Page 229 of 400 FirstFirst ... 129179219227228229230231239279329 ... LastLast
Results 2,281 to 2,290 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

  1. #2281
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2282
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2283
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Sundar Rajan


    அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,கோவை மாவட்டத்தைச் சேர்ந்த
    நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வந்து விட்டார் நமது மக்கள்தலைவர்.
    ... ஆம், நாளை வெள்ளி முதல் நடிகர்திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் ஊட்டி வரை உறவு கோவை ராயல் திரையரங்கில் வெளியாகிறது.
    நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் மக்கள்தலைவரின் அட்டகாசமான ஸ்டைலில் உருவான ஊட்டி வரை உறவு திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பினைக் கொடுத்து,
    கோவை சிவாஜி கோட்டை என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
    மதுரையில் சித்திரைத் திருவிழா இன்றுடன் (3.5.2018) முடிந்தது.
    கோவையில் சித்திரைத் திருவிழா நாளை ( 4.5.2018) தொடங்குகிறது.
    ஆம், மக்கள்தலைவரின் படம் வரும் நாளே எங்களுக்கு திருவிழா.....
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2284
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    Rajaram
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2285
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சிவாஜி ஒரு அற்புதம்... மரணத்தோடு முடிந்து விடுவதில்லை வாழ்க்கை... காந்தியடிகள் கூட உயிரோடு இருந்த காலத்தில் பெற்ற புகழை விட... மரணத்திற்குப் பிறகுதான் மஹாத்மா என்ற பெயருடன் அழியாப் புகழ் பெற்றார்... பெருந்தலைவர் காமராஜரும் அப்படித்தான்.. இறப்பிற்குப் பின் அதிகமாக நேசிக்கப்பட்டார்... அவ்வாறேதான் நம் நடிகர் திலகமும் ஆவார்... இன்றும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்... மரணம் இதுபோன்ற மாமனிதர்களை ஒருபோதும் வென்றதில்லை... திரையுலகில் முக்கிய கதாபாத்திரம் மரணிப்பது போல் கதையமைத்தால் அந்த முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகசிகாமணிகள் 1000 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல் "ஷாக்" ஆகி விடுகிறார்கள்.. இயக்குநர்களிடமும் கதாசிரியர்களிடமும் கதையை மாற்றுங்கள், கிளைமேக்ஸை மாற்றுங்கள் என்று பஜனை பாட துவங்கி விடுவார்கள்... கதையை நம்பி கதாபாத்திரங்களை உருவாக்கப்பட்ட காலம் போய் கதாநாயகர்களை நம்பி கதைகளை உருவாக்கும் கர்ணகொடூரம் நிகழ்ந்ததன் கதை இதுதான்... சிவாஜி சினிமாக்கள் இன்னமும் பூஜிக்கப்பட காரணம் என்னவென்றால் வெரி சிம்ப்பிள்... கதை என்ன சொல்கிறதோ அதற்கேற்ற வகையில் தன்னை அவர் வடிவமைத்துக் கொண்டதுதான்... உட்சபட்ச நட்சத்திரமாக இருந்து கொண்டு போட்டி பொறாமை நிறைந்த திரையுலகில் பல்லாயிரக் கணக்கான மனிதர்களை வாழ வைத்த அவர் நினைத்திருந்தால் தன்னைச் சுற்றி புனையப்பட்ட கதைகள் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருப்பார்... அதைச் செய்யவில்லை அவர். திரைக்கதை என்ன சொல்கிறதோ அதை செய்தார்... அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டார். பாசமலர் படக்கதை... களைமேக்ஸில் மரணித்து விடுவதாக காட்சி... மரணித்தார்.. காட்சியை மாற்றச் சொல்லவில்லை... முதல் மரியாதை.... மரணித்தார்... காட்சிக்கு அவரது மரணம் தேவைப்பட்டது... இயக்குநருக்கு ஏற்ற நடிகராக மாறிப் போனார்... சில படங்களில்... உதாரணமாக வெள்ளைரோஜா... பாதிரியார் மரணத்திற்குப் பிறகுதான் கதையோட்டமே சூடு பிடித்தது.. படையப்பாவும் தேவர் மகனும் ... அதுபோலத்தான்... வசந்த மாளிகை போன்ற படங்களில் மரணிக்கும் கிளைமேக்ஸ் ஆனாலும் சரி... மகி்ழ்வோடு முடியும் கிளைமேக்ஸ் ஆனாலும் சரி... இரண்டுமே பொருத்தமாக அமைந்ததுண்டு... தெய்வமகன் கிளைமேக்ஸ் கண்ணன் கதாபாத்திரம் மரணிக்கும்.. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு உள்ளும் சோகம் நிரவி நிற்கும்... அதேபோலத்தான் கௌரவம் திரைப்படத்திலும் நிகழ்ந்தது... வியட்நாம் வீடு படத்திலும் அவன்தான் மனிதன் படத்திலும் நம்மை துள்ளத் துடிக்கவிட்டு மரணிக்கும் கதாபாத்திரங்களை மறக்க இயலுமா? இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... சினிமாவில் நம்மவர் மரணிப்பதுபோல நடிக்கும் காட்சிகளை நம்மில் சிலர் பார்க்க விரும்ப மாட்டார்கள்... நம் உறவுகளுக்குள்ளே ஒருவர் மரணம் எய்தி விட்டால் போகாமல் இருந்து விடுவோமா என்ன?... உண்மையில் நடிகர் திலகம் திரையில் மரணிப்பது போல் நடித்து... இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதே உண்மை.. இதுபோன்று பற்பல கதாபாத்திரங்களை துணிச்சலோடு ஏற்று யார் நடிக்க தயாராக இருக்கிறார்கள்... ஒரு சில படங்களில் கமல் செய்து இருக்கிறார்... நாயகனுக்கு பிறகு அவரும் அதை தவிர்த்து விட்டதாய் நினைக்கிறேன்... எனினும் சிவாஜி செய்த கதாபாத்திரங்கள் வலுவானவை... இன்றும் பிரமிக்கத் தக்கவை... இன்னும் சில படங்களை சொல்ல வேண்டுமெனில்... ரத்தத்திலகம்... ஒரு ராணுவ வீரன் தேசியக் கொடியை பறக்கவிட்டு அதன் காலடியில் மரணிக்கும் காட்சி... கண்களை நிறைக்கும்... பாபு ஒரு வயோதிக ரிக்ஷா தொழிலாளி.. தூக்குக் கயிற்றை புன்னகையோடு முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்... அம்புகளை மார்பில் ஏந்தி மரணித்த கர்ணன்... நாடக மேடையிலேயே உயிர் துறந்த ராஜபார்ட் ரங்கதுரை ... இப்படி மறக்க முடியாத நினைவுகளை தந்து சென்ற கதாபாத்திரங்கள் இன்னும் வாழ்கிறது அல்லவா? அதுபோலவே கடவுள் நம்மவரை நம்மிடம் இருந்து "வெடுக்கென்று" பிடிங்கிக் கொண்டாலும் நம் இதயத்தில் குடிகொண்டு வாழ்கிறார் அல்லவா... ஒரு காந்தியைப் போல ஒரு காமராஜரைப் போல... அதுதானே நிரந்தர "வாழ்க்கை"...




    courtesy jahir hussain f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2286
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    courtesy vee yaar -nadigarthilagam fans f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2287
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    senthilvel
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2288
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பிலிம்பேர் விருது ( ஒரு ரசிகனின் டைரி குறிப்பு)
    1953 ஆம் ஆண்டிலிருந்து 1962 ஆம் ஆண்டுவரை பிலிம்பேர் விருதுகள் இந்திப் படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
    1963 ஆம் ஆண்டிலிருந்துதான் தென்னிந்தியப் படங்களுக்கு வழங்கப்பட்டது
    முதல் பிலிம்பேர் விருது பெற்ற தமிழ்ப் படம் நானும் ஒரு பெண்....
    1965 -ல் மாபெரும் வெற்றிப்பெற்ற திருவிளையாடல் படமே நடிகர்திலகம் நடித்து பிலிம்பேர் விருது பெற்ற முதல் படமாகும்.
    அதனைத் தொடர்ந்து,
    1968 லட்சுமி கல்யாணம்
    1970 எங்கிருந்தோ வந்தாள்
    1971 பாபு
    1972 பட்டிக்காடா பட்டணமா
    1973 பாரதவிலாஸ் என்று நடிகர் திலகம் நடித்த ஆறு படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
    ஆனால், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர்களுக்கு அளிக்கப்படும் விருதுகள் 1972 ஆம் ஆண்டிலிருந்துதான் வழங்கப்பட்டு வருகிறது.
    தமிழ்த்திரையில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்ற முதல் நடிகர் நமது நடிகர் திலகமே. அது ஞானஒளி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக வழங்கப்பட்டது.
    அதே ஆண்டு ஞானஒளி படத்தை இயக்கியதற்காக பி. மாதவனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதும், பட்டிக்காடா பட்டணமா பத்தில் நடித்ததற்காக ஜெயலலிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன.
    1973 ல் மீண்டும் பாரதவிலாஸ் படத்தில் நடித்த நடிகர்திலகம் சிறந்த நடிகராகவும், அப்படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் சிறந்த இயக்குநராகவும், சூர்யகாந்தி படத்தில் நடித்த ஜெயலலிலிதா சிறந்த நடிகையாகவும் பிலிம்பேர் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    மீண்டும், மூன்றாம் முறையாக முதல் மரியாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது நடிகர்திலகத்திற்கு வழங்கப்பட்டது.
    எனது பழைய நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்த தகவல் இது. பிழையிருப்பின் குறிப்பிடுங்கள் தோழர்களே..!

    (நன்றி : ஒவியம் - திரு.கௌசிகன்)












    courtesy vaannila f book
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2289
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு...

    பேரன்பு...

    மாசற்ற அன்பு...

    உண்மை அன்பு...

    உன்னதமான அன்பு...

    இவையெல்லாம் இசை வடிவம் கொண்டு நம்மை
    நோக்கி வந்தால் எப்படி இருக்கும்?

    இதோ... இந்தப் பாடல் போல இருக்கும்.
    ----------

    நம் நாட்டின் குடிமக்கள் அனைவரும் அன்றைய தினங்களில், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஏழு முறையாவது பார்த்து மகிழ்ந்த ஒரு திரைப்படம்
    உண்டு. " திரிசூலம்".

    எங்கள் ஊரில் இந்தப் படம் ஓடிய போது, படம் வெளியான திரையரங்க வாசலை நான் நெருங்கவே வாரக் கணக்கிலானது.

    தவிப்பும், பரவசமாய்ப் பார்த்த இப்படத்தின் முதல்
    பாடலே இதுதான் என்பதாலோ என்னவோ.. இந்தப் பாடலின் மீது அநியாயத்துக்கு ஒரு ஈர்ப்பு.
    ----------

    கல்யாணம் செய்து கொண்டு வாழ்வுக் களம் கண்டு விட்ட இரண்டு உயிர்களின் அபார மகிழ்வை இந்தப் பாடல் தன்னுள் அழகாகச் சுருட்டி
    வைத்திருக்கிறது.

    தான் அப்பனாகப் போகிற அளவற்ற சந்தோஷம்
    நாயகனுக்கு என்றால், தனக்கு மற்றுமொரு அம்சமான இசைக் குழந்தை என்கிற சந்தோஷம்
    நம் மெல்லிசை மாமன்னருக்கு.
    --------

    புன்னகை அரசி, நடிகர் திலகத்துடன் இணைந்த
    காவியங்களெல்லாம் ஏன் ஜெயிக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் தெளிவாக விடை தருகிறது.

    சும்மா " ஈ..ஈ " என்று பல்லைக் காட்டி சிரிப்பதால் புன்னகை அரசி ஆகி விட முடியாது.. யாராலும்.
    அந்த அற்புதமான அள்ளிக் கொண்டு போகிற
    புன்னகை... கொஞ்சல், கெஞ்சல், பெருமிதம், நாணம், பெருமகிழ்வு, மனநிறைவு என்று அத்தனை மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டதாய் இருப்பது.. பெரு வியப்பு.

    "கண்ணான மணவாளன் சேயாகிறான்.
    கல்யாண மகராசி தாயாகிறாள்.
    கட்டில் கொண்டால் அங்கு நான் பிள்ளையே..
    தொட்டில் கண்டால் அங்கு என் பிள்ளையே.."

    "என் பாட்டில் ஒரு ராகம் உண்டானது.
    என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது."

    "மீன்கள் நாறும் சினிமாச் சந்தையில், விண்மீன்களை விற்ற பைத்தியம்" என்று கவிக்கோவால் வர்ணிக்கப்பட்ட கண்ணதாசர்,
    தான் விதைத்த விண்மீன்களால் சந்தைகள் பரவிய இடங்களையெல்லாம் சாதனை வானமாக்கியதை யாரும் எழுதவில்லை.
    ----------

    தொழில் தொடர்பான கருவிகளுடன் நூறு பேர்
    சூழ்ந்து கொண்டு தன்னையே பார்க்க, இருநூறு
    கண்கள் போதாதென்று காமிராவின் கண்ணும்
    குறுகுறுவென்று பார்க்க, மனைவியாய் உடன் நடிக்கும் நடிகையைக் கொஞ்சிக் குழைந்து கொண்டாடும் கணவனாக, இன்னும் கொஞ்ச நாளில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போகிற
    குஷியிலிருக்கிற கணவனாக... பளீரென்று மாறிப் போவது அய்யனால் மட்டுமே முடிகிற அதிரடி அதிசயம்.

    " மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே" என்று பாடும் போது தனக்கே தனக்கானவளை தாயாக்கிய பெருமிதம், நாளைய பிள்ளைக் கொஞ்சலுக்குக்கான ஒத்திகை போல் அந்த துள்ளி விளையாடல்கள்...

    பாடலுக்கு வாயசைத்து நடிப்பது சாதாரண காரியமல்ல. சும்மா காட்சியை அழகாக நிரப்பி வென்று விட நினைக்கிற எண்ணற்ற நடிகர்களின்
    அசட்டுத்தனங்களுக்கு, இந்தப் பாடலில் பாடங்கள்
    இருக்கின்றன.

    பேரன்பும், பரவசமுமாய் இரண்டு உயிர்கள் கலந்து, தமக்கென்று இன்னொரு உயிர் உருவாக்கும் பெருங் கனவு, நாட்கள் தாண்டி, வாரங்கள், மாதங்கள் கடந்து நனவாகும் ஒரு பொன்னாளில் அந்தக் கணவனின் மனோநிலை
    எப்படி இருக்குமென்பதை அப்படியே நடித்துக்
    காட்டியிருக்கிற நடிகர் திலகம்.. கண்களெனும் திரை முழுக்க வியாபிக்கிறார்.

    "தன் கைகள் கொட்டட்டும்" என்று மனைவியைக்
    குழந்தையாய்ப் பாவித்து, தன் கன்னத்தோடு அவள் கைகள் இணைக்கும்போது அய்யனின்
    நடிப்பழகு ஆயிரம் முறை பார்த்தாலும் தீராது.

    இந்தப் பாடல் மீதான என் காதல், கால காலத்துக்கும் மாறாது.

    அப்படியே தன் நாயகியைச் சுழற்றி அரை வட்டமடித்துப் பாடும் போது, பின்னணியில் இன்றைய அய்யனின் வணங்குதலுக்குரிய அந்த தந்தம் வைத்த நினைவுச் சின்னம் அன்று வேறொரு விதமாய் காட்சிப்படுகிறது.

    சட்டென்று கண்கள் பனிக்கிறது.

    அய்யனின் அவதார தினங்களில், அதே இடத்தில்தான் அய்யனை வணங்கி நான் மலர் கொடுத்தேன்.



  11. #2290
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like


    vasudevan .s
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •