகௌ கண்காட்சியினைத் திறந்து வைத்தார்கள்.இந்தக் கண்காட்சியை திறம்பட நிறிவியவர் நமது அ௫மைச் சகோதரர். தி௫.V.இராகவேந்திரா அவர்கள்.நிகழ்வின் போது 'வீரபாண்டிய கட்டபொம்மன் ' திரைப்பட பொன்விழா ஆண்டிற்கான நினைவு தபால் உறையைத் தபால்த்துறை தலைமைப் பொது நிர்வாகி.தி௫.M.S.ராமானுஜம் (சென்னை மண்டலம்)வெளியிட்டுச் சிறப்பித்தார்கள்.இந்த நிகழ்வில் வி௫ந்தினர்களாக தி௫.P.தங்கப்பன் (இந்தோ-ரஷ்யன் கலாச்சார மையம்),தி௫.லட்சுமி நாராயணன்,தி௫.R.வீரமணி,தி௫.K.V.S.ம௫து மோகன் கலந்து கொண்டார்கள்.தி௫.D.கணேசன் பாடலைப்பாட,தி௫.மோகன்.V.இராமன் நிகழ்வைத் தொகுத்தளித்தார்கள்.












    courtesy V C Thiruppathy f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2358
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like


    நன்றி விஜயா ராஜ்குமார் முகநூல்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2359
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    ராமு, சோமு ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ்.ராமு சிவாஜி வெறியன்.சோமு எப்பவும் ராமுவ சீண்டிகிட்டே இருப்பான்.இப்படித்தா ஒரு நாள் ரெண்டு பேரும் கவுண்டர் டீக்கடையில ஒக்காந்துகிட்டு டீ சாப்பிட்டுகிட்டு இருக்காங்க.சோமு பழய புஷ்தகம் ஒண்ண வச்சிகிட்டு என்னடா ராமு இந்தப் புக்ல உங்காளுதா ரொம்ப பேரு வாழ்க்கையில உசர உதவி பண்ணியிருக்காராம்மா. என்ன விபரம்னு டீடெயில் இல்லையேடா .டீடெயில் தெரியாம என்னத்தடா மேட்டர் இது? எதயடா நா நம்புறது? அப்படின்னான்.
    " டேய்! அவரு செயறத அவரு என்னிக்குடா சொல்லியிருக்காரு? அத அனுபவிச்சவன் சொன்னாத்தான்டா உண்டு. அப்படி சொன்னவங்க கதய நாஞ் சொல்றேன் தெரிஞ்சுக்க. " சொல்றான் ராமு.
    எஸ்.வி.சுப்பையா.
    ரொம்ப படம் நடிச்சாரு.ஆனாலும் பணப்பிரச்சினையால தவிச்சாரு.ஒரு படம் எடுத்தா பொழச்சிகிடலாம்னு முடிவு பண்ணி படம் எடுக்க இறங்கறாரு.பைசா இல்ல.வெறுங் கைல மொழம் போட முடியுமா? பெரிய நடிகன் கால்ஷீட் கிடச்சா பரவாயில்ல.அத வச்சு வட்டிக்கு வாங்கி படத்த முடிச்சிரலாம்னு பிளான் பண்ணாரு.ஆனா யாருகிட்ட போயி கேட்குறது? அங்கதா நிக்குறாரு எங்க ஆளு.காசும் வேண்டாம், கீசும் வேண்டாம்னு சும்மா நடிச்சு குடுத்ததுதா "காவல் தெய்வம் ".அந்த பேருலயே இருக்குடா தெய்வம்.
    அதுக்கு முந்தியே
    வி.கே.ராமசாமிக்கு
    மக்களைப் பெற்ற மகராசி செஞ்சு குடுத்திருக்காரு.
    சோமு :ஏண்டா அவரே ரொம்ப பபடம் நடிச்சிகிட்டு இருந்தாரே.அவுரு கிட்ட இல்லாத பணமாடா?
    ராமு :அவரெல்லாம் பெருசா சேத்துவைக்கல.மக்களைப் பெற்ற மகராசி நல்லா கல்லா கட்டுச்சு.ரொம்ப படம் நடிச்சு சம்பாதிச்சத விட அந்த ஒரு படத்துலயே சம்பாதிச்சிட்டாரு.
    சோமு :சரி அவ்வளவுதானே.
    ராமு :.ஏன் ஸ்ரீதர்! அவரும் அமரதீபம் கதைய ரெடி பண்ணி வச்சிருந்தார்.படத்த சொந்தமா தயாரிக்கலாம்னு ஐடியா.ஆனா காசுதா சுத்தமா இல்ல.எங்க போயி நின்னாரு.நம்ம தலைவர்கிட்டதா.தலைவரும் கத கேட்டு, அது புடிச்சு, பாராட்டவும் செஞ்சாரு. இதுதா சமயமுனு நாசூக்கா மேட்டரை சொல்றாரு. "அண்ணே! எங்கிட்ட காசு இல்ல.நீங்க சம்மதிச்சா விளம்பரம் கொடுத்தர்றேன்.அத வச்சு வியாபாரத்த முடிச்சர்றேன்.உங்க சம்மதம் வேணும் இதுக்கு "ன்னு சொல்ல, நடிகர்திலகம் சரின்னு சொல்ல, அப்படி அவரோட வளர்ச்சிக்கு அஸ்திவாரமா இருந்தாரு நம்ம தலைவரு.
    சோமு :இவங்க எல்லாரையும் விட பெரிய படங்க கொடுத்தவரு ஏ.பி.என்.அவுரு ஏன் மாறுனாரு?
    ராமு : உலகத்துக்கே தெரியுமே அது? திருவிளையாடல், சரஸ்வதிசபதம் படங்கள்ல ஒருத்தர் சம்பாதிக்கலேன்னு சொன்னா உலகம் நம்பிருமா? அவ்வளவு ஏன்? இன்னைக்கும் அந்த படங்களலால கிடைக்கிற புகழ் என்னன்னு இந்த ஜெனரேசனுக்கு கூட நல்லா தெரியும்? இத விட ஒரு மனுசனுக்கு வேற என்ன வேணும்? ஆரம்பத்துல அவர தூக்கி விட்டதே அவுருதானே? கடசில எங்க போயி சேந்து என்ன ஆனாரு? அவரு மட்டும் அவசரப்படாம தலைவர்கிட்டயே இருந்திருந்தார்னா அவருக்கு இந்த நிலம வந்திருக்குமா?
    அப்புறம் பாலாஜி.எதிரிக கூட மறுக்க முடியாது.எத்தனை ஹிட்.எத்தன வசூல்.
    மாதவன் டைரக்டர் முதல் படம் மணியோசை நல்லாத்தானே பண்ணாரு.ஆனா சரியா போகலேயே.நடிகர்திலகத்துக்கிட்ட வந்து சேந்த பின்னால அவுரு எவ்வளவு உசரத்துக்கு போனாரு?
    சோமு :விட்டா நீ அவரு வச்ச படம் எடுத்தவங்க எல்லாரையும் சொல்லுவே போலிருக்கே?
    ராமு :அத இப்படிச் சொல்றேன் .கேட்டுக்க.
    அவரால யாரும் நிம்மதி கெட்டதில்ல.ஏன்னா உங்கள மாதிரி ஆளுங்க பிராப்தம் ஹிட்டா ? அது ஹிட்டா இது ஹிட்டான்னு கொடி தூக்க ஆரம்பிச்சுருவீங்க.!அவரால எவன் கெட்டான்? அது தா கேள்வி. பிராப்தம் 100 நாள் ஓடலதா.அந்த பட செலவுக்கு மேலயே அது சம்பாதிச்சது.
    சோமு :சரி சரி, சந்திரபாபுவுக்கு கூட ஹெல்ப் பண்ணினாராமே?
    ராமு :சந்திரபாபு நொடிஞ்சு பட வாய்ப்பே இல்லாமே தவிச்ச சமயத்தில அய்யா கிட்ட வந்து வாய்ப்பு வாங்கித் தரச் சொன்னார்.அதுக்கு அய்யாநீ ஏப்பா தனியா கஷ்டப்படறே? இவ்வளவு பெரிய வீடு இருக்குது.நீ எங்க கூடயே தங்கிக்கலாமே, அப்படின்னாரே.அது எத்தினி பேருக்குத் தெரியும்?
    சோமு :அட!
    ராமு :கடசி காலத்துல அவர் நிம்மதியா நடிச்ச படங்க இவர் கூடத்தான்.
    சந்திரபாபு மட்டுமல்ல! அவர சுத்திஇருந்தவங்க எல்லாருந்தா அவரால நல்லா இருந்தாங்க பேரும் புகழோட! ஆனாபெருமாள் முதலியாரத் தவிர யாராலயும் எங்க நடிகர்திலகத்துக்கு ஒரு பெரிய நன்மை கிடையாது .
    சோமு :இத ஏண்டா தமிழ்நாட்டு மக்கள் பேச மாட்டேங்கிறாங்க.
    ராமு :அவங்க கிட்ட கொண்டு போய்சேக்க வேண்டியது பத்திரிக்கைக்காரங்க.அவங்களுக்குத்தா நல்ல விஷயத்தையே யோசிக்கற பழக்கமேயில்லையே.அவங்க பரபரப்புக்கு தேவை ஊழல் கணக்கும் ஊதாரி அரசியலுந்தானே.
    சோமு :எனக்குஞ் சரின்னுதாபடுது.
    ராமு :இன்னுஞ் சொல்றேன். அப்புறமா!







    courtesy senthivel sivaji group f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2360
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •