Page 232 of 400 FirstFirst ... 132182222230231232233234242282332 ... LastLast
Results 2,311 to 2,320 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2311
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நடிகர் திலகம்... நட்புக்கும் திலகமானவர்... தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி ஆயினும் அவரது நட்பின் எல்லை பரந்து விரிந்த ஒன்று... அவரது சாம்ராஜ்யத்தில் அடங்காத குறுநில மன்னர்களே இல்லை எனலாம்... என் வீடு பெரியது உன் வீடு பெரியது என்று கட்டிடங்களின் உயரங்களுக்கு வேண்டுமானால் அளவுகோல் உண்டு... ஆனால் அதையும் தாண்டிச் சென்றால் வானமே எல்லை... நம்மவரின் நட்பும்... புகழும் அத்தனை உயரமானது... உயர்வானதும் கூட.. தமிழ்த் திரையுலகை தாண்டியும் அவரது நட்பு வட்டம் ஆழஅகல விரிந்த ஒன்று... கேரள சினிமாவை எடுத்துக் கொள்ளுங்கள்... நஸீர் முதல் லால் வரை... சத்தியன் முதல் திலகன் வரை நம்மவரைக் கண்டு வியக்காத கலைஞர்கள் ஒருவரும் இல்லை... தெலுங்குப் படவுலகை எடுத்துக் கொண்டால் நாகேஸ்வரராவ் முதல் ராமராவ் வரை... போற்றிப் புகழாத நெஞ்சமில்லை... கன்னடப்படவுலகின் ராஜ்குமார்... ஹிந்தித்திரையுலகின் சுனில்தத் முதல் ராஜ்கபூர் வரை நம்மவரைக்கண்டு வியந்து போய் நின்று இருக்கிறார்கள்... கடல்கடந்தாலும் நம்மவரின் புகழ் ஓங்குதாங்கி ஒலித்துக் கொண்டு இருப்பதில் மாற்றம் இல்லை... சாம்பிளுக்கு சில... தெலுங்கு திரை சாம்ராஜ்யத்தின் மன்னர் நாகேஸ்வரராவ் உடனான நட்பு அலாதியானது... "டே நாகேஸ்".. என்று உரிமையோடும் அன்போடும் நம்மவரால் அழைக்கப்படுபவர் நாகேஸ்வரராவ்.. தேவதாஸ் படம் மூலம் தமிழகத்திற்கு மிக பரிட்சயமானவர்.. வி.பி.ராஜேந்திர பிரஸாத் (இன்றைய சினிமாக்களின் மெய்ன் வில்லன் ஜெகபதி பாபு வின் தகப்பனார்).. என்பவர் தெலுங்கு படவுலகின் மாபெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்... நம்ம பாலாஜி எப்படி நடிகர் திலத்தின் ஆஸ்தான தயாரிப்பாளரோ அதுபோல தெலுங்கில் நாகேஸ்வரராவின் ஆஸ்தான தயாரிப்பாளர்... அவர் மாபெரும் கமர்ஷியல் ஹிட் பட தயாரிப்பாளர்.. தமிழில் அவர் தயாரித்து இயக்கிய படங்கள் மூன்றே மூன்றுதான்... மூன்றும் நம்மவரின் சினிமாக்களே... தன்னுடைய ஜெகபதி ஆர்ட்ஸ் மூலமாக எங்கள் தங்க ராஜா, உத்தமன், பட்டாக்கத்தி பைரவன் படங்களை உருவாக்கி கோடி கோடியாக தமிழகத்து ரூபாய் நோட்டுகளை கொள்ளை கொண்டு சென்றவர்... ஆம் மூன்று படங்களுமே நல்ல வசூலை அள்ளிக் குவித்தது... இன்னும் ஒரு பத்து படங்கள் நம்மவரைக் கொண்டு உருவாக்கி இன்னும் பெரிய கமெர்ஷியல் ஹீரோவாக நம்மவரை பயன்படுத்தி இருக்கலாமே... என்ற ஆதங்கம் சராசரி ரசிகனான என்னைப்போன்ற பல பிள்ளைகளுக்கு இருக்கத்தான் செய்கிறது...
    "கடகடால ருத்ரைய்யா"... தெலுங்குப் படத்தின் தமிழ் வடிவம்தான் "பட்டாக்கத்தி பைரவன்"... மஹாபாரத கர்ணனை நிகழ்காலத்தில் பொருத்திப் பார்க்க முயற்சித்த படம்... அதன் பின்னாளில்தான் மணிரத்னம் கூட அதே இன்ஸ்ப்ரேஷனுடன் தளபதி என்ற படத்தை எடுத்தார்... தெலுங்கில் கிருஷ்ணமராஜூ நவீன கர்ணன் வேடம் பூண்டவர்... இந்தப் படமும் கமர்ஷியலாக நல்ல வசூலை தந்தது... நடிகர் திலகத்தின் சகோதரர் வி.சி.சண்முகம் அவர்களை மதுரை திருநெல்வேலி ஏரியா விநியோக உரிமை வாங்கச் சொல்லி வற்புறுத்தி நல்ல வசூலை பெற்றுத்தர யோசனை சொன்னவர் வசன ஆசிரியர் ஆரூர்தாஸ்.. இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.. இளையராஜா இசையில் நமமவருக்கு அமையப் பெற்ற சூப்பர்ஹிட் மெலோடி பாடல்கள் ஏராளம்.. அதில் இந்தப் படத்தில் இடம் பெற்ற "எங்கெங்கோ செல்லும்" என்கிற பாடல் குறிப்பிடத்தக்கது... மன்மோகன் தேசாய்... ஹிந்தி சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநர்.. பின்னாட்களில் அமிதாப் பச்சனை வைத்து பல ஹிட்ஸ் கொடுத்தவர்... சசிகபூர்- ஷர்மிளா டாகூரை வைத்து ஹிட்டடித்த "ஆ கலே லாக் ஜா"... படம்தான் தமிழில் உத்தமன்... நம்மவரின் சூப்பர் ஹிட் மூவி... பின்னாட்களில் "நான் அடிமை இல்லை" என்றும் வந்தது... இந்த உத்தமன் படம் குடும்பம், லவ் சென்டிமென்ட் என்று பல கோணங்களில் ரசிகர்களைக் கடந்தும் பார்வையாளர்களை கவர்ந்தது.. இன்றும் நினைவில் நிலைத்த பாடல்கள்.. இந்தப் படத்தின் அதிசயம்.. இதற்கும் முன்பாக வெளிவந்த படம் "எங்கள் தங்க ராஜா"... ஹியூஜ் ஹிட்ன்னு சொல்வார்களே... அந்த மாதிரி ஒரு வெற்றிப்படம்... வித்தியாசமான கோணத்தில் நம்மவரை பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம்.. ஒற்றை மனிதர் இரட்டை நடிப்பு என்று இருவேறு கதாபாத்திரங்களுக்கும் செம்ம வித்தியாசத்தை காண்பித்து புதிய பரிமாண நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பார் நம்மவர்...கடைசி வரை இரட்டை வேடம் என்று நம்ப வைப்பதுபோல அமைக்கப்பெற்ற திரைக்கதை 1973ல் புதிய அணுகுமுறை... திரையிசைத் திலகம் பாடல்களில் பட்டையை கிளப்பி இருப்பார்... குறிப்பாக "கோடியில் ஒருவன்" பாடல்.. நம்மவரை கோடியில் ஒருவராக பரிமளிக்க வைத்தது உண்மை.. இம் மூன்று படங்களையும் வெறும் மசாலா தடவிய படங்கள் என்று தள்ளிவிட முடியாது.. கதையம்சமும் நடிப்பாற்றலும் ஒருங்கே அமைந்து சிவாஜி சினிமாக்களுக்கு ஒரு புதிய வழித்தடம் அமைத்துக் கொடுத்தது என்பதில் வேறு கருத்துகள் இல்லை... வசந்த மாளிகை போன்ற பெரு வெற்றி பெற்ற படங்களையும் நம்மவருக்கு பிரஸன்ட் பண்ணியவர்களும் தெலுங்கு தேசத்து நட்புகளே... அதனால்தான் பங்காரு பாபு, சந்திரகுப்த சாணக்யா உள்ளிட்ட பல தெலுங்கு சினிமாக்களில் சிறப்புத் தோற்றம் கொண்டு இருக்கிறார்... எல்லாம் நட்புக்காக... தெலுங்கு படங்களில் கொஞ்சம் உப்பு,புளி, காரம் தூக்கலாக இருக்கும்... கன்னட சினிமாக்களில் ஊறவெச்ச ஊறுகாய்கூட சப்பென்று இருக்கும்.. மலையாள சினிமாக்களோ இயல்புநிலை மாறாமல் யதார்த்த வரம்புகளோடு பதமாக குருமா வைப்பார்கள்... நம் தமிழ் சினிமாவோ "எல்லாம் கலந்தது".. எனக்குள் உள்ள நடிப்பில் உனக்கு என்ன வேண்டுமோ சொல்லிவிடு... நான் தருகிறேன்.. இதுதான் நம்மவரின் ஸ்டேட்மென்ட்... ஸோ எந்த மொழி படங்களுக்கும் சரியாக தன்னை பொருத்திக் கொள்வார்... அதுவே அவரது சிறப்பு... அவரே நமக்கு கிடைக்கப் பெற்ற வரப்ரசாதம்...

    courtesy Jahi husain f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2312
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வணக்கம் தோழர்களே!
    இன்று முதல் இப்புதிய பகுதி ஆரம்பம்.
    நடிகர்திலகம் நடித்து, சென்னை மாநகரில்
    நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் படங்களின் பட்டியலை,அரங்குகளின் பெயரோடு இங்கே பதிவிடுகிறேன்...
    இது 99.9% நம்பத் தகுந்தவை....
    சென்னையில் ஓடாமல், பிற ஊர்களிலும், இலங்கையிலும் நூறு நாட்களைக் கடந்த வெற்றிப் பட்டியல் பின்ணிணைப்பாக இறுதியாக வரும்.
    ( நன்றி : பம்மல் திரு.சுவாமிநாதன் )

    courtesy vaannila f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2313
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    courtesy n. thilagam fans( V .Rajkumar f book)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2314
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    vee yaar

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2315
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மதுரையில் நடைபெற்ற இசை விழா
    "சிவாஜிக்கு மரியாதை" என்ற தலைப்பில் நடிகர்திலகம் சிவாஜி புகழ் பாடும் இசை விழா 13 -05 -2018 , ஞாயிறு மாலையில் மதுரை காந்தி மியூசியம...் திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.
    நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மற்றும் நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இந்த இசை விழாவிற்காக போடப்பட்டிருந்த 2000 இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் குடும்பத்தோடு வந்திருந்து ரசித்தனர். முகநூல் மற்றும் WhatsApp மூலமும் தகவல் தெரிந்து பல்வேறு ஊர்களிலிருந்து நம் ரசிகர்கள் வந்திருந்தனர்.
    நீண்ட நாட்களுக்குப் பிறகு திறந்தவெளி அரங்கில் நடிகர்திலகத்தின் நிகழ்ச்சி மதுரையில் சிறப்பாக நடந்தேறியது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.
    இனி இதே பாணியில் நடிகர்திலகம் புகழ் பாடும் இசைவிழாக்களை வெவ்வேறு நகரங்களில் நடத்திட வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.
    நன்றி.
    K .சந்திரசேகரன்

    courtesy sivaji peravai f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2316
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2317

  9. #2318

  10. #2319

  11. #2320

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •